Showing posts with label DIN. Show all posts
Showing posts with label DIN. Show all posts

Wednesday, September 28, 2016

நீங்கள் பருகும் நீரில் எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா?



ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஆனால்
ஒரே ஒரு பூமி

நீர், உயிர் ஆற்றலின் அடிப்படை வடிவம். நீர் இல்லாத நிலத்தில் உயிர்கள் வாழ்வது இல்லை. நீர் என்பது தாகம் தணிக்கும் பொருள் மட்டும் அல்ல; நீரும் ஓர் உணவுதான். “உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்பது, நமது சங்கப்பாடலின் வரி. நீரில் உயிர்கள் இருக்க வேண்டும். அந்த உயிர்கள் யாவும் மனித உடலில் வாழ்ந்து பெருகினால்தான், இயங்குவதற்கான ஆற்றல் கிடைக்கும். உயிரற்ற நீரை மட்டுமே பருகிக்கொண்டிருந்தால், உடலின் இயக்க ஆற்றல் தடைபடும். உடலுக்கு தேவையான ஊட்டங்கள் கிடைக்காது.
பூமியில் உள்ள பல வகையான நீரும் அப்புறப்படுத்தப்பட்டு, எல்லா இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட நீர் நிரப்பப்பட்டால், ஒரே ஒரு உயிர்கூட வாழாது. மனித உடலும் இப்படிதான், சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே தொடர்ந்து பருகிக்கொண்டிருந்தால், உயிர் ஆற்றலை இழக்கத் தொடங்கிவிடுகின்றது.
தூய்மையான குடிநீர் என்ற கருத்து மிகவும் தேவையானது. இந்தக் கருத்தை வணிகமயமாக மாற்றிய நிறுவனங்கள், தூய்மை என்ற இடத்தில் சுத்திகரிக்கப்பட்ட என்ற சொல்லைத் திணித்துவிட்டன.இது வெறும் சொல் விளையாட்டு அல்ல; மிக மோசமான விளைவுகளைத் தருகிற உயிர் விளையாட்டு.
மழைதான் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்குமான நீர் ஆதாரம். ஆறு, ஏரி, குளம், குட்டை, ஊற்று, சுனை, ஓடை, காட்டாறு போன்ற எல்லா வடிவங்களிலும் மழைநீர்தான் நமக்கும் நம்முடன் வாழும் பிற உயிரினங்களுக்கும் உணவாக வேண்டும். இந்த நீரில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் இருக்கும். நுண்ணுயிரிகள் இல்லாத நீர் என எதுவும் இயற்கையில் இல்லை. சரியாக பராமரிக்கப்படாத நீரில் இயற்கையான அளவை விட அதிகமான நுண்ணுயிரிகள் பெறுகிவிடும். இது பாதுகாப்பாற்ற குடிநீர். இவ்வாறு நேராத வகையில், குடிநீர் முறையாக பராமரித்தால் போதும்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்னர், குடிநீர் நிறுவனங்கள் சமூகத்தின் உடல் நலனில் அக்கறை செலுத்த தொடங்கின. நாம் பருகும் ஒவ்வொரு சொட்டு நீரும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என அந்த நிறுவனங்கள் மிகுந்த கவலை கொண்டன. சுத்திகரிக்கப்பட்டநீர் புட்டிகள் சந்தைக்கு வந்தன. நீரில் வாழும் நுண்ணுயிரிகளையெல்லாம் கிருமிகள் என்ற பொதுபெயரால் அந்த நிறுவனங்கள் அழைத்தன. எல்லா நுண்ணுயிரிகளையும் கிருமிகள் என அழைப்பது அறிவியலுக்கு புறம்பானது மட்டுமல்ல, மிக மோசமான பொய்யும்கூட. பொது இடங்களில் கிடைக்கும் எந்த நீரும் கிருமிகளால் நிரம்பியதுதான் என்ற கட்டுக்கதை வெற்றிகரமாக நிலைநாட்டப்பட்டது.




உணவகங்கள், பேருந்து நிலையங்கள், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் இருக்கும் குடிநீர் தரமற்றது என மக்கள் நம்பத் தொடங்கினர்.
முறையான பராமரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இவை தரமான நீராக மாறியிருக்கும். அரசும் அதன் துணை அமைப்புகளும் குடிநீர் நிருவனங்களும் இணைந்து பணியாற்றின. விளைவாக, இப்போது நீங்கள் பருகும் பெரும்பான்மையான குடிநீர் “சுதிகரிக்கப்பட்ட”தாகி விட்டது.
“சுதிகரிப்பு செய்யும் நீரில் உள்ள கிருமிகள்மட்டும் தேடித் தேடி அழிக்கப்படுகின்றனவா அல்லது எல்லா நுண்ணுயிரிகளும் ஒட்டுமொத்தமாக கொலை செய்யப்படுகின்றனவா?” என்ற கேள்வியை நீங்கள் கேட்கவேண்டும் ஏனெனில், நுண்ணியிரிகள் மிகமிக குறைவாக உள்ள நீர், மனித உடலை உலுக்கிபோடும் அளவுக்குத் தீமைகளைச் செய்யக்கூடியது. நமது உடலே நுண்ணுயிரிகளின் பிரபஞ்சம்தான். இந்தப் பிரபஞ்சத்துக்குள் நீர் என்னும் உணவின் வழியாகத் தொடர்ந்து கோடானுகோடி உயிரிகள் செல்ல வேண்டும். இது படைப்பின் விதி. இவ்வாறு செல்லும் உயிரி கூட்டத்தில், உடலுக்கு ஒவ்வாத வகையினங்கள் இருந்தால், அவற்றை அழித்து வெளியேற்றுவதற்கு என, எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் நமது உடலுக்குள் உள்ளன.
எச்சில் அவற்றில் மிக முக்கிய பாதுகாப்புக் கவசம். உடலின் மிகச் சிறந்த பாதுகாப்பு எதிர் உயிரி மருந்து(ஆண்டிபயொட்டிக்) எச்சில்தான். இயற்கையான குடிநீரைப் பருகும்போது எச்சில் சுரந்து, இனிமை மிகுந்த சுவை உண்டாகின்றது. புட்டிகளில் அடைத்த நீரை பருகும் போது, அளவுக்கு அதிகமான எச்சில் சுரப்பதையும் அதில் கசப்புச் சுவை மிகுந்திருப்பதையும் உணர்ந்திருப்பீர்கள். உடலுக்கு ஒவ்வாத எந்த உணவையும் பானத்தையும் வாயில் திணிக்கும்போது, எச்சில் சுரப்பு அதிகமாக இருக்கும். உள்ளே நுழையும் ஒவ்வாத பானத்தை அல்லது உணவை உடனடியாகச் சுத்திகரித்து வெளியே துப்பச் செய்யும் பணியை, எச்சில் சுரப்பிகள் செய்கின்றன.
உடல் முழுவதும் இவ்வாறான தற்காப்பு உறுப்புகளும் சுரப்பிகளும் படைக்கப்பட்டுள்ளன. இவையாவும், உயிருள்ள பொருட்களைக் கையாளும் வகையில் உள்ளனவே தவிர, வேதிப்பொருட்களைக் கையாளும் வகையில் அல்ல என்பதே முக்கியமான சேதி. தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்படும் நீரில் கலக்கப்படும் வேதிப்பொருட்களில் குளோரின் முதன்மையானதும் அடிப்படையானதும். இதப் பயன்படுத்தாத சுத்திகரிப்பு நிலையங்களே இருக்காது. அரசு குடிநீர்கூட குளோரின் வழியாகதான் சுத்திகரிக்கப்படுகிறது. குளோரின் பயன்பாட்டினால் மன அழுத்தம், மன பதற்றம், பீதியடைதல் என மூன்று வகையான மன நோய்கள் உருவாகின்றன என நவீன அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. இந்த மனநோய்கள், மோசமான உடல் நோய்களை உருவாக்கும் என்பதும், அந்த நோய்களை ஒரு வரையறைக்குள் அடக்கி பட்டியலிட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சமூகத்தில் எல்லா பாவங்களுக்கும் ஒரு வடிகால் உள்ளது. அந்த வடிகாலுக்கு உள்ள மதிப்புமிக்க பெயர், “அனுமதிக்கப்பட்ட அளவு” என்பது. “குடிநீரில் குளோரின் பயன்பாடு புற்றுநோயை உருவாக்குமா? என்று நீங்கள் கேள்வி எழுப்பினால், “சுத்திகரிப்பு” நிபுனர்கள் அளிக்கும் விடை, “அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்தினால் குளோரின் பாதுகாப்பானதுதான்” என்பதாக இருக்கும்.
புட்டிகளில் அடைக்கப்பட்ட நீரை வாங்கி பருகுகிறீர்கள். நீங்கள் பருகும் நீரில் எவ்வளவு குளோரின் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? அது அனுமதிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது எனத் தெரியுமா? உங்களுக்கு தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்தக் குடிநீரில் கிருமிகள் இல்லை. ஆகவே, இது பாதுகாப்பானது’. கிருமிகளைக் காட்டிலும் கொடூரமான விளைவுகளை வேதி நஞ்சுக்கள் உருவாக்குகின்றன என்பதும், அந்த நஞ்சுக்கள் கலக்கப்பட்ட நீரைத்தான் பருகிக்கொண்டுள்ளோம் என்பதும் நீங்கள் அறியாதவை. ஒரு லிட்டர் நீரில் எவ்வளவு வேதிப்பொருட்கள் கலக்கலாம் என்ற கணக்கை, மிகத்துல்லியமாக எல்லா நிறுவனங்களும் கடைபிடிக்கின்றன என நம்புகிறீர்கள் அல்லவா? இந்த நம்பிக்கை உண்மையாகவே இருக்கட்டும்.  குளோரின் கலக்கப்பட்ட நீரை ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் பருகுவது பாதுகாப்பானது? எத்தனை ஆண்டுகளுக்குப் பருகுவது பாதுகாப்பானது? ஆகிய இரு கேள்விகளுக்கான விடைகளைத் தேடிப்பாருங்கள். உங்களுக்கு நீர் வழங்கும் நிறுவனங்களிடம் இந்த கேள்வியைக் கேளுங்கள். பதில் சொல்லவேண்டிய கடமைகளும் பொறுப்புகளும் அவர்களுக்கு உள்ளன.
பூமியில் வீசும் கதிர்வீச்சுகளில் அகச்சிவப்பு, புறஊதாக்கதிர்கள் அடிப்படையானவை. குறைந்த வெப்பஆற்றல் செறிவு கொண்டவை, அகச்சிவப்புக்கதிர்கள். மிகை வெப்ப ஆற்றல் செறிவு கொண்டவை புறஊதாக்கதிர்கள். பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் புறஊதாக் கதிர்வீச்சைப் பாய்ச்சிதான் சுத்திகரிப்பு செய்கின்றன. குளத்து நீரின் கீழே படிந்திருப்பவை அகச்சிவப்புக்கதிர்கள். நீரில் மிகக் குறைவான அளவு கதிர்வீச்சு இருப்பது, நுண்ணுயிர் வாழ்க்கைக்கு நல்லது. குளத்து நீர் மாசுபடாதவரை, மனிதர்களும் பருகலாம். அதிக அளவிலான கதிர்வீச்சுகள் எந்த உயிரினத்துக்கும் ஆபத்தானவை தான். குறைந்த அளவு கர்வீச்சுகள் அடங்கிய உணவையும் நீரையும் உட்க்கொள்ளும் வகையில் மனிதன் படைக்கப்பட்டுள்ளோம். இப்போது மிதமிஞ்சிய புத்திசாலித்தனத்தின் வெளிப்பாடாக, மிகைக்கதிர்வீச்சுகள் குடிநீரில் செலுத்தப்படுகின்றன.
புற ஊதாக்கதிர்களை நீரில் பாய்ச்சுவது கிருமிகளை மட்டும் தான் அழிக்கும்; அந்த நீரைப் பருகும் மனிதர்களை அழிக்காது என எந்த ஆய்வுகளும் இதுவரை கூறவில்லை.
நீங்கள் பருகும் குடிநீரில் கதிர்வீச்சுக்கள் உள்ளன என்பதையாவது முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
எல்லா வேதிப்பொருட்களும் பிளாஸ்டிக் உடன் வினைபுரிபவைதான். பிளாஸ்டிகில் அடைக்கப்பட்ட ஒரு சொட்டு நீர் உங்கள் வாயில் விழும்போது, அதில் பல வகையான வேதிப்பொருட்களும் கதிர்வீச்சுகளும் கலந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“ அரசு அனுமதி பெற்ற நிறுவனம் ” தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் போன்ற அறிவுப்புகளின் பின்னால், மறைவான ஒரு உலகம் இருக்கின்றது.
உங்களை வந்தடையும் ஒவ்வொரு நீர் புட்டியையும் அரசு அதிகாரிகள் சோதித்து அனுப்புவதாகவும், உலகத்தரம் வாய்ந்த நிபுணர்கள் சோதித்து சான்று தருவதாகவும் ஒரு மாயத்தோற்றம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
வீட்டிலேயே நீரை “சுத்திகரிப்பதற்கு” என அமைக்கப்படும் கருவிகளுக்கும், மேல உள்ள அனைத்து விளக்கங்களும் பொருந்தும்.
நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு நன்னீர்தான் உயிர் ஆதாரம். நன்னீர் என்றால், பலகோடி நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய நீர்தான். நீருக்கும் மனிதர்களுக்குமான இயற்கையான உறவை, நிறுவனங்களும் அவற்றை தாங்கிப்பிடிக்கும் தொழில்நுட்பங்களும் சிதைத்துவிட்டன. நமது மரபு, நவீனத்தின் சதிகளை காட்டிலும் வலிமையானது. “மழைநீர்தான் அமுதம்” என்றார் ஆசான் திருவள்ளுவர்.
மழை நீரை சேமிக்கும் தொழில்நுட்பங்கள் இப்போது கூடுதலாக தேவைப்படுகின்றன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்வோர், நமக்குள் கூட்டமைப்பு ஏற்படுத்தி அனைவருக்கும் பொதுவாக மழை நீர் சேமிப்பில் ஈடுபடலாம். ஏரிகளும் குளங்களும் தூய்மையானவையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். தேவையான நேரத்தில் நீரை காய்ச்சிப் பருக வேண்டும்.
வேறுவழியில்லாமல், “சுத்திகரிப்பு”  நீரை பயன்படுத்துவோருக்கு என, சத்துநீர்முடிச்சு ஒன்றைப் பரிந்துரைக்கின்றேன். நன்னாரிவேர், வெட்டிவேர், தேற்றாங்கோட்டைகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒரு தூய வெள்ளை துணியில் முடிச்சாக கட்டிவைத்துக்கொள்ளுங்கள். தொடக்கத்தில் இவையனைத்தும் சிறிய அளவில் இருந்தால் போதும். அனுபவத்தில் அளவுகளைக் கற்றுக்கொளுங்கள். “சுத்திகரிக்கப்பட்ட” நீரை, பானையில் ஊற்றிவைத்து, அந்த முடிச்சை உள்ளே போட்டுவிடுங்கள். ஓரிரு மணிநேரத்தில் குடிநீர் மணக்கும். பானையில் ஊற்றப்படும் நீரில் உயிரிகள் உற்பத்தியாகின்றன. உள்ளே போடப்பட்ட முடிச்சு, சத்து வழங்குவதாகவும், இயற்கையான பாதுகாப்புக் கருவியாகவும் செயலாற்றும்.
இதற்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். உங்கள் பொருளாதாரம், நாட்டு மருந்து கடைகளை நோக்கி திரும்புவது மிக நல்லது. அங்கு தான் நமது காடுகளுக்கும் நகரங்களுக்கும்  இடையிலான வேர்கள் ஒட்டிக்கொண்டுள்ளன. அந்த வேர்களின் ஆயுட்காலம் மிக நீளமானது. எந்த சீர்கேடுகளையும் உறிஞ்சியெடுத்து மரங்களைக்காக்கும் வல்லமை அந்த வேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி
ஆனந்த விகடன்
3.8.16 www.vikatan.com

Thursday, August 25, 2016

*மருத்துவமனைகளின் மறுபக்கம் !!!


இதுதான் நடக்கிறது
மருத்துவமனைகளில்...! - இரு
மருத்துவர்களின் ஒப்புதல்
ஆம். *மருத்துவத் துறையில் நடக்கும்
தில்லுமுல்லுகள்* பற்றி
அங்கொன்றும்,
இங்கொன்றுமாக
விவாதிக்கப்பட்ட விஷயங்கள்
இப்போது
பொதுவெளிக்கு
வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு
மருத்துவர்கள்_ மூலம். மருத்துவர்கள்
அருண் காத்ரே மற்றும் *அபய்
சுக்லே*, “ Dissenting Diagonisis"
என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி
இருக்கிறார்கள். _மருத்துவத்துறை
யின் இருட்டுப்பக்கங்களை
வெளிச்சத்திற்கு
கொண்டு வந்திருக்கிறார்
கள்_.
*நோயாளிகளின் நலன் அல்ல,
பங்குதாரர்களின் நலனே
முக்கியம்*:
' *மருத்துவச் சுற்றுலாவில்
இந்தியா, _குறிப்பாக
சென்னை கோலாச்சுகிறது_'
என்று இங்குள்ள கார்ப்பரேட்
மருத்துவமனைகள் பிதற்றிக்
கொள்ளும் இந்த
தருணத்தில்*, இந்த புத்தகத்தின்
உள்ளடக்கம் முக்கியத்துவம்
பெறுகிறது.
இந்த புத்தகத்தின்
ஆசிரியர்களான மருத்துவர்கள்
அருண் காத்ரே மற்றும் *அபய்
சுக்லே* முன் வைக்கும் முக்கிய
குற்றச்சாட்டு, “ _*இங்குள்ள
பெரிய மருத்துவமனைகள்
நோயாளிகளின் நலன்காக
இயங்குவதை விட, அதன்
பங்குதாரர்களின்
நலனுக்காகதான்
இயங்குகின்றன*_” என்பதுதான்.
இவர்கள் எந்த குற்றச்சாட்டையும்
மேம்போக்காக கூறவில்லை.
_பாதிக்கப்பட்ட நோயாளிகள்,
நேர்மையான மருத்துவர்களின்
வாக்குமூலங்களை
கொண்டே பதிவு
செய்திருக்கிறார்கள்_.
நம் அனைவருக்கும் ஒரு அனுபவம்
நிச்சயம் இருக்கும். அதாவது
*_தேவையற்ற பரிசோதனைகளை
மருத்துவர்கள் எடுக்க
சொல்கிறார்கள் என்று_*.
இது குறித்து இந்த மருத்துவர்கள், “
*பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை
மட்டும் பதம் பார்க்கவில்லை*.
பரிசோதனை சாலைகள்,
*நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும்
ரத்த மாதிரிகளை உண்மையாக
பரிசோதிப்பதே இல்லை*. _மருத்துவர்கள்
எது மாதிரியான அறிக்கையை
விரும்புகிறார்களோ... அதைதான்
இவர்கள் தயார் செய்து
தருகிறார்கள்_” என்கிறார்.
இப்போது உங்கள் சொந்த
அனுபவங்களை இந்த
வாக்கியத்துடன் ஒப்பிட்டுக்
கொள்ளுங்கள்.
பெரும் மருத்துவமனைகள்,
இலாப இலக்கு நிர்ணயத்துக்
கொண்டு வேலை
செய்கின்றன. *அவர்களுக்கு
எப்போதும் அப்பாவி நோயாளிகளின்
நலன் முக்கியமே இல்லை*...
லாபம்.. லாபம்...
லாபம்... மேலும் லாபம்
மட்டுமே முக்கியமாக இருந்து
வருகிறது என்கிறார்கள் இந்த
மருத்துவர்கள்.
*நியாயமான மருத்துவர்களை
உதாசீனம் செய்யும்
மருத்துவமனைகள்*:
ஒரு பிரபலமான மருத்துவமனை,
தன் மருத்துவமனையில் வேலை
பார்த்த *சிறந்த சிறுநீரக சிறப்பு
மருத்துவரை பணி நீக்கம்
செய்தது*. அதற்கான
காரணம், _*ஒரு நோயாளிக்கு
அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை
சிகிச்சையை செய்யாமல்,
சாதாரண சிகிச்சை மூலம்
குணப்படுத்தியது*_. " *இது
கார்ப்பரேட் மருத்துமனைகள்
எவ்வளவு வக்கிர மனநிலையில்
செயல்படுகிறது
என்பதற்கான சான்று*"
என்கிறார்கள் இந்த
மருத்துவர்கள்.
“லாபத்தை முதன்மையான நோக்கம்
கொண்ட மருத்துவமனைகள்
அனைத்தும் இப்படிதான்
செயல்படுகின்றன.
*அவர்களுக்கு நோயாளிகளின்
நலன் முக்கியம் அல்ல*.
லாபத்திற்காக _*தேவையற்ற
அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை
தன்னை நம்பி வரும் நோயளிக்கு
அளிக்கின்றன*_” என்று
வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.
சுக்லே, “ *எனக்கு தெரிந்த
ஒருவர், தனக்கு
சொந்தமான வீட்டை
விற்று, தன் மனைவிக்கான மருத்துவ
கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை
கட்டினார். ஆனால், உண்மையில்
அந்த சிகிச்சைக்கு அவ்வளவு
கட்டணமெல்லாம் இல்லை*...”
என்கிறார்.
இதைதாண்டி இவர்கள் வைக்கும்
இன்னொரு குற்றச்சாட்டு
பகீரென்று இருக்கிறது. _*சில
மருத்துவமனைகள் உண்மையில் அறுவை
சிகிச்சையே செய்யாமல்,
வெறும் மயக்க மருந்தை மட்டும்
கொடுத்துவிட்டு, அறுவை
சிகிச்சை செய்துவிட்டோமென
்று பணம் பறிக்கிறார்கள்*_
கொல்கத்தாவை சேர்ந்த
புண்யபிரதா கூன் என்னும்
மருத்துவர், “ *எங்கள் பகுதியில்
மருத்துவர்களுக்கு நியாயமாக
மருத்துவம் பார்த்தும் ஈட்டும்
தொகையை விட, ஆய்வு
மையங்கள் அளிக்கும் பங்கு
தொகை அதிகம். x-ray
எடுக்க பரிந்துரைத்தால் 25
சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க
பரிந்துரைத்தால் 33 சதவீதமும்
கமிஷன் தருகிறார்கள்*...” என்று
தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில்
பதிவு செய்திருக்கிறார்.
" _தன்னிடம் சிகிச்சைக்கு வரும்
நோயாளிகளை, தங்களின்
தொடர்
வாடிக்கையாளர்களாக வைத்துக்
கொள்ள தான் பல
மருத்துவமனைகள் விரும்புகின்றன_.
அதாவது *தேவையற்ற அறுவை
சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து,
நோயாளிகளை மீண்டும் மீண்டும்
திரும்ப வரவைக்க வேண்டும்*. அதை
மருத்துவர்கள் செய்ய தவறும்
போது, _*அவர்கள் பணி நீக்கம்
செய்யப்படுகிறார்கள்*_"
என்று இந்த புத்தகத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம்
சாதாரணமாக கடந்துவிட
முடியாது.
*இந்திய மருத்துவ கவுன்சில் என்ன
செய்து
கொண்டிருக்கிறது*...?
என்ற நம் கேள்விக்கு இந்த
மருத்துவர்களின் பதில், “
*பெரும் மருத்துவமனைகள்
மருத்துவதுறையை திட்டமிட்டு
கொலை செய்து
கொண்டிருக்கிறார்கள்*.
ஆனால், *_இதை
மெளனமாக இந்திய
மருத்துவக் கவுன்சில் வேடிக்கை
பார்த்து
கொண்டிருக்கிறது_*.
*உடனடியாக மருத்துவக்
கவுன்சில் தன்னை புதுப்பித்துக்
கொண்டு, இந்த
அநியாயங்களை தடுத்து நிறுத்த
வேண்டும்*” என்று வலியுறுத்துகிறா
ர்கள் இந்த இரு மருத்துவர்களும்.
இந்திய மருத்துவ துறையின் இன்றைய
வணிக மதிப்பு 100 பில்லியன்
அமெரிக்க டாலர்கள். *இது
2020 ம் ஆண்டு 280 பில்லியன்
அமெரிக்க டாலர்களாக
இருக்கப்போகிறது* என்கிற
விபரங்களே, _இதில் உள்ள
அரசியலையும், அக்கிரமங்களையும்
நமக்கு உணர்த்துகிறது_.
*இவர்களின் குற்றச்சாட்டுகளின்
மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்போகிறது இந்திய
சுகாதாரத் துறை*...?
நன்றி :- Dissenting Diagnosis.

Monday, July 25, 2016

பலருக்கும் தெரியாத ஆணுக்கும், பெண்ணுக்குமான சில உடல் வித்தியாசங்கள்!

ணுக்கும் பெண்ணுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால், பலரும் மார்பகம் மற்றும் பிறப்புறுப்புக்களைத் தான் கூறுவார்கள். அதைத் தவிர வேறு என்ன வேறுபாடு என்று கேட்டால், உடை, தலைமுடி, நடை என்று கூறுவார்கள். இவை அனைத்தும் நம் கண்களுக்கு புலப்படும் வெளிப்படையான வேறுபாடுகள்.

ஆனால் அதையும் தாண்டி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உடல் வித்தியாசங்களை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் போல்ட்ஸ்கை நீங்கள் தெரிந்து கொள்வதற்காக பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இடுப்புப் பகுதி
ஆண்களை விட பெண்களின் இடுப்புப்பகுதி பெரியது.மேலும் இது குழந்தைப் பிறப்பிற்காக இயற்கை பெண்களுக்கு ஏற்படுத்திய வடிவம். கொழுப்பு சேரும் இடம் பொதுவாக ஆண்களுக்கு கொழுப்புக்களானது வயிற்றில் சேரும். அதனால் தான் பெண்களை விட ஆண்கள் தொப்பையால் கஷ்டப்படுகின்றனர். அப்படியெனில் பெண்களுக்கு கொழுப்புக்கள் எங்கு சேரும் என்று கேட்கலாம். பெண்களுக்கு கொழுப்புக்களானது தொடை மற்றும் இடுப்பின் பின்பகுதியில் சேரும். மேலும் ஆண்களை விட பெண்களின் தொடை பெரியதாக இருப்பதற்கு காரணமும் இதுவே.
இதய துடிப்பு
இதய துடிப்பு என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் இதய துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். அதில் ஆண்களுக்கு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறதெனில், பெண்களுக்கு 80 முறை துடிக்கும்.
செல்கள் வேறுபடும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள செல்களும் வேறுபடும். இதற்கு காரணம் அவர்களின் குரோமோசோம்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இரத்த சிவப்பணுக்கள்
ஆண்களை விட பெண்களின் ரத்தத்தில் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனால் பெண்களின் உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருக்கும். இதன் காரணமாக பெண்கள் அடிக்கடி இரத்த சோகைக்கு உள்ளாகின்றன.
நுரையீரல்
ஆண்களை விட பெண்களின் நுரையீரல் சிறிதாக இருக்கும். அதில் ஆண்களின் நுரையீரலானது பெண்களின் நுரையீரலை விட 30 சதவீதம் பெரியதாக இருக்கும். இதனால் தான் ஆண்களை விட பெண்கள் எதிலும் விரைவில் சோர்வடைகின்றனர்.
தலை தண்டுவடம் கால்கள்
அதேப் போல் பெண்களை விட ஆண்களின் தலை, தண்டுவடம் மற்றும் கால்கள் போன்றவை பெரியதாக இருக்கும்.
நோய் என்று வரும் போது பெண்களை விட ஆண்கள் தான் அதிக மரணத்தை சந்திக்கின்றனர். அதிலும் மார்பக புற்றுநோய், பிறப்புறுப்பு நோய், கருப்பைக் கட்டிகள் போன்றவற்றைத் தவிர, மற்ற அனைத்து நோய்களாலும் ஆண்கள் மரணத்தை தழுவுகின்றனர்.
வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால்
வயிறு, சிறுநீரகம், கல்லீரல், குடல்வால் ஆகிய மூன்றும் பெண்களை விட ஆண்களுக்கு சிறிதாக இருக்கும்.
பற்கள்
பற்கள் என்று வரும் போது, ஆண்களை விட பெண்களின் பற்கள் வலிமை குறைவாக இருக்கும். சொல்லப்போனால் பொக்கை வாய் தாத்தாக்களை விட, பொக்கை வாய் பாட்டிகள் தான் உலகில் அதிகம்.
ஆக்ஸிஜன் அளவு
ஆண்களை விட பெண்களின் உடலில் ஆக்ஸிஜன் சற்று குறைவாக இருக்கும். இதற்கு காரணமும் இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது தான். சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்கிறது. அது குறைவாக இருக்கும் போது, பெண்களால் கூட்டம் நிறைந்த இடங்களில் நீண்ட நேரம் இருக்க முடியாமல் மயங்கி விழுகின்றனர்.
(வாட்ஸ் அப் தகவல்)

Sunday, June 26, 2016

முந்தி வந்த விந்துத்துளி....

*முன் செய்த வல்வினையால்.....*

_முந்தி வந்த விந்துத்துளி......_

அடைத்து வைத்த தோல் பைக்குள்
அடங்கிப்போய் சூல் கொள்ள...

வெள்ளை இரத்தம் சிவப்பாகி
நாடி, நரம்பு சதை பிடித்து...

அவனவளாய் இனம் பிரித்து
பிண்டம் என உருவெடுத்து.....

ஐயிரண்டு மாதத்தில் அன்னையவள் உந்தி தள்ள.....

நச்சுப்பையுடன் ஒட்டி பிறந்து
அண்டமதில் அலைந்து திரிந்து...

அங்கும், இங்கும் கூத்தாடி
பொய்யை மெய்யாய் தினம் நாடி..

அகமதன் அர்த்தநிலை????

ஐய்யோ..............

ஒன்றும் புரியவில்லை.......!!!

சொந்த பந்த காட்டுக்குள்ளே
இன்பத் துன்பக் கூடு கட்டி......

இன்னொரு சதை பிண்டம் தேடி...

சேர்த்து வைத்த விந்தை கொட்டி ....

மீண்டும், மீண்டும்
பிறப்பெடுத்து பிறப்பெடுத்து......

பிறவியதன் கட்டறுக்க
இருக்கும் வழி காணாது.....

அப்பப்பா போதுமப்பா
கண்டுகொள்வோம் முலமதை.......!!!

உயிர்கொடுத்து உருட்டியவன்
உலகமதை திரட்டியவன்......!!!

பிறப்பு எனும் வட்டத்துக்கு செக்குமாடாய் நம்மை சுழற்றியவன்.......!!!

அவனை இனம் காண தேடி
நித்தம் தேடி ஓடி, ஓடி.......!!!

வெளியெங்கும் காணாது
வேறு வழி தெரியாது.......!!!

சுழல்கின்ற பூமியின் மேல்
சுற்றி, சுற்றி பிறந்து வந்து.....!!!

சூட்சுமத்தை உணராது
சுடுகாட்டில் பிணமாகி......!!!

மற்றுமொரு தோல்பைக்குள்
மாற்றமில்லா விந்தாகி......!!!

உள்ளுக்குள் உள் நுழைந்து....
உற்றவனை கண்டுகொண்டு.....!!!

அவனே நானாகி.....
நானே அனைத்துமாகி......!!!!

ஆதி அந்தம் தெளிந்து
உண்மையதை உணர்ந்து......!!!

அம்மாம்மா இறுதியில்
அண்டசராசரம் எங்கும்.....!!!

எல்லையற்று கலந்திருக்கும் 
அது .......

என ஆனதப்பா முடிவினிலே
இது ............!!!

ஓம் நமசிவாய...........

Saturday, November 28, 2015

சோலார் பேனல் விலை குறைந்து விட்டது

சோலார் மின் உற்பத்தி சாதனங்கள் குறித்த ஆலோசனை மற்றும் தகவல்களுக்கு:

தற்போது அதிரடி சலுகையாக ஒரு கிலோ வாட் உற்பத்தி செய்ய கூடிய தரமான  சோலார் பேனல் 67000 ரூபாய் மட்டுமே! இதன் மூலம் ஒரு வீட்டுக்கு தேவையான ஏ‌சி, மிக்சி, கிரைண்டர், டி‌வி,ஃபிரிஜ்,வாஷிங் மெஷின்,ஃபேன்,அயர்ன் பாக்ஸ், 1 HP மோட்டார் இன்னும் இது போன்ற அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் இயங்கும் வகையில், நம் தமிழக அரசு 50000 ரூபாய் மானியம் உடனுக்குடன் கொடுத்து உதவுகின்றது என்பதை எமது வாசகர்களுக்கு இந்த இணையதளத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்!

1KW சோலார் பேனல் - 1,17,000 ரூபாய்
மானியம்                     -  50,000   ரூபாய்
செலுத்தும் தொகை     -  67,000   ரூபாய் மட்டுமே

நீங்கள் ஒரு மாதம் 500 ரூபாய் வீதம் மின்சார கட்டணம் செலுத்துபவராக இருந்தால், பத்து வருடத்தில் நீங்கள் கட்டிய தொகை மின்சார கட்டணத்தில்  மீதம் ஆகும்! 

- 9597771037 (DINESH)

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான் .....

இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும், ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோ, வெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.




நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட், இரண்டு கிலோ வாட், ஐந்து கிலோ வாட், பத்து கிலோ வாட் சோலார் பவர் பேக்' திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்' பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மூன்று மணி நேரம் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால், ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த ஒரு கிலோ வாட்க்கு Rs - 67500/-* ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு ஐந்து யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த 80-100 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை ஒப்பிடுகையில், சோலார் அமைப்பை ஏற்படுத்திய ஐந்து ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும்.

முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும். ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி துடைத்தால், சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும் தேவையில்லை.
தமிழ்நாட்டை சூரிய ஒளி மின்சார மாநிலம் ஆக்குவோம்! மின் மிகை மாநிலம் ஆக மாற்றுவோம்!

 CONTACT : 959 777 1037
GREEN HITECH SOLUTIONS

 {SOLAR POWER SUPER POWER]
All Leading Company : UPS , Inverter , PCU & SOLAR Panels , SOLAR Hybrid Sinewave(DSP Based) Inverters /UPS/PCU , Petrol Pump Inverter , Water Pumping Systems , SOLAR Charging Controllers , Battery Charger , SOLAR LED Street Light, SOLAR Water Heater, ALL SOLAR Products , ALL LED Lights, All Batteries & ALL GPS VEHICLE TRACKING SYSTEM

Wednesday, August 19, 2015

எதையோ இழக்கிறோம் என்று தோன்றுகிறது.... ஆனால், எதுவென்றுதான் தெரியவில்லை

எதையோ இழக்கிறோம் என்று தோன்றுகிறது.... ஆனால், எதுவென்றுதான் தெரியவில்லை.

நான் கிராமத்தில் பிறந்தவனுமல்ல, வளர்ந்தவனுமல்ல. ஆனால், தெரியாதவனல்ல. கிராமத்து வாசனைக்காக மிக ஏங்கியவன், இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.

முன்பெல்லாம், கிராமத்தில் ஒருவர் வீட்டில் ஏதேனும் நற்காரியங்கள் எனில் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டிலிருந்து பாத்திரங்கள் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஆக வேண்டிய காரியங்களை ஆளுக்கொருவராகப் பிரித்துக்கொண்டு செயல்பட்டனர். தம் வீட்டு நிகழ்ச்சியாகவேக் கருதி முழு ஈடுபாட்டுடன் சிறப்பாக நடத்தினர்.

தற்போதோ, ஒப்பந்தகாரரிடம் (Contractor) விட்டுவிட்டு தாம் வெறும் அலங்காரபொம்மையாக நிற்கின்றனர். அட, வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தகாரரிடம்தான் ஒப்படைத்துவிட்டார்களே, வருகின்ற விருந்தினரையாவது வரவேற்று உபசரிக்கின்றனரா என்றால் அதுவும் இல்லை. தம் பகட்டையும், ஆடம்பரத்தையும் முன்னிருத்திக் காட்டுவதில்தான் குறியாக இருக்கின்றனர். மனிதருக்கு மதிப்பில்லை ஆனால் அவரிடமிருக்கும் பொருள் அளவு கருதி பல்லிளிப்பது சர்வ சாதாரணம்.

முன்பெல்லாம், பண்டிகைகள் வருகிறது என்றால் 20-30 நாட்களுக்கு முன்பே அதனை வரவேற்கத் தயாராகிவிடுவோம். புதிய உடைகள் எடுத்துத் தைக்கக் கொடுப்பது (ஆயத்த ஆடைகள் அப்பொழுது அவ்வளவாகப் புழக்கம் இல்லை), பலகாரங்கள் சுட தானியங்களைக் காயவைத்து அரைப்பது, 3 நாட்களுக்கு முன்பே அதனைத் தயாரிக்க ஆரம்பிப்பது, தீபாவளியென்றால் வெடிகள் வாங்கி வெடிப்பது, பொங்கல் என்றால் பல நாட்களாகக் கரும்பு கடித்துச் சுவைப்பது என்று எத்தனை ஆரவாரமாக இருந்தோம்.

தற்போது, இன்று அந்த ஆர்வமெல்லாம் முற்றிலும் வடிந்துவிட்டது போல் தோன்றுகிறதே... ஏன்? விலைவாசி உயர்வா, வருமானக்குறைவா, பொறுப்புக்களின் அழுத்தமா, வயது முதிர்ந்தவுடன் பார்வைகள் மாறிவிட்டனவா, அர்த்தமில்லாச் சடங்குகள் என்ற உதாசீனமா? எது?
எங்கள் ஊர் உணவிற்கும் பெயர் எடுத்த ஊர். (காரைக்குடி - செட்டிநாடு) பெயரைச்சொன்னாலே வாயில் நீர் சுரக்கும் அளவிற்குப் பற்பல பதார்த்தங்கள். அவைகளைத் தயாரிக்கும் அந்தப் பக்குவங்கள் தாய்வழி மரபில் பல தலைமுறைகள் தாண்டி வந்தவைகள். இது போன்று எல்லா இடத்திற்கும் தனித்துவ உணவு வகைகளும் சிறப்பும் உண்டு.

இன்று நம் குடும்பங்களில் சமையற்பக்குவங்கள் எந்தளவிற்கு உள்ளன ? (சில விதிவிலக்குகள் இருக்கலாம்) எது வேண்டுமென்றாலும் உணவகங்களில்தான் கிடைக்குமே என்ற எண்ணம், அதுவும் தற்போது துரித உணவகங்கள் வேறு. ஆரோக்கியமான தயாரிப்பாக வீட்டில் தாய் அல்லது மனைவியின் கைப்பக்குவத்தோடு அன்பும் சேர்ந்து சுவையோடு கிடைக்கும் அந்த உணவு எங்கே இன்று ? வியாபாரிகளின் கைகளுக்கு எப்படி, எப்பொழுது போனது ?

எத்தனை உறவுகளோடு கூடி வாழ்ந்தோம் அன்று ? முன்தோன்றிய மூத்தகுடி என்பதால் நம்மில்தான் எத்தனை உறவு முறைகள், அத்தனைக்கும் பெயர்களிட்டு எத்தனை நெருக்கமாக வாழ்ந்துவந்தோம். தவறுசெய்யும்பொழுதோ, நெறிமுறைகள் வழுவும்போதோ இடித்துரைக்க அனுபவமுள்ள மூத்தோர் நம்மிடை இருந்தனர். கடின காரியமாற்ற இளைஞர் நம்மோடிருந்தனர். நம் கவலை மறக்க மழலையர் எத்தனை இருந்தனர்....?
இன்று, நீயோர் தீவு, நானோர் தீவு என்று ஒவ்வொருவரும் ஒரு திசையில், ஒரு சிறையில், தனக்குத்தானே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு, தான், தனது என்று ஒருசுயநலமிக்க குறுகிய மனப்பான்மையில் நாம். முதியோர் இல்லங்களில் பெற்றோர், விடுதிகளில் குழந்தைகள், வெளிஉலகில் பணத்தைத் தேடி நாம். முதியோர்களை மதிக்காமலும், இளையோர்களை அடக்கியாளவும் விழையும் நாம்.

 உறவுகள் எங்கே, உறவு முறைகளும் எங்கே ?

சிறுவயதில் நான் விளையாடிய விளையாட்டுக்கள், மரமேறுதல், நீர் பந்து, எறி பந்து, ஏழுகல், ஓடிப்பிடித்தல், கண்ணாம்பூச்சி, கபடி என்று பல உடற்பயிற்சி சார்ந்தவைகள், குழுசார்ந்தவைகள். எங்குவேண்டுமானாலும் விளையாடலாம், அவ்வளவு இடங்கள்.

இன்று அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் அவ்விளையாட்டுக்கள் எத்துணை தூரம் சாத்தியம்? கணிப்பொறியிலும், விளையாட்டுத் தளத்திலும் (PlayStation) தன்னந்தனியாக விளையாடும் அவலத்தினை என்னவென்பது?
அன்று, பண்பை வளர்க்க நன்னெறிக் கல்வி, உலகை அறிய உலகக்கல்வி, வாழ்க்கைக்கல்வி, விளையாட்டுக்கல்வி என்று மாணாக்கர்களை மேம்படுத்துவதே குறிக்கோள்.

இன்று, பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி. படிப்பவர்க்கும் சரி கல்விக்கூடம் நடத்துபவர்க்கும் சரி பாதை பணத்தை நோக்கியே. பணம் வெறும் அடையாளமாகத்தான் உருவாக்கப்பட்டது, ஆனால் அதுவே இன்று உண்மை என்று கருதும் நிலை. உற்பத்தி இல்லாமல் எல்லோரும் வெறும் பணத்தை மட்டுமே கொண்டிருந்தால் என்னாவது?

அன்று எல்லா செயல்களையும் ஆற அமர திறம்பட செய்ய நேரம் இருந்தது. இன்றோ நேரமின்மையால் தவிக்கிறோம். ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் காலப்பொழுதில் ஏதும் மாற்றமில்லை. நம் பொழுதுகளைக் கணிக்க நாம் உருவாக்கிய நேரத்தின் பின் இன்று நாமே ஓடிக்கொண்டிருக்கிறோம்.

அறிவியல் வளர்ச்சியிலும், நாகரீக வளர்ச்ச்சியிலும் முன்னேறிவிட்டதாகக் கூறினாலும்.....,

எதையோ இழக்கிறோம் என்று தோன்றுகிறது.... ஆனால், எதுவென்றுதான் தெரியவில்லை. உங்களுக்காவது தெரிகிறதா ?

Tuesday, August 11, 2015

திரு லக்ஷ்மன் வழங்கும் மாடிதோட்டப் பயிற்சி கருத்தரங்கம்

இன்றைய கால கட்டங்களில் நாம் உண்ணும் அனைத்து விதமான உணவுகளிலும், ஏதோ ஒரு வகையில் பூச்சிக்கொல்லி மருந்தானது கலந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

நம் உடலில் உள்ள பாகங்கள் அனைத்திலும் அந்த பூச்சி கொல்லி மருந்தானது தனது வேலையை தவறாமல் தினசரி நடத்திக்கொண்டு வருகின்றது. இதன் பாதிப்பு நமக்கில்லை என்று நிமதியாக இருந்துவிடமுடியாது. ஏனெனில் அந்த ரசாயனம் கலந்த காய்கறி உணவானது நமது உடலில் உள்ள DNA வை ஒருமுறை பாதித்தால் போதும் நம் மூலம் பிறக்கும் அடுத்த தலைமுறைகளிலும் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

இதில் இருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளது. நாம் காய்கறிகளை சந்தையில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நமது வீட்டிலேயே உருவாக்கி கொள்ளலாம். வாரத்தில் எழு நாட்கள். நாளொன்றுக்கு ஒரு காய்கறி என்ற அடிப்படையில் நாமே நமது தேவைக்கு செடிகளை நமது வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் கிடைக்கும் காய்கறிகளிலிருந்து நல்ல ஊட்டச்சத்துகளும் நல்ல சுவையும் கிடைக்கும். ஒருமுறை நீங்கள் அதை உணர்ந்து பார்த்துவிட்டால் அது தான் உங்கள் சந்ததியினரை காப்பாற்றும் அரிய பொக்கிஷம் என்பதை உணர்ந்துவிடுவீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

வீட்டில் உள்ள குடும்ப தலைவிகள் தான் இது போன்றதொரு விழிப்புணர்வை பெற்று தன் குடும்பத்திற்க்கான ஊட்டச்சத்து பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும்.

 மேலும் பழம் தரும் மரக்கன்றுகளை வாங்கி நமது மாடியில் வளர்க்கவேண்டும். வேளைக்கு ஒரு பழம் என்று சாப்பிட்டு நமது உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்.


Thursday, February 19, 2015

TOP 25 SOFTWARE FOR WINDOWS

வின்டோஸ் இயங்குதளத்திற்கான 25 அடிப்படை மென்பொருள்கள்
-----------------------------------
1.Good Antivirus:-
3. Registry Cleaners/Tune up Utilities
http://www.tune-up.com/download/
11.Adobe Photoshop/GIMP:
http://www.gimp.org/downloads/
14.Malware Bytes:-
http://filehippo.com/

Monday, January 26, 2015

RARE MEDICINAL PLANTS


"Lakshmi Narasimha Singhi " 



 

Karu Nochhi


Karinocchi is dark black in colour .The herbal leaves are powerfull enough to ward off negative issues.It is extensively used in Asian contries.
 
This is called karu nocchi mooligai this will do wonders. this mooligai is not available even in KOLLI MALAI BUT IT IS AVAILABLE IN PLENTY IN KERALA AT CHALAKUDI. it does wonders some politicians and high officials are said to be holding this divine mooligai . this molligai is available with private agriculturis . this is being soldfor a high cost. the test for the mooligai is to put some leves in the milk, misx it in the hot rise. theywillturnblack. even water also will turn black
Black Vitex Negundo (Male Leaves)

Black Vitex Negundo
Black Vitex Negundo is a Medicinal Plants with Antimicrobial Activity. The latin name in tamil Karunochi leaves , also called as Nirgundi. The details of this plant are as follows:Scientific Name Vitex Negundo, Vitex agnus-castus is an herbal supplement which has various effects upon the reproductive systems of both men and women. Vitex has been used throughout history to actually reduce the sex, Vitex negundo nochi is mixed with milk and orallyadministered to women for improving fertility. The bark and seeds are effective. Local medicated steam fomentation is given of decoctions of Erand mool root of Ricinus communis, Rasna Pluchea lanceolata, Dashmool Ten Herbal Roots and Nirgundi Vitex negundo  Leaves-anti-parasitical, alterative, aromatic, vermifuge, pain reliever.Root-tonic, febrifuge, expectorant, diuretic.Fruit-nervine, cephalic, emmanagogue.Dried fruit-vermifugeVitex is useful for the treatment of:Amenorrhea, Catarrh, Cholera, Colic, Diarrhea,Dysmenorrhea, Dyspepsia, Ear disordersEndometriosis, Fever, Fibrocystic Breast 



This is the Sarpagandha plant. It is mostly available in Amejan forests and in kerala state in india. Actually its root will be held in the hand by the the snake charmers at the time of catching sankes. It is used for heart ailments by Allopathy doctors



This root is called Sarpgandha. It is said that it is used in allopathy treatment for removing or relieving from heart pain. That allopathy name is sabitrate .It is a medicinal plant and people believe that this root will save the people who cary it in forest from snake bite.




 People call it argimony. psychological therapy plant
 





Sunday, January 25, 2015

The World Unknow Secrets PART 3 - 'விதிவிலக்குகள் எப்போதும் விதிகளாகிவிடாது’


பலவித மரங்கள் ஒன்றாகக் கூட்டமாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் செழித்துப் பூத்துக் குலுங்கி வளர்ந்திருப்பதைச் 'சோலை' என்பார்கள். 'சோலை' என்று சொன்னதும் பசுமையாக, நிழல்தரும் ஏதோவொரு இடம் பட்டென உங்கள் ஞாபகத்துக்கு வந்தே தீரும். நம்மூர்களில் மாஞ்சோலைகள் நிறைந்திருந்ததை இப்போது என்னால் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறது.

எங்களூரில் மாஞ்சோலைகள் நிறைந்திருப்பது போல, பிறேசிலில் 'கஜூ’ (Cashew) மரங்கள் சோலைகளாக வளர்ந்திருக்கும். கஜூ விதைகளை விரும்பி உண்ணாதவர்களே உலகில் இல்லையெனலாம். உலகில் எந்த மரத்தின் கனிகளை எடுத்துக் கொண்டாலும், அவற்றின் விதைகள் கனிகளுக்குள்ளேயே ஒளிந்து காணப்படும். ஆனால் விதிவிலக்காக, கஜூமரத்தின் கனியின் விதை மட்டும் அதற்கு வெளியே கனியுடன் ஒட்டியபடி காணப்படும்.

இனி நாம் விசயத்துக்கு வருவோமா…...?

மேடைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் (Shows) பல கலைஞர்கள் பங்குபற்றுவார்கள். பலர் பங்குபற்றுவதுதான் ஒரு நிகழ்ச்சிக்குச் சிறப்பும்கூட. ஆனால் விதிவிலக்காகச் சில நிகழ்ச்சிகள் ஒரேயொரு தனிமனிதனால் மட்டும் நடத்தப்படும். அதை 'One man show' என்பார்கள். பல மரங்கள் ஒரு பெருநிலப்பரப்பில் சேர்ந்து வளர்ந்திருப்பதைச் சோலை என்பார்கள் என்று மேலே சொல்லியிருந்தேனல்லவா? ஆனால் விதிவிலக்காக 'One man சோலை' ஒன்றும் உலகத்தில் இருக்கிறது. அந்த ஆச்சரியத் தோப்புப் பற்றித்தான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

ஆமாம், ஒரேயொரு மரம், பலமரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருப்பது போலச் செறிவாகவும், செழிப்பாகவும், ஒரு உதை பந்தாட்ட மைதானத்தையும் விட அதிகமான நிலப்பரப்பில் வளர்ந்திருக்கிறது. தூரத்திலிதிலிருந்தோ, மேலிருந்தோ பார்க்கும் போது நூற்றுக் கணக்கான பெருமரங்கள் அடர்ந்து வளர்ந்திருப்பதைப் போலக் காட்சி தரும். அது ஒரேயொரு மரச் சோலையென்பதை யாரும் நம்ப மாட்டார்கள். அல்லது ஒரேயொரு மரத்தோப்பு.

பிறேசில் (Brazil) நாட்டில் பிராங்கி (Pirangi) என்னுமிடத்தில் உள்ள கஜூ மரமொன்றுதான் இப்படித் தனிமரச் சோலையாக வளர்ந்திருக்கிறது. வழமையாகப் பூமிக்கு நிலைக்குத்தாகத்தான் கஜூ மரங்கள் வளரும். இந்த மரமும் அப்படித்தான் பெருத்து வளர்ந்தது. பின்னர் என்ன நினைத்ததோ தெரியவில்லை, பூமிக்குக் கிடையான நிலையில் தன் கிளைகளைப் பரப்பி வரளவிடச் செய்ய ஆரம்பித்துவிட்டது. 188ம் ஆண்டு லூயிஸ் இனாசியோ என்னும் மனிதர் நட்டுவைத்த இந்தக் கஜூ மரம், வளர ஆரம்பித்து, இன்றும் இப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இன்று அது 8000 சதுர மீட்டர் பரப்பளவில் வளர்ந்திருக்கிறது. அதாவது 70க்கும் மேற்பட்ட சராசரி கஜூ மரங்கள் வளர்ந்திருக்க வேண்டிய இடத்தில் ஒரேயொரு தனிமரம்.

இந்த ஒற்றை மரச் சோலையைச் சுற்றிப் பலர் குடியிருக்கின்றனர். சொல்லப் போனால், அதுவொரு சுற்றுலாப் பயணிகளுக்கான இடமும் ஆகிவிட்டது. பெரும்பான்மையான மக்கள் தினமும் அந்த மரத்தைப் பார்வையிட வருகிறார்கள். அதனால் சுற்றுலாவாசிகளை மையமாக வைத்து வியாபாரம் செய்யும் மக்கள், அந்த மரம் இருக்குமிடத்தைச் சுற்றியே வாழ்கின்றனர். அவர்களையெல்லாம் வீட்டைவிட்டு எழும்பிச் செல்லும்படி அரசு வலியுறுத்துகிறது. காரணம், அந்த மரம் இப்போதும் அகலமாகக் கிளைபரப்பி வளர்ந்து கொண்டேயிருக்கிறதாம். அதன் வளர்ச்சியைத் தடுக்காமல், மேலும் வளர அனுமதிப்பதற்காகவே இதை வலியுறுத்துகின்றது அரசு. மக்கள் குடியிருப்பதால், தற்சமயம் கிளைகளை வெட்டிவிட்டுக்கொண்டே இருக்கின்றனராம்.

ஒரு தனிமரம் இந்த அளவுக்குப் பெரியதாக வளர்ந்திருப்பது உலக அதிசயத்தில் ஒன்றுதான். அத்துடன், ஒற்றுமையாய் வாழ்வதுதான் பலம் என்பதைக் குறிப்பதற்காகத் தமிழில் இருக்கும் மிக அருமையான மூத்தோர் வாக்கு 'தனிமரம் தோப்பாகாது' என்பதாகும். ஆனால், அந்த வாக்கை இந்தத் தனிமரத் தோப்புப் பொய்யாக்கிவிட்டது.

'விதிவிலக்குகள் எப்போதும் விதிகளாகிவிடாது’ என்ற வாக்கும் நம்மிடையே உண்டு.

-ராஜ்சிவா-