Showing posts with label நவீன விவசாயம். Show all posts
Showing posts with label நவீன விவசாயம். Show all posts

Wednesday, January 6, 2016

மண்புழு வளர்ப்பு பண்ணை மட்டுமே இயற்கை விவசாய வளர்ச்சிக்கு தீர்வா??...

ஒரு நிலம் விவசாயத்துக்கு ஏற்ற நிலம். நன்கு வளமான நிலையில் உள்ளது. அதில் என்னபயிர் செய்தாலும் நன்கு வளரும் என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு நல்ல உபாயம் உள்ளது. 

அது என்னவென்றால் அந்த நிலத்தில் ஈரமான ஒரு பகுதியில் மண்ணைப் பறித்துப் பார்த்தால் அங்கு மண்புழுக்கள் தென்பட வேண்டும்.

ஒரு நிலத்தில் ஈரமான ஒரு நிலையில் மண்புழுக்கள் அங்கு வாழமுடியும் என்றால் அங்கு நன்கு பயிர் செய்யமுடியும் என்பது பொருள்.

அதனால்தான் மண்புழுக்களைக் குடியானவனின் நண்பன் என்று கூறுவார்கள்.

மண்புழுக்கள் வாழும் நிலங்கள் எதனால் அப்படிக் கருதப்படுகின்றன, மண்புழுக்கள் நமக்கு என்ன பயனைத் தருகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

மண்புழு வாழவேண்டுமானால் அங்கு அதற்குத் தீனி வேண்டும். அதற்குத் தீனி கிடைக்க வேண்டுமானால் நன்கு மக்கிய பொருட்கள் அந்த நிலத்தில் கலந்திருக்க வேண்டும். மக்கிய பொருட்கள் கலந்திருக்க வேண்டுமானால் அதற்குத் தேவையான மக்கக்கூடிய குப்பைகள் இலை தழைகள், கால்நடைகளின் கழிவுகள் போன்றவை கலந்திருக்கவேண்டும்.

அது மட்டுமல்ல.குப்பை கூழங்களை மக்கச்செய்யும் நிறைய நுண்ணுயிர்களும் அந்த நிலத்தில் வாழவேண்டும். அதற்குமேல் போதுமான ஈரம் வேண்டும்.

இவ்வளவும் சரியாக இருக்கிறது என்பதற்கு அடையாளம்தான் மண்புழு!

அந்த மண்புழுக்கள் ஒரு ஈரநிலத்தில் காணப்படவில்லை என்றால் என்ன பொருள்?

அவை வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை, போதுமான உணவு இல்லை என்பது பொருள்.

அப்படியானால் அதைத்தொடர்ந்து அந்த நிலத்தில் மக்கக்கூடிய பொருட்களோ அவற்றை மக்கச்செய்யும் நுண்ணுயிர்களோ இல்லை என்றும் உணர்ந்து கொள்ளலாம். 

அது பயிர் செய்ய அதுவும் இயற்கை விவசாயம் செய்ய ஏற்ற நிலம் அல்ல என்று எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த நிலை ஏற்படுவதற்குக் காரணம் என்ன? ஏன் மண்ணில் மண்புழுக்கள் இல்லாமல் போகிறது? வரட்சிக் காலத்தில் ஈரம் இல்லாததால் மண்புழு இல்லாமல் போவது நியாயம். ஈரகாலத்திலேயே ஏன் இல்லாமல் போகின்றன?

காரணம் மிக எளிதானதுதான். ஆதாவது சின்னஞ்சிறு மண்புழுக்கள் மீது நாம் கருணையற்ற யுத்தம் நடத்தி; வருகிறோம். அதுவும் பலமுனைத் தாக்குதல்!

ஒரு பக்கம் கால்நடைப் பயன்பாட்டைக் குறைத்து அதனால் அவற்றின் கழிவுகள் நேரடியாக நிலத்தில் சேர்வதைத் தடுத்துவிட்டோம். அதனால் நிலத்தில் உள்ள நுண்ணுயிர்களுக்கோ மண்புழுக்களுக்கோ போதுமான உணவின்றிச் செய்து வருகிறோம்.

மறுபக்கம் நிலத்தில் பயிர்களுக்கான சத்துக்கள் குறைந்த நிலையில் நிலத்தை வளப் படுத்துவதற்குப் பதிலாக வேதி உரங்களைப் பயன்படுத்தினோம். 

நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள் வேதி உரங்களை உண்டு வாழ முடியாதது மட்டுமல்ல அந்த நிலையில் வாழும் சூழலை இழந்து அழிவை நோக்கிய பயணத்தைத் துவக்கின. 

போதாக் குறைக்கு பூச்சிக் கொல்லிகளை வரைமுறையின்றிப் பயன்படுத்தியதாலும் நேரடியாக நஞ்சின்மூலமும் களைக்கொல்லிகளின் மூலமும் மண்;புழுக்கள் கொல்லப்பட்டன.

என்ன வேதி உரங்களைப் போட்டாலும் என்ன பூச்சி;க் கொல்லிகளைத் தெளித்தாலும் பயிர் எதிர்பார்த்தபடி வளர்வதில்லை போதுமான மகசூலைக் கொடுப்பதில்லை, நாளுக்கு நாள் பூமி களர் நிலங்களாகி வருகிறது என்று காலங் கடந்து உணரப் படுகிறது. இப்போதும் விவசாயம் நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால் வருமானம் கட்டுபடியாகக்கூடிய அளவில் இருந்திருந்தால் இப்போதும் இந்த இயற்கை வேளாண்மை பற்றிய சிந்தனை வந்திருக்காது. 

இப்போது செய்த தவறு உணரப்படுகிறது. அதைத் திருத்திக் கொள்வது எப்படி என்பதுதான் கேள்வி! 

அதற்கு வேதி உரங்களை மூட்டை மூட்டையாகக் கொட்டி விவசாயம் செய்தோமல்லவா அதுபோலவே நிறைய மண்புழு உரம் உற்பத்தி செய்து மூட்டை மூட்டையாகப் போட்டால் பயிர் அருமையாக வரும் என்று கருதப்படுகிறது. செய்யவும் படுகிறது.

ஆதாவது முன்போலக் கால்நடைகள் இல்லாத நிலையில், கால்நடைகiளின் பயன்பாடு குறைந்த நிலையில் கால்நடைகள் வைத்து பாரம்பரிய முறை விவசாய வேலைகள் செய்யமுடியாத நிலையில் இருக்கும் வேலை செய்யும் மாடுகளையும் பால்மாடுகளையும் அவற்றின் கழிவுகளையும் எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்ததன் பயன்தான் மண்புழு உரம். ஏன் அதை நாமே உற்பத்தி செய்து நிலத்துக்கு இடக்கூடாது என்றும் நினைத்தார்கள். 

மாடுகளை நிறைய வளர்த்து அவற்றை நிலத்தில் பட்டிகளில் அடைத்து மற்றும் எருக் குழிகளில் சேகரிக்கப்படும் சாணத்தின் மூலம் நிலத்தில் மண்புழுக்கள் உற்பத்தியாவதன் மூலம் பயன் கிடைக்க நிறைய மாடுகள் வேண்டும். நிறைய வேலையாட்கள் வேண்டும். நிறைய செலவும் பிடிக்கும். அது நடைமுறை சாத்தியமும் இல்லை.

அதனால் மண்புழு உரத்தை நாமே ஓரிடத்தில் உற்பத்தி செய்வது சுலபம்தானே! அதுதான் மண்புழு மோகம்! 

நாம் உற்பத்தி செய்யும் மண்புழு உரமும் நிலத்தில் வாழும் மண்புழுக்கள் உற்பத்தி செய்யும் உரமும் ஒரேமாதிரி தரமுடையவைதானா? 

மண்புழுக்களுக்கு நிலத்தில் உரமிடுவது மட்டும்தான் வேலையா? 

இந்த இரு கேள்விகளுக்கும் தெளிவான விடை காணவேண்டும்.

மண்புழுக்கள் தங்களுக்கான உணவைத்தேடி இடைவிடாமல் தாம் வாழும் காலம் ஈர மண்ணுக்குள் இடம் பெயர்ந்துகொண்டே உள்ளன. குறைந்த பட்சம் இரண்டடி ஆழத்துக்காவது மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.

மண்ணுக்குள் மண்புழுக்களின் நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் விவசாய நிலத்தின் மேல் மண் சல்லடைக் கண்களாகத் துளைக்கப்படுகிறது. அந்தத் துளைகள் உடனுக்குடன் மூடிக்கொள்வதால் நமது கண்களுக்குத் தெரியாது ஆனால் அப்படித் துளையிடப்படுவதால் மண் கெட்டிப்படாமல் மிருதுவாக ஆக்கப்படுகிறது. 

அப்படி மிருதுவாக்கப்படும் மண் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் மழைநீர் எளிதில் மண்ணுக்குள் நுழைந்து தங்கவும் உதவி செய்கிறது. 

ஆக மண்ணை மிருதுவாக்குகிறது. அதன் மூலம் மற்ற நுண்ணுயிர்களின் நடமாட்டத்துக்கும் பெருக்கத்துக்கும் உதவி செய்கிறது. மழைநீர் சேகரிப்புக்கும் உதவுகிறது.

மண்புழுக்களை நாம் வளர்ப்பதன் மூலம் எரு உற்பத்தி செய்தாலும் மண்புழுக்களின் இந்த வேலைகளையெல்லாம் நிலத்தில் செய்வது யாh?

அதுமட்டுமல்ல இரண்டாவதாக மண்புழுக்கள் தான் வாழும் மண்ணில் நிலத்திலேயே தனக்கான உணவையும் பெற்று தனது கழிவுகளையும் வெளியேற்றும்போது அந்தக்கழிவுகள் எருவாக உடனுக்குடன் மண்ணில் சேர்ந்து விடுகிறது. அப்படிச் சேர்க்கும்போது அதை தான் நடமாடும் இடங்களில் வெளிக் காற்றுப் படாமல் வெய்யில் படாமல் சேதாரமில்லாமல் சேர்க்கிறது. 

அந்த எருவை நிலத்தில் உள்ள அதைச் சார்ந்துள்ள சில நுண்ணுயிரிகள் மேலும் பக்குவப்படுத்தி மேம்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. பல்லுயி;ர்களின் வாழ்க்கை முறை அதுதான் ஆகும்.

ஆனால் தனியாகத் தயாரிக்கப்படும் மண்புழு உரம் உடனுக்குடன் உடனுக்குடன் நிலத்தில் சேர்க்கப்படுதில்லை. அதனால் காற்றின் மூலமும் வெப்பத்தின் மூலமும் ஒரு பகுதி சத்துக்களை இழந்து சக்கையாகிப் போகும் வாய்ப்புகள் நிறைய உள்ளன.

மண்புழு இயற்கையாக நிலத்தில் எங்கெல்லாம் தனது கழிவாகிய உரத்தை படியச் செய்கிறதோ அந்த முறையில் நாம் தயாரிக்கும் உரத்தைப் படியச்செய்ய முடியாது.

இந்த நிலையில் நாம் தயாரிக்கும் மண்பூழு உரமும் அதன் பயன்பாடுகளும் இயற்கையில் வாழும் மண்புழுக்களுக்கு எப்படி ஈடாகும்?.

அதனால் நாம் மண் புழுக்களுக்கு உணவாகும் விதத்தில் மக்கக்கூடிய குணம் உள்ள பல்வேறுபட்ட பொருட்களை விவசாய நிலங்களில் இட்டு மக்கச்செய்ய வேண்டும். கால்நடைக் கழிவுகளை அது காற்றாலும் வெய்யிலாலும் சாரமிழக்கும் முன்பே நிலத்தில் சேர்க்கவேண்டும். 

எவையெல்லாம் கொண்டு மண்புழு வளர்க்கலாம் என்று நினைக்கிறோமோ அவற்றை யெல்லாம் விவசாய மண்ணிலேயே நேரடியாகச் சேர்த்து மண்புழுக்களுக்கு உணவாக மாற்றும் வேலையை இயற்கையிடமே ஒப்படைக்கவும் வேண்டும். அதுதான் சிறந்த முறை ஆகும்.

அதைவிட்டு இயற்கையாக மண்ணில் வாழ்ந்து வளம் கொடுக்க வேண்டிய மண்புழுக்களை கோழிப் பண்ணைகளில் கோழிகள் வளர்ப்பதுபோல் வளர்க்க நினைத்தால் அந்த முறையில் மண்புழுவளர்த்து நல்ல லாபத்துக்கு மண்புழு உரம் விற்பவர்கள் வாழத்தான் பயன்படுமே தவிர நிலங்கள் வளங்குறைந்து போவதைத் தடுக்க உதவாது.

வேதி உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் கொட்டிக்கொடுத்துக் கடன்காரர்கள் ஆன விவசாயிகள் வருங்காலத்தில் மண்புழு உரத்துக்கும் பஞ்சகாவ்யத்துக்கும் செலவு செய்து கட்டுபடி ஆகவில்லை என்று சொல்லவேண்டிய நிலையும் வரலாம்.

விவசாயிகள் தற்காலத்தில் தங்கள் நிலத்தில் விளையும் நெல்லை விற்றுவிட்டு கடைகளில் விற்கும் அரிசியைத்தான் வாங்கி உண்கிறார்கள்.

அதுபோல தங்களின் கால்நடைகளின் சாணத்தை மண்புழு வளர்ப்பாளர்களுக்கு விலைக்கு விற்றுவிட்டு அவர்களிடமிருந்து மண்புழு உரத்தையும் பஞ்சகாவ்யத்தையும் வாங்கி உபயோகிக்கும் காலமும் வெகு தூரத்தில் இல்லை.

இதுபோன்ற எதிர்ப்புக் குரல் எல்லாம் கடல் அலைகளின் முன் குருவி கீச்சிடுவது போன்றதுதான்.

யார் கேட்கப் போகிறார்கள்?.

Thursday, October 8, 2015

மறக்கப்பட்ட மரங்கள் - மரபை மீட்டெடுப்போம்

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்

‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?
ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோண்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல். இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்காகப் போராடி வருகிறது ‘பழனிமலை பாதுகாப்புக் குழு’ என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு.
‘‘தமிழனோட நாகரிகம் தாவரத்தோட இணைஞ்சே இருந்திருக்கு சார். ஊர்ப் பெயர்கள்ல கூட மரங்களின் பெயரை வச்சு அழகு பார்த்திருக்காங்க நம் முன்னோர்கள். 

மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு இணக்கமான பாசப்பிணைப்பு இருந்திருக்கு. ஆனா, இன்னைக்கு அப்படி ஒரு மரம் இருந்துச்சா?ன்னு கேட்கற மாதிரி ஆகிருச்சு. மரங்களை இழந்து நாம மழையையும் இழந்துட்டோம்’’ – வருத்தத்தோடு ஆரம்பிக்கிறார் பழனிமலை பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்திரன் கண்ணன்.
‘‘தமிழ்நாட்டுல இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பத்தி ஒரு அகராதியே போடலாம். அவ்வளவு செழிப்பா இருந்த பூமி இது. ‘உசில்’ மரங்கள் நிறைஞ்சு இருந்த இடம்தான் உசிலம்பட்டி. ‘இலுப்பை’ மரங்கள் நிறைஞ்ச பகுதி இலுப்பையூர், ‘விளாமரம்’ இருந்த இடம் விளாத்திகுளம், ‘வாகை’ மரங்கள் செழித்த பகுதி வாகைகுளம்… இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து இப்படி பல ஊர்ப் பெயர்கள்ல மரங்கள் இருக்கு. ஆனா, இன்னைக்கு அந்தந்த ஊர்கள்லயே அந்த மரங்களைக் காணோம்.

அதுக்கெல்லாம் பதிலா, ‘தைல’ மரம், ‘சீமைக் கருவேலம்’, ‘யூஃபோடீரியம்’, ‘தூங்குமூஞ்சி’ன்னு விதவிதமா வெளிநாட்டு மரங்கள் இங்க ஆக்கிரமிச்சிடுச்சு. இந்த மரங்கள் சீக்கிரமே வளர்ந்துரும். அதிகளவு நீரையும் உறிஞ்சும். இதனால, புல்வெளிகளுக்கு நீர் கிடைக்காம அழிய, அதை நம்பி வாழுற கால்நடைகளும் குறைஞ்சு, உயிர்ச் சுழற்சியே மொத்தமா மாறிடுச்சு. பார்த்தீனியம் செடிகள் நீர்நிலைகளையும் அழிச்சிருச்சு. இப்படி வளர்ற மரங்கள்ல காய்கள், பழங்கள்னு எதுவுமே வராது. அதனால பறவைகளும் இல்லாம போயிருச்சு’’ என ஆதங்கப்படுகிறவர், நம்மால் மறக்கப்பட்ட மரங்களின் மருத்துவ மகத்துவத்தையும் எடுத்துரைக்கிறார்.

‘‘ உசில்" மரம் வறட்சியைத் தாங்கி வளரும். எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும். 

"வேங்கை" மரம் இன்னைக்கு அரிதாகிப் போச்சு. இந்த மரத்துல ஒரு குவளை செஞ்சு, அதுல தண்ணி ஊத்தி வச்சா, கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியைக் குடிச்சா சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேதத்தில் இதைப் பயன்படுத்துறாங்க. மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைத் தடுக்கும் மருந்து தயாரிக்கற ஆராய்ச்சி நடக்குது.

"இலுப்பை" மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய், தமிழர் கலாசாரத்துல ரொம்பக் காலமா விளக்கேத்த பயன்பட்டிருக்கு. இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது. 

"தோதகத்தி" மரத்துல எந்தப் பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள்ள மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்துல கண்டுபிடிச்சாங்க. அங்க தோதகத்தி மரத் துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க. ஆனா, இப்ப இது அரிதாகி வர்ற மரம்ங்கிறதால, தமிழக அரசு இதை வெட்ட தடை செஞ்சிருக்கு.

இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் குறுஞ்செடிகள்னு நம்ம ஊர்ல நாலாயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கு. இதுல ‘துத்தி’ன்னு ஒரு செடி… மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளர்ற இடத்துல வச்சா, தொடர்ந்து பார்த்தீனியம் வளராது’’ என்கிறார் அவர் உற்சாகம் பொங்க. 1988ம் ஆண்டு தொடங்கி இப்படிப்பட்ட அரிதான மரங்களை வளர்த்து, அந்தக் கன்றுகளை மக்களுக்கு வழங்கி வருகிறது பழனிமலை பாதுகாப்புக் குழு.
‘‘ஆரம்பத்துல அரிதான மரங்கள், மூலிகை மரங்கள்னுதான் இதையெல்லாம் நினைச்சோம். அவற்றின் தாவரவியல் பெயர் சொல்லித்தான் மக்கள்கிட்டேயும் கொடுத்தோம். அப்புறம்தான் இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுப் பாரம்பரியம்னு தெரிய வந்துச்சு. அதனால இன்னும் இன்னும் நிறைய மரங்களைத் தேடி வனங்களுக்குப் போனோம். இன்னைக்கு எங்க நாற்றங்காலில் 65 வகையான மரக் கன்றுகள் இருக்கு. எல்லாமே பழமையான அரிதான மர வகைகள்.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்னைகளை இந்தத் தலைமுறையில் நாம சந்திச்சுக்கிட்டு இருக்கோம். வீட்டுக்கு ஏ.சியைப் போட்டு தங்களைக் குளிர்ச்சியா வச்சிக்க நினைக்கறவங்க, ஒரு பாரம்பரிய மரம் நட்டா இந்த பூமியும் குளிர்ச்சியாகும்னு நினைக்கணும். மழையை அதிகப்படுத்தி, நீர்வளத்தை தக்க வச்சு, இந்த பூமியை வளப்படுத்தவும் இது மாதிரி மரங்களைத்தான் நாம நம்பியாகணும்!’’ என்கிறார் அவர் அழுத்தமான குரலில்.

மரங்கள் தருதே ஷாம்பு:
* உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாகப் பயன்படுத்தலாம்.
* ‘வழுக்கை மரம்’ எனப்படுகிற ‘தடசு’ மரத்தின் பட்டையை சுடுநீரில் போட்டால், வழுவழு ஷாம்பு ரெடி. இந்த இரண்டு ஷாம்புக்களுக்கும் மருத்துவ குணங்கள் உண்டு.
* மருத மரத்தின் பட்டையைக் காய வைத்து, கஷாயம் பண்ணிக் குடித்தால், உடலில் கொழுப்புச் சத்து குறையும்.
* தாண்டி மரத்தில் காய்கிற தாண்டிப் பழம், மூலத்தைக் குணப்படுத்தக் கூடியது. சளி, வயிற்றுப் போக்கையும் இது கட்டுப்படுத்தும்.

தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப்
பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல்
சுசு(ஸ்)ருதரும் நிறையக்
குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்திய
மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின்
முன்னோடிகள்.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல
நோய்களுக்கும் காரணம் என்பது
ஆயுர்வேத சித்தாந்தம்.

இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு
உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. யப்பான், கொரியா,
பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல்
பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில்
செந்நெல் அமோகமாக விளைந்தது.

'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது
செந்நெல் என்று, ஆனைகட்டிப்
போரடிக்கும் அழகான தென் மதுரை’

என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும்
மலைகளிலும் மானாவாரியாக
விளைந்தது. ஆகவே, இதை,
'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அதனால்தானோ என்னவோ,
சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே
பெரும்பாலும் இதை உணவாகப்
பயன்படுத்தினர்.
நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய
மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும்,
கேரளாவில் இந்த அரிசி மிகவும்
பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’.
ஆனால், அவர்கள் இதை மிகவும்
விரும்பிச் சாப்பிடுகிறார்கள்
என்பதுதான் உண்மை.

இமாச்சல பிரதேசத்தில் குலு
பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில்
அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு,
லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை
சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk);

உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo);

கடைசியாக வெகு உள்ளே
இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன.
நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை
மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. 
இதன் சத்துக்கள்
அனைத்தும் மாவுப்பகுதி வரை
உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.
மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்),
மெக்னீசி(ஷி)யம், செலினியம்,
பொசுபரசு போன்ற கனிமங்கள் -
மிகுதியான நார்ச்சத்து (Fibre) என
சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன.

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி
(ஸி)டென்ட் குணங்களால் இதய
வியாதிகளுக்கு அற்புதமான
மருந்தாகும் ஆன்த்தோசயனின்,
பாலிஃபீனால் போன்ற
வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற
அற்புத வேதிப்பொருள் உள்ளது.
இதைத்தான் மருத்துவத்துறையில்
இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடி
ன்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக
உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு
(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது.
அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே
வளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice)
என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல்
வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy)
சிவப்பு அரிசி நல்ல மருந்து.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி...

இப்போது காணாமல் போன
மர்மம் என்ன?

சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு.

ஆனால், ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed)
என்றார்கள். 
சிவப்பு நெல்லை சிவப்பு
அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த
பிச்சைக் காரர்கள் (Fat beggars) என்றும் அழைத்தார்கள்.
ஏன்..?

ரசாயன உரங்கள் மூலமும்,
பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு
ராட்சத பொருளாதார சாம்ராச்சியத்தை
உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு,
எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின்
தேவையும் இன்றி வளர்ந்த இந்த
செந்நெல் பிடிக்கவில்லை.

தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள
இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது
திட்டியே தீர்ப்பதென்றும்
முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட
வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர்.

நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும்
மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-
க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.

தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம்
தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள்
தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு
நாம் ஏன் மாறக்கூடாது ? !

"நோயற்ற வாழ்வே ! குறைவற்ற செல்வம் !"

"வாழ்க வளமுடன்"

Saturday, September 19, 2015

பாரம்பரிய நெல் திருமணப்பாடல்

மாப்பிள்ளை சம்பா நெல்லுக்கும்,
தூயமல்லி நெல்லும்க்கும்,
கல்யாணமாம் கல்யாணம்.

மணக்கோல பந்தலிலே
குடைவாழை கட்டி இருக்கு
மணம் பார்க்க வந்தாருக்கு
கிச்சிலி சம்பா சோறிருக்கு!

வாடன்சம்பா வாசல் நின்று
வணக்கம் சொல்லி அழைத்தது.
கப்பசம்பா கலியன் சம்பா
சாப்பாடு போட்டது.

தங்கசம்பா நீலசம்பா
தங்கநகை தந்தது.
சீரகச்சம்பா சேலம் சம்பா
சீர்வரிசை தந்தது.

செங்கல்பட்டுச் சிறுமணி
ஜில்லுஜில்லு வைகுண்டா.
புழுதிசம்பா, குரங்கு சம்பா
குதிரைவால் சம்பா,
சம்பா சம்பா மோசனம்.

கார் சம்பா... காட்டுசம்பா
கார்த்திகை சம்பா...!

சன்னச் சம்பா, ஒன்றைச் சம்பா
அறுபதாம் சம்பா

அரியான் நெல்லு, இறவை பாண்டி...
கண்டசாலி, கருங்குறுவை,கருத்தக்கார்
கருப்பு நெல்லு,கல்லுருண்டையான்...

சொர்னவார்,சொர்னவாலி,
வைகுண்டா,செம்பாள,
கூம்பால,குழியடிச்சான்,
கல்லிமடையான் காடகழுத்தான்
காட்டுக்குத்தாலம்,அறுபதாம்கோடை.

பிசினி,தின்னி திடக்கால்
நொருங்கன்,பட்டர் பிசின்!
மகத்தே, மதிமுடி,மரநெல்
ரசகடம்,லட்சுமி காஜல்!

மட்டக்குறுவை,கோனக்குறுவை,
சூரன்குறுவை,வெள்ளக்குறுவை,
வெள்ளக்கரியன்,வீதிவடங்கான்,
வரப்புகுடைஞ்சான், வெள்ச்சி,ஜிர்குடை
வெள்ள சித்திரைக்கார்.

மட்டகார், பட்டகார், புழுதிக்கார்,
புழுதிக்கால், சித்திரைக்கார்.
சிவப்புகுழி அடிச்சான்.

கெளனிநெல்லு, கல்லுருண்டை,பிச்சவாரி,
பெரியவாரி,சடகாடு,குந்தாலி...!
முட்டக்காடு, குள்ளக்காரு,
கப்பக்காரு, பெருங்காரு,
வெள்ளக்காரு, சிவப்பு குருவிக்காரு,

அத்தனை பேரும் வந்தாங்க
அன்பு வாழ்த்துப் சொன்னாங்க.
வாழ்க வாழ்க வாழ்கவென்று
வாழ்த்திச் சொன்னங்க.!

•

துரை பச்சையப்பன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு :

இதில் உள்ள பாடல் வரிகள் எழுதிவர்கள் வேறு. 

இது எனக்கான சேமிப்பு தளம் ஆகும்.

இதில் உள்ள தகவல்களுக்கு அதை எழுதியவர்களே உரிமை உடையவர்கள் 

Sunday, October 19, 2014

மசானபு பூகோகா - உலகமே அற்புதமான ஒன்றாக மாறிவிடும்

மசானபு பூகோகா என்ற மறைந்த ஜப்பானிய அறிஞரின் உழவில்லா இயற்கைமுறை வேளாண்மை உலக மக்களிடையே முன்னோடிகளிடையே செல்வாக்குப் பெற்று வருகிறது.

அவருடைய வேளாண்மை முறை என்பது நடைமுறைப் படுத்தப்பட்டால் அது கண்களுக்கும் கருத்துக்கும் இயற்கைக்கும் அனைத்து உயிர்களுக்கும் விருந்தாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை!

உலகமே அற்புதமான ஒன்றாக மாறிவிடும்.

ஆனால் நாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன.

ஆதாவது அவர் வாழ்ந்து நிரூபித்த இடம் அருமையான இயற்கைச் சூழலும் நீர்வளமும் மிக்க பகுதியாகும்.

அப்படிச் செய்வதும் அப்படி வாழ்வதும் எளிமையான ஒன்று...

ஆனால் அதை முன்னுதாரணமாகக் கொள்ளும் நாம் நமது நாட்டில் உள்ள பல்வேறு வகையான நீர்வளம் நிலவளம் ஆகியவற்றுக்குப் பொருத்தமாக அதை அப்படியே பின்பற்ற முடியாது.

அதனால் நீர்வளம் அற்ற பகுதிகளில் இயற்கை முறையில் ஆதாவது புகோகா முறையில் சாகுபடி செய்யும் முறைகளை வெற்றிகரமாக செய்து முன்னுதாரணம் ஏற்படுத்தவேண்டும்.

அதுதான் அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும்.

அதைத் தவிர இன்னொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆதாவது இயற்கை முறை வேளாண்மையும் அது சார்ந்த வாழ்க்கையும் பல்லுயிர்ப் பெருக்கமும் மண்ணுக்கும் மக்களுக்கும் சொர்கபூமி என்பது எப்படி உண்மையோ அவ்வளவு உண்மை இன்று வேளாண்மை என்பது வர்த்தகம் என்னும் நுகத்தடியில் பிணைக்கப்பட்டு்ள்ளதும் ஆகும்.

அதில் இருந்து மீளவேண்டும் என்றால் தன்னளவில் நிலம் வைத்திருப்பதும் அதில் உழைப்பதும் மட்டும் போதுமானது அல்ல!

அதில் இருந்து பெறப்படும் வருவாய் என்பது பண்ணை செலவுக்கும் ஆட்கள் செலவுக்கும் வாழ்க்கைச் செலவுகளுக்கும் போதுமானதாக இருக்கவேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நிலை இயற்கை முறை உழவில்லா வேளாண்மையில் உருவாக்க முடிந்தால் மட்டுமே முழு வெற்றியாக இருக்கும்.

அது வறண்ட நிலங்களிலும் சாத்தியப் படவேண்டும்.

சாத்தியப் படும்!

அதற்கான முறையில் திட்டமிடப்படவேண்டும்.

Subash Krishnasamy
http://www.drumsoftruth.com/2014/10/84.html

Wednesday, October 8, 2014

‘நஞ்சு’ மண்ணில் பூத்த ‘அமுதம்‘!

அ மெரிக்கா வின் ராச்சேல் கார்சன், ‘மௌன வசந்தம்' என்ற புத்தகத்தை வெளியிட்டது பற்றி கடந்த இதழில் பார்த்தோம். ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, உயிரினங்களுக்கே ஆபத்தாக மாறிக்
கொண்டிருப்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்க...
உலகமே அதிர்ச்சியோடு திரும் பிப்பார்த்தது. அதேசமயம், ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப் பாளர்கள், நாக்கூசக்கூடிய வார்த் தைகளால் ராச்சேல் கார்சனை அர்ச் சனை செய்தார்கள். இதை நினைக்கும் போது, ‘அமுதம் பிறந்த மண்ணில்தான் நஞ்சு பிறக்கிறது! கட்டபொம்மன் பிறந்த மண்ணிலேதான் எட்டப்பனும் பிறக்கிறான்’ என்று 'வீரபாண்டிய கட்ட பொம்மன்' படத்தில் சிவாஜி பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது.
அமெரிக்க மக்கள் அத்தனை பேரும் கிளர்ந்தெழுந்து மிகக் கொடிய நஞ்சை எதிர்த்துக் குரல்கொடுக்க ஆரம்பித் தனர். இதையடுத்து, விஷ மருந்துகளின் பயன்பாட்டைத் தடை செய்தது அமெரிக்கா. ஆனால், அவற்றின் உற்பத்தியை தடை செய்யவில்லை. ‘ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா கண்டங்களில் வாழும் மக்களின் தலையில் அதைக் கொட்டி பிழைத்துக் கொள்ளுங்கள்’ என்று தங்கள் நாட்டு முதலாளிகளுக்கு வழிவகை செய்து கொடுத்தது. அப்படிப்பட்ட அமெரிக்க மண்ணிலும் மண்புழுவைப் போல் வெளியில் தெரியாமல், ஒரு பண்ணையில் இயற்கை வழி விவசாயம் நடந்து கொண்டு இருந்தது. அந்தப் பண்ணைக்கு உரியவர்... ரொடெல். அதுவும் இந்தியாவிலிருந்து இயற்கை விவசாயத்தை கற்றுக்கொண்டு போனவர் அவர் என்பது எத்தனை பெருமைக்குரிய விஷயம்.
'ரொடெல் பண்ணை' இன்று ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக அங்கே வளர்ச்சி கண்டுள்ளது. ‘ஐம்பது ஆண்டுகளாக மண்ணுக்கு மறுவாழ்வு அளிக்கும் இயற்கை வழி உழவாண்மைக்காக உலகெங்கும் ரொடெல் நிறுவனம் பிர சாரம் செய்து வருகிறது. இயற்கை வழி பயிர் சாகுபடி மூலம் ஏராளமான ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்ய முடியும். இந்த முயற்சியின் மூலம் இயற்கைவள ஆதாரமும் சுற்றுச் சூழலும் தானே மேம்படும்' என்பதுதான் அந்தப் பண்ணையின் பிரதான பிரசா ரமாக இருக்கிறது.
அமெரிக்காவில் வாழும் இந்தியரான லட்சுமிநாராயணன் சென்ற ஆண்டு ஒரு புத்தகத்தை அனுப்பி இருந்தார். அது, ரொடெல் நிறுவனம் வெளியிட்டிருந்த 'இயற்கை வழி உழவாண்மையின் வெற்றி' என்ற புத்தகமாகும். இந்த ஆண்டு, அதே நிறுவனத்தின் இன் னொரு புத்தகத்தை அனுப்பி இருக் கிறார் லட்சுமிநாராயணன். அதன் தலைப்பு 'நீயும் சாகுபடியும் தண்ணீரும்'! இந்தப் புத்தகம் கூறும் கொள்கைகள், செய்முறைகள், உலகின் எந்த சீமைக்கும் பொருந்தி வரும்.
*மனிதன் மற்ற உயிரினங்களில் இருந்து மேம்பட்டவன் அல்ல. அவன் இயற் கையின் ஒரு அங்கம். அவனால் இயற் கையைக் கட்டுப்படுத்தவோ மாற்றி அமைக் கவோ முடியாது. ஆனால், ஒத்திசைந்து வாழ முடியும்.
*செடி, கொடிகளும் விலங்குகளும் சுமூகமாக வாழ்கின்றன. அவை காற்று, தண்ணீர், மண், வெளி, சூரிய ஒளி ஆகிய இயற்கை ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
*மண்ணில் கழிவு என்று எதுவும் இல்லை. உணவுச் சங்கிலியில் பல கண்ணிகள் உள்ளன. மேல் மட்டத்தின் கழிவு, கீழ் மட்டத்தின் உணவு. மனிதன் கழித்ததை, கால் நடைகள் உண்ணுகின்றன. கால்நடைக் கழிவு, புழுக்களுக்கும் நுண்ணுயிர்களுக்கும் உணவாகிறது. நுண்ணுயிர் செயல்பாடு செடி வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. உணவுச் சங்கிலியை புரிந்து செயல்பட்டால் பண்ணைக்குத் தேவைப்படும் சக்தியின் அளவு குறையும்.
*உணவு உற்பத்தி இயற்கை சுழற்சியைச் சார்ந்து உள்ளது. ஆரோக்கியமான மண் என்பது உயிரற்ற திடப்பொருள் அல்ல. உயிரோட்டமுள்ள ஒரு அமைப்பு.
செடி, கொடி, மரங்களே அடிப்படையில் உற்பத்தி யாளர்கள். அவை சூரியசக்தியை க்ளுகோஸாக மாற்று கின்றன. நிலைத்த நீடித்த பயிர்த் தொழிலென்பது இயற்கை சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியும். ரசாயன பயன்பாடுகளும் எந்திரங்களின் உபயோகமும் மண் அரிப்புக்கு வழிகோலுகின்றன.
*நிலம் வளமானதா... இல்லையா என் பதைக் காட்டித் தரும் உயிரினம் மண்புழு. அது மண்ணில் காற்றோட்டத்தினை உண்டு பண்ணுகிறது. தனிமங்களை செடி ஏற்கும் வண்ணம் மாற்ற உதவுகிறது.
*பூச்சிகள் எதிரிகள் அல்ல. மகரந்தச் சேர்க்கைக்கு அவை இன்றியமையாதவை. அவற்றில் ஒன்று மற்றொன்றுக்கு உணவா கின்றது.
*பருவம் அறிந்து பயிர் செய்தல், மூலிகைச் சாறு தெளித்தல், உரிய விளைச்சல் எடுக்க தகுந்த முறைகள்.
இப்படி பல்வேறு விஷயங்களை எடுத்துப் போட்டு உலகுக்கு வழிகாட்டும் ரொடெல் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன், இந்தியா வின் சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் வந்தனா சிவாவை சிறப்புரையாற்ற அழைத்திருந்தது. அங்கே சென்ற வந்தனா சிவா, ''உங்களுக்கு எப்படி இயற்கை வழியில் ஆர்வம் வந்தது?'' என்று அந்நிறுவனத்தாரிடம் கேட்டார்.
அப்போது கிடைத்த பதில்- ‘‘முன்பு எங்க தாத்தா இந்தியா போயிருந்தார். அங்கே ஆல்பர்ட் ஓவார்டு செய்து கொண்டிருந்த ஆராய்ச்சிகளைக் கண்டு இயற்கை வழிக்கு மாறினார்’’ என்பதுதான்!

ஏர் ஓட்டுவதில் இரண்டு முறை உண்டு.

வெளாவுல புடி!

ஒற்றை ஏர் ஓட்டுவது, ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஏர் ஓட்டுவது.
எப்படி ஓட்டினாலும் துவக்கத்தில் மூன்று படைக்கால் ஓட்ட வேண்டும்.
அதை வெளா ஓட்டுவது என்பார்கள். முதல் வெளா, இரண்டாவது வெளா, மூன்றாவது வெளா.
முதல் வெளா முழுமை அடைதவுடன் இரண்டு வெளாதான் மீதம் இருக்கும். அப்போது மீண்டும் ஒரு வெளா ஒட்டவேண்டும்.
அப்போதுதான் ஒவ்வொரு வெளா உழவு முடியும்போதும் உழவு பூமி தள்ளிப் பொய்க் கொண்டே இருக்கும்.
ஒரு ஏர் ஓட்டும்போது பிரச்சினை வராது.
ஆனால் பல ஏர் ஓட்டும்போது முதல் வெளா முழுமையடையும் நிலையில் அனைத்து ஏர்களும் அதே வெளாவில் வர இடம் இல்லாமல் இருந்தால் யாருடைய ஏருடன் முதல் வெளா முடிந்து விடுமோ அவர் முன்னேச்சரிக்கையாகத் தனக்குப் பின்னால் வருபவரைப் பார்த்து வெளாவுல புடி என்பார்!
உடனே அவருக்குப் பின்னால் உழவோட்டி வருபவர் எல்லோரும் முதல் விழாவை விட்டுவிட்டு இரண்டாவது வெளாவிலேயே மாட்டைத் திருப்பி விடுவார்கள்.
அடுத்த பக்கம் போய் மீண்டும் இணைந்து கொள்வார்கள்.
இதுதான் வெளாவுல புடி அப்படிகிறதுக்குப் பொருள் ஆகும்.
அப்படிப் பிடிக்காமல் எல்லோரும் பின்னாலேயே வந்தால் ஒரு ஏருக்கு மட்டும் உழவு இருக்கும் நிலையில் அனைத்து எர்களும் ஒரே படைக்காலில் உழும்போது தேவையில்லாமல் மாடுகள் சுற்றுவதால் உழவு அதிகம் ஆகாது.
ஆனால் ஒரு ஏர் மட்டும் ஓட்டும்போது இந்தப் பிரசினை வராது!
பெரிய விவசாயிகள் பல ஏர்களைக் கொண்டு ஓட்டும்போது வெளாவுல புடி என்று அடிக்கடி சொல்லப்படுவதைக் கேட்கலாம்.
ஆனால் சின்ன விவசாயி தன்னுடைய ஒரு ஏர் கொண்டு ஓட்டுவதால் வெளாவுல புடின்னு சொல்லும் வாய்ப்பு இல்லை!
அதனாலதான் தகுதிக்கும் சக்திக்கும் அதிகமான யோசனை சொல்பவர்களைப் பார்த்துக் கிண்டலாக "ஓட்றது ஒரு ஏரு! அதுல வெளாவுல புடீன்னானாம்!" என்று எகத்தாளமாகப் பழமொழி சொல்வார்கள்!

-Subash Krishnasamy
வெளாவுல புடி! 

ஏர் ஓட்டுவதில் இரண்டு முறை உண்டு.

ஒற்றை ஏர் ஓட்டுவது, ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஏர் ஓட்டுவது. 

எப்படி ஓட்டினாலும் துவக்கத்தில் மூன்று படைக்கால் ஓட்ட வேண்டும்.

அதை வெளா ஓட்டுவது என்பார்கள். முதல் வெளா, இரண்டாவது வெளா, மூன்றாவது வெளா.

முதல் வெளா  முழுமை அடைதவுடன் இரண்டு வெளாதான் மீதம் இருக்கும். அப்போது மீண்டும் ஒரு வெளா ஒட்டவேண்டும். 

அப்போதுதான் ஒவ்வொரு வெளா உழவு முடியும்போதும் உழவு பூமி தள்ளிப் பொய்க் கொண்டே இருக்கும். 

ஒரு ஏர் ஓட்டும்போது பிரச்சினை வராது. 

ஆனால் பல ஏர் ஓட்டும்போது முதல் வெளா முழுமையடையும் நிலையில் அனைத்து ஏர்களும் அதே வெளாவில் வர இடம் இல்லாமல் இருந்தால் யாருடைய ஏருடன் முதல் வெளா முடிந்து விடுமோ அவர் முன்னேச்சரிக்கையாகத் தனக்குப் பின்னால் வருபவரைப் பார்த்து வெளாவுல புடி என்பார்!

உடனே அவருக்குப் பின்னால் உழவோட்டி வருபவர் எல்லோரும் முதல் விழாவை விட்டுவிட்டு இரண்டாவது வெளாவிலேயே மாட்டைத் திருப்பி விடுவார்கள். 

 அடுத்த பக்கம் போய் மீண்டும் இணைந்து கொள்வார்கள்.

இதுதான் வெளாவுல புடி அப்படிகிறதுக்குப் பொருள் ஆகும். 

அப்படிப் பிடிக்காமல் எல்லோரும் பின்னாலேயே வந்தால் ஒரு ஏருக்கு மட்டும் உழவு இருக்கும் நிலையில் அனைத்து எர்களும் ஒரே படைக்காலில் உழும்போது தேவையில்லாமல் மாடுகள் சுற்றுவதால் உழவு அதிகம் ஆகாது.

ஆனால் ஒரு ஏர் மட்டும் ஓட்டும்போது இந்தப் பிரசினை வராது! 

பெரிய விவசாயிகள் பல ஏர்களைக் கொண்டு ஓட்டும்போது வெளாவுல புடி என்று அடிக்கடி சொல்லப்படுவதைக் கேட்கலாம். 

ஆனால் சின்ன விவசாயி தன்னுடைய ஒரு ஏர் கொண்டு ஓட்டுவதால் வெளாவுல புடின்னு சொல்லும் வாய்ப்பு இல்லை! 

அதனாலதான் தகுதிக்கும் சக்திக்கும் அதிகமான யோசனை சொல்பவர்களைப் பார்த்துக் கிண்டலாக "ஓட்றது ஒரு ஏரு! அதுல வெளாவுல புடீன்னானானாம்!" என்று எகத்தாளமாகப் பழமொழி சொல்வார்கள்! 
 Subash Krishnasamy 
http://www.drumsoftruth.com/2014/08/blog-post.html

Wednesday, August 13, 2014

‘‘இளைஞர்களே, வாருங்கள்... இணையற்ற லாபம் பாருங்கள்!‘‘

பசுமைக் குடிலுக்குள் பாரம்பரிய விவசாயம்            

 மலைத்தோட்ட விவசாயிகளின் முக்கியப் பிரச்னையே வனவிலங்குகளும், இயற்கைச் சீற்றங்களும்தான். இதன் காரணமாக எதையும் உருப்படியாக விளைவிக்க முடியாமல் சிக்கித் தவித்த விவசாயிகளுக்கு தற்போது நன்கு கைகொடுத்து உதவி வருகிறது பசுமைக்குடில் விவசாயம்.
அதையும் இதையும் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்த பலரும் தற்போது பன்னிரண்டு சென்ட் அளவுக்கு பசுமைக்குடில் அமைத்து ஜெர்பரா, கார்னேஷன், ரோஜா போன்ற கொய் மலர்களையும்... கேப்ஸிகம் என்னும் குடைமிளகாயையும் சாகுபடி செய்து வருகின்றனர்.
பெரும்பாலான விவசாயிகள் பலவிதமான செயற்கை உரங்களைப் பயன்படுத்தித்தான் பசுமைக்குடிலுக்குள் பயிர்செய்து வருகின்றனர். ஆனால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக் கானல் பகுதியில் முதல்முறையாக பசுமைக்குடிலுக்குள் இயற்கை விவசாயத்தைப் புகுத்தி கொய்மலர்களையும், குடைமிளகாயையும் சாகுபடி செய்து சாதனை படைத்து வருகிறார் ஜெயக்குமார்.
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் மலை மீது குறுக்கிடுகிறது ஊத்து. இந்த சிறு கிராமத்திலிருந்து வலதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் நான்காவது கிலோ மீட்டரில் இருக்கிறது பண்ணைக்காடு. கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ மூன்றாயிரத்து எண்ணூறு அடி உயரத்திலிருக்கும் கிராமம். இங்கும், இதையடுத்திருக்கும் வடகரைப்பாறையிலும் பசுமைக் குடில்கள் அமைத்து விவசாயம் செய்து வருகிறார் ஜெயக்குமார் (அலைபேசி: 94436-77673).
அவரைத் தேடிபோனபோது, ''பசுமைக்குடில் மட்டும்தான் நவீனம். உள்ளுக்குள் நடக்கிற விவசாயமெல்லாம் பாரம்பரியம்தான்'' என்று பளீர் சிரிப்புடன் வரவேற்றவர், கடகடவென பேச ஆரம்பித்தார்.
''பண்ணைக்காடுதான் எங்க சொந்த ஊர். என்னோட அப்பா ஆசிரியரா இருந்தார். நான் டி.-பார்ம் படிச்சி முடிச்சிட்டு, உள்ளுரிலேயே மருந்துக் கடை நடத்திக்கிட்டிருக்கேன். எங்களுக்கு இருந்த பூர்வீக நிலத்துல ரொம்ப வருஷமா காபிதான் போட் டிருந்தோம். ஆனா, அதுல பெரிய அளவு வருமானம் இல்லாததால நான் விவசாயத்துல ஆர்வம் காட்டாம இருந்தேன். பாகப்பிரிவினையில் எனக்கு கொஞ்சம் தோட்டம் பிரிச்சு கொடுத்தாங்க. அதுக்கப்புறம், விவசாயம் பண்ணலாம்னு எனக்கு ஆசை வந்து, அதைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன்.
அந்தச்சமயத்துல மலைப்பிரதேசத்துல கார்னேஷன் பூ சாகுபடிதான் பிரபலமாகிட்டு இருந்துச்சு. அதுபத்தின தகவல்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். அப்ப ஜெர்பரா பூ பத்தி எனக்கு தெரிய வந்துச்சு. ஆனா, அதை யாருமே எங்க பகுதியில் முயற்சி செய்யல. நான் பசுமைக்குடில் அமைச்சு அதை பயிர் பண்ண ஆரம்பிச்சேன். இங்க ஜெர்பரா பயிரிட்ட முதல் ஆள் நான்தான். ஜெர்பரா சாகுபடி பயிற்சியாளர்கள் சொல்லிதந்த மாதிரி ரசாயன உரங்களைத்தான் முதல்ல பயன்படுத்தினேன். அது எனக்கே ஒரு மாதிரியா இருந்துச்சி. பசுமைக்குடில் மூடியே இருக்கறதால, உள்ள நுழைஞ்சதும் ரசாயன வாசம் மூக்கைத் துளைக்கும். வாரத்துக்கு முணு முறை மருந்தடிப்போம். மூக்குல துணியைச் சுத்திக் கிட்டுதான் உள்ள வருவோம். சின்னப் புள்ளைங் களை குடிலுக்குள்ள கூட்டிக்கிட்டு வரவேமாட் டோம். போகப்போக மருந்து வாசம் எங்களுக்குப் பழகிட்டாலும், ஒரு பக்கம் உறுத்தலாவே இருந்துச்சு.
இதைப்பத்தியே யோசிச்சிக்கிட்டிருந்த சமயத்துல தான், இயற்கை விவசாயம் மேல எனக்கு ஆர்வம் வந்து... நம்மாழ்வாரோட புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சேன். பஞ்சகவ்யா, புண்ணாக்கு இதை யெல்லாம் வாங்கி, ஜெர்பராவுக்குப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். பஞ்சகவ்யா, அமிர்தகரைசல் இதை யெல்லாம் நானே தயாரிக்கவும் கத்துக்கிட்டேன். இயற்கை உரங்களைத் தயாரிக்கறதுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. ஆனா, அதோட பலனை நினைச்சதும் கஷ்டமெல்லாம் பறந்துடுச்சி. இப்ப இயற்கை உரங்கள் தயாரிக் கறதுக்காகவே வடகரைப்பாறையில ஒரு தோட்டம் வாங்கி, அதுல நாலு மாடுகளையும் வாங்கி விட்டிருக்கேன். அங்கயே கொட்டகை போட்டு இயற்கை உரங்களைத் தயாரிக்கிறேன். முதல் நாலஞ்சு மாசம் பெரிய அளவுல விளைச்சல் இல்லை. ஆனா, அடுத் தடுத்த மாசங்கள்ல வழக்கத்தைவிட அதிக விளைச்சல். இயற்கையில இப்படி வெற்றியடைஞ்சதும், வடகரைப் பாறையில் புதுசா மூணு பசுமைக்குடில் போட்டு முழுக்க இயற்கை முறையில ஜெர்பரா, கார்னேஷன் இதையெல்லாம் போட்டேன். இப்ப முழுக்க எல்லாத்தையும் இயற்கைக்கு மாத்திட்டேன்.
எல்லாரும் பசுமைக்குடில் போட்டு குடைமிளகாய் சாகுபடி செய்றாங்க. உணவுப்பயிரான அதுக்கு பெரும்பாலும் ரசாயன உரங்கள்தான் போடுறாங்க. அதையும் ஏன் இயற்கையில நாம முயற்சி செய்து பார்க்கக் கூடாதுனு தோணுச்சி. உடனே அதுக்காக ஒரு பசுமைக்குடில் அமைச்சி, குடைமிளகாயை பயிரிட்டேன். முழுக்க இயற்கை உரத்தைப் போட்டேன். இப்ப அது நல்லா விளைஞ்சிருக்கு. இன்னும் பத்து பதினைந்து நாள்ல அறுவடை செய்ய ஆரம்பிச் சுடுவேன்.
காய்கறிகளைப் பொருத்தவரை ஏத்த இறக்கமாத் தான் விலை இருக்கும். அதுக்கு தகுந்தபடிதான் வியாபாரிங்க வாங்குவாங்க. குடைமிளகாய்க்கும் அப்படித்தான். ஆனா, என்னோட தோட்டத்தை வந்து பார்த்துட்டுப் போன வியாபாரிங்க, இயற்கை உரத்துல விளைஞ்ச மிளகாயோட தரத்தை வெச்சி, 'விலை குறைஞ்சாலும் கூடினாலும் வருஷம் முழுக்க கிலோ ஐம்பது ரூபாய்னு விலை வெச்சி எடுத்துக்குறோம்'னு ஒப்பந்தம் போட்டிருக்காங்க. இதுவே இயற்கைக்கு கிடைச்ச வெற்றிதான்'' என்று சந்தோஷக் கூச்சலிட்ட ஜெயக்குமார்,
''அடுத்ததா, 'பசுமை விகடன்'ல வரும் ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறையை கொஞ்சம்கொஞ்சமா இதுல புகுத்தலாம்னு இருக்கேன். அப்படிச் செய்தா... இன்னும் இன்னும் லாபம் கிடைக்கும்'' என்று உறுதியான குரலில் சொன்னார்.
தொடர்ந்து பேசியவர், ''இயற்கை முறையில பயிராகியிருக்கற பூக்களும் நல்லா இருக்கறதால அதுக்கும் வருடம் முழுவதும் ஒப்பந்தம் போட்டி ருக்காங்க. இன்னும் பெரிய அளவுல பசுமைக் குடில்கள் போட்டு ஏற்றுமதி பண்ணலாம்னு திட்டம் வெச்சிருக்கேன். பூக்களைப் பொருத்தவரை முன்னைக் காட்டிலும் இப்போ விளைச்சல் அதிகரிச் சிருந்தாலும் ஏற்கெனவே ஒப்பந்தம் போட்டுட்டதால இப்போதைக்கு பழைய விலைதான் கிடைக்குது. வர்ற 2008-ம் வருஷத்துல இருந்து புது ஒப்பந்தம் போடணும். இயற்கை விவசாயம்கறதால அதிக விலை கிடைக்கும்.
என்னோட தோட்டத்து விளைபொருளுக்கு சந்தையில மதிப்பு கூடியிருக்கற அதேசமயம், உற்பத்திச் செலவும் குறைஞ்சிருக்கு. ரசாயன உரம் போடாததால இடுபொருள் செலவு 40% குறைஞ்சிருக்கு. ஆக, ரெண்டு வகையில லாபம். அதைவிட பெரிய லாபம்... ரசாயனம் இல்லாத காயை உற்பத்தி பண்ணி நாலு பேருக்கு சாப்பிடக் கொடுக்கிறோம்கற சந்தோஷமும்... சுற்றுச்சூழலைக் கெடுக்காத விவசாயம் செய்றோம்ங்கற மனத்திருப் தியும்தான்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட ஜெயக்குமார்,
''மலைப்பகுதியில அரை ஏக்கர் இடம் இருந்தாக்கூட போதும். யார் வேணும்னாலும் தைரியமா செலவே இல்லாம இயற்கை விவசாயத்துல பூக்கள், குடை மிளகாய் உற்பத்தி பண்ணி நல்லா சம்பாதிக்கலாம். பசுமைக்குடில் மட்டும்தான் செலவு. அதுக்கும் அரசாங்க மானியம், கடனெல்லாம் கிடைக்குது. அதனால இளைஞர்களெல்லாம் தைரியமா இந்த தொழில் பண்ணலாம். கூட்டா பல பேரு சேர்ந்தும் செய்யலாம். ஏற்றுமதி செய்தா இன்னும் அதிக லாபம் சம்பாதிக்கலாம்'' என்று நம்பிக்கை பொங்கச் சொன்னார். 

சாகுபடி குறிப்புகள்! 
 
ஜெர்பரா, கார்னேஷன் மலர்கள் மற்றும் குடை மிளகாய் சாகுபடி பற்றிய ஜெயக்குமாரின் ஆலோசனைப் பட்டியல்...
'கொய்மலர்கள், கேப்ஸிகம் மாதிரியான பயிர்களைப் பொருத்தவரையில் நிலம் தயார் செய்வது, பார் அமைப்பது எல்லாமே ஒரேமாதிரிதான் இருக்கும். முக்கிய தேவை பசுமைக்குடில். அந்தந்த பகுதியில் இருக்கும் காற்றோட்டம், வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் இவற்றுக்கு ஏற்ப பசுமைக்குடிலின் வடிவம் மற்றும் அமைப்பு மாறுபடும். அதேமாதிரி விலையிலும் மாற்றங்கள் இருக்கும். மரச்சட்டங்களைக் கொண்டு அமைத்தால் ஒன்றரை லட்சத்துக்குள் செலவு முடிந்துவிடும். இரும்புக்குழாய்களைப் பயன்படுத்தினால் ஐந்து லட்சம் வரை செலவாகும். மரத்தில் அமைத்தால் அரசு மானியம் கிடைக்காது. மானியத்தை எதிர் பார்க்காததால் நான் மரங்களை வைத்துதான் குடில் அமைத்துள் ளேன்.
பசுமைக்குடில் அமைத்தபிறகு, தொழு உரத்தைப் போட்டு நிலத்தை தயார் செய்யவேண்டும். இரண்டடி அகலம் கொண்டதாக பார் அமைக்கவேண்டும். பாரின் மீது இரண்டு வரிசையாக நாற்றுகளை நடவேண்டும். செடிக்குச் செடி குறுக்குவாட்டில் ஒரு அடியும் பக்கவாட்டில் ஒரு அடியும் இடைவெளி இருப்பது போல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
புங்கம், வேம்பு, புளியமுத்து, கடலை இவற்றில் விலை குறைவாக கிடைக்கும் புண்ணாக்குகள் மற்றும் நெல் உமி சாம்பல் சுமார் ஒன்றரை டன் அளவுக்கு ஏற்பாடு செய்து, அதை தண்ணீரில் கரைத்து மாதம் ஒரு தடவை செடிகளுக்கு ஊற்றவேண்டும். பஞ்ச கவ்யாவை பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை நிலத்திலும் வாரத்துக்கு ஒரு தடவை தெளிப்பான் மூலமாகவும் கொடுக்கவேண்டும்.

Thursday, August 7, 2014

Agriculture secrets!

மா, கொய்யா, சப்போட்டா பழத் தோட்டங்கள்ல அணிளோட நடமாட்டம் அதிகமாக இருக்கும். அணில்கள விரட்ட ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்குங்க. ஒரு கைப்பிடி பூண்டு எடுத்து அரைச்சுக்குங்க. அதை நாலு லிட்டர் தண்ணியில கலந்து பழ மரத்து மேல தெளிங்க. பூண்டு வாசனையை கண்ட அணில்கள் தலைத்தெறிக்க ஓடிபோயிடும். பழத் தோட்டமும் பாதிப்பு இல்லாம இருக்கும்.

தென்ன மரம் அதிகம் காய் காய்க்க, ஒரு யுக்தியை செஞ்சிகிட்டு இருக்காங்க ஒரிசா மாநில விவசாயிங்க. அதாவது தென்னம் பாளையில ஒரு செங்கல்லைக் கட்டித் தொங்க விடறாங்க. இதனால பாளையில இருக்குற குரும்பைகள் கொட்டாம குலை குலையா தேங்காய் காய்க்குதாம்.

சீமைக் கருவேல், வேலிக்காத்தான், ஆபீஸ் முள்னு பல பேர்ல சொல்லப்படற முள்ளுச்செடி நம்ம ஊர்ல எங்க பாத்தாலும் வளந்து கிடக்கும். இதோட காய்ங்க கால்நடைக்கு அருமையான தீவனம். முதிர்ந்த காய்ங்க பளபளனு மஞ்சள் நிறத்துல இருக்கும். அதை சேகரிச்சி தினமும் அரை கிலோ வீதம் பால் மாட்டுக்கு கொடுத்து வந்தா, அதிகமா பால் கிடைக்கும். மாடும் நல்ல கொழுகொழுனு இருக்கும்.

வெண்டைச் செடிக்கு சத்துப் பற்றாக்குறை வந்துச்சுன்னா, வெள்ளை வெளேர்ன்னு வெளுத்துடும். இதை சரி செய்யவும் சீமைக் கருவேல்தான் உதவி செய்யுதுங்க. அரை லிட்டர் சீமைக் கருவேல் இலைச்சாறை பத்து லிட்டர் தண்ணியில கலந்து தெளிச்சா வெண்டைச் செடி பசுமையா மாறிடும். காயும் சும்மா பச்சை பசேல்னு இருக்கும்.

மிளகாச் செடிய அடிக்கடி சாம்பல் நோய் தாக்கும். இதைத் தடுக்கவும் சீமைக் கருவேல் கைக் கொடுக்குதுங்க. பத்து லிட்டர் தண்ணியில அரைலிட்டர் சீமைக் கருவேல் சாறைக் கலந்து தெளிக்கலாம். இப்படி செஞ்சா இலைப் புள்ளி நோயும் வராது. மிளகாச் செடியும் பச்சை, பசேல்னு இருக்கும்.

நாட்டுக் கோழி முட்டைய பாதுகாத்து வைக்க சுலபமான வழி இருக்கு.
மண் பானையில பாதி அளவுக்கு அடுப்புச் சாம்பல் போட்டு நிரப்புங்க. அதுக்குள்ள கோழி முட்டைகளை அடுக்கி வைங்க. இப்படி செஞ்சா ஒருமாசம் வரைக்கும் கூட முட்டை கெட்டுப் போகாம இருக்கும்.

Monday, June 30, 2014

பாதிக்கப்பட்ட மண்ணை இயற்கை முறையில் சரி செய்ய

சாயக்கழிவுகளால் பாதிக்கப்பட்ட மண்ணை இயற்கை முறையில் சரி செய்ய வெட்டி வேர் பயிரிடலாம். வெட்டி வேர் பயிரிட்ட மூன்று ஆண்டுகளில் மண்ணின் விசத்தன்மையை நீக்கி விடுகிறது.
வீட்டு கழிவு நீரை சுத்தம் செய்து, நீர் மறு சுழற்சிக்கும் வெட்டி வேர் பயன்படுகிறது. வெளியேறும் வீட்டு கழிவு நீரை வெட்டி வேருக்கு பாய்ச்ச அது அசுத்தங்களை உறிஞ்சிவிட்டு நன்னீரை பூமிக்கு அனுப்புகிறது.

Saturday, June 28, 2014

Agriculture UAEஉலகிற்கே முன்னோடி பசுமை குடில்கள்

ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடையாது.ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது.
கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள்.மக்கள் பயன்படுத்திய பிறகு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்களுக்கும்,பூங்காக்களுக்கும் பாய்ச்சப்படுகிறது.அந்த நீர் விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
விலைக்கு வாங்கப்பட்ட நீரைக்கொண்டு பாலைவனத்தில் பசுமை குடில்கள் அமைத்து காய்கறிகளை பயிரிடுகிறார்கள்.
அப்படி பசுமை குடில்களில் பயிரிடப்பட்டிருக்கும் தக்காளி செடிகள்தான் மேலே உள்ள படம்.
கடந்த ஆண்டு மட்டும் UAE 38,000 டன் காய்கறிகளை விளைவித்து 20 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்திருக்கிறது.
2020ம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 40% காய்கறிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.

நம்பிக்கை ராஜ்

தக்காளி,முட்டைக்கோசு,வெள்ளரிக்காய்,கத்தரிக்காய் என ஒவ்வொரு காய்கறியாக பயிரிட்டு வந்தவர்கள் தற்போது கோதுமை பயிரிட்டு அறுவடை செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.
இதே வேகத்தில் போனால் பாலைவனத்தில் நெல் அறுக்கும் காலம் விரைவில் வந்தாலும் ஒன்றும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும்போது விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு மாற மாட்டார்கள்.இங்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சற்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் என்பதால் மக்கள் இவற்றை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

UAEயை போன்றே பெரும்பாலும் பாலைவனத்தை கொண்ட நாடுதான் இஸ்ரேல்.ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையை என்பது போல இஸ்ரேலில் ஓடும் யோர்தான் நதிதான் அவர்களின் ஒரே நீர் ஆதாரம்.பல்விளக்கக்கூட பற்றாத தண்ணீரைக் கொண்டு பல பயிர்களையும் விளைவிக்கிறார்கள் இஸ்ரேலியர்கள்.இஸ்ரேலின் மழை பொழிவு விகிதம் ஆண்டுக்கு வெறும் 50 மி.மீட்டர்தான்.
6.25 மில்லியன் எக்டர் மீட்டர்தான் இஸ்ரேல் நாட்டின் ஒட்டுமொத்த நீர்வளம். அது சராசரியாக நம்மூர் பவானிசாகர் அணையில் ஒர் ஆண்டில் வந்து சேரும் நீருக்கு சமம். இந்த அளவு நீரைக்கொண்டு அவர்கள் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்கிறார்கள்.
அப்படி விவசாயம் செய்யும் ஒரு இஸ்ரேலிய விவசாயியின் சராசரி ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 66,000 அமெரிக்க டாலர்கள்.
பரப்பளவில் மிகச்சிறிய நாடான இஸ்ரேலில் விவசாயம் நடைபெறும் பகுதி இன்னும் குறைவானது.
சொட்டு நீர் பாசனம்,தெளிப்பு நீர் பாசனத்தில் உலகிற்கே முன்னோடி இஸ்ரேலியர்கள்.

இஸ்ரேலிலாவது யோர்தான் நதி எனப்படும் ஒரு சிறிய நதி ஓடுகிறது.ஆனால் UAEல் அதுக்கூட கிடையாது.முற்றிலும் பாலைவன தேசமான இங்கு மழை பொழிவின் அளவு இஸ்ரேலைவிட மிக குறைவு.
அவர்கள் காட்டிய அதே சொட்டு நீர் பாசனம்தான் இங்கும் கைகொடுக்கிறது.

நீர் பாசன முறையில் நாம் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய நேரம்நேரம் நெருங்கிவிட்டது.
நம் நாட்டில் நீர்வளம் குறைவான பகுதியில் இதே போன்ற முறையை பின்பற்றி நாமும் விவசாயம் செய்ய முயற்சி செய்யலாமே.

சொட்டு நீர் பாசனம்,தெளிப்பு நீர் பாசனத்தில் இஸ்ரேலியர்கள்.
இஸ்ரேலிலாவது யோர்தான் நதி எனப்படும் ஒரு சிறிய நதி ஓடுகிறது.ஆனால் UAEல் அதுக்கூட கிடையாது.முற்றிலும் பாலைவன தேசமான இங்கு மழை பொழிவின் அளவு இஸ்ரேலைவிட மிக குறைவு.
அவர்கள் காட்டிய அதே சொட்டு நீர் பாசனம்தான் இங்கும் கைகொடுக்கிறது.
நீர் பாசன முறையில் நாம் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய நேரம்நேரம் நெருங்கிவிட்டது.
நம் நாட்டில் நீர்வளம் குறைவான பகுதியில் இதே போன்ற முறையை பின்பற்றி நாமும் விவசாயம் செய்ய முயற்சி செய்யலாமே.

Friday, September 27, 2013

தண்ணீர் மேலாண்மையை இந்திய விவசாயிங்க கத்துக்கணும்

நண்பர்களே இவர் கைநாட்டுதான் ஆனால் இவர் பெற்றிருப்பது 'பத்மஸ்ரீ’ விருது ,அதுவும் தமிழனாக மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்

விவசாயிகள் விஞ்ஞானத்தைக் கத்துக்கணும்!

பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. 'எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது'' என்கிறார்கள் ஊர்க்காரர்கள். பூரிப்பில் இருக்கிறார் 'பத்மஸ்ரீ’ வெங்கடபதி. ''தோட்டத்துக்குப் போலாமா?'' என்று 'ஹுண்டாய் வெர்னா’ காரில் செல்கிறார்.

வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரக கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பிவழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்குக் காய்த்துத் தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், பேசத் தொடங்கினால் தாவரங்களின் தகவமைப்பு, குரோமோசோம்கள், மரபணு மாற்றம், அணுக்களின் ஆற்றல் என்று பின்னி எடுக்கிறார்.

''விஞ்ஞானத்தில் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?''

''ஆர்வம் எல்லாம் இல்லை. நிர்பந்தம். பரம்பரை பரம்பரையா விவசாயம்தான் தொழில். முப்போகம் பண்ணினோம். ஆனா, உழவன் கணக்குப் பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதுங்கிறது ஒருநாள் எனக்கும் நேர்ந்துச்சு. ஊரைச் சுத்திக் கடன். தற்கொலை முடிவுக்கே வந்துட்டேன். கடைசியா ஒருமுறை வேளாண் துறை ஆளுங்களைப் பார்த்து யோசனை கேட்டுப் பார்ப்போம்; ஏதாவது வழி கிடைக்குமானு கிளம்பினேன். பெரியகுளம் தோட்டக்கலைத் துறை இயக்குநரா இருந்த சம்பந்தமூர்த்தியைச் சந்திச்சேன். மலர் சாகுபடி நல்ல வருமானம் தரும்னு சொன்னார். நெல்லை விட்டுட்டு, டெல்லி கனகாம்பரத்தைக் கையில் எடுத்தேன். நல்ல ஈரப்பதம் வேணும் அது வளர; சீதோஷ்ண நிலை 23 டிகிரியைத் தாண்டக் கூடாது; இங்கே எல்லாம் வளர்க்கவே முடியாது. ஆனா, வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும். என்ன செய்யலாம்? அப்பதான் விஞ்ஞானத்தை வரிச்சுக்கிட்டேன்.''

''அயல் மகரந்தச் சேர்க்கை, மரபணு மாற்றம், திசு வளர்ப்பு முறை... இந்த விஷயங்களை எல்லாம் எப்படிக் கற்றுக்கொண்டீர்கள்?''

''அய்யா, நான் கைநாட்டுதான். ஆனா, ஒரு விஷயம் தோணுச்சுன்னா, அதை யார்கிட்ட கேட்டா முடிக்கலாமோ, அவங்ககிட்ட போய்டுவேன். உயர் ரக மலர் உற்பத்தியில் ஜெர்மனிக்காரர்கள் கில்லாடிகள்னு சொன்னாங்க. அப்ப இந்தியாவுக்கு வந்திருந்த ஜெர்மனி அமைச்சர் ஒருத்தர் 'இந்தியாவுக்கு வேண்டிய ஒத்துழைப்பை நாங்க வழங்குவோம்’னு பேசியிருந்தார். அவருக்குக் கடிதம் எழுதி, உயர் ரகப் பூக்களை உருவாக்கும் தொழில்நுட்பம் தொடர்பா எனக்கு உதவணும்னு கேட்டேன். அவர் ஒரு ஜெர்மானிய விவசாயியோட தொடர்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்தார். நானே ஒரு ஆய்வுக்கூடம் அமைச்சு, திசு வளர்ப்பு முறையில் கன்னுங்களை உருவாக்கக் கத்துக்கிட்டேன்.

ஒருநாள் என்னோட சம்சாரம் விஜயாள், கனகாம்பரத்தை ஏன் வெவ்வேற நிறத்துல உருவாக்கக் கூடாதுனு கேட்டாங்க. கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழக இயக்குநரா இருந்த ஸ்ரீரங்கசாமி அய்யா வைப் போய்ப் பார்த்து யோசனை கேட்டேன். வழிகாட்டினார். அப்துல் கலாம் அய்யா அப்போ ஸ்ரீஹரிகோட்டாவில் விஞ்ஞானியா இருந்தார். அவரோட பழக்கம் ஏற்படுத்திக்கிட்டேன். கல்பாக்கம் போய் காமா கதிர்வீச்சு முறையில் கனகாம் பரத்தோட குரோமோசோம்களைப் பிரிச்சு ஒரு புதிய வகையை உருவாக்கினேன். அந்தக் கன்னுக்கு 'அப்துல் கலாம்’னு பேர் வெச்சேன். சாதாரண டெல்லி கனகாம்பர ரகம் ஒரு செடிக்கு 30 பூக்கள்தான் பூக்கும். அதுவும் பத்து மணி நேரம் கூடத் தாங்காது. ஆனா, 'அப்துல் கலாம்’ ரகம் ஒரு செடிக்கு 75 பூக்கள் பூக்கும். 17 மணி நேரம் வரைக்கும் பொலிவா இருக்கும். இதேபோல, கல்பாக்கம் அணு விஞ்ஞானி பாபட் உதவியோட புது சவுக்கு ரகத்தை உருவாக்கினேன். சாதாரண சவுக்கு ஏக்கருக்கு 40 டன் விளைஞ்சா, இந்த ரகம் 200 டன் கொடுக்கும். கொய்யாவும் அப்படித்தான். இன்னும் நிறைய ஆய்வுல இருக்கு.''

''இந்தியாவில் விவசாயம் லாபகரமான தொழிலாக மாற என்ன செய்ய வேண்டும்?''

''இந்திய விவசாயிகளோட பெரிய எதிரி அறியாமைதான். எல்லாத் தொழில் லயும் இருக்குறவங்க எவ்வளவோ கத்துக்குறாங்கள்ல, விவசாயிகளுக்கும் அது பொருந்துமா இல்லையா? ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லிகளையும் எதிர்த்து நாம இவ்வளவு வலுவாப் பேசுறோமே... ஆனா, நவீன விவசாயத்துல கோலோச்சுற இஸ்ரேல் விவசாயிங்க இவ்வளவு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி களைப் பயன்படுத்துறது இல்லை தெரியுமா? அவன் சொட்டுநீர்ப் பாசனம் செய்யுறான். நம்ம விடுற தண்ணியில நூத்துல ஒரு பங்கு தண்ணியில் நம்ம போடுற ரசாயன உரத்துல பத்துல ஒரு பங்கு உரத்தைக் கலந்து சொட்டுச்சொட்டா தண்ணீர் பாய்ச்சுறான். எனக்குத் தெரிஞ்சு உலகத்துல தண்ணியை நம்ம அளவுக்கு மோசமா எந்த நாட்டு விவசாயியும் பயன்படுத்தலை. தண்ணீர் கூடுதலா இருக்குறதாலதான் விஞ்ஞானம் இங்கே வேலை செய்ய மாட்டேங்குதுனு நெனைக்கிறேன். தண்ணீர் மேலாண்மையை இந்திய விவசாயிங்க கத்துக்கணும். புது தொழில்நுட்பத்தைக் கத்துக்கணும். முக்கியமா விஞ்ஞானத்தை மிஞ்சினது எதுவும் இல்லைங்கிறதை உணரணும்!