Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts

Tuesday, January 6, 2015

கணிணிவழிப்பட்டா நகல்

  






1.கணிணிவழிப்பட்டா நகல் பெற செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு?
2. கணிணி பட்டா நகல் வேண்டி சமர்ப்பிக்கப்பட வேண்டிய மாதிரி விண்ணப்பம்தரவும்.
3. கட்டணம் செலுத்துபவர்களுக்கு ரசீது தரப்படுகிறதா?
4. மேற்படியான ரசீதின் மாதிரி ஒன்றை தரவும்
5. 01.06.2014 முதல் 31.10.2014 வரை கணிணி பட்டா நகல் வழங்குவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு?
6. மேற்படிக் கட்டணத் தொகை எவ்வகைக் கணக்குத் தலைப்பின் கீழ் எந்தத் தேதிகளில் அரசுக் கருவூலத்தில் செலுத்தப்ப்பட்டது?
7. மேற்படிக் கருவூலப் பற்றுச் சீட்டின் தங்கள் வசம் உள்ள ஒரு பகுதியின் நகல் தருக.
8. தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் படி பொதுமக்கள் நேரில் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு தங்கள் அலுவலகம் மூலம் ஒப்புகைச்சீட்டு அளிக்க படிகிறதா?
9. மேற்படி ஒப்புகைச் சீட்டின் மாதிரி ஒன்றைத் தருக.
10. தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் படி பொதுமக்கள் நேரில் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு உரிய கட்டணம் ரூ. 10 பணமாகப் பெற்றுக்கொண்டு ரசீது அளிக்கப்படுகிறதா?
11. மேற்படி ரசீதின் மாதிரி ஒன்றைத் தருக.
12. நாகல்நாயக்கன் பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு மேற்கொண்டு உட்பிரிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் பற்றிய விவரம் கடைசியாக தங்கள் அலுவலகத்துக்கு எப்போது வரப்பெற்றது?
13. மேற்படி உட்பிரிவுக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பட்டா உட்பிரிவு செய்து கொடுக்கப் பட்டுள்ளதா?
14. சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலை முன்னிட்டு 01.06.2014 முதல் 30.09.2014 வரை எத்தனை பட்டா மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் தரவும்.







வட்டாட்சியருக்கு தெரியாத/ நடைமுறையில் இல்லாத ஒப்புகை சீட்டின் மாதிரி

Monday, January 5, 2015

புகாரை பதிவு செய்ய மறுத்தால் போலிசாருக்கு ஓராண்டு ஜெயில்

பொதுமக்கள் தரும் புகாரை பதிவு செய்ய மறுத்தால் போலிசாருக்கு ஓராண்டு ஜெயில் என்பது தொடர்பான, 3.2.2013 criminal law amenment / நீதிமன்ற உத்தரவு இருந்தால், பதிவேற்றுங்கள் நண்பர்களே
என்று கேட்டதற்கு மதிப்பு அளித்து பதிவேற்றிய, நண்பர், திரு. Srinivasan Krishnamoorthy அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் நண்பர்களே!
இதோ ஆதாரம்!






Thursday, January 1, 2015

லீகல் நோட்டீஸ் 

லீகல் நோட்டீஸ் - ஒரு விளக்கம்

பொதுவாக லீகல் நோட்டீஸ் என்றாலே, அது வக்கீல் மூல மாக அனுப்பப்படும் நோட்டீஸ் என்றே நாம் நினைக்கிறோம். அது தவறு. அதாவது எதிர் தரப்பினர் மீது, அவரது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு கடிதம் தான் அது. அதை நாமே அனுப்பலாம்.


நமக்கு அது பற்றிய விபரம் தெரியாத பட்சத்தில், வழக்கறிஞர் மூலமாக அனுப்பவேண்டும்.நமது நாட்டு சட்டப்படி, வழ்க்கு தொடுப்பவர் ( Petitioner / Complainant) மற்றும் எதிர் தரப்பினர் ( Opposite Party ) -தான் வழக்கு நடவடிக்கையில் நேரடியாக ப்ங்கேற்க வேண்டும். அது சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் உரிமை. இதில் வழ்க்கு தொடுப்பவருக்கோ அல்லது எதிர் தரப்பினருக்கோ போதுமான சட்ட அறிவு இல்லாத நிலையில் வழ்க்கறிஞர் மூலமாக செய்ய வேண்டும்.பொதுவாக லீகல் நோட்டீஸ் என்பது நாம் அனுப்பும் நோட்டீஸ் மற்றும் வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் , இவை இரண்டையுமே குறிப்பிடும் சொல்லாகும். வழக்கறிஞர் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ் அட்வகேட் நோட்டீஸ் ஆகும்.லீகல் நோட்டீஸ் தயாரிப்பது எப்படி?உதாரணத்திற்கு நீங்கள் ஒரு வாஷிங் மிஷின் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

அத்ற்கு ஒரு வருட உத்திரவாதம் உற்பத்தியாளரால் வழ்ங்கப்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். வாங்கிய ஒரு சில நாட்களி லேயே அது பழுதடைந்து விடுகிறது. நீங்கள் எந்த கடைக்காரரிடம் வாங்கினீர்களோ, அவரிடம் புகார் செய்கிறீர்கள். அவர் அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் டீலராக இருந்தால் அவரே பழுது பார்த்து கொடுப்பார். அப்படி இல்லை என்றால் கம்பெனியின் சர்வீஸ் செண்டர் முகவரியை தருவார். அங்கு புகார் செய்கிறீர்கள். அவர்கள் பழுது பார்த்து த்ருகிறார்கள். மறுபடியும் குறுகிய காலத்தில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் பழுது பார்க்கப்படுகிறது. பழுதடைவது தொடர்கிறது .

இதனால், உங்களால் தொடர்ச்சியாக மிஷினை பயன்படுத்தாத நிலை. இந்நிலை யில், உங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பொருள் தரம் குறைந்தது அல்லது உற்பத்தியில் குறைபாடுள்ள பொருள் (Manufacturing Defect) என கருதுகிறீர்கள். அதனால் அந்த மிஷினுக்கு பதில் வேறு மிஷின் தருமாறு கேட்க்கிறீகள். கம்பெனிக்கரர்கள் அவ்விதம் செய்ய மறுக்கிறார்கள். அதனால் கன்ஸ்யூமர் கோர்ட்டில் வழக்கு தொடர போகிறீர்கள். இப்பொழுது நீங்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.இந்த விஷயத்தில், விற்பனையாளரை பொறுத்த வரையில் அவர் மீது எவ்வித தவறும் கிடையாது. எனவே வழக்கில் அவரை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. சேர்த்தாலும் தவறு கிடையாது.

லீகல் நோட்டீஸ் BY
REGISTERD POST WITH A/D,
OR
BY FAX OR E-MAIL

அனுப்புநர்: ( இது உங்கள் முகவரி)

க.சிவராம கிருஷ்ணன்
14, 18 வது மெயின் ரோடு,
அண்ணா நகர்சென்னை -600 040.

பெறுநர்:

LG Electronics Pvt Ltd,
AA11, 2nd avenue,
Fatima Tower,
Anna Nagar West,
Chennai - 600 040.

saட்ட பூர்வ அறிவிப்பு.தங்கள் நிறுவன தயாரிப்பாகிய LG FAWM -9987 மாடல் வாஷிங் மெஷின் ஒன்றை

M/s. A shok Traders , 2nd Main Road, Anna Nagar West, Chennai -40
என்ற் டீலரிடம் 5-6-2009 ல் வாங்கியுள்ளேன்.

பில் நம்ம்பர். 5678 / 5-6-2009.

மேற்படி மிஷின் இரண்டு மாத காலத்தில் மூன்று முறை பழுது ஏற்பட்டு, தங்கள் சர்வீஸ் செண்டரால் சரி செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.1. 25-6-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 56602. 15 -7-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 90783. 10-8-2009 - சர்வீஸ் கால் நம்பர்: CHN 10233இதனால் என்னால் தொடர்ந்து உபயோகிக்க இயலவில்லை. இவ்விதம் அடிக்கடி பழுது ஏற்பட காரணம், எனக்கு விற்பனை செய்யப்பட்ட மெஷின் உற்பத்தி குறை பாடான ஒன்றாகும். எனவே உடனடியாக மேற்படி மெஷினுக்கு பதில், வேறு ஒரு மெஷின் மாற்றித்தரும்படி தங்களிடம் கூறியதற்கு மறுத்து விட்டீர்கள்.எனவே, மேற்படி மெஷினை மாற்றி தர வேண்டும் என,தங்கள் நிறுவன்த்தின் மீது மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப் படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசணையை சுமுகமாக தீர்க்க விரும்ப வில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

இப்படிக்கு( கையொப்பம்)
(க.சிவராம கிருஷ்ணன்)

நாள்:

Thursday, December 25, 2014

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு..!


 

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.
 
பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்;

புகார் கொடுக்கலாம்:
 
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Thursday, December 4, 2014

வருமான வரி (Income Tax Return Filing) தாக்கல் செய்ய தேவையில்லை

இந்திய வருமான வரி 1961 சட்டப்படி இந்தியாவில் 5 லட்சத்திற்க்கு கீழ் சம்பளம் வாங்கும் எந்த ஒரு இந்தியரும் இன்கம் டேக்ஸ் - வருமான வரி (Income Tax Return Filing) தாக்கல் செய்ய தேவையில்லை. நீங்கள் உங்கள் பேன் கார்ட் நம்பர் அந்த ஃபார்ம் 16 படிவத்தில் குறிபிட்டு இருக்க வேண்டும். அது போக உங்களின் சேவிங்க்ஸ் வட்டி வருமானத்தையும் உங்கள் எம்ப்ளாயருக்கு தெரிவித்தல் அவசியம். ஆம் இது இந்த வருட 2012 - 2013 பைனான்ஷியல் இயருக்கு பொருந்தும். அதாவது ஆண்டு சம்பள வருமானம் 5 லட்சம் மட்டும், வங்கி சேமிப்பு வட்டி வருமானம் 10,000க்கு கீழ் இருந்தால் நீங்கள் வரி தாக்கல் இனிமேல் செய்ய தேவையில்லை.
அது போக இந்த புது திட்டம் ஃபார்ம் 16 (Form 16) உங்கள் வேலை செய்யும் நிறுவனம் அளித்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும். அது போக உங்களுக்கு ரீஃபன்ட் கிடைக்க நீங்கள் தாக்கல் செய்ய வேண்டும். சுமார் 1 கோடி இந்தியர்கள் இதனால் நிம்மதியடைவார்கள். அவர்களின் 2000 - 8000 வரை ஆடிட்டர்களுக்கும் டேக்ஸ் கன்ஸல்டட்ட்களுக்கும் வருடம் தோறும் செலவழிக்கும் தொகை இனிமேல் மிச்சம்.
பத்து லட்சத்திற்க்கு மேல் சம்பளம் வாங்கும் ஆட்கள் ஆன் லைனில் தான் பதிவு செய்ய வேண்டும். ஜூலை 31 வரைக்கும் வெயிட் செய்ய வேண்டாம். ஏன் என்றால் கடைசி நேர சர்வர் லோட் குளறுபடிகளால் பெனால்ட்டி கிடைக்கும் அபாயம். அதுபோக தனியார் ஃபைலிங் வெப் தளத்திலும் நீங்கள் பதிவு செய்யலாம். தாக்கல் செய்த பிறகு ஐடிஆர் 5 (ITRV) பெங்களூரில் இருக்கும் சென்ட்ரலைஸ்ட் பிராசஸிங் சென்டருக்கு அனுப்பி வைக்க தவறாதீர்கள். 2 - 5 லட்சத்திற்க்கு 10%, 5 - 10 20% மற்றூம் 10 லட்சத்திற்க்கு மேல் நீங்கள் வருமான ஆதாயம் இருந்தால் 30% சதவிகிதம் வரி செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்ததே......!

Tuesday, December 2, 2014

ஒரு கல்வி நிறுவனம், நன்கொடை கேட்டால், நாம் செய்ய வேண்டியது என்ன?





AICTE இணையதளத்தில், குறை தீர்க்கும் படிவம் உள்ளது. அதன் மூலமாக புகார் தெரிவிக்கலாம் அல்லது AICTE -க்கு, நேரடியாக கடிதமும் எழுதலாம். நெருக்கடி நிலையில், AICTE விரைவான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதன் தரப்பில் கூறப்படுகிறது. பல மாணவர்கள், இந்த சிக்கலை, சேர்க்கையின்போது எதிர்கொள்கின்றனர்.


AICTE -ஐ அணுகும் முன்னதாக, கல்வி நிறுவனத்திலுள்ள Internal Grievance Redressal Mechanism -ஐ அணுகலாம். இந்த இடத்தில் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால், பல்கலையில் அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியை சந்தித்து முறையிடலாம். அவர், உங்கள் குறைகளை கனிவுடன் கேட்பார். இந்த அதிகாரி பற்றிய தகவல், AICTE இணையதளத்தில் உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், அதேசமயம், AICTE- க்கு எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம். ஏறக்குறைய, 60% தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், Internal Grievance Redressal Mechanism -ஐ கொண்டுள்ளன.

தேங்க்ஸ் – தின மலர் கல்வி மலர்

Sunday, November 30, 2014

RTI தகவல்களை தேர்ந்தெடுத்து வழங்குவது


ஒரு அலுவலகத்தில் தகவல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும், வழங்குவது (supply the information available in any material form) என்பது பொது தகவல் அலுவலரின் கடமையாகும். ஆனால் பிரிவு 2(i)-ல் வரையறை செய்யப்பட்ட பதிவுரு (Record)-ல் இருந்து தகவல்களை திரட்டி/தேர்ந்தெடுத்து (ஆராய்ச்சி செய்து) வழங்குவது என்பது பொது தகவல் அலுவலரின் கடமைக்கு அப்பாற்பட்டது. உதாரணமாக, ஒரு பல்கலைக்கழகத்தில் ஐநூறு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு மனுதாரார் கீழ்கண்ட கேள்விகளை சட்டத்தின் மூலமாக கேட்கிறார்
1)எத்தனை மாணவர்கள் இறுதி செமஸ்டர் ஆங்கிலத் தேர்வு எழுதினார்கள்?
2)எத்தனை மாணவர்கள் இறுதி செமஸ்டர் ஆங்கிலத் தேர்வில் 50 மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளார்கள்?
மேலே கோரிய வினாக்களில், முதல் வினா அந்த தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை சார்ந்த பொருண்மையை (Question of fact) பற்றியது. எத்தனை மாணவர்கள் ஆங்கிலத் தேர்வு எழுதினார்கள் என்ற விபரம் தேர்வுத்துறையிடம் உள்ளதால், அதை மனுதாரரருக்கு பொது தகவல் அலுவலர் வழங்க கடமைபட்டவராவார்.
இரண்டாவது வினாவிற்கு, மனுதாரார் கேட்ட தகவல்களானது மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆங்கிலத் தேர்வில் 50 மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரங்களை அறியவேண்டும் என்றால், பொது தகவல் அலுவலர் தேர்வு எழுதிய 500 மாணவர்களின் மதிப்பெண்களையும் ஆராய்ந்து அதாவது பதிவுருகளிலிருந்து (மதிப்பபெண் பட்டியலில்) இருந்து தகவல்களை திரட்டி/தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும் என்பதால், இவ்வாறு தேர்ந்தெடுத்து தகவல் வழங்குவது என்பது பொது தகவல் அலுவலரின் கடமை அல்ல.
ஆனாலும், மேல் கண்ட சூழ்நிலைகளில் மனுதாரார் கோரிய தகவல்கள் இல்லை என்று மறுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மனுதாரருக்கு ‘ஐநூறு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை மொத்தமாக ரூ.1000 கட்டணம் செலுத்தி’ பெற்றுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். ஏனெனில் மனுதாரரர் கோரிய தகவல்கள் ‘மதிப்பெண் பட்டியல்’ என்ற வடிவத்தில் பதிவுருவாக பொது அதிகார அமைப்பிடம் உள்ளது. அதாவது பொது தகவல் அலுவலர், ஆராய்ச்சி செய்து தகவல்களை, ஆவணங்களில் இருந்து (மதிப்பெண் பட்டியல்) தேர்ந்தெடுத்து தரவேண்டிய அவசியமில்லை. ஆனால் அந்த தகவல்கள இருக்கும் பதிவுருகளை (மதிப்பெண் பட்டியல்) வழங்க கடமைபட்டவராவார்.
ஒரு குடிமகனுக்கு எவ்வாறு ஒரு பொது தகவல் அலுவலரை ஆராய்ச்சி செய்து தகவல்களை தேர்ந்தெடுத்து வழங்க நிர்பந்தப்படுத்த அதிகாரமில்லையோ அதுபோலவே ஒரு பொது தகவல் அலுவலருக்கும் ஒரு குடிமகனை, தகவல்கள் எந்த வடிவத்தில் பொது அதிகார அமைப்பில் இருக்கின்றது என்று ஆராய்ச்சி செய்து, அதன் பின்னர், தகவல்கள் இருக்கும் வடிவத்தில் மட்டுமே தகவல்களை கேட்கவேண்டும் என்று நிர்பந்தப்படுத்த அதிகாரமில்லை. மேல் கண்ட உதாரணத்தில், ஐநூறு மாணவர்களின் ‘மதிப்பெண் பட்டியலை’ மனுதாரார் நேரடியாக கேட்கவில்லையென்றாலும், மனுதாரார் கேட்ட வடிவத்தில் தகவல்கள் இல்லை என தகவல்களை வழங்க மறுப்பதற்கு பொது தகவல் அலுவலருக்கு அதிகாரமில்லை.
ஆகவே, பொது அதிகார அமைப்பிடம், ஒரு இந்திய குடிமகன் தகவல்களை கோரும்போது, அது எந்த வடிவத்தில் இருந்தாலும் பொது தகவல் அலுவலர் வழங்கவேண்டும் ஆனால் தகவல்கள் பிரிவு 2(i)-ல் வரையறுக்கபட்டவைகளில் இருந்து தேர்ந்தெடுத்து வழங்க வேண்டியவாறு அமைந்தால், எந்த வடிவத்தில (பதிவுருக்களில்) இருந்து அந்த தகவல்கள் தேர்ந்தெடுத்து வழங்கவேண்டியது உள்ளதோ, அந்த அனைத்து பதிவுருகளையும் தகுந்த கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கவேண்டும். மாறாக, குடிமகன் கேட்கும் தகவல்கள் பொது அதிகார அமைப்பின் கைவசம் இருந்தும், குடிமகன் கேட்கும் வடிவத்தில் தகவல்கள் இல்லை என்ற காரணத்திற்காக ‘No such information is available in the office as seek by the informant under the RTI Act” என்று குடிமகனின் மனுவை நிராகரிக்க பொது தகவல் அலுவலருக்கு அதிகாரமில்லை. 

Thanks – Mr. Leenus advocate

Thursday, November 27, 2014

பத்திர (பதிவு) ஊழல் துறை


போலி ஆவணங்களை ஒழிக்க வில்லங்க சான்றிதழ் வழங்குகையில் புதிய நடைமுறையினை பின்பற்ற வேண்டுமென்று பத்திரப்பதிவு துறைக்கு சென்னை உயர் நீதி மன்றம் ஆலோசனை கூறியுள்ளதாக இன்றைய நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் எத்தனையோ ஊழல்கள் நடைபெறுகின்றன. அவைகளை பட்டியலிட்டால் இந்த பதிவில் அடங்காது. ஆனால் பதிவுத்துறையில் நடைபெறும் ஊழல் இருக்கின்றதே அதை விட கொடுமை எதுவும் இருக்காது. இதர ஊழல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி பாதிப்பு இருக்காது. ஆனால் போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் ஊழல் இருக்கின்றதே, அதனால் பாதிக்கப்பட்டவருக்கு எத்தகைய பாதிப்பு என்பது அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும். பதிவுத்துறை, வருவாய் துறை, காவல்துறை, நீதிமன்றம் என்று பல்வேறு துறைகளுக்கு அலைக்கழிக்கப்படுவதோடு, பண விரயம், நேர விரயம், மன உளைச்சல்.... இதெல்லாம் யாருக்கு ? அப்பாவி உரிமையாளருக்கு. எவனோ ஒரு மோசடிப்பேர்வழி, போலி ஆவணம் தயாரித்து, சொத்தை அபகரிக்க முயற்சி செய்வான். சொத்திற்கு உரியவர் படாத பாடு பட்டு அதை மீட்பதற்கு பிரம்ம பிரயத்தன்ம் செய்ய வேண்டும். இறுதியில் சொத்து அவருடையது என்று தீர்ப்பு வருகையில் ஒன்று அவர் உயிருடன் இருக்க மாட்டார் அல்லது சொத்தில் பாதிக்கு மேல் வழக்கறிஞர் கட்டணம், நீதிமன்ற செலவு இதயாதி, இத்யாதி என்று அவர் இழந்திருப்பார். மோசடி புரிந்தவன், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, சட்டத்திலுள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, மிகச்சுலபமாக தப்பித்துவிடுவான்.

எங்களுடைய பரம்பரை இல்லத்தினை, ஏழு தலைமுறைகளாக இன்றளவும் நாங்கள் வசித்து வரும் இல்லத்தினை ஒரு மோசடிக்கும்பல் எங்களுக்குத் தெரியாமலேயே, ஒன்றல்ல, இரண்டல்ல, ஐந்து வில்லங்கங்கள் ஏற்படுத்தி, அதாவது ஓரிரு வருடத்திற்குள்ளேயே பல்வேறு விற்கிரய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இறுதியில், விற்கிரய பதிவு ஒன்றினை பதிவு செய்து, அப்பதிவினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அவர்கள் நாங்கள் வசித்து வரும் வீட்டினை விலைக்கு வாங்கி விட்டதாகவும், அதில் வசித்து வரும் வாடகைதாரர்களாகிய நாங்கள் (இது எப்படி இருக்கு ?) காலி செய்ய மறுப்பதாகவும் கூறி, எங்களை காலி செய்யும்படி உத்திரவு வேண்டி நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கும் வரை சென்றார்கள். மிகத்தாமதாக, ஆனால் சரியான நேரத்தில் விவரம் அறிந்த நான், பதிவுத்துறை தலைவரை நேரில் சந்தித்து விவரம் தெரிவித்தேன். என் கதையை கேட்ட அவர், ஆமாம், ஆமாம், இதுபோல் நிறைய நடக்கின்றது என்று சொன்னதும் வந்ததே எனக்கு கோபம். நேரடியாக அவரிடம் கேட்டே விட்டேன். ஐயா, ஆமாம், ஆமாம், இதுபோல் நிறைய நடக்கின்றது என்று சொல்வதற்கா அரசு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியினை நியமிக்கின்றது ? இதுபோல் நடக்கிறதென்றால் அதை தடுத்து நிறுத்துவதற்கு அரசுக்கு பதிவுத்துறையில் சட்ட சீர்திருத்தம் கொண்டு வர அரசுக்கு ஆலோசனை கூற வேண்டியது உங்கள் கடமையில்லையா என்று கேட்டவுடன், அவரும் பதிலுக்கு, சொத்து உன்னுடையது தானே, பின் நீ ஏன் காவல் துறையில் புகார் செய்யவில்லை என்று திருப்பி கேட்டார், அதற்கு நான், ஐயா, காவல் துறையில் நான் புகார் அளிக்காமல் இல்லை. ஆனால் காவல் துறை இது சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினை, இதை நீதி மன்றம் தான் விசாரிக்க முடியும் என்று சொல்லி, என் புகாரை ஏற்க மறுக்கின்றார்கள் என்று கூறினேன். அதற்கு அவர், என்னுடைய நிலையும் அதுதான், பதிவை ரத்து செய்யும் அதிகாரம் எனக்கே இல்லை, நீங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுக்க வேண்டியது தான் என்று கூறி என்னை திருப்பி அனுப்பி விட்டார்.
பதிவுத்துறையால் மோசடிப்பதிவுகளை மட்டுமே செய்ய முடியும் என்பதனை அறிந்து, உயர் நீதி மன்றத்தில் காவல் துறையின் மெத்தனத்தை எடுத்துரைத்து வழக்கு பதிவு செய்ய் அறிவுறுத்தி ஆணை வழங்குமாறு கோரி ஒரு வழக்கு தொடுத்தேன். என் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதி மன்றம், அதனின் உண்மையினை அறிந்து காவல் துறை விசாரணைக்கு உத்திரவிட்டது. இதற்காக நான் செலவு செய்தது அரை லட்சத்திற்கும் மேல்.

சார்-பதிவாளரின் பொறுப்பற்ற செயலினை கண்டித்து, சார்-பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளர் மீது நானும் நீதிமன்றத்தில் எனக்கு நீதி உடனே கிடைக்கும் என்று நம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சார்-பதிவாளரின் தவறான அணுகுமுறையினை எடுத்துரைத்தேன். ஆனால் மெத்தப்படித்த நீதி அரசரோ, என்ன உத்திரவு வழங்கினார் தெரியுமா மக்களே ! சார்-பதிவாளர், தன் கடமையைத்தான் செய்தார், பதிவுத்துறை சட்டத்தில் கூறியுள்ளதைத்தான் செய்துள்ளார். ஒரு அசையா சொத்தினை விற்பனை செய்கையில் அதன் உரிமையாளரை சரி பார்க்கும் அதிகாரம் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படவில்லை. ஆகவே, சார்-பதிவாளரை குற்றம் சொல்ல முடியாது. வாதி, நியாயம் கோரினால், கீழமை நீதி மன்றத்தில் உரிமை மனு தாக்கல் செய்யலாம் என்று கூறி தீர்ப்பளித்தார். எனக்கு ஒரு சந்தேகம், நீதி மன்றங்களில் வழக்கு எண்ணிக்கை குறைவாக உள்ளதோ, அதற்காக. வழக்கு எண்ணிக்கையினை அதிகரிக்கும் நீதிபதிக்கு ஊக்கத்தொகை என்று அரசு அறிவித்திருக்கின்றதோ என்ற் சந்தேகம். இதற்காக நான் செலவு செய்தது அரை லட்சத்திற்கும் மேல்.

இத்தனைக்கும், சார்-பதிவாளர் அலுவலகம், எங்கள் வீட்டிற்கு எதிரில் கல் எறியும் தூரத்தில் உள்ளது. சர்ர்-பதிவாளர் அலுவலகமும், எங்கள் இல்லமும் அமைந்துள்ள சாலை எங்களின் முப்பாட்டனாரின் பெயரில் உள்ளது. சார்-பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள இடம், எங்களின் முன்னோர்களால் இனாமாக வழங்கப்பட்ட இடம். உயர் நீதி மன்றம் சொன்ன பிறகு என்ன செய்வது ? விதியை நொந்துகொண்டு மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். நான்கு ஆண்டுகளாகின்றது. என்னிடம் உள்ள ஆவணங்கள் அனைத்தும் மிக உறுதியாக இருந்த போதிலும், இன்னும் வழக்கு முடிவுக்கு வந்த பாடில்லை. இத்தனைக்கும், வழக்கில் சேர்க்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளில் ஒருவரும் வழக்கிற்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கிற்கான செலவு தனி.
நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததோடு நில்லாமல், இணையத்தில் பதிவுத்துறை சட்டத்தினை தரவிறக்கம் செய்து, ஒரு வரி விடாமல் படித்தேன். பதிவுத்துறை சட்டம் 1908 –ம் ஆண்டு ஆங்க்கிலேயர் காலத்தில் அப்பொழுதிருந்த சமூக நிலைக்கேற்ப இயற்றப்பட்டது. காலத்திற்கேற்ப அதில் மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம். அரசு அவ்வப்போது உப்பு சப்பில்லாத மாற்றங்கள் கொண்டு வந்தாலும், போலி ஆவணங்கள் மூலம் பதிவினை தடுக்கும் வழிமுறைகளை ஏனோ இதுவரை கருத்தில் கொள்ளவில்லை. .

பதிவுத்துறை சட்டம் 1908 –ன் படி ஒரு பதிவினை பதிவு செய்கையில், விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணப்படவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ஆனால் எப்படி அடையாளம் காணப்படவேண்டுமென்று கூறப்படவில்லை. அதாவது, அவர்களின் குடும்ப அட்டையை வைத்தா, வாக்காளர் அடையாள அட்டையை வைத்தா, கடவுச்சீட்டின் (PASS PORT) மூலமாகவா, வங்கி கணக்கு புத்தகத்தின் மூலமாகவா என்று கூறப்படவில்லை. சொத்தின் உரிமையாளரை சரி பார்க்கும் அதிகாரம் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படவில்லை என்று கூறும் பதிவுத்துறை அதிகாரிகள், விற்பவர்கள், வாங்குபவர்கள் மற்றும் சாட்சிகள் அடையாளம் காணும் முறையினை மட்டும் பதிவுத்துறை சட்டத்தில் கூறப்படாத நிலையில் எவ்வாறு கையாளலாம் ?
மோசடிப்பதிவின் மீது புகார் அளிக்கப்படும் நிலையில் அதனை விசாரித்து, காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யலாம் என்று பதிவுத்துறை சட்டத்தில் கூறியுள்ள நிலையில், நானும், எனது குடும்பத்தினரும் அளித்த பல்வேறு புகார் கடிதத்திற்கு, பதிவுத்துறை சட்ட விதி முறைகளின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்துவிட்டு, ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருந்தார்க:ள். இதற்கிடையே, பதிவுத்துறை தலைவருக்கு, பதிவுத்துறை சட்டத்தில் கூறியிருக்கும் விதிகளை சுட்டிக்காட்டி, என் புகாரின் மீது என்ன நடவடிக்கை என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்ட பிறகு, 2011 –ம் வருடம் பதிவுத்துறை தலைவர் 03-11-2011 நாளிட்ட சுற்றறிக்கை எண் 67 –ஐ வெளியிட்டு, மோசடிப்பதிவின் மீது புகார் அளிக்கப்பட்டால் அதனை விசாரித்து 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்று ஆணையிடுகின்றார். நமது மோசடிப்பேர்வழிகள் சும்மா இருப்பார்களா ? நீதி மன்றங்கள் எதற்கு இருக்கின்றது ? உடனடியாக, பதிவினை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது, பதிவுத்துறை சட்டத்தில் அவ்வாறு சொல்லப்படவில்லை என்று வழக்கு தொடர்ந்து ஏறக்குறைய ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலோ வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அளிக்க அதிக காலம் எடுத்துக்கொள்ள இதில் என்ன உள்ளது ? ஒரு சட்டம் இயற்றப்படுவது பொது மக்களின் நலன் கருதியே. அதை கருத்தில் கொள்ளாமல் 1908 –ம் வருடம் கூறப்பட்டுள்ளதையே பின்பற்றப் படவேண்டுமென்று கூறுவது முற்றிலும் மடமையாகும்.

சரி, பதிவுத்துறை சுற்றறிக்கியினை மேற்கோள் காட்டி பதிவுத்துறையில் புகார் அளித்தால் என்ன கூறுகின்றார்கள் தெரியுமா ? வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறுகின்றார்கள். அப்பாவி மக்களும் தங்களின் விதியை நொந்து கொண்டு திரும்பி செல்கின்றார்கள். மக்களே ! புகாரை ஏற்க மறுக்கும் பதிவுத்துறையினை கேளுங்கள் 1) இந்த புகாரின் மீது நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதா ? 2) நீதி மன்றம் உத்திரவு அளிக்கும் வரையில் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கலாகாது என்று நீதி மன்றம் ஆணையிட்டுள்ளதா என்று
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேளுங்கள்.

இன்றைய வழக்கில் அதாவது வில்லங்க சான்று வழங்குகையில் வில்லங்கம் எதுவும் இல்லை என்று கூறி வழங்கியதால் வாங்குபவர் தெரியாமல் வாங்கிவிட்டதாகவும் அதனால் தனக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டுமென்றும் கோருகின்றார். உண்மையாகவும் இருக்கலாம்., ஆனால் பாதிப்பு யாருக்கு ? யாரால் ? பதிவுத்துறையின் பொறுப்பற்ற தனத்தினால் தானே ? இதற்கு பதிவுத்துறை தலைவரின் பதில் என்ன தெரியுமா ? தவறு ஏற்படுவது தவிர்க்க இயலாதது, தற்போதைய புல எண்ணும், பழைய புல எண்ணும் மாறுபடுவதாலும், எல்லைகள் மாறுபடுவதாலும் வில்லங்கங்கள் சரிவர தெரிவிக்க முடிவதில்லை என்பதே. இன்றைய கணிணி உலகில் இத்தகைய பதில் ஏற்புடையதல்ல என்று நீதியரசர் கூறியிருப்பினும், எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

எங்களுடைய இல்லத்தின் மீது ஐந்து வில்லங்கங்கள் உள்ளது என்கின்ற நிலையில் ஒரு வருடம் கழிந்த நிலையில், மேற்கொண்டு புதியதாக வில்லங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ள, பழைய காலத்துடன், புதிய காலத்தையும் சேர்த்து இணைய தளம் மூலமாக வில்லங்க சான்றிதழ் கோரினேன். நேரில் சென்று பெறுகையில், ஒரு வில்லங்கமும் இல்லை என்று சான்றளிக்கப்பட்டதனை கண்டு, இதற்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழை காண்பித்து கேட்கையில் என்ன பதில் அளித்தார்கள் தெரியுமா மக்களே ! சார், அது வந்து, கம்ப்யூட்டரில் தகவல்கள் பதிவேற்றப்படவில்லை, நீங்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பித்ததால் அது போல் சான்றிதழ் வந்துள்ளது, இந்தாருங்கள் என்று பழைய நிலை சான்றிதழை பைசா வாங்காமல் வழங்கினர். ரூம் போட்டு யோசிப்பார்கள் போலிருக்கின்றது. இது தான் பதிவுத்துறை லட்சணம். இப்பொழுது சொல்லுங்கள், பத்திரப்பதிவுத்துறையா அல்லது பத்திர ஊழல் துறையா ! 

லஞ்ச ஒழிப்பு துறையில், தகவல் சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம்?




லஞ்ச ஒழிப்பு வழக்குகள், சில நேரம் அந்த காவலரால், “technicality” என கைவிடபடுவது உண்டு. அல்லது அந்த வழக்குகளில், சிலர் தலையீட்டால், மிக மெதுவாக, ஆமை போல நகரும். நீங்கள் தகவல் சட்டம் மூலம், இதற்கு முற்றுபுள்ளி வைக்க முடியும்.

நீங்கள் லஞ்ச ஒழிப்பு துறையில் எந்த அரசு துறை பற்றியும் விவரம் கேட்கலாம். உங்களுக்கு தெரியாவிட்டாலும், லஞ்ச ஒழிப்புத்துறை, நீங்கள் தகவல் கேட்பதை வைத்து, அந்த துறை மேல் ஒரு கண் வைத்து, அவர்கள் செய்யும் ஊழலை கண்காணிக்க தொடங்குவார்கள்.

நீங்கள் பொது தகவல் அலுவலருக்கு, கீழ்கண்டவாறு, விவரம் கேட்டு, மனு செய்யலாம்.

1. உங்கள் அலுவகத்தில், யார் மேல் எல்லாம் லஞ்ச புகார் வந்துள்ளதோ, அவர்கள் பட்டியல், _____________ காலம் முதல் ______________ காலம் வரை கொடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

2. அந்த புகார்களின் நகல்களை கொடுங்கள்.

3. மேலே சொன்ன வழக்குகளில், எந்த வழக்கு என்ன காரணத்திற்காக கை விடப்பட்டது? நான் அந்த சம்பந்தப்பட்ட file கலை, பார்வையிட விரும்புகிறேன்.

4. நான் எந்த நேரம், தங்கள் அலுவகத்திற்கு வந்தால், அந்த file களை பார்வையிட முடியும் என்று தேதியும், நேரமும் சொல்லுங்கள்.

5. இது தவிர, மீதமுள்ள வழக்குகளில் என்ன நடவடிக்கை தங்கள் துறையால் எடுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தருக.

Generally, cases of corruption are either dropped on some “technicality” or the progress in these cases is very slow due to some influence. Because of this, corrupt officials go free! You can put an end to this. Use RTI!
You can seek details from the “vigilance wing” of any government department. Incase you don’t know, the “vigilance wing” is supposed to keep an eye out and investigate into all malpractices, frauds etc.
You can send an application to the PIO and ask for the following details:

1. Please give a list of all the officials against whom any complaint of corruption was received from any quarter during the period ________ to _______.

2. Please give copies of all these complaints.

3. Out of the above, which of the cases have been dropped and why? I would like to inspect all these files. Please intimate the date and time when I can come to inspect these files.

4. Please indicate the progress being made in the rest of the cases.

Thanks – www.indiahowto.com

அசல் இந்திய சாட்சிய சட்டம் 1872 Sec 70


ஒரு நபர், ஒரு xerox மீது, தானாகவே, இது அசல் என்று சான்றிதழ் என்று சான்றொப்பம் செய்யலாம். அது சட்டப்படி ஏற்புடையது.

உதாரணம், ஜாதி சான்றிதழில், நகலில், இது அசல் என்று எந்த அரசு அலுவலர், நோட்டரி பப்ளிக் கையெழுத்து இல்லாமல், அவரே, அசல் என்று சான்றொப்பம் செய்யலாம். சட்டப்படி இது செல்லும். 

Self attestation is lawful under Indian Evidence Act 1872 Sec 70. 
Section 70 - Admission of execution by party to attested document 
The admission of a party to an attested document of its execution by himself shall be sufficient proof of its execution as against him, though it be a document required by law to be attested.

Wednesday, November 26, 2014

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் என்றால் என்ன‍? இந்த சட்டம்், பெண்கள் மீதும் பாயுமா?

குடும்ப வன்முறை

=============== உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாக வோ அல்லது பொருளாதார ரீதியாகவோ குடும்பத்தில் ஒருவர் ஒடுக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும்தான் கு டும்ப வன்முறை. கன்னத்தில் அறைவது, அடிப்பது, உதைப் பது, தள்ளுவது, கையில் கி டைத்த பொருளை வீசி எறிவது ஆயுதம் கொண்டோ அல்லது அது இல் லாமையோ தாக்குவது போன்றவை உடல் ரீதியான குடும்ப வன்மு றை. இது கணவன் – மனை வி இடையில் மட்டுமே நடக்க வேண்டுமெ ன்பதில்லை. மற்ற உறவினர்களுக்கு இடையிலும் நடக்கலாம். சந்தேகப் படுவது, ஆபாசமாக திட்டுவது, அவதூறு செய்வது, தனிமைப் படுத்துவது போன்ற வை மன ரீதியான வன்முறைகள். தேவை யில்லாமல் தொட்டுப் பேசுவது, முத்த மிடுவது, கட்டியணை ப்பதில் தொடங்கி வல்லுறவு வரை செல் வது பாலியல் ரீதியான வன்முறைகள்.

இந்தச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது?

============================== இந்தியாவில் 70 சதவிகித பெண்கள் குடும்ப வன்முறையா ல் துன்புறுத் தப்படுவதாக புள்ளி விவரம் சொன்னதை அடுத்து மத்திய மகளிர் மற் றும் குழந் தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குடும்ப வன்முறை பெண் கள் பாதுகாப்புச் சட்டம் இயற்ற ப்பட்டு அது 2005ம் ஆண்டு அமலு க்கு வந்துவிட்டது.
இதன்படி கணவன் தன் மனைவியை அடித்தா லோ அல்லது அவமானப் படுத்தி துன்புறுத்தி னாலோ இருபதாயிரம் ரூபாய் அபராதமும், ஓராண் டு சிறை தண்டனையும் கிடைக்கும்.

பெண்கள் மீதும் இந்தச் சட்டம் பாயுமா?

============================== குடும்ப வன்முறை புகார் என்றால் அது ஆண்கள் மீதுதான் பாய வேண் டு ம் என்று அவசியமில்லை. பெண்கள் மீதும் பாயும். சில மாதங்களுக் கு முன்பு மும்பை உயர் நீதிமன்றம் இதை உறுதி செய்திருக்கிறது.
‘பெண்களுக்கான நீதியை உறுதி செய்யும் விதமாகவே இச்சட்டத் தைப் பார்க்க வேண்டும். அவர்க ளுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக இருந்தால் சட்டமே பொருளற் றுப் போய்விடும். வன்முறைக்கு ஆளான பெண், அதைத் தொடுத்த ஆண்களுக்கு எதிராக புகார் தருவது போலவே ஆண் களும் பெண்களு க்கு எதிராக புகார் செய்யலாம்’ என ஒரு மனுவை விசாரித்த நீதிபதி தன் தீர்ப்பி ல் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தச் சட்டம் பயனுள்ளதா?

=========================== நிச்சயமாக. ஆனால், குழந்தைத் தொழி லாளர் ஒழிப்பு, வரதட்சணை தடுப்பு, குழந்தைத் திருமணம், ஈவ் டீசிங் போ ன்ற சட்டங்கள் ஏற்கனவே இயற்றப்பட்டு விட்டன. அவை அமலுக்கு வந்தும் ஆண்டுகள் பலவாகி ன்றன. ஆனால், இன்றும் குழந்தைத் தொ ழிலாளர்கள் இருக்கிறார்கள். வரதட்சணை கொடுமை பல சமூகங்களில் நடை முறை யில் வெளியே தெரியாதவாறு இயங்குகி ன்றன. குழந் தைத் திருமணம் குறிப்பிட்ட சில சமூகங்களிலும், வட மாநிலங்களி லும் நிலவுகின்றன. ஈவ் டீசிங் தொட ர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் போல வே குடும்ப வன்முறை பாதுகாப்புச் சட்ட மும் ஏட்டளவில்தான் உயிர் வாழ்கிறது.

இதற்கு என்ன காரணம்?

================== உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் முதலில் புகார் அளிக்க வேண்டும். ஆனால், கணவனை சிறைக்கு அனு ப்பிவிட்டு, தான் மட்டும் குழந்தைக ளுடன் நிம்மதியாக வாழ எந்த நடுத் தர, கீழ் நடுத்தர, ஏழைப் பெண்களும் விரும்புவதில்லை. அதற்கு அவர் களது வளர்ப்பு முறையும் இடம் தர வில்லை. இந்திய கலாசாரம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்தும் இதற்கு இடம் தருவ தில்லை. எனவே பெரும்பாலான பெண்கள் புகார் தருவதில்லை. அத னால் இந்தச் சட்டம் வெறும் பேப்பரில் மட்டுமே அச்சடிக்கப்பட்டதாக இருக்கிறது.

தமிழகத்தின் நிலைமை என்ன?

========================== கடந்த ஆண்டு குடும்ப வன்முறை குறித்து இந்தியா முழுவதிலும் இரு ந்து பதிவான புகார்களின் எண்ணிக்கை 4,547. அதில் தமிழகத்தில் மட்டு மே பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. அதாவது, நாட்டில் ஒட்டு மொத்தமாக பதியப்பட்டிருக்கும் புகார் களில் 80 சதவிகிதத்துக்கும் மேலாக தமிழகத்தில்தான் பதியப்பட்டிருக் கிறது. இந்த புள்ளி விவரத்தை சொன்னது அல்லது வெளியிட்டது எந்த தன்னார்வ அமைப்பும் அல்ல. கடந்த மாதம், அதாவது, ஆகஸ்ட் 6 அன்று, கேள்வியொன்றுக்கு நாடாளுமன்ற த்தில் உள்துறை அமைச்சகம் தெரிவித்த தகவல் இது.

அப்படியானால் மற்ற மாநிலங்களில் வசிக்கும் பெண்கள் கொடுமைக்கு ஆளாவதில்லையா?

===================================== அப்படி சொல்ல முடியாது. ஏனெனில் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேச ம், பீகார், சட்டீஸ்கர், கோவா, குஜராத், அரியானா, இமாச்சலப் பிரதேச ம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிஸோர ம், நாகலாந்து, ஒடிசா, பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், மேற்கு வங்கா ளம், அந்தமான் நிக்கோபார், தில்லி ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் எவ்வளவு புகார் கள் பதியப்பட்டன என்று தெரியவி ல்லை. உள்துறை அமைச்சகம் அளித்துள்ள அட்டவணையில் இந்த விவரங்கள் இல்லை. தகவல் கிடைக்கவில்லை என்கிற பதிலைத்தான் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், தமிழ் நாடு ஆகிய ஐந்து மாநிலங்க ளின் தகவல்கள் தான் மத்திய அரசிடம் இருக்கின்றன. இதனடி ப்படையில்தான் கடந்த ஆண்டு இந்தியா முழு வதிலும் இருந்து பதிவான புகார்களின் எண்ணிக் கை 4,547 என்று சொல்கிறார் கள். கர்நாடகாவில் நான்கே நான்கு வழக் குகள்தான் கடந்த ஆண்டு பதிவாகியிருக்கிறதாம். உத்ச்ரப்பிரதேசத்தில் ஒரு வழக் கு கூட பதிவாகவில்லையாம். (ஆதாரம்: லி.ஷி. ஹிஷி.னி.ழி ளி. 388 திளிஸி 06.08.2013).

புள்ளி விவரங்கள் உணர்த்தும் பாடம் என்ன?

=============================== மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த விவரங்களை வைத்து மற்ற மாநிலப்பெண்கள் மகிழ்ச்சியாக வாழ் வதாக பொருள்கொள்ள முடியாது. நாகரீக சமூகத்துக்கு சவால்விடும் வகையில்தான் இந்தியாவில் குடும்பங் கள் இயங்கி வருகின்றன. ஆணாதிக்க சமூகம் என்பதற்கான முழு பொருளை யும் நடைமுறையில் உணர்த்தி வருவது இந்தியக் குடு ம்பங்கள். பெண்களுக்கு சம உரிமை, பேச்சுரிமை, பொருளாதார உரி மை, கல்வி உரிமை ஆகியவை இன்னும் முழு வீச்சில் செயலுக்கு வர வில்லை. வெற்று கோஷங்களாகத்தான் காற்றில் கரைகின்றன. ஆண்க ளை சார்ந்து வாழ்வதே பெரும்பாலான பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிற து. சொல்லப்போனால் இதை எதிர்க் க வேண்டும் என்று கூட பல பெண் கள் நினைக்கவில்லை. அந்தளவு க்கு அறியாமையில் வாழ்கிறார் கள்.

தமிழகம் முன்னுதாரணமா?

=============================== ஆமாம். நாட்டிலேயே அதிகளவு புகார்கள் தமிழகப் பெண்களால்தான் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதை எதிர்மறையில் எப்படி இந்தியாவி லே யே தமிழகத்தில்தான் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகளவு இருக்கின்றன என்று பார்க்கிறோ மோ அதே போல் நேர்மறையில் இன்னொரு விஷயத்தையும் பார்க் கலாம். அணுகலாம். அதாவது, தமிழகப் பெண்கள் துணிச்சலுடன் ஆண்கள் மீது புகார் கொடுக்க முன் வந் திருக்கிறா ர்கள் என்பதுதான் இது. இந்த துணிச்சல் ஒரே இரவில் பெண்களுக்கு வந்து விடவில்லை. தந் தை பெரியாரில் தொடங்கி பல திராவிட இயக்க முன்னோடிகளும், சமூக ஆர்வ லர்களும் தொடர்ச்சி யாக போராடி வந் ததன் விளைவைத்தான் இந்தத் தலை முறையை சேர்ந்த பெண்கள் அனுபவிக் கிறார்கள். தெளிவுடன் இருக்கிறார்கள். தங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். மறுக்கப்படுவ தை கேட்டுப் பெறு கிறார்கள்.

இதற்கு காவல்துறை தோள் கொடுக்கிறதா?

============================= இல்லை என்றுதான் வருத்தத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இந் த முடி வுக்கு வரவும் மத்திய அரசு தாக்கல் செய் திருக்கும் விவரங்கள் தான் காரணம். சென்ற ஆண்டு தமிழகத்தில் குடும்ப வன் முறை பெண் கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவான புகார்களின் எண்ணிக்கை 3,838. ஆனால், இவற்றில் காவல்துறை யால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டவை வெறும் 9 புகார்களுக்குத்தான். அதே போல் குடும்ப வன் முறைக்கு தண்டிக்கப்பட்டவர்களும் வெறும் 11 பேர்தான். அதாவது, கு டும்ப வன்முறைக்கு ஆளாகும் போது காவல்துறையிடம் புகார் தெரி விக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பரவலாக தமிழகப் பெண்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், வன்முறையை மேற் கொண்டவர்களுக்குத் தண்ட னை வாங்கித் தரவேண்டும் என்ற அக்கறை காவல்துறைக்கு இல்லை.பின்தங்கிய மாநிலம் என்று கருதப்படுகிற ஜார்கண்டி ல் கூட இந்த நிலை இல்லை.
கடந்த ஆண்டு அங்கு பதிவான குடும்ப வன்முறை புகார்களின் எண்ணி க்கை 552. இதில் 108 பேர் தண்டனை பெற்றி ருக்கிறார்கள். அதாவது, மாவோயிஸ்ட் ஆதிக்கத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில், மாவோயிஸ்டுகளை வேட்டையாடுவதற் கே நேரம் சரியாக இருக்கும் அந்த மாநிலத் தி ன் காவல்துறை, அதையும் மீறி குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பதிவான புகார் களையும் விசாரித்திருக்கிறது. இதுபோல் தமிழக காவல் துறையும் குடும்ப வன்மு றையின் கீழ் பதிவாகும் புகார்களை விசாரி த்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு நீதி கிடை க்க வழிவகை செய்தால் நன் றாக இருக்கும். ஏனெனில் இந்தியாவிலேயே முதன் முறை யாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப் பட்டது தமிழகத்தில் தான். இப் போது நம் மாநில த்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளி ர் காவல் நிலையங்கள் இருக்கின்றன. சுமார் 250 ஐபிஎஸ் அதி காரிகள், ஒரு லட்சம் காவலர்கள் பணியாற்றுகிறார்கள். இயற்றப்பட்ட எல்லா சட்ட ங்களையும் போல், இந்த குடும்ப வன்முறை பாது காப்புச் சட்டத்துக்கு உயிர் கொடுக்கும் பொறுப்பும் இவர்களிடமே இருக்கின்றன. ஆவனச் செய்வார் கள் என்று நம்புவோம்.

- கே.என்.சிவராமன், தினகரன்

Saturday, November 22, 2014

FIR முதல் தகவல் அறிக்கை காப்பி தராட்டி, இப்படி ரூல்ஸ் பேசுங்க !!!

மக்களே, போலீஸ் ஸ்டேஷன் ல, உங்களுக்கு வழக்கு போட்டு, முதல் தகவல் அறிக்கை காப்பி தராட்டி, இப்படி ரூல்ஸ் பேசுங்க !!!


PSO 552 – முதல் தகவல் அறிக்கை யாருக்கு அனுப்ப வேண்டும் என்பது :-

First Information Report – To whom sent


சாதாரணமாக முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்றை காவல் நிலையத்தில் வைத்து கொள்ள வேண்டும். இன்னொன்றை வழக்கமான நடைமுறையில் தாமதமின்றி அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவருக்கும் மூன்றாம் பிரதியை காவல் நிலைய பொது நாட்குறிப்பேடு காவல் வட்ட ஆய்வாளர் மூலம் காவல் கண்காணிப்பாளருக்கு அல்லது, உட்கோட்ட அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவர் தனி துணை குற்றவியல் துறை நடுவராய் இல்லாவிட்டால், நான்காவது பிரதி ஒன்றை அவருக்கும் அனுப்ப வேண்டும் மற்றும் ஐந்தாவது பிரதியினை புகார்தாரருக்கும், ஆறாவது பிரதியினை குற்ற பதிவேட்டு கூடத்திற்கும் அனுப்ப வேண்டும்

rail ‘ஓடும் ரயிலில்’ ஏறி தவறி ஒருவர் விழுந்து விட்டால், யார் பொறுப்பு?


-நாம் ‘ஓடும் ரயிலில்’ ஏறி கொண்டிருக்கும்போது, தவறி விழுந்து இறந்தால், ரயில்வேதான் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 
நீதிபதிகள் H.K. Sema மற்றும் Markandey Katju ஆகியோர், “நாம் ரயில்வே சட்டம் பிரிவு 123(c) ஐ கண்டிப்பாக கடைபிடித்தால், நிறைய பயணிகள், இந்த தலைப்பில், ஏதும் இழப்பீடு பெற முடியாது” என தெரிவித்துள்ளனர். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தனியாக கார் எடுத்தோ, விமானம் மூலமோ பயணிக்க முடியாமல், ரயில் மூலம் பயணிக்கின்றனர். நாம் இந்த சட்டப்படி, ஓடும் ரயிலில் ஓடி பயணி இறந்தால், ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல என்று ஸ்ட்ரிக்ட் ஆக பார்த்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளனர். இந்த பிரிவின் படி, யார் ஒருவர் ரயிலில் பயணிக்க உரிய பாஸ் அல்லது டிக்கெட் வைத்திருந்தாலும், அவர் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து இறந்தால், அதற்கு ரயில்வே நிர்வாகம்தான் பொறுப்பு என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.
May 23, 1996 இல் ரயிலில் ஏறும்போது விழுந்து இறந்த தனது மனைவி அப்ஜா என்பவருக்காக அவரது கணவர் பிரபாகரன் விஜயகுமார், ரயில்வே தீர்ப்பாயம் முன்பு இழப்பீடு கேட்டு வழக்கு தாக்கல் செய்தார். அதை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து, கேரளா உயர்நீதிமன்றத்தில் அது மேல் முறையீடு செய்யப்பட்டபோது, ரூபாய் இரண்டு லட்சம் வட்டியோடு கிடைத்தது. அதை எதிர்த்து, இந்திய அரசு அப்பீலுக்கு உச்ச நீதிமன்றம் சென்றபோது, மேலே சொன்ன தீர்ப்பு வந்துள்ளது.
Thanks – the hindu

உங்கள் மோட்டார் வாகனத்தை விற்கும்போது, நீங்கள் செய்ய வேண்டியவை :



நாம் வாகனத்தை விற்கும்போது, form 29 மற்றும் 3௦ ஆகியவற்றை விற்பவரிடம் கொடுத்து விட்டு, பணத்தை எண்ணி கொண்டு வந்து விடுவோம். அவர் தனது பெயரை rto அலுவகத்தில் மாற்றி கொண்டால் சரி. இல்லாவிட்டால்? ஒரு விபத்து நடந்தால்? காப்பீடு இல்லாவிட்டால்? வண்டி எங்கு பதியபட்டதோ, அந்த ஊர் rto அலுவகத்திற்கு, மேலே சொன்ன form 29 ஐ 14 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். மேலே சொன்னபடி செய்தால், உங்கள் கடமை முற்றிலும் முடிந்தது.

 நன்றி - லீனஸ் வழக்கறிஞர்

வங்கி குறைந்த வட்டி கொடுக்கிறதா?


உங்கள் பணம் வங்கிக்கு சேமிப்புக்கு சென்றவுடன் வரவு வைக்காமல், ஐந்து நாட்கள் கழித்து வரவு வைத்து, அந்த நேரத்தில் வட்டி திட்டம் மாறி, உங்களுக்கு குறைந்த வட்டி கொடுக்கிறதா? நுகர்வோர் மன்றம் போகலாம்.

Sunday, November 9, 2014

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க

மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதவது.

இ.பி.கோ. 498 ஏ பிரிவின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவரை தன்னிச்சையாக கைது செய்யக்கூடாது என்று அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும். கைது செய்வதற்கான அவசியம் உள்ளதாக போலீஸ் அதிகாரிகளே திருப்தி அடையும் வகையில் காரணங்கள் இருந்தால்தான் கைது செய்ய வேண்டும். அந்த காரணங்கள் அடங்கிய பட்டியலை, போலீஸ் அதிகாரிகளுக்கு மாநில அரசுகள் அளிக்க வேண்டும்.

வழக்கு பதிவு செய்யப்பட்ட இரண்டு வாரங்களுக்குள், குற்றம் சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராவதற்கான நோட்டீசு அனுப்பப்பட வேண்டும். அந்த கால அவகாசத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நீட்டித்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் குறிப்பிட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதில்லை என்ற முடிவை இரண்டு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கு போலீஸ் அதிகாரி தெரிவிக்க வேண்டும். அந்த கால அவகாசத்தை போலீஸ் சூப்பிரண்டு நீட்டித்துக் கொள்ளலாம். அதற்கான காரணத்தையும் எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், இத்தகைய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது, போலீஸ் அதிகாரியின் அறிக்கையை ஆய்வு செய்து, மேற்கூறிய காரணங்கள் உள்ளதா என திருப்தி அடைந்த பிறகே, அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட வேண்டும்.

ஆனால், இந்த காரணங்கள் இல்லாமல் காவலில் வைக்க உத்தரவிட்டால், சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மீது ஐகோர்ட்டால் துறைரீதியான நடவடிக்கை எடுக்கச் செய்ய வேண்டும்.
thanks - CrPC - இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம்

Wednesday, October 29, 2014

இந்தியாவிற்கு பணம் அனுப்பினால் 12.36% சேவை வரி செலுத்த வேண்டுமா? சுற்றறிக்கை முழு விபரம்!

அக்டோபர் 14, 2014 அன்று Central Board of Excise and Customs என்ற மத்திய அரசு நிறுவனம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் அனுப்புவோர் மத்தியில் இது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் - தங்களது பணத்தை வங்கிகள் மூலமோ, பிற பணம் மாற்றும் நிறுவனங்கள் மூலமோ இந்தியாவிற்கு அனுப்பும் போது, அதற்கு 12.36% சேவை வரி (SERVICE TAX) செலுத்த வேண்டுமோ என்ற கேள்வி - அந்த சுற்றறிக்கையை தொடர்ந்து எழுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பொதுவாக இந்தியாவிற்கு பணம் அனுப்ப - அவர்கள் வாழும் நாட்டில் உள்ள பணம் மாற்றும் நிறுவனத்தை அணுகுவார்கள். உதாரணமாக - துபையில் உள்ள இந்தியர்கள், இந்தியாவிற்கு 1000 திர்ஹம் அனுப்புகிறார்கள் என்றால், அங்குள்ள ஒரு நிறுவனம்/வங்கி மூலம், அதற்கான கட்டணம் (உதாரணம் 20 திர்ஹம்) செலுத்தி இந்தியாவிற்கு பணம் அனுப்புவார்கள்.

இந்தியாவில் அந்த பணத்தை - துபையில் உள்ள நிறுவனம் தொடர்பு வைத்துள்ள இந்திய நிறுவனம்/வங்கி மூலம் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர் பெறுவார். துபையில் உள்ள நிறுவனம் மூலம் அனுப்பப்பட்ட அந்த பணத்தை இந்தியாவில் வழங்க, இந்திய நிறுவனம்/வங்கி - சிறு கட்டணம் வசூலிக்கும். 

தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய நிறுவனம்/வங்கி பணத்தை இந்தியாவில் விநியோகம் செய்ய வசூல் செய்யும் கட்டணத்திற்குதான் (COMMISSION/FEE) சேவை வரி விதித்துள்ளது, அனுப்பப்பட்ட மொத்த பணத்திற்கு அல்ல.

உதாரணமாக இந்தியாவிற்கு 100 ரூபாய் அனுப்பப்படுகிறது என வைத்துக்கொள்வோம். அதனை இந்தியாவில் வழங்க இந்திய நிறுவனம்/வங்கி 10 ரூபாய் கட்டணம் வசூல் செய்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இந்த சுற்றறிக்கை 10 ரூபாய்க்கு தான் 12.36% சேவை வரி விதிக்கிறது, 100 ரூபாய்க்கு அல்ல.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு - 2011ம் ஆண்டில் 64 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்) வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றறிக்கை முழுமையாக








குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள்

தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள்

அ. ஒருவரை கைது செய்ததற்கான காரணத்தை முடிந்தவரை விரைவாக அவருக்குப் புரியும் மொழியில் தெரிவிக்க வேண்டும். வழக்குரைஞரை அவர் விருப்பப்படி வைத்துக் கொள்ளவும் அவரின் சட்ட உதவியைப் பெறவும் உரிமை உடையவர்.
ஆ. கைது செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் கைது செய்யப்பட்ட உடன் 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள நீதித்துறை நடுவர் முன்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.
இ. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவரை 3 மாத காலத்திற்கு அறிவுரைக் குழுமம் அமைத்து தடுப்புக் காவல் ஆணையை உறுதி செய்ய வேண்டும். எனவே அறிவுறைக்குழுமம் ஆணையில்லாமல் யாரையும் 3 மாதத்திற்கு மேல் தடுப்புக் காவலில் வைக்க முடியாது.
ஈ. தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டவரிடம் சிறை வழியாக எழுத்து மூலம் தனது முறையீட்டை முறையிட கைதி உரிமை படைத்தவர்.
உ. தடுப்புக் காவல் ஆணையை அறிவுரைக் குழுமம் உறுதிப்படுத்தினால் உயர் நீதிமன்றத்தை அணுகி தடுப்புக் காவலில் வைத்தது தவறு எனக் கூறி ஆட்கொணர் மனு தாக்கல் செய்ய கைதி உரிமை உடையவர்.

 நன்றி - கீற்று

சட்டம் சம்மந்தமான (டெக்னிக்கலான ) வார்த்தைகள்!
Will உயில் -- (விருப்ப ஆவணம்)
Testator -- உயில் எழுதியவர்
Executor -- உயில் அமல்படுத்துனர்
Codicil --இணைப்புத் தாள்கள்
Attested -- சரிபார்க்கப்பட்டது.
Probate -- நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி,
உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary / Legatee -- வாரிசு
Intestate -- உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate -- வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act -- இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act -- முஸ்லிம் தனிநபர் சட்டம்
Witness -- சாட்சி
thanks- hello advocate sir

RTI APPLICATION



ஆர்.டி.ஐ. விண்ணப்பம் எழுதுவது எப்படி ?
முகவரி என்ன ?
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க சில விதிமுறைகள் உண்டு
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 (Right To Information Act 2005 - RTI) மூலம் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் அரசுத் துறை மற்றும் அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் தகவல் பெற முடியும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தனி நபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்கலாம்.


ஆர்.டி.ஐ.யின் பயன்:
சுயமரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், லஞ்சம் தராமல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்கான மத்திய, மாநில அரசின் பயன்களைப் பெறவும், அரசின் திட்டங்களில் முறைகேடுகளைக் களையவும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கவும் RTI சட்டத்தைப் பயன்படுத்த முடியும்.
விண்ணப்பம் எழுதும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
ஆர்.டி.ஐ. சட்டத்தில் விண்ணப்பம் செய்யும்போது பொதுத் தகவல் அலுவலர் உங்கள் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்யமுடியாதபடி விண்ணப்பம் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஏன் எப்படி, எப்போது போன்று கேள்வி வடிவம், ஆலோசனை, கோரிக்கை மற்றும் புகார் வடிவில் இருத்தல் கூடாது. அப்படி இருந்தால் பொதுத் தகவல் அலுவலர் தகவல் தரலாம். தராமலும் இருக்கலாம். தகவல் தரவில்லை என்பதற்காக நீங்கள் எடுக்கும் சட்டபூர்வ மேல் நடவடிக்கைகள் எல்லாம் தோற்றுப் போகும் ஆபத்து உள்ளது.
விண்ணப்பிப்பதற்கு ஒரு வெள்ளைத்தாள் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் தேவையில்லை. எழுதும் நோட்டு பேப்பரிலேயே கூட விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் தட்டச்சில் இருக்க வேண்டிய அவசியமில்லை. கையால் எழுதலாம். விண்ணப்பத்தைப் படித்து புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெளிவான எழுத்துக்களில் எழுத வேண்டும்.
ஒரு விண்ணப்பத்தில் எத்தனை தகவல்கள் வேண்டுமானாலும் கேட்கலாம். இருப்பினும் குறிப்பிட்ட அளவிலும் தொடர்புடைய தகவலாகவும் இருத்தல் நல்லது.
தகவலை சிறு கேள்விகள் மூலம் கேட்கலாம். நீண்ட தகவல்களை ஒரே விண்ணப்பத்தில் கேட்பதைத் தவிர்க்கவும். விண்ணப்பத்தில் உங்கள் பெயர், கையொப்பம் போதுமானது. பதவி மற்றும் இதர பொறுப்புகள் குறிப்பிடத் தேவையில்லை.
தங்களுக்கு எதற்காகத் தகவல்கள் தேவைப்படுகின்றன என்பதைத் தெரிவிக்க அவசியமில்லை.
நேரடியாக ஏன் என்று ஆரம்பமாகும் விண்ணப்பங்கள், தகவல் உரிமைச் சட்டத்தின்படி நிராகரிக்கப்பட ஏதுவாகும். உதாரணமாக, ஏன் அந்தப் பில் அனுமதிக்கப்படவில்லை என்று எழுதுவது கூடாது.
கட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்பத்தின் இறுதியில் தவறாமல் குறிப்பிடவும்.
தாங்கள் பாதிக்கபட்டவராக இருப்பின், பகுதி 4(1)(d)ன்படி நிர்வாக மற்றும் அரசு நீதித்துறையின் முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களைக் கேட்கலாம்.
விண்ணப்பத்தை யாருக்கு அனுப்புவது?
எந்தப் பொதுத் தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்கிறீர்களோ, அவர் முகவரிக்கு விண்ணப்பம் எழுதலாம்.
ஒருவேளை அருகில் உள்ள பொதுத் தகவல் அலுவலரின் முகவரி அறிய முடியவில்லை எனில், மாநில அரசாக இருந்தால் மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் அனுப்பலாம். அந்தத் துறை தலைமை அலுவலர் அதனை அதற்குண்டான தகவல் அலுவலருக்கு அனுப்புவார்.
பொதுத் தகவல் அலுவலரின் பெயரிடாமல் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். ஏனெனில், அலுவலர்கள் பணி இடமாற்றத்திற்கு உட்பட்டவர்கள்.
கட்டணம் மற்றும் அதைச் செலுத்தும் முறை:
முதன் முறை விண்ணப்பம் அனுப்புவதற்கு கட்டணம் பத்து ரூபாய், (பின்னர் தகவல்கள் தரும் நகலின் பக்கம் ஒவ்வொன்றிற்கும் 2 ரூபாய். குறுந்தகடுகள் போன்றவற்றிற்கான கட்டணம் 50 ரூபாய் எனக் கட்டணம் வேறுபடும்). வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. ஆனால் இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராப்ட், பாங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்புகள், வரையறுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணத்தைச் செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத்துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம் (இதற்கான விண்ணப்பத்தை தலைமைத் தபால் அலுவலகத்தில் இலவசமாக அனுப்பலாம்).
இந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்www.epostoffice.gov.in என்ற இணைப்புக்குள் சென்று, தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவுசெய்து கொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். இதற்கு பிரத்யேகமான எண்கள் வழங்கப்படும். இந்த எண்களை தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.
30 நாட்களுக்கு மேலாகி விட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்புவது எப்படி?
நேரடியாக கையில் விண்ணப்பத்தை கொடுத்தல் - உங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்தியமைக்கான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை அனைத்தும் இருக்கின்றனவா என உறுதி செய்து கொள்ளுதல்.
பதிவு அஞ்சலுடனான பதில் அட்டை (AD) - இந்த அட்டையில் உள்ள தபால்துறை முத்திரை, விண்ணப்பம் சென்று சேர்ந்துள்ளமைக்கான உத்தரவாதத்தை அளிக்கிறது. பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்திற்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்து, வாங்கித் தருமாறு கேட்க வேண்டும்.
விரைவு அஞ்சல் (தபால் துறையின் ஒரு சேவை) - உங்கள் விண்ணப்பத்தை விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்தல்.www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம் உரிய அலுவலகத்திற்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான நிலை குறித்து ஓர் அத்தாட்சி பெற்று வைத்துக் கொள்ளவேண்டும்.
சாதாரண அஞ்சல் அல்லது தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. காரணம், விண்ணப்பம் சேர்ந்ததற்கான உத்தரவாதம் எதுவும் கிடைக்காது.
மேல் முறையீடு:
பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை எனில் (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தியளிக்கவில்லை எனில், முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அத்துறையின் முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை / முடிவை விவரிப்பார். தாமதத்திற்குத் தகுந்த காரணங்களை எழுத்து மூலம் தெரிவித்து விட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக் கொள்ளலாம்.
முதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.
இரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்தி செய்து, இதுவரை கிடைக்கப் பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.
இரண்டாம் மேல் முறையீடு செய்ய மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு:
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 2, தியாகராயர் சாலை,ஆலயம்மன் கோயில் அருகில், தேனாம்பேட்டை, சென்னை 600 018 (அல்லது)
தபால் பெட்டி எண்: 6405 தேனாம்பேட்டை, சென்னை-600 018
Phone : 044 2434 7590, Fax: 044 2435 7580
Email : sicnic.in Web : www.tnsic.gov.in
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு:
CENTRAL INFORMATION COMMISSION,
II floor, August Kranti Bhavan, Bhikaji Kama Place,
NEW DELHI – 110 066.
ஆன்லைனில் ஆர்.டி.ஐ. விண்ணப்பிக்க:
www.rtionline.gov.in/ என்ற தளத்தில் மத்திய அரசின்கீழ் வரும் 37 துறைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தளத்திலேயே முதல் மேல் முறையீடும் செய்யலாம்.www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு / எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
ஆர்.டி.ஐ. குறித்த சந்தேகங்களுக்கு / உதவிக்கு:
www.voiceof Indian.org என்ற தளத்தையோ 94434 89976, 94443 05581 என்ற எண்களையோ தொடர்பு கொள்ளலாம்.

Saturday, October 25, 2014

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

இந்திய மத்திய மாநில அரசுகள் அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியின் கீழ் அரசுகள் இயக்கும் சட்ட ங்களும் இந்திய குடியரசு தலைவர், ஆளுநர்கள், அல்லது துணை ஆளுநர் கள் அவர்கள் பிறப்பிக்கும் அவசர சட்டங்களும் அல்லது அவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.


இந்திய உரிமையியல் சட்டத்தில் சிக் கல் நிறைந்தவையாகவே அமைந்து ள்ளது. இந்தியா பல சமயத்தினரை கொண்டுள்ளதால் ஒவ்வொரு சமயத் தினருக்கும் அதற்குரிய தனித்தன்மையை வலியுறுத்துவதால்

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..இச்சிக்கல் நிறைந்த சட்டமாக அமைந்துள் ளது.

பல மாநிலங்களில் திருமணங்கள் பதிவுசெய் வது மற்றும் மண முறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை . அதனால் ஒவ்வொரு சமயத்தினரும் தனித் தனியான சட்டங்கள் வகு க்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்:

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்

குற்றவியல் சட்டம்

ஓப்பந்தச்சட்டம்

தொழிலாளர் சட்டம்

பொல்லாங்கு குற்றவியல் சட்டம்

குடும்பச் சட்டம்

இந்துச் சட்டம்

இசுலாமியச் சட்டம்

கிருத்துவச் சட்டம்

பொதுச்சட்டம்

தேசியச்சட்டம்

அமலாக்கச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம்


குற்றங்களின் வகைப்பாடு

இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்

இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்க ங்கள்

இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்

இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்

இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை

இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி

இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்

இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்

இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்

இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்


இ.பி.கோ. 299 முதல் 377 வரை


1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை

( பிரிவு 299 முதல் 311 ) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..


2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்கள்


( பிரிவு 312 முதல் 318 )

3.காயப்படுத்துதல்( பிரிவு 319 முதல் 338 )


4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை

( பிரிவு 339 முதல் 348 )

5.குற்றவியல் தாக்குதல்
( பிரிவு 349 முதல் 358 )

6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல்
( பிரிவு 359 முதல் 374 )

7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்
( பிரிவு 375 முதல் 376 )

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:

1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு

(பிரிவு 299 முதல் 311)

2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு

(பிரிவு 312 முதல் 318)

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

3. ஒருவரை காயப்படுத்துதல்
(பிரிவு 319 முதல் 338)

4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை
(பிரிவு 339 348 போன்ற)

5. குற்றவியல் தாக்குதல்
(பிரிவு 349 முதல் 358)

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல்

(பிரிவு 359 முதல் 374)

7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்

(பிரிவு 375 முதல் 376)

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

8. செயற்கை குற்றங்களுக்கு

(பிரிவு 377)

இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:

1. திருட்டு

( பிரிவு 378 முதல் 382 )

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

2. பலாத்காரம்

( பிரிவு 383 முதல் 389 )

3. திருட்டு மற்றும் கொள்ளை

( பிரிவு 390 முதல் 402)

4. சொத்து குற்றவியல் மோசடி

( பிரிவு 403 முதல் 404 )

5. குற்றவியல் நம்பிக்கை துரோகம்

( பிரிவு 405 முதல் 409 )


சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..


6.திருடிய சொத்து பெறுவது

( பிரிவு 410 முதல் 414 )

7. ஏமாற்றுதல்
( பிரிவு 415 முதல் 420 )

8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல்

( பிரிவு 421 முதல் 424 )

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

9. குறும்புகள்
( பிரிவு 425 முதல் 440 )

10. குற்ற மீறல் பற்றிய செயல்கள்

( பிரிவு 441 முதல் 464 )

ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள்

பிரிவு 463 முதல் 489 வரை

சொத்து

( பிரிவு 478 முதல் 489 )

நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

( பிரிவு 489எ வேண்டும் 489இ)


இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:


கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல்


சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..
பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட‍ம்)

பிரிவு 499 முதல்502 வரை

மான நஷ்ட வழக்குகள்
பிரிவு 503 முதல் 510 வரை

சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு
பிரிவு 511

குற்றம் செய்ய முயல்வது.

சட்ட சீர்திருத்தங்கள் 

1ஃ பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான 
சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..
உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரிய
தடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தணடிக்க பயன்படுத்த முடியாது என்றது.


2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து

.சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..


3 பிரிவு 497ன் கீழ்

மறறொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.