Showing posts with label MEDICINES. Show all posts
Showing posts with label MEDICINES. Show all posts

Friday, July 15, 2016

'பேலியோ டயட்' (Paleo diet)

'கீட்டோஜெனிக் டயட்' (Ketogenic diet)', 'லோ கார்ப் டயட்' (Low Carb Diet), 'ஹை ஃபாட் டயட்' (High Fat Diet), 'ஹை புரொட்டீன் டயட் (High Protein diet)' என்னும் உணவுப் பழக்க முறைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா....? பரவாயில்லை. 'பேலியோ டயட்' (Paleo diet) என்பதை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். 'முன்னோரின் உணவுமுறை' என்று அழகிய தமிழில் சொல்லப்படும், 'பேலியோ' உணவுமுறையைத் தமிழ் மக்களுக்கு, திரு.செல்வன் அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதை அறிமுகப்படுத்திய திரு.செல்வன் அவர்கள், தன்னை முன்னோர்களுடன் தொடர்புபடுத்தும் ஒரு அடையாளமாகத் தன்னை 'நியாண்டர் செல்வன்' என்னும் பெயரில் வெளிப்படுத்தியிருக்கிறார். நியாண்டர் செல்வன் தமிழர்களுக்குச் செய்திருப்பதை, ஒரு மாபெரும் உதவியாகவும், சேவையாகவுமே நான் கருதுகிறேன்.

நான் லேசில் ஒருவரைப் பாராட்டிவிட மாட்டேன். ஒருவர் சொல்வதை பெரும்பாலும் உடன் நம்பிவிட மாட்டேன். ஒருவர் ஒன்றைச் சொல்லும்போது, அதை அப்போது ஏற்றுக்கொள்வதாகக் காட்டிக் கொள்வேனேயொழிய, பின்னர் அவர்கூறியதைப் பல விதங்களில் ஆராய்வேன். அப்படிப்பட்ட நான், முதன்முறையாக ஒருவரை மனதாரப் பாராட்டுவேனாகில், அது நியாண்டர் செல்வனாகத்தான் இருக்கும். இதில் முக்கியமானது, நியாண்டர் செல்வன் என்றால் யாரென்றே எனக்குத் தெரியாது என்பதுதான். முன்னர் பின்னர் அவரைப் பார்த்ததேயில்லை. அவரில் பட்ட காற்றுக்கூட என்னில் பட்டதில்லை. அப்படியிருக்க அவரை நான் ஏன் பாராட்ட வேண்டும்? காரணம் ஒன்றேயொன்றுதான். 'பேலியோ'. இதுதாண்டி அவர்பற்றி எதுவும் தெரியாதவன்.

நியாண்டர் செல்வன் தமிழர்களிடையே அறிமுகப்படுத்திய 'பேலியோ' என்னும் சொல் சிலரின் அடிவயிற்றில் பேதியைக் கரைக்கிறதோ என்ற அச்சம்தான், இன்று இதை என்னை எழுத வைத்திருக்கிறது. "அதுசரி, இதற்கு நீங்கள் ஏன் பதட்டப்பட வேண்டும்?" என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்கலாம். அதற்கும் நியாயமான காரணம் ஒன்றிருக்கிறது. பல வருடங்கள் நான் அனுபவித்த வலிகள், வேதனைகள், உடல் எடை ஆகியவற்றிலிருந்து இந்தப் பேலியோ உணவு முறையால் விடுதலைபெற்ற ஒரு வாழும் உதாரணம் நான். 

'பேலியோ' என்ற பெயருடன் நடைமுறைக்கு வந்திருக்கும் ஒரு அருமையான உணவுப்பழக்க முறை, ஏன் சிலரால் கொச்சைப்படுத்தப்படுகிறது என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமளிக்கிறது. எப்பொருளையும் யார் யார் வாய்க் கேட்பதில் தப்பு என்ன இருக்கிறது? இதில் நான் கவலைப்படுவதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. எழுத்துத் துறையில் இருக்கும் என் நண்பர்களில் சிலர், இந்தப் பேலியோ எதிர்ப்புக் குரலைச் சன்னமான கேலிக்குரலில் எழுப்பியிருக்கிறார்கள். ஆனாலும், நிச்சயம் அவர்கள் இதை ஒரு நகைச்சுவைக் கலாய்த்தலுக்காக மட்டும்தான் செய்திருப்பார்கள் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. காரணம், அவர்கள் எழுத்துத் துறையில் அனுபவமும், எதையும் விரிவாக ஆராயும் மனநிலையும் கொண்டவர்கள். அதனால், நிச்சயம் பேலியோவைத் தப்பாக அவர்கள் சொல்லிவிடவில்லை என்றே நம்புகிறேன். எனவே, இங்கு எழுதுவது அவர்களுக்கானதல்ல. 

பேலியோவைக் கொச்சைப்படுத்தியும், கேலியும் செய்பவர்களிடத்தில் சில கேள்விகளை மட்டும் நான் கேட்க விரும்புகிறேன்.

"நீங்கள் எப்பொழுதாவது அதிக எடை உடலில் ஏறிக் குண்டாக இருந்திருக்கிறீர்களா?
"குண்டாக இருப்பதனால் ஏற்படும் உடல், மன வலிகளை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?"
"விழாக்களில் அல்லது நிகழ்வுகளில் பருமனான உடலுடன் கலந்து கொள்வதால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?"
"உடல் பருமனாய் இருப்பவர்களைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் அவர்களைச் சந்திக்கும்போது கேட்கும் முதல் கேள்வியே, அவர்களது உடல் எடையைப்பற்றித்தான் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் அவர்கள் உள்ளுக்குள் குறுகிப் போவதால் அடையும் மனவேதனை தெரியுமா?"
"சந்திக்கும் ஒவ்வொருவரும் தேர்ந்த டயட்டீசியன்களைப்போல, ஆளாளுக்கு உடல் மெலிவதற்கு அட்வைஸாக அள்ளி விடுவது தெரியுமா?"
"அதிகம் வேண்டாம், தற்போது பிரபலமாகியிருக்கும் 'செல்ஃபி' போட்டோக்களை அதிகமாக எடுப்பது மெலிந்த உடல்வாகுள்ளவர்களேயொழிய, குண்டானவர்கள் அல்ல என்ற புள்ளிவிவரமாவது தெரியுமா?"
போகட்டும்.

எடை அதிகரிப்பில் உள்ளவர்களைக் காண்பவர்களெல்லாம் அள்ளிவிடும் அட்வைஸ்களில் முதன்மையானது, " ஏன் இவ்வளவு சாப்பிடுகிறாய்? சாப்பாட்டைக் குறைக்கலாம்தானே!"

அடுத்தது, "இந்த உடம்பை வைத்துக்கொண்டு கொஞ்சமாவது எக்சர்ஸைஸ் பண்ணலாமே, தினமும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர்களாவது நடக்கலாமே?" 

அட்வைஸ்கள் நல்லவைதான், தப்பில்லை. ஆனால், இவையெல்லாம் ஏதோவொரு வகையில் சாத்தியப்பட முடியவில்லையென்பதால்தானே அவர்கள் குண்டாக இருக்கிறார்கள். குண்டாக இருக்க வேண்டுமென்று கடவுளிடம் வரம் வாங்கியா வந்திருக்கிறார்கள்? உடல் இளைப்பதற்கு அவர்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்பதை ஒரு கேள்வி மூலமாவது அவர்களிடம் கேட்டுவிட்டு நல்லுரைகளை சொல்லலாமல்லவா? நானே உடல் மெலிவதற்குத் தலையால் மண்கிண்டியிருக்கிறேன். "நாளொரு தொப்பையும் பொழுதொரு கிலோவுமாக அதிகரித்ததேயொழிய, எடை சற்றும் குறையவில்லை. 

குண்டாக ஒருவன் இருப்பதற்கு உணவு அதிகம் உட்கொள்வது மட்டும் காரணம் என்று சொல்வது ரொம்பத் தப்பான கருத்து. அத்துடன், கொழுப்புத்தான் உடல் எடையை அதிகரிக்க வைக்கிறது என்று சொல்வது அதைவிடத் தப்பு. ஒருவன் உட்கொள்ளும் உணவு சமிபாடடையும்போது, எப்படி உடைக்கப்படுகிறது என்பதுதான் இங்கு முக்கியம். அதற்கு நாம் எதை உண்கிறோம், நம் சமிபாட்டு செயல்முறை எப்படி நடைபெறுகிறது என்பவற்றிற்கான தெளிவு தேவை. தவறான உணவை உண்டால் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். அதிகம் உண்டால், அதிக எடை.ப்யார் இல்லையென்றார்கள்? இங்கு மாற்றப்பட வேண்டியது உண்பதையல்ல, உணவை.

தைராய்ட், நிம்மதியற்ற தூக்கம், ஸ்லீப் அப்னியா (Sleep apnea) போன்று பலவகை நோய்களின் தாக்கத்தால், ஒருவரின் எடை அதிகரித்துக்கொண்டே போகும். எடை அதிகரிக்கும்போது, ஒருவரின் BMI அளவும் அதிகரிப்பதினால், மேலும் மேலும் தான் உட்கொள்ளும் உணவை அதிகரித்துக்கொண்டே போவார். இதுவொரு சங்கிலித் தொடர்ச்சி போன்றது. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க உட்கொள்ளும் உணவும் அதிகரித்து மேன்மேலும் உடல் குறுக்காக வளரும். உடல் எடை அதிகரிப்பு என்பது, வளர்பிறை மட்டும்தான்.

'ஏன் இவர்கள் ஸ்போர்ட்ஸ், எக்சர்ஸைஸ் ஏதாவது செய்யலாம்தானே?' என்ற கேள்விகளுக்கான பதிலாக, அவர்களிடம் ஏதோவொன்று இருக்கும். அதையும் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணம் தேடி எங்கும் போகத் தேவையில்லை. என்னையே எடுத்துக் கொள்ளலாம். 'ரூமட்டாய்ட் ஆத்திரட்டீஸ்' (Rheumatoid Arthritis) என்னும் மூட்டுகளில் கொடுமையான வலிகளை ஏற்படுத்தும் நோய் எனக்குண்டு. மூட்டுகளை அளவுக்கு அதிகமாக அசைப்பதால், அங்கு 'இன்ஃபிளமேசன்' (Inflammation) ஏற்பட்டு, மூட்டுகள் வீக்கமடைந்து வலி உருவாகும். அப்படி ஏற்படும் வலி, லாரியொன்று அடித்துவிட்டுச் சென்றதற்கு ஒப்பாக இருக்கும். அந்த மூட்டுச் சார்ந்த பகுதிகளில் நரம்புகள் வெட்டிவெட்டி இழுக்கும். அந்த வலி வரும்போது, தோய்த்துப் போட்ட துணிபோல ஆகிவிடுவேன் நான். எந்த மூட்டுகளுக்கும் ஒரு அளவுக்குமேல் வேலை கொடுக்க முடியாது. கொடுத்தால் போச்சு. வலி மாத்திரைகள் மற்றும் உயர் அளவு 'கார்ட்டிசோன்' (Cortison) மாத்திரையாக அல்லது ஊசியாகக் கொடுப்பதே வலி நீக்கும் ஒரே வழி. ஊசியென்றால், எந்த மூட்டில் வீக்கம் இருக்கிறதோ அங்கே நேரடியாக ஊசியைச் செலுத்துவது. கைவிரல்கள் அல்லது மணிக்கட்டில் வீக்கம் ஏற்பட்டால், அந்த மூட்டெலும்புக்குள் ஊசியைச் செலுத்தி, காரில் கியர் போடுவது போல ஊசியைத் திருப்புவார் டாக்டர். கடவுள் ஒருதரம் கீழே இறங்கிவந்து கண்ணைச் சிமிட்டிவிட்டுச் செல்வார். நான் கடவுளைக் கும்பிடாததற்குத் தண்டனையாம். கொடுமையென்று ஒன்று உண்டென்றால், இதுவே அதன் தலைவன். மகாக்கொடுமை. கையில் வரும் வலியைவிட ஊசிவலி எவ்வளவோ மேல். ஒரேயொரு தடவை நெஞ்சின் நடுவே மார்புக்கூட்டில் இந்த வலி எனக்கு ஏற்பட்டது. மூச்சுவிடவே முடியவில்லை. சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றும் வலியுடன் இறங்கியது. நண்பனொருவனின் உதவியுடன் ஹாஸ்பிட்டல் சென்று பார்வையாளர் பகுதியில் வைத்து நெஞ்சில் ஒரு ஊசி. 'பச்சக்', அவ்வளவுதான். வலி போயேபோச்சு.

பின்னர், இதில்கூட நான் ஒரு துரதிர்ஷ்டசாலியாகினேன். எனக்கு 'கிளௌகோமா' (Glaucoma) என்னும் கண்ணில் ஏற்படும் உயர் அழுத்த நோய்க்காக, கார்ட்டிசோன் மாத்திரைகள் பயன்படுத்த முடியாமல் போனது. இப்போ நான் என்ன செய்ய முடியும்? கார்ட்ஸ் (Playing Cards) விளையாட்டில் கார்ட்டுகளைக் கலைப்பதனாலேயே விரல்கள் வீங்கிவிடும் எனக்கு. நான் எந்த ஸ்போர்ட்ஸ் அல்லது எக்சர்ஸைஸ் செய்ய முடியும் சொல்லுங்கள்? வீட்டில் எந்த வேலையும் செய்யாமல், பொம்மைபோல அமர்ந்திருப்பேன். விளைவு உடல் எடை அதிகரிப்பு. இதுபோல, ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்.

பேலியோ என்பது எடையிழப்பு க்கு மட்டுமான ஒரு உணவுப்பழக்க முறையல்ல. அதன் பயன்கள் எண்ணிக்கையற்றவை. ஒருபதிவின் மூலம் அவற்றைச் சொல்ல முடியாது. அதைச் சொல்வதற்கு நியாண்டர் செல்வன் இருக்கிறார். பேலியோ நன்மைகளில் எடையிழப்பும் ஒன்று. நாம் மாற்றவே முடியாது என நம்பிக்கொண்டிருகும் பல நோய்களிலிருந்து சற்றே விலகி, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு வழிசெய்து தருவது அது. 

ஒரு மாதத்தில் நீங்கள் ஆரோக்கியமான வழியில், 'டயட்' என்ற பெயரில் பட்டினி கிடக்காமல், வயிறு நிறைய உணைவை உண்டு, குறைந்தது 3 கிலோவை எடையைக் குறைக்க வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? சந்தைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படும் ஏதேதோ பதார்த்தங்களை உண்கிறீர்கள், குடிக்கிறீர்கள். அதனால் ஆயிரக்கணக்கான பணத்தை தண்ணீராகக் கொட்டுகிறீர்கள். இவை எவையுமில்லாமல், உங்கள் உணவுப்பழக்கத்தால் மட்டும் எடையை இழக்கச் செய்வது நல்லது அல்லவா? இதை ஏன் பழிப்புக்குள்ளாக்குகிறீர்கள்?  உங்களால் இந்த உணவுப்பழக்க முறையைக் கையாள முடியவில்லையா? விடுங்கள். செய்பவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். 

தவிர்க்க முடியாத ஏதோவொரு காரணத்தினால், உங்களால் தொடர முடியாத ஒரு உணவு முறையை, தப்பென்று கேலி செய்வதில் என்ன நியாயம் இருக்கு சொல்லுங்கள்?

உடலால் எந்த வேலையும் செய்யாமல், பட்டினி இருக்காமல், திருப்தியான அளவு உணவை உண்டு, கலோரிகள் கணக்குப் பார்க்காமல், அதிக இறைச்சி, அதிக கொழுப்பு, அதிக முட்டைகள் என்று தினமும் உட்கொண்டு, உடல் எடையையும் குறைப்பதோடு, சிலபல நோய்களிலிருந்து விடுதலை கொடுப்பதற்குப் பெயர்தான் 'பேலியோ'.

நாளைய அறிவியலில் இதைவிடச் சிறந்த வேறொரு முறை வரலாம். அப்படி வருவதுதான் அறிவியலின் தன்மையும்கூட. அப்போது இதற்கான மாற்று ஏற்படலாம். ஆனால், இன்றிருக்கும் முறைகளில் சிறந்ததும், வலியதும் பேலியோதான்.

நியாண்டர் செல்வனுக்கு என் நன்றிகள்.

-ராஜ்சிவா-

Saturday, July 9, 2016

*புற்று நோய்*

*இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.*

*மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில்  மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் ,  தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன்  பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.*

*எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*

*கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு  வகையான பூஞ்சை காளான் நோயாகும்.*

*சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.*

*அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை  பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.*

*இதன் பின் தான் இதற்கான மருந்து  தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,*

*அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார்.  இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.*

*வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்*
*விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.*
*பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்*
*நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்*
*பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !*
                                                                     *– அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17*

*கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான்  என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்*
*இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.*

*நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.*

*அதன் பின் இந்த உப்பை நன்றாக  பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,*

*நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.*

*அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.*

*இல்லை  என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.*

*இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) )  தான் என்றார்.*

*நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்*
*உடனடியாக  அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.* 
*அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,*
*இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள்  என்றார் அவர்.*

*அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.*

*2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில்  வெளியீட்டுள்ளார்.*

*இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*

*பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில்  வெளியிட்டுள்ளார்.  இதுவரை கேன்சர் தொடர்பான  ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன  கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.*

*ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம்  இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை  தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை  சென்றடைந்துள்ளது.*

*மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி  குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.*

*வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.*

*இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது  ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து  என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில்  தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில்  நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில்  இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும்.* *முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை  கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.*

*இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.*

*நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.*

*எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.*

*வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!*

*நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.*

*இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.*

*இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.*

Saturday, April 2, 2016

எண்பது வகை வாதங்களும் குணமாகும்

வாத எண்ணெய்


இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது 
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் 
என்ற உன்னத நோக்கில் 
இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
 வெளிப் படுத்தி உள்ளோம்
 எண்பது வகை வாதங்களும் 
அனைத்து சூலை நோய்களும்
 மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

வாத எண்ணெய்

௧) எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
௨)காடி நீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
௩)மருந்துப் பொருட்கள்
சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
௪)மருந்து சாப்பிட
நாட்டுப் பசும்பால்
வாத எண்ணெய் செய்யும் முறை
அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
 சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும்  பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து 
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ)இந்த சூரணத்தில்  
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து 
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி 
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இ)வாணலியை அடுப்பிலேற்றி 
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும் 
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
 விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச் 
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில் 
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும்
நுரை அடங்கி வரும்

நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்

இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
 வாத எண்ணெய் என்று பெயர்

ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை

உள் மருந்தாக  
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து 
இறக்கி 
குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன் 
 அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து

 உணவுக்குப் பின் 
அரை மணி நேரம் கழித்து 
காலை மாலை என 
தினமும் இரண்டு வேளை குடித்து  வர வேண்டும்

வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை 
தினமும் இரவில் 
கை கால்களில் தேய்த்து
 மென்மையாக மசாஜ் செய்து 
மறு நாள் காலையில் 
இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

இவ்வாறு தினமும் செய்து வர 
எண்பது வகை வாதங்களும் 
அனைத்து சூலை நோய்களும் 
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

நடுக்கு வாதம் 
முடக்கு வாதம் 
கீல்வாதம்
 நரித்தலைவாதம் 
ஆமைவாதம் 
பக்கவாதம்
 கைகால்கள் வீக்கம் 
வலி 
போன்ற அனைத்து வாத நோய்களும் 
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்

இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது 
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
 என்ற உன்னத நோக்கில் 
இந்த இரகசிய மருந்து 
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை 
வெளிப் படுத்தி உள்ளோம்

தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்

Tuesday, December 8, 2015

Cryogenic Sleeping உறைநிலைக்குளிர் உறக்கம் Walt Disney

க்ரையோஜெனிக் உறக்கம், தமிழ்ல சொல்றதுன்னா... உறைநிலைக்குளிர் உறக்கம் அல்லது கடுங்குளிர் உறக்கம்னு சொல்லலாமா? ஏன்னா, க்ரையோஸ் (kryos) என்னும் கிரேக்கச் சொல்லுக்கு உறைநிலைக்குளிர்னு (icy cold) பொருள். இப்போதைக்கு நாம க்ரையோஜெனிக் உறக்கம்னே ஒலிபெயர்த்துக்குவோம். நுட்பப்படி இதனை Cryonic Suspensionனு சொல்வார்கள். 





 

இப்படி ஒரு முறை இருக்குன்னு நமக்கு திரைப்படங்கள் வாயிலாகத்தான் தெரியவந்துருக்கு. அதுவும் கடந்த 2014ம் வருடம் வெளிவந்த Interstellar திரைப்படத்துல இருந்துதான் பெரும்பாலானோர் இதைப்பத்தி பேசுறாங்க. 1993ல் நான் கல்லூரியில் படிக்கும்பொழுது Demolition Man என்றொரு படம் வந்தது. அதில் இந்த நுட்பம் குறித்துக் காட்டியிருப்பார்கள். ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பே 1992ல் Forever Young என்றொரு திரைப்படத்திலும் இதனைக் காட்டியிருப்பார்கள். இப்படியொரு நுட்பம் இருக்கின்றது என்று காட்டிய முதல் திரைப்படம் இதுதான்.

அதன் பின்னர் பல திரைப்படங்கள் வந்துள்ளன. ஏலியன், பேட்மேன், ஜேஸன் எக்ஸ், கேப்டன் அமெரிக்கா, அண்டர்வேர்ல்டு என்று பல திரைப்படங்களிலும் இதனைக் காட்டியிருப்பார்கள். 1819ல் வாஷிங்டன் இர்வின் என்பார் எழுதிய ரிப் வான் விங்க்கிள் என்ற புத்தகத்தில் கூட இது போன்றதொரு உறக்கத்தினை கோடிகாட்டியிருப்பார்.

க்ரையோனிக் சஸ்பென்ஷன் பயன் என்ன?

தற்போதைய மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத, ஆனால், குணப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் ஆய்வுகள் அதி தீவிரமாக இருக்கும்பொழுது நோயாளியை இந்த முறையைக் கொண்டு உறைந்து போகச் செய்து வைத்து விட்டால், பின்னர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் கண்டறிந்த காலத்தில் அவரை மீண்டும் உயிர்ப்பித்து அந்நோயைக் குணப்படுத்திக் கொண்டு வாழ வைக்கலாம்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி உயிருள்ள ஒருவரை அப்படி Cryonic Suspensionல் வைக்க சட்டம் அனுமதிப்பதில்லை. சட்டப்படி இறந்துவிட்டார் அதாவது Clinical Death என்று மருத்துவர் அறிவித்து விட்டால் அவரை க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கலாம். இறந்து போனவரை அப்படி வைத்து என்ன பயன்?

Clinically Death என்பது இதயம் தன் பணியை நிறுத்திக்கொள்வதுதான். அதுவே முழுமையான மரணம் என்று சொல்லிவிடமுடியாது. அதன் பின்னரும் நம் மூளையின் செயல்பாடுகள் உயிர்ப்புடன்தான் இருக்கும்.

நம் உடல் அழிந்துபட்டுப் போவது என்பது நம் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்தது. நம் செல்கள் சிதைவடைவதை நிறுத்தி வைக்க முடிந்தால் நம் அழிவும் நிறுத்திவைக்கப்படும். அப்படியொரு செயல்பாடுத்தான் இதில் மேற்கொள்ளப்படுகின்றது.

சரி, க்ரையோனிக் சஸ்பென்ஷன் என்றால் என்ன? எப்படிச் செய்கிறார்கள்?

க்ரையோனிக் சஸ்பென்ஷன் என்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தினை சடாரென்று நிறுத்தி வைப்பது. ஒருவர் இறந்துவிட்டார் என்று மருத்துவரால் அறிவிக்கப்பட்டவுடன், க்ரையோனிக் சஸ்பென்ஷன் முறைக்கு எடுத்துச் செல்லப்படும் வரைக்கும், மூளைக்குத் தேவையான ஆக்சிஜனும் இரத்தமும் தொடர்ந்து செலுத்தப்படும். அதன் பின்னர் Heparin என்னும் மருந்து உடலினுள் ஏற்றப்படும். இது இரத்தத்தை உறையச் செய்வதிலிருந்து தடுக்கும் (Anticoagulant).

இனிதான் உண்மையான உறைய வைத்தல் துவங்கும். உடலையும் சடாரென்று குளிர்நிலைக்குக் கொண்டு போய்விடமுடியாது. காரணம், உடல் செல்களில் இருக்கும் நீர் குளிர்நிலைக்குப் போனால், அது உறையத் துவங்கும். உறைந்தால் விரிவடையும். அதனால் செல்கள் சிதைவுறும். அதனால் என்ன செய்வார்கள் என்றால், செல்களில் இருக்கும் நீரை நீக்கிவிட்டு Cryoprotectant எனப்படும் க்ளிசரால் (Ethylene Glycol போன்று) அடிப்படையிலான ஒரு வேதியற்கலவையை உட் செலுத்துவார்கள். ஆர்க்டிக் மற்றும் அண்டார்ட்டிகாவில் இருக்கும் சில பூச்சிகள், மீன்கள் மற்றும் நீர்நிலவாழ்வி (Ambibians) தாங்களே தங்கள் உடலில் இந்த Cryoprotectantயை உற்பத்தி செய்து கொள்ளும்.

க்ளைகால்ஸ் (Glycols) எனப்படுபவை குறைந்த பட்சம் இரண்டு ஹைட்ராக்சில் தொகுப்புகள் உள்ள ஆல்கஹால் ஆகும். எத்திலின் க்ளைக்கால் (Ethylene Glycol), ப்ரோப்பிலின் க்ளைக்கால் (Propylene Glycol) மற்றும் க்ளிஸரால் (Glycerol) போன்றவை அதற்கு உதாரணங்களாகும்.

எத்திலின் க்ளைக்கால் ஆட்டோமொபைலில் உள்எரி எஞ்சின்களில் குளிர்விப்பானாக தண்ணீருக்குப் பதிலாகவோ அல்லது தண்ணீருடன் கலந்தோ பயன்படுத்தப்படும். இது குளிர்காலங்களில் தண்ணீர் உறைந்து அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கின்றது. இது சற்று ஆபத்தானது.

ப்ரொப்பிலின் க்ளைக்கால் மேற்சொன்ன எத்திலின் க்ளைக்காலை விட ஆபத்து வெகுவாகக் குறைந்தது. ஆபத்தற்ற உறைநிலைத்தடுப்பான் என்று பெயரிட்டே விற்பனைக்கும் வரும். எத்திலின் க்ளைக்கால் பயன்படுத்த முடியாத இடங்களில் இதனைப் பயன்படுத்துவார்கள். உணவுத் தயாரிப்பில் இது பயன்படும். குறிப்பாக பனிக்குழைவு (Ice Cream) தயாரிப்பில் பனிக்கட்டிகள் (Ice) உருவாகிடாமல் அது குழைவாகவே இருப்பதற்காக இதனைச் சேர்ப்பார்கள்.

இருப்பினும், இது காற்று மற்றும் வெப்பத்தோடு வினைபுரிந்து லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்யும். இதனைச் சரியாக சமநிலைப்படுத்தப்படவில்லை என்றால் அரிக்கும் (Corrossive) தன்மையுடையதாக இருக்கும்.

மேற்சொன்ன இரண்டையும் விட பாதுகாப்பானதும் மிகக்குறைந்த உறைநிலையையும் கொண்ட க்ளிசராலே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. க்ரையோனிக் சஸ்பென்ஷனில் உடல் செல்களில் உள்ள நீருக்குப் பதிலாக இதனையும் பயன்படுத்துவார்கள்.

எதைப் பயன்படுத்தினாலும், நோக்கம் என்னவென்றால், உறைநிலைக் குளிரில் செல்கள், திசுக்கள், உறுப்புகளுக்குள் பனிப்படிகங்கள் (Ice Crystals) உருவாவதைத் தடுப்பதுதான். இப்படி ஏதேனும் ஒரு உறைநிலைக் கலவைக்குள் (திரவ நைட்ரஜன்) உடலைக் கொண்டு செல்லும் முன் ஆழ்குளிர் நிலைக்கு (Deep Cooling without Freezing) உட்படுத்தி வளர்சிதை மாற்றம் நிகழ்வதில் இருந்து நிறுத்தி வைக்கும் முறைக்குப் பெயர்தான் Vitrification.

அதன் பின்னர், -130°Celcius அளவிலான வெப்பநிலையை எட்டும் வரைக்கும் உடலை உலர்பனிக் கட்டியில் (Dry Ice) வைப்பார்கள். இத்தோடு Vitrification செயல்பாடு முடிகின்றது. அதற்குப் பின்னர் -196°Celcius வெப்பநிலையளவில் திரவ நைட்ரஜன் நிரப்பப் பட்ட ஒரு பெரிய உருளைக்குள் உடலைத் தலைகீழாக நுழைத்து வைத்து விடுவார்கள். ஏன் தலைகீழாக என்றால், ஒரு வேளை உருளையில் ஏதேனும் கசிவு இருந்தால், தலைப்பகுதியில் இருக்கும் மூளை மட்டுமாவது இறுதி வரை பாதுகாப்பான குளிர்நிலையில் பத்திரமாக இருக்கட்டும் என்பதற்காக.

அவ்வளவுதான் க்ரையோனிக் சஸ்பென்ஷன். ஆனால், திருப்பி உயிர்ப்பிக்கும் நுட்பம்தான் இன்னும் நமக்குக் கைவரப்பெறவில்லை. அண்மைய எதிர்காலத்தில் அதனை எதிர்பார்க்கவும் முடியாது என்று விஞ்ஞானிகளும் கூறிவிட்டனர். மீளுயிர்ப்பிப்பதில் என்னவொரு கடினம் என்றால், சரியான வெப்பநிலைக்கு படிப்படியாக உடல் செல்களைக் கொண்டு வராவிட்டால், பனிப்படிகங்கள் உருவாகி செல்களை விரிவடையச் செய்து சிதைத்துவிடும் என்பதுதான்.

ஆனால், நானோ தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சி பெற்றுவிட்டால், மிக நுணுக்கமாக அணுஅளவிலே போய்க்கூட செல்களைப் பாதுகாப்பாக மீளுயிர்க்கச் செய்ய முடியும் என்று கருதுகிறார்கள்.

அப்படி எவரேனும் க்ரையோனிக் சஸ்பென்ஷனில் வைக்கப்பட்டிருக்கின்றார்களா....? ஆம், சிலர் அவ்வாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

1. Dr. James Bedford, உளவியல் பேராசிரியர்
2. Dick Clair Jones, தொலைக்காட்சி நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர்
3. Thomas K Donaldson, கணிதவியலார்
4. Fereidoun M. Esfandiary (FM-2030), எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் மீவுமனிதத்துவச் சிந்தனையாளர் (Transhumanist Philosopher)
5. Dora Kent, Alcor Life Extension Foundationன் ஒரு உறுப்பினரான Saul Kent என்பாரின் தாய்.
6. Jerry Leaf. Alcor Life Extension Foundationன் துணைத் தலைவர்
7. Ted Williams, பேஸ்பால் விளையாட்டு வீரர்
8. John Henry Williams, Ted Williamsன் மகன், இவரும் பேஸ்பால் விளையாட்டு வீரர்.
9. Walt Disney, கார்ட்டூனிஸ்ட், திரைப்படத் தயாரிப்பாளர், அசைபடத் தயாரிப்பாளர், குரல் நடிகர் மற்றும் தொழிலதிபர்

படம் எடுக்கப்பட்ட தளம் : http:// transhumanity. net/wp-content/uploads/2014/09/Cryonics.jpg


thanks to BABU PK

Thursday, November 19, 2015

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்…



1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியை பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.எலும்புகள்

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவி விடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும் கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.பெண்

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா..? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

கர்ப்பக் கால கவனிப்பு..!

14. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே…!

15. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

16. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.கர்ப்பம்

17. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். 

18. பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

19. கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

20. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

28. தாய்ப்பாலை சேமித்து கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும். 

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.உணவே மருந்து….!

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..!

33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

உணவே மருந்து

34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.

36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும். 

39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

41. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.

42. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

43. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

44. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

45. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.

46. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

47. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.

48. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!

49. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.

50. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான். அதுதான் முதலுதவிக்கும் முந்தைய சிகிச்சை.

மருந்தே வேண்டாம்

51. சர்க்கரையை (சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.

52. உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக் கட்டுப்பாடும், நடைபயிற்சியும் தான். காந்தப்படுக்கை, பெல்ட், மாத்திரை போன்றவை உரிய பலனை தராது.

லப்… டப்..!

53. பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைகோஸ், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை.

54. நீங்கள் அடிக்கடி நீச்சல் அடிப்பவர் என்றால்… இதயத்தைப் பற்றி கவலையேபட தேவையில்லை.

55. உப்பு, இதயத்துக்கு எதிரானது. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம், இதயம் பாதிக்கப்படுவதாக உணருங்கள்.

56. மன அழுத்தம் இதயத்தின் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.இதயம்

57. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கிட்னியைக் கவனியுங்கள்….

58. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும்! கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

59. சிப்ஸ், கோக், இனிப்புள்ள பாட்டில் ஜூஸ்கள், சீனி – இவையெல்லாம் கிட்னியில் கல்லை உருவாக்கும் வில்லன்கள்… உஷார்!

60. நிறைய தண்ணீர் குடிப்பது, சிறுசிறு கிட்னி கற்களை அகற்ற உதவும். கூடவே கேரட், திராட்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் என்று ஏதாவது ஒன்றைக் குடிப்பது மிகவும் நல்லது.

61. காய்கறிகளை நிறைய சாப்பிடுபவர்களுக்கு, ‘கிட்னியில் கல்’ என்ற பயமே தேவையில்லை.

பல்லுக்கு உறுதி…!

62. பல்லில் வலி, ஈறுகளில் வீக்கம், வாயின் வெளிப்புறத்தில் வீக்கம், பல் கறுப்பு நிறமாக மாறுவது, பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது, குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும்போது கூச்சம் ஏற்படுவது போன்றவை பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்.

63. பற்களில் ஏற்படும் பாதிப்பு, தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். எனவே, பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

64. தேநீர், காபி போன்றவற்றை அடிக்கடி குடிப்பது பற்களுக்கு நீங்களே வேட்டு வைப்பதற்குச் சமம். மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிருங்கள்.

65. சூடான உணவை சாப்பிட்ட நொடியே, ஜில்லான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.
கிட்னி
66. இனிப்புச் சாப்பிடுபவர்களுக்குப் பல் சொத்தை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, எது சாப்பிட்டாலும் வாய் கொப்பளிக்க வேண்டும்.

67. அக்கி எனப்படும் முகத்தில் தோன்றும் கட்டிகளுக்கு மண் பூசும் வழக்கமிருக்கிறது. அக்கி, ஒருவித கிருமித் தொற்றுமூலம் ஏற்படக்கூடியது. அதற்கான மருந்துகளைப் பயன்படுத்துவதே நல்லது.

68. சருமத்தை இளமையாக, சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க தண்ணீர் அதிகம் குடிப்பது முக்கியமானது. மன அழுத்தம், சோர்வு, இறுக்கமான ஆடை, மது, புகை, காபி… இவையெல்லாம் சருமத்தின் வில்லன்கள்.

69. தேவையற்ற அழுக்குகள் சருமங்களில் தங்கி, அதன் பொலிவையும், உயிர்ப்பையும் கெடுக்கின்றன. எனவே, முகத்தை அடிக்கடி கழுவிச் சுத்தப்படுத்துவது அவசியமானது.

70. முகப்பரு இருந்தால்… உடனே கிள்ளி எறிய விரல்கள் படபடக்கும். ஆனால், அது ஆபத்தானது. முகத்தில் பள்ளங்களை நிரந்தரமாக்கிவிடும்.

71. நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அனைத்து வகை கீரைகள், காய்கள், வாழைத்தண்டு சாப்பிடலாம். வெந்தயம் மிக நல்லது.

72. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் கூடவே கூடாது. அசைவம் வாரத்தில் 100 கிராம் அளவில் சாப்பிடலாம். முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் ஓ.கே! உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

73. மா, பலா, வாழை, காய்ந்த திராட்சை, சப்போட்டா, பேரீச்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பனை வெல்லம், பனங்கற்கண்டு, தேன், மலைவாழை, லேகியம், பஞ்சாமிர்தம் சேர்க்கவே கூடாது.

74. இரண்டு, மூன்று வெண்டைக் காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கி, நெடுக்குவாட்டில் கீறல்களை போட்டுவிட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடி வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் இந்த நீரை மட்டும் அருந்திவர, இரண்டே வாரத்தில் சர்க்கரை குறையும். இது மேற்கத்திய நாடுகளின் எளிய வைத்தியம்

75. உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என சாப்பாட்டின் அளவை திடீரென குறைப்பது ஆபத்து. உடலில் சர்க்கரையின் அளவு வேறுபட்டு, சர்க்கரை நோய் வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

ஜெனரல் வார்டு..!

76. சர்க்கரை, டி.பி., கேன்சர், எய்ட்ஸ் ஆகிய நோய்களால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கும், ஸ்டீராய்டு மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் உடலில் எதிர்ப்புச் சக்தி குறைந்து இருக்கும். இவர்களை எளிதில் நோய் தாக்கும். எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.

77. வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனை செல்ல தாமதமாகும் சூழலில்… உடலில் இருந்து வெளியேறிய நீருக்கு இணையாக உடனே சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரோ, இளநீரோ குடிக்க வேண்டும்.வைத்தியசாலை

78. நடு இரவு அல்லது பயண நேரங்களில் திடீர் ஜுரம் அடிக்கிறது. உடனே டாக்டரை பார்க்க முடியாத நிலை. அதற்காக சும்மா இருக்க வேண்டாம். வீட்டில் இருந்தாலோ அல்லது பயணத்தின் இடையிலோ பாராசிட்டமால் மாத்திரை ஒன்றை பயன்படுத்துவது நல்லது. அதன்பிறகு, 6 மணி நேரத்துக்குள் டாக்டரை சந்திப்பது நல்லது.

79. காதுகளை வாரம் இருமுறை மெல்லிய காட்டன் துணிகளால் சுத்தம் செய்ய வேண்டும். சாவி, ஹேர்பின், பட்ஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பட்ஸ் போடும்போது திட அழுக்குகள் அப்படியே அழுத்தப்படுமே தவிர, வெளியில் வராது.

80. வயிற்றுப்போக்கு விடுபட உடனடி உபாயம்… வெறும் கொய்யா இலைகளை மெல்வதுதான்.

81. சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா..? சிறிது வெல்லம் கரைத்த நீரை அருந்தினால் போதும்.

82. வியர்வை தங்கிய உடையுடேனேயே இருப்பது ஆபத்தானது. அதுவே நோய் தொற்றுக்கான காரணியாக அமைந்துவிடும்.

83. நீங்கள் நீண்ட நேரமாக தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும்கூட சிறுநீர் மஞ்சளாக போகும்.

84. உடலில் ஏதேனும் காயம் அல்லது நகக்கீறல் போன்றவை ஏற்பட்டால், 12 மணி நேரத்துக்குள் தடுப்பு ஊசி (டி.டி.) போடவேண்டும். தடுப்பூசி காலத்தில் இருக்கும், பத்து வயது வரையுள்ள குழந்தைகள் என்றால், இந்த ஊசி தேவையில்லை. 

85. மூலம், பவுத்திரம் பாதிப்பு உள்ளவர்கள் கூச்சப்படாமல் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். நார்ச்சத்துள்ள உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். மலச்சிக்கல் தொடர்ந்தால், இதயத்துக்கே ஆபத்தாகிவிடும்.நில்… கவனி… செல்…!

86. மருத்துவமனையில் நோயாளியின் படுக்கைக்குக் கீழே, நடைபாதை என்று கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து சாப்பிடுவது தவறு. அது… தொற்றுக்கிருமிகளை பரஸ்பரம் உள்ளே – வெளியே எடுத்துச்செல்லும் வேலையைத்தான் செய்யும்.

நோயாளிகள் தங்கும் இடம்

87. தவிர்க்க முடியாத சூழலைத் தவிர, மற்ற சமயங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்களை நோயாளியைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூடாது.

88. ‘போஸ்ட்மார்ட்டம்’ என்றாலே பலருக்கும் ஒருவித பயமும் பதற்றமும் இருக்கும். இதன் காரணமாக போஸ்ட்மார்ட்டத்தைத் தவிர்த்துவிட்டால்… பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எதிர்பாராத மரணமென்றால் கட்டாயம் பிரேத பரிசோதனை செய்வதுதான் எல்லாவற்றுக்கும் நல்லது. பரிசோதனை அறிக்கை இருந்தால்தான் வாரிசுகளுக்கான இன்ஷுரன்ஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான முதலீடுகளை பெறுவதில் சிக்கல் ஏற்படாமலிருக்கும்.

89. ஹோட்டல், ஹாஸ்டல் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் தட்டு மற்றும் டம்ளர்களை சரியாக கழுவவில்லை என்றாலும், சாலட்டில் போடப்படும் பச்சைக் காய்கறிகள், பழங்களை சுத்தமான தண்ணீரில் அலசவில்லை என்றாலும்… அமீபியாசிஸ் எனும் தொற்றுக்கிருமி தாக்குதல் ஏற்படும். இதனால், சாப்பிட்டதும் மலம் கழிந்துவிடும். கவனிக்காமல் விட்டால் உடல் மெலிந்து எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

90. ‘போரடிக்கிறது’ என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல்… தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

91. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம். லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

92. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம். ஜிலுஜிலு குளிர் நேரமென்றால்… கறுப்பே சிறப்பு.

93. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.

94. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது… அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.
எச்சரிக்கை 

95. வெற்றிலை-பாக்கு, புகையிலை, சீவல், புகை போன்றவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவோரின் வாயானது, உட்புறம் மென்மைத் தன்மையை இழந்து, நார்நாராகக் காட்சியளிக்கும். இது, வாய் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

96. இரவு உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் வெறும் வயிறாக இருப்பதால், ஆசிட் நிறைய சுரந்திருக்கும். எனவே, காலையில் கட்டாயம் சாப்பிடவேண்டும். சரிவர சாப்பிடாமல் பழகிவிட்டால், அது வயிற்றில் புற்றுநோயை உருவாக்கும்.

97. இரவு வெகு நேரம் வேலை செய்ய வேண்டியிருந்தால், மறுநாள் காலையில் வாக்கிங், ஜாகிங் போகக்கூடாது. அது, பயனளிப்பதற்குப் பதிலாகக் கெடுதலையே தரும்.

98. அலர்ஜி – ஆஸ்துமா போன்ற நோய்கள் இருந்தால், செல்லப் பிராணிகளைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள். அலர்ஜி நோய்க்கு, கரப்பான் பூச்சி ஒரு முக்கிய காரணம்.

99. நாற்பது வயதுக்குமேல் தொடர்ச்சியாக அல்சர் தொந்தரவு இருந்தால் என்டோஸ்கோபி பரிசோதனை செய்துவிடுவது நல்லது. ஃபாஸ்ட்ஃபுட் வகையறாக்களைத் தொடவே கூடாது.

100. சுகாதாரமற்ற முறையில் பச்சை குத்துதல் மற்றவர்களுடைய நோயை நமக்கு வாங்கித் தந்துவிடும், ஆகவே பச்சை குத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

Tuesday, November 3, 2015

Sugar சர்க்கரை நோய் - (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்

இன்சுலின் சுரக்க… !!!

சர்க்கரை நோயாளிகள் அதிக அளவில் உள்ள இரண்டாவது 
நாடு இந்தியா. பெயரில் சர்க்கரை இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்தத் தவறினால், சில ஆண்டுகளில் இந்த நோய்ப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துவிடுவோம் என, கசப்பான செய்தியைச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். பச்சிளம் குழந்தைகளுக்குக்கூட, டைப் 1 சர்க்கரை நோய் வருகிறது என்பது துயரம்தான். வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம் காரணமாக 25-35 வயதிலேயே பலருக்கும் டைப் 2 சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. 
நாம் உண்ணும் உணவு செரிக்கப்பட்டு, குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அதைக் கட்டுக்குள் கொண்டுவர, மூளை கணையத்துக்கு ஆணையிடும். உடனே, இன்சுலின் சுரந்து திசுக்கள் அந்த குளுக்கோஸைப் பயன்படுத்தத் துணைபுரியும். இன்சுலின் சுரப்பு இல்லாமல் போனாலோ, குறைந்தாலோ, வீரியம் குறைந்தாலோ, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே, சர்க்கரை நோய் என்கிறோம். நம் உடலில் சர்க்கரையின் அளவு 80-120 வரை இருப்பதுதான் சராசரி அளவு. சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து பரிசோதனை செய்யும்போது, 180-க்கு கீழ் இருக்க வேண்டும் 
உடல் பருமனானவர்கள், தொப்பை உள்ளவர்கள், அதிக மாவுச்சத்து, குறைந்த நார்ச்சத்து உணவுகளை உட்கொள்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்கள், மரபியல் காரணங்கள் போன்றவற்றால், இன்சுலின் சுரப்பு பாதிக்கும். 
இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய, உணவுப் பழக்கத்திலும், வாழ்வியல் பழக்கத்திலும் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியம். இதற்கு மூன்று “இ” (Exercise, Eating, Emotional (உடற்பயிற்சி, உணவு முறை, மனநிலை) மிகவும் அவசியம். மூன்றில் ஒருவர் மட்டுமே இந்த மூன்று ‘இ’ யையும் சரியாகப் பின்பற்றுகின்றனர். மற்றவர்கள் இதில் இரண்டைக்கூட பின்பற்றுவது இல்லை. 
கணையத்தை பலப்படுத்தும் உணவுகள் 
காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது. வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக்கூடியவையே. 
150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும். ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு எடுக்க வேண்டும். நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும். 
இது, கணையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும். ஆவாரம் பூவில் கேசைன் (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த ரசாயனம் புத்தம்புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும். மேலும், ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆவாரம்பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும். 
நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், வீக்கம், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும். இந்தக் கஷாயத்தைத் தினமும் எடுத்துக்கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை. 
சர்க்கரை நோய் வராமல் தடுக்க… 
அனைவருக்கும் உடல் உழைப்பு அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும். 
உணவில் மாவுச்சத்து குறைவாகவும், நார்ச்சத்தும் புரதமும் அதிகமாகவும் இருக்க வேண்டும். கேழ்வரகு, கம்பு, சோளம், குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளில் இந்த மூன்று சத்துக்களும் சரியான அளவில் இருக்கின்றன. இதைப் பிரதான உணவாக மாற்றிக்கொண்டால், சர்க்கரை அதிகமாக உடலில் சேராது. சாப்பிட்ட உணவு மெதுவாக செரிமானம் ஆவதால், இன்சுலின் தேவை அதிகம் இருக்காது. 
கஞ்சி, கூழ், பழச்சாறு எளிதில் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே, திரவ உணவை, சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், களி அடையாகச் செய்து சாப்பிடலாம். 
உணர்வுகள் நேர்மறையாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றோ, வந்துவிடுமோ என்றோ பயந்து, கவலைப்பட்டு, நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தக் கூடாது. பயத்தை விரட்டி எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, நோயை எதிர்கொண்டு சரிசெய்யுங்கள். ஆல் தி பெஸ்ட்! 

-ambikarthikeyan
http://tamilnanbargal.com/node/61771

Friday, June 26, 2015

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி !




எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச்
சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்


மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″  குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.

நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.
தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும். மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம்.
முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிரான முத்திரையில் நடக்கலாம். இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது
கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள்

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும்.முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும்.

முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு
உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.
இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர
வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
தினமும் எட்டுநடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ
முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க
வளமுடனும் நலமுடனும்.