Showing posts with label சாதித்தவர்கள்!. Show all posts
Showing posts with label சாதித்தவர்கள்!. Show all posts

Thursday, January 11, 2018

இந்தச் சுவரைத் தகர்க்க பீரங்கிகளாலேயே முடியாது! - ராகுல் டிராவிட் பிறந்தநாள் பதிவு



ஆகஸ்ட் 24, 2007. பிரிஸ்டோல் நகரில் இந்தியா, இங்கிலாந்து அணிகளின் மோதல். பிளின்டாபின் பௌன்ஸரில் 99 ரன்களில் வெளியேறுகிறார் சச்சின். வழக்கம்போல் எல்லோரும் மூட்அவுட். ஹாஸ்டலில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த பலரும் எழுந்து சென்றுவிட்டனர். சச்சின் அவுட் ஆனதும் வழக்கமாக நடப்பதுதானே! 'எழுந்து போய்விடலாமா...?' எனக்குள்ளும் கேள்வி. "கோவில்கள் கட்டப்படுவது அங்குள்ள சிற்பங்களை, கட்டடக் கலையை ரசிக்க. அந்தக் கலைஞனின் திறமையை அறிந்துகொள்ள... கடவுளை மட்டும் பார்த்துத் திரும்புவன் முட்டாள்!" - எங்கள் தமிழ் வாத்தியார் சொன்னது நினைவிருந்தது. எழுந்து போகவில்லை. காத்திருந்தேன், அந்தக் கலைஞனுக்காக...!
கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் பெவிலியன் திரும்பிக்கொண்டிருக்கிறார். 19-ம் நம்பர் ஜெர்சி... ராகுல் டிராவிட்... இதற்காகத்தான் காத்திருந்தேன். கீப்பரின் கைநோக்கிச் செல்லும் பந்தை சடாரென்று அடிக்கும் அந்த லேட் கட், யார்க்கர் பந்தை அசால்டாக லெக் சைடில் செய்யும் ஃப்ளிக், அதற்கும் மேல்... மார்பளவு எழுந்துவரும் பந்தை, பேக்ஃபூட் வைத்து, கால்களை உந்தி, க்ரீசுக்கு அருகிலேயே வைக்கும் அந்த ஸ்ட்ரோக்...! கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த கலைஞனைக் காணாமல் எழுந்துபோனால் நான் முட்டாள்தானே! கிரிக்கெட்டைப் பார்ப்பவர்களுக்கு கெய்ல், மெக்கல்லம் போன்றவர்கள் அழகு. ஆனால், கிரிக்கெட்டை நேசிப்பவனுக்கு டிராவிட்தானே பேரழகு!

சச்சின் ஒரு ரன்னில் சதத்தைத் தவறவிட்டு வெளியேற, தன் கிரிக்கெட்டின் வாழ்வின் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸை ஆடினார் டிராவிட். வழக்கம்போல் Aerial ஷாட்கள் அதிகம் இல்லை. ஆனால், 63 பந்துகளில் 92 ரன்கள். 11 பவுண்டரி, 1 சிக்ஸர்தான். ஓடி எடுத்த அந்த 43 ரன்களும்கூட கிரிக்கெட் பாடம் எடுத்தது. வழக்கமாக பந்துக்கும் குறைவாகவே ரன் எடுக்கும் டிராவிட், அன்று ஆடிய ஆட்டம் பலருக்கும் அதிர்ச்சி. உண்மையில் அழகும், அதிர்ச்சியும் நிறைந்ததுதானே டிராவிட்டின் ஆட்டம்! நியூசிலாந்துடனான போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 22 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்து அசத்தியவர் அல்லவா அவர்.




"சுவர் மட்டுமல்ல... அவரை ஒரு கோட்டை என்றும் சொல்லலாம். களத்தில் டிராவிட் நிலைத்து நின்றுவிட்டால், 12 பீரங்கிகளை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்தால்தான் அந்தக் கோட்டையைத் தகர்க்க முடியும்" என்றார் பௌலிங் ஜாம்பவான் ஷேன் வார்னே. கொஞ்சமும் மிகையில்லாத வார்த்தைகள். மொத்த அணியும் பெவிலியின் நோக்கி நடந்த போட்டிகளில், ஒற்றை ஆளாக நின்று போராடிய களங்கள் எத்தனை! ஸ்கோர்போர்டில் இந்தியா என்பதும் டிராவிட் என்பதும் ஒரேமாதிரி தெரியும். தாறுமாறாக ஸ்பின் ஆகட்டும், ஸ்விங் ஆகட்டும், பௌன்ஸ் ஆகட்டும், 160 கிலோமீட்டர் வேகத்தில் மார்பை நோக்கி வரட்டும்... டிராவிட் தயங்கியதுமில்லை, தடுமாறியதுமில்லை. ஒவ்வொரு பந்துக்கும் அவரிடம் பதிலுண்டு.
பந்துகளை அடிப்பவர்களெல்லாம் தேர்ந்த பேட்ஸ்மேன் இல்லை.

அடிக்காமல் விடத் தெரிந்தவரே சிறந்த பேட்ஸ்மேன். எந்த பந்து இன்ஸ்விங் ஆகி வெளியே வரும், எந்த பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும், ஸ்பின்னாகி வெளியே செல்லுமா, இல்லை ஆர்ம் பாலாக உள்ளே வருமா..? ஒரு பந்து பிட்சாகி தன்னை நோக்கி வரும் அந்த மைக்ரோ விநாடியில் இதையெல்லாம் சரியாகக் கணிக்கும் ஒரு பேட்ஸ்மேனால் மட்டுமே நம்பிக்கையோடு பந்தை அடிக்காமல் விடமுடியும். டிராவிட் - இதில் டிஸ்டிங்ஷன் வாங்கியவர். "டிராவிட்டின் தடுப்பு அரணைத் தாண்டி அவரை அவுட்டாக்குவது மிகவும் கடினம். மற்ற வீரர்களைப்போல் அவர் அதிகமாக பந்தை அடிக்க முற்படுவதில்லை. எப்போது ஒரு பேட்ஸ்மேன் குறைவான பந்துகளை மட்டும் அடிக்கிறாரோ, அப்போது அவரை அவுட்டாக்குவது சிரமம். ஏனெனில், அவர்கள் குறைந்த தவறுகளே செய்வார்கள்" என்று ஷோயப் அக்தர் ஒருமுறை டிராவிட் பற்றிச் சொல்லியிருந்தார்.

 அவருக்கு மட்டுமல்ல, வார்னேவுக்கு மட்டுமல்ல... ஜாம்பவான்களாய் திகழ்ந்த பௌலர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தச் சுவர் சிம்மசொப்பனம்!
அதுவும் அக்தர் ஓவரில் டிராவிட் ஆடுவதெல்லாம்...! லாங் ஆன் ஃபீல்டருக்குக் கைகொடுத்துவிட்டு, பௌண்டரி ரோப்புக்கு அருகிலிருந்து வெறிகொண்டு ஓடிவந்து 150+ வேகத்தில் வீசுவார் அக்தர். எல்.பாலாஜியே அவரது ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்டிருக்கிறார். வேகம் அப்படி. அந்த வேகத்துக்கு யார் அடித்தாலும், பந்து பறந்துவிடும். டிஃபன்ஸிவ் ஷாட் ஆடினாலே சர்க்கிள் ஃபீல்டரை அடையும். அப்படிப்பட்ட பந்தை, க்ரீஸுக்கு அருகிலேயே அடக்கிவைப்பார் டிராவிட். பந்து பேட்டில் பட்டது போலும் இருக்கும், படாதது போலும் இருக்கும். அதுதான் டிராவிட்டின் ஸ்பெஷல். ஒரு ஷாட்டால் பந்தின் pace-ஐக் குறைக்கும் வித்தை கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தவனுக்கே வராது. But the wall can!



அதையெல்லாம்விட, அந்த லேட் கட்...! ரிவர்ஸ் ஸ்வீப், தில்ஸ்கூப் எதுவும் அதன் பக்கத்தில் நிற்க முடியாது. அந்த ஷாட்டை பலரும் ஆடியிருக்கின்றனர்.


ஆனால், டிராவிட்டைப் போல் எவராலும் ஆடியதில்லை. ஏனெனில், அந்த ஷாட் ரன்னுக்கானது இல்லை, ரசிப்பதற்கானது. வலது காலை க்ரீசுக்குப் பின்னே பலமாக வைத்து, இடது காலை சற்று மடக்கி, உதடுகளை உள்ளே மடக்கிக்கொண்டு பந்தை அடித்துவிட்டு, அது போகும் திசையை அவர் பார்ப்பார். 'inverted Y' போல், அதைப் பார்ப்பதற்கே அவ்வளவு ரம்மியமாக இருக்கும். மாயக் கரங்கள் கொண்ட ஓவியன் வரைவதெல்லாம் அழகாகத்தானே இருக்கும்.


ரசிப்பதைவிட, அவரிடம் கற்றுக்கொள்ள இருக்கும் விஷயங்கள் ஏராளம்.


 'நீ நிற்கும் சூழல் எதுவாக இருந்தால் என்ன? உன் எதிரில் நிற்பவன் யாராக இருந்தால் என்ன? அவன் கையில் இருக்கும் ஆயுதம் எதுவாக இருந்தால் என்ன? உன் வெற்றியைத் தீர்மானிப்பது நீ மட்டுமே'...

இதை நான் கற்றுக்கொண்டது அவரிடமிருந்துதான். எந்த மைதானமாக இருக்கட்டும்... எந்த எதிரணியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... எத்தனை விக்கெட்டுகள் வேண்டுமானாலும் வீழ்ந்திருக்கட்டும்...எந்த நெருக்கடியும் டிராவிட்டை வீழ்த்தியது இல்லை. அவை எதுவும் அவரது உறுதியை அசைத்துக்கூடப் பார்த்தது இல்லை.



இரண்டு நாள்கள் முழுமையாக நின்று அணியைக் காப்பாற்றியிருக்கிறார். டெய்ல் எண்டர்களோடு சேர்ந்து சிறந்த பார்ட்னர்ஷிப்கள் அமைத்திருக்கிறார். இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறும் வெளிநாட்டு ஆடுகளங்களில் எதிரணி பௌலரை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

 அவர் அவுட்டாக வேண்டுமா என்பதையும் அவர்தான் முடிவு செய்யவேண்டும். அவரிடம் இருக்கும் உறுதி நம்மை உலுக்கிவிடும். "நம் வாழ்வில் நாம் பார்ப்பதெல்லாம் ஆக்ரோஷம் கிடையாது. உண்மையான ஆக்ரோஷத்தைக் காணவேண்டுமென்றால் டிராவிட்டின் கண்களைப் பாருங்கள்" என்றார் மேத்யூ ஹெய்டன். அப்படி ஒரு தீ அந்தக் கண்களுக்குள் எரிந்துகொண்டிருக்கும். அதுதான் அவர் ஜாம்பவான் ஆகக் காரணம்.
எந்தச் சூழலாக இருந்தாலும், அணிக்காக இவர் காட்டும் அர்ப்பணிப்புதான் அனைவரும் அவரை மதிக்கக் காரணம். 'முதல் பாலே விக்கெட் போயிருச்சா? நான் இருக்கேன். ஃபாரீன் சாயிலா? நான் இருக்கேன். மூணு செஷன் நிண்ணு மேட்ச டிரா பண்ணணுமா? நான் இருக்கேன். ஃபாலோ ஆன் ஆயிடுச்சா? நான் இருக்கேன். முதல் ஸ்லிப்ல நிக்கணுமா? நான் இருக்கேன். விக்கெட் கீப்பர் இல்லையா? நான் இருக்கேன். அட, ஜெயிக்க 22 பந்துக்கு 50 ரன் வேணுமா? அதுக்கும் நான் இருக்கேன்' என அணிக்குத் தேவைப்பட்டபோதெல்லாம், திணறியபோதெல்லாம் ஆக்ஸிஜனாய் இருந்தவர் டிராவிட்! "அணிக்குத் தேவை என்று கண்ணாடியின்மேல் நடக்கச் சொன்னால், டிராவிட் நிச்சயம் அணிக்காக அதைச் செய்வார்" என்றொருமுறை புகழ்ந்தார் நவ்ஜோத் சிங் சித்து. அது புகழ்ச்சியில்லை. நிதர்சனம்.



'எப்படி இந்த மனிதன் மட்டும் இவ்வளவு பொறுமையாக இருக்கிறார்?' - இந்தக் கேள்வி கிரிக்கெட் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் எழுந்திருக்கும். அதற்கான பதில் அவருக்கு மட்டுமே தெரியும். ஒரு ஐ.பி.எல் போட்டிக்குப் பின்னர் தொப்பியை வீசியெறிந்தது என்றுமே நம்மால் மறக்க முடியாது. ஏனெனில், அது அரிதிலும் அரிதான நிகழ்வு. நாம் கோபப்படும்போது, பொறுமை இழக்கும்போதெல்லாம் அவரை நினைத்தால் அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும். கொல்கத்தா, அடிலெய்டு போன்ற இடங்களில் அவர் ஆடிய ஆட்டத்தின் வீடியோக்களைப் பார்த்தால், இன்றும் கூட அவர் மீதான வியப்பு குறைவதில்லை. அந்த வியப்பு, பொறுமை என்ற ஆயுதத்தின் மதிப்பைப் புரிய வைக்கிறது.

கவாஸ்கர், சச்சின், கங்குலி, தோனி, கோலி என அளவு கடந்து கொண்டாடப்பட்ட வீரர்கள் அனைவரையும் மூர்க்கத்தனமாக வெறுத்தவர்களும் நம் நாட்டில் உண்டு. இவ்வளவு ஏன், கபில்தேவை விமர்சிப்பவர்களும் இங்குண்டு. ஆனால், இவரை வெறுக்கும் ஆளை இதுவரை கண்டதில்லை. வெறுத்திட முடியுமா? அளவுகடந்த திறமை, ஏராளமான சாதனைகள், குறைவில்லாத வெற்றிகள், பொருள்... அனைத்தும் சம்பாதித்தவரின் கண்களில் திமிரோ, ஆணவமோ ஒருமுறைகூட எட்டிப் பார்த்ததில்லை. அவர் அரைசதம் அடித்தால், ஹெல்மெட்டின் உயரத்தைக் கூடத் தாண்டாத மாதிரிதான் பேட்டை உயர்த்துவார். அப்படியொரு மனிதனை யாரால் வெறுக்க முடியும்?





"நான் இந்திய அணிக்காக 604 முறை விளையாடியுள்ளேன். அதில் 410 முறை அரைசதத்தைக் கடந்ததில்லை. வெற்றிகளைவிட, நான் சந்தித்த தோல்விகளே அதிகம். நான் வெற்றியாளன் என்பதைவிட, தோற்றவன்தான். அதனால், எனக்குத் தோல்விகள் பற்றிப் பேசத் தகுதி இருக்கிறது" என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசினார் டிராவிட். இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பலகோடி பேரின் ரோல் மாடல், கிரிக்கெட் வீரர்களே கொண்டாடும் ஜாம்பவான், பத்மபூஷண்... அவர் சொன்ன வார்த்தைகள் அவை. டிராவிட்டை மொத்த உலகமும் நேசிக்கக் காரணம் இதுதான். இந்தச் சுவரின் உயரம் எவரும் அடைய முடியாதது!


Thanks for

https://m.dailyhunt.in/news/india/tamil/vikatan-epaper-vika/inthas+suvaraith+takarkka+beerangikalaleye+mudiyathu+rakul+diravid+biranthanal+bathivu+happybirthdaydravid-newsid-79665717

Tuesday, September 20, 2016

KPN 7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி.


7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி....

படித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை. பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்.

மூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல தென்மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுப்பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். அந்தப் பேருந்துகளை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.நடராஜன், இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்துகளுக்கு சொந்தக்காரர்.

அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடுமுழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்திவரும் கே.பி.நடராஜன், பெரிய பிசினஸ் படிப்பு எதுவும் படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும்தான். ஆனால், அடைந்த வெற்றிகள் ஏராளம்.

தனது வெற்றிக்கதையை சொல்கிறார் நடராஜன்....

'' நான் பிறந்து வளர்ந்தது சேலம், பெரியபுத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக்கவுண்டர் நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம். ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளை செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 1968 ம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன். அதுக்கு 'வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ்' என்று பெயர் வைத்து கோவை டூ பெங்களூரு ட்ரிப் அடித்தேன்.

அந்த ஒற்றைப் பஸ்ஸின் ஓட்டுநரும் நான்தான், கிளீனரும் நான்தான். இப்படியாக தனி ஒருவனாக பஸ் போக்குவரத்தை நடத்தினேன். அடுத்த சில வருடங்களில் பங்குதாரர்கள் தங்கள் பங்கை பிரித்துக்கொண்டு வேறு தொழில்களுக்கு போய்விட்டார்கள். எனக்கு மோட்டார் தொழிலை விட மனதில்லை. என்னிடம் இருப்பில் இருந்த பணம் போதவில்லை. வெளியில் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி 1969 ல் ஒரு புதிய பஸ் ஒன்றை வாங்கினேன். எனது நெருங்கிய உறவினரின் குழந்தை பெயர் சிவக்குமார். அந்த குழந்தையின் பெயரையே புதிய பஸ் கம்பெனிக்கு வைத்தேன். 'சிவக்குமார் பஸ் சர்வீஸ்' என்கிற பெயரில் இயங்கிய அந்தப் பஸ்ஸின் டிரைவரும் நான்தான்.
.

மதுரை டூ பெங்களூரு ரூட்டில் பேருந்தை இயக்கி, அந்த பஸ் கம்பெனியை 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில், தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன். எனது தாத்தா குப்பண்ணகவுண்டர் பெயரின் முதல் எழுத்தான 'கே' இன்ஷியலையும், எனது தகப்பனார் பொன்மலைக்கவுண்டர் பெயரில் இருந்து 'பி' எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து 'என்' ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து, '1972 கே.பி.என்.' என்கிற பெயரைவைத்து, டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.

'ஏ.பி.சி 7581' என்கிற ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த கே.பி.என். டிராவல்ஸ் பஸ், திருநெல்வேலி - பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்த போக்குவரத்தை தொடர்ந்து, 1974ம் வருடத்தில், கே.பி.என்.டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பட்டது.1976 ல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின.

பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரை சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் உள்ளிட்ட விஷயங்களில், எங்கள் கம்பெனி டாப்கியரில் போகத்தொடங்கியது. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பஸ் மட்டும் இயக்கிய பொழுது, நான் மட்டும்தான் டிரைவர். இரண்டாவது பஸ்ஸை ஓட்ட, இன்னொரு டிரைவரை வேலையில் சேர்த்தேன். படிப்படியாக கம்பெனி வளர்ந்து, ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுடன் உயர்ந்தது. அப்படி 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்தபோதும், அதில் ஒரு வண்டியின் டிரைவராக நான்தான் இருந்தேன்.

அடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக சொகுசு பஸ்களை அறிமுகம் செய்தேன். குளுகுளு வசதி செய்யப்பட்டதும், சாய்மானம் கொண்ட மெத்தை இருக்கைகளை உடைய பஸ்களை வடிவமைத்தோம். அவற்றுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல பஸ்களை இயக்கினோம்.

இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம்தான்.இப்போது எங்கள் நிறுவனத்தின் 210 பேருந்துகளில்,95 படுக்கை வசதி கொண்டவை. இன்று நாட்டின் எல்லா நகரங்களிலும் எங்கள் நிறுவனத்திற்கு பதிவுக் கிளைகள் உண்டு. நாட்டின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கே.பி.என்.டிராவல்ஸில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளமுடியும்.

ரயில் பயணிகளுக்கு ரயிலுக்குள் உணவு கிடைப்பது போல, எங்கள் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்திட உள்ளோம். எதிர்காலத்தில் 'கே.பி.என். ஏர்லைன்ஸ்' என்கிற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் ஒரு திட்டத்தைப் பற்றிய யோசனையும் இருக்கிறது.

ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான் 17 வயதில் கிளீனர்,18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர், 24 வயதில் கே.பி.என்.டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து, இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ருபாய் சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை நிர்வாகம் செய்ய, என்னிடம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் வேலை பார்க்கிறார்கள்" என்ற நடராஜன்," அன்றைக்கு ஏதோ ஒரு ஆர்வத்தில் படிப்பை பாதியில் கை விட்டேன். இன்னும் கூட படித்திருக்கலாம் என்கிற ஆதங்கம் சிலசமயம் எழுவதுண்டு. இன்று தென் மாநிலங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்தை நடத்திவரும் நான், பட்டப்படிப்பை படித்திருந்தால், இன்னும் நன்றாக பஸ் போக்குவரத்தை நடத்தியிருக்கலாம் என்று எப்போதாவது நினைப்பதுண்டு. ஆனாலும் வாழ்க்கையில் தெரிந்துகொண்ட அனுபவக் கல்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்பதையும் மறுபதற்கில்லை.'' என சொல்லி முடித்தார்.


Thanks to
- DrTm Mohan Namakkal

Tuesday, July 12, 2016

ஹெலன் கெல்லர்- அமெரிக்க மாற்றுத்திறன் சாதனையாளர்




பார்வைத்திறன், பேசும் திறன், கேட்கும் திறனை இழந்தாலும், சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய ஹெலன் கெல்லர் (Helen Keller) பிறந்த தினம்  (ஜூன் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் அலபாமா மாநிலம் டஸ்கம்பியா நகரில் (1880) பிறந்தார். ஒன்றரை வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் பறிபோனது. தான் நினைப்பதை மற்றவர்களுக்கு உணர்த்த தெரியாமல் தவித்த குழந்தை, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, முரட்டுத்தனமாக நடந்துகொண்டது.
l எப்படியாவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்று பெற்றோர் படாத பாடுபட்டனர். ‘தி மிராக்கிள் ஒர்க்கர்’ என்று உலகம் போற்றிய ஆசிரியை ஆனி சலிவன் 1887-ல் வந்து சேர்ந்தார். இந்த ஆசிரியை மாணவி உறவு அடுத்த 49 ஆண்டுகாலம் நீடித்தது.
l முதலில் பொருட்களை இவரது கைகளில் கொடுத்தும், மரம், செடி கொடிகளைத் தொடச் செய்தும் அவற்றின் பெயர்களை கையில் எழுதியும் காட்டினார் சலிவன். எதையும் வேகமாக கற்கும் ஆற்றல் பெற்றிருந்த ஹெலன், விரைவில் பிரெய்லி முறையைக் கற்றார். உதடுகளில் கைவைத்து அதன் அதிர்வுகள் மூலம் பேசுவதைப் புரிந்துகொள்ளும் கலையைக் கற்றார்.
l பத்து வயது நிறைவதற்குள் பிரெய்லி முறையில் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன் மொழிகளைக் கற்றார். நண்பர்கள், உறவினர்களுக்கு கடிதங்கள் எழுதினார். பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்து, ஆசிரியர் வாயிலாகவும் பிரெய்லி முறையிலும் பல நூல்களைப் படித்தார்.
l சத்தம்போட்டு அழுது, சிரிக்கிற ஹெலனால் பேசவும் முடியும் என்பதை 13-வது வயதில் தோழிகள் புரிய வைத்தனர். சாராஃபுல்லர் என்ற ஆசிரியரின் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசக் கற்றுக்கொண்டார். நியூயார்க்கில் உள்ள காது கேளாதோர் ரைட் ஹுமாஸன் பள்ளியில் பயின்றார். தெளிவாகப் பேச முடியா விட்டாலும், பிறர் புரிந்துகொள்ளும் அளவுக்கு பேசும் திறனை வசப்படுத்திக்கொண்டார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.
l சுயசரிதையை 23 வயதில் எழுதினார். இது பெண்கள் இதழில் தொடராக வந்து, பிறகு புத்தகமாக வெளிவந்தது. தமிழ் உட்பட உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டது. இதுதவிர, 12 நூல்கள் எழுதியுள்ளார். பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார்.
l ராட்கிளிஃப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, 24-வது வயதில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பார்வையின்றி, காதுகேளாமல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.
l பார்வையற்றோர் நலனுக்கான அமைப்பை உருவாக்கினார். வாழ் நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அயராமல் பாடுபட்டார். அவர்களுக்கான பள்ளிகளைத் திறக்க வைப்பதற்காக, இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பார்வையற்றோருக்காக தேசிய நூலகம் உருவாக்கி னார்.
l இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘தி மிராக்கிள் ஒர்க்கர்’ திரைப்படத்தில் ஹெலன், ஆனி சலிவனாக நடித்த 2 நடிகைகளும் ஆஸ்கர் விருதை வென்றனர். இவரது சுயசரிதை, நாடகமாகத் தயாரிக்கப்பட்டது.
l உலகம் முழுவதும் பல பல்கலைக்கழகங்கள், அமைப்புகளிடம் பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்காக இறுதிவரை உழைத்த ஹெலன் கெல்லர் 88-வது வயதில் (1968) மறைந்தார்.

Monday, December 21, 2015

பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மண விழா காணும் பாக்கியம்

ஷஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகங்கள் போன்ற சடங்குகளை நடத்திக் கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மண விழா காணும் பாக்கியம் அமைகிறது.

இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாக்க் கொண்டே அமைகின்றன. சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும். நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.

பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த 360 பாகைகளையும் கடந்து சென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.

ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்

பூஜையின் போது 64 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 64 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு ஆகில நால்வரையும் சேர்த்துக் குறிப்பதற்காகத்தான் 64 கலசங்கள் என்பது ஐதீகம். பிரபவ முதல் விரோதிகிருது வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும், ஆங்கிரஸ முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும், ஈஸ்வர முதல் துன்பதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும், சித்திரபானு முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள். தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்து தான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர்

அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.

தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை. இப்படி அனைத்திலும் இறைவனை – அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையைஒரு மனிதன் 80 வயதில் பெறும் போது தான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறான்.

Monday, January 26, 2015

FACEBOOK உருவான கதை



இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK).தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது.ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது.

அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார்.முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்டஎவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமானபணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது.அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது.இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன்பிருந்தே இவ்வளவு போட்டி.

தற்போது ஃபேஸ்புக் கைபேசி தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளது.மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக தற்போதுஇல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள்.உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணையதளங்கள்.இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப்பரிமாறிக் கொள்ளலாம்.

நன்றி,
ஜீனியஸ்

Friday, January 9, 2015

HISTORY - பிரும்ம குப்தா கி.பி. [598-668]


தன் சொந்த வரலாறை மறந்த சமுதாயத்தால் புதிய வரலாறை படைக்க முடியாது.

பிரும்ம குப்தா கி.பி. [598-668]

ந்யூடநிர்க்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புவியீர்ப்பு சக்தி இருப்பதை கண்டறிந்தவர். ஜாமென்ட்ரி, அல்ஜீப்ரா போன்ற கணித முறைகளை கண்டு பிடித்தவர்.

இன்று ராஜஸ்தானில் பிம்மல் என்று அழைக்க படும் நகரில் அன்றய பெயர் பில்லமலா. பிறந்த பிரும்ம குப்தா ஹர்ஷ மன்னர்களது அவையில் முதன்மை வானியல் அறிங்கர் மற்றும் ஜோதிடராக இருந்தவர். உஜ்ஜயினியில் இருந்த பள்ளிகளில் இவர் இந்த கலைகளை கற்றதாக சரித்திர குறிப்புகள் உள்ளன. இவர் பிறந்த ஊரின் பெயரால் இவரை பில்லமாச்சாரியா என்றும் அழைப்பதுண்டு. இவர் பல நூல்கள் எழுதி உள்ளார். அதில் முக்கியமான இரண்டு நூல்கள்.

பில்ம சித்தாந்தம்- ஜாமென்ட்ரி, அல்ஜீப்ரா போன்ற பல கணித முறைகள் இதில் விளக்கப்பட்டு உள்ளன.

பிரம்மகுப்த சித்தாந்தம்- இது இவர் எழுதிய மற்றொரு பிரபலமான நூலாகும். முதன் முதலாக புவியீர்ப்பு குறித்த கருத்துக்கள் இதில் எழுதபட்டு உள்ளன.

இவரது நூல்களை கிபி 770இல் அல்பைசி என்கிற அறிங்கர். அரேபிய மொழியிலும் பின்னர் 1817இல் H.T கோல்புரூக் என்ற அறிங்கரால் அவை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கபட்டு உள்ளன.

நிறைய போதி தர்மர்கள் நமது நாட்டில் வாழ்ந்து உள்ளனர். இந்த உலகினில் இன்றும் தமது பெருமை, தொன்மை ஆகியவற்றை உணராத நாட்டு மக்கள் உள்ளனர் என்றால் அது நமது நாட்டு மக்கள் தான். இன்று சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற அறிங்கர்கள் ஒரு முன் உதாரணம். நாம் பிறந்த மண்ணில் தான் இவர்களும் பிறந்தார்கள். நம்மாலும் இவர்களை போல் சாதிக்க முடியும் என்று நாம் Inspirationனாக எடுத்து கொண்டு ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும். முடிந்த அளவு நாம் நமது மண்ணில் பிறந்த ஞானிகள், விஞ்ஞானிகளை பற்றி குழந்தைகளுக்கு சொல்லுவோம். சில பெரியவர்களுக்கும். உலகில் பல மொழிகள் கற்று கொள்வது. பல உலக பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல் சிறந்தது தான். ஆனால் நமது நாட்டு வரலாறு தெரியாமல் பிற நாட்டு வரலாறுகளை படிப்பதில் ஒரு பயனும் இல்லை.

2600 வருடங்களுக்கு முன்பு ப்லாஸ்டிக் ஸர்ஜரீ, இதய அறுவை சிகிச்சை செய்த சுஸ்ருதாவில் ஆரம்பித்து ஆரியபட்டா, பாஸ்கராசார்யா, வராஹ மிக்ரர், ராமன், சந்திர போஸ், G.D நாய்டு வரை நமது மண்ணில் பிறந்த விஞ்ஞானிகளின் வரலாறு அவர்களது கண்டு பிடிப்புகளை தெரிந்து கொண்டு பின்னர் நாம் மற்ற நாட்டு விஞ்ஞானிகளை பற்றியும் அவர்களது கண்டு பிடிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்வதில் ஒரு அர்த்தம் உள்ளது.

தன் சொந்த வரலாறை மறந்த சமுதாயத்தால் புதிய வரலாறை படைக்க முடியாது.

Thursday, January 1, 2015

"பெரிபிளஸ் ஆப் எரித்ரயென் சீ"(Periplus of Erythrean sea)

தமிழர்கள் சூட்டிய கடல் பெயர்கள் :
"பெரிபிளஸ் ஆப் எரித்ரயென் சீ"(Periplus of Erythrean sea) என்ற புத்தகத்தில் முதலாம் நூற்றாண்டில் கடல் வாணிபம் குறித்த முக்கிய வரைபடம் குறிக்க பட்டுள்ளது . எரித்ரயென் கடல் என்பது இன்று நாம் சொல்லும் இந்து மா சமுத்திரம் . இந்து மா சமுத்திரம் வழியாக கடல் வாணிபத்தை குறிக்கும் வரைபடம் அது. அகவே முதலாம் நூற்றாண்டில் எரித்ரயென் கடல் என்று இந்து மா சமுத்திரம் அழைக்கப்பட்டது உறுதி ஆகிறது. இப்பொழுது "எரித்ரயென் சீ" என்ற வார்த்தையின் தன்மையை ஆராயும் பொழுது தான் அதிர்ச்சி காத்திருந்தது.
பெயர் : எரித்ரயென் சீ
பெயர் காரணம் : அந்த கடல் பகுதியில் சிவப்பு நிற பூஞ்சை முளைத்து அது அழுகும் வரை கடல் மட்டம் தீ பற்றி எரிவது போல காட்சியளிக்குமாம் அந்த பூஞ்சையின் அறிவியல் பெயர் (Trichodesmium erythraeum Algae) ட்ரைகோதேசமியும் எரித்ரயெயும் பூஞ்சை. இதனால் இந்தவகை பூஞ்சை வளரும் கடல் என்பதால் இந்த கடல் அப்பெயர் பெற்றதாக கூறபடுகிறது.
என் கேள்விகள் :
இந்த வகை பூஞ்சை முதன் முதலாக கடல் மாலுமி குக்(Captain Cook) என்பவரால் 1770 ஆம் ஆண்டு தன பயணத்தின் பொழுது கவனித்து பின்பு ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அறிவியல் பெயரிடப்பட்டது . அப்படி இருக்குமெனில் முதலாம் நூற்றாண்டில் உள்ள வரை படத்தில் எப்படி அந்த பெயர் இடம்பெற்றது ???
பின்பு இதற்கு தமிழ் விளக்கத்தை பார்த்தால் :
Erthraean sea = Ery + Thraen sea
எரித்ரயென் = எரி + த்ரயென்
Ery or Eri (எரி) = எரி என்பதன் அர்த்தம் நெருப்பு (burning or firing red in colour)
Thirai or Tharai- (திரை) = திரை என்பதன் பொருள் ''திரைகடல்'' ''அலைகடல்'' என்ற வார்த்தையில் இருந்து புரியும்(a screen or a wave)
எரி+திரை = எரிதிரை > எரித்ரை > எரித்ரயென் கடல்
Eri + thirai = Erithirai > Erythirai > Erythraean Sea
''எரியும் திரைகடல்'' என்று அழகாக சொல்லப்பட்ட இந்த கடலின் பெயர் காலபோக்கில் மறைந்து இந்து மா கடல் என்று மாற்றப்பட்டுள்ளது
நன்றி
கி . கோகுலகிருட்டிணன் 

Thursday, December 25, 2014

தமிழில் படித்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியுமா ?



 
இனி எவராவது தமிழைப் படித்ததால் வாழ்க்கை முன்னேறாது என்று சொல்லாதீர்கள்...

என் பெயர் வே.நவேந்திரன்

இன்று நான் நகராட்சி ஆணையராக பணிபுரிய நான் தமிழை படித்ததே காரணம் ...

மேல்நிலை கல்வி
ஆண்கள் அரசு பள்ளி மாரியம்மன் கோவில்

இளநிலை மற்றும் முதுநிலை வேதியியல் பயின்றது
மன்னர் சரபோசி அரசு கல்லூரி தஞ்சை ...

1ஆம் வகுப்பில் இருந்து இளநிலை பட்ட படிப்பு வரை தமிழ் வழியே பயின்றேன்..

2007 ஆம் வருடத்தில் இருந்து தமிழ் நாடு அரசு தேர்வாணைய தேர்வுக்கு படித்து வந்தேன்...

தொகுதி2 தேர்வில்
சிறப்பாக எழுதினேன்
நான் நேசித்த தமிழில் 98/100 சரியாக விடையளித்தேன்...

22.07.2012, 23.07.2012 அன்று நேர்காணல் நடந்தது ...

கேட்ட கேள்விகளில் பாதிக்கும் மேல் தமிழைப் பற்றி .....
விடுவேனா......?

கேள்விகளில் சில ...

கேள்வி :
பாரதிதாசனை பற்றியும் அவரது பாடல் ஒன்றும் சொல்லவும்

நான் :-
கொடை வாளினை எடடா
மிகக் கொடியோர் செயல் அறவே
உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா....

என்ற பாரதிதாசன் பாடலை சொன்னேன்

கேள்வி :-
ஏன் இந்த பாடல் சொல்கிறீர்கள்?

நான் :-
இன்று தமிழர்கள் சாதியால் மதத்தால் பிரிந்து உள்ளார்கள்
நாம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றேன்

கேள்வி :-
சிரிக்கும் சித்திர சோலைகளே...
என்ற பாடலை எழுதியவர் யார் ?

நான்:-
சற்று யோசனைக்கு பின்
பாரதிதாசன் ...

இன்ன பிற கேள்விகளுடன் நேர்காணல் முடிந்தது ...

01.08.2012 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது...
படித்த தமிழ் கரை சேர்த்தது

3 மதிப்பெண்ணில் 7.5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் முதல் இடத்தை இழந்தேன்...

298.5/330 மதிப்பெண்
பெற்று இரண்டாவது இடமே பெற முடிந்தது

15.10.2012
அன்று தமிழக முன்னாள் டி.ஜி.பி திரு.நட்ராஜ் இ.கா.ப அவர்கள் கையினால் நகராட்சி ஆணையராக பணி ஆணை பெற்று 11.02.2013 முதல் மக்கள் பணியில் தொடர்கிறேன்..

இனி எவராவது தமிழைப் படித்ததால் வாழ்க்கை முன்னேறாது என்று சொல்லாதீர்கள்...

முன்னேறுவது
உங்கள்
முயற்சியைப் பொறுத்ததே.....

@ நவேந்திரன்
செயங்கொண்டம் நகராட்சி ஆணையர்.

Topest womans in INDIA - இந்தியாவின் முதல் பெண்மணிகள் பற்றிய தகவல்கள் சில ..... !






★ இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ·• இந்திரா காந்தி (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ·• பிரதீபா பாடேல்.(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ·• சுசேதா கிருபளானி(அவர்கள்) (உத்திரபிரதேசம்).

★ இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ·• சரோஜினி நாயுடு(அவர்கள்) (உத்திரபிரதேசம்).

★ இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி ·• பாத்திமா பீவி. (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் ·• லட்சுமி பிரானேஷ். (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் ·• விஜயலட்சுமி பண்டிட் (அவர்கள்) (ரஷ்யா 1947-49).

★ இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் ·• ராஜ்குமாரி அம்ரித்கௌர்(அவர்கள்) (சுகாதாரத்துறை 1957 வரை).

★ இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ·• கார்நிலியா சொராப்ஜி (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ·• ஆனந்தபாய்
ஜோஷி(அவர்கள்) (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).

★ இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ·• லலிதா (அவர்கள்) (சிவில்
1950).

★ இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ·• அன்னா
ஜார்ஜ் மல்கோத்ரா (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ·• கிரண்பேடி. (அவர்கள்)

★ உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் ·• திருமதி ருக்மணி லெட்சுமிபதி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் ·• செல்வி பச்சேந்திரிபால்(அவர்கள்)

★ இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் ·• திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்(அவர்கள்)

★ இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி ·• திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ ·• அருந்ததி ராய்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் நீதிபதி ·• அன்னா சாண்டி. (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர் ·•
சுவர்ணகுமாரி தேவி(அவர்கள்) (ராம்பூதோதானி பத்திரிக்கை).

★ இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் ·• திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (அவர்கள்) (ஆந்திரா)

★ இந்தியாவின் முதல் பெண் விமானி ·• திருமதி சுஷ்மா (அவர்கள்) (ஆந்திரா)

★ இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் ·• திருமதி துர்பா பானர்ஜி (அவர்கள்) (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.

★ இந்தியாவின் முதல் பெண் மேயர் ·• தாரா செரியன். (அவர்கள்) (சென்னை )

★ இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் ·• ஹன்சா
மேத்தா (அவர்கள்) (பரோடா பல்கலைகழகம்).

★ பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் ·• திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி(அவர்கள்)

★ இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி ·• திருமதி கே.பி. சுந்தராம்பாள்(அவர்கள்)

★ ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை ·• செல்வி ஆர்த்தி சாஹா(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி ·• திருமதி லீலா சேத்(அவர்கள்)

★ இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி ·• திருமதி பீம்லா தேவி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ·• வசந்த
குமாரி (தமிழ்நாடு). (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி ·•
கல்பனா சாவ்லா. (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் ·•
சுரோகா யாதவ். (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP) ·•
கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா. (அவர்கள்)

★ இந்தியாவின் முதல்
பெண் ராணுவ கமாண்டன்ட் ·• புனிதா அரோரா.(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல் ·• பத்மாவதி பந்தோபாத்யாயா (அவர்கள்)

★ முதல் பெண் சபாநாயக்கர் ·• மீராகுமாரி (அவர்கள்)

★ சட்டம் இயற்றிய முதல் பெண் ·• முத்துலட்சுமி ரெட்டி (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் செஸ் க்ராண்ட் மாஸ்டர் ·• செல்வி விஜயலெட்சுமி (அவர்கள்) (சென்னை)

★ இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு ·• திருமதி மரகதவள்ளி டேவிட்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் ·• திருமதி ஆஷா புர்னாதேவி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி ·• செல்வி ரஸியா பேகம்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் ·• திருமதி அனிஸா மிர்சா (அவர்கள்) (ஆமதாபாத்-குஜராத்)

★ இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி ·• திருமதி உஜ்வாலா பாட்டீல்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் ·• செல்வி காதம்பினி கங்குலி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ·• திருமதி கன்வால் வர்மா(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் ·• திருமதி அஞ்சலி ராஜகோபால் (அவர்கள்) (தமிழ் நாடு)

★ இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் ·• திருமதி ஷீலாடோவர்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் ·• திருமதி ஹோமய் வ்யாரவல்லா(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் சிற்பி ·• திருமதி மணி நாராயணி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் ·• திருமதி ரஜினி பண்டிட்(அவர்கள்)

★ ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி ·• திருமதி ராணி வேலு நாச்சியார் (அவர்கள்) (மதுரை கோச்சடைப் போர்)

★ இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மவிபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் ·• திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) ·• திருமதி அருணா ஆசஃப் அலி.(அவர்கள்)

Wednesday, December 17, 2014

ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது

மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி, 30 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுவடிவில் பிரசுரமாகி இருப்பதைவிட ஆச்சர்யமான விஷயம், அந்த பேட்டியில் வெளிப்படும் ஜாபிசின் தொலைநோக்கு.

இன்று கம்ப்யூட்டரும் , இணையமும் சர்வசாதாரணமாக இருக்கலாம் ,ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் ’பி.சி’க்களை விரும்பி வாங்கும் காலம் வரும் என்று சொல்ல துணிவும் தொலைநோக்கும் வேண்டும் அல்லவா? இரண்டுமே ஜாப்சிடம் இருந்ததை இந்த பேட்டி உணர்த்துகிறது. மக்கள் கம்ப்யூட்டர்களை விரும்பி வாங்குவார்கள் என்பதற்கு ஜாப்ஸ் முன் வைத்த காரணம், தேசிய அளவிலான தகவல் தொடர்பு வலைப்பின்னலில் இணைவதற்காக என்பதாகும்.

ஜாப்ஸ் குறிப்பிட்டது இணையத்தை தான். மிகவும் மகத்தான மாற்றத்தின் துவக்கத்தில் இருக்கிறோம் என்றும் ஜாப்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால் ஜாப்ஸ் இந்த கணிப்பை பகிர்ந்து கொண்ட அந்த காலகடத்தில், இணையம் பல்கலைக்கழகங்கள் மற்றும் ராணுவ அமைப்புகள் மட்டுமே அறிந்த, பயன்படுத்திய வலைப்பின்னலாக இருந்தது .அதோடு பர்சனல் கம்ப்யூட்டர்களின் விலையும் சரி, அவற்றின் செயல்பாடும் பெரும்பாலானோருக்கு எட்டாக்கனியாக இருந்தது. அப்படி இருந்தும் கூட ஜாப்ஸ், பெரும்பாலானோர் வீட்டிலேயே கம்ப்யூட்டர்களை பயன்படுத்த துவங்குவார்கள் என்ற கணிப்பை உறுதிபடி வெளியிட்டிருந்தார்.

கம்ப்யூட்டர்கள் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது எனும் நம்பிக்கையை வெளிப்படுத்திய ஜாப்ஸ், நமக்கு கிடைத்த அற்புதமான சாதனம் என்றும் கம்ப்யூட்டரை வர்ணித்திருப்பதை அவரது பதிலில் உணரலாம்.
ஒருவர் பர்சனல் கம்ப்யூட்டரை ஏன் வாங்க வேண்டும் எனும் கேள்விக்கு அலுவலகம் மற்றும் கல்வியில் அது ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களை பட்டியலிட்டுள்ளதோடு , வீடுகளிலும் கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டிற்கு வரும் என சொல்லியிருப்பதுதான் இந்த பேட்டியின் ஹைலைட். எல்லா வீடுகளிலும் கம்ப்யூட்டர் முக்கிய அங்கமாகும் என்றும் அவர் பதில் அளித்திருக்கிறார்.

அது எப்படி ?எனும் கேள்விக்கு தான், தேசிய அளவிலான வலைப்பின்னல் பற்றி குறிப்பிடுகிறார். ஆச்சர்யம் தான் இல்லையா?

மேக்கிண்டாஷ் வடிவில் பர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டதால் மட்டும் ஜாப்ஸ் இவ்வாறு கூறியிருக்கவில்லை. உண்மையில் கம்ப்யூட்டர்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அவர் ஊகித்திருந்தார். கம்ப்யூட்டர்களை பயனுள்ளதாக ஆக்ககூடிய வலைப்பின்னலின் தாக்கத்தையும் அவர் முன்நோக்கியிருந்தார்.

ஜாப்ஸ் கம்ப்யூட்டர்களை கிராஹாம் பெல்லின் தொலைபேசியுடம் ஒப்பிட்டு, அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருப்பதுதான் சுவாரஸ்யமான விஷயம்.

100 ஆண்டுகளுக்கு முன் கிராஹாம் பெல்லிடம் தொலைபேசி மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கேட்டிருந்தால் அவருக்கு பதில் சொல்லத்தெரிந்திருக்காது. அதே போலதான் கம்ப்யூட்டர்கள் விஷயத்திலும் மகத்தான மாற்றம் வரப்போகிறது என ஜாப்ஸ் பதில் அளித்திருக்கிறார்.

தந்தி செய்யாத மாற்றத்தை தொலைபேசி செய்தது பற்றி விளக்கியுள்ள ஜாப்ஸ் , ஐபிஎம் கம்ப்யூட்டர் செய்யாததை தனது மேக்கிண்டாஷ் செய்யக்கூடிய விதம் பற்றியும் பேசியிருப்பது அவரது கர்வத்திற்கு மட்டும் அல்ல, தொலைநோக்கு பார்வைக்கும் சான்று.

ஸ்டீவ் ஜாப்சின் இந்த பேட்டி ஆச்சர்யப்படக்கூடிய வகையில் 1985 ல் பிளேபாய் இதழில் வெளியானது. பிளேபாய் இதழை கிளர்ச்சியூட்டக்கூடிய படங்களுக்காக பலரும் அறிந்திருந்தாலும், அருமையான முழுநீள நேர்காணல்கள் பல அதில் வெளியாகி இருப்பது பலரும் அறிந்திராதது. அப்படி வெளியான ஸ்டீவ் ஜாப்சின் முழுநீள பேட்டியைதான், லாங்க்பார்ம் இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
பொறுமையாக படிக்க வேண்டிய நீளமான, ஆழமான பழைய மற்றும் புதிய கட்டுரைகளை தேடி கண்டுபிடித்து வெளியிட்டு வரும் இணையதளம் இது.

ஸ்டீவ் ஜாப்சின் முழு நீள பேட்டியை படிக்க:http://longform.org/stories/playboy-interview-steve-jobs

ஜாப்சின் பேட்டியின் முக்கிய பகுதியை படிக்க: http://paleofuture.gizmodo.com/steve-jobs-imagines-nationwide-internet-in-1985-intervi-1671246589/+ericlimer
Thanks to
- சைபர்சிம்மன்

Thursday, December 4, 2014

செயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து: ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை!

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதை அலட்சியப்படுத்த முடியாது. ஹாக்கிங்கின் சமீபத்திய கருத்து செயற்கை அறிவு பற்றி அச்சம் கொள்ள வைக்கிறது.

முழு அளவிலான செயற்கை அறிவு வளர்ச்சி மனிதகுலத்துக்கே முடிவுகட்டிவிடலாம் என ஹாகிங் கூறியுள்ளார். தொழில்நுட்பம் தானாக சிந்திக்க கற்றுக்கொள்ளும் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை பெற்று வருவதும், மனிதகுலத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்க கூடியது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஹாகிங்கின் கருத்து திகிலூட்டக்கூடியதாக இருந்தாலும் , தொழில்நுட்பத்தின் உதவியேடனேயே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். அந்த காரணத்தினாலேயே அவரது எச்சரிக்கை கூடுதல் கவனம் பெறுகிறது.


பிரிட்டனைச்சேர்ந்த கோட்பாடு சார்ந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங், சமகாலத்து முக்கிய அறிவியல் சிந்தனையாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஐன்ஸ்டினை போன்ற விஞ்ஞானி என்று போற்றப்படும் ஹாகிங்கின் அறிவியலும் வியக்க வைக்க கூடியது. அதைவிட அவரது வாழ்க்கை வியக்க வைக்க கூடியது.

நரம்பு மண்டல இயக்கத்தை பாதிக்கும் ஏ.எல்.எஸ் எனும் நோய் பாதிப்பு, அவரது பேச்சு மற்றும் சுந்திரமான இயக்கத்தை முடக்கியுள்ளது. ஆனால் அவரது சிந்தனையை நோயால் முடக்க முடியாத நிலையில் ஹாகிங் நவீன சாப்ட்வேர் மூலம் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார்.

கன்னத்தில் பொருத்தப்பட்ட சென்சார் மூலம் அவர் எண்ணங்களால் சாப்ட்வேரை இயக்கி எழுதுகிறார். பேசுகிறார். தொடர்ந்து இயங்கி ஊக்கம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் பேராசிரியர் ஹாங்கிற்காக புதிய தகவல் தொடர்பு நுட்பத்தை இண்டெல் நிறுவனம்   உருவாக்கியுள்ளது. Assistive Context Aware Toolkit (ACAT) என்று சொல்லப்படும் இந்த நவீன தொழில்நுப்டம் , ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் ஸ்விப்ட்கீ நுட்பத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த நுட்பம் ஹாகிங் செயல்பாடுகளை கவனித்து, அவர் சிந்திக்கும் முறையை புரிந்து கொண்டு அவர் அடுத்ததாக என்ன வார்த்தையை டைப் செய்யப்போகிறார் என ஊகித்து சொல்லக்கூடியது. இதன் காரணமாக ஹாகிங்கால் முன்பை விட 20 சதவீதம் வேகமாக டைப் செய்ய முடியும். இந்த தகவல் அவரது ஸ்பீச் சிந்தசைசருடன் இணைக்கப்பட்டு, ரோபோ குரலை உருவாக்கிறது. இதன் மூலம் அவர் தனது லேப்டாப் வழியே மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

ஹாங்கி இணையத்தை பயன்படுத்துவது உட்பட பல செயல்களை இந்த புதிய சாப்ட்வேர் அமைப்பு தானியங்கிமயமாக்கி உள்ளது.

இந்த நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட லண்டன் நிகழ்ச்சியில் பேசிய ஹாங்கிங், டிஜிட்டல் உதவியாளர் தொழில்நுட்பங்களான சிரி, கூகிள் நவ் மற்றும் கார்டனா ஆகியவை வருங்காலத்தில் நிகழக்கூடிய தொழில்நுட்ப போட்டியின் ஆரம்ப அறிகுறி என்று கூறினார். ஆனால் வருங்காலத்தில் நிகழக்கூடிய சாத்தியங்களுக்கு எல்லையே இல்லை என்று கூறிய ஹாகிங், மனித மூளையை மிஞ்சக்கூடிய திறன் படைத்த கம்ப்யூட்டர்களை உருவாக்குவது சாத்தியமாகலாம் என்றார்.

ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவின் முழு அளவிலான வளர்ச்சியால், மனித குலத்திற்கு முடிவு கட்டும் ஆபத்து இருப்பதாகவும் ஹாகிங் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால் இந்த தொழில்நுட்பத்திற்கு போர்,நோய் மற்றும் வறுமையை ஒழிக்கும் ஆற்றல் இருப்பதாகவும் கூறினார்.
மருத்துவத்தால் என்னை குணப்படுத்த முடியாததால் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொடர்பு கொள்கிறேன் என்று கூறிய ஹாகிங் , இந்த புதிய தொழில்நுட்ப அமைப்பு ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் தகவல் தொடர்பில் இருந்த எல்லைகளை உடைத்தெறியும் என்றும் தெரிவித்தார்.

ஹாகிங் போலவே சமீபத்தில் இணைய தொழில்முனைவோரான எலோன் மஸ்க் செயற்கை அறிவு பற்றி எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபன் ஹாங்கின் பிபிசி பேட்டி; http://www.bbc.com/news/technology-30290540

- சைபர்சிம்மன்

Tuesday, December 2, 2014

நாசாவின் பார்வையில் நமது ராணுவ வீரர்கள்!

இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருக்கும். பகை நாடுகளின் எல்லைகளில் எப்போதுமே பிரச்னைதான். அதனால், எல்லைப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். சமீபத்தில், விண்வெளிவீரர்கள் பூமியைப் படம் பிடித்து, அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.

புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, 'என்ன கோடு' என்று பரிசீலித்துப் பார்த்தபோது, இந்தியா-பாகிஸ்தான் பார்டர் என்று தெரியவந்தது.
”
இந்தியா -  பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோதப் பிரச்னைகள், காலம் காலமாக இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்துவருகிறது.

அதனால், நம் நாட்டு எல்லையைப் பலப்படுத்தவே, மின்விளக்குகள் (floodlights) வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. 
இதனால், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், சுலபமாகக் கண்டறிந்து தக்க பதிலடி கொடுக்க முடியும். எல்லையில் அமைந்துள்ள ஃபெட்லைட்டுகளின் வரிசை பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு இன்டர்நேஷனல் பார்டர் மற்றும் குஜராத்துடன் சேர்த்து,  சுமார் 1,861 கிலோமீட்டர்கள் வரை உள்ளது. 
2.043 கிலோமீட்டர்கள் வரை ஃபெட்லைட்டுகளை அமைக்க வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு.  கடந்த அக்டோபர் 28-ம் தேதி இந்தப் புகைப்படத்தை நாசா தம் வெப்சைட்டில் வெளியிட்டது.

-என்.மல்லிகார்ஜுனா

Sunday, November 30, 2014

ஜகதீஷ் சந்திர போஸ் பிறந்த தினம் நவம்பர் 30:

ரேடியோவை கண்டுபிடித்தது யார் ?

 அவரின் வாழ்க்கை இணையில்லாத உழைப்பு,அளவில்லாத தன்னம்பிக்கை,கூடவே மார்க்கோனியின் துரோகம் ஆகியவற்றால் இணைந்து உருவானது. அந்த வலி தரும் கதையை தெரிந்து கொள்வோம்

ஜகதீஷ் சந்திர போஸின் அப்பா ஆங்கிலேய அரசில் உயர் பதவியில் இருந்தவர், ஆனாலும்,வித்தியாசமான நபர். ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுகிற காரியங்களை செய்து கொண்டிருந்தார் ; மக்களுக்கு உதவ தன் சொத்துக்களை பெருமளவில் செலவிட்டார். எளியவர்கள் உயரவேண்டும் என்பது மட்டுமே அவர் மனதில் இருந்தது. ஆங்கிலப்பள்ளிக்கூடங்களில் தன் மகனை படிக்க அனுப்பாமல் தாய்மொழியான வங்கமொழியில் எளியவர்களின் பிள்ளைகளோடு போஸை படிக்க வைத்தார். இயற்பியலில் போஸ் பட்டம் பெற்றதும் அவரின் பிள்ளையை இங்கிலாந்துக்கு படிக்க அனுப்ப முடிவு செய்தார். கண்டிப்பாக சிவில் சர்வீஸ் வேலைக்கு தன் மகன் போகக்கூடாது என்று சொல்லிவிட்டார். காரணம் அது எளியவர்களிடம் இருந்து அவனை பிரித்துவிடும் என்கிற உறுதியான நம்பிக்கை அவரிடம் இருந்தது. மக்களுக்கு சேவை செய்யப்பயன்படும் மருத்துவம் படிக்ககொடுமையான வறுமைக்கு நடுவிலும் மனைவியின் நகைகளை அடமானம் வைத்து அனுப்பினார். அங்கே போய் பிணவறைகளின் நாற்றம் பொறுக்காமல் இயற்கை அறிவியல் மற்றும் அறிவியலில் பட்டம் பெற்று போஸ் திரும்பினார்.

ரிப்பன் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார். இந்தியர்களை மனிதர்களாக நடத்தியவர் அவர். மாநில கல்லூரியில் போஸ் பேராசிரியர் ஆகியிருந்தார். அவருக்கு முழுச்சம்பளத்தை இந்தியர் என்பதால் தர மறுத்தார்கள். மூன்று வருடம் சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் சிறப்பாக நடத்தினார் இவர். அசந்து போய் மூன்று வருட பாக்கியோடு ஆங்கிலேயர்களுக்கு இணையான சம்பளம்
தந்தார்கள்.இந்திய கல்வித்துறை பணிக்கு நியமனம் செய்வதாக உறுதியளித்தார் ரிப்பன். கடும் போராட்டத்துக்கு பின் அவரை அப்பதவிக்கு கொண்டு வந்தார் ரிப்பன்.

முப்பத்தைந்து வயது வரை பாடங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருந்த போஸுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றியது. மாக்ஸ்வெல் மின்காந்த அலைகள் பற்றி குறித்திருந்தார் ; அவற்றை உருவாக்கி காட்டியிருந்தார் ஹெர்ட்ஸ். இருபத்தி நான்கு அடி மட்டுமே அளவு கொண்ட சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ,வழிகாட்டியோ இல்லாமல் இதுசார்ந்த ஆய்வில் தானே இறங்கினார் போஸ். லாட்ஜின் ஹெர்ட்ஸ் மற்றும் அவருக்கு பின்வந்தவர்கள் என்கிற புத்தகம் தந்த உந்துதலில் இயங்கினார். கொஹரர் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார் அதன் மூலம் ரேடியோ அலைகளை கண்டறிய முடியும் என்று அதை செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார். ஆனால்,அந்தக்கருவி நிறைய குறைபாடுகளோடு இருந்தது. அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணரமுடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்த கருவியில் கொண்டுவந்தார் .

இன்னமும் குறித்து சொல்வதென்றால் அதை முழுமையாக மாற்றியமைத்தார். பாதரசத்தை அதில் சேர்த்தார் ; சுருள் வடிவ ஸ்ப்ரிங்குகளை இணைத்தார்.கூடவே டெலிபோனை பயன்படுத்தினார். கூடவே குறைகடத்தி படிகத்தை கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து,மீண்டும் அதை திரும்பப்பெறுகிற மாயத்தை செய்தது. அந்த அற்புதம் அப்பொழுது தான் நிகழ்ந்து. ஐந்து மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு மைக்ரோவேவ் என்று அறியப்படுகின்றன. மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார். அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்க வைத்து வெடிமருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ். கூடவே அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் செய்து சாதித்து காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாக சொன்னார்.


ஜகதீஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கொஹரரை மார்க்கோனிக்கு இத்தாலிய கடற்படையில் இருந்த அவரின் நண்பர் சோலாரி அறிமுகப்படுத்தினார். அப்படியே அதை எடுத்து தன்னுடைய கருவியில் பொருத்தினார் மார்க்கோனி. ஒரே ஒரு மாற்றம் U வடிவத்தில் போஸ் அமைத்திருந்த பாதரச ட்யூபை நேராக மாற்றினார். S என்கிற மோர்ஸ் குறியீட்டை தான் அனுப்பியதாக வேறு அறிவித்தார். அதை பதிவு செய்த ஆவணங்கள் இல்லை என்பது தனிக்கதை. போஸ் செய்த ஒரு தவறு தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியை பேடன்ட் செய்ய மறுத்தார் ; “என் தந்தையைப்போல நானும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் எனக்கில்லை” என்றார். அந்த போஸ் கண்டுபிடித்த கருவியை தான் கண்டுபிடித்தேன் என்று வெட்கமே இல்லாமல் பதிவும் செய்துகொண்டார் மார்க்கோனி.

தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் போஸ் செய்த உதவி அளவில்லாதது என்று ஒன்றரை பக்கம் எழுதிவைத்த மார்க்கோனிதான் திருடியதை பற்றி ஒரு வரி கூட மறந்தும் சொல்லவில்லை. இந்த பாதரச கொஹரர் என்று யாரேனும் கேள்வி கேட்டாலே பேய் முழி முழித்தார் அவர். ஒரு காலத்துக்கு பிறகு அப்படியே ரேடியோவை தான் தான் கண்டுபிடித்தேன் என்று உலகம் ஏற்றுக்கொண்டு நோபல் பரிசு கொடுத்த பிறகு இரும்பு கொஹரர் என்று மாற்றிக்கொண்டு கச்சிதமாக சமாளித்தார். உண்மையில் அவருக்கு மின்காந்த அலைகளை பற்றி தெரிந்தே இருக்கவில்லை என்று அவரே ஒரு நேர்முகத்தில் ஒப்புக்கொண்டார். அறிவியல் அறிவே இல்லாமல் இருபத்தி இரண்டு வயதில் போஸின் படைப்பை அப்படியே திருடி அவர் ரேடியோவை உருவாக்கியதாக சொன்னார் . போஸ் பெயரை மறந்தும் கூட வெளியே விடவில்லை அவர்கள்,

போஸ் தான் அதைக்கண்டுபிடித்தார் என்று வருங்காலத்தில் வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். மார்க்கோனி ஏமாற்றியது ஊர்ஜிதமானது. உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. மார்க்கோனி தான் ரேடியோவை கண்டுபிடித்தார் என்று இனிமேல் யாரவது சொன்னால் தலையில் கொட்டி அதை கண்டுபிடித்தது இந்தியன் போஸ் என்று சொல்லுங்க..

- பூ.கொ.சரவணன்

Saturday, November 29, 2014

ஏழை மனிதனின் தாஜ்மஹால்!

தாஜ்மஹால்னா, அது ஆக்ராவில் உள்ளது என்றுதானே சொல்வீர்கள். அது, ஷாஜஹான் தன் காதல் மனைவிக்குக் கட்டிய நினைவுச் சின்னம். ஆனால், மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத்தில் இருக்கும் தாஜ்மஹாலோ, மன்னர் ஆஜம்ஷா, தன் அம்மாவுக்குக் கட்டிய நினைவுச் சின்னம்.
மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மகன்தான் இந்த ஆஜம் ஷா. 1651 முதல் 1661 வரை மன்னராக இருந்த காலத்தில், தாத்தா ஷாஜஹான் மும்தாஜுக்குக் கட்டிய தாஜ்மஹாலைப் பார்த்து ரொம்பவும் அசந்துபோய், அதேபோல் அச்சு அசலாக, தன்அம்மாவுக்குக் கட்ட ஆசைப்பட்டார். அந்தக் கல்லறைக்கு பீபீ கா மக்பாரா (Bibi Ka Maqbara) என்று பெயர் சூட்டினார். (இதற்கு, 'லேடி கல்லறை' என்று அர்த்தம்).
தாஜ்மஹாலைப் போலவே இருக்கும் என்று எண்ணிய ஆஜம் ஷாவிற்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. திறமையான தொழிலாளர்கள் அமையாததால், தாத்தாவின் தாஜ்மஹால் போல அழகாக அமையவில்லை. பளபளப்பாக தோன்றவில்லை. காரணம், தாஜ்மஹாலுக்கு உபயோகித்த தூய வெள்ளை சலவைக் கற்களை, இந்த பீபீ கா மக்பாராவிற்கு உபயோகிக்கவில்லை.
மக்பாரா கட்ட, அப்போது ஆன செலவு, 7,00,000 ரூபாய். ஆனால், தாஜ்மஹால் கட்ட ஆன செலவு, 32 மில்லியன். அதனால்தான் இந்த மக்பராவை, 'ஏழை மனிதனின் தாஜ்' என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால்,தாஜ்மஹாலுக்கு இணையாக சொல்லமுடியாவிட்டாலும் கூட  இந்த நினைவுச் சின்னத்தின் உள்ளே இருக்கும் அழகிய வடிவங்கள், பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது. அங்கு அமைந்துள்ள தோட்டம், மொகலாயர்களை நினைவூட்டும் விதமாக உள்ளது.

Thursday, November 27, 2014

புருஸ் லீ


தன் அப்பாவை போலவே திரையில் நடித்துக்கொண்டு இருந்தான் இளவயதிலேயே அந்த
சிறுவன்.சீக்கிரமே குங் பூ கற்றுத்தேறிய அவன் தெருக்களில் மற்ற பிள்ளைகளோடும் ,போலீஸ் உடனும்  தொடர்ந்து   வம்புக்களில்  ஈடுபடுவதை அவர் தந்தை கவலையோடு பார்த்தார்.அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார். வயிற்றுப்பிழைப்புக்கு அங்கே குங் பூ சொல்லித்தந்து கொண்டிருந்தார் லீ
அப்பொழுது வோங் ஜாக்மான் எனும் அனுபவம் மிக்க குங்பூ வீரர் "ஆசியர் அல்லாதவர்களுக்கு ஏன் குங் பூ சொல்லித்தருகிறாய்" என்று கேட்க ,"கலை எல்லாருக்கும் பொதுவானது தானே " என அந்த இளைஞன் திருப்பிக்கேட்டார். "அப்படியில்லை ! வலியவன் சொல்வதை தானே உலகம் கேட்கும் ? நாமிருவரும் சண்டை போடுவோம். நான் வென்றால்  நீ குங் பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் ; நீ வென்றால் நான் குங் பூ என்கிற பெயரைக்கூட இனிமேல் உச்சரிக்க மாட்டேன் ! என்னோடு சண்டையிடு என்னோடு சண்டையிடு " என்றார் அவர்.

இளைஞன் இணங்கி சண்டையிட்டார். அனல் பறந்த சண்டையில் வேகம் மிகுந்த இவர் வென்றுகாட்டினார். அவரை வென்றதும் முன்னமே சொன்னபடி வோங் ஜாக்மான் குங்
பூ சொல்லித்தருவதை நிறுத்திக்கொண்டார் .ஆனால்,அது எண்ணற்ற கேள்விகளை அந்தப் பையனின் மனதில் விளைத்தது. ஹாங்காங்கில் மிகப்பெரும் குத்துசண்டை வீரனாக இருந்து நொடியில் பலரை நாக்கவுட் செய்த தான் அதிக நேரம் எடுத்து ஜாக்மான் உடன் மோதியது அவரின் பாரம்பரிய குங்பூவின் மீதான ஈர்ப்பை மங்கசெயதது .
தானே இன்னும் பல மாற்றங்களை உருவாக்கினார்.அவர் படித்த தத்துவம் அவருக்கு அதீத அமைதியை தந்தது,எவ்வளவு பெரிய சண்டையையும் எளிமையாக வென்றார். "நீர் போல அமைதியாக ஓடிக்கொண்டு ,சலனமற்று இருக்கிறேன் ,மூங்கிலை போல வளைந்து கொள்கிறேன்.ஆழ்ந்த அமைதி என்னை எப்பொழுதும் வழி நடத்துகிறது" என்ற அவர் டிவி ஷோக்களில் கலக்கிய பின் சீட்டின் முனைக்கே கொண்டுசெல்லும் சண்டைகாட்சிகள் மூலம் ஹாலிவுட்டில் கலக்கினார்.
புரூஸ் லீ ஒரு கவிஞர் என்பதை தாண்டி ஒரு தீர்க்கமான தத்துவ ஞானம் மிக்கவராக இருந்தார் என்பதே சரி. "எதிரி என்று ஒருவன் இல்லவே இல்லையே ; எல்லாமே பிம்பங்கள்,பிரதிபிம்பங்கள். அவற்றை நொறுக்கிவிட்டால் போதும். எதிரிகள் என்று யாருமில்லை என உணர்வீர்கள் !" என்றார் அவர்.  ஜென் அவரைத் தொடர்ந்து செலுத்தியது. பேரமைதி அவரிடம் குடிகொண்டு இருந்தது,ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் "ஏன் இப்படி ?" என்று கேட்ட பொழுது ,"நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !" என்று மட்டும் சொன்னார். வீரம்  என்பது
சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என
உணர்ந்து  நடப்பதிலும் இருக்கிறது.
நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து "வெறுமையாக இருக்கிற பொழுது தான்,அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !" என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் . மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம் என்பார் புரூஸ் லீ. அதுவே அவரின் அசரவைக்கும் சண்டைக்காட்சிகளுக்கு அடிப்படை.
நம்பினால் நம்புங்கள் புருஸ் லீக்கு உடலில் குறைபாடு ஒன்றிருந்தது. அவரின் வலது கால் இடது காலை விட நான்கு சென்டிமீட்டர் உயரம் குறைவு. ஆனால்,உங்கள் தலையில் ஒரு நாணயத்தை வைத்தால் அதை உங்கள் தலைமுடியைக்கூட அசைக்காமல் அவரால் எடுக்க முடியும். கேட்ட பொழுது ,"நாணயம் மட்டும் தான் என்னுடைய கண்களில் தெரியும். அதில் மூழ்கிப்போவது தானே குங்பூ !" என்றார்
அவரின் வேகம் எந்தளவுக்கு இருந்தது என்றால் ஒரு காட்சிக்கு நொடிக்கு இருபத்தி நான்கு பிரேம்கள் அவரின் வேகத்தை பிடிக்க போதாமல் கூடுதலாக பத்து பிரேம்கள் தேவைப்பட்டன ! இருந்தாலும் அதை ஆழ்ந்த அமைதியோடு செய்கிற சமநிலை புரூஸ் லீக்கு இருந்தது. அவர் பட்டப்படிப்பு படித்தது
தத்துவத்தில் என்பது அவரின் ஆழ்ந்த தேடலை உணர்த்தும் . முப்பத்தி மூன்று வயதில் இறந்து போனாலும் இன்னமும் ஆக்ஷனில் தொட முடியாத உயரத்தில் இருக்கும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அத்துணை பாடங்கள்.
அவரின் ஒரு கவிதை தான் அவரின் வாழ்வானது :
மேற்கே காற்றை
எல்லாம் தங்கமயமாக்கி
கதிரவன் கரடுமுரடான மலையில் கரைகிறான்
கரைந்துருகும் பனித்துளிக்கு
வெகுதூரம் தள்ளி
மலையுச்சியின் மீது
தங்க டிராகன்
தனித்து தன் கனவுகள்
வெளிச்ச மேற்கில் தேய,மறைய
சலனமில்லாமல் நிற்கிறது !

Saturday, October 25, 2014

பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!! BIG TEMPLE

தமிழ் மன்னன் கட்டிய உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் கம்போடியா நாட்டில் உள்ள “அங்கோர் வாட்” ஆகும். உலகில் உள்ள வழிபாட்டுத் தலங்களிலேயே மிகப் பெரியதும் இது தான். இதை கட்டியது ஒரு தமிழ் மன்னன் என்பது தான் ஒரு ஆச்சர்யமான தகவல். ஆம் அவர்தான் இரண்டாம் “சூரியவர்மன்”. ஒரு போரின் மூலம் இந்த இடத்தை கைப்பற்றிய சூரியவர்மன் ”இந்த ஆலயத்தை கட்டினார்.

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!

இந்த கோவிலானது சுமார் 200 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் அகழியால் சூழப்பெற்றது. இந்த ஆலயத்தின் ஒரு பக்க சுற்று சுவரே சுமார் 3.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தை நம் மக்களுடன் பகிர்ந்துகொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சூரியவர்மனால் துவங்கப்பட்ட இதன் கட்டிட பணிகளானது 27 வருடங்களில் நிறைவு பெற்றது. கட்டி முடித்த சிறிது காலத்திலேயே இரண்டாம் சூரியவர்மன் இறந்தார்.

பின்பு ஆறாம் “ஜெயவர்மன்” ஆட்சிக்கு வந்த பிறகு “புத்த” கோயிலாக மாறிய இந்த ஆலயம் இன்று வரை புத்த ஆலயமாகவே விளங்கிவருகிறது.
அடர்ந்த காட்டிற்கு நடுவே இந்த கோவில் அமைந்திருப்பதினால் பதினாறாம் நூற்றாண்டுகளில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிதிலமடைந்தது. பிறகு ஒரு போர்ச்சுகீசிய துறவியினால் மீண்டும் வெளியுலகிற்கு வந்தது.

இந்த ஆலயத்தை சிறப்பிக்கும் வகையில் கம்போடிய நாட்டு அரசு கம்போடிய தேயக்கொடியில் தேசிய சின்னமாக “அங்கோர் வாட்” ஐ பொறித்துள்ளது. எந்த ஒரு காமிராவிலும் இந்த ஆலயத்தை முழுமையாக படம் பிடிக்க முடியாது. மேலே உள்ள புகைப்படமானது பூமியில் இருந்து 1000 அடி மேலே வானத்தில் இருந்து எடுக்கப்பட்டது.
இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா? வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!
உலகின் மிகப் பெரிய இந்து ஆலயம் அங்கோர் வாட்!!


பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத் தொடங்கியது. பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of” என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெளியிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!!
பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்தில் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.

Wednesday, October 22, 2014

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!





அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர். இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது. 



சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது. 



இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர், பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.


தகவல் - நன்றி நிலாமுற்றம் 
படங்கள் - நன்றி google images

Wednesday, October 8, 2014

மூளை செல் உள்கட்டமைப்பு ஆராய்ச்சி

8/10/2014


மூளை செல் ஷி  அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஜான் ஓ கீப் மற்றும் நார்வே டாக்டர் தம்பதி மேபிரிட் மோசர், எட்வர்ட் மோசர் ஆகியோர் இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ‘நியூரல் சர்கியூட்ஸ் அண்ட் பிகேவியர்’ மையத்தின் இயக்குனராக இருப்பவர் ஜான் ஓ கீப். இங்கிலாந்துஅமெரிக்க ஆராய்ச்சியாளரான இவர் கடந்த 1971ம் ஆண்டில், மூளையின் ‘ஹிப்போகேம்பஸ்’ பகுதியில் உள்ள குறிப்பிட்ட நரம்பு செல் அமைப்பை கண்டறிந்தார். ஒரு அறையில் ஒரு எலி இருக்கும்போது, நமது மூளையில் இருக்கும் இந்த செல்கள் செயல்பட தொடங்குகிறது. அந்த எலி வேறு இடத்துக்கு செல்லும்போது, மூளையின் மற்ற செல்களும் செயல்பட தொடங்குகின்றன. ‘பிளேஸ் செல்ஸ்’ எனப்படும் இவைகள்தான் நம்மை சுற்றியுள்ள ஒரு இடத்தின் வரைபடத்தை நமக்குள் ஏற்படுத்தி கொடுக்கிறது என ஓ கீப் தனது ஆய்வறிக்கையில் கூறியிருந்தார்.

34 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2005ம் ஆண்டில் நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தம்பதிகளான மேபிரிட்  எட்வர்ட் மோசர் ஆகியோர் ‘கிரிட் செல்ஸ்’ எனப்படும் மற்றொரு வகை நரம்பு செல்களை கண்டறிந்தனர். சரியான வழியை கண்டறிய இந்த ‘பிளேஸ் மற்றும் கிரிட்’ செல்கள்தான் ஒருங்கிணைந்து செயல்பட்டு நமக்கு வழிகாட்டுகின்றன என இவர்களின் ஆராய்ச்சி தெரிவித்தது. அல்சீமர் என்ற நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு நினைவிழப்பு எப்படி ஏற்படுகிறது என்ற அடிப்படை நுட்பங்களை புரிந்துகொள்ள இவர்களின் மூளை செல் உள்கட்டமைப்பு ஆராய்ச்சி உதவும் வகையில் உள்ளது. அதற்காக இந்த 3 பேருக்கும் சேர்த்து, இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அடுத்தடுத்து அறிவிக்கப்படவுள்ளன.

ரூ.6.76 கோடி பரிசு:

நோபல் பரிசு பெற்ற இந்த மூன்று பேருக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு தொகை கிடைக்கும். இதில் பாதியை ஜான் ஓ கீப்பும், அடுத்த பாதியை நார்வே தம்பதிக்கும் வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ம் தேதி அன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த பரிசு வழங்கப்படவுள்ளது.

Thanks to

Dhinakaran