Showing posts with label நான் கற்றது தமிழ். Show all posts
Showing posts with label நான் கற்றது தமிழ். Show all posts

Wednesday, January 6, 2016

ஔவையார். (Tamil Poet)



அறம் செய விரும்பு / 1. 1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம் / 2. கண்ட்ரோல் கோபம்.
இயல்வது கரவேல் / 3. 3. அறக்கட்டளை மறக்க வேண்டாம்.
ஈவது விலக்கேல் / 4. 4. நேயத்தின் தடுக்க வேண்டாம்.
உடையது விளம்பேல் / 5. 5. நம்பிக்கை துரோகம்.
ஊக்கமது கைவிடேல் / 6. 6. உள்நோக்கம் விடாதிருங்கள்.
7. எண் எழுத்து இகழேல் / 7. கற்றல் தூற்றும் வேண்டாம்.
ஏற்பது இகழ்ச்சி / 8. 8. தடையற்ற வேண்டாம்.
9. ஐயம் இட்டு உண் / 9. ஊட்டம் பின்னர் பசி மற்றும் விருந்து.
ஒப்புரவு ஒழுகு / 10. 10. பெரிய பின்பற்றுகின்றன.
ஓதுவது ஒழியேல் / 11. 11. நல்ல உணர்கிறீர்களா கற்று.
12. ஒளவியம் பேசேல் / 12. எந்த பொறாமை பேசுங்கள்.
அகம் சுருக்கேல் / 13. 13. சுருக்கேல்.
கண்டொன்று சொல்லேல் / 14. 14. பிளிப்-ப்ளாப்.
ஙப் போல் வளை / 15. பெண்ட் 15. தோழமை.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. ஞயம்பட.
18. இடம்பட வீடு எடேல் / 18. இடம்பட வீடு.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. உங்கள் பெற்றோர்கள் பாதுகாக்க.
நன்றி மறவேல் / 21. 21. நன்றியை மறக்க வேண்டாம்.
22. பருவத்தே பயிர் செய் / 22. பருவத்தே பயிர்.
23. மண் பறித்து உண்ணேல் / 23. வேண்டாம் நில அபகரிப்பு.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. விலகிக் இழிவுபடுத்தும் செயல்கள்.
அரவம் ஆட்டேல் / 25. 25. பாம்புகள் விளையாட வேண்டாம்.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. பருத்தி படுக்கை வசதியை சிறந்த.
27. வஞ்சகம் பேசேல் / 27. சர்க்கரை-கோட் வார்த்தைகள் இல்லை.
28. அழகு அலாதன செய்யேல் / 28. செய்யேல் ஒழுங்கற்ற.
29. இளமையில் கல் / 29. போது இளம் அறிக.
30. அரனை மறவேல் / 30. செரிஷ் தொண்டு.
தூக்க ஓவர் 31. அனந்தல் ஆடேல் / 31. அருவருப்பான.
32. கடிவது மற / 32. கான்ஸ்டன்ட் கோபம் அரிக்கும்.
33. காப்பது விரதம் / 33. காப்பது விரதம் வாழ்கிறார்.
34. கிழமைப்பட வாழ் / 34 பிராண்ட் செல்வம் நன்மை.
துன்மார்க்கரின் 35. கீழ்மை அகற்று / 35. தூரம்.
36. குணமது கைவிடேல் / 36. கொள்ளுங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று அனைத்து.
கூடிப் பிரியேல் / 37. 37. நண்பர்கள் விடாதிருங்கள்.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. கற்று இருந்து கற்றுக்கொள்ள.
கைவினை கரவேல் / 40. 40. அறிவு மறைக்க வேண்டாம்.
41. விரும்பேல் / 41. கொள்ளை வஞ்சி.
42. கோதாட்டு ஒழி / 42 பான் அனைத்து சட்டவிரோத விளையாட்டுகள்.
கெளவை அகற்று / 43. 43. துஷ்ட வேண்டாம்.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
சான்றோர் 45. சான்றோர் இனத்து இரு / 45. இணை.
சித்திரம் பேசேல் / 46. 46. நிறுத்து முரண்பாடான இருப்பது.
47. சீர்மை மறவேல் / 47 சீர்மை மறவேல்.
சுளிக்கச் சொல்லேல் / 48. 48. சுளிக்கச்.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
கச்சிதமாகவும் 50. செய்வன திருந்தச் செய் / 50. செயல்.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. நல்ல நண்பர்கள் நாடுகின்றனர்.
52. சையெனத் திரியேல் / 52. தவிர்க்க அவமானப்படுவதை.
53. சொற் சோர்வு படேல் / 53. சொற் சோர்வு படேல் வேண்டாம்.
சோம்பித் திரியேல் / 54. 54. பட்டார்கள்.ஏ சோம்பேறி, சீக்கிரம் வேண்டாம்.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
தானமது விரும்பு / 56 56. துரதிருஷ்டவசமான அன்பாக இருங்கள்.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
தெய்வம் இகழேல் / 61 61. வினை செய்.
தேசத்தோடு ஒட்டி வாழ் 62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62.
63. தையல் சொல் கேளேல் / 63. வடிவமைப்பும் கேட்க வேண்டாம்.
64. மறவேல் / 64. தொன்மை உங்கள் கடந்த பெருமை மறக்க வேண்டாம்.
65. தொடரேல் / 65 தோற்பன தோல்வியை என்றால் நிச்சயமாக போட்டி போட வேண்டாம்.
நன்மை செய்ய 66. நன்மை கடைப்பிடி / 66. கடைபிடிக்கின்றன.
67. நாடு ஒப்பன செய் / 67 தேசிய செய்யுங்கள் ஒப்பன.
நிலையில் பிரியேல் / 68. 68. நல்ல நிலையில் இருந்து புறப்படும்.
நீர் விளையாடேல் / 69 69. ஒரு ¡¢ யேல் வேண்டாம்.
70. நுண்மை நுகரேல் / 70 சிற்றுண்டி மீது செய்யுங்கள்.
பொருட்கள் 71. நூல் பல கல் / 71. படிக்க பல்வேறு.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. உங்கள் சொந்த பிரதான வளர.
எப்போதும் 73. நேர்பட ஒழுகு / 73. காட்சிப்பொருள் நல்ல நடத்தை.
நைவினை நணுகேல் / 74. 74. நைவினை.
நொய்ய உரையேல் / 75. 75. sleaze அறிவது.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. தவிர்க்க ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை.
77. பழிப்பன பகரேல் / 77. எந்த அநாகரீக பேசுங்கள்.
விட்டு தீய இருந்து 78. பாம்பொடு பழகேல் / 78. பெற்றுக்கொள்ளுங்கள்.
79. பிழைபடச் சொல்லேல் / 79 பிழைபடச் காத்திரு.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. உங்கள் புரவலர் பாதுகாக்க.
பூமி திருத்தி உண் / 82. 82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. பொ உதவி தேடுங்கள்.
84. பேதைமை அகற்று / 84. ஒழிக்க அறியாமை.
பையலோடு இணங்கேல் / 85 85. முட்டாள் இணங்க வேண்டாம்.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86 பொருள்தனைப் அதிகரிக்க.
87. போர்த் தொழில் புரியேல் / 87 போர் ஊக்குவிக்க வேண்டாம்.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89 உங்கள் எதிரி இடமளிக்க வேண்டாம்.
மிகைபடச் சொல்லேல் / 90. 90. மீது நாடகப்படுத்த வேண்டாம்.
மீதூண் விரும்பேல் / 91. 91. ஒரு பெருந்தீனி வேண்டாம்.
முனைமுகத்து நில்லேல் / 92. 92. ஒரு நியாயமற்ற போராட்டம் சேர வேண்டாம்.
மூர்க்கரோடு இணங்கேல் / 93 93. பிடிவாதமாக உடன்படவில்லை.
மெல்லி நல்லாள் 94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94 ஸ்டிக்.
95. சொல் கேள் / 95. மேன்மக்கள் சொல் மேன்மக்கள் கேளுங்கள்.
பொறாமை இருந்து 96. மை விழியார் மனை அகல் / 96 தொடர்பறுக்கின்றது.
தெளிவுடன் 97. மொழிவது அற மொழி / 97 பேசுங்கள்.
98. மோகத்தை முனி / 98 வெறுக்கிறேன் அற.
99. வல்லமை பேசேல் / 99. வகர செய்யுங்கள்.
வாது முற்கூறேல் / 100 100. வதந்தி அல்லது வதந்தி பரவியது.
101. வித்தை விரும்பு / 101 அறிய லாங்.
ஒரு அமைதியான வாழ்க்கை 102. வீடு பெற நில் / 102. வேலை.
103. உத்தமனாய் இரு / 103. முன்னணி முன்மாதிரியான வாழ்க்கை.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
வெட்டெனப் பேசேல் / 105. 105. சொல்லிலும் செயலிலும் கசந்துகொள்ளாதிருங்கள்.
வேண்டி வினை செயேல் 106 / 106. வேண்டுமென்றே தீங்கு செய்ய.
107. வைகறைத் துயில் எழு / 107. ஆரம்ப எழுப்பி இருங்கள்.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. உங்கள் எதிரி சேர முடியாது.
ஓரம் சொல்லேல் / 109. 109. ஓரம்.

- ஔவையார். (தமிழ் கவிஞர்)

Saturday, June 20, 2015

தமிழ் உருவாக்குவோம்

முன்னெப்போதோ... ஓரிடத்தில் வடமொழி உச்சரிப்பினை தமிழில் கொண்டு வரமுடியாத போது தமிழை எப்படி செம்மொழி என்று சொல்லலாம் என்றொரு விவாதத்தின் போது பதிலளித்தது போலும்.... எதையோ தேடும்பொழுது கண்ணில் பட்டது.... இது... உங்கள் பார்வைக்கும்....
கீழ இருந்து பதிலளிக்கிறேன். பெயர்ச்சொற்களை ஒலிமாற்றினால் போதுமானது. மொழிமாற்றத் தேவையில்லை. அப்படியே உச்சரிக்க எழுத்துகள் இல்லாத போழ்து அதற்குச் சொல்லாக்கம் முயற்சிக்கலாம்.
CAR என்பதை கார் என்றே சொல்லலாம் என்று என் சில நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள். கார் என்றால் மேகம் என்றொரு பொருள் உள்ளதே என்றால்... இடம் கொண்டு பொருள் விளங்கிக்கொள்ளவேண்டும் என்றும் விளக்கம் தந்தார்கள். ஏற்றுக்கொள்ளும்படிதானே இருக்கின்றது...?
இப்பொழுது சொல்லுங்கள், ஹ,ஷ, ஜ போன்றவற்றை உச்சரிக்கும் வண்ணம் தமிழில் என்ன சொல் இருக்கின்றது என்று? அரிசிச் சோறு சாப்பிடும் நமக்கு, பீட்சாவும் பர்கரும் விருப்பமானது போல மொழியிலும் அப்படித் திணிக்க வேண்டும் என்கிறீர்களா?

புஷ்பம் என்பதைக் குறிக்க, மலர் என்ற வார்த்தைதான் இருக்கின்றதே...
அப்புறம் என்ன? மலரின் பல்வேறு நிலைகளைக் குறிக்க,

அரும்பும் போது - அரும்பு
அரும்பிப் பனியில் நனையும் போது - நனை
நனைந்து முத்தாகும் போது - முகை
வெடிக்கத் தயாராக இருக்கும் போது - மொக்குள்
அரும்பி, விரிந்து கொண்டே இருக்கும் போது - போது
மணம் வீசத் தொடங்கும் போது - முகிழ்
மலர்ந்த பின் - மலர்
இன்னும் நன்றாக மலர்ந்து, மகரந்தம் அலரும் (பரவும்) போது - அலர்
கூட்டமாக மலர்ந்தால் - பொதும்பர்
வீழும் போது - வீ
உதிர்ந்து கிடக்கும் பூக்கள் - பொம்மல்
பழுப்பாய் வாடிய பின் - செம்மலர்
என்று நிலைக்கொன்றாகப் பெயர்கள் இருக்கின்றனவே... பின் என்னதான் வேண்டும் தற்கால மாந்தர்க்கு...?

தமிழ் தன்னிறைவு பெற்ற மொழி. தன்னால் காலத்திற்கேற்ப புதுச் சொற்களை ஆக்கிக் கொள்ள முடியும். குறைமதி கொண்ட மனிதர்கள் நாம்தான்... தமிழை முழுதும் உணராது, அறியாது பிதற்றிக்கொண்டிருக்கின்றோம்.
13ம் நூற்றாண்டுகளில், தமிழும், சமசுகிருதமும் தனித்தனியே வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தன. தனித்தனியே இலக்கியங்கள் படைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற சான்றோர்களின் விருப்பத்தால், இரண்டு மொழிகளையும் கலந்து மணிப்பிரவாளம் என்றொரு நடையை உருவாக்கினர். ஆனால், அது மொழி இயல்புக்கு மாறானது என்பதால் அது தோல்வியைக் கண்டது என்று அறிஞர் முவ குறிப்பிடுவார்.

இன்றைக்கும் அப்படியொரு முயற்சியை முன்னெடுத்தால், அது மொழியைச் சிதைக்கத்தான் செய்யுமேயொழிய சிறக்க வைக்காது.
உங்களுக்கு என்ன வேண்டும்? ஏனைய மொழிகளின் சொற்களுக்கான நிகர்ச்சொல் வேண்டுமா? வாருங்கள் நம் தமிழைக்கொண்டே உருவாக்குவோம்.

அல்லது, அதே போன்றுதான் உச்சரிக்க வேண்டும் என்கிறீர்களா...? அதற்கு அந்த மொழியைக் கற்றுக்கொண்டு அப்படியே உச்சரிக்கவும் எழுதவும் செய்தால் போதுமே...?

சுனாமி அப்டீயே எடுத்துக்கலாம்தான்... ஆனா, அதுக்கு ஆழிப்பேரலைன்னு அழகுத் தமிழ்ல ஒரு பெயர் இருக்கே. கட்டுமரம் என்பதுதான் தமிழ்ச்சொல் ஆதிமுதற்சொல்.

Tuesday, June 2, 2015

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

பேராசிரியர் தெய்வசுந்தரம்
 
பேராசிரியர் தெய்வசுந்தரம்

தமிழைப் பிழை இல்லாமலும், மொழிக் கலப்பு இல்லாமலும் எழுதக்கூடிய சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம். இதைக் கொண்டு கோடிக்கணக் கான தமிழ் சொற்களின் பிழை களைத் திருத்த முடியும். 

இந்த மென்பொருளைச் சிறப் பாக வடிவமைத்த தெய்வசுந்த ரம், ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ பெற முதன்முறை யாகத் தமிழக அரசால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய், ஒரு பவுன் தங்கம், பாராட்டுப் பத்திரம் கொண்ட விருது விரைவில் அவருக்கு வழங்கப்படவுள்ளது. 

இந்த மென்பொருளை கம்ப் யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவேற்றிவிட்டால், தமிழ் வார்த் தைகளில் உள்ள தவறை எளி தாகக் கண்டுபிடித்து ஒரு வினாடி யிலேயே திருத்த முடியும். வார்த்தை யில் ஒரு எழுத்து விடுபட்டிருக் கலாம் அல்லது எழுத்து இடம் மாறியிருக்கலாம் அல்லது தேவை யில்லாமல் ஒரு எழுத்து சேர்க்கப் பட்டிருக்கலாம். இதுபோன்ற தவறுகளைக் கண்டுபிடித்து வினாடி யிலே திருத்துவதுதான் இந்த மென் பொருளின் சிறப்பு. உதாரணத்துக் குக் ‘கசலம்’ என்ற தவறான வார்த் தையைச் சொற்பிழை திருத்தியைக் கொண்டு திருத்தும்போது ‘கசம்’, ‘கலம்’, ‘கமலம்’, ‘கலசம்’ ஆகிய வார்த்தைகள் கம்ப்யூட்டர் திரை யில் தோன்றும். அதில் நமக்குத் தேவையான சரியான வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டும். 

சந்திப் பிழையையும் திருத்த முடியும். எடுத்துக்காட்டாகப் ‘படித்து பார்த்தான்’, ‘வந்துப் பார்த்தான்’ என்ற வார்த்தைகளில் உள்ள ஒற்றுப் பிழையைத் திருத்தி, ‘படித் துப் பார்த்தான்’, ‘வந்து பார்த்தான்’ என்று காண்பிக்கிறது. எண்களைக் கொடுத்தால் எழுத்துகளாக்குகிறது. தமிழ் எழுத்துகளுக்கு எண்களைத் தருகிறது. அதாவது 1,20,00,000 எனத் தட்டச்சு செய்தால் ஒரு கோடியே இருபது லட்சம் என்று தமிழ் எழுத்துகளாக வருகிறது. இந்த மென்பொருளில் உள்ள 56 ஆயிரம் தமிழ் அகராதி சொற்களைக் கொண்டு கோடிக்கணக்கான வார்த் தைகளைத் திருத்த முடியும். 

தமிழைத் தமிழாகவும், பிற மொழிக் கலப்பு இல்லாமலும், பிழை இல்லாமலும் எழுதப் பயன்படும் இந்த மென்பொருள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டு மல்லாமல் அரசு மற்றும் தனியார் அலுவலகப் பணியாளர்களுக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். ஆங் கிலம் மற்றும் தமிழ் அகராதியும் இருப்பது தனிச்சிறப்பு. 

இந்தச் சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக்கிய சென் னைப் பல்கலைக்கழக மொழியியல் துறை முன்னாள் தலைவர் ந.தெய்வசுந்தரம் கூறியதாவது: 

எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவின் 5 ஆண்டு உழைப்பே இந்த மென்பொருள். கணினி பயன்படுத்தத் தெரிந்த அனைவரும் இதன் முழுப்பலனைப் பெற முடியும். 15 வகையான ‘கீ போர்டு’ வசதி இருப்பதால் உலகம் முழுவதும் பயன்படுத்தலாம். 

இத்தகைய மென் பொருட்களை உருவாக்கத் தமிழ் இலக்கணம் மட் டும் படித்தால் போதாது. மொழி யியல் அறிவும் அவசியம். அதற் குப் பல்கலைக்கழகங்களில் மொழி யியல் பாடம் கட்டாயம் இருக்க வேண்டும். அதன்மூலமே ஏராள மான தமிழ் மென்பொருட்களை உருவாக்கிக் கணினித் தமிழ்ப் பயன்பாட்டை ஆங்கில மொழிப் பயன்பாட்டுக்கு இணையாக வளர்க்க முடியும். 

இவ்வாறு பேராசிரியர் தெய்வ சுந்தரம் கூறினார்.

Saturday, March 21, 2015

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்: நீதிபதி வியந்த வாசகி!                                                                     நீதிபதி பதவி, சமூகத்தின் மாண்புக்கும் மரியாதைக்கும் உரிய பதவி. பொதுவாக அரசு அலுவலகப் பணி என்பது அலுவலக அறைகளுடன் முடிந்து போகும். சற்று நீட்டித்தால் இல்லங்களில் சில மணி நேரங்கள் கோப்புகளை புரட்ட வேண்டி இருக்கும். ஆனால் நீதிபதி பதவி என்பது வழக்குகளின் தன்மைகளை ஆய்ந்து, சீர்தூக்கி, சொல்லப்போனால் அந்த வழக்குகளோடு வாழவேண்டிய பணி. 
அப்படி நேர நெருக்கடிமிக்க பணிச்சுமை நிறைந்த பதவியில் இருந்தபோதும், இலக்கிய நிகழ்வுகள், சொற் பொழிவுகள், கல்லூரி விழாக் கள், இசை விழாக்கள், வழக்குரைஞர் மன்றக் கூட்டங்கள், பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் என பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருப்பவர் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன். 
வெ.ராமசுப்பிரமணியன் சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழா வுக்கு தலைமையேற்க வந்திருந்தார். புதுக்கோட்டை செல்கிறோம்... இந்தப் பயணத்தில் ஒருவரைச்சந் திக்க வேண்டும் என ஆசைப்படுகிறது நீதியரசரின் தமிழ் மனசு. அவரைப் பற்றி பல மேடைகளில் பேசி இருக்கிறார். பல இடங்களில் மேற்கோள்காட்டி இருக்கிறார். பலரிடமும் வியந்து வியந்து பாராட்டி இருக்கிறார். ஆனால் அவருடன் கடிதவழித் தொடர்பு மட்டுமே. நேரடியாகச் சந்தித்ததில்லை.
பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் தேர்வு செய்வார். இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது.
இந்த காலகட்டத்தில் ‘போபியா’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. அதற்கு நிக ரான தமிழ் வார்த்தைகள் ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார். அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். இந்தப் பயணத்தின்போது அவரை எப்படியாவது சந்தித்துவிட  நீதியரசருக்கு ஆசை. தன்னுடைய ஆசையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ரவியிடம் சொல்ல, அவரும் தனது உதவி யாளர் மூலமாக அந்த வாசகரை சந்திக்க ஏற்பாடு செய்தார். 
காலை 8 மணி. 55-60 வயது மதிக்கத்தக்க தமிழ்ச்செல்வி தனது கணவருடன் வருகிறார். நீதியரசர் அவர்கள், “ தமிழ்ச்செல்வி அம்மா எப்படிம்மா இருக்கீங்க? உங்களை பார்க்கணும்னு பல வருஷங்களா தேடிக்கிட்டு இருந்தேன். அந்த வாய்ப்பு எனக்கு இன்னைக்குத்தான் கிடைச்சது. உங்களுடைய மொழி அறிவை எத்த னையோ இடங்களில் சொல்லி சொல்லி வியந்து வருகிறேன். ஆனால் இதுவரை உங்களை நேரில் சந்திக்க முடியவில்லை. எப்படியாவது உங்களை நேரில் பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால்தான் இந்தச் சந்திப்பு. காலையில்தான் சென்னையிலிருந்து இறங்கினேன். கல்லூரி நிகழ்ச்சி காலை 10 மணிக்கு. அதை முடிச்சிட்டு 1 மணிக்கு நான் திருச்சி விமான நிலையம் போகணும். நேரப்பிரச்சினை இல்லையென்றால் கட்டாயம் உங்கள் வீடு தேடியே வந்திருப்பேன். தப்பா நினைச்சுக்காதீங்கம்மா. 40 கிலோ மீட்டர் உங்களை அலையவைச்சிட்டேன். கோவிச்சுக்காதீங்கம்மா....
ஒரு ஆங்கில வார்த்தைக்கு நிகராய் 47 தமிழ்ச் சொற்களா? என்னை மலைக்க வைத்துவிட்டீர்கள் அம்மா. ஒரு சின்னக் கிராமத்தில் இருந்து கொண்டு இவ்வளவு பெரிய தமிழ் அறிவா? பரவசப்பட்டுப் போகிறார் நீதியரசர்.
( அந்த 47 வார்த்தைகள்...
(1) ஓடல், தேங்கல், ஞெரேலெனல், கூசல், திட்கல், உலமரல், அளுக்கல், ஞொள்கல், துடுக்கெனல், துட்கல், குலைதல், வெய்துறல், துண்ணெனல் என்பவை அச்சம் தோன்றுவதற்கான குறிப்புகளை உணர்த்துபவை என்றும்; (2) அப்படித் தோன்றி நம் மனதை ஆக்கிரமிக்கும் அச்சத்தை வெருவு, சூர், பீர், வெறுப்பு, வெறி, வெடி, கவலை, பீதி, உருவு, பேம், பிறப்பு, கொன், உட்கு, பனிப்பு, அணங்கு, புலம்பு, அதிர்ப்பு, அடுப்பு, பயம், உரும், தரம் ஆகிய சொற்கள் அடையாளம் காட்டும் என்றும்; (3) அச்சம் அடைந்த மனதில் சிந்தனையும், எண்ணங்களும் மாறுபட்டு, சிதிலமடையும் போது, அது கலக்கம் என்றும், துரிதம், பிரமம், கதனம் என்று குறிப்பிடப்படுவதாகவும்; (4) கலக்கமுற்ற மனதில் ஏற்படும் நடுக்கம், விதிர்ப்பு, விதப்பு, கம்பம், விதலை, கம்பிதம், பனிப்பு, பொதிர்ப்பு, உலைவு என்ற சொற்களால் உணர்த்தப்படுகிறது.

மேலும், ஃபோபியா என்ற சொல்லில் உள்ள 3 எழுத்துகளும் பேம், பீதி, பயம் என்ற 3 தூய தமிழ்ச் சொற்களின் சேர்க்கையில் உருவாகிப்பின் மருவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டு, தமிழ்ச்சொல் அகராதி சூளாமணி நிகண்டு நுலைச் சான்றாகக் காட்டியுள்ளார்)

“ஐயா நான் பத்தாவதுதான்யா படிச்சிருக்கேன். அப்பாவுக்கு தமிழ் மீது மிகப்பெரிய ஆர்வம். அந்த ஆர்வம் தான் என்னையும் நம்ம இலக்கியப் பக்கம் கொண்டு வந்திருச்சு. பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரும் கொடை. அது வெறும் இலக்கிய இன்பம் இல்லையா. சொல்லப்போனா வாழ்வியல் முறை..”- இப்படி கூறியபடி ஏராளமான பாடல்களை மேற்கோள் காட்டுகிறார் தமிழ்ச் செல்வி. வடமொழியும், பிற மொழியும் தமிழ்மொழி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கொதிப்போடு பேசுகிறார். “திருவாசகத்திலும் தாலாட்டு இருக்குங்கய்யா...” அழகான குரலில் பாடியும் காட்டுகிறார். அறையிலிருந்த அனைவரும் வியந்துபோகிறார்கள்.
“நீங்க நிறைய எழுதுங்கம்மா... உங்க தமிழ் மொழி அறிவு, இலக்கிய அறிவு எல்லோரையும் போய்ச் சேர ணும்மா...” –நீதியரசரின் வேண்டுகோளை ஏற்று ‘கண்டிப்பா செய்யுறேன்ய்யா...’ என்கிறார் தமிழ்ச்செல்வி. 
தன்னுடய கட்டுரைகளை தாங்கி வெளிவந்த மலர்களையும், புத்தகங்களையும் அன்பாய் ஏற்றுக் கொள் ளுங்கள் எனப் பரிசளித்து, “ ஒரு வாசகியாய் நான் எழுதியதை மறக்காமல் இலக்கிய மேடைகளில் எல்லாம் என்னை மேற்கோள் காட்டிவாறீங்க, ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி என்னைத் தேடி வந்திருக்கீங்கன்னா இது என் தமிழ் அறிவுக்கு கிடைத்த சன்மானம்ய்யா.. உண்மையில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..” நெகிழ்ந்து போகிறார் தமிழ்ச்செல்வி.
பல ஆண்டுகளாய்த் தேடிய தமிழ்ச்செல்வி அம்மாவை நேரில் கண்டதில் நீதியரசருக்கு மெத்த மகிழ்ச்சி. விமானம் ஏறும்வரை தமிழ்ச்செல்வியின் தமிழ் அறிவில் கரைந்து போகிறார் நீதியரசர்.
பட்டிக்காட்டில் வாழ்ந்தும் மொழியில் ஆழந்த அறிவும், ஆராய்ச்சிப் போக்கும் கொண்ட தமிழ் ஞானமிக்க தமிழ்ச்செல்வி அம்மாக்களும், அவர்களை சரியான இடங்களில் அடையாளப்படுத்தும் நீதியரசர் ராமசுப்பிரமணியன் போன்றவர்களும் இருக்கும் வரை தமிழ் வாழும் – என்றும் அழியாப் புகழுடன்...!
 - பழ. அசோக்குமார் ( கூடல் நகர்) 

Monday, March 9, 2015

பழந்தமிழ் எழுத்துருக்கள் மீட்பு ! அனைவரும் எளிதில் பயன்படுத்தலாம் !!

1000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய வட்டெழுத்து எழுத்துருவை இப்போது நாம் கணினியில் பயன்படுத்தலாம் .
2000 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த தொல்காப்பியர் காலத்து தமிழி எழுத்துருவையும் இப்போது நம் கணினியில் பயனபடுத்தலாம். நமது பெயர்களை பழந்தமிழ் எழுத்துக்களில் இனி எழுதி மகிழலாம். பழந்தமிழ் எழுத்துருக்களை கணினியில் கொண்டுவந்த தமிழர்களுக்கு நம் பாராட்டுகள் !!
படத்தில் :முதலில் இருப்பது இன்றைய தமிழ் எழுத்துரு. இரண்டாவது 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழி எழுத்துரு. மூன்றாவது இராசராசன் காலத்தில் இருந்த வட்டெழுத்து முறை.
------------------------------------------------------------------
இசுக்கொத்துலாந்தில் மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் அவர்களின் அரிய முயற்சி தமிழி எழுத்துருவாக்கம்.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழி எழுத்துரு தரவிறக்க,http://www.virtualvinodh.com/down…/Adinatha-Tamil-Brahmi.zip
இன்றைய தமிழைத் தமிழி எழுத்துருவுக்கு மாற்ற
http://www.thevaaram.org/sirppi_transliteration.php
தமிழி எழுத்துரு தந்த எனதருமை அன்பர், நண்பர், மொழிகளின் கணிணியாக்கத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சென்னையைச் சேர்ந்த வினோத்ராசன் பாராட்டுக்குரியவர். அவரைச் சில ஆண்டுகளுக்கு முனனர் சென்னைப் பல்கலைக் கழக அரங்கில் பாராட்டும் பேறு என்னுடையதாயிற்று.
பாண்டியர் சோழர் பயன்படுத்திய வட்டெழுத்தை இப்பொழுது உங்கள் கணிணியில் நீங்களே எழுதலாம். அடுத்துள்ள இணைப்புக்குச் செல்க, எழுத்துருவைத் தரவிறக்குக. தமிழ் ஒருங்குறியில் தட்டச்சிடுக. ஒருங்குறி எழுத்துருவாக e-Vatteluttu OT தேர்க. 35 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்துருவுக்கு e-Tamil 100 தேர்க.
Wonderful news for the lovers of all Tamil scripts.
A new font is available, created by Elmar Kniprath, who lives in Hamburg.
See: "http://www.aai.uni-hamburg.de/indtib/Material.html".
Vaṭṭeḻuttu (வட்டெழுத்து) font newly available, thanks to Elmar Kniprath
Now everyone can write in வட்டெழுத்து என்கிறார் புதுவை வாழ் பேராசிரியர் இழாண் Jean-Luc Chevillard (Pondy) அவர்கள்.
என்னே... என்னே.... என்னே....
செய்தி தந்த புதுவைப் பேராசிரியர் இழான் அவர்களுக்கும்
அரிதின் முயன்று எழுத்துரு உருவாக்கிய ஆம்பேர்க்கு வாழ் பேராசிரியர் எல்மார் இணிப்பிராதருக்கும்
தமிழ் மக்கள் என்றென்றும கடமையுள்ளவர்கள்.
நன்றி நன்றி : மறவன்புலவு க. சச்சிதானந்தன்

Thursday, January 1, 2015

A letter A word - ஓர் எழுத்து ஒரு சொல் !

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.
ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.
ஒரு எழுத்து சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.
ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு
இந்த அனைத்து ஓர் எழுத்து சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும்.இவற்றில் நொ,து,என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள்.மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சிர்யம்...

Sanskrit - சம(ஸ்)கிருதம்!

 சம(ஸ்)கிருதம்!    
சம=சமன்=equal / கிருதம்=மொழி=language
தமிழுக்குச் சமாந்தரமாக ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக சித்தர்களால் உருவாக்கப்பட்ட மொழியே சம(ஸ்)கிருதம். தமிழே காலத்தால் மூத்த ஞானமொழி
ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்களின் மொழிகளே. சம=சமமாக, கிருதம்=மொழி. தமிழுக்குச் சமமாக ஞானிகளால் ஒலியலைச் சக்திகளை எழுப்பும் மொழியாக உருவாக்கப்பட்ட மொழிதான் சம(ஸ்)கிருதம். தமிழே ஆதிமொழி. தமிழே சித்தர்களின் உயர் ஞானமொழி.
இலக்கண அடிப்படையில் ஹிந்தி, உருது போன்ற மொழிகளைவிட தமிழுக்கும் சம(ஸ்)கிருதத்திற்குமே நிறையப் பொதுப்பண்புகள் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகள் சம(ஸ்)கிருத சொற்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன தவிர இலக்கண அடிப்படையில் பொதுப்பண்புகள் தமிழை விடக் குறைவே.
சம(ஸ்)கிருதம் நம் தமிழ்ச்சித்தர்கள் உருவாக்கிய மொழியே. தமிழும் சம(ஸ்)கிருதமும் சித்தர்கள் மொழியே. ஆதலால்தான் எம் முன்னோர் சம(ஸ்)கிருதத்தை கோவில் வழிபாட்டு மொழியாக ஏற்றுக்கொண்டனர். நம் பெயர்களில் சம(ஸ்)கிருதம் யாரும் திணித்ததால் வரவில்லை. சித்தர் மொழிகளை நம்மொழியாக ஏற்றுக்கொண்டதனால் வந்தது. ஹிந்தி, உருது போன்ற மொழிகளை வடமொழி எனலாம். சம(ஸ்)கிருதம் வடமொழி அல்ல. அது தமிழ்ச்சித்தர்கள் மொழி.
நிறையப்பேர் இந்தி, உருது போன்ற வடமொழிகள் சம(ஸ்)கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியின் மூல மொழி துருக்கி. அதில் சமஸ்கிருதம், உருது, அரபி போன்ற மொழிச்சொற்களும் சேர்ந்து உருவானதுதான் இந்தி. உண்மையில் சம(ஸ்)கிருதம் மற்ற மொழிகளில் எவ்வாறு கலந்திருக்கிறதோ அது போலவே இந்தியிலும் அதிகமாகக் கலந்துள்ளது.
குருகுலம் இருந்தபோது அனைத்துத் தரப்பு மக்களும் தமிழ், சம(ஸ்)கிருதம் இரண்டுமே கற்றனர். காலப்போக்கில் பூசாரிகளே சம(ஸ்)கிருதம் கற்றனர். சாதாரண மக்களுக்கு அதனால் பயனில்லாததால் கற்பதைத் தொடரவில்லை. இன்று தமிழ்நாட்டில் தமிழ் பயன்பாடு குறைந்து ஆங்கிலம் வளர்வது போல, மக்கள் தமக்கு எதனால் பயன்பாடு உள்ளதோ அதனையே கற்றனர்.
சித்தர் தமிழை நிறைவாகக் கற்றோனே கசடு அறக் கற்றவன். வள்ளுவப் பெருமான் மாபெரும் சித்தர். இதை வெகுவிரைவில் பாரறியும். தமிழ் சித்தன் மொழி. மெஞ்ஞான சூட்சுமங்கள் நிறைந்த நிறைமொழி. சித்தர்கள் அழிய மாட்டார்கள். ஆதலால், அவர்கள் மொழியான தமிழ் என்றுமே அழியாது. வருங்காலத்தில் உலகமாந்தரே தமிழ் கற்பர். ஏனெனில் சித்தர் மொழியான தமிழைக் கற்றாலே வரப்போகும் ஊழிக்கூத்திலிருந்து உலகமாந்தர் தம்மைக் காக்க முடியும்.
2037க்கு முன் ஞானச்சித்தர் காலம் பிறக்கும். மீண்டும் சித்தர்கள் இம்மண்ணில் எம்முன்னே நடமாடுவர். உலகமாந்தரெல்லாம் தம்மைக் காத்துக்கொள்ளும் பொருட்டு சித்தநெறியை நாடுவர். சித்தநெறியிலுள்ள மறைபொருளையறிய வேண்டி தமிழ் கற்பர். ‪#‎சித்தர்வாக்கு‬
நம்மால் ஆதாரம் தர முடியவில்லை. இருந்தும் ஒரு தகவலாகத் தருகிறேன். அதாவது, சித்தர் ஓலைக் குறிப்புகளின் படி தமிழ் பல அண்டங்களில் பேசப்படுகின்றது.
சித்தர்கள் மொழியான தமிழ் காலம் வரையறுக்கப்பட முடியாத ஆதிமொழி. மூத்தகுடி தமிழ்க்குடி . இதோ ஒரு சான்று:
http://www.bibliotecapleyades.net/esp_galacticdiplomacy_02.…
The Pleiades is an open star cluster consisting of 254 stars and many times that in planetary bodies. Many of the stars are very young. The Pleiades is located in the constellation of Taurus. The Pleiadian and Earth alphabets are both very similar. This was noted about 11,157 years ago. The script form was developed here on Earth and carried back to the seven sisters. The original script form is the parent of most of our present day alphabets. All of Earths languages are derived from a ancient Pre-Sumerian language called Tamil which was spoken in Lyra and latter in the Pleaides.
http://www.bibliotecapleyades.net/esp_galacticdiplomacy_02.…
REFS:
Turkey the birthplace of Hindi, English: study
http://phys.org/…/2012-08-turkey-birthplace-hindi-english.h…
his proposed research center may be defined as an academic research section of any university, with the prime object to unearth and to bring to light, the linguistic, cultural, scientific and medical heritage of the Tamil people as recorded by the Germans over the past 300 years and also to investigate and estimate the Tamilo=German interactions in these areas.
http://www.germantamilology.com/research_centre.htm
Do you know that Thiruvachagam and Thiruppavai are sung during the annual coronation ceremony for the King in Thailand?
http://www.indiadivine.org/…/131559-tiruppavai-thailand.html
Of the one-lakh odd inscriptions in India, about 60,000 were in Tamil Nadu. And of the 60,000 inscriptions, only about 5 per cent were in other languages such as Telugu, Kannada, Sanskrit and Marathi; the rest were in Tamil, T. Sathyamurthy, Superintending Archaeologist of ASI, Southern India, said.
http://www.hindu.com/2005/11/22/stories/2005112215970400.htm
மேலும் தகவல்கள்@
http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

Tamil Words in Sanskrit
These words are taken from the book ‘A Dravidian Etymological Dictionary’ by T. Burrow and M.B. Emeneau.
Dr. T. Burrow was a professor Sanskrit in the University of Oxford, England. Dr. Ememeau was a professor of Sanskrit at University of California, Berkeley. They are both Dravilian language scholars as well.
அகத்தி – Skrit agasti
அகில் – Skrit aguru, agaru
அக்கா – Skrit akka, Prak akka
அங்கம் (battle) – Skrit anka
அங்காடி – Skrit angana
அடு (cook – அடுப்பு comes from this) – Skrit atta
அடை (shut) – Skrit addana (shield), Prak adda
அட்டம் (terraced roof) – Skrit atta, attala
அத்தன் (father) root for அத்தை, அத்தான் – Skrit atta (mother, mothers sister, elder sister), Prak atta (mother, mother-in-law, father’s sister’s husband
அம்மா – Skrit ambaa, ambaada, ambaala, ambi, ambaalikaa, Prak ammo, ammahe
அரக்கு – Skrit laaksaa
அல (suffer) – Skrit alasa, lampata
அலங்கு – Skrit alaka
அலங்கோலம் – Skrit kallola
அல்குல் (part below the stomach) – Skrit alga
அவணம் (a measure of 20 thousand areca nuts) – Skrit armana
அழல் – Skrit arajf, alaji
அழிஞ்சில் (sage-leaved alangium) – Skrit ankota
ஆமாந்தம் ஆமணக்கு – Skrit aamanda
ஆர் (ஆரவாரம்) – Skrit rat (to howl, yell, roar)
இருவேரி (அறுகு – cuscuss grass) – Skrit hrivera
ஈந்து (date palm) – Skrit hintala, Prak sindhi
உக்கம் (waist) – Skrit ukha
உடுக்கை – Skrit hudukka
உலக்கை – Skrit ulukhala
உருவை (a kind of fish) – Skrit ulupin (porpoise)
உளு (rotten) – Skrit luta
எலும்பு – Skrit eduka
ஐயா (sound of astonishment) – Skrit aye (sound of excitement)
ஒட்டு (to wager, noun ஒட்டம்) – Prak huddaa
கசடு (dregs) – Skrit kaccara
கச்சை – Skrit kaksya
கடம்பை (hornet, wasp) – Skrit kanabha, gandhall, gandholi
கடாரம் கிடாரம் (copper boiler) – Skrit kataha
கடு (throbbing pain) – Skrit katu, katuka
கட்டில் – Skrit khatva
கட்டு (harden) – Skrit kathina, kathara, kathura
கட்டை (dead body) – Skrit kata
கணவீரம் (red oleander) – Skrit karavira, Prak karavira
கணை – Skrit kana
காப்பு – Skrit kavasa
காப்பு – கவ்வு – Skrit kavala
கம்பு (millet) – Skrit kambu
கய (கசப்பு) – Skrit kasaya
கர (to steal) – Skrit khar
கரடி – Prak karada (tiger)
கரடி (கரடிப்பறை, drum) – Skrit karata
கரடு – Skrit karata, karkara, karkasa Prak karakaya
கல் (learn, கலை came from this) – Skrit kala
கல – to mix
கலங்கு – Skrit kalaha
கலம் – Skrit kala (boat), kalasa
கவண் – Skrit gophana
கவுளி (lizard) – Skrit godha
கழல் (loosen) – Skrit cancalaksi
கழுத்து – Skrit kandha
கள் (களவு, rob) – Skrit khala
கள் (toddy, alcohol) – Skrit kad (to be intoxicated)
களம் – Skrit khala
களி – Skrit kali
கற – Skrit kara, kaara (to squeeze out tax)
கறு (black) – Skrit karpari
கனம் – Skrit ghana
கனல் – Skrit kanala (shining), kanaka (gold)
கா (கம்பு, pole) – Skrit kaaca, kaajam Prak kaa, kaava, kavada
கா (forest) – Skrit kanana
காக்கை (crow) – Skrit kaka
காசு – Skrit karsa
காண் – Skrit kaana
கால் (கால்வாய்) – Skrit khalla, Prak khalla, khaala
கார் (black) – Skrit kaala
கின்னேணல், கிணி – Skrit kinkini, Prak kinikininta
கீல் (hinge) – Skrit kila
கீறு – Skrit kiraka
குச்சு (tuft) – Skrit kurca, gucha, gulucha
குடசம் – Skrit kutaja
குடம் – Skrit kuda
குடி (to drink, intoxicated by drinking) – Skrit kudi (intoxicated by drinking)
குடுகுடு (rattle) – Skrit gudagudayana (grumbling of belly), gurguri (hookah)
குடை – Skrit utkuta
குட்டம் (pond) – Skrit kunda
குட்டு – Skrit kuttayaati
குந்தாலி (pick-axe) – Skrit kuddaala
குயில் – Skrit kokila
குருள் (curl) – Skrit kurula, kurala
குரை (dog bark) – Skrit kurkura
குழை (soften) – Skrit kunapa (dead body, rotting)
குளகம் (grain measure) – Skrit kudava, kudapa
குளம் – Skrit kula
குறிஞ்சி – Skrit kuranta, kurantaka
குன்றி (crab’s eye) – Skrit kuncika, gunja
கூ (bird cry) – Skrit ku, kuj
கூம்பு (குவளை comes from this) – Skrit kuvalaya, kuvala, kuvela
கூம்பு (ship mast) – Skrit Kupaka, Prak kuvaya
கூழ் – Skrit kura
கெண்டை (ankle) – Skrit ganda, gandu
சென்னி (head) – Skrit kenaara (temples, upper part of cheek)
சேம்பு (கிழங்கு) – Skrit kemuka, kecuka, kevuka, kacu, kacvi
சேறு – Skrit kedaara (field under water)
கோடாலி – Skrit kuthaara
கொடி (flag, banner) – Skrit koti, kuta
கொடு (curved, bent) – Skrit kutila
கொட்டகை – Skrit gostha
கொதி – Skrit kutuka, kutuhala
கொக்கு – Skrit kanka
கொழுந்து – Skrit koraha, kora, kunaka (new born animal)
கோணல் – Skrit kona
கோணி (sack) – Skrit goni
கோலம் (raft) – Skrit kola
கோவணம் – Skrit kaupina
சடசடஎனல் – Skrit catacatayaayate
சடை – Skrit jada
சட்டுகம் (சட்டுவம்) – Skrit catuka
செண்பகம் – Skrit chempaka
சதி – Skrit chad
சதுர் (skill) (ancient Tamil dance சதிராட்டம் comes from this word) – saduvaari
சந்தம் (beauty) – Skrit chanda
சப்பட்டை – Skrit carpata
சப்பை (tasteless) – Skrit capata
அரவு (snake) – Skrit saraahaya
சல்லடம் (short drawers) – Skrit candaataka, calanaka (short petticoat)
சரக்க (quickly) – Skrit sraak
சலி (to sieve) – Skrit sal
சா (சாவு) – Skrit sava (corpse)
சாய் (சாயம், brilliance) – Skrit chaaya
சிட்டிகை (snap fingers) – Skrit chotikaa
சிப்பி (shell) – Skrit sippi
சிமிர், இமை – Skrit smil
சூப்பு – Skrit coop
சீரை, சீலை – Skrit cela (clothes, garments)
சுண்டன், சுண்டெலி – Skrit sundi-musaka, cucundari, chucchundara
சுலவு (easy) – Skrit sulabha
சூடகம் (bracelet) – Skrit cuda, Prak cuda
சூடு (to wear) – Skrit cuda
சுட்டு (private parts) – Skrit cuta, cuti, cyuti
செடி (light, splendor) – Skrit tadit
எய், எய்பன்றி (porcupine) – Skrit sedhaa
சொகுசு (refinement) – Skrit coksa
நாஞ்சில் – Skrit langala
தமதமவென (drum sound) – Skrit dam (drum sound)
தகரம் – Skrit tamara
தசை – Skriti tharasa
தடு (hinder) – Skrit tadaga
தட்டி (screen) – Skrit thatti
தட்டி (drawers) – Skrit dhati
தண் (cool) – Prak tannaaya
தண்டு – Skrit thankaka
தமுக்கம் – Skrit thamaanga
தமிழ் – Skrit Dravida
தளர் – Skrit tarala
தாத்தா – Skrit thaatha
தாமரை – Skrit taamarasa
தார், தாரம் (rope) – Skrit davara (string), doraka (rope)
தாழ் (bolt) – Skrit tadaka
து (துண்ணு) – Skrit tuppa (ghee)
துகில் – Skrit dukula
தும்பி (ebony tree) – Skrit tumburu
துழாய், துளசி, துளவம், துளவு (holy basil) – Skrit thulasi
துறு (crowded) – Skrit turumba
தூவல் (feather), தூய் (cotton) – Skrit tuva (cotton)
தூற்று – Skrit surpa
தெப்பம் – Skrit tarpa, Prak tappa
தெரிவை (young women) – Skrit taruna
தொண்டை (creeper) – Skrit tundi
தோசை – Skrit dhosaka
நகர் (big house, street, mansion, palace) – Skrit nagara (city)
நந்து (flourish) – Skrit nand (to rejoice)
நல் – Skrit nala
நாத்தனார் – Skrit naanandr, nandini, nandaa
நீர் – Skrit nira (water, juice, liquor)
நுதல் – Skrit nithaala
நேர் (straightforward)- Skrit nerimi (knowledge)
நொச்சி (vitex negundo tree) – Skrit nirgundi
பட்டி (lawless) – Skrit patu
பட்டி (cow stall), பட்டம், பட்டு (small town) – Skrit pattana (city)
பண்டி (cart) – Skrit bhandi
பண்டி (belly), பண்டம் – Skrit phanda
பப்படம், அப்பளம் – Skrit parpaata
பரு (coarse) – Skrit parusa
பலவு, பலா (jackfruit tree) – Skrit panasa, palasa, phanasa
பல்லி – Skrit palli, pallika
பவளம், பளகம் – Skrit pravaala
பழு, பழம் – Skrit phala
பாதிரி (trumpet flower) – Skrit paatala, paatali
பாலம் – Skrit paali
பிச்சு (bile) – Skrit pitta
பிழி (squeeze), பிண்டி (oil cake) – Skrit pinyaka (oil cake)
பிள்ளை – Skrit pillika
பீலி – Skrit piccha
புழு – Skrit pilu (vermin), pulava (worm), Hindi pillu (worm), phul (maggots)
புழுங்கு (parboiled) – Skrit pulaaka (a lump of rice)
புழுகு (arrowhead) – Skrit punkha (shaft or feathered part of arrow)
புழுதி – Skrit bhuti
பூசு – Skrit pusta
பெட்டி – Skrit petaka, petika
பெண் – Skrit panda, pandaka
பேடி – Skrit potaa
போத்து (male animals, tender branch) – Skrit pota (young animal)
மணி – Skrit mani
மத (anger) – Skrit mad
மலை – Skrit malaya
மல்லம் (bowl) – Skrit malli, mallaka
மா (mango) – Skrit maakanda
மேடை – Prakrit maadia
மால் (confused) – Skrit malaka (intoxicating drink)
மாலை – Skrit maala
மாலர் (child of brahmin mother and sudra father) – Skrit maala
மீன் – Skrit meena
முகிர் (bud) – Skrit mukula
மூங்கா (mongoose) – Skrit magdusa, Prakrit mamgusa, muggasa, Hindi mugus
மூசரு, மோரு – Skrit morata, morana
முட்டு – Skrit mut
முதலை – Skrit maacala
முத்து – Skrit muktha, prakrit muttaa
முரள் (sound), முர, முரழல், முரவம் – Skrit murali (flute), muraja (drum)
முரவு – Prakrit muriya
முருங்கை – Skrit murungi, muangi
முல்லை – Skrit mallika
முள்ளங்கி – Skrit mullaka
மூடை – Skrit mutaaka
மேதி, வெந்தயம், மெந்தியம் – skrit mantha, methi
மை – Skrit masi
மொட்டை – Skrit munda
வசம், வசம்பு – Skrit vasaa
வம்பு (curved bamboo) Skrit bambu
வலை – Skrit val (turn around), valaya (circle)
விளையாட்டு – Skrit vilaasa
வீசு (fan) – Skrit vij, vyaj
வெருகு (tom cat) – Skrit biraara, billaala, bidaala
விளாம், வெளில் – Skrit bilva

Thursday, December 25, 2014

தமிழில் படித்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியுமா ?



 
இனி எவராவது தமிழைப் படித்ததால் வாழ்க்கை முன்னேறாது என்று சொல்லாதீர்கள்...

என் பெயர் வே.நவேந்திரன்

இன்று நான் நகராட்சி ஆணையராக பணிபுரிய நான் தமிழை படித்ததே காரணம் ...

மேல்நிலை கல்வி
ஆண்கள் அரசு பள்ளி மாரியம்மன் கோவில்

இளநிலை மற்றும் முதுநிலை வேதியியல் பயின்றது
மன்னர் சரபோசி அரசு கல்லூரி தஞ்சை ...

1ஆம் வகுப்பில் இருந்து இளநிலை பட்ட படிப்பு வரை தமிழ் வழியே பயின்றேன்..

2007 ஆம் வருடத்தில் இருந்து தமிழ் நாடு அரசு தேர்வாணைய தேர்வுக்கு படித்து வந்தேன்...

தொகுதி2 தேர்வில்
சிறப்பாக எழுதினேன்
நான் நேசித்த தமிழில் 98/100 சரியாக விடையளித்தேன்...

22.07.2012, 23.07.2012 அன்று நேர்காணல் நடந்தது ...

கேட்ட கேள்விகளில் பாதிக்கும் மேல் தமிழைப் பற்றி .....
விடுவேனா......?

கேள்விகளில் சில ...

கேள்வி :
பாரதிதாசனை பற்றியும் அவரது பாடல் ஒன்றும் சொல்லவும்

நான் :-
கொடை வாளினை எடடா
மிகக் கொடியோர் செயல் அறவே
உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா....

என்ற பாரதிதாசன் பாடலை சொன்னேன்

கேள்வி :-
ஏன் இந்த பாடல் சொல்கிறீர்கள்?

நான் :-
இன்று தமிழர்கள் சாதியால் மதத்தால் பிரிந்து உள்ளார்கள்
நாம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றேன்

கேள்வி :-
சிரிக்கும் சித்திர சோலைகளே...
என்ற பாடலை எழுதியவர் யார் ?

நான்:-
சற்று யோசனைக்கு பின்
பாரதிதாசன் ...

இன்ன பிற கேள்விகளுடன் நேர்காணல் முடிந்தது ...

01.08.2012 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது...
படித்த தமிழ் கரை சேர்த்தது

3 மதிப்பெண்ணில் 7.5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் முதல் இடத்தை இழந்தேன்...

298.5/330 மதிப்பெண்
பெற்று இரண்டாவது இடமே பெற முடிந்தது

15.10.2012
அன்று தமிழக முன்னாள் டி.ஜி.பி திரு.நட்ராஜ் இ.கா.ப அவர்கள் கையினால் நகராட்சி ஆணையராக பணி ஆணை பெற்று 11.02.2013 முதல் மக்கள் பணியில் தொடர்கிறேன்..

இனி எவராவது தமிழைப் படித்ததால் வாழ்க்கை முன்னேறாது என்று சொல்லாதீர்கள்...

முன்னேறுவது
உங்கள்
முயற்சியைப் பொறுத்ததே.....

@ நவேந்திரன்
செயங்கொண்டம் நகராட்சி ஆணையர்.

Thursday, December 4, 2014

நான் கற்றது தமிழ்



உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், நாழிகைக்கு 360(15*24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.

(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)

ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216(உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

கருத்தூட்டம்(feedback):

1நிமிடத்திற்கு 15 மூச்சும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். ஆனால் உட்கார்ந்திருக்கும் போது 12மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும,; உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது

Sunday, November 30, 2014

ஒகர வரிவடிவத்தின் சிறப்பு



ஒ என்ற உயிர்எழுத்தானது தெய்வீகத்தன்மை
வாய்ந்தது. உள் உறுப்புக்களின் வடிவம், மூளைக்கருக்கள் போன்றவற்றை ஒப்பிடும்போது காணலாம். இவை பக்கச்சார்பான வரலாற்றை காட்டுவதாக உள்ளது.

Wednesday, October 8, 2014

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு



வற்றாமல் சுரக்கும் தேனருவியாய்
வரலாறை சுமந்து வரும் மலையருவியாய்
சிந்தனையில் வைத்தோர்க்கு சுவைத்திடும்
சீரிளமையோடு மனதில் சிரித்திடும்
தொல்காப்பியம் சொல்லும் இலக்கணம்
சிலப்பதிகாரம் சொல்லும் நீதி
மன்னர் புகழ் பாடும் பரணி
இளையோர் காதல் சொல்லும் அகநானூறு
இறைவன் புகழ் பாடும் திருமறைகள்
வாழ்க்கை வழிகாட்டும் திருக்குறள்
வரலாறு சொல்லும் கல்வெட்டுகள்
நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஓலைச்சுவடிகள்
சுதந்திரதாகமூட்டும் பாரதி பாடல்கள்
தமிழை உயிரில் கரையவைக்கும் பாரதிதாசன் கவிதைகள்
இனிக்க ஒலிக்கும் கண்ணதாசன் பாடல்கள்
இணையத்தில் மட்டுமன்றி இனி பாரெங்கும்
பரவும் இந்த அமுத மொழி
இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்...

Sunday, September 21, 2014

தமிழ் மாதங்கள் கிழமைகளின் தனித் தமிழ்ப் பெயர்கள்






வழக்குச்சொல் தனித்தமிழ்


தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - இரட்டை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்
ஞாயிறு - ஞாயிறு
திங்கள் - திங்கள்
செவ்வாய் - செவ்வாய்
புதன் - அறிவன்
வியாழன் - வியாழன்
வெள்ளி - வெள்ளி
சனி - காரி


========================================================================


எதைப் பேசித் தமிழன் கெட்டான்?






சுப நற்குணன்(மலேசியா):>எதைப் பேசித் தமிழன் கெட்டான்?

“தமிழன் பேசிப் பேசியே கெட்டான்”
“பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்”
“தமிழ்.. தமிழ்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”
"தமிழன்.. தமிழன்.. என்று பேசியே தமிழன் கெட்டான்”
இப்படியெல்லாம் பலரும் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். ஏன் நீங்களும்தான் கேட்டிருப்பீர்கள்.
இதில் உண்மை இருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டு சரிதானா?
இப்படிக் கேட்பவர்களை நோக்கி சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
எதைப் பேசி தமிழன் கெட்டான்?
தமிழ்மொழியின் சிறப்பு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்மொழியின் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் இலக்கியம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மரபு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் பண்பாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ச் சமயம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வரலாறு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் வாழ்வியல் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் மன்னர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்ப் புலவர்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ் நூல்கள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழ்க் கலைகள் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் வீரம் பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் அறிவு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் நாடு பற்றி பேசிக் கெட்டானா?
தமிழர் விடுதலை பற்றி பேசிக் கெட்டானா?

நான் சொல்கிறேன், இதில் எதையுமே கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பேசாமல் ஊமையராய் – செவிடர்களாய் இருந்ததால்தான் இன்றையத் தமிழன் கெட்டுச் சீரழிந்து இருக்கின்றான். இதுதான் உண்மை.

உலகத்தின் எல்லா இனத்தவனும் அவனவன் மொழி – இனம் – கலை – பண்பாடு – இலக்கியம் – அறிவுநூல் – வரலாறு - நாகரிகம் என ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் தூக்கிப்பிடித்து மேலே ஏற்றிக் கொண்டாடுகிறான்.

ஆனால், தமிழன் மட்டும்தான் தன் உரிமைப் பொருள்கள் எல்லாவற்றையும் காலடியில் போட்டு மிதிக்கிறான். தன் மொழியைவிட; தன் இனத்தைவிட; தன் பண்பாட்டைவிட மற்றவருடையது சிறந்தது என்று புலம்பித் திரிகிறான். சொந்த இனத்தின் வேரையே வெட்டிவிட்டு இனவழி – மொழிவழி உறவைத் துண்டிக்கிறான். சொந்த அடையாளத்தை மறைத்து – மறந்து மாற்றான் போல வேடம்போட்டு வாழ்கிறான்.

அதனால்தான் சொல்கிறேன். “பழம்பெருமை பேசியே தமிழன் கெட்டான்” என்பது வடிகட்டிய பொய். “பழம்பெருமை பேசாமல் – புரியாமல் – அறியாமல் – தெரியாமல்தான் தமிழன் கெட்டான் – கெடுகின்றான் – எங்கு பார்த்தாலும் அடியும் உதையும் படுகின்றான். இவற்றிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொண்டு தப்பித்த தமிழனோ அன்னியவனின் அடிமையாய் – அடிவருடியாய் வாழ்கின்றான்.

இதனை உணர்ந்து இனிக் கண்டிப்பாகத் தமிழைப் பேசுவோம் - தமிழின் பெருமை பேசுவோம் – தமிழன் மேன்மையை உரக்கப் பேசுவோம்.


தமிழ்ச் செம்மொழிக்கு மட்டும் இருக்கின்ற பதினொரு தகுதிகள்


 


தமிழ்ச் செம்மொழிக்கு மட்டும் இருக்கின்ற பதினொரு தகுதிகள் >

 உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.
ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாகஉள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும். -இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.
தனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே.

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

முகத்தல் அளவைகள் - நிறுத்தல் அளவைகள் - கால அளவுகள்

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை.
 

முகத்தல் அளவைகள்
 

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.


 


முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாளிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாளிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாளிகை = ஒரு நாள்.
ஏழரை நாளிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

=======================================================================

>தமிழ் மொழியில் பாடங்களின் பெயர் சிறப்பம்சம்
நாம் படிக்கும் பாடங்களின் தமிழ் பெயர்களும் மற்ற மொழியை விட நம் மொழியில் பெயர் மற்றும் பெயர் காரணம் விளக்க விழைகிறேன்
என் அறிவிற்கு எட்டியதை நான் எழுதுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ,சரியாக இருந்தால் சிந்திக்கவும் நம் மொழியின் சிறப்பைப் பற்றி....
ஆங்கிலம் மற்றும் தமிழ் ஒப்பீடு
Science :--The intellectual and practical activity encompassing the systematic study of the structure and behavior of the physical and natural...
அறிவியல் :-- அறிவோடு இயல்பாக ஒத்துப் போகும் நிகழுவுகள் எல்லாம் அறிவியல்.அவ்வாறு இல்லையெனில் அது அறிவியல் என்று சொல்ல இயலாது .....

History :--the discovery, collection, organization, and presentation of information about past events...
வரலாறு :--வரம் + ஆற்று -- நீ வந்த வரவறிந்து செயலாற்று

Geography :-- The study of the physical features of the earth and its atmosphere, and of human activity as it affects and is affected by these.
புவியல் :- புவியின் இயல்பு மற்றும் அதை சுற்றி உள்ளவற்றின் இயல்பு

Civics:-- The study of the rights and duties of citizenship
குடிமியல் :-- குடும்பத்தின் (தேசத்தின்) இயல்பு .ஒரு குடும்பத்தின் உள்ள உறுப்பினர்களின் உரிமை மற்றும் கடமைகளை பற்றி உணர்த்துவது

Mathematics:-The abstract science of number, quantity, and space.
The mathematical aspects of something: "the mathematics of general relativity".
கணிதவியல்:-கணிப்பதின் இயல்பு .

இவ்வாறு ஒரு சொல்லில் பாடத்தின் இயல்பை பற்றி கூறுகிறது .இது போன்ற சிறப்பம்சம் எந்த மொழியிலும் கிடையாது என்று நம்புகிறேன் 


எழுதுகோல் தோன்றிய விதம் தெரியுமா?

எழுதுகோல்' என்று தூய தமிழில் எத்தனை பேர் சொல்கிறோம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவற்றைப் பதிவு செய்யும் பதிவுக் கருவி, பேனா. அது தோன்றிய விதம் தெரியுமா?



 


இன்று நாம், பயன்படுத்துவதற்கு எளிதான பேனாக்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆரம்ப காலத்தில் அப்படி இல்லை. பேனாவுக்குப் பல நூற்றாண்டு வரலாறு உண்டு என்பது ஆச்சரியமான விஷயம்.
‘லத்தீன்’ மொழியின் ‘பென்னா’ என்றால் ‘பறவையின் இறகு’ என்று பொருள். ‘பென்னா’ என்பதே ஆங்கிலத்தில் ‘பென்’ என்றும், தமிழில் ‘பேனா’ என்று மாறியது.
5ம் நூற்றாண்டில் ‘இறகுப் பேனா’ வழக்கத்துக்கு வந்தது. அது 18ம் நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
1780ல் சாமுவேல் ஹாரிசன் என்பவர் உருக்கினால் ஆன பேனாவைத் தயாரித்தார்.
1809ல் ஜோசப் பிராமா என்பவர், பறவையின் இறகை, தற்போதுள்ள வடிவில் வெட்டி ‘நிப்’பை உருவாக்கும் கருவியைத் தயாரித்தார்.
ஜான் ஹாக்கின்ஸ் என்பவர் மாட்டுக்கொம்பு, ஆமை ஓடு ஆகியவற்றைக் கொண்டு ‘நிப்’ செய்தார். ‘நிப்’ன் முனையில் ‘இரிடியம்’ வைக்கும் பழக்கம் 1882ல் வந்தது. அதே ஆண்டு ஜான் மிட்சல் என்பவர் எந்திரத்தினால் செய்யப்பட்ட உருக்கு ‘நிப்’பை கண்டுபிடித்தார்.
1859ல் முதல்முறையாக ‘ஊற்றுப் பேனா’ (‘பவுண்டன் பென்’) காப்புரிமை பதிவு செய்யப்பட்டது. 1883ம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த வாட்டர்மேன் என்பவர் அனைவரும் பயன்படுத்தத்தக்க ஊற்றுப் பேனாவைத் தயாரித்தார்.
அனைத்திலும் தமிழர்கள் நாம் முன்னோடி என்பதில் சந்தேகம் இல்லை. நம்முடைய இலக்கியங்கள், புராணங்களில் இருந்து பல தகவல்கள் மேலை நாட்டு அறிஞர்களால் எடுக்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டு உள்ளது.

உதாரணம், நமது ராமாயணத்தில் ராவணன் சீதையை கடத்திக் கொண்டு செல்ல புஷ்பக விமானத்தை பயன்படுத்தினான். இந்த தகவல் தான் தற்போதைய விமானத்திற்கு முன்னோடி என்பது எனது தாழ்மையான கருத்து.

அதைப்போன்றே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே குத்தாணியை பயன்படுத்தி பேனாவிற்கு அடிகோல் வகுத்தது தமிழர்களாகிய நாம் தான் என்பதில் பெருமையே.

பாரத தேச பிதா காந்தியே தன் கையால் தமிழில் எழுதியிருக்கிறார். தமிழர்களே தமிழைத்தமிழில் எழுதுங்கள்! தயவுசெய்து, தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழில் எழுத மென்பொருட்கள்-> http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472 அல்லது
என்.எச்.எம் எழுதி> https://www.facebook.com/note.php?note_id=10150386278969710 அல்லது இ.கலப்பை> http://www.facebook.com/note.php?note_id=127514014709 ( ஒவ்வொரு படத்திலும் அழுத்தி அதன் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தைப்/இணைப்பைப் படிக்கவும் )