Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, August 31, 2016

பெண் குழந்தை நீ பெற்றாய் பேரின்பம் நான் பெற்றேன்..



நாள் தவறி போனதே என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்..
மார்பில் முகம் புதைத்ததும்
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்..
புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி..

மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்..
ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்..
ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்..
மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய்விடுமா உன் அழகு தாய்மையில்..

ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் என்னை?
தினமும்மாலை கை கோர்த்து
நடை பயின்று..
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை..

நாட்கள் நெருங்க, நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே..!
இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்..

சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும், என் தாயும்
உறவினரும் நண்பருமாய்..
தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்..

அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்..
சொல்லி விட்டு போய் விட்டாள் மின்னல் கீற்று போல..

பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனைஅழைத்து கைபற்றி கொண்டாய்..

இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
உன் வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்

பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
ம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..!!

பெண் குழந்தை நீ பெற்றாய்
பேரின்பம் நான் பெற்றேன்..
முகமெல்லாம் உன் வடிவம்
நிறம் மட்டும் பொன் எழிலாய்
நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்
வெளியே வந்தேன்..

அதுவரை கட்டி வைத்த
கண்ணீர் எல்லாம் கரை தாண்டும்
காரணம் நான் அறியேன்
புரியவில்லை அக்கணம்..

வாரி எடுக்க வந்தார்கள்
உன் தாயும் என் தாயும்
யாரிடம் கொடுக்க?
யாரிடமும் வேண்டாம்
முதல் சொந்தம் அவளுக்கே
சொல்லி விட்டேன் என் முடிவை..

30 வினாடிகள்
கண் விழித்து தேடினாய்
மகளை அல்ல என்னை
கை பற்றி முத்த மிட்டாய்
பின் ஏந்தினாய் பெண் பூவை..
பெருமையாய் பார்த்தாள் என் தாய்
பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..
இருவரும் பெற்றதில்லை
இந்த பாக்கியம் என..
அவனைவரும் இனிப்பு கேட்டு
வாங்கி கொடுத்த பின்
கலைந்தது கூட்டம்..

தனியே நீயும், நானும்
எனக்கு எங்கே இனிப்பென்று
நான் கேட்க .. இறுக கரம் பற்றி
இதழோடு இதழ் பொருத்தினாய்..
ம்ம்ம்.. இதை விட பேரின்பம்
பெறுவேனோ சொர்க்கமதில்..???
"..பெண்ணல்ல நீ எனக்கு.."
குல தெய்வம் அல்லவோ..!!

Tuesday, July 7, 2015

கவிதை



இதழோரம்சிறுகோடிட்டு
தரைபார்த்த முகமோடு
கடைவிழி சாய்த்து
எனை வீழ்த்தினள்.


வீழுதல் வீரத்திற்கிழுக்கேயெனினும்
ஒரு வீரனாய் வீழுதல் சுகமேயென்றிருந்தேன்
வாழுதல் இந்நொடி பெரிதென்றே
எழுதலைக்குறித்து என் மனம் எண்ணவேயில்லை.....

Saturday, June 13, 2015

கல்லறையில் தூங்கும் மனிதா!



                           

                                                                                

   பொது + ஆனது

 

கல்லறையில் தூங்கும் மனிதா!
நீர் கண்ட கனவு தான் என்ன? என்ன? என்ன?
நீல கடல் மீது பறந்தும் பல தொழில்கள்...
செய்யவும் ஆசை கொண்டாயோ!
நீண்ட கடல் நீரில் பயணம் செய்தும்
(பேயாக?) காசு + பணம் சேர்க்கவும் பேராசை கொண்டாயோ!.....
எத்தனையோ கோடி + ஈஸ்வரர்கள்
இன்று எல்லாம் கல்லறையில் தூங்குகிறார்கள்!
கருவோடும் குழந்தையும் சிதைந்து போகும்....
சாதனை புரிந்தவர்களுக்கும் சாவு உண்டு....
இந்த பூமியில் சரித்திரம் கொண்டவர்களுக்கும் மரணம் உண்டு!
சாதாரண ஏழையும் சவக்குழியில் தூங்குகிறான்...
இந்த பூமியில் சாக வரம் பெற்ற   
மனிதர்கள் எவரும் இல்லை!
இனி பிறக்கப்போவதும் இல்லை...
மண்ணில் இருந்து விண்ணையும்
இன்று வரை எவரும் தொட்டதும் இல்லை...
விண்ணில் இருந்து மண்ணில் எவரும் பிறப்பதும் இல்லை!
ஒரு தாயின் கருவில் இருந்து கண்விழிக்கிறான்!
நம் கண்ணுக்கும் தெரியாத காற்று,
உனக்கும் எனக்கும் ஒரு நாள் பகையானால்....
இந்த மண்ணில் உனக்கும் வேலையில்லை எனக்கும் வேலையில்லை..
மரணம் என்பது உனக்கும் எனக்கும் பொது+ஆனது..
என்பதையும் மறந்து விடாதே மனிதா... மனிதா... 


தேதி: 12/06/2015                            என் கவிதை     : 110
நேரம்: 16:30                                          கவிஞர்    : மே.கோ.ப
                                                                Mobile Number              :  9489940065

Saturday, May 23, 2015

அ முதல் ஃ வரை

                                                         


அன்னை முகம் நான் கண்டதில்லை

ஆண்டவனை நான் நேரிலும் பார்ததில்லை

இன்முகத்தோடு நான் இங்கு வாழ்கின்றேன்

ஈன்றவரை நான் மறைக்கவும் இல்லை.... மறக்கவும் இல்லை!

உண்மையைச் சொல்லி நான் வாழ்கிறேன்

உரிமைக்கும் குரல் குடுப்பேன்

உறுதியோடு செயலிலும் நிலைத்திருப்பேன்

ஊமை குயில் பாடுவதும் இல்லை

ஊமை விழிகள் பார்பதும் இல்லை

எறும்பை போல் நானிருக்கிறேன்

ஏணியை போல் மற்றவர்களையும் தாங்கி நிற்கிறேன்

ஐயம் என்பதை நான் அறியேன்

ஓடம் ஏறி பயணம் செய்திருக்கின்றேன்

ஓலை சுவடியும் படித்திருக்கின்றேன்

ஔவை  மொழி கேட்டு வாழ்ந்து வருகிறேன்

எஃகு போல் மன உறுதி கொண்டு இக்கவிதையை முடிக்கிறேன்!!!

         
                                                              நன்றி !!!

                                                                                                 கவிதை : பன்னீர் செல்வம் . G
                                                                                                                     9489940065 , BSNL.

Wednesday, May 6, 2015

அன்னை தெராசா

     அன்னை தெராசா

                                                                                                         

குழந்தையாய் பிறந்தும்!
குமரியாய் வளர்ந்தும்!
குழவியாய் ஆன பின்பும்!
தன் நலம் கருதாமல்...
தன் சுய நலம் கொள்ளாமல்...
பொது நலத்தில், இன்பம் கண்டு...
என் அன்னையை போல ...
கண்கள் உறங்கும்..

அன்னை தெரசாவிற்கு,
G.பன்னீர் செல்வத்தின் 
செந்நீர் கலந்த கண்ணீர் அஞ்சலி!!!

அன்னை விட்ட பணியும் தொடரும்! அடியேனின்
இதயத்தின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை ...

                                                                                                                      கவிஞர்
                                                                          G.பன்னீர் செல்வம்
                                                                BSNL 9489940065     

Sunday, February 22, 2015

கவிதை


காற்றைக்கூட
சுகிக்க தெரியாதவனை 
"கவிதை' எழுத செய்தாய்
சிறு கண்ணசைவில்..!!
^
தூக்கத்தில்
பொழுது போக்கியவனை
'நட்சத்திரங்களை'
எண்ண வைத்தாய்..!!
^
சொர்கத்தின் விலாசத்தை
விசாரித்து திரிந்தவனை
"ஸ்பரிசத்தில்தான் சொர்க்கம்" என
சொல்லாமல் உணர்த்தினாய்..!!
^
தோல்விகளில்
தடுக்கி விழுந்த என்னை
வெற்றிகளோடு
கைகுலுக்க செய்தாய்..!!

Thursday, December 25, 2014

ஏனென்றால் நான் உன்னை காதலிக்கிறேன்...



"சாப்டியா ?" என Message அனுப்பும் காதலியாக வேண்டாம்...!

"சாப்பிடு" என ஊட்டிவிடும் மனைவியாக வேண்டும்...!
 
"Take care" என்று சொல்லும் காதலியாக வேண்டாம்...!
 
"I will take care for you" என இருக்கும் மனைவியாக வேண்டும்...!
 
உன் தாய் தந்தையருக்கு தெரியாமல் உரையாடும் காதலியாக வேண்டாம்...!
 
உன் தாய் தந்தையரோடு உரையாடும் மனைவியாக வேண்டும்...!
 
கண்ணில் கனவுகளோடு காத்திருக்கும் காதலியாக வேண்டாம்...!
 
நெஞ்சில் உன்னை சுமக்கும் மனைவியாக வேண்டும்...!
 
உன் அழகை ரசிக்கும் காதலியாக வேண்டாம்...!
 
உன்னை அழகாய் ரசிக்கும் மனைவியாக வேண்டும்...!
 
* ஏனென்றால் நான் உன்னை காதலிக்கிறேன்...

கல் நெஞ்சம் கொண்டவளே!

 

கல் நெஞ்சம் கொண்டவளே!
தயவு செய்து
உன் தாயிடம் கேட்டுப் பார்.
காதல் வராமல் இருக்க
தவழும் வயதில் உனக்கு
தடுப்பூசி ஏதும் போடப்பட்டதா என்று......

Tuesday, October 7, 2014

எது நாகரீகம்??

கொண்டுவந்த அழகு எல்லாம்
கொண்டவனுக்கு மட்டும்னு தெரிஞ்சுக்க..
இறுக்கிப் பிடித்த உடையில் ஒரு
இன்பமில்லை புரிஞ்சுக்க..
உள்ளாடை வெளியேத் தெரிவது
வெட்கமுன்னு தெரிஞ்சுக்க..
அவிழ்ந்து விழும் கால்சட்டையில் ஒரு
அழகுமில்லை புரிஞ்சுக்க..
பாதம் பார்த்து நடப்பதொரு
பாவமில்லை தெரிஞ்சுக்க..
நீ நிமிர்ந்து நடக்கும் நடையில் ஒரு
நேர்மையில்லை புரிஞ்சுக்க..
பிடல் கேஸ்ட்ரோ பேசும் முன்னே உன்னைப்
பெத்தவனைத் தெரிஞ்சுக்க..
நீ பெத்தெடுக்கும் பிள்ளை வந்து உன்னைப்
பேசும் புரிஞ்சுக்க..
காதலுக்கு மட்டும் தான் நீ
கருச் சுமக்கனும் தெரிஞ்சுக்க..
காமத்துக்கு என்றும் நீ ஒரு
கருவியல்ல புரிஞ்சுக்க..
உள்ளம் என்பதை உள்ளங்கையின்
உள்ளடக்கத் தெரிஞ்சுக்க..
உணர்ச்சிப் பசிக்கு உண்ணும் உணவு
உபதை தரும் புரிஞ்சுக்க..
பட்டப் படிப்பு படிப்பது மட்டும்
பகுத்தறிவல்ல தெரிஞ்சுக்க..
படிக்காதவன் உன்னை விடப்
பாசக் காரன் புரிஞ்சுக்க..
கடிவாளமென்பது மனசுக்கு மட்டும்
மனசாட்சிக்கல்ல தெரிஞ்சுக்க..
தனம் பெற்றுத் தாரம் பெறுவது
தன்மானமில்லை புரிஞ்சுக்க...
கடற்கரையில் கட்டிலுடுவது
காதலல்ல தெரிஞ்சுக்க...
காத்திருந்த காதல் மட்டுமே
கரைச் சேரும் புரிஞ்சுக்க..
நிலவை மட்டும் ரசிந்திருந்தா ஒரு
நிம்மதியில்லை தெரிஞ்சுக்க..
நிலாச்சோறு ஊட்டியவளையும்
நெஞ்சுலவைக்கணும் புரிஞ்சுக்க..
நாகரீகம் என்பதென்ன??அதை முதலில் தெரிஞ்சுக்க..
நீ செய்யும் செயலுக்கெல்லாம் அதுப் பெயரல்ல
புரிஞ்சுக்க...

- ஆதிரா

Sunday, October 5, 2014

என் குட்டி தேவதைக்கு...




நீ கண்டுபிடிக்க வேண்டுமென்பதற்காகவே
லகுவான இடத்தில் ஒளிந்து
''எப்படியடி தெரிந்தது?'' நான் பிரமிக்கையில்,
பெருமிதத்தில் நீ சிரிக்கும்
பத்துப்பல் சிரிப்பு...
வேண்டுமென்றே கை விரல்களைத் தவறுதலாய் எண்ணி,
''ஐயோ! தெரியலியே'' தவிக்கையில்,
குழந்தை மொழியில் நீ கூட்டிக் கழித்துச் சொல்லி
ஜெயித்து விட்டதாய் கையுயர்த்தும் அழகு...
பஞ்சப் பொம்மையைத்
தூக்க முடியாமல் கீழே போட்டு
கைவலிப்பதாய் நடிக்கையில்,
தூக்கிக்கொண்டு ஓடும்
உன் துறுதுறு குறும்பு..
இப்படி ஒன்றும் தெரியாதவளாய் நான்
நடிப்பதெல்லாம் - உன்னை
எல்லாம் தெரிந்தவளாய் ஆக்கத்தான்
என் குட்டி தேவதையே!

- லதா பிரபாகர்

Monday, September 22, 2014

அருமையான கவிதை ::


உண்ணக் கனி
ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து
உணர்வுக்கு விருந்து
அடையக் குடில்
அடைக்கக் கதவு
அழகு வேலி
ஆடத் தூளி
தடவத் தைலம்
தாளிக்க எண்ணெய்
எழதக் காகிதம்
எரிக்க விறகு

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்

--- வைரமுத்து

Sunday, September 21, 2014

எத்தனையோ ரசனைகள் உலகில் கொட்டி கிடக்கும் போது





வானின் நீலம்,
கடலின் நீளம்,
குழந்தையின் மழலை,
அந்தி சாயும் மாலை,
பனி விழும் காலை,
பனி இல்லாத கோடை,
தூரத்து பச்சை,
இலையுதிர் மரங்கள்,
சலசலக்கும் ஓடை,
பூவின் வாடை,
ஆணின் வீரம்,
பெண்ணின் நாணம்,
அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் திட்டு,
அண்ணனின் பாசம்,
தங்கையின் நேசம்,
மனைவியின் முத்தம்,
மகளின் செல்ல அடி,
இன்னும் இன்னும் எத்தனையோ !

எத்தனையோ ரசனைகள் உலகில் கொட்டி
கிடக்கும் போது, ஏழ்மை மட்டும் ஏன்?

Friday, October 4, 2013

கவிதை சாரல்கள்.

அன்பாய்
அணைக்கும் போதும்
செல்லமாய்
சீண்டும் போதும்
கோபமாய்
அலட்சியப் படுத்தும் போதும்
ஆத்திரமாய்
புறக்கணிக்கும் போதும்
தடுமாற்றமாய்
துவளும் போதும்
உன் உணர்வே
என் உணர்வென
உன் வால் பிடித்து திரியும்
பூனைக் குட்டியாய்
என் நேசங்கள் ... 
- கவிதை சாரல்கள்.


என்னோடு பேசிக்கொண்டிருக்கும்
தருணங்களில் - நீ
தேவதையாகிவிடுகிறாய்....
மனிதனாக இருக்கமுடியாமல்
தடுமாறுகிறேன் நான்....
Prakash ponnusamy

என்னை காதலிக்கிறாயா இல்லை காமுற்றிருக்கிறாயா?

ஒரு சாமானியனைப்போல்
என் முன் நிற்காதே
வேசம் களை
வெளுத்துப்போன சட்டை அவிழ்
மாந்திரீக வார்த்தைகளின் பின்னிருக்கும்
நிர்வாணம் காண்
நிதானித்து பேசு
நிதர்சனத்தில் நில்
மூச்சுவாங்க உனைத்தேடு
கிடைத்ததில் பிழையிருந்தால்
கண்ணீர் சிந்து
உண்மையிருப்பின் உயிர்தொட்டு
உனைத்திருத்து
கருத்துசொல்வதாய் கடந்துவிடாதே
காத்திருத்தலெனும் கெளரவம்
கைக்கு வருகையில் கொலைசெய்யும்
கண்டதையும் போட்டுடைக்கும்
இல்லாதது போலிருந்து
போகாத இடம் போகும்
போதையென்று கைக்கு வந்து
போகப்போக உனைக்குடிக்கும்
ஆம்
காமம்
ஓர் அமிலம்
காதல் அதன் குவளை
அதனதனிடத்தில் அதன் செயல் சரி
என் வழியில் நீ தவறு
காமுற்றிருப்பினும்
உனை காதலிக்க நான் தயார்
அதற்கு முன்
பெண்ணைப்படி
படித்தலென்பது
வார்த்தைகளைத்தாண்டி வாதங்களிலும்
வாழுமென்பதை உணர்
பெண்ணாடுவது மார்புச்சூட்டின் கதகதப்பை
நெடுஞ்சாலை பயணத்தின் கைகோர்ப்பை
மாதவிடாய் நேரத்தின் தோளணைப்பை
உச்சிக்குழியில்
காமம் பல்லிளிக்காத எச்சில் முத்தத்தை
இதற்கு சாமானியனைப்போன்ற வேஷமெதற்கு
வாழ்வென்பது ஒப்பனைகளைக்காட்டிலும்
ஒப்படைத்தலிலிருக்கிறதென்று உணர்
இப்பொழுது சொல்
என்னை காதலிக்கிறாயா
இல்லை காமுற்றிருக்கிறாயா?

ரேவா கவிதைகள்

Sunday, September 29, 2013

காதலன்

யார் நீ
என் தந்தையாக இருந்திருக்க வேண்டியவனா 
இல்லை...
என்னுடன் பிறந்திருக்க வேண்டியவனா 
இல்லை....
எனக்கு தோள்குடுக்க வேண்டியவனா
இல்லை....
என்னுடன் இருக்கவேண்டியவனா
இல்லை.....
எனக்கு பிறக்க வேண்டியவனா
இதில் எது நீ??????
என் தந்தை போல் தேற்றினாய்
என் உடன்பிறப்பு போல் அக்கறை கொண்டாய்
என் நண்பன் போல் தோள்கொடுத்தாய்
என் கணவன் போல் காயம் ஆற்றினாய்
என் குழந்தை போல் உரிமை கொண்டாய்
என் கஷ்டத்தில் பங்கு கொண்டாய்
என் சந்தோஷத்தில் நீயும் மகிழ்ந்தாய்
என் சோர்வில் நீயும் சோர்வுற்றாய்
என்னை தாய் தாங்குவதை போல் தாங்கினாய்
ஆனால் இன்றுவரை புரியவிலை
நீ யார்???
ஒன்று மட்டும் புரிகிறது
நீ இல்லை என்றால்
நானும் இருந்திருக்க முடியாது
என்ற உண்மையை......

Monday, September 16, 2013

காத்திருந்து கோவப்பட்ட நிமிடங்கள்



சின்ன சண்டைகள் 
செல்ல சமாதானங்கள்
விழித்திருந்தும் 
உறங்கிய நிமிடங்கள் 
காத்திருந்து 
கோவப்பட்ட நிமிடங்கள் 
பொய்யும் நிஜமாய் 
நிஜமும் பொய்யாய் 
தெரிந்தக் நொடிகள் 
உனக்காக நானும் 
எனக்காக நீயும் 
யோசித்த காலங்கள்
வண்ணக் கனவாய்
உறக்கத்தில் மட்டும் 
உலா வர 
நிஜத்தில் 
மீண்டும் தொடராதா
என்ற ஏக்கத்தில் 
தொடர்ந்தது 
மீண்டும் வண்ணக் கனவு...!!!

>>>லதா<<<

சின்ன சண்டைகள் 
செல்ல சமாதானங்கள்
விழித்திருந்தும் 
உறங்கிய நிமிடங்கள் 
காத்திருந்து 
கோவப்பட்ட நிமிடங்கள்
பொய்யும் நிஜமாய்
நிஜமும் பொய்யாய்
தெரிந்தக் நொடிகள்
உனக்காக நானும்
எனக்காக நீயும்
யோசித்த காலங்கள்
வண்ணக் கனவாய்
உறக்கத்தில் மட்டும்
உலா வர
நிஜத்தில்
மீண்டும் தொடராதா
என்ற ஏக்கத்தில்
தொடர்ந்தது
மீண்டும் வண்ணக் கனவு...!!!

Wednesday, September 4, 2013

காதலில் வீழ்ந்தாகி கறையும் படிந்தாகி வாழ்வதில் வீணாகி வணங்க மறந்தாரே

மானுடம்
--------

மானுடம்  
--------

சித்தமும் சிறை ஆகி
குற்றமும் குறை ஆகி  
கோலமும் மறை ஆகி 
கோவில் கறை என்றார்  

காதலில் வீழ்ந்தாகி  
கறையும் படிந்தாகி
வாழ்வதில் வீணாகி  
வணங்க மறந்தாரே

இல்லத்தில் இருந்தாச்சு  
இடரும் வந்தாச்சு
பள்ளத்தில் விழுந்தாச்சு
பக்குவம் போயாச்சு  

சொற்களில் பண்பில்லை  
சோகத்தில் சிரிப்பில்லை. 
சோதியை காணவில்லை
நாதியை நடவில்லை  

கற்றதும் வீணாச்சு 
கருத்தும் வந்தாச்சு  
பெற்றதும் இழந்தாச்சு  
பேறும் போயாச்சு  

கல்லடா விதி இல்லை
ஏனடா ஏதும் இல்லை
அன்பிலே கறை இல்லை
ஆடி ஒடுங்குவதில் பிழை இல்லை 

பித்தனும் நானாச்சு 
பிதாவும் நானாச்சு 
சித்தனும் சொன்னாச்சு 
சிந்தையில் பயிராச்சு 

கொல்லு உன் மனமெல்லாம் 
கோதையின் குணமெல்லாம்  
ஆடித் திரிந்து வந்தால்  
அற்புதம் ஆகும் எல்லாம்.

  யாத்தவர் 
-உதயகுமார் காங்கேசன்துறை-

சித்தமும் சிறை ஆகி
குற்றமும் குறை ஆகி 
கோலமும் மறை ஆகி
கோவில் கறை என்றார்
காதலில் வீழ்ந்தாகி
கறையும் படிந்தாகி
வாழ்வதில் வீணாகி
வணங்க மறந்தாரே
இல்லத்தில் இருந்தாச்சு
இடரும் வந்தாச்சு
பள்ளத்தில் விழுந்தாச்சு
பக்குவம் போயாச்சு
சொற்களில் பண்பில்லை
சோகத்தில் சிரிப்பில்லை.
சோதியை காணவில்லை
நாதியை நடவில்லை
கற்றதும் வீணாச்சு
கருத்தும் வந்தாச்சு
பெற்றதும் இழந்தாச்சு
பேறும் போயாச்சு
கல்லடா விதி இல்லை
ஏனடா ஏதும் இல்லை
அன்பிலே கறை இல்லை
ஆடி ஒடுங்குவதில் பிழை இல்லை
பித்தனும் நானாச்சு
பிதாவும் நானாச்சு
சித்தனும் சொன்னாச்சு
சிந்தையில் பயிராச்சு
கொல்லு உன் மனமெல்லாம்
கோதையின் குணமெல்லாம்
ஆடித் திரிந்து வந்தால்
அற்புதம் ஆகும் எல்லாம்.