Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Saturday, September 3, 2016

சிறப்புச் சார்பியல் கோட்பாடு... விளக்க முடியுமா?


அறிவியலில் இரு வேறு பார்வைகளாக, நியூட்டோனியன் பார்வை மற்றும் ஐன்ஸ்டீனியன் பார்வை எனச் சொல்வார்கள். இப்பிரபஞ்ச இயக்கங்கள் குறித்து நாம் நியூட்டன் விதிகள் மூலம் அறிந்திருப்போம். இவைகள் நம் அன்றாட வாழ்க்கை முறை வேகங்களில் மிகப் பொருத்தமானவையே. ஆனால், ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க இவ்விதிகள் தோல்வியைத் தழுவுகின்றன.

1905ல் ஐன்ஸ்டைன் வெளியிட்ட தனது சிறப்புச் சார்பியல் கோட்பாடு (Special Relativity Theory - STR) குறைந்த வேகத்திற்கும் சரி, ஒளியின் வேகத்திற்கும் சரி எல்லா வேகத்தில் இயங்கும் இயக்கங்களுக்கும் பொருந்தியது.

நாம் இதுவரை ஒளியின் வேகத்தை வெறும் எண்களாக மட்டுமே அறிந்திருக்கின்றோம், உணர்ந்திருக்கின்றோம். அதன் முழு வேகத்தை உணரும் திறன் இன்னும் பெறவில்லை. இன்றையக் கணக்கின்படி ஒளியின் வேகம் வெற்றிடத்தில் நொடிக்கு 2,99,792.458 கிலோ மீட்டர்கள். ஏறக்குறைய நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் எனக்கூடக் கொள்ளலாம்.

நமது அறிவு என்பது கடந்தகால அனுபவங்களின் தொகுப்பு எனலாம். அனுபவத்தில் இல்லாதவற்றை ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினம்தான். அதுபோன்றே ஒளியின் வேகத்தில் பயணிக்கும்பொழுது ஏற்படும் சில மாற்றங்களை முரண்பாடுகளை நாம் ஏற்றுக்கொள்வதும் சற்றுக் கடினமாகத் தெரியும். ஆனால், இயற்பியல் பரிசோதனைகள் அம்மாற்றங்களை உறுதி செய்துள்ளன.

பார்க்கப்படும் பொருள் ஒன்று இருக்குமேயானால் பார்க்கும் பார்வையாளர் என ஒருவரும் இருந்தேயாக வேண்டும். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்பதே சார்பு எனப்படும்.

இங்கு ஆதிசங்கரர் அத்வைதத்தில் கேட்ட கேள்வியாக படித்த ஒன்று நினைவிற்கு வருகின்றது.

கேள்வி : வானம் என்ன நிறம்?
பதில் : நீல நிறம்.
கேள்வி : எப்படிச் சொல்கின்றாய்?
பதில் : நான் பார்த்தேன்.
கேள்வி : அப்படியெனில், நீ பார்க்காதபொழுது வானம் என்ன நிறம்?
பதில் : .......

இது போன்று இன்னும் பல கேள்விகள் நம் குவாண்டம் இயற்பியலுக்குள் இருக்கின்றன.

சரி, பார்வையாளர் என நம்மைக் கொள்வோம். இந்தச் சிறப்புச் சார்பியல் கோட்பாடும் நம்மை வைத்தே தொடங்குகின்றது. அதாவது பார்வையாளர் இருக்கும் இடத்தினைக் கொண்டு. அது குறியீட்டுச் சட்டம் (Reference Frame) எனப்படுகின்றது. இது வேறொன்றுமில்லை பார்வையாளர் எங்கு நிற்கின்றார் என்ற இடமே குறியீட்டுச் சட்டம்.

இப்பொழுது நீங்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கின்றீர்கள். இதுதான் உங்களது குறியீட்டுச் சட்டம். ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் நிலையாக இல்லை. நீங்கள் பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றீர்கள். இந்தப் பூமி உங்களைச் சுமந்துகொண்டு சராசரியாக நொடிக்கு 30 கிலோமீட்டர்கள் வேகத்தில் சூரியனைச் சுற்றிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. சூரியனோ, உங்களை, பூமியை, ஏனைய கோள்களையும் இழுத்துக்கொண்டு பால்வெளிமண்டலத்தை நொடிக்கு 200 கிலோமீட்டர்கள் வேகத்தில் சுற்றிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

இங்கு வேகத்தை விடுங்கள், நீங்கள் நிலையாக இல்லை, பயணித்துக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆக, இப்பிரபஞ்சத்தில், நிலையான குறியீட்டுச்சட்டம் என்று ஒன்று இல்லை. எல்லாமே இயக்கத்தில் உள்ளன. எல்லாம் இயக்கத்தில் இருப்பதால் ஒவ்வொன்றும் ஒன்றைச் சார்ந்துள்ளன.

ஒரு இயக்கத்தைக் குறிக்க மற்றொன்றைத் தொடர்பு படுத்தித்தானே குறிப்பிடமுடியும்.

சரி, இப்பொழுது நீங்கள் ஒரு குறியீட்டுச் சட்டத்திலும், நான் ஒரு குறியீட்டுச் சட்டத்திலும் உள்ளோம். எனது குறியீட்டுச்சட்டம் உங்களை நோக்கி வருகின்றது, அதாவது நான் உங்களை நோக்கி வருகின்றேன். இதனை என் பார்வையிலும் உங்கள் பார்வையிலும் பார்த்தோமானால் என்ன சொல்வோம்?

நான்: நீங்கள் என்னைநோக்கி வருகின்றீர்கள்.
நீங்கள்: பாபு என்னை நோக்கி வருகின்றார்.

இரண்டுமே நியாயமான கருத்துக்கள்தான். எனவே, பார்வையாளரின் குறியீட்டுச்சட்டம் மிக முக்கியமான ஒன்று இக்கோட்பாட்டில். அடுத்து, சிறப்புச் சார்பியல் கோட்பாட்டின் முதலாம் மெய்கோள் (முதலுண்மை) (First Postulate) குறித்துப் பார்ப்பதற்கு முன் இதுவரை சொன்னவற்றில் சந்தேகங்கள், பிழைகள் இருந்தால் விவாதித்துக்கொள்வோமா...?


பகுதி - 2

முதலாம் கருதுகோள்

இது சற்று எளிமையான ஒன்றுதான். இயற்பியல் விதிகள் அனைத்துக் குறியீட்டுச் சட்டங்களிலும் மெய்யே. அதாவது தரையில் நின்றுகொண்டு நீங்கள் ஒரு செங்கலின் நீளத்தை நீங்கள் அளந்தாலும், ஒரு தொடர்வண்டியில் பயணித்துக்கொண்டு அளந்தாலும் அது உங்களுக்கு ஒரே அளவைத்தான் கொடுக்கும்.

ஆனால், நீங்கள் தரையில் நின்றுகொண்டு தொடர்வண்டியில் பயணித்துக்கொண்டிருக்கும் செங்கல்லை அளக்க முற்பட்டால் அது வேறு அளவினைத்தரும். குழப்புகின்றதா, சரி, இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

ஒரு தொடர்வண்டி 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கின்றது. நீங்கள் ஓட்டுனரின் அருகில் இருக்கின்றீர்கள். தொடர்வண்டி ஓட்டுனர் ஒரு துப்பாக்கி வைத்துள்ளார். அந்தத்துப்பாக்கிக்குண்டின் வேகம் நொடிக்கு 5 கிலோமீட்டர் வேகம். இப்பொழுது ஓட்டுனர் தொடர்வண்டி செல்லும் திசையில் துப்பாக்கியால் சுடுகின்றார். துப்பாக்கிக் குண்டின் வேகம் என்னவென்று உங்களைக் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? நொடிக்கு 5 கிலோமீட்டர் என்றுதானே?

சரி, இப்பொழுது நீங்கள் தரையில் நிற்கின்றீர்கள். இப்பொழுது அதேவேகத்தில் சென்றுகொண்டிருக்கும் தொடர்வண்டியில், அதே ஓட்டுனர்,அதே துப்பாக்கியால் சுடுகின்றார். இப்பொழுது அந்தத் துப்பாக்கிக் குண்டின் வேகம் என்னவென்று உங்களைக் கேட்டால் உங்கள் பதில், 50+5=55 அதாவது நொடிக்கு 55கிலோமீட்டர் என்றுதானே சொல்வீர்கள்?

ஆக, இயற்பியல் விதிகள் நிலையானவைதான், அந்தந்த குறியீட்டுச்சட்டத்தில். வேறொரு குறியீட்டுச்சட்டத்தில் இருந்து மற்றொரு குறியீட்டுச்சட்டத்தின் விதிகளை அளவிட்டால் அது வேறுபடும்.


இரண்டாம் கருதுகோள்

அனைத்துக்குறியீட்டுச் சட்டங்களிலும் ஒளியின் வேகம் நிலையானது. இதுதான் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டின் இரண்டாவது கருதுகோள். முதலாவது கருதுகோளில் சொன்ன உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம். இப்பொழுது துப்பாக்கிக்குப் பதில் தொடர்வண்டியின் முகப்பு விளக்கு.

நீங்கள் ஓட்டுனரின் அருகே உள்ளீர்கள். ஓட்டுனர் முகப்பு விளக்கினை எரிய விடுகின்றார். இப்பொழுது ஒளியின் வேகம் என்ன? சற்றேறக்குறைய மதிப்பாக நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் எனக் கொண்டு அதைத்தானே சொல்வீர்கள். சரி, இப்பொழுது நீங்கள் தரையில் நிற்கின்றீர்கள். ஓட்டுனர், ஓடிக்கொண்டிருக்கும் தொடர்வண்டியின் முகப்பு விளக்கினை எரிய விடுகின்றார்.

இப்பொழுது உங்கள் எதிர்பார்ப்பின் படி, 3,00,000+50 = 3,00,050 அதாவது நொடிக்கு 3 இலட்சத்து 50 கிலோமீட்டர்கள் என்றுதானே சொல்வீர்கள். ஆனால் அதுதான் இல்லை. இங்கும் ஒளியின் வேகம் அதே நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள்தான் இருக்கும். முரண்பாடாகத் தெரிந்தாலும், அதுதான் உண்மை. வேகம் என்பது குறிப்பிட்ட காலத்திற்குள் கடக்கப்படும் தொலைவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொருண்மை உள்ள ஒரு பொருளானது தன் வேகத்தினை, முடுக்கத்தின் மூலமாக அதிகரித்துக்கொள்ளவோ, தடை மற்றும் உராய்வின் மூலம் குறைத்துக்கொள்ளவோ முடியும். ஆனால், ஒளி ஒரு மின்காந்த அலை. அப்படியெல்லாம் செய்துகொள்ளாது. ஆக, ஒளியின் வேகம் தற்போதைய கணக்கின்படி நிலையான ஒன்று. (ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குள் பாயும்பொழுது வேறுபாடுகள் ஏற்படும். அதில் மாற்றமில்லை.)

சரி, இக்கோட்பாட்டினால் ஏற்படும் சில நிகழ்வுகளை அடுத்த பகுதியில் பார்ப்போம்.


பகுதி - 3

  கோட்பாட்டின் படி ஒளியின் வேகத்தில் பயணித்தால் முக்கியமாக இரண்டு நிகழ்வுகள் நிகழ்கின்றன. இவற்றைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டால் சற்றே புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.

1. பொருண்மை உள்ள ஒரு பொருள் பயணிக்கும் திசையில் தன் நீளத்தில் சற்றே குறுகுகின்றது.
2. ஒளியின் வேகத்தில் பயணிப்பவருக்கு காலமும் சுருங்கிவிடுகின்றது.

1. நீளக்குறுக்கம் (Length Contraction)
5மீட்டர் நீளமுள்ள ஒரு சிற்றுந்து (Car) 60% ஒளியின் வேகத்தில் பயணிக்கின்றது எனக்கொள்வோம். அப்பொழுது அதன் நீளம் 4 மீட்டர் எனச் சற்றே குறைவுபட்டிருப்பதை தரையில் நிற்கும் நீங்கள் அளவிடலாம்.

அதேசமயம், அச்சிற்றுந்தில் பயணிப்பவர் உங்கள் கையில் இருக்கும் அளவுகோலின் நீளம் குறைந்திருப்பதைக் காண்பார்.
ஒருவேளை நீங்களும் 60% ஒளிவேகத்தில் அச்சிற்றுந்திற்கு அருகாமையில் பயணித்துக்கொண்டு அளப்பீர்களேயானால் அதன் நீளம் 5 மீட்டரே இருக்கும்.


2. காலவிரிவு (Time Dilation)
ஒளியின் வேகத்தில் பயணிக்கும்பொழுது மட்டும் காலமும் சுருங்கிவிடுகின்றது. ஆனால் அதனை அவ்வேகத்தில் பயணிப்பவர் இருக்கும் குறியீட்டுச்சட்டத்திலிருந்து உணர முடியாது. வேறொரு குறியீட்டுச்சட்டத்தில் இருப்பவரால் மட்டுமே உணர முடியும்.

இந்த காலவிரிவினைக் காட்ட ஒரு பிரபலமான கருத்து ஒன்று உள்ளது. அதுதான் இரட்டையர் முரண்மெய் (Twin Paradox).

அதாவது பாபு-கோபு இருவரும் இரட்டையர். இருவரிடத்தில் இரண்டு துல்லியமான நேரங்காட்டும் கடிகாரங்கள் உள்ளன. அதனை இருவரும் ஒரே நேரத்தைக் காட்டுமாறு ஒருங்கிசைத்துக் கொள்கின்றனர். தற்பொழுது இருவருமே ஒரே குறியீட்டுச்சட்டத்தில் உள்ளனர்.

இப்பொழுது பாபு மட்டும் ஒரு விண்கலத்தில் ஏறி 60% ஒளியின் வேகத்தில் பயணிக்கிறார். இருவருமே தங்களது பார்வையில் நீளக்குறுக்கம் மற்றும் காலவிரிவு விளைவுகளை மற்றவரிடத்தில் காண்பர். ஒருவேளை பாபு திரும்பவே இல்லை என்றால் பிரச்சனை இல்லை. திரும்பிவிட்டால்....?

ஒளியின் வேகத்தில் பயணித்த பாபுவை விட, நிலையாக நின்ற கோபுவிற்கு வயது கூடியிருக்கும். ஆனால் இருவரும் இரட்டையர்கள். இதனை அவர்களின் கடிகாரங்களை ஒத்துப் பார்த்து ஏற்றுக்கொள்ளலாம். முரண்பாடு போல் தோன்றினாலும் அதுதான் மெய்.

இந்த இரட்டையர் முரண்மெய்க்குள் நிறைய அலசல்கள் உள்ளன. பாபு போகும்பொழுது ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு சமிக்ஞை அனுப்புவது, ஒருவர் குறியீட்டுச் சட்டத்தில் இருந்து அடுத்தவரின் குறியீட்டுச்சட்டத்திற்கு மாறி விளைவுகளை அளப்பது என்று நிறைய சாத்தியக்கூறுகளை பிரித்தலசி குழம்பலாம் நாம்.

அடுத்தது காலப்பயணம்....


பகுதி - 4

காலப்பயணம் சாத்தியமா?

மேற்சொன்ன இரட்டையர் முரண்மெய் பற்றி அறிந்ததும், அப்படியெனில் ஒளியின் வேகத்தில் பயணித்தால் நம்மால் எதிர்காலத்திற்கோ அல்லது இறந்தகாலத்திற்கோ பயணிக்க முடியும் என்று கொள்கை ரீதியில் எண்ணத்தான் தோன்றும். காலப்பயணம் என்பது வெகுகாலத்திற்கு முன்பிருந்தே சிந்திக்கப்பட்டு வந்தது. ஐன்ஸடைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாடு வந்ததும் அதற்கு கொள்கை ரீதியான கட்டுமானம் கட்டப்பட்டுவிட்டது.

நம்மில் நிறையப் பேர் காலம் என்றால் என்னவென்று தெரியும் என்று எண்ணிக்கொண்டுள்ளோம். வரையறுக்கச்சொன்னால் சற்றுத் தடுமாறுவோம். காலத்தை வரையறுப்பது கடினம்தான் ஆனால் அதன் விளைவுகளை மட்டும் காண்கிறோம்.

காலம் என்பது இரு நிகழ்வுகளுக்கு இடையே உள்ள இடைவெளி. நிகழ்வு நிகழ பரவெளி வேண்டும். பரவெளியினை உணர காலம் வேண்டும். ஆக, காலம் என்று ஒன்று தனித்து கிடையாது. காலமும் (Time) வெளியும் (Space) பின்னிப் பிணைந்தது. அது ஒரு நான்காவது பரிமாணம். (Fourth Dimension) இதற்கு முன்பு நியூட்டன் விதிகள் காலத்தை தனித்ததொன்றாகக் கொண்டிருந்தது. ஆனால், ஐன்ஸ்டைனின் கூற்றுக்குப் பின் காலமும் வெளியும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. இதனை காலவெளித்தொடர்ச்சி என்பர். (Space-time continuum என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் தெரியவில்லை. தெரிந்தோர் தெரிவிக்கவும்.)

ஆக, காலம் என்பது இரு நிகழ்வுகள் நிகழ்ந்தபின்னரே வரையறுக்கப்படுகின்றது. இதில் காலத்தைக் கடப்பது எப்படி? ஆக, கோட்பாட்டின்படி காலப்பயணம் சாத்தியமே என்று கொண்டாலும், அதிலும் சில முரண்பாடுகள் தொக்கி நிற்கின்றன.

<>ஒரு வேளை உங்களால் இறந்த காலத்திற்குச் செல்ல முடிகின்றது என்றாலும், நீங்கள் பிறக்கும் வருடத்திற்கு முந்தை ஆண்டுகளில் ஒன்றிற்கு நீங்கள் செல்வீர்களேயாயின்... அது முரண்படாதா..?

<>அல்லது நீங்கள் பிறந்த ஆண்டிற்குப் பின்னர் ஒரு காலத்திற்குச் செல்கின்றீர்கள் என்றால் அங்கு உங்களை நீங்களே பார்ப்பீர்களா?

<>Grandfather Paradox என்று ஒன்று உள்ளது. நீங்கள் பின்னோக்கிச் சென்று உங்கள் அப்பாவின் அப்பாவைக் கொன்றுவிட்டீர்கள் என்றால் என்னவாகும்?


எனினும், காலப்பயணம் சாத்தியம் என்பதற்கு இன்னொரு முறையும் சொல்லப்படுகின்றது. இணைபிரபஞ்சம் (Parallel Universe). அதாவது ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு பிரபஞ்சம் படைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. நீங்கள் பின்னோக்கிச் சென்று உங்கள் தாத்தாவை கொன்றுவிட்டால் அது நிகழ்வது வேறொரு பிரபஞ்சத்தில்தான் என்கிறார்கள். குழப்பம்தான்.

இன்னும், கருந்துளை (Black Hole), புழுத்துளை (Worm Hole), பேரண்டக்கயிறு (Cosmic String), வளைந்த வெளி (Curved Space), என்று அதிசயிக்க ஏராளம் உண்டு அறிவியலில். பொறுமையும் அறிந்துகொள்ளும் ஆர்வமும் மட்டுமே வேண்டும் நமக்கு.


முன்பொரு சமயம், சிறப்புச் சார்பியல் கோட்பாடு குறித்து அசைபோடும்பொழுது என்னுள் தோன்றிய வரிகள்.....


காலமில்லாக் காலமொன்றைப்
பரவெளியில் தேடினேன்
வெளியின்றிக் காலமோ
காலமின்றி வெளியோ காணக் கிடைக்கிலேன்.
காலமுணரச் சலனமும்
சலனம் நிகழ வெளியும்
வெளியை யுணரக் காலமும்
எனவோர் வட்டக் களிநடனம்
கண்டு வியந்தனன்.

பிரபஞ்சத்தின் எல்லையை அடைந்தால் என்ன இருக்கும்?




முதலில் பிரபஞ்சத்திற்கு எல்லை இருக்கின்றதா? மனித அறிவு எல்லாவற்றையும் ஒரு வரையறைக்குள் அடக்கவே பார்க்கும். இத்தோடு அவ்வளவுதான் என்று அடக்கி விட்டு அடுத்ததைத் தேடிப் போகப் பார்க்கும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். பிரபஞ்சத்தில் எல்லை என்று குறிக்க எந்தவொரு காம்பவுண்ட் சுவரும் இல்லை. இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்ப்போம்.

1. பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அப்படியெனில், அதன் எல்லை என்பது ஒரு முடிவிலி. எல்லையே கிடையாது. ஒரு வேளை விரிவடையும் வேகத்தை விட வேகமாகப் போய்ப் பார்த்தால்.... அடுத்த பிரிவைப் பாருங்கள்.

2. பிரபஞ்சம் தன்னகத்தே தேவைக்கதிகமான நிறைகொண்ட பொருட்களைக் கொண்டிருக்கின்றது. அந்நிறைகளின் காரணமாக விரிவடைவது தடுக்கப்பட்டு சுருங்கத் துவங்கும். தன் அதீத நிறையால் குலைந்தழிந்து போய் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு கருந்துளையாய்ப் போகக்கூடும். (நல்ல வேலையாக அத்தனை நிறைகள் இல்லை.) இந்த நிலையில் பிரபஞ்சத்திற்கு எல்லை இருக்க வேண்டுமே. அதனைப் பார்க்கலாமே என்றால்....

இப்பொழுதும் முடியாது. ஏனெனில் இப்பொழுதும் எல்லை என்று எதுவும் இருக்காது. நிறையீர்ப்பின் காரணமாக பிரபஞ்சம் வளைந்து கோளவடிவிலாகி விட்டிருக்கும். கோளத்தில் எது எல்லை? எது மையம்?  எது முடிவு?

ஒரு பெரிய கால்பந்தில் ஊறும் எறும்பினைக் கற்பனை செய்யுங்கள். எல்லையைத் தேடிப் பயணப்படும் அவ்வெறும்பு எந்தப் பக்கம் பயணித்தாலும் தான் துவங்கிய இடத்திற்கே வந்துவிடும். இப்பொழுதும், ஈர்ப்பின் காரணமாக பிரபஞ்சம் வளைந்துதான் இருக்க வேண்டும். ஏனெனில், வளைந்த வெளிகள் ஐன்ஸ்டைன் சொன்னதற்குப் பிறகு நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

சரி, பிரபஞ்சம் கோள வடிவில் இருக்கின்றது என்றே கொள்வோம். அதன் உட்புறத்திலிருந்து வெளிப்புறமாக வந்தால் அதன் எல்லையைக் கண்டேன் என்று சொல்ல முடியுமா? அந்த எல்லையில் இருந்து பார்த்தால் என்ன தெரியும்? (இப்படியெல்லாம் கேள்வி கேட்டேன் என்றுதான் ஜியாகரஃபி மிஸ் என் காதைத் திருகி உட்கார வச்சாங்க... உங்களையும் அவங்ககிட்ட மாட்டி விட்டுருவேன்....) ஒரு வேளை இணைப் பிரபஞ்சம் (Parallel Universe) தெரியக்கூடுமோ?

எனினும், நம் பார்வைக்குட்பட்ட (பார்வை என்றால் கண்ணால் பார்ப்பது என்று பொருளல்ல, நாம் உணர்ந்தறியக்கூடிய என்று பொருள்) பேரண்டம் என்று ஒரு தொலைவைச் சொல்கின்றார்கள். நம் சூரியக்குடும்பத்தில் இருந்து எந்தப்பக்கம் பார்த்தாலும், 14 பில்லியன் புடைநொடிகள் (ஏறக்குறைய 45.7 பில்லியன் ஒளியாண்டுகள்) தொலைவு வரை காண முடியும்.

இத்தொலைவை ஆரம் என்று எடுத்துக்கொண்டால் விட்டம் 28 பில்லியன் புடைநொடிகள் தொலைவு வரை பிரபஞ்சம் பரந்திருக்கின்றது. கோளவடிவம் என்பதால் இதன் கொள்ளளவைக் கணக்கிட்டால், 4.1 x 10^32 கனசதுர ஒளியாண்டுகள் ஆகும். மயக்கம் போட்டு விழுந்து விடாதீர்கள்.

புடைநொடி (Parsec), ஒளியாண்டு (Light Year) இரண்டுமே தொலைவைக் குறிக்கும் அளவைகள்.

Big Bang Theory


பிரபஞ்சத் தோற்றம்

பரந்து விரிந்து இருக்கும் இப்பிரபஞ்சத்தில், கோடானுகோடி நட்சத்திரங்களில் கவனத்தையே ஈர்க்காத ஒரு சிறு நட்சத்திரம்தான் நம் சூரியன். அச்சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமி என்ற கிரகத்தில் வசிக்கும் மனிதர்களாகிய நாம் அற்பத்திலும் அற்பம். ஆனால் அந்த அற்பத்திற்கு அறிவு பெருகும் மூளை என்ற ஒன்றின் வளர்ச்சி மிகச் சிறப்பானது. அச்சிறப்பால், சிந்தனையால் அதற்குள் எழும் கேள்விகள்தான் எத்தனையெத்தனை, எத்தனை அபாரமானவைகள்....?

இதோ தன் தோற்றம் குறித்தும், தானிருக்கும் பிரபஞ்சத்தோற்றம் குறித்தும் அறியப் புறப்பட்டதன் விளைவாக உருவாக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகளைக் காண்போம். பிரபஞ்சத் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துகள், கொள்கைகள் நிலவுகின்றன. அவற்றில் சில,
1. ஸ்திர நிலைத் தத்துவம் (Steady State Theory)
2. பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theory)
3. கடவுளால் படைக்கப்பட்டது (God's Creation)

இதில் பெருவெடிப்புக் கொள்கை பற்றி இங்கு சற்று பார்ப்போம்.

இன்றிலிருந்து ஏறக்குறைய 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏதுமற்ற பாழ்வெளியில், சூனியத்தில், ஓரிடத்தில் மட்டும் ஒரு பொருண்மை இருந்தது. அதி எடையுடன் அனைத்தையும் தனக்குள் அடக்கிக்கொண்டு உள்ளுக்குள் ஒரு பரபரப்பில் இருந்திருக்கவேண்டும். அதனை ஆங்கிலத்தில் Singularity என்கிறார்கள். நாம் தமிழில் அதனை அனைத்தொருமை எனச் சொல்லலாமா..?

அவ்வனைத்தொருமை ஒரு கணத்தில் அதி வேகத்தில் விரிவடையத் துவங்கியது. அந்த அதிவேகத் தொடக்கத்தினைத்தான் நாம் பெருவெடிப்பு என்கிறோம். அதுதான் நம் பிரபஞ்சப் பிறப்பின் முதற்கணம். கணக்கிட முடியாத அளவிற்கான பெருவெப்பம். விரிவிலிருந்து 10ன் அடுக்கு -37வது நொடியில், (அதாவது 0.0000000000000000000000000000000000001 என ஒரு புள்ளி வைத்து 36 சுழியன்கள் போட்டுப் பின் ஒன்று) பிரபஞ்ச வீக்கம் பெறத் துவங்குகின்றது. அப்பொழுது தோன்றுகின்றது முதற்பொருள். Quark-Gluon Plasma (GGP) அல்லது குவார்க் குழம்பி. அதனைத் தொடர்ந்து மற்ற அடிப்படைத் துகள்கள் பிறக்கின்றன.

பெருவெப்பத்தில், அதிவேகத்திலும், ஒன்றோடு ஒன்று மோதி துகள்கள் மற்றும் எதிர்த்துகள்கள் உருவாக்கப்படுகின்றன. உருவான அதே வேகத்தில் அழிக்கவும்படுகின்றன. அப்படியொரு கணத்தில் திடீரென்று Baryogenesis என்றொரு வினை நிகழ்த்தப் பெற்று குவார்க்குகள் மற்றும் லெப்டான்கள் உருப்பெறுகின்றன. இவைகள்தான் நம் இன்றையப் பிரபஞ்சத்தின் பொருள் மற்றும் எதிர்ப்பொருள்களின் (Matter and Antimatter) முன்னோடி.

பிரபஞ்சம் இன்னும் விரிவடையத் துவங்குகின்றது. அளவில் விரிய விரிய வெப்பம் குறையத் துவங்குகின்றது. காரணம் பொருட்களின் சக்தி குறைகின்றன. பல்வேறு தொடர்மாறுதல்களில் இருந்தவைகள் எல்லாம் இப்பொழுது நாம் உணரும் பிரபஞ்சத்தின் இன்றைய அடிப்படை விதிகளுக்குட்பட்டு பொருட்களின் தற்போதைய அமைப்பு உருவாகின்றது.

இதுவரை தன் நிகழ்வில் கண்கொள்ளாக்காட்சியாக இருந்த பெருவெடிப்பு, 10ன் அடுக்கு -11வது நொடியில் தன் வசீகரம் இழக்கத் துவங்குகின்றது. துகள்களின் வேகமும் சக்தியும் இன்றைக்கு நாம் சோதனைச்சாலைகளில் அடைத்துவைத்து சோதிக்கும் அளவிற்குக் குறைகின்றன.

10ன் அடுக்கு -6வது நொடியில் குவார்க்குகளும் குளூவான்களும் ஒன்றிணைந்து பேரியான்களாக (baryon) அதாவது புரோட்டான் நியூட்ரானாக உருவாகின்றன. இப்பொழுது போதுமான வெப்பம் இல்லாத காரணத்தினால் இனி புதிய புரோட்டான்களோ எதிர்-புரோட்டான்களோ உருவாவது நின்று போகின்றது. அதுபோன்றே நியூட்ரான்களும், எதிர்-நியூட்ரான்களும் உருவாவதும் நின்று போகின்றது. பொருண்மை அழிவு துவங்கி (Mass annihilation) சில புரோட்டான் நியூட்ரான்களைத் தவிர மற்றவைகள் அழிவு பெறுகின்றன.

ஒரு நொடி கழித்து இதே போன்றதொரு நிகழ்வு எலக்ட்ரான்களுக்கும் பாஸிட்ரான்களுக்கும் நிகழ்கின்றது. இந்த அழிவுகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் புரோட்டான்கள், நியூட்ரான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் முன்புபோல் பிரபஞ்சத்தில் அலையவில்லை. வேகம் குறைந்துவிட்டது. ஆனால், போட்டான்கள் (Photons) பிரபஞ்சத்தினை ஆளுமை செய்யத் துவங்கிவிட்டன நியூட்ரினோக்களின் (Neutrinos) சிறிய பங்களிப்போடு.

பெருவிரிவின் சில நிமிடங்களுக்குப் பிறகு ஏறத்தாழ ஒரு பில்லியன் கெல்வின் அளவிற்கு வெப்பநிலையில் நியூட்ரான்கள் புரோட்டான்களோடு ஒன்றிணைந்து இன்றைய பிரபஞ்சத்தின் டியூட்டிரியம் (Deuterium) மற்றும் ஹீலியம் அணுக்கருவை உருவாக்குகின்றன. இதற்கு பெருவெடிப்பு அணுக்கருச்சேர்க்கை (Big Bang Nucleosynthesis) என்று பெயர். பெரும்பாலான புரோட்டான்கள் நியூட்ரான்களோடு சேராமல், ஹைட்ரஜன் அணுக்கருவாகவே நீடிக்கத் தொடங்கின.

பிரபஞ்சம் குளிரக் குளிர (ஒரு பேச்சுக்குத்தான் குளிர என்கிறோம்... ஆரம்ப கணத்தின் வெப்பத்தினை ஒப்பிடும்பொழுதுதான் இது குளிர். நம்மைப் பொறுத்தவரை இது அதிவெப்பம்தான்.) மிச்சமிருக்கும், பொருண்மை, ஆற்றல் நிறைகள் எல்லாம் ஒன்றாக, ஈர்ப்பு விசை உருவாகின்றது.

3,79,000 ஆண்டுகள் கழித்துதான் அணுக்கருவுடன் எலக்ட்ரான்கள் சேர்ந்து அணுக்களே உருவாகின்றன. பெரும்பாலும் ஹைட்ரஜன் அணுக்கள். அதிலிருந்து கதிரியக்கம் பெருகிப் பிரபஞ்சம் முழுவதும் விரைகின்றன. அதனையே பிரபஞ்சப் பின்புல நுண்ணலைக் கதிரியக்கம் (Cosmic Microwave Background Radiation-CMBR) என்கிறோம். இன்றைக்கும் அதனை நாம் உணர்கின்றோம். இந்த ஒன்றைத்தான் பெருவெடிப்பிற்கான ஆதாரமாக விஞ்ஞானிகள் சுட்டுகின்றனர். இதனைத் தொடர்ந்து பின்னோக்கிப் போய்தான் இத்தனையையும் உணர்கின்றோம்.

அதன் பின்னரே, வெகுகாலத்திற்குப் பிறகு அடர்த்தியான பொருள்கள் ஈர்ப்புவிசையின் காரணமாக ஒன்றிணைந்து, அதனால் ஏற்பட்ட நிறையின் காரணமாக ஈர்ப்பு விசை கூடி மேலும், தன்னைச்சுற்றி உள்ள பொருட்களை மேலும் ஈர்த்து, மேகங்கள், நட்சத்திரங்கள், மண்டலங்கள் மற்றும் இதரவைகளாக உருப்பெற்றன. அதன் பின்னர்தான் நம் சூரியன் மற்றும் கோள்கள். அதற்குப்பின் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் முதல் உயிரினம். அதற்குப் பின் பல மில்லியன் ஆண்டுகள் கழித்துதான் மனிதன்.


பெருவெடிப்பில் நாம் தவறாகப் புரிந்துகொள்வது

1. பெருவெடிப்பு என்றதும், ஏதோ வாணவெடி வெடித்துச் சிதறுவது போன்று கற்பனை செய்துகொள்கின்றோம். விஞ்ஞானிகள் என்ன சொல்கின்றார்கள் என்றால், அது ஒரு திடீர் விரிவடைவு அவ்வளவுதான் என்கிறார்கள்.

2. அனைத்தொருமை (Singularity) என்றதும், அது ஏதோ விண்வெளியில் இருந்த ஒரு சிறிய புள்ளி போன்ற ஒரு பொருள், அல்லது ஒரு கனன்று கொண்டிருந்த ஒரு நெருப்புப் புள்ளி என்று நினைக்கிறோம். அதுவும் தவறு. நினைவில் கொள்ளுங்கள், பெருவெடிப்பிற்குப் பின்னர்தான் வெளி என்ற ஒன்றே உருவானது. பொருள், நிகழ்வு மற்றும் காலமும் அப்படித்தான்.

அதாவது வெளியில் அந்த அனைத்தொருமை இல்லை. மாறாக வெளியே அந்த அனைத்தொருமைக்குள்தான் இருந்தது. அப்படியென்றால் அது எங்கேதான் இருந்தது? எங்கிருந்து வந்தது? எதற்காக வந்தது? சரியான பதில், நமக்குத் தெரியாது என்பதுதான். உண்மையில் நமக்குத் தெரிந்தது என்றால், நாமெல்லாம் அதற்குள் இருந்து வந்தோம் என்பது மட்டும்தான்.



பெருவெடிப்பிற்கான சான்று

1. உடுமண்டலங்கள் அதிவேகத்தில் ஒன்றை விட்டு ஒன்று விலகிச்செல்கின்றன என்பதை 1929ல் ஹப்பிள் என்பவர் கண்டுபிடித்துச் சொன்னது, பிரபஞ்சம் விரிவடைவதை உறுதிப்படுத்தியது.

2. CMBR என்ற பின்புலக் கதிரியக்கத்தினை 1965ல் Arno Penzias மற்றும் Robert Wilson 2.725K அளவில் வியாபித்திருப்பதைக் கண்டு சொன்னார்கள். இதைத்தான் விஞ்ஞானிகளும் பெருவெடிப்பை உறுதிப்படுத்தத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

Wednesday, August 31, 2016

நாகமணி அல்லது நாகரெத்தினம் உண்மையா?




பல வருடங்களாக (தோராயமாக 20 முதல் 30 வருடங்கள்) தன் விஷத்தை வெளியேற்றாது, (எவரையும் எதையும் தீண்டாது) காத்து வரும் நாகப்பாம்பின் அந்த விஷம் காலப்போக்கில் கடினமாகி அது நாகரெத்தினமாக மாறிவிடும். அது தானாக ஒளிரக்கூடியது. அமாவாசை இரவில் அந்த ரெத்தினத்தை வெளியே கக்கி எடுத்து அதன் வெளிச்சத்தில் இரை தேடி வேட்டையாடும்.

அந்த நாகரெத்தினத்தை வைத்திருப்பவர் மிகுந்த பக்திமானாகவும், நல்ல எதிர்காலம் கொண்டவராகவும், மிகப்பெரிய தலைவராகவும் இருப்பார். அந்த ரெத்தினத்தையும் சும்மா எடுத்து வைத்துக்கொள்ள முடியாது.

அதற்கென்று சில வழிமுறைகள் இருப்பதாக கருடபுராணம் சொல்கிறது. மதச்சடங்குகளைக் கற்றுணர்ந்த புரோகிதர் ஒருவர் அந்த நாகமணி பெறப்பட்ட விதம் குறித்து அறிந்து கொண்டபின் அதனை உரியவர் வீட்டில் பிரதிஷ்டை செய்வார். அந்த நாளில் வானம் கரிய மழைமேகங்களால் சூழப்பட்டு, இடி இடித்து, மின்னல் மின்னி பிரளயம் போல் உலகம் தோற்றமளிக்கும். அந்தக்கல்லை வைத்திருப்பவருக்கு நாகதோஷம் இராது. நோய்நொடிகள் அண்டாது. பேய் பிசாசுகள் எட்டிப் பார்க்காது. எந்தவகையிலும் அவருக்கு தொந்தரவுகள் வராது.

அந்த ரெத்தினத்தின் வெளிச்சத்தில் வேட்டையாடுவதற்காகவா 20 முதல் 30 வருடங்கள் வரை அந்த நாகப்பாம்பு வேட்டையாடி உண்ணாமல் உணவகத்திலா உணவு வாங்கி உண்ணும்? பாம்பின் விஷம் இறுகி கெட்டிப்பட்டு அது பாம்பின் தலைக்குள் இருக்கும் என்கிற அறிவிலித்தனமான கருத்து பாம்பு குறித்தும் அதன் விஷப்பைகள் குறித்தும் அறியாத மூடர்களாலேயே பரப்பப்பட்டிருக்க வேண்டும்.

சரி, பின்னர் எதைத்தான் நாகரெத்தினம் என்று சொல்கிறார்கள்?

இப்படி நியாயமாகக் கேள்வி கேட்டால் பதில் கூற ஆர்வம் பிறக்கும். ஹேலைடு அயனியின் ஆதிக்கம் பெற்ற வண்ணக் கனிமக்கல்லே அது. அதனை ஆங்கிலத்தில் Fluorite அல்லது Fluorspar என்பார்கள். இது கனசதுரப்படிக அமைப்பைக் கொண்டது. இது ஒரு வெப்பஒளிப்பாயம் (Thermoluminiscence). கைகளில் வைத்திருந்தாலே, கைச் சூட்டில் அது ஒளிரத்துவங்கி சில பல மணி நேரங்கள் ஒளி வீசும்.

இந்தக் கற்கள் சைபீரியா, இலங்கை, பர்மா போன்ற இடங்களில் கிடைக்கப் பெறுகின்றது. சைபீரியாவில் கிடைக்கும் அந்தக் கல்லானது, கைச்சூட்டில் வெண்மை நிறத்திலும், கொதிநீரில் பச்சை நிறத்திலும், நிலக்கரிச் சூட்டில் சிவப்பு நிறத்திலும் ஒளிரும்.

அக்கற்களில் உள்ள இயிற்றியம் (Yttrium) என்ற தனிமம்தான் அதன் பசுமை நிறத்திற்குக் காரணம். மற்ற வண்ணங்களுக்கு அக்கற்களில் கரைந்துள்ள மாசுகள் காரணமாக அமையும்.

சரி, இனி இது எப்படி நாகப்பாம்போடு தொடர்பு படுத்தப்படுகின்றது என்று பார்ப்போம். பாம்பு வகைகளிலேயே பூச்சிகளையும் உண்ணும் ஒரே இனம் இந்த நாகப்பாம்புதான். எறும்புகள், வெட்டுக்கிளிகள் மற்றும் சிலவகைப் பூச்சிகளை இப்பாம்புகள் உண்ணும். இரவில் குறிப்பாக மின்மினிப் பூச்சிகளை விரும்பி உண்ணும். காரணம் மற்றெந்த பூச்சிகளைப் பிடிப்பதைக் காட்டிலும் இதனைப் பிடிப்பது அவைகளுக்கு எளிதாக இருக்கின்றது.

நமக்கெல்லாம் தெரியும், பறந்துதிரியும் மின்மினிகள் ஆண் பூச்சிகள். பெண் பூச்சிகள் சற்றுப் பெருத்தும், பறக்க இயலாதவையாகவும், எங்காவது புற்களின் மேல் பசுமைநிற ஒளியை உமிழ்ந்துகொண்டு ஆண் பூச்சிகளுக்கு அழைப்பு விடுத்து அமர்ந்திருக்கும். அதனைத் தேடி ஆண்பூச்சிகள் கலவிக்கு வரும்.

இந்த குளோரோஃபேன் கற்களும் அதனயொத்த பசுமைநிற ஒளியை உமிழ்வதால் அந்த ஆண் மின்மினிப் பூச்சிகள் கவரப்பட்டு இக்கற்களை நோக்கி வரச்செய்யும். இதனை என்றொ ஒரு நாள் அவதானித்த நாகப்பாம்பு, இக்கற்களின் அருகே இருந்தால் நமக்கு அந்தப் பூச்சிகளை வேட்டையாடுவது எளிது என்று கண்டுகொண்டிருக்கும். கவனிக்கவும், இதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பில்லை. இது உயிர்வாழத் தேவையான ஒரு உந்துதல் அமைப்பு.

பல பாம்புகள் ஒரே ஒரு கல் இருக்குமிடத்து இருக்க நேரிட்டால் அந்தக் கல்லை அடுத்த பாம்பு அபகரித்து விடாமல் இருக்க போட்டியிட்டு எந்தப் பாம்பு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றதோ அந்தப் பாம்பிற்கே அன்றைக்கு அதிக உணவு கிடைக்கும்.

இதனைப் பார்த்த நம் மனிதர்ளில் எவரோ ஒருவர் கட்டிய கதைதான்... நாகப்பாம்பின் நாகரெத்தினம். இன்றைக்குச் சந்தையில் உண்மையான நாகரெத்தினங்கள் என்று நிறையக் கிடைக்கின்றன. இன்றையச் சூழலில் எந்தவொரு நாகப்பாம்பும் 20 முதல் 30 வருடங்கள் உயிர்வாழ இயலாது. அப்படியே உயிர் வாழ்ந்தாலும், அவைகள் உணவுக்காக தன் இரையின் மீது விஷத்தைப் பாய்ச்சியே ஆக வேண்டியிருக்கும். ஆதலாம், அந்த விஷத்தைச் சேர்த்து வைத்து அதனை நாகரெத்தினமாக மாற்ற வாய்ப்பு இருக்காது.

மேலும், இந்த நாகரெத்தினத்தின் ஒளியில் வேட்டையாடுவதற்காக தன் விஷத்தைச் சேமிக்குமானால், அதுவரைக்கும் அது எப்படி உயிரோடு இருக்கும்? நாகரெத்தினத்தின் வெளிச்சத்தில் வேட்டையாடிவிட்டு பின் அதனை விழுங்கிவிடும் என்றால், வாயிலிருந்து அது செரிமானப் பாதைக்குப் போகாமல் தலை உச்சிக்கு எப்படிப் போய் பாதுகாக்கப்படும்?

ஆச்சர்யப்படும்படி சொல்வதையெல்லாம் வாயைப் பிளந்து கேட்காமல், இப்படிக் கேள்விகள் கேட்டு உணரத் தலைப்பட்டால் நம் அடுத்த சந்ததியினராவது அறிவாளிகளாக அமைய வாய்ப்புள்ளது. 

Friday, May 27, 2016

ESP என்றால் என்ன..?



Extrasensory perception
(புலன் புறத்தெரிவு) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.

இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

ESP -இன் வகைகள்:-

Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.

Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.

Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.

Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.

Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.

Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.

Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.

Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.

Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிறசக்திகளின்உதவியுடனோஎழுதுதல்.

Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.

Death-warning :பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.

Divination :குறி சொல்லுதல்

Dowsing :தங்கம்,புதையல் ,நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.

Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.

Levitation  : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.

Psychokinesis or telekinesis  : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்

இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன. ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.

ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தியானம்,யோகா,
இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.

காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்துகிடக்கும் சக்திகள் ஆகும்.அதை வெளிக்கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்.
Author: Sharma
Copyright © 2016   மூன்றாவது கண்
moondravathukan.in

Saturday, May 14, 2016

எண்ணங்களின் வலிமை

தீதும் நன்றும் பிறர் தர வாரா!

LIFE WITH GOD IS ENDLESS HOPE; 
LIFE WITHOUT GOD IS HOPELESS END

எண்ணங்களின் வலிமை

'யத் பாவம் - தத் பவதி'   நீ என்ன எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகுவாய் என்கிறது வேதம்.

மனத்தானம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானம்

இன்னான் எனப்படுஞ் செயல். 

ஒருவரின் உணர்ச்சி, மனத்தை பொறுத்து அமையும் என்கிறார் வள்ளுவர்.

நமது வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்துக்கும் நமது எண்ணங்களே காரணங்களாகின்றன. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பாகும். நமது மனம் எண்ணங்களை உருவாக்கும் தொழிற்சாலை போன்றதாகும். இதில் நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் என மாறி மாறி தோன்றி கொண்டேயிருக்கும். இன்றைய மனோத்தத்துவ நிபுணர்களின் கருத்துப்படி ஒரு நாளில் நம்முடைய மனதில் தோராயமாக 40000 எண்ணங்கள் வந்து செல்கின்றன. இவற்றில் பெரும்பாலும் உபயோகமற்ற மற்றும் எதிர்மறை எண்ணங்ளாகவே இருக்கின்றன என்று கூறுகின்றனர். மேலும் நம்மிடம் தோன்றும் எண்ணங்களை நாம் சரியாக கவனிக்காமல் இருந்தால் நாம் அவற்றால் பாதிக்கப்படுவோம். ஒரு நல்ல விளைநிலத்தில் எந்த விதமான செயலையும் செய்யாமல் விட்டு விட்டோமானால் அந்த விளை நிலத்தில் அனைத்து விதமான செடிகளும் முளைத்து விடும். மேலும் தீய உயிரினங்கள் வாழும் இடமாகவும் அது திகழும். அது போல நம் மனம் என்ற நிலத்தில் நல்ல விதைகளை (எண்ணங்களை) விதைக்காமல் இருந்தாலோ அல்லது அதன் போக்கில் விட்டு விட்டாலோ அது நமது வாழ்க்கையை சீரழிக்கும் பாதைக்கு நம் மனம் கூட்டி சென்று விடும்.

நமது மனதின் குணத்தை நமது முன்னோர்கள் குரங்கு புத்தியுடன் ஒப்பிட்டார்கள். நீங்கள் குரங்கு எவ்வாறு மனிதனிடம் பிடிபடுகிறது என்பதை அறிவீர்களா? ஒரு நீண்ட கழுத்துள்ள மண் குவளையை ஒரு இடத்தில் பதிய வைத்து அதன் உள் பழங்களை வைத்து விடுவார்கள். குரங்கின் கை ஆனது உள்ளே சென்று பழத்தை பற்றி கொண்டு வெளியே எடுக்க முயற்சிக்கும் போது அதனால் அதன் கையை வெளியே எடுக்காதவாறு குவளையின் வாய் பகுதி தடுக்கும். குரங்கானது பழத்தின் மீது உள்ள பற்றினை விடாமல் முயற்சி செய்து பார்த்து கையை வெளியே எடுக்க முடியாமல் அப்படியே அமர்ந்து விடும். ஆனால் அது தன்னுடைய கையை பழத்தின் மீது இருந்து எடுத்து விட்டால் அது அந்த குவளையிடமிருந்து விடுபட்டு சென்று விடலாம் .
ஆனால் அதன் புத்தியானது பிடித்ததை விடாமல் பற்றி கொண்டதிலேயே இருக்கும். சில நேரங்களில் அப்படியே இருந்து உணவின்றி அது இறந்து போகும். இது போல தான் நாம் நம் மனதில் எழும் எண்ணங்களை ஆராயாமல் உடனடியாக செயல்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் பிரச்சனையில் சிக்கி நம்மை நாம் இழந்து விடுகிறோம்.

இன்று நாம்  காணும் அனைத்து பொருட்களுமே என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு மனிதனின் மனதில் உதிர்ந்த எண்ணங்களின் வெளிப்பாடே ஆகும். இன்றைய சமுதாயத்தில் நிலவும் அனைத்து சூழ்நிலைக்கும்; காரணம் மனிதனின் மனதில் எழும் எண்ணங்களின் செயல்பாடுகளே என்பதை மறுக்க முடியாது. ஆகவே எண்ணங்களின் வலிமையை கொண்டு நாம் ஆக்கபூர்வமான காரியங்களையும் செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் காரியங்களையும் செய்ய முடியும். நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன.

நம் மனதில் தோன்றும் எண்ணங்களை நாம் கடலில் தோன்றும் அலைகளுக்கு ஒப்பிடலாம். எப்படி நாம் கடலின் அலைகளை கடந்து உள்ளே சென்றோமானால் கடலின் அமைதியை காண்கிறோம் .மேலும் அதன் உள்ளே முழ்கி சென்றால் விலைமதிப்பிலாத முத்து மற்றும் பவளம் போன்ற விலையுர்ந்த பொருட்களை நம்மால் கண்டு எடுக்க முடியுமோ, அது போல் நாம் நமது மனதின் உள்ளே சென்று ஆழ் மனதின் செயல்பாடுகளை புரிந்து கொண்டோமானால் நாம் விரும்பியது அனைத்தும் நம்மால் அடையமுடியும்.

நம்முடைய எண்ணங்களை பொறுத்து நம் உடலை சுற்றி ஒளி வட்டம் உள்ளது. இதனை ஆரா என்று அழைப்பார்கள் இது அனைத்து மனிதர்களிடமும் உண்டு. நாம் சந்திக்கும் மனிதர்களின் உடலில் இருந்து வெளிப்படும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நேர்மறை எண்ணங்களை நம் உடலானது பெற்று அதன் மூலமும் நம் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. உதாரணமாக ஆன்மீக பெரியோர்களை நாம் சந்திக்கும் போது நம் மனம் மிகவும் சாந்தியடைகிறது. சில சுயநலப்போக்கு கொண்ட மனிதர்களை சந்திக்கும் போது நமது மனம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இவை அனைத்துமே அவர்களிடமிருந்து வெளிப்படும் எண்ண அதிர்வினால் தான்.

நேர்மறை எண்ணங்களை மேம்படுத்த கீழ்கண்ட முறைகளை பின்பற்றலாம்.

1.   ஆலய வழிப்பாடு செய்தல்.   

2.     வேதம் ஓதுதல் .

 3.சத்சங்களில் நாம் இணைந்திருத்தல்.

4.      இறைவன் நாமத்தை, மூலமந்திரத்தை
தொடர்ந்து ஜபித்தல்.

5.      சாத்வீக உணவுகளை உட்கொண்டு, 
சாத்வீக உணர்வு உள்ளவர்களிடம் பழகுதல்.
  

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில செயல்களால் நாம் நமது நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்தி கொள்ளமுடியும். எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஒரு தீக்குச்சி போன்றது நாம் அதனை புத்தி என்னும் தீப்பெட்டியால் உரசும் போது அது தீப்பற்றி கொள்கிறது. அந்த தீயை நாம் நல்லவற்றுக்கும் பயன்படுத்தமுடியும் தீயவற்றுக்கும் பயன் படுத்த முடியும். முறையாக பயன்படுத்த தவறினால் நம்மையே அந்த தீ அழித்து விடும். ஆகவே நாம் நமது எண்ணங்களை முறைப்படுத்துவோம் . அதன் மூலம் நமது ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்துவோம்.

Tuesday, May 10, 2016

உண்மையிலயே பேய் தான் அமுக்குதா? - SLEEP PARALYSIS

தூங்குறப்போ அடிக்கடி என்னைய பேய் அமுக்குதுன்னு நிறைய பேரு சொல்ல கேட்டுருப்போம்.. அவ்வளவு ஏன் நம்மில் பலருக்கு அந்த அனுபவம் இருக்கும்.. அது ஏன்? உண்மையிலயே பேய் தான் அமுக்குதா? பாப்போம்....
.
உறக்கத்தில் இரண்டு நிலை இருக்கு. ஒன்று விரைவான கண் இயக்கம் அல்லது RAPID EYE MOVEMENT(REM) மற்றொன்று அதற்கு எதிர்பதம் NonREM (NREM).
.
நீங்க உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது NREM. அடுத்து REM நிகழும். இப்படி இரண்டும் மாறிமாறி நிகழும் தன்மை கொண்டதே மனித உறக்கம். ஒரு REM அல்லது NREMன் சுழற்சி 90 நிமிடங்கள் வரை இருக்கலாம். NREMன் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து 100% தளர்ந்திருக்கும். சுயநினைவும் முழுசா மங்கியிருக்கும். NREM நிலை முடிந்து REM நிலை தொடங்கும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும், ஆனால் உங்கள் இன்னும் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.
.
REM சுழற்சியில் இருக்கும் உங்கள் உடல் உறக்கத்தில் இருக்கும்போது அந்த சுழற்சி முடிவதற்குள் உங்களுக்கு சுயநினைவு தோன்றினால் உங்கள் உடல் 100% REM சுழற்சியில் இருப்பதால் அசைக்க முடியாது. மூளை விழித்திருக்கும். ஆனா மூளையின் கட்டளைகளை உடல் உறுப்புகள் ஏற்கும் நிலையில் இருக்காது.

அப்போ தான் நமக்கு தோணும், "அய்யய்யோ நான் கைகால அசைக்க ட்ரை பண்றேன் என்னால முடியல. பேய் அமுக்குது போல".



SLEEP PARALYSIS - இது தான் உங்களை அமுக்கிய பேய். உண்மையிலயே அது பேய் அல்ல. அது நம் உறக்கத்தில் தோன்றும் ஒரு நிலை. உலகமெங்கும் நிறைய மக்களுக்கு இந்த SLEEP PARALYSIS நிகழுது. பயப்பட தேவை இல்ல.

Thursday, April 14, 2016

தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம்?


தமிழ்ப் புத்தாண்டை சித்திரை ஒன்றில் ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு நமது பெரியோர்கள் சொன்ன மேலும் சில விளக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்!
ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.

காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.

நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது).

ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.
சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை.
ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர்.

பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான்.
எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.
சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]
விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]
அனுசம் = ஆனி
பூராடம் - பூராடி = ஆடி
சிரவணம் - ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]
பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]
அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]
கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]
மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி
பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]
மகம் - வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]
உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].
ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.

இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு.

முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும்

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

- திருமந்திரம் (திருமூலர்)

தமிழ் வருட பிறப்பு ஒரு கண்ணோட்டம்.

இன்று நாம் கலியுக மன்மத வருடத்தை கடந்து  கலியுக துன்முகி ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழர்கள் கணக்கு படி 5118வது வருடம். 

தமிழர்களின் ஜோதிட கணிப்புப்படி, 60 ஆண்டுகள் ஒரு வட்டமாக கருதப்படுகிறது. ஆனால் நாம் பெரும்பாலும் ஆண்டுகளை பெரிதாக கருதுவது கிடையாது. இந்த 60 வருடங்களையும் 3ஆக  பிரித்து, (20 வருடங்கள்)
1. உத்தம ஆண்டுகள்
2. மத்திம ஆண்டுகள்
3. அதம ஆண்டுகள்.

60 வருடங்களின் பெயர்கள் பின்வருமாறு.
1. பிரபவ  - (1987-88)
2. விபவ
3. சுக்ல
4. பிரமோதூத
5. பிரசோற்பத்தி
6. ஆங்கீரச
7. முக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதானிய
13. பிரமாதி
14. விக்கிரம - (2000-01)
15. விஷு
16. சித்திரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வசித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி - (2010-11)
25. கர
26. நந்தன
27. விஜய 
28. ஐய - (2014-15) 
29. மன்மத - (2015-16) 
30. துன்முகி (2016-17) 
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி - (2020-21)
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாசுவ
40. பரபாவ
41. பிலவங்க
42. கீலக
43. செளமிய
44. சாதாரண - (2030-31)
45. விரோதகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராட்சச
50. நள 
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரெளத்திரி - (2040-41)
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாட்சி
59. குரோதன
60. அட்சய.
இதை சுழற்ச்சி முறையில் பயன்படுத்தி வந்துள்ளனர் நம் முன்னோர்கள். 
மேலும்,
சூரிய மாதம், சந்திர மாதம் என வருடத்தில் 2  உண்டு. 
சூரியமாதம், சந்திர மாதம்.
1. மேழம், சித்திரை
2. விடை, வைகாசி
3. ஆடவை, ஆனி
4. கடகம், ஆடி
5. மடங்கல், ஆவணி
6. கன்னி, புரட்டாசி
7. துலை, ஐப்பசி
8. நளி, கார்த்திகை
9. சிலை, மார்கழி
10. சுறவம், தை,
11. கும்பம், மாசி
12. மீனம், பங்குனி.
 நாம் சந்திர மாத ஆண்டுகளையே பின்பற்றுகிறோம்.  நம் முன்னோர்கள் பூமியின் சுழற்சியை வைத்து,என்றோவரும் அம்மாவாசை, பெளர்ணமி மிக எளிதாக கணக்கிட்டு சொல்லிவைத்தார்கள். 
மேலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது.
 கால கணித வாய்ப்பாடு.
1 கற்பகம் = 1000 சதுர்யுகம்.
1 மனுவந்தரம் = 71 சதுர் யுகம்.
1 சதுர் யுகம் = 4 யுகம் 43,20,000 ஆண்டு
1 யுகம்  = --------
1 ஆண்டு வட்டம் = 60 ஆண்டு.
1 ஆண்டு = 12 மாதம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி 15 தற்பரை)
1 நாடி = 1440 விநாடி/24 நிமிடம்
1 விநாடி = 60 தற்பரை.

கிருத யுகம் 4*432000= 17,28,000 ஆண்டுகள்.
திரேதா யுகம் 3*432000= 12,96,000 ஆண்டுகள்.
துவாபர யுகம் 2*432000 = 8,64,000 ஆண்டுகள்.
கலியுகம் 1*432000 = 4,32,000 ஆண்டுகள்.

இவை அனைத்தும் தமிழ் புத்தாண்டின் சுருக்கமான விளக்கமே.

தமிழ் வருடப்பிறப்பு
==================
இன்று சுழல் ஆண்டுகளில் மன்மத ஆண்டு முடிந்து, துன்முகி ஆண்டு பிறக்கிறது. தொடர் ஆண்டு முறையில், கலியுக ஆண்டு 5118 பிறக்கிறது. தமிழ் வருடப்பிறப்பை பற்றிய தகவல்களை இக்கட்டுரையில் காண்போம்.

வருடையில் தொடங்குகிறது புது வருடம்...
=====================================
நமது வான் மண்டலத்தில் உள்ள நட்சத்திர கூட்டங்களை பன்னிரு இராசிகளாக பிரித்தனர் நம் முன்னோர். அந்த பன்னிரு இராசிகளில் முதல் இராசி மேடம். இதனை வருடை இராசி என்று சங்கத்தமிழ் நூலான பரிபாடல் கூறுகிறது. வருடையில் ஆண்டு பிறப்பதால் வருடைப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் வருடப்பிறப்பானது...

வருடப்பிறப்புக்கு என்ன செய்வது?
============================
ஆண்டின் முதல் நாளான இன்று ஒரு தாம்பூலத்தட்டில், தமிழர்களின் முக்கனிகளான மா,பலா,வாழை ஆகியவற்றுடன் வெற்றிலைப்பாக்கு, தேங்காய், பூ, பணம், அரிசி,பருப்பு ஆகியவற்றை ஒரு நிலைக்கண்ணாடியின் முன் வைத்துவிட வேண்டும்.  புத்தாண்டு அன்று இதன் முன் கண் விழிக்க வேண்டும். அப்படி செய்வதனால் ஆண்டு முழுவதும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

பிறகு மருந்துநீரில் குளித்து, புத்தாடை உடுத்தி, கோவிலுக்கு சென்று பஞ்சாங்கம் படிப்பதை கேட்க வேண்டும்.

பெரியோரிடம் ஆசி வாங்கி, தான தருமங்கள் செய்ய வேண்டும்.

வீட்டில் பொங்கல் வைத்து, மாங்காய் பச்சடி, நீர்மோர்,பருப்பு வடை ஆகியவற்றை செய்து படைக்க வேண்டும்...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பூத்தது புது வருடம்
பூத்து குழுங்கட்டும் புது வசந்தம்

நடந்து முடிந்தது முடிந்தது - இனி
நடப்பவை நல்லபடியாக நடக்கட்டும்.

எதிர்காலத்தை திட்டமிடுவோம்
எண்ணங்களை வசப்படுத்துவோம்

கடந்த வருடம்- நம்
கஷ்டங்களை கொண்டு போகட்டும்

புது வருடம் – பல
புதுமைகள் காண உதவட்டும்

நினைவுகளாய் இருக்கும் கனவுகள்
நிஜமாய் மாறட்டும்

இன்னொரு ஜென்மம் உண்டென்றால்
இந்த சொந்தங்கள் தொடரட்டும்

நம் வீட்டு சொந்தங்கள்
நலம் வாழ நாளும் பிராத்திப்போம்

Thursday, April 7, 2016

ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா !!!. இயற்கையே மருந்து

🙏🌻



ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள்.

பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.

இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

 அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. 

மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. 

திரு மணங்களில் ‘ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. 

நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. 

இது ஒரு நல்ல பயிற்சி.

கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. 

மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும்.

இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். 

தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப்படும்.

ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. 

சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். 

கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். 

வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள்.

வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. 

சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. 

இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர்.

ஊஞ்சல்கள் பலவகை:

சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.

நவீன வகை ஊஞ்சல்கள் “சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.

தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. 

மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. 

குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. 

காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.

கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. 

ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.

"இயற்கையே மருந்து" !

Sunday, December 13, 2015

இயற்கையில உள்ள காற்று எப்படி உருவாகுது ?



முதல் காற்று எப்படி உருவானதுன்னு யோசிப்போம்.

அது புவி பிறந்த காலம். சுமார் 4,540 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து 4,000 மில்லியன் வருடங்களுக்கு முன் வரை. அந்தக் காலத்தை ஹேடியன் காலம்னு (Hadean eon) சொல்வோம்

அதுக்கு முன்னாடி புவித்தோற்றக் காலத்தை மில்லியன் ஆண்டுகளில் வரிசைப்படுத்துனதைப் பார்த்துருவோமா.

1. Hadean Eon (4500-4000)
2. Archean Eon (4000-2500)
..........a. Eoarchean Era (4000-3600)
..........b. Paleorchean Era (3600-3200)
..........c. Mesoarchean Era (3200-2800)
..........d. Neorchean Era (2800-2500)
3. Proterozoic Eon (2500-500)
..........a. Paleoproterozoic Era (2500-1600)
..........b. Mesoproterozoic Era (1600-1000)
..........c. Neoproterozoic ERa (1000-541)
4. Phanerozoic Eon (500-Present)
..........a. Paleozoic Era (541-252.2)
..........b. Mesozoic Era (252-66)
..........c. Cenozoic Era (66-Present)

அந்த ஹேடியென் காலத்துலயே காற்று உருவாகி விட்டது. ஆனா, இப்ப இருக்குற மாதிரியான காற்று இல்லை. அப்பொழுதெல்லாம் பூமிக்கு அப்படியொன்றும் வலிமையான ஈர்ப்பு விசை கிடையாது. அதனால் தண்ணீர் மூலக்கூறுகள் கூட தப்பி விண்வெளிக்குச் சென்றுவிடும். ஹைட்ரஜன், ஹீலியம் இவற்றையெல்லாம் சொல்லவே வேண்டாம். ஒரே கொதிப்பும் வெடிப்பும்தான் பூமியில் அப்பொழுது. எங்கு பார்த்தாலும் எரிமலைகள்தான். குழம்புகள்தான். மெதுவாக இறுகத் துவங்கின.

இந்தக் காலத்தில்தான் பூமிக்கு ஒரு பெருமோதல் ஒன்னு நிகழ்ந்தது. இதை Great Impact Hypothesis-GIHனு சொல்வாங்க. செவ்வாய் கிரகம் அளவு பெரிதான ஏதோ ஒன்று (Theia-a protoplanet) பூமியை மோதிச் சென்றிருக்கவேண்டும். அதன் காரணமாக லேசாக இறுகிக்கொண்டிருந்த பூமிப் பந்தின் ஒரு சிறு பகுதி சிதறுண்டு போய் தனித்து இறுகி இன்றைக்கு அது நிலவாக இருக்கின்றது. 

அப்படி பூமியிலிருந்து சிதறுண்டு போனால் பூமியில் ஒரு பகுதி குறைவு பட்டிருக்க வேண்டுமல்லவா? அதுதான் இன்றைய பசிபிக் பெருங்கடல். இந்தோனேஷியாவில் இருந்து கொலம்பியா வரையில் இதன் தொலைவு19,800 கிலோமீட்டர்கள். இது நிலவின் விட்டத்தை விட 5 மடங்கு அதிகம். மொத்தப் பரப்பளவு 165.2 மில்லியன் சதுரகிலோமீட்டர்கள். நாம் அறிந்த ஆழம் 10லிருந்து 12 கிலோ மீட்டர் வரைக்கும். அந்த இடத்திற்குப் பெயர்தான் மரியானா அகழி (Mariana Trench).

சரி, அப்படியொரு மோதல் நிகழ்ந்ததும் இறுகிக்கொண்டிருந்த பொருட்களெல்லாம் மோதலினால் ஏற்பட்ட அதிவெப்பத்தில் மீண்டும் குழம்புகளாகின. எப்படியென்றால், குழம்புகளின் சிறுபகுதி ஆவியாகிப் போகுமளவிற்கு. அதிஉயர் வெப்பம். பாறைகள் ஆவியாகிப் பூமியைச் சூழ்ந்திருந்தன. இரண்டாயிரம் வருடங்களில் அந்தப் பாறை ஆவிகள் குளிர்ந்து படிந்தன. அப்பொழுது எடைகூடிய கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் நீராவிகள் தோன்றின. எடைகூடிய கார்பன்டையாக்சைடு வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக நீராவிகள் அழுத்தப்பட்டு நீராக மாறி பெருங்கடல்கள் உருவாகின. அப்பொழுதே ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினம் இருந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.

அடுத்து வரும் காலம் ஆர்க்கியென் காலம். இந்தக் காலத்தில்தான் Cyanobacteria என்ற நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெற்று உயிர் வாழ்ந்திருக்கின்றன. விடுபொருளாக ஆக்சிஜனை வெளியேற்றியிருக்கின்றன. இவையே பூமிக்கு ஆக்சிஜனை அதிகளவில் தந்திருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகளின் படிமங்கள் Stromatolites படிமங்களாகக் கடற்படுகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு காலமும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் ப்ரொட்டரஸோவிக் (Proterozoic) காலத்தில்தான் ஆக்சிஜன் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. காரணம் புவியின் முதல் மேம்படுத்தப்பட்ட ஒரு செல் உயிரினம் Eukaryote.

மேற்சொன்ன இந்த மூன்று காலங்களையும் ஒரே தொகுப்பாக Precambrian Supereon என்பார்கள். (தமிழில் இதனை நீள்காலம் எனலாமா?) ஏனெனில், இக்காலங்களில் புவி மாறுதல்கள் மிக மெதுவாகவே நிகழ்ந்து வந்தன. மெதுவாக என்றால்... நம் எதிர்பார்ப்பில் மெதுவாக; அடுத்த காலமான ஃபெனெரஸோவிக் (Phanerozoic) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிடும்பொழுது அது மிக மெதுவாக என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த நீள்காலத்தில்தான், Cyanobacteria நுண்ணுயிரியால் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தாவரங்கள் தோன்றி ஒளிச்சேர்க்கையில் ஆக்சிஜனை வெளிவிட்டதும் அந்த நீள்காலத்தில்தான்.

தற்போதைய வளிமண்டலத்தில் வாயுக்களின் இருப்பு
..........நைட்ரஜன் - 78.084%
..........ஆக்சிஜன் - 20.947%
..........ஆர்கான் (argon) - 0.934%
..........கார்பன்டையாக்சைடு - 0.033%
..........இதர வாயுக்கள் - 0.002%

காற்றில் ஆக்சிஜனின் சதவீதம் 19.5க்குக் கீழே போனால் நமக்கு உளவியல் பிரச்சனைகள் ஏற்படும். 16 சதவீதத்திற்குக் கீழே போனால், நம் வாழ்க்கை மட்டுமல்ல ஏனைய உயிரிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறிதான்.

இப்பொழுது எப்படி இந்தக் கலவை நிலைப்படுத்தப்படுகின்றது என்றால், நம் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக நைட்ரஜன் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. தாவரங்கள் மிருகங்கள் அழிந்துபட்டு மண்ணில் மட்கிப்போகும்பொழுது அல்லது எரிக்கப்படும்பொழுது எரிமலை வெடிப்புகள் என்றெல்லாம். ஆனால், அப்படி அதிகரிக்கும் நைட்ரஜன், சில உயிரினங்கள் அதனை உட்கொண்டும், மழை மற்றும் பனிப்பொழிவுகள் காற்றிலுள்ள நைட்ரஜனை கழுவித் துடைத்தும் சமன் செய்யப்பட்டு விடுகின்றது.

ஆக்சிஜன் அளவு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்பொழுது வெளிவிடப்படுகின்றது. அதே சமயத்தில் பெரும்பாலான உயிரினங்கள் அதனை உட்கொண்டு சமன் செய்து விடுகின்றன. 

உயிரினங்கள் வெளிவிடும் கார்பன்டையாக்சைடு தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு சமன்செய்யப்படுகின்றது.

இயற்கையில உள்ள காற்று எப்படி உருவாகுது ?



முதல் காற்று எப்படி உருவானதுன்னு யோசிப்போம்.

அது புவி பிறந்த காலம். சுமார் 4,540 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்து 4,000 மில்லியன் வருடங்களுக்கு முன் வரை. அந்தக் காலத்தை ஹேடியன் காலம்னு (Hadean eon) சொல்வோம்

அதுக்கு முன்னாடி புவித்தோற்றக் காலத்தை மில்லியன் ஆண்டுகளில் வரிசைப்படுத்துனதைப் பார்த்துருவோமா.

1. Hadean Eon (4500-4000)
2. Archean Eon (4000-2500)
..........a. Eoarchean Era (4000-3600)
..........b. Paleorchean Era (3600-3200)
..........c. Mesoarchean Era (3200-2800)
..........d. Neorchean Era (2800-2500)
3. Proterozoic Eon (2500-500)
..........a. Paleoproterozoic Era (2500-1600)
..........b. Mesoproterozoic Era (1600-1000)
..........c. Neoproterozoic ERa (1000-541)
4. Phanerozoic Eon (500-Present)
..........a. Paleozoic Era (541-252.2)
..........b. Mesozoic Era (252-66)
..........c. Cenozoic Era (66-Present)

அந்த ஹேடியென் காலத்துலயே காற்று உருவாகி விட்டது. ஆனா, இப்ப இருக்குற மாதிரியான காற்று இல்லை. அப்பொழுதெல்லாம் பூமிக்கு அப்படியொன்றும் வலிமையான ஈர்ப்பு விசை கிடையாது. அதனால் தண்ணீர் மூலக்கூறுகள் கூட தப்பி விண்வெளிக்குச் சென்றுவிடும். ஹைட்ரஜன், ஹீலியம் இவற்றையெல்லாம் சொல்லவே வேண்டாம். ஒரே கொதிப்பும் வெடிப்பும்தான் பூமியில் அப்பொழுது. எங்கு பார்த்தாலும் எரிமலைகள்தான். குழம்புகள்தான். மெதுவாக இறுகத் துவங்கின.

இந்தக் காலத்தில்தான் பூமிக்கு ஒரு பெருமோதல் ஒன்னு நிகழ்ந்தது. இதை Great Impact Hypothesis-GIHனு சொல்வாங்க. செவ்வாய் கிரகம் அளவு பெரிதான ஏதோ ஒன்று (Theia-a protoplanet) பூமியை மோதிச் சென்றிருக்கவேண்டும். அதன் காரணமாக லேசாக இறுகிக்கொண்டிருந்த பூமிப் பந்தின் ஒரு சிறு பகுதி சிதறுண்டு போய் தனித்து இறுகி இன்றைக்கு அது நிலவாக இருக்கின்றது. 

அப்படி பூமியிலிருந்து சிதறுண்டு போனால் பூமியில் ஒரு பகுதி குறைவு பட்டிருக்க வேண்டுமல்லவா? அதுதான் இன்றைய பசிபிக் பெருங்கடல். இந்தோனேஷியாவில் இருந்து கொலம்பியா வரையில் இதன் தொலைவு19,800 கிலோமீட்டர்கள். இது நிலவின் விட்டத்தை விட 5 மடங்கு அதிகம். மொத்தப் பரப்பளவு 165.2 மில்லியன் சதுரகிலோமீட்டர்கள். நாம் அறிந்த ஆழம் 10லிருந்து 12 கிலோ மீட்டர் வரைக்கும். அந்த இடத்திற்குப் பெயர்தான் மரியானா அகழி (Mariana Trench).

சரி, அப்படியொரு மோதல் நிகழ்ந்ததும் இறுகிக்கொண்டிருந்த பொருட்களெல்லாம் மோதலினால் ஏற்பட்ட அதிவெப்பத்தில் மீண்டும் குழம்புகளாகின. எப்படியென்றால், குழம்புகளின் சிறுபகுதி ஆவியாகிப் போகுமளவிற்கு. அதிஉயர் வெப்பம். பாறைகள் ஆவியாகிப் பூமியைச் சூழ்ந்திருந்தன. இரண்டாயிரம் வருடங்களில் அந்தப் பாறை ஆவிகள் குளிர்ந்து படிந்தன. அப்பொழுது எடைகூடிய கார்பன்டையாக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் நீராவிகள் தோன்றின. எடைகூடிய கார்பன்டையாக்சைடு வளிமண்டல அழுத்தத்தின் காரணமாக நீராவிகள் அழுத்தப்பட்டு நீராக மாறி பெருங்கடல்கள் உருவாகின. அப்பொழுதே ஒளிச்சேர்க்கை செய்யும் உயிரினம் இருந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.

அடுத்து வரும் காலம் ஆர்க்கியென் காலம். இந்தக் காலத்தில்தான் Cyanobacteria என்ற நுண்ணுயிரிகள் ஒளிச்சேர்க்கை மூலம் ஆற்றல் பெற்று உயிர் வாழ்ந்திருக்கின்றன. விடுபொருளாக ஆக்சிஜனை வெளியேற்றியிருக்கின்றன. இவையே பூமிக்கு ஆக்சிஜனை அதிகளவில் தந்திருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகளின் படிமங்கள் Stromatolites படிமங்களாகக் கடற்படுகைகளில் கண்டுபிடிக்கப்பட்டு காலமும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் ப்ரொட்டரஸோவிக் (Proterozoic) காலத்தில்தான் ஆக்சிஜன் கணிசமாக உயர்த்தப்பட்டிருக்கின்றது. காரணம் புவியின் முதல் மேம்படுத்தப்பட்ட ஒரு செல் உயிரினம் Eukaryote.

மேற்சொன்ன இந்த மூன்று காலங்களையும் ஒரே தொகுப்பாக Precambrian Supereon என்பார்கள். (தமிழில் இதனை நீள்காலம் எனலாமா?) ஏனெனில், இக்காலங்களில் புவி மாறுதல்கள் மிக மெதுவாகவே நிகழ்ந்து வந்தன. மெதுவாக என்றால்... நம் எதிர்பார்ப்பில் மெதுவாக; அடுத்த காலமான ஃபெனெரஸோவிக் (Phanerozoic) காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிடும்பொழுது அது மிக மெதுவாக என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த நீள்காலத்தில்தான், Cyanobacteria நுண்ணுயிரியால் புவியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜனின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. தாவரங்கள் தோன்றி ஒளிச்சேர்க்கையில் ஆக்சிஜனை வெளிவிட்டதும் அந்த நீள்காலத்தில்தான்.

தற்போதைய வளிமண்டலத்தில் வாயுக்களின் இருப்பு
..........நைட்ரஜன் - 78.084%
..........ஆக்சிஜன் - 20.947%
..........ஆர்கான் (argon) - 0.934%
..........கார்பன்டையாக்சைடு - 0.033%
..........இதர வாயுக்கள் - 0.002%

காற்றில் ஆக்சிஜனின் சதவீதம் 19.5க்குக் கீழே போனால் நமக்கு உளவியல் பிரச்சனைகள் ஏற்படும். 16 சதவீதத்திற்குக் கீழே போனால், நம் வாழ்க்கை மட்டுமல்ல ஏனைய உயிரிகளின் வாழ்க்கையும் கேள்விக்குறிதான்.

இப்பொழுது எப்படி இந்தக் கலவை நிலைப்படுத்தப்படுகின்றது என்றால், நம் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக நைட்ரஜன் சேர்ந்துகொண்டேதான் இருக்கின்றது. தாவரங்கள் மிருகங்கள் அழிந்துபட்டு மண்ணில் மட்கிப்போகும்பொழுது அல்லது எரிக்கப்படும்பொழுது எரிமலை வெடிப்புகள் என்றெல்லாம். ஆனால், அப்படி அதிகரிக்கும் நைட்ரஜன், சில உயிரினங்கள் அதனை உட்கொண்டும், மழை மற்றும் பனிப்பொழிவுகள் காற்றிலுள்ள நைட்ரஜனை கழுவித் துடைத்தும் சமன் செய்யப்பட்டு விடுகின்றது.

ஆக்சிஜன் அளவு தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யும்பொழுது வெளிவிடப்படுகின்றது. அதே சமயத்தில் பெரும்பாலான உயிரினங்கள் அதனை உட்கொண்டு சமன் செய்து விடுகின்றன. 

உயிரினங்கள் வெளிவிடும் கார்பன்டையாக்சைடு தாவரங்களால் உட்கொள்ளப்பட்டு சமன்செய்யப்படுகின்றது.

Tuesday, November 3, 2015

குழந்தை ஆணா பெண்ணா..?!



தற்போதுள்ள அறிவியல் வளர்ச்சியில் ஒரு கரு உருவான சில வாரங்களிலேயே அந்தக் கருவின் பால் என்ன என்பதை அறிந்து விட முடியும். வேண்டியபடி ஆண் அல்லது பெண் குழந்தைக்கு உரிய மரபு அணுக் கூறுகள் உடைய விந்தினை பெண்ணின் கருப்பை முட்டையுடன் சேர்ப்பதன் வழி விரும்பிய குழந்தையைப் பெறலாம் என்று கூறும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.எனினும் இந்த முயற்சிகள் எல்லாமே முழு வெற்றி அடைவதில்லை.பொருத்தமான அணுக்கூறுகளைச் சேர்த்து வைத்தாலும் அது முழுக் குழந்தையாக உருவாகும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. மொத்தத்தில் ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பது விதிப்படி நடக்கும். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்று உரைக்கும் தமிழ்ப் பண்பாட்டில் இதற்கொரு வழி நிச்சயம் இருக்க வேண்டும். சித்தருள் பெருஞ் சித்தர் திருமூலர் சில வழிகள் காட்டியிருக்கிறார். அவர் தந்த திருமந்திரத்தின் கரு உற்பத்தி என்னும் பகுதியில் ஒரு பாடல்;

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண்டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகுமாகில் தரணி முழுதாளும்
பாணவமிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

பொருள்: கரு தரிக்கும் காலத்தில் ஆணுக்கு வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் அதே சமயம் பெண்ணுக்கு இடது நாசியில் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்கும் உயிர் ஆணாகும். மாறாக பெண்ணுக்கு வலப்பால் மூச்சும் ஆணுக்கு இடப்பால் மூச்சும் மிகுந்து சென்றால் தரிக்கும் உயிர் பெண்ணாகும். இரண்டு பேருக்கும் ஒரே பக்க மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாகும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகும். அகப் பயிற்சியால் கட்டுப் படுத்தினால் கரு தரிக்காது. மூச்சு மிகுதல் என்றால் என்ன? மூக்கின் இரு ஓட்டைகளில் வலது பக்க ஓட்டை வல நாசி என்றும் இடது பக்க ஓட்டை இட நாசி என்றும் குறிக்கப்படும். நீங்கள் எந்த நேரத்தில் சோதித்துப் பார்த்தாலும் இரு நாசிகளுள் ஏதேனும் ஒன்றில் மட்டும்தான் மூச்சுக்காற்று மிகுந்திருக்கும். மற்றதில் மிகக் குறைவாக மூச்சு ஓடும். சற்று நேரத்துக்கொருமுறை இயற்கையாகவே இந்த மிகுந்த மூச்சு ஒரு நாசியிலிருந்து மற்றதுக்கு மாறும். ஒரு பக்கத்து நாசியை அடைத்து விட்டால் அடுத்த நாசியில் மூச்சு நடைபெறும். குழந்தை பெற விரும்பும் தம்பதியர் கரு தரிக்கும் வேளையில் உரிய மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் விரும்பிய வண்ணம் குழந்தை பிறக்கலாம் என்கிறது திருமந்திரம். நடைமுறையில் இதனைப் பின்பற்ற, தகுந்த யோக ஆசிரியரிடம் பயிற்சி பெற வேண்டும். பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி அவசியம். இன்னொரு வழிமுறை, தாய் மாதவிலக்கான நாளை முதல் நாள் என்றும் அடுத்த நாளை இரண்டாம் நாள் என்றும் தொடர்ந்து கணக்கிட்டு 5,7,9,11,13,15 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் குழந்தை தரிக்குமானால் அது பெண்ணாகும். 6,8,10,12,14,16 போன்ற இரட்டைப்படை நாட்களில் குழந்தை தரிக்குமானால் ஆணாகும். இங்கு ஒரு நாள் என்பது விடியற்காலை 5 மணி வாக்கில் சூரிய உதயத்தோடு தொடங்குவது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மறுநாள் காலை 5 மணிவரை ஒரு நாள் நீடிக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு நாளைத் தொடங்கும் மேனாட்டு முறைக் கணக்கு இங்கு செல்லாது. இந்த வழிமுறை ஞானவெட்டி,பாகவதம் முதலிய பல பழைய நூல்களில் உள்ளது. இத்தகைய வழிகளைப் பின்பற்றியே அந்தக் காலத்தில் தமிழ் மன்னர்கள், பேரரசர்கள் போன்றோர் விரும்பிய வண்ணம் வாரிசுகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு ஆலோசனை கூற அருகிலேயே ஞானிகள்,யோகியர் இருந்திருக்கிறார்கள். திருமந்திரத்தின் கரு உற்பத்தி அதிகாரத்திலிருந்து இன்னுமொரு பாடல். 

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

இங்கு கால் என்றால் (மூச்சுக்) காற்று என்று பொருள். கரு தரிக்கும் வேளையில் தந்தையின் வலது நாசியில் காற்று மிகுந்து வந்தால் குழவி (குழந்தை) ஆணாகும். இடது என்றால் பெண்ணாகும். மலக் காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறப்பார்கள். தாய்க்கும் தந்தைக்கும் மூச்சுக்காற்று ஒத்து வருமானால் பிறப்பது ஆணுமின்றி பெண்ணுமின்றி அலியாகும். இந்த மூச்சுக் காற்று இயற்கையாக சுமார் ஒன்றரை மணி நேரத்தில் ஒரு நாசியிலிருந்து இன்னொன்றுக்கு மாறும். உடனடியாக மாற்ற விரும்பினால் இடது புறம் சற்றுத் திரும்பி படுத்தால் போதும், மூச்சு வலது நாசிக்குச் சென்று விடும். வலப்பக்கம் சற்று நேரம் படுத்திருந்தால் மூச்சு இடது நாசியில் செல்லத் தொடங்கும். சிலர் ஒரு நாசித் துவாரத்தை பஞ்சு வைத்து அடைப்பதன் மூலம் மற்ற நாசியில் மூச்சு ஒடச் செய்வர். முறையாக யோகாசிரியர் ஒருவரிடம் பயிற்சி பெற்ற பின்னரே இத்தகைய வழி முறைகளைக் கையாளலாம். அதன்வழி பிரச்சினையைத் தவிர்க்கலாம்.

Thursday, October 29, 2015

ஒரே நேரத்தில் மூன்று சூரியன்கள்... சாத்தியமா?



மூன்று சூரியன்கள் சாத்தியமில்லை ஆனால், சூரியனின் பிம்பங்கள் சாத்தியம். புவியில் இருந்து பார்க்கையில் அது மூன்று சூரியன்களைப் போன்று நமக்குத் தெரிவதால் அப்படிச் சொல்லிக் கொள்கிறோம்.

இது ஒரு வளிமண்டலத்து ஒளியியல் தோற்றப்பாடு (Atmospheric Phenomenon). ஆங்கிலத்தில் Sun Dog என்று சொல்வார்கள். அறிவியலில் அதனை  Parhelion என்பார்கள். பன்மையில் சொல்வதென்றால் Parhelia.

சமயங்களில் இட வலமாக இரண்டு சூரிய பிம்பங்களோடு ஒளி வட்டமும் சேர்ந்து தோன்றும். அந்த ஒளிவட்டத்தினை 22° Halo என்பார்கள். தமிழில் பரிவேடம். இது சூரியன், நிலா இரண்டைச் சுற்றியும் ஏற்படும். சூரியனைச் சுற்றிச் சற்றே பெரிய அளவில் ஏற்படும் ஒளிவட்டத்தினை அகல்வட்டம் என்று சொல்வார்கள். அப்படி அகல்வட்டம் ஏற்பட்டால் மழை பெய்யும் என்று சொல்வார்கள். அகல்வட்டம் பகல்மழை என்ற சொற்றொடர் அதனை உறுதி செய்யும்.

இந்த நிகழ்வு ஒன்றும் ஆச்சர்யப்படக்கூடியவை அல்ல. உலகின் பல்வேறு இடங்களிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அரிஸ்டாட்டில் காலம் தொட்டு அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ 320 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே இது அவதானிக்கப்பட்டுள்ளது. வானை நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத நமக்குதான் இது ஆச்சர்யமளிக்கக்கூடும்.

இனி அறிவியல் விளக்கம். இந்நிகழ்வு சூரியன் உதிக்கும்போதோ அல்லது மறையும் போதோதான் நிகழும். அதாவது சூரியன் அடிவானத்தில் இருக்க வேண்டும். அதற்கு இணையான தளத்தில் பார்வையாளரும் இருக்க வேண்டும்.

முக்கியமாக வளிமண்டலத்தில் குருள் மேகங்களில் (Cirrus Clouds) தட்டைவடித்தில் அறுங்கோன பனிப்படிகங்கள் (Plate Shaped Hexagonal Ice Crystals) இருக்க வேண்டும்.  இந்தப் படிகங்கள் ஒரு முப்பட்டகத்தினைப் போலச் செயல்பட்டு, அதற்குள் பாயும் சூரிய ஒளியினை 22° அளவில் ஒளிவிலகள் ஏற்படச் செய்கின்றன.

இந்தப் படிகங்கள் ஒழுங்கற்று அமைந்திருந்தால் சூரியனைச் சுற்றி பரிவேடம் ஏற்படும். மாறாக, செங்குத்தாக ஒரே சீராக அமையுமானால் முச்சூரியத் தோற்றம் (Sun Dog) ஏற்படும்.

ஆக, சூரியனிலிருந்து வரும் ஒளிக்கதிர்களும், அந்த அறுங்கோணப் படிகங்களில் பட்டு பிரதிபலிக்கப்பட்டு வரும் ஒளிக்கதிர்களும் நம்மை வந்து அடையும்பொழுது சூரியனுக்கு வலமும் இடமுமாக மேலும் இரண்டு சூரியன்கள் இருப்பதைப் போன்று நமக்குத் தோற்றமளிக்கும்.

படங்கள் எடுக்கப்பட்ட தளங்கள் :
http:// apollo. lsc.vsc.edu/classes/met130/notes/chapter19/graphics/sundogs_schem.jpg
http://www. islandnet .com/~see/weather/graphics/photos/sundog.gif

Monday, September 14, 2015

இன்சுலினும் நாய்களும்


உங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மாம்பழ விதையை ஊன்றி வைக்கிறீர்கள். மாஞ்செடியும் வளர்கிறது. சில ஆண்டுகள் கழித்து, அது மரமான பின்னர் அம்மரத்தின் கிளைகளில் ஒட்டுண்ணிக் கொடிகள் முளைக்கின்றன. அவை மரத்தின் உயிராற்றலைச் சிறிதளவு பாதிக்கும். அதை நீங்கள் வெட்டி எறிகிறீர்கள். நீங்கள் விதைத்தது முளைத்தது. அதனோடு வேறு ஒரு கொடியும் முளைத்துவிட்டது. இது பக்கவிளைவு. அதாவது நீங்கள் எதிர்பாராமல் விளைந்தது.

உங்கள் மாமரம் காய்க்கத் துவங்குகிறது. அதன் பழங்கள் எட்டிக்காய்போல் கசக்கின்றன. அதை உண்டவர்கள் சில காலத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தே போகின்றனர். பின்னர்தான் தெரிகின்றது, அந்த மாம்பழங்களில் நஞ்சு கலந்துள்ளது எனும் செய்தி. இது நீங்கள் எதிர்பாராத விளைவு மட்டுமல்ல, நீங்கள் விரும்பாத விளைவு. இது பக்க விளைவு அல்ல, நேர் எதிர் விளைவு.

அலோபதி மருத்துவத்தில் ஒரு சொல்லை வெகு தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ’பக்க விளைவு’ (side effect) எனும் சொல் அது. ஒரு நோய்க்காக அலோபதி மருந்தினை உட்கொண்டால், ஒன்று அந்த நோய் முற்றிலும் தீர வேண்டும் அல்லது அந்த மருந்தினால் வேறு எதிர்விளைவுகள் நேராமலாவது இருக்க வேண்டும். அலோபதி மருந்துகள் பெரும்பாலான நோய்களைத் தீர்ப்பதே இல்லை. ஆனால், எதிர் விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன. அலோபதிக்காரர்கள் அழகாக இந்த எதிர்விளைவுகளை ‘பக்கவிளைவுகள்’ என்பார்கள். இது வார்த்தைகளால் நடத்தப்படும் அரசியல். உண்மையில் அவை எதிர்விளைவுகள்.

பயோக்ளைடோசோன் எனும் மருந்தினை சர்க்கரை நோய்க்காக உட்கொண்டால், அம்மருந்து சர்க்கரை நோயை குணப்படுத்துவதில்லை. ஆனால், அதே மருந்து புற்று நோயையும், இதய நோய்களையும், உடல் பருமனையும் விளைவிக்கிறது. இதன் பெயர் பக்க விளைவு என்றால், அது மோசடி அல்லவா.

இந்தப் புரிதலோடு இன்சுலினைப் பற்றியும் உங்களோடு உரையாட விரும்புகிறேன்.

இன்சுலினும் நாய்களும்:
நாய்களுக்கும் இன்சுலினுக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. முதன்முதலில் இன்சுலினைப் பற்றிய ‘ஆராய்ச்சியை’ அலோபதிக்காரர்கள் துவங்கியது நாய்களை வைத்துத்தான். 1889 ஆம் ஆண்டு, ஆஸ்கர் மின்கோவ்ஸ்கி, ஜோசப் வான்மெரிங் ஆகிய இருவரும் ஒரு நாயின் வயிற்றைக் கிழித்து அதன் கணையத்தை மட்டும் அறுத்து எடுத்து மீண்டும் நாயின் வயிற்றைத் தைத்து விட்டார்கள். கணையம் இல்லாத நாயின் சிறுநீரைச் ‘சோதனை’ செய்து பார்க்கையில், அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. அந்த நாயின் சிறுநீரை ஈக்களும் மொய்த்தன. ஆகவே, அவர்கள் ‘ஆய்வின்படி’ கணையம் இல்லாவிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்கும் எனும் முடிவு எடுக்கப்பட்டது.

1916 ஆம் ஆண்டு, பேராசிரியர் நிக்கோல் பாலேசு என்பவர், கணையத்தின் திசுக்களை வெளியே வளர்த்து அவற்றின் சாரத்தை ‘சர்க்கரை நோய்’ ஏற்பட்ட நாய்களுக்குக் கொடுத்தார். இதில், நாய்களின் சர்க்கரை குறைந்தது.

1921 ஆம் ஆண்டு, மருத்துவர்கள் பிரடரிக் பான்டிங், சார்லஸ் பெஸ்ட் ஆகிய இருவரும் இணைந்து, ஒரு நாயின் கணையத்தை அகற்றி அதற்கு சர்க்கரை நோய் வரவழைத்தார்கள். பின்னர் நாயின் கணையத்தினை கூழாக அரைத்து ஊசி மூலம் அதே நாய்க்குச் செலுத்தினார்கள். இதன் வழியாக, அந்த நாயின் சர்க்கரை அளவு மட்டுப்பட்டது. இந்த தொடர் ’வெற்றிகளை’த் தொடர்ந்து மாட்டுக் (cow) கணையத்திலிருந்து ’இன்சுலின்’ முதன் முதலாக தயாரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுவரை, இன்சுலின் மனிதர்கள் மீது ஆய்வு செய்யப்படவும் இல்லை; மனிதர்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவும் இல்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

1922 ஆம் ஆண்டு லியோனார்ட் தாம்சன் எனும் 14 வயதே நிரம்பிய சிறுவனுக்கு முதன் முதலாக இன்சுலின் கொடுக்கப்பட்டது. அந்தச் சிறுவன் அலோபதி முறைப்படி, முதல் வகை (type 1) சர்க்கரை நோயாளி. இவ்வகையில் ’இயற்கையாகவே உடலில் இன்சுலின் சுரப்பு இருக்காது’ என்பது அலோபதியின் கண்டுபிடிப்பு. லியோனார்ட் தாம்சனுக்குக் கொடுக்கப்பட்ட இன்சுலின் வெற்றிகரமாக வேலை செய்தது என்பது அலோபதி உலகினால் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர், இன்சுலினை மனிதர்களுக்கும் வழங்கத் துவங்கினார்கள்.

மனிதர்களும் இன்சுலினும்:
லியோனார்ட் தாம்சன் தொடர்ந்து இன்சுலின் ஏற்றிக் கொண்டு தனது இருபத்து ஏழாவது வயதில் மரணமடைந்தார். அதாவது, தொடர்ந்து 13 ஆண்டுகள் இன்சுலின் குத்திக்கொண்ட பின்னர் அவர் இறந்துபோனார். அவரது மரணத்திற்குக் காரணம் என்ன என்றும் அலோபதிக்காரர்கள் காரணம் கூறியிருக்கிறார்கள். அது மிக வினோதமான காரணம். லியோனார்ட் தாம்சன் ’நிமோனியா காய்ச்சல்’ வந்து இறந்துபோனார். அதாவது, சர்க்கரை நோயிலிருந்து ’காப்பாற்றப்பட்ட’ அந்தச் சிறுவன் சாதாரண ‘காய்ச்சலால்’ இறந்துபோனான்.
இப்போதும், தொடர்ந்து இன்சுலின் குத்திக்கொள்ளும் நம் சமூகத்தினர் எண்ணற்ற உடல் தொல்லைகளுக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சில ஆண்டுகள் தொடர்ந்து இன்சுலின் குத்திக்கொண்டவர்களுக்கு மரணம் நேரிடும்போது, எந்த மருத்துவராவது இந்த மரணத்திற்கு ’இன்சுலின்’ குத்திக்கொண்டது காரணம் எனக் கூறுகிறார்களா?
1996 ஆம் ஆண்டு முதல் இன்சுலின் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. விலங்குகளில் இருந்துதான் முதலில் இன்சுலின் தயாரிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு முதல் ’மனித இன்சுலின்’ (human insulin) உருவாக்கப்பட்டது. இதிலும் பல எதிர்விளைவுகள் கண்டறியப்பட்டதால், எலி லில்லி எனும் நிறுவனம் மனித இன்சுலினையே மரபணு மாற்றம் செய்து சந்தைக்குக் கொண்டுவந்துவிட்டது.
சாதாரண தக்காளி, கத்தரிக்காயில்கூட மரபணு மாற்றம் செய்யப்பட்டால் மிக மோசமான உடல்நலக் கேடுகள் விளையும் என்பதை நாம் உணர்ந்துவிட்டோம். ஆனால், இரத்ததில் நேரடியாகக் கலக்கும் ஒரு மருந்தை மரபணு மாற்றம் செய்து கொடுப்பதை இன்னும் அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறோம்.

உங்களுக்கோ உங்கள் உற்றாருக்கோ வழங்கப்படுவது, மரபணு மாற்றப்பட்ட இன்சுலினா அல்லது விலங்கு இன்சுலினா அல்லது மனித இன்சுலினா என்ற தகவலையாவது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். இன்சுலின் குறித்த தனது அறிவிப்பில் பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்பு (NHS),
’ The NHS has always allowed patients to have an informed choice of treatment before they make their treatment decisions and this includes information about risks and benefits. In recent years, greater emphasis has been placed on informed choice as a result of NHS policy which puts patients at the centre of care and encourages involvement in their treatment decisions so that in the ideal world, patients and their doctors make decisions jointly.
The treatment of diabetes is no exception and therefore people with insulin-requiring diabetes, whether Type 1 or Type 2 diabetes should have an informed choice of insulins and should be given information about risks and benefits.’ என்கிறது.
அதாவது, ’எந்த வகையிலான சிகிச்சை தனக்குத் தரப்படுகிறது, எந்த வகை இன்சுலின் தனக்கு பரிந்துரைக்கப்படுகிறது, தனக்குத் தரப்படும் இன்சுலின் மற்றும் பிற மருந்துகளால் விளையும் நன்மைகள், இடர்ப்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி ஒவ்வொரு நோயாளியும் அறிந்திருக்க வேண்டும். இந்த செயல்பாட்டில் மருத்துவர்களும் நோயாளிகளும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும்’ என்கிறது பிரிட்டன் தேசிய சுகாதார சேவை அமைப்பு.

இந்திய அரசின் சட்டங்களின்படியும் மேற்கண்ட செய்திகளை அலோபதி மருத்துவர்கள் தங்களிடம் வரும் மக்களிடம் வெளிப்படையாகக் கூற வேண்டும்.
இங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்!
இன்சுலின் குத்திக் கொள்ளும் அளவினை எந்த நேரமும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்பதுதான் உலகளவிலான அலோபதி அமைப்புகள் செய்யும் எச்சரிக்கை. அவ்வாறு கவனிக்காமல், அளவுக்கு அதிகமான இன்சுலினை குத்திக்கொண்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்கிறது கீழேயுள்ள பட்டியல்:
”மன அழுத்தம், சோர்வு, மிகையான தூக்க உணர்ச்சி, அதீத அயற்சி, தலைவலி, பசி, எதிலும் கவனம் செலுத்த இயலாத நிலை, எரிச்சலான உணர்ச்சி, குமட்டல், நரம்புத் தளர்வு, ஆளுமையில் மாற்றம் ஏற்படுதல், அதிவேகமான இதயத் துடிப்பு, நிதானமின்மை, நிம்மதியான தூக்கமின்மை, குழறியபடி பேசுதல், வியர்வை, கூச்ச உணர்வு, நடுக்கம், செயல்பாடுகளில் / அசைவுகளில் நிதானமற்ற நிலை”
மேலே உள்ளவை பொதுவான ’இன்சுலின் அளவு அதிகரித்தால்’ ஏற்படுபவைதான். இன்சுலின் அளவு மிகவும் கூடுதலாகிவிட்டால் என்னென்ன ஏற்படும் என்பது கீழே உள்ள பட்டியல்:
”ஆழ் மயக்கம் (coma), தன்னிலையிழத்தல், தோல் வெளிறிப் போகும் நிலை, வலிப்பு”
மேற்கண்ட பட்டியல்கள் ஏதோ மரபுவழி மருத்துவர்களின் கண்டுபிடிப்பு அல்ல. பிரிட்டனில் இயங்கும் diabetes.co.ukஎனும் மிகப் பெரிய நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
ஒருவர் சர்க்கரை நோய்க்காக அலோபதி மருத்துவரை அணுகினால், ஒன்று அந்த நோயைத் தீர்க்கும் மருந்தைத் தர வேண்டும் அல்லது ’எங்களிடம் மருந்து இல்லை’ என்று ஒப்புக்கொள்ள வேண்டும். மாறாக, அவரது நோயையும் தீர்க்காமல், சர்க்கரையைக் காட்டிலும் மிகக் கொடுமையான எண்ணற்ற நோய்களை உருவாக்கும் மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்கள் அலோபதிக்காரர்கள். இதற்குப் பெயர்தான் ‘நவீன மருத்துவம்’!
இதைக் கேள்வி கேட்பவர்கள் ‘பிற்போக்குவாதிகள்’ , ‘அறிவியலே தெரியாதவர்கள்’.
இன்சுலின், பயோக்ளைடோசோன் உள்ளிட்ட மருந்துகளினால் விளைபவை பக்க விளைவுகளா (side effects) ? நேர் எதிர் விளைவுகளா (adverse effects)? என்பதை இப்போதாவது நம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.
மரபுவழிகளைப் பொறுத்தவரை, ’உடலின் இயற்கை ஆற்றலுக்கு மீண்டும் இன்சுலின் சுரக்கும் ஆற்றல் உண்டு’ என்பதுதான் கோட்பாடு. பெரும்பாலான மரபுவழிகள், உடலின் இயற்கை ஆற்றலைத் தூண்டும் மருந்துகளையும், செயல்முறைகளையும் மட்டும்தான் கொண்டுள்ளன. ஆகவேதான், பல ஆயிரம் ஆண்டுகளாக, நம் முன்னோர் சர்க்கரை நோயைக் கண்டு அஞ்சாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்துவந்தனர்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்ற அலோபதி முறை, ஆலமரங்களாக நிலைத்து நிற்கும் மரபுமுறைகளை வீசி எறிய முயற்சித்து மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டுள்ளது. எதற்கெடுத்தாலும் செயற்கையான வழிமுறைளைக் கண்டறிந்து, உடலின் இயற்கை ஆற்றலை, இயல்பான மனநிலையை அழித்து மரணப் பெட்டிக்கு அனுப்பும் கொள்கையுடன் இருக்கிறது அம்முறை.
ஒருபுறம் எளிய தீர்வுகள், மறுபுறம் மக்களின் உயிர்களுடன், பொருளாதாரத்துடன் சூதாட்டம் நடத்தும் மருத்துவ முறை இவை இரண்டையும் கண்டு மனம் பொறுக்காத உங்களில் நானும் ஒருவன். தீய வழிகளைப் புறக்கணித்து, எளிய தீர்வுகளை சமூகத்தின் முன்னே கொண்டு நிறுத்தும் இயற்கையின் பிள்ளைகளாக செயல்படுவோம்

Wednesday, July 29, 2015

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 5





இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து.

Hyde Act-
டை (இது ஒப்பந்தத்துக்குள் வருமா வராதா என்ற சந்தேகங்கள் தீராவிட்டாலும்..) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதம் என்கி்ன்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.

நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூட இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். இந்த ஒப்பந்ததின்படி, நாம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தாக்குதலை முன் கூட்டியே தடுக்க (deterrent) இந்த சோதனையை நடத்தலாம். அதற்கான சலுகை ஒப்பந்தத்தின் உள் பிரிவுகளில் தரப்பட்டுள்ளது.

நாம் அணு ஆயுத நாடே இல்லை என்று சொன்னவர்கள், NPT-ல் (Non proliferation treaty) கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்றவர்கள், அணு ஆயுதமே வைத்திருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று நாம் கையெழுத்தெல்லாம் போட வேண்டாம், அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம்... கூடவே உங்கள் அணு உலைகளுக்கு எரிபொருளைத் தருகிறோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் விட இந்திய அணு விஞ்ஞானிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் 'Dual use'. இதன்படி நாம் வாங்கும் யுரேனியத்தை வெறும் மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் அதை ரீ-புராஸஸ் செய்து அப்படியே புளுட்டோனியமாக்கி அதை வைத்து அணு குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மாதிரி, நாம் இத்தனை காலம் தவம் கிடந்ததும் இப்படி ஒரு ஒப்பந்ததுக்குத் தானே என்பது இந்திய அணு விஞ்ஞானிகளின் நிலை. நமது இம்மீடியேட் பிரச்சனை யுரேனியமும் புளுட்டோனியமும்தான். நம் நாட்டில் தோரியம் ரிசர்வ் ஏகத்துக்கும் இருக்கிறது. ஆனால், தோரிய அணு உலைகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பெரிய அளவில் முன்னேறவில்லை.

யுரேனியத்தைக் கொண்டு இயங்குவது Pressurized Heavy Water Reactors. நம்முடைய பெரும்பாலான அணு உலைகள் இந்த ரகம் தான்.

இதை விட கொஞ்சம் முன்னேறிய டெக்னாலஜி Fast Breeder Reactors. இதில் எரிபொருள் புளுட்டோனியம்.

மூன்றாவதான லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தான் தோரியம் மூலம் இயங்கும் அணு உலைகள். இந்த அணு உலைகளை டிசைன் செய்வதில் தான் இப்போது இந்தியா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது.


தோரியம் அணு உலைகளை கட்டுவதில், செயலாக்குவதில் நாம் மாஸ்டர் ஆகிவிட்டால், நாமே ஒரு வருட நோட்டீஸ் தந்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடலாம். அவ்வளவு தோரியம் இருக்கிறது நம்மிடம். ஆனால், அதுவரை... யுரேனியம், புளுட்டோனியம் தான் ஒரே வழி. அதைப் பெற வேண்டுமானால் Nuclear Supply Group (NSG)ன் கடைக் கண் பார்வை வேண்டும். அந்தப் பார்வையையை வாங்கித் தரப் போகிறது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.

மேலும் அணு உலைகள் தொடர்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை நமக்கு அமெரிக்கா தரும். தோரியம் அணு உலைகளை உருவாக்குதில் நாம் சந்தித்து வரும் சிரமங்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொழில்நுட்பம் தந்து உதவும். அதே போல நமது யுரேனியம் அணு உலைகளுக்குத் தேவையான சப்ளையை தங்கு தடை இல்லாமல் அமெரிக்கா வழங்கும். நாம் தேவையான அளவை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வாங்கிக் குவித்து ரிசர்வ் கூட வைத்துக் கொள்ளலாம் (stockpile).

 சரி.. அமெரிக்கா ஏன் இப்படி ஓடி வந்து நமக்கு உதவ வேண்டும். ஒன்று நான் முன்பே சொன்ன strategic காரணங்கள். எதிர்கால உலக அமைதி, பாதுகாப்பு, மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது

இரண்டாவது 'பிஸினஸ்'. இன்றைய நிலையில் உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வரும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 'டபுள் டிஜிட்' பணவீக்கம் நமது வண்டியின் டயர்களை பஞ்சர் பார்த்தாலும் என்ஜின் கெட்டி... நாம் நம்புகிறோமோ இல்லையோ (குறிப்பாக இடதுசாரிகள்..), அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எங்கேயோ போய்விடும் என உலக நாடுகள் நம்புகின்றன.

பொருளாதாரரீதியில் முன்னேறிய நாடு என்றால் என்ன அர்த்தம், மிகப் பெரிய வர்த்தக சந்தை என்பது தானே. அந்த சந்தையை தன் கையை விட்டு நழுவி விடாமல் இருக்க அமெரிக்கா போட்டுள்ள மாஸ்டர் பிளான்களில் ஒன்று தான் இந்த ஒப்பந்தம்.

நான் முதல் கட்டுரையில் சொன்னது தான்... இதே அளவி்ல் நமது வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க முதலில் நம் முதலில் மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். (2020ம் ஆண்டில் நமது மின் உற்பத்தி 20,000 மெகாவாட்டாக உயர்ந்தாக வேண்டும்). அதற்கான ஒரே வழி அணு மின்சாரம் தான். அதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வழி செய்வது மட்டும் தான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம். உண்மையில் அதை வழங்கப் போவது அமெரிக்காவி்ன் GE, Westinghouse போன்ற அணு மின் தயாரிப்பில் கரை கண்ட முன்னணி நிறுவனங்கள். அவர்களுக்கு இந்தியாவுடனான அணு தொழில்நுட்ப வர்த்தகம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிஸினஸ்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. அவ்வளவு தூரத்துக்கு வியாபாரம் நடக்கப் போகிறது. கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் பிஸினஸ் இது என இப்போதே அமெரிக்க வர்த்தக சபை (United States chamber of commerce) கணக்குப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பந்தம் வேகமாக நிறைவேறாதா என காத்திருக்கிறது.

இத்தனை விவகாரங்களையும் அலசி-ஆராய்ந்து பார்த்தால் ஹைட் ஆக்ட் அல்லாத இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு கொடுக்கப் போவதெல்லாம் நிறைய நன்மைகளைத் தான். ஆனால், இதே போன்ற ஒப்பந்தத்தை சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்டபோது வாய் திறக்காத இடதுசாரிகள் இப்போது மட்டும் கூச்சல் போடுவதற்குக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களை அவர்களது சித்தாந்த கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம். இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பிரான்ஸ்சுடனோ, ரஷ்யாவுடனோ செய்யப்பட்டால் அமைதியாக இருந்திருப்பார்கள். அவர்களது முதல் எதிரியான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் அவர்களால் தாங்க முடியவில்லை.

அதுவும், தங்களது தயவில் ஆட்சியில் இருக்கும்போதே அரசு இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது என்பது தங்களது சிவப்பு கொடியில் விழும் அழியாத கறையாகிவிடும் என்று நினைக்கின்றனர். அடுத்ததாக அணு தொழில்நுட்ப வியாபாரம் முலம் இந்தியாவை விட அமெரிக்கா தான் அதிகமான பலன்களை அடையப் போகிறது என நினைக்கின்றனர் இடதுசாரிகள்.

ஆனால், இடதுசாரிகளை எதிர்ப்போர் சொல்வது.. இவர்கள் சீனாவின் ஜால்ராக்கள். தங்களுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்துவிடுமோ என்ற அஞ்சும் சீனா தான் இவர்களைத் தூண்டி விடுகிறது. அணு ஒப்பந்தத்தை தடுக்கப் பார்க்கிறது... இதையெல்லாம் விட அதிர்ச்சியான சில கட்டுரைகள் எல்லாம் பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவி்ட்டன. இந்த ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான பணம் கைமாறிவிட்டது.... என்றரீதியில் அந் நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

 ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை பத்திரிக்கைகளில் திணிப்பதே பாகிஸ்தானின் உளவு அமைபபான ஐ.எஸ்.ஐ தான் என்கின்றனர் இன்னொரு தரப்பினர். நமக்கு கிடைக்காத ஒரு ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைக்கிறதே என்ற வேதனையில், இப்படி தகவல்களை பரப்புகிறது ஐஎஸ்ஐ என்கின்றனர். இப்படி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள், ஹைட் ஆக்ட் போன்ற சட்ட சிக்கல்கள், சீனா-பாகிஸ்தானி்ன் 'உள்' வேலைகள், சித்தாந்த மோதல்கள், பிஸினஸ் முதலைகள், அரசியல் சர்க்கஸ்கள், IAEA போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் வென்றாக வேண்டும்...

இதையெல்லாம் பார்க்க இன்று புத்தர் இருந்திருந்தால், நி்ச்சயம் சிரித்திருக்க மாட்டார்... அதே நேரத்தில் இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்டு காங்கிரஸ் படும் பாட்டைப் பார்த்தால் நாடே சிரி்ப்பாய் சிரிக்கிறது!

Read more at: http://tamil.oneindia.com/editor-speaks/2008/07/0704-billions-to-flow-if-indo-us-deal-approved.html