Showing posts with label PLANTS. Show all posts
Showing posts with label PLANTS. Show all posts

Friday, October 7, 2016

கெட்டுப்போன முட்டையில் கெட்டிக்காரத்தனம்



நான் மதுரை மாவட்டம், கருமாத்தூர் - கலுங்குபட்டி என்னும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. என்னுடைய பெயர் காசிமாயன். 

நான் என்னுடைய மாட்டுக் கொட்டகையில் பந்தல் அமைத்து இரண்டு நாட்டுச்சுரை விதைகளை ஒரு சிமென்ட் தொட்டியில் நடவு செய்து கவனமாக வளர்த்து வந்தேன். அந்த இரண்டு செடிகளுக்கும் மண்ணை மலடாக்கும் ரசாயன உரங்களை கொடுக்காமல் மண்ணை வளமாக்கும் ஜீவாமிர்தத்தையே உரமாகக் கொடுத்து வந்தேன். நான் கொடுத்த அந்த உரத்திற்கு பரிசாக அந்த இரண்டு சுரைச்செடிகளும் இரண்டரை அடி நீளத்தில் 19 காய்கள் காய்த்தன.

அந்த சமயத்தில் என்னுடைய இரண்டு கோழிகள் குஞ்சு பொரித்ததில் எட்டு முட்டைகள் குழு முட்டை (கெட்டுப்போனது) ஆகிவிட்டன. அதில் இரண்டு முட்டைகளை செடிக்கு ஒன்று வீதம் வேரின் பக்கவாட்டில் சிறு குழி எடுத்து குழியில் முட்டைகளைப் போட்டு உடைத்து விட்டு மண்ணால் மூடி நீர் ஊற்றி பராமரித்து வந்தேன். 

இப்பொழுதான் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஐந்து நாள் கழித்து மாடியில் ஏறிநின்று கொடிகளை கவனித்தேன். வயதான அந்த கொடிகளில் சுமார் 50 பூக்களுக்கு மேல் பூத்திருந்தன. அந்த 50 பூக்களில் 18 பூக்கள் காயாக மாறி ஒரு வாரத்திற்குள் அசுர வேகத்தில் பெரிதாகி பறிப்புக்கு வந்தன.

மீண்டும் ஆறுநாள் கழித்து முன்னைப் போலவே செடிக்கு ஒரு முட்டை வீதம் உரமாகக் கொடுத்தேன். மீண்டும் கொடிகளில் 55 பூக்கள் பூத்தன. அதில் 20 பூக்கள் காயாக மாறி 9 நாட்களில் பறிப்புக்கு வந்தன. மீண்டும் ஒரு வாரம் கழித்து செடிக்கு இரண்டு முட்டைகள் வீதம் உரமாகக் கொடுத்தேன். இப்பொழுது 70 பூக்களுக்கு மேல் பூத்தன. அதில் 24 பூக்கள் காயாக மாறி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

மீண்டும் அதே முயற்சி, ஆனால் அந்த செடிகளுக்கு வயது முடிந்துவிட்டது போலும். அந்த இரண்டு சுரைச்செடிகளின் வாரிசுகளும்  முளைத்து வளமாக வளர்ந்து வருகின்றன. அந்த இரண்டு சுரைச்செடிகளுக்கும் நான் கொடுத்த உரமோ 8 கெட்டுப்போன முட்டைகள். ஆனால் அந்த இரண்டு சுரைச்செடிகளும் எனக்குக் கொடுத்த வரவோ 81 சுரைக்காய்கள்.

இந்த சிறு முயற்சியின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால் காய்கறி மற்றும் எல்லாப் பயிர்களுக்கும் கெட்டுப்போன முட்டைகள், ஒரு சிறந்த உரம் என்பதை உணர்கிறோம். எனவே கோழி வளர்க்கும் விவசாயிகள் கெட்டுப்போன முட்டைகளை வீசி எறிந்து விடாமல் நம்முடைய பயிர்களுக்கே உரமாகக் கொடுக்க வேண்டும்.

நான் இந்த முறையினை அருள் ஆனந்தர் கல்லூரியில் நடைபெற்ற விதைத் தொழில் நுட்ப பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு கற்றுக்கொண்டேன். அப்பொழுது எனக்கு தேனி மாவட்டம் வைகை அணையில் உள்ள (ARS - Agricultural Research Station) வேளாண் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முனைவர். ரெங்கநாயகி அவர்கள் கற்றுத்தந்தார்கள். இந்த அருமையான பயிற்சியினை ஏற்பாடு செய்து கொடுத்த அருள் ஆனந்தர் கல்லூரிக்கு நன்றி

- காசிமாயன்,
கருமாத்தூர் - கலுங்குபட்டி,
மதுரை  மாவட்டம். 

Saturday, June 6, 2015

சிறு நீரகக்கல் பிரச்சனையா?



சிறு நீரகக்கல் இருந்தவர்கள் வலி தாங்க முடியாமல் டாக்டர் இடம் சென்றிருப்பீர்கள் ! அவரும் எல்லா சோதனைகளும் முடித்து மருந்துகள் கொடுப்பார் பிறகு மீண்டும் வலி வரும் மீண்டும் சோதித்து ஆபரேஷன் தான் வழி என்றும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு வைப்பார்.
நீங்களும் வேறு வழியின்றி வலி தாங்காமல் ஆபரேஷன் செய்து பணத்தை கட்டி அழுவீர்கள்!
ஆனால் சிறு நீரகக்கல் பிரச்சனை மீண்டும் மீண்டும் வரும் எத்தனை முறை டாக்டர் இடம் பணத்தை கொட்டி அழுவது?
சரி இனி விசயத்திற்கு வருகிறேன்,

சிறு பீளைச்செடி........

இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!
இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!
ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும்.

மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
சாப்பிடும் முறை: இதன் பூ,இலை,தண்டு,வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு . இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!
இது போன்று இரவும் சாப்பிடனும்.இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.

மற்றொரு சாப்பிடும் முறை:

இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml
பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம். இதை உட்கொள்ளும் போது மருந்து வேளை செய்தால் சிலருக்கு வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

இம்மூலிகை மருந்தை நான் சுமார் 70 பேருக்கும் மேலாக எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக கொடுத்துள்ளேன். இந்த செடி எனது ஊரில் நிறைய விளைந்து கிடக்கிறது.இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.
இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம்நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது.அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறு நீரகக்கல் வந்தவர்கள் ஆபரேஷன் செய்திருப்பினும்
மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Saturday, May 23, 2015

தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?

தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?


தாவரங்கள் நீரை உறிஞ்சுவது எவ்வாறு?

அதற்கு முன் ஒரு மூன்று இயற்பியல் நிகழ்வுகள் குறித்துப் பார்த்துவிடுவோம்.

நீராவிப் போக்கு (Transpiration)
இதனைத் தாவரங்களுக்கு வியர்க்கின்றது என்று சொல்லலாமா? தாவரங்களின் தண்டு, மலர், வேர் குறிப்பாக இலைகள், இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் அல்லது இழக்கப்படும் நீரின் போக்கினையே நீராவிப் போக்கு என்கிறோம். இலைகளின் மேல் மற்றும் கீழ்பகுதிகளில் காணப்படும் நுண்துளைகள் (Stomata) (நமது வியர்வைத் துளைகள் போன்றதே) வழியாகவே நீர் வெளியேற்றப்படுகின்றது. அச்சமயத்திலேதான் காற்றிலுள்ள கரியமில வாயுவினையும் (Carbon di-oxide) ஒளிச்சேர்க்கைக்காக (Photosynthesis) அத்துளை வழியாக உட்கொள்கின்றது. இந்நீராவிப் போக்கானது, தாவரங்களைக் குளுமையாக வைத்துக்கொள்ளவும், அடியிலிருந்து நுனி வரைக்கும் நீர் மற்றும் சத்துமிக்க தாதுக்களைக் கடத்துவதற்கும் உறுதுணையாக உள்ளது.

சவ்வூடு பரவல் (Osmosis)
சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் (Osmosis) எனப்படுவது நீரழுத்தம் கூடிய கரைசல் (கரையத்தின் செறிவு குறைந்த கரைசல்) ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் (கரையத்தின் செறிவு கூடிய கரைசல்) ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு (semi-permeable membrane) ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். இது கரையம் அல்லது கரைபொருளை (solute) உட்செல்ல விடாது, கரைப்பானை (solvent) மட்டுமே தேர்ந்து உட்செல்ல விடும் மென்சவ்வினூடாக, கரைப்பானானது, ஆற்றல் இழப்பின்றி பரவும் (passive diffusion) ஒரு இயற்பியல் தொழிற்பாடாகும். இந்த சவ்வூடு பரவலின்போது வெளியேறும் ஆற்றலானது வேறு தொழிற்பாடுகளில் அல்லது உயிரணுவின் மற்ற நிகழ்வுகளில் பயன்படுத்தப் படலாம்.

சவ்வூடு பரவல் மூலம் இருவேறு செறிவுடைய கரைசல்களின் (solution) இடையே கரைப்பான் மூலக்கூறுகள் பரவுவதால், இரு கரைசல்களின் செறிவும் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இயல்பாக நிகழக் கூடிய இவ்வகை கரைப்பானின் பரவலைத் தடுக்க கொடுக்க வேண்டிய அழுத்தமே சவ்வூடு பரவல் அழுத்தம் எனப்படும்.
-(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.)


தந்துகிப் பெயர்ச்சி (Capillary Action)
பொதுவாக நீரானது புவியீர்ப்பின் காரணமாக மேலிருந்து கீழ்நோக்கியே பயணிக்கும் என்பதை நாமறிவோம். நீர்மங்களின் ஒரு பண்பான இத்தந்துகிப் பெயர்ச்சி, நுண்துளைக் குழாய்களில் புவியீர்ப்பிற்கு எதிராக மேல்நோக்கிச் சற்று பயணிக்க முயலும்.

தெரிந்துகொண்டாயிற்றா? ஆக, நீரானது, மண்ணில் இருந்து சவ்வூடு பரவல் முறையில் தாவரங்களின் வேர்களின் மூலம் உட்பெறப்பட்டு, அங்கிருந்து தொடங்கும் நுண்ணிய குழாய்களில் தந்துகிப் பெயர்ச்சி முறையில் மேல்நோக்கிப் பயணித்து தாவரங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்கின்றது. நீராவிப் போக்கும் இப்பயணத்தை எளிதாக்குகின்றது. நீராவிப்போக்கினால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப நீரை இழந்த செல்களுக்கு அதன் அடுத்து உள்ள செல்களில்இருந்து நீர் தந்துகிப் பெயர்ச்சி முறையால் கடத்தப்படுகின்றது.

Monday, January 26, 2015

kasa kasa-கசகசா

fdகசகசா... நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். ஆனால், இதை வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வளைகுடா நாடுகள் கசகசாவுடன் வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை கொடுத்து வருகிறது.

சொந்த ஊரில் இருந்தவரை, மணக்க, மணக்க மசாலாவுடன் சாப்பிட்டு பழகிய நம்ம ஊர் இளைஞர்கள், வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது, ஊறுகாய் பாட்டில்களுடன், கசகசாவையும் எடுத்துச் சென்றதற்காக தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது.

இப்படி தண்டனைக் கொடுக்கும் அளவுக்கு, என்னதான் கசகசாவில் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்போம்.

இந்திய உணவுகளில் கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு, குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’ என்கிறது சித்தர் பாடல்.
sd
காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும் பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது. மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த பாப்பிச் செடியில் விதைகளை தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும் போது, அதாவது பையில் இருக்கும் விதைகள் முழுமை அடையாமல் இருக்கும் சமயத்தில், அந்த விதைப்பையைக் கீறி அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால் அதுதான் ஓபியம்.

weqwமதுபானம், புகையிலை, அபின், ஹெராயின், கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் போன்று ஓபியமும் போதை தரக்கூடியது. போதைபொருள் பழக்கம் உடல் நலத்திற்கும், சமூக நலத்திற்கும் பெரும் கேடு விளைவிக்கும். இதனால் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. கசகசாவில் போதை இல்லை என்றாலும், ஓபியம் தயாரிக்கப்படும் செடியின் விதை என்பதால், தடை செய்துள்ளார்கள். காரணம், இந்த விதையை விதைத்து, கசகசா செடியை வளர்த்து ஓபியம் எடுத்துவிட முடியும். அதனால்தான், கசகசாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கசகசா இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. கசகசாவுக்காக பயிர் செய்யப்படும் செடிகளிலிருந்து சட்ட விரோதமாக ஓபியம் எடுப்பதும் நடக்கிறது.

இந்தியாவை பொறுத்தவரை கசகசா போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. என்றாலும், இந்திய அரசின் நீதித்துறை, வருவாய்த்துறை மற்றும் சுங்க இலாகா இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கசகசாவை உரிய அனுமதியின்றி எடுத்துச் செல்ல தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Thaanks to

Vikatan

Monday, January 19, 2015

திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதை

நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப் பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.
இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.
திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது.
இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.
காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும். மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.
விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.
இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும். திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது.

Sunday, January 18, 2015

இப்படியும் காய்கறிகள் செடிகள் வளர்க்கலாம்...!

இந்தோனேசியாவில் இப்படி... செய்கிறார்கள். காய்த்தபின் வெட்டிப்போட்ட வாழைமரம் காய்வதற்கு வெகு நாட்களாகிவிடும். அதனுள் இருக்கும் நீரோ அளப்பரியது.
ஆதலால், இப்படி அதனைப பயன்படுத்திக் கொண்டால், நீரும் மிச்சம், இடமும் மிச்சம், நல்ல இயற்கை சத்தும் வளர்க்கப்படும் காய்கறிகள் செடிகளுக்குக் கிடைத்துவிடுகின்றன. அத்தோடு, பயிர்செய்கை முடிந்து வாழைமரம் காய்ந்தவுடன் அப்படியே அதனைப் பிளந்து உடன் எருவாகவும் பயன்படுத்தி விடலாம்.

Thursday, January 1, 2015

மூங்கில் அரிசி மற்றும் மூங்கில் தளிர்






உலகத்திலேயே அதிவேகமாக வளரும் தாவரங்களில் மூங்கிலும் ஒன்று. நீண்ட காலம் வளரக்கூடிய, புல் இனத்தைச்சேர்ந்த தாவரம் மூங்கில். மூங்கில் மரம் ஏறக்குறைய 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதன் மொத்த உயரமான 60 மீட்டரை, 59 நாட்களிலேயே மூங்கில்கள் அடைந்து விடுகின்றன. இந்தியாவில் 175 வகை மூங்கில்கள் வளர்கின்றன. இதை பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம் என்றும் அழைப்பது உண்டு. ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மூங்கில்கள் லேசானவை. அதே வேளையில் இரும்புக்கு நிகரான வலுவும் கொண்டவை. பெரும்பாலானவர்களால் கூரை வேய்ந்த வீடுகள் கட்டவும், வேலி - தடுப்புகள் அமைக்கவும், கைவினைப்பொருட்கள் செய்ய பயன்பட்டாலும், குறிஞ்சி நில மக்களுக்கு மிக முக்கிய உணவாக இருந்தது. மூங்கிலில் தயாரிக்கப்பட்ட இருக்கைகளில், எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தாலும் உடலில் வெப்பம் ஏறாது. வியர்வையோ, எரிச்சலோ ஏற்படாது.


காடும்-காடு சார்ந்த நிலப்பரப்பான குறிஞ்சி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இந்த மூங்கில் குருத்துக்களையும், மூங்கில் அரிசியையும் ஆரம்ப காலங்களில் அதன் சுவைக்காக உணவாக உட்கொண்டார்கள். நாளடைவில் அவர்களால் அதில் இருந்த சத்துக்களையும்- மருத்துவ குணங்களையும் உணர முடிந்தது. காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.


மூங்கில் மரங்கள் அவ்வளவு எளிதில் பூப்பதில்லை. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். 40 ஆண்டுகள் கழித்து பூத்தாலும் அதில் அதிசயங்கள் நிரப்பி அரிசியாய் விளையும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. எளிய உணவாக இருந்தாலும் வலிமையைத் தரும் சத்துணவு. 100 கிராம் மூங்கிலரிசியில் 60.36 கிராம் கார்போஹைட்ரேட்டும், 265.6மிகி கலோரிகளும் குவிந்து கிடக்கும் என்றால் அது அதிசயம் தானே. 


மூங்கில் மரம் மொத்தமுமே மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது. மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசி, மூங்கில் தளிர் ஆகியவற்றை முறையே உணவாக உட்கொண்டு வந்தால் எப்படிப்பட்ட கொடுமையான வியாதியாக இருந்தாலும் விலகி ஓடும். உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.


மூங்கில் அரிசி- குருத்து உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு யானை பலம் கொடுத்து, இரும்பை போல வலுவாக்கி, வஜ்ஜிரம் போல் இறுக்கி, தீராத நோய்களெல்லாம் தீர்த்து வைக்கும். எவ்வளவு கட்டுமஸ்த்தான உடலமைப்பை பெற்றவர்கள் கூட சர்க்கரை நோய் பிடித்தால் உருக்குலைந்து போவார்கள். ஆனால் அப்படி சர்க்கரை வியாதியால் உருக்குலைந்தவர்கள் கூட இந்த மூங்கில் உணவுகளை உட்கொண்டு வந்தால் மீண்டும் பழைய உடலமைப்பை பெறுவார்கள் என்றால் இது அதிசய உணவா?? இல்லையா???


மேலும் மூங்கிலரிசி பாலுணர்ச்சியின் உந்துதலை சீர் செய்து, கருப்பை கோளாறுகளையும் முறையாக்கி கருவுற பேருதவியாக இருக்கிறது.


மூங்கில் தளிர்கள்


இதற்குள் இருக்கும் சத்துக்குள் கணக்கில் அடங்காதவை. நார்ச்சத்துக்கள் நிரம்பியது . பிராணசக்தியை தன்னுள் அதிகம் கொண்டுள்ளதால் நீரிழிவு நோய், கான்சர், இதய நோய்களுடன் மலசிக்கலும் வராமல் தடுக்கும். பொட்டாசியம், ப்ரோடீன், ரைபோபிலேவின்(riboflavin), மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் B6 போன்ற உடலுக்கு தேவையான மிக முக்கிய சத்துக்கள் நிறைந்தது மூங்கில் துளிர்கள். பொட்டாசியம் பொதுவாக உடல் நலத்திற்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தாது பொருள். எலும்பு மண்டலத்திற்கு மக்னீசியமும், இரத்த சிவப்பு அணுக்கள் உருவாக தாமிரச்சத்தும் , நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு B6ம் என உடலுக்கு மிகவும் அவசியமான தாதுக்களை உள்ளடக்கியது. நரம்புத்தளர்ச்சியை சீர் செய்யும். தோலை நல்ல முறையில் பாதுகாக்கும். 

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, மூங்கில் தளிர்களை முறையாக உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். மேலும் பிரசவ காலங்களில் வலி இல்லாத பிரசவம் உண்டாக்க உதவும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். கொழுப்புக் குறை உணவு இது. புண்களை ஆற்றும். அல்சருக்கு சிறந்த நிவாரணி. இந்த தளிர்கள் செரிமானத்திற்கும், வயிற்றுப்போக்கிற்கும் உடனடி தீர்வு கொடுக்கும். வாசனை பொருட்களிலும், அழகுசாதன பொருட்களிலும், தலைமுடி தைலங்களிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

இப்போது சொல்லுங்கள் அதிசயத்தின் அடையாளம் தானே இந்த மூங்கில்...??