Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Thursday, November 10, 2016

இதை அனுபவித்தவனே ஞானவான்!

                 சாதனை - தியானம்



அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி !

குருவே சரணம்! குரு திருவடி சரணம்.

குருவே சரணம்! குரு திருவடி சரணம்.

என் குருவின் பாதம் பணிந்து அவர் ஆசியுடன் இக்கட்டுரையை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஞான சற்குரு எங்களுக்கு உபதேசம் அளித்தவையே. அதை உங்களிடம் பகிர்வது மகிழ்ச்சி கொள்கிறேன்.

சாதனை என்றால் தியானிப்பது - தவம் செய்தல் என்று பொருள். சாதனை என்பதற்கு மற்றொரு பொருள் அருஞ்செயல். எல்லோராலும் எளிதாக செய்ய முடியாத செயலை செய்தவரை சாதனை படைத்தார் என்கிறோம். அந்த விளையாட்டு வீரர் இதுவரை உள்ள சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்தார் என்கிறோமல்லாவா? உலகத்தில் இன்று ஏதாவது சாதனை செய்தால் அதை "கின்னஸ் ரெகார்ட்" என்கின்றனர்.

ஞானிகள் புரிந்த சாதனைகள் ஒன்றா, இரண்டா? உலகியலிலும் ஆன்மீகத்திலும் அவர்கள் படைத்த சாதனைகளுக்கு நிகரேது?! செத்தவர்களை பிழைக்க வைத்தனர் எத்தனையோ ஞானிகள். விஞ்ஞானம் பேசும் மக்கள் யாரவது இதை செய்ய முடியுமா? நினைத்துகூட பார்க்க முடியாது. ஆன்மீகவாதிகளே சாதனை செய்து - கடுமையான தவமியற்றி, சாதனை பல படைத்துள்ளனர். ஈடு இணையற்ற சாதனையாளர்கள் ஞானிகளே!

ஆன்மீக சாதனை - தவம் புரிபவனுக்கே எல்லா ஆற்றலும் கிட்டுகின்றன. மனம் ஒருமைப்பாடு - மனம் குவிதல் என்பதை ஒரு ஆன்மீகவாதியால் மட்டுமே செய்ய முடியும். வைராக்கியத்தோடு இருப்பவன் மட்டுமே வெற்றி பெறுவான்.

இன்றைய விஞ்ஞானம் பூமியைப் பற்றி கிரகங்களைப் பற்றி பலவிதமாக ஆராய்ந்து கோடிகோடியாக பணம் செலவு செய்து ஏகப்பட்ட கருவிகளை வைத்துத்தான் பல செய்திகளை கூறுகின்றது.

ஆனால் நமது ஞானிகளால் உருவாக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம் எந்த காலத்தில் உருவானது என்றே தெரியாது! மிக மிக துல்லியமாக கிரகங்கள் இருப்பிடம், தன்மை போன்ற அனைத்து விபரங்களையும் கூறுவதோடல்லாமல், அதன் ஆதிக்கத்தால் மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்றும் துல்லியமாக கணக்கிட்டு கூறுகிறது. பஞ்சாங்கத்தில் உள்ள விஷயங்களைத்தான் இன்றைய விஞ்ஞானிகள் ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போல கூறுகிறார்கள். இந்தியா என்கிற கொல்லனிடம் வெளிநாட்டவர் ஊசி விற்க வருகிறார்கள்!?

நம் பெருமை - மகிமை - அரிய சக்திகள் நாம் அறியாமலிருக்கிறோம்.

உலகிலுள்ள பழமையான மொழி என்றும் கலாச்சாரம் என்றும் இன்றைய உலகத்தவர்களால் சொல்லப்படுகிற கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சமஸ்கிருதம், தமிழ் என்ற ஐந்தினுள் இந்தியாவிலுள்ள சமஸ்கிருதமும் தமிழுமே நிலைபெற்றுள்ளன. ஏனையவை கிட்டத்தட்ட அழிந்தேவிட்டது.

நமது சமஸ்கிருதமும் தமிழும் தெய்வீகமானது. நமது காலாச்சாரம் எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டது. இங்கு இல்லாதது ஒன்றுமேயில்லை! உலகுக்கே நாகரீகத்தை கற்றுத்தந்தவர்கள் நாம்தான்! "ஐந்து கண்டம் அளாவியதமிழ் என திருமந்திரம் கூறுகிறது." இன்றைக்கு உலகெங்கிலும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருமூலர் கூற்று உண்மை என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" என பாடிய பாடல் முற்றிலும் உண்மை. ஆதியிலே உலகெங்கும் இருந்தது சனாதனதர்மமே! பக்தியின் முடிவு ஞானத்தின் தொடக்கம் சிவலிங்க வழிபாடே! அறிந்தவர் அறிவர்.

இப்பேர்ப்பட்ட சனாதன நெறி வந்தவர்கள் நாம். சாதனை என்றாலே சாதித்தவர்கள் நாம்தான்! இன்னும் பல அரிய பெரிய உண்மைகளை, இரகசியங்களை நம் நாட்டின் மகத்துவத்தை நாம் அறியாமல் தான் இருக்கிறோம்.

நம்மவர்கள் தான் அறியாமையால் நாத்திகவாதம் பேசுகிறார்கள் மூடநம்பிக்கை என்று சாடுகிறார்கள். உனக்கு புரியவில்லை என்றால் இல்லை என்றாகிவிடுமா? உண்மை உணரும் அறிவு உன்னிடம் இல்லாததால் நாத்திகம் பேசுகிறாய்! நரேந்திரன் கடவுள் எங்கே காட்ட முடியுமா என ராமகிருஷ்ணரிடம் கேட்டார். அவர் உணரச் செய்தார்! நரேந்திரன் சுவாமி விவேகானந்தரானார். ராமகிருஷ்ணர் பரமஹம்ஸரானார்!

கேள்விகேள் - கேட்க வேண்டியதுதான். தகுந்தவரிடம் கேள். புரியவில்லையா, உன்னிடமே நீ கேள்! சாக்ரடீஸ் சொன்னாரே, உன்னையே நீ எண்ணிப்பார் என்று! இதைத்தான் வள்ளலாரும் பாடினார். தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என வெண்ணிலாவிடம் கேட்கிறார். சூரியனிடம் கேட்கவில்லை. ஆன்மீகவாதிகளே சிந்திக்க வேண்டியம் இடம் இது!?

நரேந்திரன் கேள்விக்கு பதில் தந்தார் நல்ல ஒரு குரு! இன்று ஏன் நாத்திகம் பேசுகிறவர் பெருகியிருக்கின்றனர் என்றால் நல்ல ஆன்மீக குரு இல்லாமையால்தான்!? இருக்கின்றவர்கள் இரகசியம் இரகசியம் என்று இல்லாமலாக்குகின்றனர். போலி குருமார்களும் போலி மடாதிபதிகளும் தான் நிரம்பியிருக்கின்றனர். இங்கே இருக்கின்ற பலமடாதிபதிகள் மட அதிபதிகள் தான்! ராஜபோக வாழ்க்கைக்காக மடத்தை பிடித்தவர்களே இவர்கள்! வேஷதாரிகள்!? ஆன்மீகத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது! இன்னும் சொல்லப் போனால் ஆன்மீகம் என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாதவர்கள்தாம். சந்தேகமேயில்லை!

"துறை இது வழி இது நீ செயும் முறை இது என மொழிந்த அருட்பெரும்ஜோதி" என திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் சுட்டிக்காட்டிய வழி - விழி வழியை நமது ஞானிகள் - சித்தர்கள் எல்லோரும் சுட்டிக்காட்டியதும் இதுவேதான்! எல்லோரும் அறியவே எங்கள் ஆசான் "கண்மணிமாலை" "அருள்மணிமாலை" என இவ்விருநூற்களையும் வெளியிட்டுளார்கள். அவருள் இருந்து வெளியிட வைத்தார் சற்குரு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் என்பதுதான் முற்றிலும் உண்மை!

"சூடு கொண்ட திரு ஆடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே" என அகத்தியர் திருவாகிய இறைவன் ஜோதியாக ஆடும் துறைமுகம் எது என அழகாக கூறுகிறார். துறை முகத்தின் கண்ணேயுள! இதில் என்ன, மறைத்தா சொல்லியிருக்கிறார்? எவ்வளவு ஆணித்தரமாக, இலகுவாக உண்மையை கூறியிருக்கிறார்! சற்று சிந்தியுங்கள். சிந்தித்தவனுக்கே சித்திக்கும்!!

இன்னும் இதுபோல பல லட்சக்கணக்கான ஆன்மீக பாடல்கள் உள்ளன. உண்மை விளக்கம் காணவேண்டும். மக்களை இறைவனிடம் கூட்டிச் செல்ல வேண்டும். திருஞானசம்பந்தர் தானும் தன் மணவிழாவிற்கு வந்தவர் அனைவரையும் கூண்டோடு கைலாசதிற்கு அழைத்து போனாரே அது போல இருக்க வேண்டாமா? இறைவன் இப்படி இருக்கிறான் நீ இப்படி சாதனை செய்தால் இறைவனை அடையலாம் என்று சொல்லக்கூட மாட்டேன் என்கிறீர்களே! தெரிந்தாலல்லவா சொல்வார்கள்!

இன்னும் ஒரு சில மேதாவிகள் அர்த்தம் புரியாமல் அனர்த்தம் செய்து மடையனாகி ஏனையோரையும் முட்டாளாக்கிவிடுவர். உதாரணமாக, அகத்தியர் ஞான நிலையை அழகாக தெளிவாக இலகுவாக கூறியது "பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்" என்று ஒரு பாடல். இதற்கு மதகுருமார்கள் சொல்லும் விளக்கம் வெளியே சொன்னால் உன் தலை வெடித்துவிடும் என்பது தான்?! இதுவா பொருள்? இறைவனை அடைய வழிகாட்டும் ஒரு ஞானி இப்படியா சொல்லியிருப்பார்? சிறிதாவது சிந்திக்க வேண்டாமா? இப்படி மிரட்டியே பலர் பலரை சீடராக வைத்திருகின்றனர். என்ன குருவோ என்ன சீடனோ,

இராமானுஜரை அவர் குரு இப்படித்தான் பயமுறித்தினார். மந்திரத்தை வெளியே சொன்னால் நீ நரகத்திற்குத்தான் போவாய் என்று இராமானுஜர் என்ன சொன்னார். நான் ஒருவன் நரகத்திற்கு போனால் பரவாயில்லை மக்களே நீங்கள் எல்லோரும் சொர்க்கத்திற்கு போங்கள் என ஸ்ரீரங்கம் மொட்டை கோபுரத்தின் மீதேறி நின்று எல்லோருக்கும் மந்திரத்தை உபதேசித்தார். அதன் பிறகுதான் அவர் குரு தன் தவறை உணர்ந்தார். இராமானுஜர் ஒரு மாபெரும் மகான் ஆனார்.

பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும் என்றால் வெளியே சொல்லாதே தலை இரண்டு உண்டு என்பதே. நமக்கு ஒரு தலை தானே இருக்கிறது எப்படி இரண்டு என்கிறீர்களா? தலை இரண்டு என்பது தலைக்கு தலையாயது இரண்டு என்பதே. அதாவது தலையில் உள்ள முக்கியமான இரண்டு என்பதேயாகும். என் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம் அவரவர் கையால் அளந்தால் எல்லோரும் எட்டு ஜாண் தானே! ஐந்து பூதமும் ஒருங்கே அமைந்த கண்கள்! இதுவல்லவா முக்கியமானது. அதாவது உடம்பில் முக்கியமானது தலை. தலையில் முக்கியமானது இரு கண்கள். இதுவே சரியான விளக்கம். சப்தமாக மிரட்டும் தொனியில் சொன்னால், "பரப்பிலே விள்ளாதே தலையிரண்டாகும்" என்றால் பயப்படத்தான் செய்வான்".

அன்பாக அமைதியாக பிரித்துச் சொன்னால் ஞான இரகசியமே இதுதான். பரப்பிலே விள்ளாதே, தலை - இரண்டு ஆகும் என்றால் உண்மையை உணர்வான்!

இதைத்தான் பரிபாஷை இரகசியம் என்றனர். இவ்வாறே எல்லா ஞானிகள் பாடல்களையும் பொருள் கொள்ள வேண்டும். ஞானிகள் பாடல்களை படித்து உணர்வதற்கு பெரிய படிப்பு ஒன்றும் தேவையில்லை. பக்தியும், இறைவனை அடைய வேண்டும் என்ற ஆவலும் இருந்தாலே போதுமானது. கொஞ்சம் சிந்திக்க வேண்டும். சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவர் தாள் (திருத்தாள் - திருவடி - இருகண்கள்) வணங்கி என மாணிக்கவாசகப் பெருமான் பாடுகிறார்.

சிந்தையுள் நின்ற சிவனே நம்மை சிந்திக்க வைக்கிறான். அந்த சிவனே நம் இரு கண்களிலும் சீவ ஒளியாக நின்றிலங்குகிறான். இதைத்தான் குருமூலம் அறிய வேண்டும்.

முதலில் இறைவன் அண்டத்திலுள்ளதைப் போல பிண்டத்திலும் கோயில் கொண்டுள்ளான் என்றும், தலையில் ஐந்து பூதங்களும் ஒருங்கே அமையப் பெற்ற கண்களில் ஒளியாக சீவனாக உள்ளான் என்றும் அறிய வேண்டும். சந்தேகமே இருக்கக்கூடாது. சந்தேக நிவர்த்தியே சுருதி உபதேசம்.

இரண்டாவதாக, கண்களில் ஒளியாக இறைவன் இருப்பதை உணர வேண்டும். உணர்த்துபவரே குருவானவர். "தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது" என்றொரு பழமொழியுண்டு. எனவே தகுந்தவரிடம் உணர்த்தபெற வேண்டுவது அவசியம். "சுருதி" சொன்னதை "யுக்தி"யாள் உணர வேண்டியது முக்கியமாகும்.

மூன்றாவது, கண்களிலேயே ஒளி உணர்வு பெற்ற நாம் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் பாடியது போல, "நினைந்து - நீ -நைந்து, உணர்த்து உணர்ந்து உணர்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து" இருந்து சாதனை செய்ய வேண்டும். இவ்வாறு சாதனை செய்யச் செய்ய கிட்டுவதே பேரானந்தம். இதுவே அனுபவப்படவேண்டும்.

நாம் காட்டும் ஈடுபாடு, வைராக்கியம் நம்மை மேனிலையடைவிக்கும்.

நம்மிடம் உள்ள "சத்"தாகிய சீவனை குறித்து தியானித்து வந்தால் சிவமாகிய ஒளியாகிய சீவனே நம் வசப்படும் நாம் நம்மை உணர்வோம். அதாவது "சித்"திக்கும் கைவல்யப்படும். அதனால் நாம் அடைவதே பரவசம் - பேரானந்தம் - பரமானந்தம் - "ஆனந்தம்." சத்து சித்தாகி ஆனந்தம் கிட்டும், அதைத்தான் சுருக்கமாக சத்சித் ஆனந்தம் என்று சச்சிதானந்தம் என்றார்கள் ஞானிகள்!

இதுபோன்ற உண்மை ஞான பொருள்களை நாம் அறிய வேண்டும். உணர வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். இதைத்தான் எல்லா ஞானிகளும் உபதேசித்தார்கள். பெற்றார்கள். இதை சொல்லிக் கொடுப்பது அருஞ்சாதனை! மிகமிக முக்கியமான இறைபணி! மக்கள் தொண்டு! இது ஒன்றே எங்கள் சற்குரு பணி, அனைவருக்கும் ஞானத்தை எடுத்து உரைப்பதே எமது பணி எங்கள் சபை அன்பர்கள் பணி!

தியானம் எப்படி செய்வது என பலநூறு வழிகளில் பல நிலைகளில் நமது ஞானிகள் சொல்லியிருக்கின்றார்கள்.

இவை அனைத்தையும் மொத்தம் 16 நிலையில் அடக்கி விடலாம். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற 4 நிலையில் சரியையில் சரியை, சரியையில் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் இப்படியே கிரியையில் சரியை என மொத்தம் 16 நிலைகளே.

திருவருட்பிரகாச வள்ளலாரும் சித்தர் பெருமக்களும் மக்களுக்கு காட்டும் பாதை ஞானப்பாதை! எத்தனையோ ஜென்மங்களாய் துன்பம் அனுபவித்து வரும் மக்கள் மீது கருணை கொண்டு இறைவனை அடைய வழிகாட்டும் ஞானமார்க்கத்தில் நேரடியாக செல்ல உபாயங்களை கூறியருளியிருக்கின்றனர்.

தியானம் செய்ய வள்ளலார் கூறும் உபாயம், பசித்திரு! தனித்திரு! - விழித்திரு! என்பதே.

இதில் பசித்திரு என்றால் வயிற்றுப்பசியோடு இருப்பதல்ல! இறைவனை காணவேண்டும் - அடைய வேண்டும் என்றும் நம்மை நாம் உணரவேண்டும் என்றுமுள்ள ஆன்ம பசிவேண்டும்! தனித்திரு என்றால் காட்டுக்கு போகவேண்டும் தனிமையில் இருக்கவேண்டும் என்பதல்ல! நாம் நம் ஆன்மாவோடு மட்டுமே தொடர்புகொண்டிருக்க வேண்டும். தனித்தன்மையுடன் விளங்க வேண்டும் என்பதே!

அடுத்து விழித்திரு என்றால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதுடன், தியானம் செய்யும் போது கண்களை திறந்துதான் இருக்க வேண்டும். இது முக்கியமான ஒன்று. ஞான சாதனைக்கு கண்ணை திறந்திருந்துதான் செய்ய வேண்டும்.

நான் யார்? கடவுள் யார்? என்று அறியும் பசியோடு, மனதில் வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் நான் ஆத்மா என்ற தனித்த உணர்வுடன் இருந்து, கண்களை திறந்து - இருந்து தியானம் செய்க!

தியானம் செய்வது, ஆரம்பத்தில் ஏதாவது ஒரு உருவத்தை பார்த்து இருந்து செய்யவேண்டும். உருவம் என்றால் தெய்வத் திருஉருவங்களுக்கு போய்விடாதீர்கள். எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஜோதியை வைத்துக் கொள்க. ஒருவிளக்கு ஏற்றிவைத்து அதன்முன் அமர்ந்து கண்களை திறந்து அந்த ஜோதியையே பார்த்து கொண்டிருக்க வேண்டும். சிலகாலம் அப்படியே இருந்து பழகிப்பழகி வரவர நாம்பார்க்கின்ற ஜோதியில் பலவித மாறுதல்கள் உண்டாகும். ஒரு நிலையில் ஒன்றுமே தெரியாமல் கூடபோகும். உங்கள் கண்களில் நீர் தாரை தாரையாக கொட்டும். அப்போது ஆடாதீர்! அசையாதீர்! வேறொன்றை நாடாதீர்!

அதன்பிறகு உங்களுக்கு பற்பல காட்சிகள் அனுபவங்கள் ஏற்படும். சற்குரு வழிகாட்டுவார். இதுவே ஞானத்தில் சரியை என்ற 13-வது படிநிலையாகும். இவ்வாறு பயிற்சி செய்து அனுபவபட்டால் பின்னர் விளக்கு ஏற்றிவைக்க வேண்டியதுமில்லை. எந்த இடத்திலிருந்தும் கண்களை திறந்து இருந்து தியானம் செய்யலாம்! அதுவே முக்திக்கு வழி.

திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் எப்படி தியானம் செய்தார் என அறிய வேண்டாமா? தன்னுடைய 9 வயதில் தன் வீட்டின் மாடியிலுள்ள ஒரு அறையில் சுவரில் கீழே ஒரு நிலை கண்ணாடியை வைத்து அதன் முன்னர் ஒருவிளக்கை ஏற்றி அதன்முன்னர் இருந்து பார்த்து தியானம் செய்தார். சுவரில் இருக்கும் கண்ணாடியில் தன் உருவமும் தன் கண்ணில் விளக்கின் ஒளியும் கண்டு தியானம் செய்தார்.

சில நாட்களிலே தன் "கண்" ஆடியிலே ஆறுஜோதிகொண்ட ஜோதிதரிசனம் பெற்றார். இதைத்தான், சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் . . . என் கண் உற்றதே என பாடியருளினார். ஞான அனுபவ நிலை! சிந்திப்பவர்க்கே சிவம்! காணலாம் கண்ணிலே! கண்ணாலே காணலாம்! மிகமிக உயர்ந்த ஞான நிலை இதுவே.

இதை அறிந்தவன் பாக்கியவான்! இதை அனுஷ்டித்தவன் புண்ணியவான்! இதை அனுபவித்தவனே ஞானவான்!

ஆன்மநேய ஒருமைப்பாடுடைய மெய்யன்பர்களே, இதைவிட மேலான வழி உண்டுமோ? இன்றே இக்கணமே ஆரம்பமாகட்டும் உங்கள் சாதனை.   

Sunday, July 10, 2016

108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல்



1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :
ஆதி காலத்திலே தில்லை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.
இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.
மதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான

பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,
சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

http://www.astrosuper.com/2015/08/108.html

Sunday, June 26, 2016

முந்தி வந்த விந்துத்துளி....

*முன் செய்த வல்வினையால்.....*

_முந்தி வந்த விந்துத்துளி......_

அடைத்து வைத்த தோல் பைக்குள்
அடங்கிப்போய் சூல் கொள்ள...

வெள்ளை இரத்தம் சிவப்பாகி
நாடி, நரம்பு சதை பிடித்து...

அவனவளாய் இனம் பிரித்து
பிண்டம் என உருவெடுத்து.....

ஐயிரண்டு மாதத்தில் அன்னையவள் உந்தி தள்ள.....

நச்சுப்பையுடன் ஒட்டி பிறந்து
அண்டமதில் அலைந்து திரிந்து...

அங்கும், இங்கும் கூத்தாடி
பொய்யை மெய்யாய் தினம் நாடி..

அகமதன் அர்த்தநிலை????

ஐய்யோ..............

ஒன்றும் புரியவில்லை.......!!!

சொந்த பந்த காட்டுக்குள்ளே
இன்பத் துன்பக் கூடு கட்டி......

இன்னொரு சதை பிண்டம் தேடி...

சேர்த்து வைத்த விந்தை கொட்டி ....

மீண்டும், மீண்டும்
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து......

பிறவியதன் கட்டறுக்க
இருக்கும் வழி காணாது.....

அப்பப்பா போதுமப்பா
கண்டுகொள்வோம் முலமதை.......!!!

உயிர்கொடுத்து உருட்டியவன்
உலகமதை திரட்டியவன்......!!!

பிறப்பு எனும் வட்டத்துக்கு செக்குமாடாய் நம்மை சுழற்றியவன்.......!!!

அவனை இனம் காண தேடி
நித்தம் தேடி ஓடி, ஓடி.......!!!

வெளியெங்கும் காணாது
வேறு வழி தெரியாது.......!!!

சுழல்கின்ற பூமியின் மேல்
சுற்றி, சுற்றி பிறந்து வந்து.....!!!

சூட்சுமத்தை உணராது
சுடுகாட்டில் பிணமாகி......!!!

மற்றுமொரு தோல்பைக்குள்
மாற்றமில்லா விந்தாகி......!!!

உள்ளுக்குள் உள் நுழைந்து....
உற்றவனை கண்டுகொண்டு.....!!!

அவனே நானாகி.....
நானே அனைத்துமாகி......!!!!

ஆதி அந்தம் தெளிந்து
உண்மையதை உணர்ந்து......!!!

அம்மாம்மா இறுதியில்
அண்டசராசரம் எங்கும்.....!!!

எல்லையற்று கலந்திருக்கும் 
அது .......

என ஆனதப்பா முடிவினிலே
இது ............!!!

ஓம் நமசிவாய...........

Saturday, May 14, 2016

இயற்கை சுவாசத்தை சாத்திரப்படி மேம்படுத்தினால் பிராணயாமம்!!!

#எண்ணிலடங்கா #சித்திகளை #பெற #பிராணயாமம்.
---------------------------------------------
-------------------------------

பிறப்பெடுத்த ஒவ்வொரு உயிரும் தாயின்
கருப்பையிலிருந்தே சுவாசிக்க
தொடங்கிவிடும். இயற்கையின் படி ஒவ்வொரு
உயிருக் கும் வாழ்வில் இத்தனை சுவாசம்
என்ற கணக்கில் இருப்ப தாகவும்,
அந்த காலம் முடிந்தவுடன் பிராணன் உடலை
விட்டு நீங்கி விடுவ தாகவும் புராணங்கள்
சொல்கின்றன. ஆனால் இந்த மூச்சை மிகச்
சரியான முறையி ல் கட்டுப்படுத்தி வாழ்ந்தால்
நீண்ட கா லம் உயிருடன், ஆரோக்கியமாக வாழ
முடியும். மிகச்சிறந்த சுவாச பயிற்சிகள்
மூலம் எண்ணி லடங்கா சித்திகளை கூட பெற
முடியும் என் கிறார்கள் ரிஷிகள்.

மனித ஜீவனுக்கு ஆதாரமான உயிர்க்காற்று
வாசி எனப்படுகிறது. இந்த வாசியே பாற்கடல்
புராணத்தில் வாசுகி என்னும் நாகமாக சித்
தரிக்கப் படுகின்றது. பிராணன் எனப்படுவதும்
வாசியையே குறிக்கிறது. இந்த பிரா ணன்
எனப்படும் வாசியை இடம், வல மாக இழு த்து
பல தொழில் செய்து கட்டு ப்படுத்தும்
முறைக்கு பிராணயாமம் என்று யோக ஞானிகள்
குறிப்பிடுகி றார்கள்.

அதாவது, இந்த வாசியை கட்டுப்படுத்தி
உடலின் ஆறு ஆதாரங்க ளையும் கடந்து
மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினி
சக் தியை வெளிக் கொண்டு வரும் முறை யே
பிராணயாமம். குண்டலினி சக்தியை எட்டும்
போது ஒரு மனிதனுக்கு சகல வி த சித்திக
ளும் கிட்டும் என்றும் அவர்கள்
சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையில் இது மிகப்பெரிய விஞ்ஞானம்
என்பது இதனை உணர்ந்தால் புரியும்.

அதாவது ரத்தம் உடலின் நுண்ணிய உறு
ப்புகளுக்கு உணவை எடு த்து செல்கிறது.
காற்றோடு கலக்கப்பட்ட அந்த ரத்தத்தில்
மிகமிக நுண்ணிய சத்துக்கள் அடங்கி யுள்ளன.

ரத்தத்துடன் கலந்து செல்லும் காற்றானது
தூய்மையாக வும், சரியான ஓட்டத்திலும்
செல்லும்போது மனித உடலின் நுண் ணிய
உயிர்க்கோளங்கள் அனைத்தும் சரியாகவும்,
ஆரோக்கியத் துடனும் இயங்குகின்றன.

மூச்சு பயிற்சியின் மூலம் ரத்தத்தில்
இருக்கும் அசுத்தங்கள் களை யப்பட்டு
விடுவதால் தூயரத்தம் மிக த்தூய்மையான
உயிர் காற்றான பிராணவாயுவை சுமந்து
சென்று உடலின் நுண்ணிய உறுப்பு களுக்கு
உணவாக தருகிறது. மனிதனின் மூளை அதன்
சக்தியில் வெறும் 4 சதவிகிதத்தை மட்டுமே
பயன்படுத் துவதாக அறிவிய லாளர்கள் சொல்கிறார்கள்.

இது போன்ற பயிற்சிகளால் மனிதன் சித்தியை
எட்டக்கூடும் என்று ரிஷி கள் சொல்வதை
பார்த்தால், மூச்சு பயிற்சியின் மூலம் மூளை
மட்டுமல்லாமல் உடலின் அனைத்து
உறுப்புகளின் செயல்திறனையும்
வியக்கத்தக்க அளவுக்கு உயர்த்த முடியும்
என்கிறார்கள் தற்போதைய வாசியோக
அப்பியாசிகள்.

பத்து வாயுக்கள் :-
********************

மனித தேகத்தை பொருத்தமட்டில் பிராணன்,
அபானன், வியானன், உதானன், சமானன், நாகன்,
கூர் மன், கிருகரன், தேவதத்தன், தன ஞ்செயன்
என்று தசவாயுக்களா கிய பத்துவாயுக்கள்
உள்ளன. இவ ற் றை விளக்கப்படுத்தி
பார்த்தால், பிராணன் எனப்படுவது உடலுக்கு
ஆதாரமான உயிர்காற்று, இது ரத்த
ஓட்டத்தையும், சுவாசத்தை யும்
பலப்படுத்துகின்றது. அபானன் எனப்படுவது
மலத்தில் தங்கும் மலக்காற்று, இது கீழ்நோக்கி
பாய் வது. வியானன் எனப்படுவது மண்
ணீரலில் இருந்து நரம்புகளையும்,
மூளையையும் பலப்படுத் துவது. இதனை
தொழிற்காற்று என்றும் கூறுவர். உதானன்
எனப்படுவது குரல், பேச்சை உருவாக்குகிறது.
இதனை ஒளிக்காற்று என்பர்.
சமானன் எனப்படுவது உண்ட உணவை
ஜீரணமாக்கி உட லை சமா னப்படுத்துகின்றது.
இதனை நிரவு காற்று என்பர். நாகன் எனப்படு
வது தும்மல் காற்றாக நாசியிலிருந்து
வெளிப்படுகின்றது. இதன் வே கம் எல்லா
காற்றுகளையும் விட மிகவும் அதிகமானதா
கும். கூர்மன் எனப்படுவது விழி காற்றாகும்.
விழியின் பார்வைக்கும், கண்ணீர் வரவைக்கும்
குணமும் இதற்கு உண்டு. கிருகரன் எனப்
படுவது கொட்டாவி விடு ம் காற்றாகும்,
தூக்கம் வருவதற்கான அறிகுறியையும்,
பிராண சக்தி குறைதலையும் சுட்டிக்காட்டும்
காற்றாகும்.
தேவதத்தன், இதை இமைக்காற்று என்பர்.
கண்விழியை பாதுகாக் கும் பொருட்டு
இமைத்துக் கொ ண்டேயிருக்கும். புராணங்க
ளிலில் இதை நிமி என்றும் கூறு வர்.
தனஞ்செயன்,உடலை விட் டு ஒன்பது
வாயுக்களும் வெளி யேறிய பிறகு உடலினுள்
நுண் கிருமிகளை தூண்டி உடலை வீங்க
வைத்து கடைசியில் வெ ளியேறும்
காற்றாகும். இதை வீங்கல் காற்று என்பர்.

இப்படி மனித தேகத்தில் பத்து விதமான
காற்றுகள் உயிர் வாழும் பொரு ட்டு தேகத்தை
இயக்கு கின்றன.

உயிராதார காற்று :-
**********************

பத்துக்காற்றுகளில் முதல் முக் கியமான
ஆதாரக்காற்று உயி ர்க்காற்றாகும். தாயின்
கருவில் ஜீவன் வளரும் போது பிராணன் என்ற
உயிர்க்காற்று தன்னை முதலில்
ஐக்கியப்படுத்திக் கொ ள்கிறது. உடல்
வாழ்வதற்கு ஆதாரமானதால் உயிர்க்காற் றிற்கு
பிரா ணன் என்று பெயர். உடலுக்கு ஆதாரமான
அந்தக் காற்றை எப்படியெல்லாம் பய ன்படுத்தி
உடலையும், ஆன்மாவையும் ஆரோக்கியமாக
வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி
பிராணனைக் கட்டுப்படுத்தும் பிரா ணயாமம்
கூறுகின்றது.

இந்த பிராணயாமக் கலையே வாசிகலை
என்றும், மூச்சுக்கலை என்றும் வாசுகிகலை
என்று ரிஷிகள் சொல்கிறார்கள். வாசியாகிய,
பிராணனாகிய உயிர்காற்றை சரியாக
பயன்படுத்ததாதல் தான் மனிதனுக்கு மரணம்
நிகழ்கின்றது என்றும், சரியாக பயன்படுத்
துபவனும், அதைப்பற்றி தெ ளிவாக அறிந்து
கொண்டு செயல்படுத் துபவனும் என்றும்
அழியாத தேகத் துடன் பாபபுண்ணியங்களுக்கு
அப்பாற் பட்டு ஜீவமுக்தனாக வாழ்வான். அப்ப
டிப்பட்ட ஜீவ முக்த னின் புருவநடுவில்
இறைவனாகிய தாண்டவராயன் நடரா சர்
எப்போதும் ஆனந்த திருநடனம் புரி வார்
என்கிறார்கள் ரிஷிகள்.

பிராணயாமம் என்ற உயிர்காற்றை பயிற் சிக்கு
உட்படுத்தும் கலைக்கு சித்தர்கள் சரகலை
என்று பெ யர் சூட்டியுள்ளனர். உலகில் எந்த
கலையை படித்தாலும் உடல்வா ழ்வதற்கு
அவசியமான உயிர் கலையும்,
ஜீவகலையுமான பிரா ணயாமத்தை சரிவர
அறிந்து கொள்பவர்கள் மட்டுமே சிறந்த கலை
யை கற்றவர்களாக, அவர் கள் எப்போதும்
இறைவனை காணும் நிலையில் இருக்கிறார்கள்.

இவர்கள் குருவி ற்கும் குருவாக
விளங்குபவர்கள் என்கி றார்கள்.
பிராணயமம் என்ற காற்றடக்கும் கலையா னது,
ப்ராக்ருதம், வைகி ருதம் என்ற இரு
வகைப்படும். இந்த இரண்டு மட்டுமல்லாமல்
மத் திமமான கேவலகும்பகம் என்ற ஒரு
வகையும் உண்டு. எல்லா உயிர்களும்
இயற்கையாகவே மூச்சு விடு தலுக்கு
ப்ராக்ருதம் என்று பெயர். சாஸ்திரங்களில்
கூறியபடி காற்றை கட்டுப்படுத்தி பயன
டையும் முயற்சிக்கு வைகிருதம் என்று
பெயர்.

எந்தவித முயற்சி யும் இல்லாமல்
காற்றடக்கலால் கிடைக்கும் பலன் ஒரு
ஜீவனுக்கு கிடைத்தால் அதற் கு கேவல
கும்பகம் என்று பெயர். ஆக மொத்தம் இயற்கை,
செயற்கை, கேவ லம் என்ற யதார்த்தம் ஆகிய
மூன்று நிலைகளில் காற்றடக்கும் பிராணயா
மதத்துவம் அமைகின்றது.

காற்று எண்ணிக்கை :-
************************

காற்றை உடலுள்ளிழுத்து வெளியே
விடுவதை சுவாசம் என்கி றோம்.
இந்த சுவாசமானது ஒரு நாளைக்கு 21,600
முறை நடக் கின்றது. இச்சுவாசத்தில்
இயல்பாக உடலு க்குள் செயல்பாட்டிற்கு
செல்லும் சுவாசம் அதிகபட்சம் 14,400 தான்.

மீதமுள்ள சுவா சங்கள் யாவும் வீணாகவே
கழிகின்றன. சுவாசங்கள் வீணாவதால்
ஆயுள்நிலையும் வீணாக கழிகின்றது.
நோய்களும் உண் டாகிறது.

இயற்கை சுவாசத்தை சாத்திரப்படி
மேம்படுத்தினால் சுவாசம் தங்குதடையின்றி
எல்லா பகுதிகளுக்கும் சென்று பிராண சக்தியி
னால் தேகத்தை வலுப்படுத்துகின்றது.
ஆயுளும் நீடிக்கிறது. நோய் அகலுகின்றது.
பாபம் விலகுகின்றது. மூச்சை சரியாக
இழுத்து விடு தலும் ஒரு வகையான பாப சம்
ஹாரமே, புண்ணியத்தை எய்துகி ன்ற
முயற்சியே என்கிறார்கள் சாதுக்கள்.

சுவாசத்தை இழுத்து விடும் கால அளவை
மாத்திரை என்பார்கள். மாத்திரை என்பது விரல்
சொடு க்கும் நேரமும், கண்ணை சிமிட் டும்
நேரமும் ஆகும். சுவாசம் இழுக்கப்படும்
போது 16 மாத்தி ரை காலம் இழுக்க
வேண்டும். சு வாசம் இழுக்கப்படும்
தத்துவத்தி ற்கு பூரகம் என்று பெயர். சுவாச
த்தை உடல் பூரிப்பதால் அச்செய லுக்கு
பூரகம் என்று பெயர் வந்தது. பயிற்சியின்
துவக்க காலத்தில் 16 மாத்திரை காலம்
சுவாசத்தை இழுப்பது கடினம். தகுந்த குரு
வின் பயிற்சி யால் சுவாசத்தை இது போல்
இழுக்கலாம்.

காற்றை இழுத்தல், அடக்கல், விடுதல் :-
*****************************************************

தொடக்க காலத்தில் காற்றை இழுத்து அடக்கி
செய்யும் பயிற்சிக ளை குருவின்
துணையில்லாமல் செய்தல் கூடாது. காற்றை
உடலு க்குள் அடக்கி பயில்வது பிரச்சினை
களை உண்டாக்கும். போதிய பயிற் சிக்கு பின்
இத்தகைய அடக்கல் பயிற் சியை செய்யலாம்.

பொதுவாக, இப்படி மூச்சை அடக்கி பயிலும்
போது சேமிக் கப்படும் பிராணனால், உடலின்
மூலை முடுக்கெல்லாம் பிராணன் ரத்த ஓட்
டங்களில் கலந்து ரத்தத்தில் உள்ள
அசுத்தங்களை அகற்றும்.

இயல்பாக சாதாரண மானுட நிலையில் 64
மாத்திரை காலம் பிராணனை உடலில் தக்க
வைக்க முடியாது. பயிற்சியால் மட்டுமே
முடியும். பிராணனை சேமிக்கும் செயலுக்கு
கும்பகம் என்று பெயர். கும்பகம் என்பதற்கு
அமிர்தத்தால் நிரப்பப்பட்ட கலசம் என்று
பொருள். உண்மையில் பிராணன் அமிர்தமே.

அந்த அமிர்தமாகிய பிராணசக்தி இல் லா
விட்டால் உடல் நிலைக்காது.
16 மாத்திரை காலம் பிராணனை இழு த்து 64
மாத்திரை காலம் அதை உடலினுள் வைத்து 32
மாத்திரை காலம் தக்க வைத்த பிரா ணனை
வெளியிட வேண்டும் என்பது பொதுவிதி.

இதுவும் சற்று கடுமையே. தொடக்கத்தில்
பயிற்சியின் போது மூச்சு திணறலும், பயமும்
வரலாம். நாளடைவில் பயிற் சியினால்
சரியாகிவிடும். உடலில் பிராணனை தக்க
வைத்து பின்பு வெளியிடும் செயலுக்கு
இரேசகம் என்று பெயர். இரே சகம் என் றால்
வெற்றிட மாக்குதல் என்று பொருள்.

பிராணன் என்ற அமிர்தம் :-
******************************

அமிர்தமான பிராணன் ரத்த ஓட்டத்தில் கலந்து
தன்னு டைய பணி களை செய்து
மாசுக்களோடு வெளியாகிறது. அதாவது நாம்
வெளி விடும் மூச் சில் கரியமில வாயு
இருக்கிறது என்பார்கள். இது தான் அந்த நச்சு.

அதாவது உடலில் இருக்கும் கழிவுகள்
எல்லாம் இந்த மூச்சுக் காற் றின் வழியாக
கரியமில வாயுவாக வெளியேறுகிறது.

மிகச்சரியான பிராணயாம பயிற்சி முறை
களால் உடலில் துளிய ளவு கூட நச்சுக்கள்
இன்றி ஆரோக் கியமான நிலையில் வைத்து க்
கொள்ள முடியும். உடல் முழுவதும்
அமிர்தமாகிய தூ ய காற்றை நிரப்பி உடலை
சிறந்த ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள
முடி யும்.

சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி :-
********************************

ஆராய்ச்சி ரீதியாக ஒரு நிமிடத்திற்கு 18
முறையென ஒரு நாளை க்கு 25,920
சுவாசங்களை சுவாசிக்கின்றோம். அது
இயற்கையிலா ன சுவாசம் என்றாலும்,
சுவாசத்தை பல ப்படுத்த வைகிருதம் என்ற
சுவாசப் பயிற்சியை சிறுக,சிறுக மேம்படுத்த
வே ண்டும். வைகிரு தம் என்ற சுவாசப் பயி
ற்சியை சுகப்பிராணயாமம், சமவிருத்த
பிராணயாமம், விவாகபிராணயாமம், மத்யம
பிராணயாமம், ஆத் யபிராண யாமம், மகத்யோக
பிராணயாமம் என்று பல வகையாக
பிரிக்கலாம்.

ஆனால் இந்த பிராணயாமங்களின் அடிப் படை
என்பது நாடி சுத்தி என்றழைக் கப்படும்
சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது,
இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை
உள்ளிலுத்து பின்பு காற்றை அடக் காமல்
வலப்புற நாசி யின் வழியே காற்றை
வெளியேற்ற வேண்டு ம். அதன்பின்பு வலப்
புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்
றை அடக்காமல் இடப் புற நாசி வழியே
காற்றை வெளியிட வேண் டும். இவ்வாறாக
மாறி மாறி செய்வதால் சுவாசம்
சுத்தமடையும்.

இச்செயலின் காலத்தில் அதிக மாக
கோபப்படுதல், வேகமடைதல் போன்ற
உணர்ச்சிகளு க்கு ஆளாக கூடாது. நிதானமும்,
அமைதியும் வேண்டும். காலை வேளையே
இந்த பயிற்சிக்கு சரியான தாகும். குளிர்ந்த
நீரைப் பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சி
யை மேற்கொள்ள வேண் டும். இந்த
பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை,
உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று
நேரங் களிலும் இந்த பயிற்சியை நிதானமாக
செய்ய வேண்டும். இப்ப டியே தொடர்ந்து ஒரு
மாதம் செய்தால் நாடி சுத்தமடையும்.

இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம்.
காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள்
கலந்திருக்கின்றன. இவை நாம் சுவா சிக்கும்
போது சுவாசத்தின் வழியாக உட லுக்குள்
சென்று உடலை நோய் வாய்ப் படுத்துகின்றன.

இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம்
என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த
விஷத்தை முறி யடிக்க வாசுகி என்னும்
வாசிக்கலை முக்கியமானதாகிறது. மூச்சுக்
கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள்
எல்லாம் முறிக்கப் பட்டு உடலுக்குள் தூய
பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூய
காற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும்
பரிசுத்த தன்மை யுடன் விளங்குவன வாக
அமைகின்றன என்கிறார்கள்.

" மூலாதாரம்
கேளப்பா விபரமென்ன மூலாதாரங்
கிருபையுடன் கண்டுகொள்ள வகையைக் கேளு
காலப்பா தோன்றி நின்ற மூலாதாரம்
கருணையுடன் சொல்லுகிறேன் அண்டம் போலாம்
மேலப்பா அண்டமதிற் சூழ்ந்து நின்ற
விசையான இதழதுதான் நாலுமாச்சு
சூளப்பா நிறமதுதான் மாணிக்கம் போல்
சுகமாக நின்றுதடா மூலம் பாரே"

Thursday, April 21, 2016

இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும். 
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். 
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர்  சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். 
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும். 
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். 
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும். 
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக். 
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். 
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும்,  மூலவரின் தரிசனம் கிட்டும்போது,  அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி. 
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..

Sunday, April 17, 2016

உயிரை அதன் பயணத்தில் முதன் முதலில் முடிக்கிவிட்டது யார்?

புலன்கள்                                                             =======
🤔மனத்தை மிகத் தொலைவில் அலையவிட்டவன் யார்? 
🤔உயிரை அதன் பயணத்தில் முதன் முதலில் முடிக்கிவிட்டது யார்?
🤔யாருடைய திருவுளத்தால் நாம் இவ்வார்த்தைகளை இயம்புகின்றோம்?
🤔நம் கண்களையும் காதுகளையும் இயக்குகின்ற அந்தப் பரம்பொருள் யாது? 

அதுவே செவியின் செவி, மனத்தின் மனம், வார்த்தைகளின் வார்த்தை, உயிரின் உயிர், கண்ணின் கண், ஆத்மாவைப் பிரித்தறிந் தோராய் பொறிகளும் மனமும் தாம் 

அது என்று கொள்ளும் பொய்யான கொள்கையை விடுத்து, ஆத்மாவே பிரம்மன் என அறிந்தோராய் - இவ்வுலகத்தைத துறந்த ஞானியர் அமரத்துவம் எய்துகின்றனர். 
எதனை வார்த்தைகளால் பேசமுடியாதோ, ஆனால் எதனால் வார்த்தைகளை பேசப் படுகின்றனவோ அதுவே பிரம்மன் என்றறிக.  இவ்வுலகத்தாரால் இங்கே எது 

தொழுது வழிப்படப்படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

எதனை மனத்தால் நினைக்க இயலாதோ, ஆனால் எதனால் மனம் நினைக்கின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. 
இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது வழிப்படப் 

படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

எதனை கண்ணால் பார்க்க முடியாதோ ஆனால், எதனால் கண்பார்கின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது வழிப்படப் 

படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

எதனை செவியால் கேட்க இயலாதோ, ஆனால் எதனால் செவி கேட்கின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது வழிப்படப் 

படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

எதனை மூச்சால் உள்ளிழுக்க முடியாததோ, ஆனால் எதனால் மூச்சு உள்ளிழுக்கப்படுகின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது 

வழிப்படப் படுகின்றதோ அது பிரம்மன் இல்லை. 

பேரின்பத்திற்கான பாதை ஆங்குண்டு பொறிகளால் அனுபவிக்கும் இன்பத்துக்கான பாதையும் உண்டு. இரண்டும் ஆத்மாவைக் கவர்ந்திழுகின்றன.  முன்னதைப் 

பின்பற்றுவோன் நன்மையை எய்துகிறான்.  ஆனால் பொறிகளின் இன்பத்தைப் பின்தொடர்வோன் இறுதிப் பயனை எய்துவதில்லை.

இரண்டு பாதைகளும் மனிதனுக்கு முன்னர் இருப்பனவே.  அவைகளைப் பற்றி நன்கு சிந்தனை செய்து ஆராய்ந்து, பேரின்பத்துக்கான பாதையை, ஞானி 

தேர்ந்தெடுக்கின்றான்.  மூடனோ பொறிகளின் இன்பத்துக்கான பாதையில் போகிறான்.   

Saturday, September 19, 2015

Harivarasanam lyrics-bakthi paadal varigal / சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா



மூலம் & நன்றி : http://tamil-paadal-varigal.blogspot.in/2009/03/harivarasanam-lyrics-bakthi-paadal.html



ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------
மூலம் & நன்றி : http://maduraiyampathi.blogspot.in/2007/12/blog-post.html

விளக்கம் :


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே



மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நித்ய நர்த்தனம் புரிபவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும்
தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,
தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படுபவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே


மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான
ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன். 
--------------------------------------------------------------------------------------------------------------------


 குறிப்பு :இதில் உள்ள விளக்கம் மற்றும் பாடல் வரிகள் எழுதிவர்கள் வேறு. அவர்கள் தள முகவரி முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எனக்கான சேமிப்பு தளம் ஆகும்.

இதில் உள்ள தகவல்களுக்கு அதை எழுதியவர்களே உரிமை உடையவர்கள்.


நண்பர்களே!!! உங்கள் சந்தேகங்களை மின்னஞ்சல் முகவரி அல்லது சமூக வலைதளத்தின் முகவரியுடன் பதிவு செய்யுங்கள் ....

Thursday, June 25, 2015

கோவில் கருவறையின் தேவ ரகசியம்


மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது.இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது.இதை மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் என்றும் சொல்வார்கள்.நமது உடல் பிரமாண்டமாக இருந்தாலும், தலை சிறியதாகத்தான் இருக்கும். அது மாதிரிதான், ஆலயங்கள் எத்தனை பெரிதாக இருந்தாலும் கருவறை சிறியதாகவே இருக்கும். இதன் பின்னணியில் சூட்சமங்களும், தேவ ரகசியமும் டங்கியுள்ளன.வாஸ்து கணக்கு பிரகாரம், நீள, அகல, உயரங்களை மிகத் துல்லியமாக கணக்கிட்டு ஆலயங்களை உருவாக்கிய நம் முன்னோர்கள்,பிரபஞ்ச சக்திகளை கிரகிக்கும் பகுதியாக கருவறையை அமைத்தனர்.பிரபஞ்சத்தில் உள்ள கதிர்கள் எல்லாம் ஒரு வகை மின்னூட்டம் பெற்ற துகள்களாகும். இந்த அலைகள் கோவில் கருவறை விமானம் மீதுள்ள கலசங்கள் மூலம் கருவறைக்குள் இருக்கும் மூலவர் மீது பாயும்.பிறகு அங்கிருந்து அந்த அலைகள் ஆலயம் முழுக்க விரவிபரவும். எனவேதான் ஆலயங்களுக்கு செல்லும்போது நமது ஆற்றல் அதிகரிக்கிறது.

இதற்காகவே நம் முன்னோர்கள் கருவறை அமைப்பதில் மட்டும் அளவு கடந்த நுட்பத்தை கடைபிடித்தனர்.எல்லா ஆலயங்களிலும் கருவறையானது, வாசல் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்டதாக இருக்கும். கருவறை அமைப்பை 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை

1. அதிஷ்டானம்,
2. பாதம்,
3. மஞ்சம்,
4. கண்டம்,
5. பண்டிகை,
6. ஸ்தூபி

எனப்படும். இதில் மூலவர் சிலை நிறுவப்படும்
பகுதியை அதிஷ்டானம் என்பார்கள். பீடம் என்றும் சொல்வதுண்டு.
கருவறையின் வெளிப்புறச்சுவரை கோஷ்டம் என்பார்கள். அவற்றில் பல்வேறு கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருக்கும்.ஒரு கோவில் எந்த மூர்த்திக்கு உரியதோ, அந்த மூர்த்தியை அங்கு பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.

அது மட்டுமின்றி அந்த கருவறை எத்தனை ஆண்டுகளைக் கடந்தாலும் இறை அருளை அள்ளித்தரும் பொக்கிஷமாக இருக்கவும் வழி வகுத்திருந்தார்கள்.
இந்த நடைமுறை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஆகம வழிபாட்டு முறைகளுக்கும் முன்பே தோன்றி விட்டது.

அந்த காலக் கட்டத்தில் நாட்டை ஆண்ட மன்னர்கள், தங்களது அரண்மனையை விட அருள் அலை தரும் கோவில்கள் எப்போதும் உறுதியாக நின்று நிலைப் பெற்று திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் கற்களால் ஆன கருவறையைக் கட்டினார்கள். அவர்கள்பெருங்கோவில், மாடக்கோவில், கரக்கோவில், ஞாழற் கோவில், கொகுடிக் கோவில், இளங்கோவில், மணிக்கோவில், ஆலக்கோவில் என்று 8 வகைக் கோவில்களைக் கட்டினார்கள்.ஆனால் கருவறை பகுதி சதுரம், வட்டம், முக்கோணம் எனும் 3 வித அமைப்புகளில் அமைக்கப்பட்டன.

 இதில் சதுர அமைப்பு தேவ உலகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் மண்ணுலகத்துடனும் தொடர்புடையதாக கருதப்படுகின்றன.
மிழ்நாட்டில் முக்கோண அமைப்புடன் ஆலய கருவறை அமைப்பதில்லை. வட்ட வடிவ கருவறைகளை புத்த ஸ்தூபிகளிலும் பள்ளிப்படை கோயில்களிலும் மட்டுமே காணமுடியும்.என்றாலும் மதுரை அழகர்கோவிலில் உள்ள ஆலயக் கருவறை வட்ட வடிவில் இருப்பது ஆச்சரியமானது.மற்றபடி தமிழக ஆலயங்களில் கருவறை சமசதுர வடிவில்தான் இருக்கும். கருவறை சுற்றுப்பகுதி ஆலயத்துக்கு ஆலயம் மாறுபடும்.தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் கருவறை வெளிப்பகுதி ‘‘கஜப்ருஷ்டம்’’ வடிவில் இருக்கும்.கஜம் என்றால் யானை,ப்ருஷ்டம் என்றால் பின்பகுதி என்று பொருள். ஆக கருவறை வெளிப்புற சுவர் யானையின் பின் பகுதி போன்ற வடிவில் இருக்கும் என்று அர்த்தம்.இத்தகைய அமைப்பை ‘‘தூங்கானை மாடக்கோவில்’’ என்பார்கள். 

அதாவது ஒரு யானை முன்னங்கால்களை முன்புறம் நீட்டியும்,பின்னங்கால்களை பின்புறம் மடித்தும் படுத்திருப்பதைப் போன்று காணப்படும்.இத்தகைய கருவறையை நம் முன்னோர்கள் சாதாரணமாக அமைத்து விடவில்லை.கோவில் கட்ட தேர்வு செய்யப்படும் இடத்தில் தானியங்களை விதைப்பார்கள். அந்த தானியங்கள் மூன்று நாட்களில் முளைத்து விட்டால் உத்தமமான இடம். 5 நாட்களில் முளைத்தால் மத்திமம். 5 நாட்களுக்கு பிறகு அதமம்.மத்திமம், அதமமான இடங்களில் கருவறை கட்ட மாட்டார்கள். உத்தமமான இடத்தில் மட்டுமே கருவறையை அமைப்பார்கள்.

இது பிரபஞ்ச சக்திகளை ஒன்று திரட்டி தரும் தலமாக மாறும் என்று நம் மூதாதையர்கள் கணித்துதான் கோவில்களையும் கருவறைகளையும் கட்டினார்கள்.கருவறைக்குள் வைரம், வைடூரியம், தகடுகள், கருங்கற்கள், சுட்ட கற்கள், ஆற்று மணல் போன்றவற்றை போட்டு நிரப்பும் வழக்கமும் இருந்தது.சுண்ணாம்பு, கடுக்காய், தானிக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து அரைத்து பூசி கருவறையை உருவாக்குவதை
கர்ப்பக கிரக லட்சணம் என்றனர்.கர்ப்பக்கிரக சதுர அளவு 1 தண்டம் எனப்படும். 


இதன் அடிப்படையில்தான் ஆலயத்தின் மற்ற பகுதி அமைப்புகள் இருக்கும்.உள்பிரகாரம் ஒரு தண்ட அளவு விஸ்தாரத்துடனும், இரண்டாம் பிரகாரம் இரண்டு தண்ட விஸ்தாரத்துடனும், மூன்றாம் பிரகாரம் 4 தண்ட விஸ்தார அளவுடனும், நான்காம் பிரகாரம் 7 தண்ட விஸ்தார அளவுடனும் இருத்தல் வேண்டும்.இப்படி நம் முன்னோர்கள் கருவறையை பார்த்து, பார்த்து பரிசோதித்து கட்டினார்கள். சங்க காலத்தில் கருவறையை நம் முன்னோர்கள் திருவுண்ணாழிகை என்றழைத்தனர்.


கருவறை வலுவாக இருக்க வேண்டும் என்பதிலும் நம் முன்னோர்கள் மிகவும் கவனம் செலுத்தினார்கள். தேப்பெருமா நல்லூரில் உள்ள சிவாலய கருவறை தேன் கலந்த சுண்ணாம்பால் கட்டப்பட்டது.பெரும்பாலான கருவறைகள் இப்படித் தான் கட்டப்பட்டுள்ளன.அது போல கருவறை வடிவமைப்பிலும் மிகுந்த நுட்பம் கடைபிடிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் ஆலய கருவறை இதயம் போன்றது.வேலூர் அருகே விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் ஆலய கருவறை ஓங்கார வடிவத்துடன் இருக்கிறது.


கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலய கருவறை அமைப்பு ஆச்சரியப்படத்தக்கது. சந்திரகாந்த கல்லால் உருவான இந்த கருவறை வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்கும்.இப்படி பல சூட்சமங்கள் கொண்ட கருவறையை நமது முன்னோர்கள் சற்று இருட்டாக வைத்தனர்.அதிலும் ஒரு அறிவியல் பின்னணி உள்ளது.கருவறை விமான கலசம் மூலம் சூரிய கதிர்களின் அலை, மூலவர் சிலைக்கு கடத்தப்படும். அதே சமயம் சிலைக்கு அடியில் உள்ள
யந்திரம் பூமிக்கு அடியில் இருந்து கிடைக்கும் ஆற்றல்களை மூலவர் சிலைக்கு கடத்தும்.இதனால் கருவறையில் இறை ஆற்றல்கள் அனைத்தும் ஒன்று திரண்டு நிரம்பியிருக்கும்.கருவறை சற்று இருட்டாக இருந்தால்தான் அந்த இறை ஆற்றல்கள் ஆலயத்தின் மற்ற பகுதிகளுக்குப் பரவும்.இந்த விஞ்ஞான உண்மையை நம் முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் அவர்கள் ஆலய கருவறையை சற்று இருளாக இருக்கும்படி செய்தனர். 


அது மட்டுமின்றி அந்த இறை ஆற்றல்களைப் பெற தினமும் ஆலயங்களுக்கு செல்ல வற்புறுத்தினார்கள்.ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் கருவறையின் ஆற்றலையும் அருமையையும் புரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். நாம் வீட்டில் வழிபட்டால் 10 சதவீத ஆற்றலே கிடைக்கும். கோவில் பிரகாரத்தில் வழிபட்டால் 100 சதவீத ஆற்றல் பெறலாம்.குளத்தில் வழிபட்டால் 1000 மடங்கு பலனும், ஆற்றில் வழிபட்டால் லட்சம் பங்கு பலனும், அருவிக்கரை பகுதிகளில் வழிபட்டால் 1 கோடி பங்கு பலனும், கடற்கரையில் வழிபட்டால் 2 கோடி பங்கு பலனும், ஜீவசமாதிகளில் வழிபட்டால் 10 கோடி பங்கு பலனும் கிடைக்குமாம்.ஆனால் ஆலய கருவறை முன்பு நாம் வழிபாடு செய்தால் பலநூறு கோடி அளவுக்கு ஆற்றல்களை பெற முடியுமாம்.இதில் இருந்தே நாம் கருவறை முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம்.எல்லா இடங்களிலும் காந்த அலைகள் இருந்தாலும் கருவறையில்தான் அவை நமக்கு ஆற்றல் தரும் சக்தியாக மாறுகிறது என்பதையாராலும் மறுக்க முடியாது.

இதை கருத்தில் கொண்டே கருவறை எல்லா பக்கமும் மூடப்பட்டுள்ளது.கருவறையில் ஒரே ஒரு விளக்கு தொங்க விட்டிருப்பார்கள். அல்லது விக்கிரகத்துக்கு பின்னால் ஒரு செயற்கை ஒளி வட்டத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். இவை தான் கருவறையில் உள்ள இறை ஆற்றல்களை வெளிப்பக்கத்துக்கு எகிற செய்கிறது.தினம், தினம் இந்த இறை ஆற்றல்கள் திரண்டு வெளி வருகிறது. அதனால்தான் கருவறையில் பால், பஞ்சாமிர்தம், தயிர், சந்தனம்,குங்குமம், விபூதி, எண்ணை என எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தாலும் அவை நாற்றத்தை ஏற்படுத்துவதில்லை.
அதற்கு பதில் கருவறையில் வைக்கப்படும் தண்ணீர் தீர்த்தமாக மாறுகிறது.



கருவறை நைவேத்தியங்கள் மகத்துவம் பொருந்தியமருந்தாக மாறுவதற்கு இறை ஆற்றல்களே காரணமாகும்.கருவறையில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் போதும், நைவேத்தியம் படைக்கும்போதும் திரை போட்டு மூடி விடுவார்கள்.தீபாராதனை காட்டும்போது திரையை விலக்குவார்கள். இதிலும் விஞ்ஞான தத்துவமே பின்புலமாக உள்ளது.கருவறையை திரை போட்டு மூடி இருக்கும்போது இறை ஆற்றல்கள் தேங்கிநிற்கும். 

திரை விலக்கப்பட்டு தீபம் காட்டப்பட்டதும், அந்தஆற்றல்கள் அப்படியே திரண்டு வந்து வெளியில் இரு பக்கமும் வரிசையில் நிற்பவர்கள் மீது அருள் வெள்ளமாக பாயும்.இந்த இறை ஆற்றல்கள், அலைகள் நமது மூளையை சுத்தப்படுத்தி நம்மை புத்துணர்ச்சி பெறச் செய்யும்.இதை கருத்தில் கொண்டுதான் சித்த சுவாதீனம் அடைந்தவர்களை கோவில் வளாகத்தில் கட்டி வைக்கும் வழக்கம் ஏற்பட்டது.


கோவிலில் தயாரிக்கப்படும் நைவேத்தியங்கள் சுவைமிக்கதாக மாறுவதற்கும், அபிஷேக நீர் நமது உடம்பில்பட்டதும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதற்கும் கருவறையில் தோன்றி ஆலயம் முழுவதும் பரவும் காந்த அலைகளே காரணமாகும்.கருவறையில் உருவாகும் சக்தியானது இடமிருந்து வலமாக சுற்றுப்பாதையில் சுற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஆனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கண்டுபிடித்து கருவறையை இடமிருந்து வலமாக நம்மை சுற்ற வைத்து விட்டனர்.

ஆண்கள் மேல் சட்டை அணியாமல் சுற்றினால் சக்தி அலைகள் நேரடியாக உடலுக்குள் புகுந்து நல்லது செய்யும்.பொதுவாக கருவறை மூலவர் மூலம் ஆலயம் முழுவதும் காந்த சக்தி அலைகள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மிக அதிகமாக பரவும்.எனவே பிரம்ம முகூர்த்தத்தில் சென்று முதல் ஆராதனையின் போது வழிபட்டால் அதிக நன்மை பெறலாம்.


இந்த காந்த அலைகள்தான் கோவிலின் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள், கொடி மரம், பலி பீடம் போன்றவற்றை கருவறையுடன்‘‘வயர்லஸ்’’ தொடர்பு போல இணைக்கின்றன.

எனவே ‘‘பாசிட்டிவ் எனர்ஜி’’ பெற கருவறை வழிபாடு மிக, மிக முக்கியமானது.வெளியே வெயில் உள்ளே குளிர்ச்சி கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. 

இதன் கர்ப்பகிரகம் சந்திரகாந்தகல்லால் ஆனது.இது தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப கர்ப்பகிரகத்தை மாற்றும். 

அதாவது வெளியே வெப்பமாக இருக்கும் போது கர்ப்பகிரகம் குளிர்ச்சியாக இருக்கும். வெளியே கடும் குளிராக இருந்தால் கர்ப்பகிரகத்தின் உள்பகுதி வெப்பமாக மாறிவிடும்

Saturday, June 6, 2015

பழனி மலை பற்றிய சிறப்பு தகவல்கள்

* பழனி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இரண்டு பெரு நகரங்களான மதுரை மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து சமதூரத்தில் உள்ளது இக்கோவில்.

*  இந்தத் தலம் பழனி என அழைக்கப்படுவதற்கு காரணம், சிவனும், பார்வதியும் தங்கள் மகன் முருகப் பெருமானை "ஞானப் பழம் நீ" என அழைத்ததால், "பழம் நீ" என வழங்கப்பெற்று, பின்னர் அதுவே "பழனி" ஆகிவிட்டது.

* தமிழ்க்கடவுளான முருகனை வழிபட கேரளாவில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள். அருகிலேயே பொள்ளாச்சி  அருகே கேரள எல்லை ஆரம்பிப்பதால் கேரளாவில் இருந்து விரதம் இருந்து அதிக அளவு வருகிறார்கள்.

*முதன் முதலில் நேமங்கோவில் குமரப்பன் என்பவர்தான் பழனிக்கு காவடி எடுக்கும் வழிபாட்டை அறிமுகப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் பழனி முருகன் கோவிலுக்கு விரதம் இருந்து காவடி தூக்கி செல்லும் பாதயாத்திரை முறையை ஆரம்பித்து இன்று வரை சிறப்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்திவருவது காரைக்குடி  நகரத்தார்கள்தான் என்பது மறுக்க முடியாதது.

* இவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த முறையால் இன்று தென் தமிழகம் முழுவதும் பழனிக்கு காவடி எடுத்து சென்று வணங்கும்  பக்தர்களை அதிகப்படுத்தியது.

* பாரம்பரியமிக்க, தெய்வீகமான இந்த பழநி பாதயாத்திரையை முருக பக்தர்கள் யாரும், சாதாரணமான விசயமாக, விளையாட்டாக எண்ணிவிடாமல் உண்மையான பக்தியோடு, உண்மையான கட்டுப்பாட்டோடு மாலையணிந்து, விரதமிருந்து கந்தனை உள்ளன்போடு நினைத்து பழநிக்கு பாதயாத்திரை வந்தால், எம்பெருமான் முருகன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுடனேயே இருந்து உங்களுக்கு நல்வழி காட்டுவான் என்பது நம்பிக்கை.

* இங்குள்ள முருகனது சிலை 18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில், குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

* முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

* பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திரு ஆவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.

*  பழனித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகலிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழனி மாமலை மீதினிலேயுறை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழனி என்கிறார்.

* பழனி மலைக்கு எதிரில் இடும்பன் மலை என்று அழைக்கப்படும் சக்திகிரி காணப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு சோலைகள் நிறைந்த அழகிய கிரிப் பிரகாரமும், இந்த பிரகாரத்தின் திருப்பங்களில் பெரிய மயிலின் உருவச் சிலைகளைக் கொண்ட மண்டபங்களும் காணப்படுகின்றன. அதனால், இந்த மலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.

* பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலைச் சார்ந்த 38 - உப கோயில்கள் அமைந்துள்ளது. இக்கோயில்களில் கீழ்கண்ட கோயில்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1. அருள்மிகு திரு ஆவினன் குடி கோயில்
2. அருள்மிகு பெரிய ஆவுடையார் கோயில்
3. அருள்மிகு பெரிய நாயகி அம்மன் கோயில்
4. அருள்மிகு குழந்தை வேலப்பர் கோயில் - ஒட்டன்சத்திரம்
5. அருள்மிகு குறிஞ்சியாண்டவர் கோயில் - கொடைக்கானல்
6. அருள்மிகு இடும்பன் மலைக் கோயில் - பழனி

* 18 சித்தர்களில் ஒருவரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி பழனி மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* திருவண்ணாமலை போன்றே எண்ணற்ற மகான்கள் இந்த பழனியில் வாழ்ந்திருக்கின்றனர். தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.

Wednesday, June 3, 2015

என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?



வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது. இதை தவிர்த்து சில சமஸ்கிருத வாசகங்களுக்கு உள்ள சக்தியை கண்டறிந்த நமது முன்னோர்கள் அவற்றை மந்திரமாக உச்சாடனம் செய்து முக்தி அடைந்தார்கள். இது போன்ற சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கிடையாது. மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. மந்திரத்தின் சக்தியே முக்கியமானது. மந்திரம் பல வகையாக கையாளப்படுகிறது.


பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம்.பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது. 

முன்பு சொன்னது போல பீஜ மந்திரத்திற்கு அர்த்தம் தேவையில்லை. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.

தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.

பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். மந்திரத்தை நாமே தேர்ந்தெடுத்து ஜெபம் செய்யலாம் என பலர் கூறுகிறார்கள். ஆனால் சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு பல காரணம் உண்டு.


மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது எனக் கூறலாம்.

மந்திரத்தை தவறாக உச்சரிக்க முடியுமா? என உங்களுக்கு சந்தேகம் வரலாம்.

இதற்கு கும்பகர்ணனின் கதையை உதாரணமாக கூறலாம். தனது தவ வலிமையால் பிரம்மனிடம் இறப்பற்ற நிலையை கேட்க கடுமையான தவம் இருந்தான், கும்பகர்ணன். இராவணனின் சகோதரன் இந்த வரத்தைப் பெற்றால் அனைத்து உலகத்திலும் துன்பத்தை விளைவிப்பான் என தேவர்கள் அச்சம் கொண்டனர்

பிரம்மன் கும்பகர்ணன் முன் தோன்றி "உனக்கு என்ன வரம் வேண்டும் ?" என கேட்டவுடன் "நித்ய தேவத்துவம் " என்று கேட்பதற்கு பதிலாக "நித்ர தேவத்துவம்" என தவறுதலாக கூறினான். இது போன்று தவறுதலாக உச்சரித்ததால் இறவா வரம் பெறுவதற்கு பதிலாக தூங்கும் வரத்தைப் பெற்றான். சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.


மேலும் ஒருவரின் தன்மையைப் பொறுத்தும் மந்திரம் வேறுபடும். இதற்கு அதிகாரத்துவம் என்பார்கள். குரு ஒருவனுக்கு இந்த மந்திரம் முக்தி அளிக்குமா என பார்த்து, இதற்கு சரியான அதிகாரியா என பார்த்து தீட்சை அளிப்பார்

Saturday, May 9, 2015

கானோபஸ் எனப்படும் அகத்தியர் நட்சத்திரம்.

நட்சத்திர அதிசயங்கள்: 
அகஸ்திய நட்சத்திரம் பூமியை நெருங்கி வரும் போதெல்லாம் கடல் நீர் சற்று வற்றுகிறது என அறிவியல் கூறுகிறது. அது உதிக்கும் போது அகத்திப் பூ மலர்கிறது. எண்ணற்ற அதிசயங்களைக் கொண்ட அகஸ்திய நட்சத்திரத்தைப் பார்ப்போம்!
கானோபஸ் என மேலை நாட்டினரால் அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரம் அபூர்வ ஆற்றல்களைக் கொண்டு வானில் ஜொலிக்கும் ஒன்று. இது 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. கற்பனைக்கு அப்பாற்பட்ட தூரம் இது!இதன் மாக்னிட்யூட் 0.86,அகத்தியர் உள்ள ஆர்கோ நட்சத்திரத் தொகுதியில் மொத்தம் 21 நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் இந்தத் தொகுதி கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும் கூட அகத்தியர் மட்டும் தனித்து சூரியனைப் போல 13600 மடங்கு பிரகாசத்துடன் ஜொலிக்கிறார்.எல்லையற்ற தூரத்தின் காரணமாக இவரது பிரகாசத்தை நம்மால் உணர முடியவில்லை!இவருக்கு அருகில் உள்ள டோராடஸ் நட்சத்திரமே இவரது மனைவியான லோபாமுத்ரை என்பர் அறிஞர்.
27 நட்சத்திரங்கள் என்ற வரிசையில் சேராவிட்டாலும் கூட தன் தவத்தின் வலிமையால் தனியொரு இடத்தைப் பிடித்தவர் அகத்தியர்!சூரியன் சிம்ம ராசியிலிருந்து மறையும் போது கும்ப ராசி உதயமாகிறது. கும்ப ராசி உதிக்கும் அதே சமயம் அகத்திய நட்சத்திரமும் உதிக்கும். இவருக்கு கும்ப முனி என்ற பெயர் பொருத்தம் தானே!
***********************************************************
கடல் நீரைக் குடித்த கதை
அகத்தியர் கடல் நீரைக் குடித்த கதையை இன்றைய அறிவியல் மிகவும் பொருத்தமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ள சிறிது அடிப்படை வானவியல் அறிவு வேண்டும். சூரியன் மேற்கே மறைந்தவுடன் ஒரு நட்சத்திரம் கிழக்கே உதிப்பதை Acronycal rising அல்லது தினசரி உதயம் என்கிறோம். சூரியனின் அருகில் ஒரு நட்சத்திரம் வரும் போது சூரியனின் ஒளியால் அந்த நட்சத்திரத்தின் பிரகாசம் மங்கி அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறது. சூரியனை விட்டுத் தொலைதூரம் சென்றவுடன் மீண்டும் பிரகாசம் பெற்று நம் கண்களுக்குத் தெரிகிறது. இப்படி ஒரு நட்சத்திரம் சூரியனின் அருகில் வந்ததால் ஒளி மங்கி நம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து, பிறகு தள்ளிச் சென்றவுடன் ஒளி பெற்று மீண்டும் நம் கண்ணுக்கு முதலில் தெரியும் தினத்தை அல்லது அந்த நட்சத்திரத்தின் உதயத்தை Heliacal rising என்கிறோம்.இந்த முதல் உதயத்தை ஒட்டியே நம் முன்னோர்கள் அந்தந்த நட்சத்திரத்திற்கும் அதற்கான தெய்வங்களுக்கும் விழாவை ஏற்படுத்தினர்.ஒவ்வொரு நட்சத்திர உதயத்தையும் அப்போது ஏற்படுத்தப்பட்டு நடந்து வரும் விழாவையும் உற்று நோக்கினால் நமது முன்னோரின் கூரிய அறிவுத் திறனும் அவர்கள் வகுத்த நெறிமுறைகளின் அர்த்தமும் விழாவின் மகிமையும் எளிதில் புரியும்.
அகத்திய நட்சத்திரத்தின் வருடாந்திர உதயம் உஜ்ஜயினியில் புரட்டாசி மாதம் 23ம் தேதியன்று ஏற்படுகிறது (பண்டித ரகுநந்தனர் இதை புரட்டாசி 17ம் தேதி என்று குறிப்பிடுகிறார்) சூரியன் ரோஹிணியில் செல்லும் போது அகத்தியர் மறைகிறார். பின்னர் சூரியன் ஹஸ்தத்திற்கு வரும் போது பிரகாசமாகி மீண்டும் நம் கண்களுக்குத் தெரிகிறார்,அதாவது சுமார் நான்கு மாத காலம் சூரிய ஒளியால் அகத்தியர் நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்.அகத்தியர் தோன்றியவுடன் மழைக்காலமும் சரியாக முடிகிறது.ஆகவே தான் மழைக்காலம் முடிந்தவுடன் தோன்றும் அகத்தியர் மழை நீர் சேரும் கடலைக் குடித்து விட்டார் என்று கூறப்பட்டது. வங்காளத்தில் இன்றும் கூட ஆகஸ்ட் -செப்டம்பரில் அகத்தியருக்கு இந்தப் பருவ மாறுதலை ஒட்டி விழா நடைபெறுகிறது. அகத்தியரின் வருடாந்திர உதயம் பற்றி வானவியல் நிபுணர் ஜே.பெண்ட்லி விரிவாக எழுதியுள்ளார்!
நவீன அறிவியல் ஆராய்ச்சியின் படி அதிசயிக்கத் தக்க உண்மை இப்போது வெளிப்படுகிறது. எப்போதெல்லாம் அகத்தியர் பூமியை நெருங்கி வருகிறாரோ அப்போதெல்லாம் கடல் நீர் ஆவியாகி சிறிது வற்றி விடுகிறதாம்!
அகத்தியர் பூமியை சமன் செய்த புராணக் கதை
இனி அகத்தியர் பூமியைச் சமன் செய்த கதைக்கு வருவோம்.உஜ்ஜயினி வழியாகவே பூமியின் முதல் தீர்க்க ரேகை செல்கிறது!. இந்த ரேகையை வைத்தே அனைத்துக் காலக் கணக்கீடுகளும் செய்யப்படுகின்றன. லாடிட்யூட் எனப்படும் அட்சய ரேகையின் படி அகத்தியர் இருக்கும் இடம் 80 டிகிரி தெற்கு.ஆகவே அட்சய ரேகையின் படி 10 டிகிரி வடக்கிற்கு மேல் இது தெரியாது.வடக்கே உள்ள உஜ்ஜயினி 24 டிகிரி தெற்கு என்ற நிலையில் உள்ள நகரம்.
வானவியல் நிபுணரான வராஹமிஹிரர் காலத்தில் மேஷப் புள்ளி அசுவனி நட்சத்திரத்தில் இருந்தது. அதற்கு 14400 ஆண்டுகளுக்கு முன்னர் சித்திரை நட்சத்திரத்தில் அது இருந்தது.சித்திரை நட்சத்திரத்தில் அகத்தியர் இருக்கும் போது அதன் தென் துருவ தூரம் 14 டிகிரி ஆகும்.அப்போது அது உஜ்ஜயினியில் தெரியவில்லை.ஏராளமான நட்சத்திரங்கள் உள்ள வடக்கு வானம் மட்டும் அப்போது தெரிந்தது. இதையே தேவர்கள் கூடிய திருக்கல்யாணக் கூட்டமாக புராணம் வர்ணிக்கிறது.கி.மு.7200ம் ஆண்டு வாக்கில் அகத்தியரின் தென் துருவ தூரம் 24 டிகிரி ஆனது.அப்போது அகத்திய நட்சத்திரம் உஜ்ஜயினியில் தெரிய ஆரம்பித்தது. இதையே அகத்தியர் தெற்கே வந்து சமநிலை ஏற்படுத்தினார் என புராணம் விவரிக்கிறது.
இந்த விளக்கத்துடன் இன்னொரு விளக்கத்தையும் வானவியலோடு புராணத்தை இணைத்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் நம் முன் வைக்கின்றனர்.ஒரு காலத்தில் வடக்கே துருவ நட்சத்திரமாக விளங்கிய அபிஜித் நட்சத்திரம் அந்த அந்தஸ்தை இழந்து தெற்கே அகஸ்தியர் அந்த அந்தஸ்தைப் பெற்றார். முதலில் வடக்கே இருந்த அபிஜித்தே அகஸ்தியர் என அழைக்கப்பட்டார். பிறகு இடைவிடாத வான சுழற்சி காரணமாக தெற்கே இருந்த நட்சத்திரம் துருவ நட்சத்திரமாக அந்தஸ்தைப் பெற்றவுடன் வடக்கே இருந்த அகத்தியர் தெற்கே வந்ததாகக் கூறப்பட்டது. பதவியில் இருப்பவருக்கே அந்தஸ்து என்ற ரீதியில் இந்த வானவியல் சுழற்சியைப் பார்த்தால் எளிதில் விவரம் புரியும்.ஆதியில் அபிஜித்தைச் சேர்த்து 28 நட்சத்திரங்களை நமது வேதம் உள்ளிட்ட நூல்கள் கூறுகின்றன. தன் அந்தஸ்தை அபிஜித் இழந்தவுடன் அது நீக்கப்பட்டு 27 நட்சத்திரங்கள் என்ற எண்ணிக்கை ஆகி விட்டது. அபிஜித் நமது மானுட வாழ்க்கையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்ற போது இந்த மாறுதல் ஏற்பட்டது!
‘அக’ என்றால் மலை என்று பொருள். ‘ஸ்தி’ என்றால் அமுக்குவது என்று பொருள். பூமி என்னும் மலையை இரு துருவங்களிலும் அமுக்கியவரே அகஸ்தியர் என்பதை புராணம் விரிவாக தன் பாணியில் பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு விளக்குகிறது. வானவியல் கணிதத்தை மேலே கூறிய படி டிகிரியை வைத்து தூரத்தைச் சொன்னால் இந்தக் கட்டுரையைப் படிக்கும் பலருக்கும் கூட பல முறை படித்தால் மட்டுமே இது புரியக் கூடும் என்ற நிலையில் அகத்தியரின் வரலாறு எளிமைப் படுத்தப்பட்டு சிறந்த கதையாக ஆனது சரி தானே!
அகத்தியர் நட்சத்திரம் உதிக்கும் போது அகத்திப் பூ மலர்வதால் அந்தச் செடிக்கு அகத்திக் கீரை என நம் முன்னோர் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். பதினெட்டு சித்தர்களில் முக்கியமானவரான அகத்தியர் நந்தி தேவருடன் ஒவ்வொரு மூலிகையையும் ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களைத் தொகுத்து மனித குலம் நோயின்றி வாழ வழி வகை செய்துள்ளார்.
வானத்தை உற்று நோக்கி புராணங்களைத் தெளிவு படப் படித்து அறிவியலை அலசிப் பின்னர் கம்பனைப் படித்தால் நன்கு ரசிக்க முடியும்! கம்பன் ஆரண்ய காண்டத்தில் அகத்தியன் பற்றிக் கூறும் வாக்கியங்களான “தூய கடல் நீரை உண்டு அது துரந்தான்” என்பதை வானவியல் அறிவுடன் சேர்த்துப் படித்தால் அர்த்தம் புரிந்து மகிழலாம். அகத்தியனை இத்தோடு மட்டும் கம்பன் புகழவில்லை: தமிழ் தந்த முனிவரான அவரை “நிழல்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்” எனவும் புகழ்கிறான்.
குருமுனி, கும்பமுனி என அழைக்கப்படும் ஆசான் அகத்தீசரின் பெருமை மிகவும் உயர்ந்தது! அளவிடமுடியாதது.

கோவில்களில் அர்ச்சனை செய்வதன் முக்கியத்துவம் என்ன?

 அர்ச்சனை செய்பவரின் பெயருடன் நட்சத்திரம், கோத்திரம் இவற்றை ஏன் சொல்கிறார்கள்?

சத்குரு: சில குறிப்பிட்ட வழிகளில் தெய்வங்கள் உருவாக்கப்பட்டபோது, பெயர், நட்சத்திரம், கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வது போன்ற விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருந்தன. 

வாழ்க்கையின் நுட்பமான தாத்பரியங்களை புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட கலாச்சாரம் இது. ஆனால் அதை ஒரு தலைமுறையிலிருந்து, மற்றொரு தலைமுறைக்குக் கொண்டு செல்லும் அமைப்புகள், கடந்த ஆயிரத்து எண்ணூறு வருடங்களில், படையெடுப்புகள் மற்றும் பல காரணங்களால் மோசமாக நிலைகுலைந்துவிட்டன. 

இல்லாவிட்டால், இது மிக நுணுக்கமான ஒரு விஞ்ஞான முறையாக இருந்திருக்கும். இப்போது இவை மிகவும் தாறுமாறாக ஆகிவிட்டன. ஆசியாவை சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட விதமான மரபணு இருப்பதால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அக்காலத்தில், அனைவரும் அனைத்துக் கோவில்களுக்கும் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. 

சில கோவில்கள் மட்டும் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் கட்டப்பட்டிருக்கும். அங்கு மட்டும் அனைவரும் சென்று வந்தனர். ஆனால் குறிப்பிட்ட சில பலன்களுக்காக, பிரார்த்தனைகளுக்காக என்றால், மக்கள் அவரவர் குலதெய்வங்களின் கோவிலுக்குத்தான் சென்றனர். இன்றும் கூட அந்தப் பழக்கம் சிலகுடும்பங்களில் எஞ்சியிருக்கிறது. 

ஆனால் அந்த தெய்வங்கள் முன்போல் விஞ்ஞான முறைப்படி உருவாக்கப்படுவதில்லை. யாரோ ஒருவர் நூறு வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டாலும், இன்று அந்த உடலைத்தேடி, தோண்டி எடுத்து, அதில் ஒரு சிறு எலும்புத் துண்டு கிடைத்தாலும் அதை பரிசோதனைக்கூடத்தில் மரபணு சோதனையெல்லாம் செய்து, ‘இவர்தான் உங்கள் தாத்தா’ என்று சொல்ல முடியும். பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் இறந்த யாரோ ஒருவருடைய எஞ்சிய பாகத்தை வைத்து பரிசோதனைகள் செய்யமுடியும். 

எகிப்தில் இருக்கும் மம்மிக்களின் மரபணுவை எடுத்து பரிசோதித்து, அதை இப்போது எகிப்தின் தெருக்களில் நடந்து போய்க் கொண்டிருக்கும் யாரோ ஒருவருடைய மரபணுவுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இவர்தான் அந்த மம்மியின் வம்சாவழியில் வந்தவர் என்று சொல்ல முடியும். நவீன விஞ்ஞானம் இந்த வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கியுள்ளது. 

இதேபோலத்தான், நாமும் நம் குல தெய்வத்துடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் அனைத்தையுமே நாம் சரியாக பராமரித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். சமீபத்தில் ஹரியானாவில் காப் பஞ்சாயத்துக்களில் ‘ஒன்றுவிட்ட அண்ணன் தங்கைளுக்குள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது, அது பாவம்‘ என்று போராட்டங்கள் நடந்தது உங்களுக்குத் தெரியும். 

அவர்கள் இதையெல்லாம் புரிந்து கொண்டு போராட்டம் நடத்துகிறார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் அதை புரிந்துகொண்டு செய்திருந்தால், அவர்களுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். நீங்கள் அவர்களுடைய வழக்கங்களை உடைக்கிறீர்கள் என்று அவர்கள் போராட்டம் நடத்தினாலும், ஆயிரக்கணக்கான வருடங்களாக தங்களது வம்சாவளி அமைப்பை அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமுறை, தலைமுறையாய் தொடரும் கோத்திர முறையை குழப்பாமல் இருந்தால் புதிய தலைமுறைகள் நல்ல முறையில் உருவாகும் என்பதால் அதில் குழப்பம் ஏற்பட அவர்கள் விரும்பவில்லை. 

அது மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக குறிப்பிட்ட ஒரு சக்தியின் இழையை தொடரச்செய்ய முடியும். அப்படி இருந்தால் உங்கள் குலத்தில் இருப்பவர்கள் அனைவருமே கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் மட்டும் சென்று பிரார்த்தித்தால், அனைவரும் பலனடைவார்கள். ஏனென்றால் அனைவருமே ஒரே சக்தியின் ஒருங்கிணைப்பில் இருக்கிறீர்கள். நாளைய மருத்துவ அறிவியல் இப்படிப்பட்ட ஒரு புதுமையை நிகழ்த்தலாம். உங்கள் மரபணுவுக்கு மட்டும் செயல்படுவதைப் போன்றதொரு விஷயத்தை அவர்கள் கண்டுபிடித்தால், அதை காற்றில் பரவவிட்டால், அதே மரபணுவகை இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் அதன் நன்மைகள் உடனடியாகக் கிடைக்கும்படி செய்யலாம்.

 அதற்கு வாய்ப்பு உண்டு. ஆசியாவை சேர்ந்தவர்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட விதமான மரபணு இருப்பதால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அமெரிக்கர்களுக்கு வேறுவிதமான மரபணுக்கள் இருப்பதால், அவர்களுக்கு வேறுவிதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஆகவே நீங்கள் ஒரே ஒரு மாற்று வகை உணவை, ஆசியர்களின் உணவுமுறையில் புகுத்திவிட்டால், மக்கள் வாழும் முறைகளையே மாற்றிவிட முடியும். அமெரிக்காவில் இது நடந்திருக்கிறது. பிரட் தயாரிப்பில் குறிப்பிட்ட ஒரு பொருளை மாற்றியதன் மூலம், ஆயிரத்தித் தொள்ளாயிரத்து ஐம்பது, அறுபதுகளில் அந்த நாட்டில் நிலவி வந்த பல நோய்கள் தீர்க்கப்பட்டிருக்கின்றன. 

ஏனென்றால் அந்த மக்களெல்லாம் குறிப்பிட்ட வகையான மரபணு உடையவர்களாக இருந்ததால், அவர்களுடைய நோய்களுக்கு அதைப் பற்றிய விவரங்கள் தெரியாமலேயே பிரட் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இந்தியாவில் இன்று இருப்பதைப் போன்று அப்போது அமெரிக்காவில், நீரிழிவு நோய் மிகக் கடுமையாகப் பரவியிருந்தது. 

ஆகவே ‘டி3’ என்ற வைட்டமினை மக்களின் உணவில் சேர்த்தால், நீரிழிவு நோய் நீங்கிவிடும் என்று அவர்கள் கண்டுபிடித்தார்கள். பிரட்டை தயாரிக்கும்போது, ‘டி3 வைட்டமினை’ சேர்த்தார்கள். இன்று அமெரிக்காவில் நீரிழிவு நோய் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டது. அந்த நோய் இப்போது நம்மிடம் வந்திருக்கிறது. ஆனால் ஆசிய மரபணு உள்ளவர்களுக்கு ‘டி3 வைட்டமின்’ வேலை செய்யாது. 

நமக்கு வேறு ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே நம் கலாச்சாரத்தில் இதைப் புரிந்து கொண்டு, ‘வம்சாவழி’ என்னும் முறையை மிகவும் நேர்த்தியாக பராமரித்து வந்தார்கள். அத்தோடு தங்களுடைய சக்திநிலையின் ஆதாரத்தை நிலை நாட்டி வைத்திருந்தார்கள். கோவிலுக்குப் போகும் போது, அவர்கள் எங்கோ மேலே இருக்கும் கடவுளிடம் பேசுவதில்லை. அவர்கள் தங்களையே பதிவு செய்துகொள்கிறார்கள். 



‘இது நான், நான் இந்த வம்சாவழியைச் சேர்ந்தவன், இது என் கோத்திரம், இது என் நட்சத்திரம், இது என் குலம்‘ என்று அவர்கள் பதிவுசெய்து கொள்கின்றனர். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ‘இதுதான் என் மரபணு. எனக்கு நல்லது செய்து கொடு,’ என்று வேண்டுகிறார்கள். இது ஒரு விஞ்ஞானபூர்வமான வழி. ஆனால் ‘வம்சாவழி’ என்னும் தன்மை சரியான கண்ணோட்டத்தோடு தொடரப்படாததால், இன்று அனைத்துமே ஒன்று கலந்துவிட்டன. 

இன்று பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நீங்கள் காதலில் விழுகிறீர்கள். அவள் எந்த குலமாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள். உங்கள் விருப்பங்கள்தான் உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டன. ஆகவே இதுபோன்ற விஷயங்கள் முக்கியத்துவம் இழந்துவிட்டன. ஆனால் இவற்றையெல்லாம் சரியாக பராமரித்திருந்தால், இவையெல்லாம் ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையவையாக இருந்திருக்கும். வாழ்க்கையைப் பற்றியும், மரபணுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் அற்புதமான புரிதல்களாகவும் இருந்திருக்கும்

THANKS to

 http://tamilblog.ishafoundation.org/kovilil-archanai-seyvathu-etharkaga/

Wednesday, March 25, 2015

யோகா முத்திரைகள்:


முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம்.
சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கபதத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத்தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன
1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.
இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.
முத்திரைகளை பயிலும் முறை
1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.
2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.
3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.
4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.
5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.
6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.
முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில
1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்தை உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.
2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.
3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சலியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.
4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.
5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.
6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.
7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.
8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.
9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.
எச்சரிக்கை
1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.
2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.
11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.
12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.
நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.

-நிலா-

அருட்பிரகாச வள்ளலார் எண்ணற்ற பல சித்துகளை செய்து காட்டி

அருட்பிரகாச வள்ளலார்
=====================
19ம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஞானியான அருட்பிரகாச வள்ளலார் ஸ்ரீ ராமலிங்க அடிகள் எண்ணற்ற பல சித்துகளை செய்து காட்டியுள்ளார். இருப்பினும் அடிக்கடி அதை செய்து காட்ட அவருக்கு எள்ளளவும் நாட்டம் இருக்கவில்லை.
பாதரசத்தை உள்ளங்கையில் ஊற்றி மூடிவைத்து விட்டு திறந்தபோது அது ரசமணியாக மாறியிருந்தது.
வந்த பக்தர்களுக்கு உணவு பரிமாற (பிக்ஷாண்டர்) இறைவனை வேண்ட, பாத்திரத்தில் அன்னம் குறையாமல் வந்தது. எல்லோரும் உண்டதுபோக மீதமும் இருந்ததாம். விளக்கில் எண்ணை இல்லாதுபோக தண்ணீர் விட்டு ஏற்றியுள்ளார். தில்லைக்கு போகாமலே இந்த சித்தி வளாகத்தின் உள்ளே தர்மசாலையில் ஒரு சீலை கட்டி தொங்க விட்டு, அதில் சிதம்பர ரகசியத்தை காண்பித்தார்.
அவருக்கு திருவொற்றியூர் வடிவுடை நாயகியும் தியாகேசரும் அளவில்லா அருள் பொழிந்தனர். முன்னொரு சமயம் சென்னையில் அண்ணன் வீட்டில் இருக்கும்போது சிறுவயதில், வீட்டிற்கு தாமதமாய் ஓர் இரவில் வந்தபோது வடிவுடை அம்மானே இவர் அண்ணியாக வந்து இவருக்கு அன்னமிட்டாள். இன்னொரு சமயம் வடலூரில் மழையில் எல்லோரும் நினைந்திருக்க இவர்மேல் ஒரு சொட்டு விழவில்லை.
வடலூர் சித்தி வளாகம் உள்ளே சுவாமிகள் ஏற்றிய தீபமும் தர்மசாலையில் உணவுசாலையில் ஏற்றிய அடுப்பின் தணலும் இன்றுவரை அணையாமல் காத்து வருகின்றனர். அவர் எழுதிய அருட்பா பெரிய சைசு கணக்கு புத்தகம் முழுதும் அடித்தல் திருத்தலின்றி முத்துமுத்தாக முழுமூச்சாக எழுதியுள்ளார். அதை நோட்டுபுத்தகத்தை திறந்து கண்ணாடி பேழைக்குள் வைத்துள்ளனர். இவற்றை எல்லாம் சில ஆண்டுகளுக்குமுன் அடியேன் அவற்றை சென்று தரிசித்து பரவசப்பட்டேன்.
சென்னையை சேர்ந்த மாசிலாமணி முதலியார் என்ற புகைப்படக்காரர் முன்னொரு சமயம் படம் எடுக்க அழைக்கப்பட்டார். அவர் எட்டு முறை எடுத்தபோதும் நெகடிவ்வில் வெண்ணிற ஆடை மட்டும் பதிவானது முகம் மற்றும் கை கால்கள் தெளிவாக இருக்கவில்லை. 'பதிவாகவில்லை என்றால் இதுவே சித்த ஞானிக்கு அடையாளம்' என்பாராம்வள்ளலார்.
அவருடைய தேகமே ஒளிரூபமாய் இருந்தபடியால் அவர் உடலுக்கு நிழல் விழாது, சூரிய ஒளியோ செயற்கை ஒளியோ அவர் உடலுக்குள் ஊடுருவியது. இவரைப்பற்றி இன்னும் சொல்லிகொண்டே போகலாம். அத்தனையும் அற்புதம்.
பிறகு அவர் அருளோடு படம் எடுக்க அதற்குப்பின் திருவொற்றியூரில் உள்ள மடத்தில் இதை வைத்து வண்ண ஓவியம் தீட்டப்பட்டது. இதுதான் பிற்பாடு உபயோகத்திற்கு வந்தது. இன்றும் அதைதான் பார்க்கிறோம். முதன் முதலில் ஏடுத்த அந்த அபூர்வ கருப்பு வெள்ளை படம் இங்கே உள்ளது. அவருடைய கையொப்பமும் இங்கே கொடுத்துள்ளேன். அருட்பெருஞ் சோதியை சிந்தையில் வைத்து தியானிப்போம்.
-- எஸ். சந்திரசேகர்