Showing posts with label உரம். Show all posts
Showing posts with label உரம். Show all posts

Saturday, November 7, 2015

இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும்.

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்...!!!

பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.

அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.

செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.

ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.

ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.

ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.

நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.

அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.

இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.

ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.

இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.

எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் ரசாயன உரங்களால் ஏற்படும் தீமைகளைக் குறைக்க முடியும்.

நன்றி: தினமணி

Monday, October 26, 2015

மண் வகைக்கு ஏற்ற மர வகைகள்

இந்தியாவில்  எந்தெந்த மண்ணில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

கரிசல் மண்:
புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை

வண்டல் மண்:
தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி

களர்மண்:
குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை

உவர் மண் :
சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு

அமில நிலம் :
குமிழ்,சில்வர் ஒக்

சதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் :
பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்

வறண்ட மண் :
ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்

களிமண் :
வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேல்

சுண்ணாம்பு படிவம் உள்ள மண்:
வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்

குறைந்த அழமான மண் :
ஆயிலை ,ஆச்சா , வேம்பு,புளி,வகை,பனை

இந்த மண் வகைகளை பயன்படுத்தி மரக்கன்றுகள் (saplings) வளர்க்கலாம்.

இவ்வாறு வளர்க்கப்படும் மரங்கள் அனைத்தும் வளமுடன் காணப்படும்.

{ மரம் வளர்ப்போம் வாருங்கள் }

Sunday, October 25, 2015

ரசாயன உரமா விஷமா?

முதன் முதலாக ரசாயன உரங்கள் அறிமுகப் படுத்தப்பட்டபோது விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

தொழு உரம், தழையுரம், சாண உரம் என்று தேடியலைய வேண்டியதில்லை. காசைக் கொடுத்தால் விதவிதமான ரசாயன உர மூட்டைகள் வீட்டில் வந்து இறங்கிவிடும். எந்தப் பயிருக்கு, எந்த உரத்தை எவ்வளவு இட வேண்டும் என்பதையெல்லாம் விவசாயிகளுக்குப் பாடம் நடத்தின உர நிறுவனங்கள்.

முதல் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு விளைச்சல் அபரிமிதமாகத்தான் இருந்தது. மேலும் மேலும் அதிக அளவில் ரசாயன உரங்களைப் போட்டால் இன்னும் அதிக அளவில் விளைச்சல் வருமென்று எண்ணிக் கடன்பட்டுக்கூட ரசாயன உரங்களை வாங்கி வயல்களில் கொட்டினார்கள். அடுத்து விளைச்சல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. மண்ணின் இயற்கை வளம் குறைந்துபோயிற்று. வயலில் போட்ட முதலைக்கூட மீட்க முடியாமல் விவசாயிகள் இழப்புக்கு ஆளானார்கள். உலகம் முழுவதிலும் இதே மாதிரியான பிரச்சினைகள் தலைதூக்கின.

இயற்கை உரங்களின் நன்மைகள் 

உலகெங்கிலும் உள்ள விவசாய விஞ்ஞானிகள் செயற்கையான ரசாயன உரங்களால் ஏற்பட்ட விளைவுகளைத் தீவிரமாக ஆராயத் தொடங்கினார்கள். பிரான்ஸில் உள்ள இன்செர்ம் எனும் உடல் நல மருத்துவ ஆய்வு நிலையம் தொழு உரம், இலையுரம் போன்ற இயற்கையான நைட்ரஜன் அடங்கிய உரங்களைப் பயிர்களுக்கு வழங்குவதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுகிறது.

லெட்டூஸ் செடிகளுக்கு இயற்கை உரங்களை இடும்போது அவற்றின் எடை, விளைச்சலின் அளவு மற்றும் புரத உள்ளடக்கம் ஆகியவை குறைவதில்லை. ஆனால், அவற்றில் தீமை செய்கிற நைட்ரேட் எச்சங்களின் அளவு மிகவும் குறைந்துவிடுகிறது. இதற்கு மாறாக, செயற்கை ரசாயன உரங்கள் ஊட்டி வளர்க்கப்பட்ட லெட்டூஸ் இலைகளில் உட்கவரப்படாத நைட்ரேட் சத்துகள் அதிக அளவில் போய்த் தேங்கிவிடுகின்றன.

பிரான்ஸ் ஆய்வர்கள் ஆமணக்குப் பிண்ணாக்கை ஒரு பாத்தியில் உள்ள லெட்டூஸ் செடிகளுக்கு இட்டார்கள். அதே அளவான இன்னொரு பாத்தியிலுள்ள செடிகளுக்கு அதே அளவு நைட்ரஜன் சத்தைத் தருகிற அளவிலான அம்மோனியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட் ஆகிய ரசாயன உரங்களைப் போட்டார்கள். இயற்கை உரத்தை உண்டு வளர்ந்த செடிகளில் இருந்ததைவிட இரண்டு மூன்று மடங்கு அதிகமான நைட்ரேட் எச்சங்கள் செயற்கை உரமிடப்பட்ட செடிகளின் இலைகளில் காணப்பட்டன.

குடிநீரில் நைட்ரேட் நச்சு 

வயல்களில் தூவப்படும் ரசாயன உரங்களின் கணிசமான விகிதம் பாசன நீரில் கரைந்து அடித்துச் செல்லப்பட்டு வெளியேறி, நிலத்தடி நீரிலும் அருகிலுள்ள நீர் நிலைகளிலும் போய்ச் சேர்ந்துவிடுகிறது. இதன் காரணமாக அவற்றில் நைட்ரேட் செறிவு பாதுகாப்பான அளவைவிடக் கூடுதலாகிவிடுகிறது. பிரான்ஸின் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சினை. எந்த ஒரு ஊரிலிருந்தும் குடிநீரில் நைட்ரேட் நச்சு அளவுக்கு மீறிப் போய்விட்டதாக நுகர்வோர் அமைப்புகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வழக்குத் தொடர ஆயத்தமாக இருக்கிறார்கள்.

நீர்நிலைகளில் ரசாயனங்கள் கலப்பது நீரை மாசுபடுத்தி,(Water runoff) அதில் வாழும் உயிரினங்களுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனின் செறிவையும் குறைத்துவிடுகிறது. நீர்த்தாவரங்களும் மீன்களும் இதனால் பாதிக்கப்படுகின்றன. அந்த நீரைப் பருகும் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உண்டாகும் நீலநிறக் குழந்தை நோய் மற்றும் ரத்த சோகைக் கோளாறுகள் தோன்றுகின்றன.

Courtesy: Hindu

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உட்கவர்ந்துகொண்டு அதை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்சென்று விநியோகிக்கிறது. ரத்தத்தில் நைட்ரேட்டுகள் புகுந்துவிட்டால் ஹீமோகு ளோபின் மெட்ஹீமோகுளோபினாக மாற்றப்படும். அதற்கு ஆக்சிஜனுடன் இணைகிற திறன் இராது. எனவே, உடலுக்குள் ஆக்சிஜன் விநியோகம் பாதிக்கப்பட்டு, உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகும்.

நீலநிற ரத்தம் 

நல்ல ரத்தமுள்ள குழந்தைகள் ரோஜா நிற உடலுடன் இருக்கும். மெட்ஹீமோகுளோபின் ரத்தத்தில் அதிகமாகிப்போனால், அவை நீல நிறமுள்ளதாகிவிடும். இதயம் சரியாகச் செயல்படாதபோதும் இதே போன்ற கோளாறு ஏற்படும். நைட்ரேட்டுகள் ஜீரண மண்டலத்தில் புகுமானால், அவை நைட்ரோசமைன்கள் என்ற கூட்டுப்பொருளாக மாறும். அது உடலில் புற்றுநோயை உண்டாக்கக்கூடும். ஐரோப்பிய பொதுச்சந்தை அமைப்பு, குடிநீரில் லிட்டருக்கு 50 மில்லி கிராமுக்கு மேல் நைட்ரேட்டுகள் இருக்கக் கூடாது என்று விதித்திருக்கிறது. பிரிட்டனில் இந்த உச்சவரம்பு 100 மில்லி கிராமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயலுக்கு இடப்படும் நைட்ரேட் உரத்தில் எவ்வளவு விகிதம் தாவரங்களால் உட்கவரப்படுகிறது, அது எந்த வகையில் உட்கவரப்படுகிறது, மீதமுள்ள விகிதம் என்னவாகிறது, அது நீர்நிலைகளிலும் நிலத்தடி நீரிலும் எந்த அளவில், எவ்வாறான காரணிகளின் பங்களிப்புடன் கலக்கிறது, நைட்ரேட்டுகள் விஷமற்ற கூறுகளாகச் சிதைய எவ்வளவு காலம் பிடிக்கிறது என்பன போன்ற பல விஷயங்கள் இன்னமும் உறுதியாக விளங்கிக்கொள்ளப்படவில்லை. நைட்ரஜன் சுழல் என்ற தாவரவியல் நிகழ்வும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை.

தாவரவியல் முறையில் நைட்ரஜனை உட்கவர்கிற பயறு, உளுந்து, மொச்சை போன்ற இரு வித்திலைப் பயிர்கள் காற்றிலுள்ள நைட்ரஜனை உட்கவர்ந்து, தமது வேர் முடிச்சுகளில் சேமிக்கின்றன.

மண்ணில் நைட்ரஜன் சத்தைக் கூட்டுவதில் இது மற்றெல்லா முறைகளையும் விடப் பத்திரமானது. ஆனால், விவசாயிகளுக்கு ரசாயன உரங்களைத் தூவுவதுதான் சுலபமாகத் தோன்றுகிறது. பிரான்ஸ் ஆய்வகம் சம அளவிலான ஆறு பாத்திகளில் வெவ்வேறு ரசாயன உரங்களையும், ஆமணக்குப் பிண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களையும் இட்டு லெட்டூஸ்களை வளர்த்தது. ஏழாவதாக ஒரு பாத்தியில், எந்த உரமும் இடாமல் லெட்டூஸ் வளர்க்கப்பட்டது.

எல்லாப் பாத்திகளிலும் அறுவடைக்குப் பின் விளைச்சல் அளவு, பயிரில் புரதச் சத்து அளவு, கனிமச் சத்துகளின் அளவு மற்றும் வகைகள், உருளை வடிவத்தில் கிடைத்த லெட்டூஸ்களின் எண்ணிக்கை, பயன்படாத சக்கைப் பகுதியின் அளவு போன்ற அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால், செடிகளில் நைட்ரேட் எச்சங்களின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டன. உரமிடப்படாத செடிகளில் மில்லியனில் 159 பங்கு என்ற அளவில் நைட்ரேட்டுகள் இருந்தன.

ஹெக்டேருக்கு 120 கிலோ அளவில் பிண்ணாக்கு ஊட்டப்பட்ட லெட்டூஸ்களில் மில்லியனுக்கு 319 பங்கு என்ற அளவிலும் ஹெக்டேருக்கு 200 கிலோ அளவில் பிண்ணாக்கு ஊட்டப்பட்ட லெட்டூஸ்களில் மில்லியனுக்கு 217 பங்கு என்ற அளவிலும் நைட்ரேட்டுகள் தென்பட்டன.

அம்மோனியம் நைட்ரேட் குறைவாகப் போடப்பட்ட லெட்டூஸ்களில் நைட்ரேட் அளவு மில்லியனுக்கு 534 பங்கு என்ற அளவிலும் உரம் அதிகமாகப் போடப்பட்ட லெட்டூஸ்களில் மில்லியனுக்கு 802 பங்கு என்ற அளவிலும் இருந்தது. சோடியம் நைட்ரேட்டைக் குறைவாகப் போட்ட பாத்திகளில் விளைந்த லெட்டூஸ்களில் நைட்ரேட் அளவு மில்லியனுக்கு 698 பங்காகவும், அதிகமாகப் போடப்பட்ட பாத்திகளில் விளைந்த லெட்டூஸ்களில் 991 பங்காகவும் இருந்தது.

இவ்வாறு இயற்கை உரங்களைப் பயன்படுத்தினால் விளைச்சல் குறைந்துவிடாது; பயிர்களில் நச்சுக் கூட்டுப்பொருள்களின் அளவும் குறைவாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

– கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).        

Monday, December 15, 2014

URIA யூரியாவை விட இயற்கை மருந்து நல்லது!

யூரியாவை விட இயற்கை மருந்து நல்லது!யூரியாவிற்கு மாற்றாக, தானே தயாரித்துப் பயன்படுத்தும், இயற்கை உரம் குறித்து விளக்கும், விவசாயி பாஸ்கரன்:

தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பயிர் செழிப்பாக வளர, யூரியா மிகவும் அவசியம் என்ற தவறான எண்ணம், நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. நைட்ரஜன் சத்தை செடிகள் கிரகிப்பதற்காகவே, உப்புத் தன்மை அதிகம் உள்ள யூரியாவை பயன்படுத்துகிறோம்.செடிகளின் வேர்களில் நீர்ச்சத்து இருக்கும் வரை தான், நாம் போடும் யூரியாவை உறிஞ்சும். மீதி உள்ள யூரியா பூமிக்கடியில் சென்று தங்கி விடும். இப்படி ரசாயன உரங்களும், யூரியாவும் அதிகப்படியாக பூமியில் சேருவதால், இயற்கையாக வளரும் நன்மை செய்யும் பல நுண்ணுயிரிகள் அழிந்து விடுகின்றன. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக, இயற்கை முறையில், நான் தயாரித்த உரத்தையே யூரியாவிற்கு மாற்றாகப் பயன்படுத்தி வருகிறேன்.ஒரு பாத்திரத்தில், 5 கிலோ சாணம், 3 கிலோ மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லத்தை கலந்து, மூடி வைத்து நொதிக்க விட வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் நன்கு கனிந்த, 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை கலந்து நொதிக்க விட வேண்டும்.இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவையையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். இதனுடன், தலா ஒரு கிலோ ரைசோபியா, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் கலந்து, ஒரு இரவு நொதிக்க விட வேண்டும்.இந்தக் கரைசல், தோசை மாவு பதத்திற்கு மாறி இருக்கும். இதோடு, 2 கிலோ கடலைப் புண்ணாக்கு கலந்து, சில மணிநேரம் வைத்திருந்தால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டு பத்திற்கு மாறிவிடும்.இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாக தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து, ஆரோக்கியமாக வளர துவங்கி விடும். இந்த இடுபொருளை, 'மேம்படுத்தப்பட்ட அமுதக் கரைசல்' என, அழைக்கின்றனர்.இதுதவிர, இலை, தழைகளை கொண்டே இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப்பாகவும், ஊட்டச்சத்து கொடுக்கலாம்; இது, பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும்.இதைத் தயாரிக்க, தலா, 5 கிலோ வேம்பு, புங்கன் நொச்சி, நெய்வேலி காட்டாமணக்கு, ஆடாதொடா இலைகளை ஒன்றாக கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்ட காய்ச்ச வேண்டும். பின், ஆற வைத்து வடிகட்டி, 3 லிட்டர் பசுமாட்டு சிறுநீர் கலக்க வேண்டும். இக்கரைசலில் இருந்து, 2 லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீர் கலந்து, ஒரு ஏக்கருக்கு தெளிக்கலாம்.இவற்றை பயன்படுத்துவதால் மண் வளத்தையும் பாதுகாக்கலாம்.தொடர்புக்கு: 94428 - 71049

Thanks to 
DHINAMALAR

Saturday, November 8, 2014

இயற்கை உரமாக பயன்படும் பார்த்தீனியம்

கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது பார்த்தீனியம் செடி. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும்.
இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்படியே இயற்கை உரமாக மாற்றலாம் என்கின்றனர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஜெயம் பிராணி நல அறக்கட்டளை நிர்வாகிகள்.
இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் கே.வி.கோவிந்தராஜ் கூறியதாவது:
“முதலில் 6 அடிக்கு 4 அடி அளவுள்ள (தேவைக்கேற்ப நீள அகலங்களை மாற்றிக் கொள்ளலாம்.) 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில் வேருடன் பிடுங்கிய பார்த்தீனியச் செடிகளை போட வேண்டும். அத்துடன் கொழுஞ்சி, எருக்கன் இலை, வேப்பிலை மற்றும் கிடைக்கும் இலை தழைகளையும் கலந்து போட்டு இரண்டடி உயரத்திற்கு நிரப்பி, நன்கு மிதித்து அதன் மேல் சாணி மற்றும் கோமியக் கரைசல் தெளிக்க வேண்டும்.
அதன் மேல் மூன்று அங்குல அளவிற்கு மண் போட்டு, மீண்டும் இதே மாதிரி மூன்று நான்கு அடுக்குகள் போட்டு, மேலே மண் போட்டு மீண்டும் மூடி வைத்தால் ஓரிரு மாதங்களில் அற்புதமான இயற்கை உரம் தயாராகிவிடுகிறது.
இதில் மற்ற உரங்களில் கிடைப்பதை விட நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது. பயிர்களுக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்துக்களும் அதிக அளவில் இருப்பதால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கும்.
தென்னை, மா, எலுமிச்சை மரங்களுக்கு இடையில் 2அடிக்கு 2 அடி 2 அடி குழி வெட்டி அதில் பார்த்தீனியம் மற்றும் சாணிக் கரைசல் உள்ளிட்டவற்றை போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு மாதத்தில் அவை மக்கி விடும். மரத்தின் வேர்கள் அந்த உயிர்ச் சத்தை கிரகத்துக் கொண்டு நன்கு செழித்து வளர்வதுடன் அதன் காய்ப்புத் திறன் அதிகரிக்கும்” என்றார் அவர்.
மேலும் விவரங்களுக்கு
98427 04504 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, October 8, 2014

‘நஞ்சு’ மண்ணில் பூத்த ‘அமுதம்‘!

மெரிக்கா வின் ராச்சேல் கார்சன், ‘மௌன வசந்தம்' என்ற புத்தகத்தை வெளியிட்டது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, உயிரினங்களுக்கே ஆபத்தாக மாறிக்
கொண்டிருப்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்க...
உலகமே அதிர்ச்சியோடு திரும் பிப்பார்த்தது. அதேசமயம், ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப் பாளர்கள், நாக்கூசக்கூடிய வார்த் தைகளால் ராச்சேல் கார்சனை அர்ச் சனை செய்தார்கள். இதை நினைக்கும் போது, ‘அமுதம் பிறந்த மண்ணில்தான் நஞ்சு பிறக்கிறது! கட்டபொம்மன் பிறந்த மண்ணிலேதான் எட்டப்பனும் பிறக்கிறான்’ என்று 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' படத்தில் சிவாஜி பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது.
அமெரிக்க மக்கள் அத்தனை பேரும் கிளர்ந்தெழுந்து மிகக் கொடிய நஞ்சை எதிர்த்துக் குரல்கொடுக்க ஆரம்பித் தனர். இதையடுத்து, விஷ மருந்துகளின் பயன்பாட்டைத் தடை செய்தது அமெரிக்கா. ஆனால், அவற்றின் உற்பத்தியை தடை செய்யவில்லை. ‘ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா கண்டங்களில் வாழும் மக்களின் தலையில் அதைக் கொட்டி பிழைத்துக் கொள்ளுங்கள்’ என்று தங்கள் நாட்டு முதலாளிகளுக்கு வழிவகை செய்து கொடுத்தது. அப்படிப்பட்ட அமெரிக்க மண்ணிலும் மண்புழுவைப் போல் வெளியில் தெரியாமல், ஒரு பண்ணையில் இயற்கை வழி விவசாயம் நடந்து கொண்டு இருந்தது. அந்தப் பண்ணைக்கு உரியவர்... ரொடெல். அதுவும் இந்தியாவிலிருந்து இயற்கை விவசாயத்தை கற்றுக்கொண்டு போனவர் அவர் என்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம்.
'ரொடெல் பண்ணை' இன்று ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக அங்கே வளர்ச்சி கண்டுள்ளது. ‘ஐம்பது ஆண்டுகளாக மண்ணுக்கு மறுவாழ்வு அளிக்கும் இயற்கை வழி உழவாண்மைக்காக உலகெங்கும் ரொடெல் நிறுவனம் பிர சாரம் செய்து வருகிறது. இயற்கை வழி பயிர் சாகுபடி மூலம் ஏராளமான ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய முடியும். இந்த முயற்சியின் மூலம் இயற்கைவள ஆதாரமும் சுற்றுச் சூழலும் தானே மேம்படும்' என்பதுதான் அந்தப் பண்ணையின் பிரதான பிரசா ரமாக இருக்கிறது.
அமெரிக்காவில் வாழும் இந்தியரான லட்சுமிநாராயணன் சென்ற ஆண்டு ஒரு புத்தகத்தை அனுப்பி இருந்தார். அது, ரொடெல் நிறுவனம் வெளியிட்டிருந்த 'இயற்கை வழி உழவாண்மையின் வெற்றி' என்ற புத்தகமாகும். இந்த ஆண்டு, அதே நிறுவனத்தின் இன் னொரு புத்தகத்தை அனுப்பி இருக் கிறார் லட்சுமிநாராயணன். அதன் தலைப்பு 'நீயும் சாகுபடியும் தண்ணீரும்'! இந்தப் புத்தகம் கூறும் கொள்கைகள், செய்முறைகள், உலகின் எந்த சீமைக்கும் பொருந்தி வரும்.
*மனிதன் மற்ற உயிரினங்களில் இருந்து மேம்பட்டவன் அல்ல. அவன் இயற் கையின் ஒரு அங்கம். அவனால் இயற் கையைக் கட்டுப்படுத்தவோ மாற்றி அமைக் கவோ முடியாது. ஆனால், ஒத்திசைந்து வாழ முடியும்.
*செடி, கொடிகளும் விலங்குகளும் சுமூகமாக வாழ்கின்றன. அவை காற்று, தண்ணீர், மண், வெளி, சூரிய ஒளி ஆகிய இயற்கை ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
*மண்ணில் கழிவு என்று எதுவும் இல்லை. உணவுச் சங்கிலியில் பல கண்ணிகள் உள்ளன. மேல் மட்டத்தின் கழிவு, கீழ் மட்டத்தின் உணவு. மனிதன் கழித்ததை, கால் நடைகள் உண்ணுகின்றன. கால்நடைக் கழிவு, புழுக்களுக்கும் நுண்ணுயிர்களுக்கும் உணவாகிறது. நுண்ணுயிர் செயல்பாடு செடி வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சங்கிலியை புரிந்து செயல்பட்டால் பண்ணைக்குத் தேவைப்படும் சக்தியின் அளவு குறையும்.
*உணவு உற்பத்தி இயற்கை சுழற்சியைச் சார்ந்து உள்ளது. ஆரோக்கியமான மண் என்பது உயிரற்ற திடப்பொருள் அல்ல. உயிரோட்டமுள்ள ஒரு அமைப்பு.
செடி, கொடி, மரங்களே அடிப்படையில் உற்பத்தி யாளர்கள். அவை சூரியசக்தியை க்ளுகோஸாக மாற்று கின்றன. நிலைத்த நீடித்த பயிர்த் தொழிலென்பது இயற்கை சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும். ரசாயன பயன்பாடுகளும் எந்திரங்களின் உபயோகமும் மண் அரிப்புக்கு வழிகோலுகின்றன.
*நிலம் வளமானதா... இல்லையா என் பதைக் காட்டித் தரும் உயிரினம் மண்புழு. அது மண்ணில் காற்றோட்டத்தினை உண்டு பண்ணுகிறது. தனிமங்களை செடி ஏற்கும் வண்ணம் மாற்ற உதவுகிறது.
*பூச்சிகள் எதிரிகள் அல்ல. மகரந்தச் சேர்க்கைக்கு அவை இன்றியமையாதவை. அவற்றில் ஒன்று மற்றொன்றுக்கு உணவா கின்றது.
*பருவம் அறிந்து பயிர் செய்தல், மூலிகைச் சாறு தெளித்தல், உரிய விளைச்சல் எடுக்க தகுந்த முறைகள்.
இப்படி பல்வேறு விஷயங்களை எடுத்துப் போட்டு உலகுக்கு வழிகாட்டும் ரொடெல் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன், இந்தியா வின் சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவாவை சிறப்புரையாற்ற அழைத்திருந்தது. அங்கே சென்ற வந்தனா சிவா, ''உங்களுக்கு எப்படி இயற்கை வழியில் ஆர்வம் வந்தது?'' என்று அந்நிறுவனத்தாரிடம் கேட்டார்.
அப்போது கிடைத்த பதில்- ‘‘முன்பு எங்க தாத்தா இந்தியா போயிருந்தார். அங்கே ஆல்பர்ட் ஓவார்டு செய்து கொண்டிருந்த ஆராய்ச்சிகளைக் கண்டு இயற்கை வழிக்கு மாறினார்’’ என்பதுதான்!

Monday, June 30, 2014

பாதிக்கப்பட்ட மண்ணை இயற்கை முறையில் சரி செய்ய

சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட மண்ணை இயற்கை முறையில் சரி செய்ய வெட்டி வேர் பயிரிடலாம். வெட்டி வேர் பயிரிட்ட மூன்று ஆண்டுகளில் மண்ணின் விசத்தன்மையை நீக்கி விடுகிறது.
வீட்டு கழிவு நீரை சுத்தம் செய்து, நீர் மறு சுழற்சிக்கும் வெட்டி வேர் பயன்படுகிறது. வெளியேறும் வீட்டு கழிவு நீரை வெட்டி வேருக்கு பாய்ச்ச அது அசுத்தங்களை உறிஞ்சிவிட்டு நன்னீரை பூமிக்கு அனுப்புகிறது.

ஆட்டு எரு: சத்துமிக்க இயற்கை உரம்

  பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன
திருவெறும்பூர்: பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு செயற்கை உரங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் மனித சமுதாயத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கின்றன.
அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகள் முதல் கடுகு வரை ஒவ்வொன்றையும் விளைவிக்க பயன்படுத்தப்படும் யூரியா போன்ற செயற்கை ரசாயன உரங்கள் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கக் கூடியவை.
அதேநேரத்தில், ரசாயன உரங்களின் விலையும் தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. செயற்கை ரசாயன உரங்களால் நமக்கு ஏற்படும் ஆபத்துகளைப் போக்க இயற்கை நமக்கு தந்த வரப்பிரசாதம்தான் ஆட்டு எரு. ஆட்டு எருவில், மாட்டு எருவில் உள்ளதைப் போல 2 மடங்கு தழைச் சத்தும், சாம்பல் சத்தும் உள்ளன. ஓர் ஆடு, ஓராண்டுக்கு 500 முதல் 750 கிலோ வரை எருவைக் கொடுக்கிறது.
ஓர் ஏக்கர் நிலத்தை எல்லா சத்துகளையும் கொண்டு வளப்படுத்த 100 ஆடுகளை வளர்த்தால் போதுமானது. ஆட்டு எரு மண் வளத்தைப் பெருக்கி, பசுமைப் புரட்சிக்கு வித்திடுகிறது என்றால் மிகையாகாது.
ஆட்டு எருவை மண்ணில் இட்டால் கரிமப் பொருள்களின் அளவு அதிகரித்து ஈரப் பதத்தை சேமிக்கும் திறன் அதிகமாகிறது. ஆட்டு எருவில் உள்ள சத்துகளின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொருத்தே இருக்கும்.
ஆடுகளுக்கு புரதச்சத்து நிறைந்த தீவனங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், சுபா புல், தட்டைப் பயறு போன்ற தீவனங்களை அளித்தால், எருவில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதோடு, நுண்ணூட்டச் சத்துகளும், தாது உப்புகளும் அதிகமாகக் காணப்படும். ஆட்டு எருவில் 60 முதல் 70 சதம் தண்ணீரும், 2 சதம் தழைச் சத்தும், 0.4 சதம் மணிச் சத்தும் 1.7 சதம் சாம்பல் சத்தும் உள்ளன. மேலும், பயிர் வளர்ச்சிக்குத் தேவையான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம், மாலிப்டினம் சத்துகளும் அதிகளவில் காணப்படுகின்றன.
நம்முடைய அன்றாட விவசாயத்திற்கு அதிகளவில் ஆட்டு எரு தேவைப்படுமாயின் அவற்றை ஆழ்கூள முறையில் தயார் செய்யலாம்.
அதற்கு முதலில் ஆட்டுக் கொட்டகையின் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல், சிறிய துண்டுகளாக வெட்டிய வைக்கோல், இலைச் சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்க் கழிவு போன்றவற்றை அரை அடி உயரத்தில் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் பரப்ப வேண்டும்.
இவ்வாறு பரப்பினால் ஆட்டுப் புழுக்கையானது இந்த ஆழ் கூளத்தில் படிந்துவிடும். சிறுநீர் ஆழ் கூளத்தால் உறிஞ்சப்பட்டு தழைச் சத்து வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து 3-லிருந்து 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை விவசாயத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஆழ் கூள முறையைப் பொருத்தமட்டில் 10 ஆடுகளிலிருந்து ஓராண்டில் இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இதில் 50 கிலோ யூரியாவில் உள்ளதைப்போல, தழைச் சத்தும், 37 கிலோ சூப்பர் பாஸ்பேட்டில் உள்ள மணிச் சத்தும், 40 கிலோ பொட்டாஷில் உள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும்.
இவ்வாறு ஆழ் கூள முறையில் பெறப்படும் ஆட்டு எருவை வேளாண் பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தினால் களை எடுக்கும் செலவு குறையும். மேலும், நெல், தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் அனைத்து விதமான வேளாண்மைப் பயிர்களுக்கும் இந்த எருவைப் பயன்படுத்தினால் அதிக லாபம் அடையலாம்.
எனவே, ஆட்டு எருவை முறையாகப் பயன்படுத்தி இயற்கை வழி வேளாண்மைக்கு வித்திட்டால் ரசாயன
Kukil Farms's photo.
Kukil Farms's photo.

fERTILIZER (Ntural Method)

ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் கரைசல் தயாரிப்பு முறை :

கடந்தவார வேளாண் பயணத்தில் ஜீவாமிர்தம் மற்றும் மீன் அமிலம் தயாரிப்பு முறையினை தமிழ்நில தமிழ் பண்ணையில் TWA குழுவினர் கற்றரிந்தோம்.இவை இரண்டு மட்டுமே இந்த பண்ணையில் வளர்ச்சி ஊக்கியாகவும் ,பூச்சி விரட்டியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது .
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை:
மாட்டுச்சாணம் - 10 கிலோ ,
மாட்டுகோமியம் - 10 லிட்டர் ,
வெல்லம் - 2 கிலோ (வெல்லத்திற்கு பதிலாக பனம் பழத்தையும் பயன் படுத்தலாம் ),
பயறு வகைகள் (அரைத்த மாவாக ) - 2 கிலோ ,
தண்ணீர் - 190 லிட்டர்,
மண் - ஒரு கைப்பிடி
மேற்கண்டவற்றை அனைத்தையும் நன்றாக 15-20 முறை இரண்டு பக்கமும் நன்றாக கலக்கவும்.இதேபோல் மூன்று நாட்களும் ,மூன்றுவேளை கலக்கி விடவும் .மூன்று நாட்களுக்கு பிறகு நீருடன் கலந்து ஒரு ஏக்கர் நிலத்திற்கு பாயிச்சலாம்.அனைத்து பயிர்களுக்கும் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும் ,நுண்ணுயிர்களை பெருக்கி உயிர் சுழற்சியை ஏற்படுத்தவும் ,மேலும் பயிருக்கு தேவையான நைட்ரஜன் சத்தையும் அளிக்கிறது.

தமிழ்ச் செல்வன்'s photo.

மீன் அமிலம் கரைசல் தயாரித்தல் :
பொதுவாக மீன் அமில கரைசல் சிறந்த கிருமிநாசினியாக பயன்படுகிறது.
மீன் கழிவுகள் - 1 கிலோ (கடல் மீன் மட்டுமே பயன்படுத்த வேண்டும் )
வெல்லம் - 1 கிலோ
இரண்டையும் நன்றாக கலந்து சுமார் 50 நாட்கள் மூடி வைக்கவும் .இவை சிறந்த வளர்ச்சி ஊக்கியாகவும் ,பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.மேலும் பல்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கியது .90 % நைட்ரஜன் சத்து இதில் அடங்கியுள்ளது .1 ஏக்கருக்கு 1/4 லிட்டர் மீன் அமில கரைசல் போதுமானது .மேலும் வீட்டு மாடி தோட்டத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் .10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி லிட்டர் கரைசல் என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம்.
மேலும் தகவலுக்கு : தெய்வசிகாமணி: 93400-47779

Friday, October 4, 2013

உரக்குழி அமைப்பது எப்படி?

மரங்களுக்கு தேவையான உரத்தை மரங்களே பெற்றுக் கொள்ளுமாறு செய்துகொள்ளலாம்.
உதாரணமாக இரண்டு தென்னை / பழ மரங்களுக்கு நடுவே 4 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழம் கொண்டதாக குழி எடுக்கவேண்டும் இரு மரங்களுக்கு நடுவே இருக்கும் இடைவெளியைப் பொறுத்து குழியின் நீளத்தைக் கூட்டிக்கொள்ளலாம்.
குழிகளில் தேவையற்ற வாழை(இலை,தண்டு) மரங்களைத் துண்டு துண்டாக வெட்டிப் போட வேண்டும். அதன் மீது எதன் இலை, தழை கிடைத்தாலும் போடலாம். வேப்ப இலையைச் சேர்த்துப் போட்டால் பூச்சித் தாக்குதல் இருக்காது.
இப்படி இலை, சருகுகள், காய்கறி,பழ கழிவுகள், கால்நடைக் கழிவுகள், மழைநீர் என அடுத்தடுத்து சேர்ந்து குழி முழுமையாக நிரம்பியதும், தென்னை மட்டைகளை படுக்கை வரிசையில் அடுக்கவேண்டும். உரக்குழியில் உள்ள சத்து நீர் ஆவியாகாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. குழியில் உள்ள இயற்கைப் பொருட்கள், மண்ணோடு மண்ணாக அமுங்க ஆரம்பித்ததும், மட்டை அடுக்கின் மீது மண் போட்டு, அதையும் அமுக்கவேண்டும்.
மரங்கள், செடி, கொடிகள் தங்களுக்குத் தேவையான சத்துக்களை இந்த உரக்குழிகளில் இருந்தே எடுத்துக் கொள்ளும் மூன்றாண்டுகளுக்குத் தேவையான இயற்கை உரம் இதிலிருந்து கிடைத்து விடும். சில மாதங்கள் கழித்து கிளறிப் பார்த்தால் மண்புழுக்கள் நிறைந்திருக்கும்.
தொட்டி செடிகளுக்கு தேவையான உரத்தையும் இங்கிருந்தே எடுத்துக்கொள்ளலாம்.
Happy Gardening...
by Pasumai Vidiyal
pic: google

Monday, September 16, 2013

சாணம் மற்றும் கோமியம்

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு லிட்டர் பாலை விட விலை அதிகம் . அதனால் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பது பயன் தராது . அதை விட விலை மதிப்பிலா ஒரு பொருளை கால்நடைகள் தருகின்றன .
அவை சாணம் மற்றும் கோமியம் .
நாம் செய்ய வேண்டியது ...
1) சற்றே சரிவுடன் கூடிய ஒரு நல்ல தரை தளம் கால்நடைகளுக்கு அமைத்து கொடுப்பது ( சற்று சொரசொரப்பாக இருக்குமாறு அமைக்க வேண்டும் )
2) சாணமும் கோமியமும் ஒரு வடிகாலின் மூலம் தேங்கும் அமைப்பு இருக்குமாறு செய்யவேண்டும்
3)கோமியத்தை கம்பி வலை தடுப்பு அமைத்து பிரித்து எடுத்து கொண்டு பஞ்ச காவ்யா மற்றும் இயற்கை பூச்சிகொல்லி மருந்து செய்ய பயன் படுத்திக்கொள்ளலாம் .
4) சாணத்தை கோபர் gas தயாரிக்க பயன்படுத்தவும் . ஒரு மாட்டின் ஒரு மாத சாணம் இரு சிலிண்டர் அளவு வாயுவை தரும் . அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கவும் முடியும் .
5) கோபர் gas தயாரித்த பின் , மிச்சம் உள்ள sludge ஐ மண்புழு உரம் தயாரிக்க பயன் படுத்தவும் .
6) கோபர் gas தயாரிக்க பயன்படுத்தப்படும் tank இல் பழைய காப்பர் wire மற்றும் பழைய இரும்பு ஒன்றை போட்டு வைக்கவும் . sludge ஐ மண்புழு உறதிர்க்காக எடுத்த வுடன் மீதமிருக்கும் slurry யை தீவனப்புல்லுக்கு போகும் தண்ணீருடன் சேர்த்து பாசனத்திற்கு அனுப்பவும் . ( மினரல் குறைபாட்டால் தான் மாடுகள் சினைபிடிப்பில் கோளாறுகள் வருகின்றன , அதை இப்படி செய்வதன் மூலம் தவிர்க்கலாம் ).
இவற்றை முயற்சி செய்து பாருங்கள் , பஞ்ச காவ்யா , மூலிகை பூச்சி விரட்டி , மண்புழு உரம் , கோபர் வாயு மற்றும் உயிர்ச்சத்து பாசன நீர் போன்ற வற்றை பெறுவதால் நீங்கள் பாலின் மூலம் அடையும் பயனை விட பல மடங்கு பயன் அடையாலாம் .

Wednesday, September 11, 2013

முட்டை ரசம் மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.

  பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.

மீன் அமினோ கரைசல்

உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து  ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும் 

21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும் 

10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.

இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.

இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார். 

பழக்காடி கரைசல்

 தேவையான பொருட்கள்: 
சாணம்-20 கிலோ, 
கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ
தொல்லுயிர் கரைசல்-50 கிலோ, 
தண்ணீர்-50 லிட்டர், 
ஜீவாமிர்தம்   -5-10 லிட்டர். 
தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர். 

இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும்.
 
இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும். 

இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும். 

தேமோர் கரைசல்

புளித்த மோர் - 5 லி
இளநீர் - 1 லி

இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.

1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.

பிராந்திக்கு பதில் அரப்பு மோர் கரைசல்

பல ஊர்களில் ஜிப்ராலிக் ஆசிட் கரைக்க மற்றும் பூச்சி மருந்துகளுடன் பிராந்தி கலந்து அடிப்பதாக செய்திகள் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.

இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம்.

அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும்.  ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்.

50 லிட்டர் பிளாஸ்டிக் கேன் ஒன்றை எடுத்துக்கொள்ளவும். 
புதிய சாணம் 5 கிலோ, தூள்வெல்லம் முக்கால் கிலோ, கடுக்காய்த்தூள் 25 கிராம் கேனில் போட்டுக்கலக்கவும். அதிமதுரம் இரண்டரை கிராம் எடுத்து அரை லிட்டர் நீரில் வைத்து அதையும் கேனில் ஊற்றி மூடவும். இரண்டு நாள் கழித்து பார்த்தால் கேன் உப்பி இருக்கவும். மூடியை திறந்து மீத்தேன் வாயுவை வெளியேற்றவும். 10 நாட்களுக்கு பிறகு தொல்லுயிரி கரைசல் தயார்.

200 லிட்டர் தண்ணீர் + 1 கேன் பாக்டீரியா கரைசல் - 1 ஏக்கர்

10 லிட்டர் தண்ணீர் + 1 லிட்டர் தொல்லுயிரி ஸ்பிரே பண்ணலாம்

archae பாக்டீரியா உலகின் முதல் பாக்டீரியா ஆகும்.
இக்கரைசல் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும். 

நீம் அஸ்திரா

நாட்டு மாட்டுச்சாணம் 2 கிலோ
நாட்டு மாட்டுச்சிறுநீர் 10 லிட்டர்
வேப்பங்குச்சிகள் மற்றும்
வேப்ப இலை 10 கிலோ

இவை அனைத்தையும் பெரிய பாத்திரத்தில் போட்டு, 200லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடி வைக்க கூடாது. இக்கரைசலை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவை கலக்கி விடவேண்டும். பின்பு வடிகட்டி வயலில் தெளிக்கலாம். பல வகை கெடுதல் செய்யும் பூச்சிகளுக்கு இது ஒரு நல்ல பூச்சி விரட்டியாகும்.

சுக்குத்தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். பின்பு குளிர வைக்க வேண்டும். பசு அல்லது எருமைப்பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரமல்லாத பாத்திரங்களில் கொதிக்க வைக்க வேண்டும். மேலே படிந்திருக்கு ஆடையை அகற்றி விடவேண்டும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றை கலந்து வயலில் தெளிக்கலாம். இது மிகச்சிறந்த பூஞ்சாணக் கொல்லியாகும். 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.

நொச்சி இலை 10 கிலோ
வேப்பம் இலை 3 கிலோ
புளியம் இலை 2 கிலோ
 
இவற்றை 10 லிட்டர் கோமியத்துடன் கலந்து அக்னி அஸ்திரம் தயாரிப்பது போல் மண்பானையில் தயாரிக்க வேண்டும். 100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் பிரம்மாஸ்திரம் 3 லிட்டர் கோமியத்துடன் 1 ஏக்கருக்கு தெளிக்கலாம். 

மாதம் 2 அல்லது 3 முறை தெளிக்கலாம். அசுவனி போன்ற பூச்சிகள் அண்டாது

கோமியம் 20 கிலோ
புகையிலை 1 கிலோ 
பச்சை மிளகாய் 2 கிலோ
வெள்ளைப்பூண்டு 1 கிலோ
வேப்பிலை 5 கிலோ

இவை அனைத்தையும் மண் பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்டுத்த கூடாது, வேதியியல் மாற்றங்கள் ஏற்ப்பட்டு அக்னி அஸ்திரம் பலிமிழக்கக்கூடும்.)

வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

நன்றாக 5 முறை மீண்டும் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும். இறக்கி வைத்து மண்பானையின் வாயில் துணியை வேடுகட்டி 2 நாட்கள் அப்படியே வைத்து விடவேண்டும். நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும்.

அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம்.

100 லிட்டர் நீரில் இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம் 3 லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு பூச்சிகள் காணாமல் போய்விடும்.

தண்ணீர் - 200 லிட்டர்

பசுஞ்சாணி

நாட்டுமாடு - 10 கிலோ

கோமியம் - 10 லிட்டர்

வெல்லம் - 2 கிலோ

சிறுதானியங்கள் - 2 கிலோ
(பவுடராக அல்லது
முளைக்கட்டச்செய்து
அரைக்கப்பட்டதாக
இருப்பது அவசியம்)

இவற்றுடன் ஒரு கைப்பிடி
அளவு நல்ல ஜீவன் உள்ள மண்.

இவற்றை தொட்டியில் விட்டு கலக்க வேண்டும்.
தினமும் 3 முறை 3 நாட்களுக்கு தவறாமல் கலக்கி விட வேண்டும்.
ஒரு கிராம் மண்ணில் 5 லட்சம் கோடிக்கும் அதிகமான நுண்ணுயிர்கள் உள்ளது. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இவை இரட்டிப்பு அடைகின்றன. இப்பெருக்கத்தினை கணிணியாலும் கணக்கிட முடியாது. இந்த நுண்ணுயிர் கரைசல்தான் ஜீவாமிர்தம்.

இது ஒரு ஏக்கருக்கான அளவு.

இந்த கரைசலை வயலில் விடும்
பொழுது 15 அடி ஆழத்தில் சமாதி நிலையிலிருக்கும் மண்புழுக்கள் துள்ளி எழுந்து மண்ணைக்கிளறிக் கொண்டு மேலே வந்து விடும். மண் வளமாகும் 

தானியப்பயிர் 4

சோளம் 1 கிலோ
கம்பு 1/2 கிலோ
தினை 1/4 கிலோ
சாமை 1/4 கிலோ

பயிறு வகை 4

உளுந்து 1 கிலோ
பாசிப்பயறு 1 கிலோ
தட்டைப்பயிறு 1 கிலோ
கொண்டைக்கடலை 1 கிலோ

எண்ணை வித்துக்கள் 4

எள் 1/2 கிலோ
கடலை 2 கிலோ
சூரியகாந்தி 2 கிலோ
ஆமணக்கு 2 கிலோ

பசுந்தாள் பயிர்கள் 4

தக்கை பூண்டு 2 கிலோ
சணப்பை 2 கிலோ
நரிப்பயறு 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ

மணப்பயிர்கள் 4

கடுகு 1/2 கிலோ
வெந்தயம் 1/4
சீரகம் 1/4 கிலோ
கொத்தமல்லி 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும்.

மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.

தண்ணீர் 20 லிட்டர்

பசு மாட்டு சாணி 5  கிலோ

கோமியம் 5 லிட்டர்

சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்

மண் ஒரு கைப்பிடி அளவு

இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.

விதை நேர்த்தி செய்ய விதிகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

பயன்கள் :

வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு  நோய்கள் தடுக்கப்படும்.

தேவையான பொருட்கள் :- 

வேப்பெண்ணை ஒரு லிட்டர் 
புங்கன் எண்ணை ஒரு லிட்டர்
கோமியம் (பழையது) பத்து லிட்டர் 
காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் 

இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி. 

Friday, August 16, 2013

வளர்ச்சி ஊக்கி

வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம்
-----------------------

வளர்ச்சி ஊக்கி
--------------------

அரிசி கழுவிய தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மூடியினால் மூடி(சிறிது இடைவெளி இருக்கட்டும் ) வைக்கவும். ஒரு வாரத்தில் இந்த நீர் புளித்துவிடும் , மேற்பரப்பில் ஆடைபோல் படிந்திருப்பதை அகற்றிவிட வேண்டும். இதனுடன் அதைப்போல பத்து மடங்கு பசும்பாலை சேர்த்து மூடி வைக்கவும். அடுத்த ஏழு நாட்களில் இந்தக் கலவையில் மாவு, புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் தனியாக பிரிந்து மேலே ஆடை போல மிதக்கும். மிதக்கும் இவற்றை நீக்கினால் மஞ்சள் வண்ணத்தில் ஒரு திரவம் கிடைக்கும். இந்த திரவத்தில் அதன் அளவில் மூன்றில் ஒரு பங்கு வெல்லத்தை கலந்து மூடி வைக்கவும். இதுதான் லேக்டிக் அமில பாக்டீரியா ரசம்.

நூறு மில்லி ரசத்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். குளோரின் தண்ணீர் உபயோகிக்கக்கூடாது.

இக்கலவை மிகச்சிறந்த பயிர் ஊக்கியாக செயல்படும்.காய்கறி செடி, கொடிகள் நன்கு செழித்து வளர்ந்து நிறைய காய்கள் காய்க்கும்.

(செய்முறை சிறிது சிரமம் போல் தோன்றினாலும், ஒரு முறை செய்து அதன் பலனை அறிந்துக் கொண்டீர்கள் என்றால் தயாரிக்க இனி தயங்கவே மாட்டீர்கள்)

Happy Gardening...!!!

Monday, April 8, 2013

முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி

முட்டை ரசம் - பயிர் வளர்ச்சி ஊக்கி

 பிளாஸ்டிக் பாத்திரத்தில் பத்து முட்டைகளை குறுகிய முனை கீழிருக்குமாறு வைத்து அவைகள் மூழ்குமளவிற்கு எலுமிச்சை சாற்றினை விட வேண்டும். அதற்குப்பிறகு இருநூறு கிராம் வெல்லத்தை பூரிதக்கரைசலாக நீரில் கலந்து அப்பாத்திரத்தில் ஊற்றி மூடி வைத்துவிடவேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் முட்டை கூழ் வடிவில் மாறிவிடும். இதைக்கையால் பிசைந்து மீண்டும் இருநூறு கிராம் வெல்லக்கரைசலை ஊற்றி பத்து நாட்கள் மூடி வைத்துவிட வேண்டும். அதன் திறந்து பார்த்தால் முட்டை ரசம் தயார். பிறகு அதை வடிகட்டி பத்து லிட்டர் டேங்குக்கு இருநூறு மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும்.

வேம்பு புங்கன் கரைசல் :
 
தேவையான பொருட்கள் :- 
வேப்பெண்ணை ஒரு லிட்டர் 
 புங்கன் எண்ணை ஒரு லிட்டர்
 கோமியம் (பழையது) பத்து லிட்டர் 
 காதி சோப்பு கரைசல் அரை லிட்டர் 

 இவை அனைத்தையும் கலந்து வைத்து ஒருநாள் கழித்து உபயோகிக்கலாம். இவை ஒரு ஹெக்டர் அளவுக்கானது. இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.

மீன் அமினோ கரைசல் :

உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளை வாங்கி வந்து அதனுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் ட்ரம்மில் காற்று புகாது வைக்க வேண்டும் 
21 நாட்கள் களைத்து பார்த்தால் கரைசல் தயாராகிவிடும் 
10 லிட்டருக்கு 100 மில்லி என்ற அளவில் வயலில் தெளிக்கலாம்.
இது ஒரு மிகச்சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி.
இதைப்பற்றி சுரபாலர் கூட விருட்ச சாஸ்திரத்தில் கூறியுள்ளார். 

பழக்காடி கரைசல் 

 தேவையான பொருட்கள்: 
சாணம்-20 கிலோ, 
கெட்டுப்போன பழங்களின் கூழ் - 5 முதல் 10 கிலோ
 தொல்லுயிர் கரைசல்-50 கிலோ, 
தண்ணீர்-50 லிட்டர், 
ஜீவாமிர்தம் -5-10 லிட்டர். 
தே மோர் (அ) அரப்புமோர் -5-10 லிட்டர். 

இவை அனைத்தும் கலந்து 5 முதல் 7 நாட்கள் நொதிக்கவிட வேண்டும். 
இதன் மூலம் நுண்ணுயிர்கள் பலமடங்கு பெருகும். மாதம் ஒருமுறை வீதம் 5 முறை பாசன நீரில் பழங்காடி கரைசலை சீராகக் கலந்து செல்லும் வகையில் பயன் படுத்த வேண்டும். இக்கரைசல் ஒரு மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும். 

தேமோர் கரைசல் 

 புளித்த மோர் - 5 லி
 இளநீர் - 1 லி

 இவற்றை கேனில் ஊற்றவும். 10 தேங்காய்களின் துருவல், அழுகிய பழங்கள் 10 கிலோ இவற்றை சாக்கு பையில் பொட்டலம் போல் கட்டி அதில் போடவும். ஏழாம் நாளில் ஊறல் தயாராகி விடும்.
1 ஏக்கருக்கு 10 லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் தேமோர் கரைசல் சேர்த்து தெளிக்கவும்.

பிராந்திக்கு பதில் அரப்பு மோர் கரைசல் 

 பல ஊர்களில் ஜிப்ராலிக் ஆசிட் கரைக்க மற்றும் பூச்சி மருந்துகளுடன் பிராந்தி கலந்து அடிப்பதாக செய்திகள் வருகிறது. இது மிகவும் வருந்தத்தக்கது.
இயற்கையாகவே ஜிப்ராலிக் ஆசிட் தயார் செய்து கொள்ளலாம்.
அரப்பு இலைத்தூள் ஒரு லிட்டர் படியில் அளந்து எடுத்துக்கொள்ளவும். இத்துடன் ஒரு லிட்டர் இளநீர், ஐந்து லிட்டர் புளித்த மோர் ஊற்றி கலக்கவேண்டும். இந்த கரைசலை பானையில் ஒரு வாரம் வைத்திருக்க வேண்டும். பிறகு பத்து லிட்டர் நீரில் இருநூறு மில்லி அரப்பு மோர் கரைசலை கலந்து வயலில் தெளிக்கலாம். இதனால் நல்லா மகசூல் கிடைக்கும். ஜிப்ராலிக் ஆசிட் மற்றும் பிராந்தி செலவு ஆயிரம் என்றால் இந்த கரைசலை தயாரிக்க ஐம்பது ரூபாய் போதும்..

நன்றி - விகடன்