Wednesday, April 16, 2014

ஓவியர் லியொனார்டோ டா வின்சி


 உலக புகழ் பெற்ற ஓவியர் லியொனார்டோ டா வின்சி பிறந்த தினம் ஏப்ரல் 15:
  அறிவியல் கலைஞன்!














கடின உழைப்பு, திறமை ஆகியவற்றால் வறுமையையும் வென்றுவாழ்வில் முன்னேறிய வர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். இதோ அந்தப் பட்டியலில் இன்னொருவர்...

உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தை வறுமையில் வாடிய போதுதான் வரைந்தார் டாவின்சி.

ஓவியம் உள்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்று விளங்கிய லியானர்டோ டாவின்சி, 1452-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி ‘ஆன்கியானோ’ என்ற நகரத்தில் பிறந்தார். தந்தை பெயர் பியரோ டாவின்சி. தாயார், காத்தரினா.

டாவின்சி இடக்கையால் எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். பொதுவாக அனைவரும் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக எழுதுவது வழக்கம். ஆனால் டாவின்சி வலப்பக்கமாக ஆரம்பித்து இடது பக்கமாக எழுதுவார். அவரது எழுத்துக்களை முகம் பார்க்கும் கண்ணாடியின் மூலம்தான் படிக்க முடியும்.

டாவின்சியின் அப்பாவும் அம்மாவும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர். இதனால் தாயின் அன்பும், அரவணைப்பும் இல்லாமல் தந்தையுடன் வளர்ந்து வந்தார் டாவின்சி.

சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையானவராக விளங்கினார் டாவின்சி. தன்னைக் கவர்ந்த இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரையத் தொடங்கினார்.

மகனுக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட அப்பா, வெர்ரோச்சியோ என்பவர் நடத்தி வந்த ஓவியக்கூடத்தில் டாவின்சியை சேர்த்தார்.

ஓவியக்கூடத்தில் சேர்ந்த டாவின்சி, ஓவியம் மட்டுமில்லாமல் சிற்பம், இசை போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றார். இதனால் அந்த ஓவியப்பள்ளி வாழ்க்கை டாவின்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மற்ற மாணவர்களுடன் சேர்ந்து விளையாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார். டாவின்சிக்கு குதிரைச் சவாரி மிகவும் பிடித்த விளையாட்டு.

கலைக்கூடத்தில் பயிற்சி முடித்த பின் மனித வாழ்க்கையின் யதார்த்த நிலையை ஓவியமாகத் தீட்ட ஆரம்பித்தார். மருத்துவமனைக்குச் சென்று நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்களைக் கண்டு அவர்களின் நிலையை ஓவியமாகத் தீட்டினார்.

மிலன் நகரத்தில் ஆட்சி செய்து வந்த லுடோவிகோ ஸ்பார்ஸாவிடம் உதவியாளராகச் சேர்ந்தார் டாவின்சி. ஸ்பார்ஸா கொடுங்கோல் ஆட்சி செய்து வந்தான். ஆல்பஸ் மலையில் பாதுகாப்பு அரண்களை அமைக்கும் பணிகளைக் கவனிக்க சென்றார் டாவின்சி. மலையின் இயற்கை அழகு அவரை மிகவும் கவர்ந்தது. அங்கே கண்ட காட்சிகளை வரைந்தார். அந்த ஓவியம் மதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், அதை ஃபிரான்ஸ் நாட்டு மன்னர் அதிக விலை கொடுத்து வாங்கி தன் அரண்மனையில் காட்சிக்கு வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஏசுநாதர் வாழ்க்கையில் முக்கிய நிகழ்ச்சியான ‘கடைசி இரவு விருந்து’ எனும் நிகழ்ச்சியை கன்னிமாடத்தின் சுவரில் வரைந்தார். சுவரின் உறுதியற்ற தன்மையின் காரணமாக அந்த ஓவியம் பழுதடைந்தது.
டாவின்சி இயற்கையை மட்டுமல்லாமல், விலங்குகளையும் பறவைகளையும் மிகவும் நேசித்தார். சந்தைக்குச் சென்று கூண்டில் அடைத்து விற்கப்படும் பறவைகளை விலைக்கு வாங்குவார். கூண்டைத் திறந்து உற்சாகமாக பறவைகளை எல்லாம் வெளியே பறக்க விடுவார். இதை வழக்கமாகவே செய்து வந்தார். இதை சந்தையில் இருப்பவர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்.

மிலன் நகர் மீது ஃபிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்தபோது ஸ்பார்ஸாவையும் அவரது ஆட்களையும் நகரத்தை விட்டு விரட்டினார்கள். டாவின்சியும் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
வெனிஸ் மற்றும் ரோம் நகரில் சில காலம் தங்கி இருந்தார். மிலனில் மீண்டும் ஸ்பார்ஸாவின் ஆட்சி வந்ததால் டாவின்சியும் திரும்பினார்.

டாவின்சிக்கு சம்பளமாகக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுக்காமல் நாட்களைக் கடத்தி வந்தான் ஸ்பார்ஸா. இதனால் அன்றாட செலவுக்குக்கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டார் டாவின்சி.

தன் செலவுகளுக்காக பல விதமான ஓவியங்களை வரைந்து விற்பனை செய்தார். இந்த காலகட்டங்களில் அவர் வரைந்த பல ஓவியங்களில், ‘மோனாலிசா’ குறிப்பிடத்தக்க வகையில் அற்புதமான படைப்பாக அமைந்தது. இது உலகப் புகழ் பெற்றது. மோனாலிசா ஓவியத்தை வரைய டாவின்சிக்கு ஆறு ஆண்டுகள் பிடித்தது. அற்புதமாகக் காட்சியளித்த அந்த ஓவியத்தை ஃபிரெஞ்சு மன்னர் முதலாம் பிரான்ஸிஸ் 12 ஆயிரம் பிராங்குகள் கொடுத்து வாங்கினார்.

அறிவியல் துறையிலும் ஆர்வம் காட்டிய டாவின்சி, நூல் நூற்கும் இயந்திரம், திருகாணி செய்யப்பயன்படும் கருவி, மண் தூக்கும் கருவி போன்றவற்றுக்கான வரைபடங்களை வரைந்தார். மேலும் விண்மீன்களைப் பற்றி முதன்முதலில் கண்டுபிடித்த பெருமையும் அவரையே சேரும்.

பறக்கும் எந்திரங்கள், பாராசூட், ராணுவ டாங்கிகள் போன்றவற்றுக்கான மாதிரிப் படங்களையும் முதலில் வரைந்தார். பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொருட்களை பல வருடங்களுக்கு முன்பே வரைபடமாக டாவின்சி வரைந்து இருப்பது வியப்புக்கு உரியது. பல துறைகளிலும் சிறந்து விளங்கிய டாவின்சி 1519-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி இறந்தார்.

லியானர்டோ டாவின்சியின் புகழை, காலத்தை வென்று நிலைத்து நிற்கும் ‘மோனலிசா’ ஓவியம் இன்று மட்டுமின்றி என்றும் பிரதிபலித்துக்கொண்டே இருக்கும்.

எளிய பாட்டி வைத்தியம்:-


எளிய பாட்டி வைத்தியம்:-
1. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
2. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
3. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
4. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
5. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
6. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
7. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
8. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
9. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
10. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
11. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
12. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்
1. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

2. கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

3. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

4. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
 

5. தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
 

6. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.
 

7. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
 

8. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
 

9. தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
 

 10. வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
 

11. வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
 

12. ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்

நகை வாங்க போறீங்களா கொஞ்சம் கவனியுங்களேன்

நகை வாங்க போறீங்களா கொஞ்சம் கவனியுங்களேன்

Are you going to buy some jewelry Listen



நகை வாங்கச் செல்லும் முன், எந்த நகை வாங்கப் போகிறோம் என்பதை உறுதி செய்தபின், கடைக்குச் செல்வது நல்லது. முதலில் நம்முடைய பட்ஜெட் என்ன என்பதில், தெளிவாய் இருக்க வேண்டும். ஹால் மார்க் முத்திரை உள்ள நகைகள் வாங்குவது தான் சிறந்தது.

பழைய கல் வைத்த நகையை மாற்றி, புதிதாக வாங்க வேண்டும் என்று நினைத்தால், கற்களை எடுத்த பின் எடை போட்டு, அதற்கேற்ற விலையில் புதிய நகைகளை வாங்குங்கள்.

கடைக்கு போனவுடன் செய்கூலி, சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். சரியான ரசீது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை, ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

அணிவதற்காக நகை வாங்கப் போகிறீர்களா, அல்லது பணத்தை முதலீடு செய்வதற்கு என்றால் தங்கக் காசாகவோ பிஸ்கட்டாகவோ வாங்குவது சிறந்தது. நகை வாங்க கிளம்பும் முன், தங்கம், வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தரமான கடைகளில் நகை வாங்குங்கள். தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் கடைகளில் வாங்கினால் தரம் குறையும்; பின்னர் வருத்தம் ஏற்படும்.

கே.டி.எம்., நகைகள், தனியாக தயாரிக்கப்படுபவை. நீங்கள் வாங்கும் நகை, எந்த வகையை சார்ந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும், ரசீதில், அது குறித்த தகவல் எழுதப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள். நகைகளை வாங்கியவுடன், அதைப் புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள். நகைகளை, இன்சூர் செய்வது மிக மிக முக்கியம். இதற்கெல்லாம் அலுப்பு பட்டால் ஆபத்து நேரத்தில் பயன் இல்லாமல் போய்விடும்.

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!



* பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

* பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.

தண்ணீர் பற்றிய சில உண்மைகள்!^^^^^^^^* பூமியில் உள்ள 97 சதவீதம் உப்பு தண்னீரால் ஆனது, மீதமுள்ள 3 சதவீதம் தூய்மையான நீர் என குறிப்பிடப்படுகிறது. அவற்றில் 2 சதவீதம் பனிக்கட்டிகளாகவும் பனிப்பாறைகளாகவும் காணப்படுகிறது. இதன் மூலம் 3 இல் 1 சதவீதம் தூய்மையான தண்ணீர் தான் ஆறுகள், ஏரிகள் மற்றும் பூமிக்கு அடியிலும் காணப்படுகிறது.

* பூமியின் பரப்பளவில் 10 இல் ஒரு (1/10) பங்கு பனிக்கட்டிகளால் ஆனது. மேலும் பனிக்கட்டிகளின் 90 சதவீதம் அண்டார்டிகாவைச் சார்ந்தே இருக்கிறது, ஆயினும் அங்குள்ள எரிபஸ் (Erebus) என்ற எரிமலை புகையை வெளியிட்டு வருகிறது. பனிக்கட்டியின் மீதமுள்ள 10 சதவீதம் பனிப்பாறைகளாகக் காணப்படுகிறது.

* பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

* உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
* பனிக்கட்டிகள் உப்பு தண்ணீரால் ஆனாலும், எவ்வித உப்பையும் பெற்றிருக்காது. எஸ்கிமோஸ் போன்றப் பனிப் பிரதேசங்களில் வாழும் மக்கள் உணவுகளை சமைக்கவும் குடிக்கவும் பனிக்கட்டிகளை உறையவைத்து தான் பயன்படுத்துகிறார்கள். மேலும் இது மிகவும் தூய்மையான தண்ணீராகதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* உப்பு தண்ணீரில், 96 சதவீதம் தூய்மையானதும், 3 சதவீதம் உப்பாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தில் சல்பேட், மெக்னீசீயம், புரோமைட், கால்சியம், பொட்டாசியம், ஸ்ட்ரோன்டியம், போரான், ஃபுலுரைடு, தங்கம் உள்ளிட்ட 80 தனிமங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது.

Tuesday, April 15, 2014

மென்மையான சருமத்துக்கு உதவும் சர்க்கரை






மென்மையான சருமத்துக்கு உதவும் சர்க்கரை 
முகத்தில் ஆலிவ் ஆயிலை நன்கு பரவலாக தடவிக் கொள்ளவும். சர்க்கரையை வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி, விரல்களை ஈரப்படுத்தி சர்க்கரையில் தோய்த்து, முகத்தில் வைக்கவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை சர்க்கரையில் ஈரப்படுத்திய விரல்களைத் தோய்த்து முகம் முழுவதும் சர்க்கரை பரவும்படி செய்யவும்.

இது சரும துவாரங்களை நன்கு சுத்தப்படுத்துவதோடு முக வீக்கத்தையும் தணிக்கும். மேலும், சருமத்தின் எண்ணெய்ப் பசையை நீக்கும் போது, சருமத்தின் பளபளப்புக் குறையாமல் இருப்பதற்கு ஆயில் உதவி செய்கிறது. நான்கு அல்லது ஐந்து லவங்கத் துண்டுகளை நன்றாக வெந்நீரில் ஊற வைத்து, அத்துடன் ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அதை முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இவை இரண்டுக்கும் உள்ள மருத்துவ குணத்தால், முகத்தில் பருக்கள் வராமலும், எண்ணெய்ப் பசை இல்லாமலும் தடுக்கலாம். மேலும், சருமம் அதன் மென்மைத்தன்மையை இழக்காது.

பாதாம், பிஸ்தா, கசகசா மூன்றையும் அரை டீஸ்பூன் எடுத்து பாலில் ஊறவைத்து நன்கு அரைக்க வேண்டும். க்ரீம்போல வந்ததும், அதனை கழுத்திலிருந்து முகம் வரைக்கும் நல்ல அடர்த்தியாகப் போட வேண்டும். ஒரு மணி நேரம் ஊறவைத்து, வெந்நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இது, சருமத்தின் வறட்சியை நீக்கி, தேவையான எண்ணெய்ப் பசையைக் கொடுத்து முகத்தை பளபளப்பாக்கும்.

ராஜம் முரளி
மூலிகை அழகு கலை நிபுணர்
போன்:044-24852196

கர்ப்ப காலத்தில் குழந்தை பிரசவிப்பதைக் கணக்கிடுதல்..


‘கர்ப்ப காலம்’ என்பது இருபத்தியெட்டு நாட்கள் மாதத்தீட்டு சுற்று இருக்கக்கூடிய பெண்ணுக்கு கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 280 நாட்கள் எனவும். கரு உற்பத்தி ஆனலிருந்து 266 நாட்களெனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. குழந்தை பிரசவம் ஆவதைக் கணக்கிட ஒரு சாதாரண ‘சூத்திரம்’ இருக்கிறது. அதாவது கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களைக் கூட்டிய பின் மூன்று மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
கர்ப்ப காலத்தில் குழந்தை பிரசவிப்பதைக் கணக்கிடுதல்..

‘கர்ப்ப காலம்’ என்பது இருபத்தியெட்டு நாட்கள் மாதத்தீட்டு சுற்று இருக்கக்கூடிய பெண்ணுக்கு கடைசி மாதவிடாய் தேதியிலிருந்து 280 நாட்கள் எனவும். கரு உற்பத்தி ஆனலிருந்து 266 நாட்களெனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. குழந்தை பிரசவம் ஆவதைக் கணக்கிட ஒரு சாதாரண ‘சூத்திரம்’ இருக்கிறது. அதாவது கடைசி மாதவிடாயின் முதல் நாளிலிருந்து ஏழு நாட்களைக் கூட்டிய பின் மூன்று மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு, கடைசி மாத்தீட்டு ஜூன் மாதம் முதல் தேதியில் ஆரம்பித்திருந்தால், அதோடு ஏழு நாட்களைக் கூட்டினால் ஜூன் எட்டாம் தேதி வரும். அதிலிருந்து மூன்று மாதங்கள் பின்னோக்கிச் சென்றால் மார்ச் மாதம் வரும். ஆக, குழந்தை பிரசவிப்பதை நாம் தோராயமாக ‘மார்ச் எட்டாம் தேதி’ எனக் கணக்கில் கொள்ளலாம். ஒரு சிறு சதவீத தாய்மார்களே அந்தக் கணக்கிடப்பட்ட தேதியில் பிரசவிப்பார்கள். அறுபது சதவித தாய்மார்கள் கணக்கிடப்பட்ட தேதியில் ஒர வாரம் முன்னரோ அல்லது பின்னரோ பிரசவிப்பார்கள்.

கர்ப்பப்பையில் குழந்தையின் நிலை

கர்ப்பப்பையில் குழந்தை எந்த நிலையில் இருக்கும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதுகுத் தண்டு முன்புறமாக வளைந்து, தலை வளைந்து, தாடை மார்பு எலும்பின் மேல் பட்டுக்கொண்டும், கைகள் வளைந்து மார்பின் குறுக்காக மடிந்து, கால்கள் வளைந்து தொடைகள் வயிற்றின் மீதும், முழங்கால்கள் வளைந்து தொடைகளின் மீதும் இருக்கும்.

பிரசவிக்கும் நிலை

பிரசவம் ஏற்படும்போது குழந்தை இருக்கும் நிலையைத்தான் ‘பிரசவிக்கும் நிலை’ என்போம். சாதாரணமாக அதிகபட்சப் பிரசவத்தில் தலைப்பகுதிதான் முதலில் பிரசவமாகும். இது 96 சதவீத கர்ப்பிணித் தாய்மார்களிடையே நிகழக் கூடியதாம். சில தாய்மார்களுக்குப் பிரசவத்தில் புட்டம் முதலில் பிரசவிக்கம். ஒரு சில தாய்மார்களுக்குப் பிரசவத்தில் முதலில் கைகளோ, கால்களோ பிரசவிக்கலாம். உதாரணத்திற்கு, கடைசி மாத்தீட்டு ஜூன் மாதம் முதல் தேதியில் ஆரம்பித்திருந்தால், அதோடு ஏழு நாட்களைக் கூட்டினால் ஜூன் எட்டாம் தேதி வரும். அதிலிருந்து மூன்று மாதங்கள் பின்னோக்கிச் சென்றால் மார்ச் மாதம் வரும். ஆக, குழந்தை பிரசவிப்பதை நாம் தோராயமாக ‘மார்ச் எட்டாம் தேதி’ எனக் கணக்கில் கொள்ளலாம். ஒரு சிறு சதவீத தாய்மார்களே அந்தக் கணக்கிடப்பட்ட தேதியில் பிரசவிப்பார்கள். அறுபது சதவித தாய்மார்கள் கணக்கிடப்பட்ட தேதியில் ஒர வாரம் முன்னரோ அல்லது பின்னரோ பிரசவிப்பார்கள்.
கர்ப்பப்பையில் குழந்தையின் நிலை
கர்ப்பப்பையில் குழந்தை எந்த நிலையில் இருக்கும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முதுகுத் தண்டு முன்புறமாக வளைந்து, தலை வளைந்து, தாடை மார்பு எலும்பின் மேல் பட்டுக்கொண்டும், கைகள் வளைந்து மார்பின் குறுக்காக மடிந்து, கால்கள் வளைந்து தொடைகள் வயிற்றின் மீதும், முழங்கால்கள் வளைந்து தொடைகளின் மீதும் இருக்கும்.
பிரசவிக்கும் நிலை
பிரசவம் ஏற்படும்போது குழந்தை இருக்கும் நிலையைத்தான் ‘பிரசவிக்கும் நிலை’ என்போம். சாதாரணமாக அதிகபட்சப் பிரசவத்தில் தலைப்பகுதிதான் முதலில் பிரசவமாகும். இது 96 சதவீத கர்ப்பிணித் தாய்மார்களிடையே நிகழக் கூடியதாம். சில தாய்மார்களுக்குப் பிரசவத்தில் புட்டம் முதலில் பிரசவிக்கம். ஒரு சில தாய்மார்களுக்குப் பிரசவத்தில் முதலில் கைகளோ, கால்களோ பிரசவிக்கலாம்.

Monday, April 7, 2014

சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு




லண்டன்:

 உலகிலேயே முதல் முறையாக சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான எக்ஸ்ரே ஒளியை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 50 மில்லியன் ஆண்டு பழமையான தாவர படிமங்களையும் துல்லியமாக படம் பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் டயமண்ட் லைட் சோர்ஸ் நிறுவனம் இணைந்து அதிக பிரகாசமுள்ள ஒளி பற்றி ஆய்வு செய்தன. அதில் சூரிய ஒளியை விட பல மடங்கு அதிக பிரகாசமாக ஒளிரும் எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்துள்ளன.

இது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய படிமங்களையும் இந்த எக்ஸ்ரே ஒளிக்கதிர்கள் மூலம் துல்லியமாக ஆராய முடியும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தாவரத்துக்கும் அதே இனத்தை சேர்ந்த தற்போதைய தாவரத்துக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், ரசாயன குணங்கள், அவற்றால் ஏற்படும் மாறுபாடுகள் குறித்து இந்த புதிய எக்ஸ்ரே கதிர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானி பில் மேனிங் கூறுகிறார்.

ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு...


ஒட்டிப்போன கன்னம் உப்புவதற்கு... என்று காத்திருக்கும் உள்ளங்களுக்கான சில குறிப்புகள்...

* தினமும் குளிப்பதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் வெண்ணெயுடன் சிறிது சர்க்கரை கலந்து கன்னங்களில் தேய்த்து வாருங்கள். ஒட்டிய கன்னங்கள் உப்ப ஆரம்பிக்கும்.

* ஆப்பிளை நறுக்கி அரைத்து, கன்னப் பகுதியிலிருந்து காது வரை தடவி, தினமும் `பேசியல் ஸ்ட்ரோக்' கொடுத்து வந்தால், ஒரே வாரத்தில் அழகான கன்னம் வந்துவிடும். ஆலிவ் ஆயிலை பயன்படுத்தி சமைத்துச் சாப்பிடுவது கன்னத்தை பொலிவாகக் காட்டும்.

* நல்லெண்ணெய் (அ) தேன் ஒரு டிஸ்பூன் எடுத்து, வாயில் போட்டுக் கொப்பளிப்பது, ஒட்டிய கன்னம் உள்ளவர்களுக்கான பயிற்சி.

* தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் மின்னும் கன்னம்.

* மூன்று ஆப்பிள் துண்டுகள், மூன்று கேரட் துண்டுகளை துருவி ஜுஸ் எடுத்து, இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், கன்னத்தில் சதை போட்டு... கலர், பளபளப்புக் கூடும்.

* ஒரு டீஸ்பூன் தேனுடன், அரைத்த பப்பாளி விழுது ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, பத்து நிமிடம் பேக் போட்டு வாஷ் பண்ணுங்கள். தேன், சருமத்தின் சுருக்கங்களைக் போக்கி, கன்னத்தை பளபளப்பாகும்.

* ஒரு கப் பாலில், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துண்டு சீஸ், ஒரு டேபிள்ஸ்புன் ஓட்ஸ் சேர்த்து கலந்து தினமும் காலையில் சாப்பிடுவதுடன், ஒரு கப் ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜுஸ் குடித்து வந்தாலே போதும்... சதைப் பிடிப்புடன் அழகான கன்னம் எழும்.

* முகத்துக்கு மஞ்சள்தூள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. அது சருமத்தை வறட்சியாக்கி, கன்னங்களைப் பொலிவிழிக்கச் செய்து விடும்.

* அன்றாட உணவில் பால், சீஸ் மற்றும் நீர்ச்சத்தான ஆகாரங்களை உண்ணாததும், கன்னம் ஒட்டிப்போவதற்கு ஒரு காரணம். இதனால், சருமம் வறண்டு, உதடுகளும் வெடிப்புக்கு உள்ளாகும். தினமும் உணவில் நட்ஸ், டிரை ப்ரூட்ஸ், நிறைய தண்ணீர் சேர்த்துக் கொண்டால் ப்ரெஷ் கன்னம் கிடைக்கும். எல்லாம் சூப்பர் இதற்கான டிப்ஸ் ஏதாவது... ப்ளீஸ்... என்பவர்களுக்கு...

பால் - 1 டீஸ்பூன்
வெண்ணை - 1 டீஸ்பூன்
பார்லித்தூள் - 2 டீஸ்பூன்

சிறிய கிண்ணம் ஒன்றில் இவை மூன்றையும் நுரை வருமாறு நன்கு அடித்துக் கலக்கவும். அப்போது கிடைக்கும் க்ரீமை, முகம், கழுத்து, கண்களைச்சுற்றி... என எல்லாப் பகுதிகளிலும் பூசவும்... அரை மணி நேரம் கழித்து, வெது வெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். பிறகு பாருங்கள், கன்னம் வெண்மைப் பொலிவுடன், முகம் மினுமினுப்புடன் பிரசாசிப்பதை.

ராஜம் முரளி
மூலிகை அழகு கலை நிபுணர்
போன்:044-24852196

Thursday, February 27, 2014

மகா சிவராத்திரியின் சிறப்பு



இந்த உலகத்தைப் படைத்தவர் பிரம்மா. காப்பவர் திருமால் என்பதை அனைவரும் அறிவோம். திடீரென்று இவர்களுக்குள் ஒரு தகராறு ஏற்பட ஆரம்பித்தது. படைத்தவர்  பெரியவரா, காப்பவர் பெரியவரா எள்பதுதாள் இந்நத் தகராறு. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமல்லவா? உடன் தானே தேவர்கள் அனைவரும் கூடினார்கள். இவர்களில் யாரைப் பெரியவர் என்று எவ்விதம் முடிவு செய்வது என்று எ ண்ண ஆரம்பித்தார்கள்; கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். பிரம்மா திருமால் இவர்களில் ஈசனின் அடிகளையும் முடிகளையும் முதலில் கண்டு வருகிறவரே சிறந்தவர் , முதன்மையானவர் என்ற முடிவிற்கு வந்தார்கன். உடனே இருவரும் விரைந்தார்கள்.

திருமால் பன்றி உருவம் கொண்டு பாதாளம் செல்ல ஆரம்பித்தார். பிரம்மா வானத்தில் பறக்க ஆரம்பித்தார். இருவரும் கடின உழைப்பை மேற்கொண்டார்கள். வான மண்டலத்தைச் சுற்றி வந்தவராலும் முடியைக் காண முடியவில்லை. பன்றி உருவம் கொண்டு பாதாளத்திற்குச் சென்றாலும் எதையுமே செய்ய முடியவில்லை; இருவருமே  சோர்வு கொண்டவர்களாகக் காணப்பட்டனர். இவர்களின் கவலையைப் போக்குவதற்காக அன்னை பார்வதி தேவி ஜோதி வடிவத்தில் காட்டினார். இவர்கள் இருவருக்கும் அருள் புரிந்த காலம் மாசி மாதம், தேய்பிறையில் சதுர்திதியின் போதுதான்; நேரமோ நடு இரவாகும். இதுதான் சிவராத்திரியாகப் போற்றப்படுகிறது.

சும்மா இருக்காமல் விளையாட்டாக ஈசனின் கண்களைப் பொத்த இந்த உலகத்தை இருள் தழுவிக் கொண்டது. எனவே, அனைவரும் செயலிழந்தனர். இவ்விதம் தாம் செய்த குற்றத்திற்குத் தண்டனை பெறுவதற்காக அன்னையார் நான்கு ஜாமங்களிலும் ஈசனைப் பூஜித்து வழிபட்டாள். அம்மையாருக்கு என்ன வரம் வேண்டும் என்று ஐயன் கேட்கவும், ' இந்த இரவு தங்கள் பெயராலேயே ' சிவராத்திரி ' என்று போற்றப்பட வேண்டும். விதிப்படி தங்களைப்போற்றி வணங்குபவர்களுக்குத் தாங்கள் அருள் பாலிக்க வேண்டும் என்றாள்; ஐயனும் அதற்கு இசைந்தார். இரவு 12 மணிக்கு மேல் ஒரு மணிக்கு இடைப்பட்ட காலத்தில்தான் பெருமான் இலிங்கமாக உருக்கொண்ட காலமாகும்.

இந்த வேளையில் இநைவனைப் பூஜித்து வருபவர்கள் அனைவரும் பெரும் பேறுகள் அடைவார்கள். தேவர்கள் அனைவரும் மாதந்தோறும் வருகின்ற சிவராத்திரியை கொண்டாடுவார்கள். மாசி மாதத்தில் பிரம்மாவும், பங்குனி மாதத்தில் விஷ்ணுவும், சித்திரை மாதத்தில் உமா தேவியும், வைகாசி மாதத்தில் சூரிய பகவானும், ஆனி மாதம் உருத்திரனும், ஆடி மாதம் முருகப் பெருமானும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் நாகராஜனும், ஐப்பசியில் இந்திராதி தேவர்களும், கார்த்திகை மாதத்தில் சரஸ்வதியும், மார்கழியில் இலட் சுமியும், தை மாதத்தில் ஈஸ்வரனும், கொண்டாடுவதாகக் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரியன்று இரவெல்லாம் கண் விழித்து அபிஷேக ஆராதனை செய்ய வேண்டும். ஈசனின் திருநாமத்தை உச்சரித்த வண்ணம் இருக்க வேண்டும். நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று 5 வகைப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியன்று இரவு சிவராத்திரி வரும். மாசி மாதம் வரக்கூடிய சிவராத்திரி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்று இறைவன் சுயம்புவாக  , ஜோதி வடிவமாக , அடியும் முடியும் இல்லாத பரம்பொருளாக நமக்கு அருள் செய்வார். சிவராத்திரி சிறப்புறக் கொண்டாடப்படும் இடங்கள் 12 என்று கூறப்படுகிறது.

சோமநாதம், ஸ்ரீ சைலம், உஜ்ஜையினி, ஓம் காரம், வைத்ய நாதம், பீம சங்காரம், இராமேசுவரம்,  நாகேசம், காசி, திரியம்பலம், வேதாரம், குக மேசம், ஆகியவைதான் 12 சிறப்பான இடங்கள். ஆனால் இவை தவிர சிவஸ்தலங்கள் அனைத்திலும் மகா சிவராத்திரிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். மேற்குறிப்பிட்ட 12 இடங்களும் ஜோதி லிங்கஸ்தலங்களாகும். எனவேதான் சிறப்பைப் பெற்றன எனலாம். மற்ற நாட்களில் சிவபெருமானைச் சிவஸ்தலங்களுக்கு சென்று வழிபடாவிட்டாலும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் மேற்கொண்டு வணங்கி வருபவர்களுக்கு எல்லாம்  வல்ல இறைவன் அருள் தந்து காப்பான் என்பது உறுதி.



சிவராத்திரி கண் விழிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சிவராத்திரி கண் விழிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும்.

உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்று சொல்லப்படுகிறது.

இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம். சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத்தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன.

தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர்வு விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தை தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.

Saturday, December 28, 2013

“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!




வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர்.
வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.
ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான்.
ஆஃப்ரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவகள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும்.
என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது.
எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, ‘கல்யாணமாகாதவள்’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம்.
பெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே…
அப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம்.
அம்மா என்னிடம் வந்து, ‘‘உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்’’ என்றார்.
அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.
‘‘பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி’’ -அம்மா அறிவுரை சொன்னாள்.
சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டேன்.
‘‘வாரிஸ்’’
அம்மா திடீரென்று எழுப்பினாள்.
நாங்கள், தூரத்துல் தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
‘‘இப்படி உக்காருவோம். அவ வருவா.’’ என்றார் அம்மா.
வானம் நன்கு விடிந்திருந்தபோது, ‘சர்க், சர்க்’ என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.
படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காரு’ என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.
‘‘இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.’’
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.
பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
‘த்துப்..’
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.
நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி…
‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
‘அய்யோ…!’ -நரக வேதனை.
அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.
‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.
தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.
முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்… திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.
மரண வேதனை.
இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.
என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.
நாட்கள் ஓடின.
நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘‘வாரிஸ்! இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார்.
தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.
‘‘ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா… உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’
அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார்.
‘அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!’
நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு,
‘‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன்.
அவர் என் முகத்தை திருப்பி,
‘‘எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!’’ என்றார்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’
நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன்.
அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன்.
‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார்.
அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.
அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு.
‘‘வாரிஸ்! வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.’’
‘‘வணக்கம்.’’
நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது.
சிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார்.
நான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன்.
மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார்.
‘‘வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.’’
‘‘அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்’’
‘‘அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்கு… அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு’’ அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார்.
அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.
‘த்தூ..
இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன்.
அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.
நான் அம்மாவை நெருங்கி,
‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன்.
‘‘அடிப்பாவி. எங்க ஓடுவ?’’
‘‘மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.’’
‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள்.
நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.
அம்மாதான்.
‘‘அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு’’ -கிசுகிசுத்தாள்.
நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழுந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.
‘‘எதுக்கும் கவலைப்படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே’’ என்றாள்.
‘‘சத்தியமா’’
சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.
பாலைவனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.
எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கரடு முரடான பாலைவனம் அது.
அந்தப் பயணம், முடிவில்லாத ஒன்றாக எல்லையற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்தபோது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது.
‘’வாரிஸ், வாரிஸ்’’
திடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னை அவர் பிடித்துவிட்டால்?
இப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும்.
நான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது. அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும்வரை நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்கவேண்டும்.
அப்பா தோற்றுவிட்டார்.
சூரியன் வேகமாக மறையத் தொடங்கியது.
ஆனால், இது நேற்றைய இரவைப்போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒருசேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்…
‘உஃஃப், உஃஃப்…’
வெப்பத்தில் கொப்பளித்து, பாறைகளில் மோதி, ரத்தச் சகதியாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது கால்கள்.
அப்படியே தூங்கிவிட்டேன்.
சூரியன் கண் திறந்திருக்கவேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல.
நடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன்.
அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குரட்டைவிடுவதுபோல் இருந்தது.
‘அப்பாவாக இருக்குமோ?!’
பதறியடித்து எழும்பினால், ‘கடவுளே..! அது ஒரு சிங்கம்.’
என்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன்.
நீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.
இப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன்.
‘‘வா! வந்து என்னைச் சாப்பிடு.’’ -சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.
எச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ! ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன்.
‘ஹ.. ஹ…’ என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது.
சந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.
அப்படியானால்?
கடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.
‘அது என்னவாக இருக்கும்?’
நம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன். வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன். ஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.
வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.
அப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள்.
மொகாதிஷுவில் செல்வாக்குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்போதும் பாலைவனத்தில் அலைந்து திரியக்கூடிய நாடோடி, என் அப்பா. அம்மாவை கல்யாணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தபோது, ‘வாய்ப்பே இல்லை’ என்று என் பாட்டி விரட்டிவிட்டாராம். எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கு 16 வயதாகும்போது, அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்துதான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார்.
அம்மா எப்போதும் என்னை ‘அவ்டஹொல்’ என்றுதான் கூப்பிடுவார். அவ்டஹொல் என்றால், ‘சின்ன வாய்’ என்று அர்த்தம். ஆனால், ‘வாரிஸ்’ என்பதுதான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் ‘பாலைவனப் பூ’ என்று அர்த்தம்.
நான் ஓடி வந்த கதையை விட்டுவிட்டேனே! சுமார் 300 மைகள் கடந்து, புண்ணாகிப்போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிஷுவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை சுற்றி நிறைய பனைமரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப்பட்டிருந்தன. மொகாதிஷு ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலைநகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக்கொண்டு நடந்தேன்.
ஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன் ‘எங்க அக்கா அமென் தெரியுமா?’ என்று விசாரித்தேன்.
‘‘உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!’’ -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து,
‘‘இவளைக் கொண்டுபோய் அமென் வீட்டில் விடு’’ என்றாள்.
நான் அக்கா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
நல்லவேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நான்தான் அவளையும் பார்த்துக்கொண்டேன். அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு முதலாளிபோல் என்னிடம் நடந்துகொண்டாள்.
மொகாதிஷுவில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன.
நான் என் சித்தி வீட்டுக்குப் போய், ‘‘கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா?’’ என்றேன்.
எதிர்பார்த்ததைவிட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்.
‘தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டுகூட இருக்கா.’ என்றார்கள்.
வழக்கம்போல், அங்கேயும் நான்தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டேன்.
அம்மாவை தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம்! எல்லா வேலைகளையும் அவள் ஒருத்திதான் செய்தாக வேண்டும்.
‘நான் ஏதாவது செய்தாகவேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்பவேண்டும்.’ என்று தீர்மானித்தேன்.
பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வேலைக்குப் போகவேண்டுமே. தேடினேன். ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை. எல்லோரும் நான், ஓடிப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது.
நாட்கள் ஓடியது…
ஒரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர்.
‘‘அடுத்த நாலு வருஷமும் லண்டன்லதான் இருக்கப்போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு’’ -முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர்.
நான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு,
‘‘நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ்’’ என்று கெஞ்சினேன்.
சித்தி, ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ‘‘ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக்கூடாது. இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா.’’ என்றார்.
சித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார்.
‘‘ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம்.’’
மறுநாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம்! முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப்பட்டிருந்தது.
ஒரு வழியாக லண்டன் வந்தாகிவிட்டது. ஆடம்பரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன். சித்தப்பாவுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது.
மரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன். ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள். ‘அம்மாடி!’ அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை. என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொர்க்கத்தில் உறங்கினேன்.
அடுத்த நாள்…
பெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம்போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்கவேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக்கொடுத்தாள்.
எனக்கு 16 வயது இருக்கும்போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்துபோய்விட, அவளது மகள் எங்களோடு வந்துவிட்டாள். நான்தான் அவளை கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.
நான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்துகொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில்தான் படித்தாள்.
பிறகு, எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்.
வீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, ‘‘என்னதிது?’’ என்றேன்.
‘‘இதுவா? இந்த ஆள் ஒரு போட்டோகிராபராம்’’
‘போட்டோகிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை?’
ம்ம்… நான் அதை மறந்துவிட்டேன்.
இதற்கிடையே சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லிவிட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறுநாளே ஊருக்குத் திரும்பியாகவேண்டும். இதை நினைக்கும்போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது.
‘‘சித்தப்பா! என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்’’ -நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன்.
பயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’’ சித்தப்பா கோபப்பட்டார்.
‘‘பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்’’
என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டுவிட்டுக் கிளம்பினார்.
‘யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர்கொள்ளவேண்டும்’
எனக்குள் பயம் பரவத் தொடங்கியது.
அடுத்த நாள் கடை வீதி ஒன்றில் ‘ஹல்வு’வைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள்.
‘‘என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே?’’ என்றாள் சோமாலியில்.
நாங்கள் முன்பின் அறிமுகமானவர்கள் இல்லை.
‘‘என்னத்தைச் சொல்ல! என் சித்தப்பா தூதரக அதிகாரியா வேலை பார்த்தார். இத்தனை நாள் அவரோடுதான் இருந்தேன். இப்போ அவர் வேலை முடிஞ்சு சோமாலியா போய்ட்டார். எங்க தங்கறது, எப்படி சாப்பிடுறதுன்னு இப்பவரை தெரியலை’’
ஹல்வு, என்னை அமைதியாகப் பார்த்தாள்.
‘‘ஒய்.எம்.சி.ஏ-ல எனக்கு ஒரு ரூம் இருக்கு. இன்னிக்கு ராத்திரி அங்கேயே தங்கிக்கோ’’
இப்போது, நானும் ஹல்வுவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தோம்.
‘‘மெக் டொனால்டில் வேலைக்குப் போறியா?’’ -ஹல்வு கேட்டாள்.
‘‘சான்ஸே இல்லை. எனக்கு இங்கிலிஷ் தெரியாது. என்கிட்ட வொர்க் பெர்மிட்டும் இல்லை’’
ஹல்வு என்னை விடவில்லை. என்னை மெக்டொனால்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் என் வேலை.
வார இறுதியில், ஹல்வு என்னை டிஸ்கொதேவுக்கு அழைத்துச் சென்றாள். அதுதான், கட்டுப்பட்டியான ஆஃப்ரிக்க வளர்ப்பிலிருந்து நான் வெளியேற உதவியது. கருப்பு, வெள்ளை, ஆண், பெண் எல்லோரிடமும் பேசினேன். ஜஸ்ட் பேசினேன். அவ்வளவுதான். இந்தப் புதிய உலகில் எப்படி வாழ்வது என்பதை ஹல்வு மூலமாக கற்றுக்கொண்டேன்.
இனிதான், என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம்.
‘‘இந்த ஆளுக்கு என்னதான் வேணுமாம்?’’ ஓய்வு நேரம் ஒன்றில், போட்டோகிராபரின் விசிட்டிங் கார்டை காட்டி ஹல்வுவிடம் கேட்டேன்.
‘‘அதை அவர்கிட்டயே கேளு. போனைப் போடு’’
‘‘நான் பேசுறது மொக்க இங்கிலீஷ். நீயே பேசு’’
‘‘‘மைக் கோஸ்.’ அவர்தான் அந்த அன்புக்குரிய போட்டோகிராபர். அன்று, மைக்கின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபோது, நான் வேறொரு உலகத்தில் விழுந்ததுபோல் உணர்ந்தேன். சுவர் முழுக்க அழகழகான பெண்கள் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.
மைக் என்னிடம், ‘‘யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல். நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.
‘‘இதைப் போலவா? இந்த பொண்களைப் போலவா?’’
‘‘ஆமாம்’’
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘‘எவ்ளோ பணம் தருவீங்க?’’
‘‘ஹ.. ஹ..! வா, இப்படி வந்து நில்லு’’ மைக், தன் காமிராவை கையில் எடுத்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு… ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர். எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன. எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.
‘‘ஒகே. போய் கண்ணாடியைப் பார்’’
‘‘வாவ்…! நானா இது?’’ பட்டுப்போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்… அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம்போல மின்னினேன்.
‘‘ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்… க்ளிக், க்ளீக், க்ளிக்…’’ -மைக்கின் விரல்கள் க்ளிக்கொண்டே இருந்தன.
வேலைக்கார வாரிஸ், இப்படியாகத்தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.
சில நாட்களுக்குப் பிறகு… ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.
‘‘இங்கே என்ன நடக்குது?’’
‘‘பைரேலி காலண்டர்’’
‘‘ஓ… சூப்பர். அப்டினா, என்ன?’’
போட்டோகிராபர் ‘டெரன்ஸ் டொனோவன்’தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.
‘ஸ்டன்னிங் பியூட்டிஃபுல்.’
ஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித்திருந்தார்கள்.
‘‘இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப்போகிறோம். நீதான் அந்த மாடல்’’ –டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார்.
ஷூட்டிங் முடிந்தபோது என் படம் ‘அட்டை’க்குத் தேர்வாகி இருந்தது.
ஒரு மாடலாக, நான் வேகவேகமாக வளர்ந்தேன். பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழைபோல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன. ‘ரெவ்லான்’ விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் ஹுட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன். எல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகைகளில் இடம் பிடித்தேன். ஜேம்ஸ்பான்ட் படத்தில்கூட நடித்தேன்.
ஆனால், வெற்றிகரமான இந்த வாழ்க்கைப் பயணத்தில், என் பழைய தழும்புகள் எதுவும் மறையவில்லை. எல்லாம் அப்படியே இருந்தன. அந்த சின்னஞ்சிறிய துவாரம் வழியே ஒரு சொட்டு யூரின் மட்டுமே வெளியேறியது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் எனக்கு பத்துப் பதினைத்து நிமிடங்கள் தேவைப்பட்டது. மாதவிடாய் நேரம் என்றால், இந்தக் கொடுமை பலமடங்கு வீரியத்தோடு இருக்கும். படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு இரவும், ‘தூக்கத்தின்போதே செத்துவிட்டால் தேவலாம்’ என்று நினைப்பேன்.
முன்பு ஒருநாள் சித்தப்பா வீட்டில் இருந்தபோதே, மாதவிடாய் நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். சித்திதான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், உண்மைக் காரணம் என்னவென்பதை நான் டாக்டரிடம் சொல்லவில்லை.
‘‘உதிரப்போக்கை நிறுத்தணும்னா, கர்ப்பத்தடை மாத்திரை ஒண்ணுதான் தீர்வு. வேற வழியில்லை’’ என்றார் டாக்டர்.
எல்லா டாக்டர்களும் இதையேதான் சொன்னார்கள்.
இந்த மாத்திரைகள் எனக்குள் வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணியது. என் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கின. உடல் எடை கூடியது.
‘இந்த வேதனைக்கு, உதிரப்போக்கையே தாங்கிக்கலாம்’ என்று தோன்றியதால், மாத்திரைகளை நிறுத்தினேன்.
மீண்டும் வலி.
‘‘சித்தி! ஸ்பெஷல் டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்’’
‘‘பார்த்து? என்னன்னு அவர்கிட்ட சொல்வே?’’
சித்தியின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்பது தெரியும்.
‘ஆஃப்ரிக்க பழங்குடிப் பெண், தன் அந்தரங்கத்தைப் வெள்ளைக்காரனிடம் காட்டுவதா? எவ்வளவு பெரிய குற்றம்!’
காலங்கள் உருண்டோடின. இப்போது நான் சொந்தக் காலில் நிற்கிறேன். ஒய்.எம்.சி.ஏ தோழியை அழைத்துக்கொண்டு டாக்டர் ‘மேக்ரே’வை சந்தித்தேன்.
‘‘டாக்டர். நான் சோமாலியாவில் இருந்து வர்றேன். எனக்கு…’’ அடுத்த வாக்கியத்தை முடிக்கவில்லை.
‘‘இட்ஸ் ஓகே. சரி பண்ணிடலாம். போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா’’ என்றார்.
நர்ஸை கூப்பிட்டு, ‘‘இங்க, சோமாலி தெரிஞ்ச லேடி இருக்காங்கல்ல. அவங்களையும் கூட்டிட்டு வாங்க.’’ என்றார்.
ஆனால், வந்தது லேடி இல்லை ஆம்பிளை.
அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.
‘‘உண்மையிலேயே உனக்கு விருப்பம்னா, இவங்க திறந்து விடுவாங்க. ஆனா, இது நம்ம பன்பாட்டுக்கே விரோதம். இது உங்க வீட்டுக்கு தெரியுமா?’’ என்றான்.
‘‘தெரியாது’’
‘‘முதல்ல அவங்ககிட்ட பேசு.’’ -அவன் ஒரு அக்மார்க் சோமாலியன். போய்விட்டான்.
கடந்த வருடமே நான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும். ஆனால், அப்போது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. டாக்டர். மேக்ரே மிகவும் நல்லவர். அவருக்கு நான் எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.
‘‘நீ மட்டும் இல்லை வாரிஸ். குடும்பத்துக்குத் தெரியாமல் எகிப்திலிருந்தும், சூடானிலிருந்தும், சோமாலியாவிலிருந்து ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். பாவம், சில பெண்கள் கற்பமாகக்கூட இருப்பார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.
சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருக்கும்.
ஒருநாள், டாய்லெட்டில் உட்கார்ந்து நான் சிறுநீர் கழித்தபோது…
‘உஷ்ஷ்ஷ்ஷ்…’
ஆஹா! என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தை… வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உலகில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது.
1995-ம் ஆண்டு. என்னுடைய வாழ்க்கையை ஆவணமாக்குவதென்று பி.பி.சி தீர்மானித்தது.
‘‘நல்லது. ஆனால், சோமாலியாவுக்குச் சென்றதும் என் அம்மாவைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவவேண்டும்’’ -டைரக்டர் கெரி பொமிராயிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.
என் குடும்பம் நகர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் பி.பி.சி குழுவினர் தேடத் துவங்கினர்.
சிலர், ‘நான்தான் உன் அம்மா’ என்று வந்தனர்.
‘‘உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்னு சிலது இருக்கும். அது என்னன்னு யோசி’’ என்றார் கெரி.
‘‘ஓ… ஆமால்ல! என்னை ‘அவ்டஹொல்’னு எங்க அம்மா கூப்பிடுவாங்க’’
‘‘இந்தப் பேரை அவங்களுக்கு ஞாபகம் இருக்குமா?’’
‘‘நிச்சயமா’’
இப்போது அவ்டஹொல் என்கிற வார்த்தை சீக்ரட் பாஸ்வேர்டாக கொண்டு செல்லப்பட்டது. ஒருநாள் பி.பி.சி ஊழியர்கள் என்னை அழைத்து, ‘‘அநேகமா உங்க அம்மாவை கண்டுபிடிச்சிட்டோம்னு நினைக்கிறோம். அந்தம்மாவுக்கு அவ்டஹோல் என்கிற வார்த்தை மறந்துபோச்சு. ஆனா, தனக்கு வாரிஸ்னு ஒரு பொண்ணு இருந்ததாகவும், அவ லண்டன் தூதரகத்துல வேலை பார்த்தாகவும் சொல்றாங்க’’ என்றனர்.
நாங்கள் உடனடியாக எத்தியோப்பியா பறந்தோம். அங்கிருந்து சிறியரக விமானம் ஒன்றில், ‘கலாடி’க்கு பயணம். எத்தியோப்பிய&சோமாலிய எல்லை கிராமமான அங்குதான், உள்நாட்டுப் போரிலிருந்து உயிர்காத்துக்கொள்ள அகதிகள் முகாம் அமைத்து இருந்தனர்.
கடைசியில் அது என் அம்மாவே இல்லை.
ஆனால், நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக அலசினோம். அப்போதுதான் அந்த வயதான மனிதர் வந்தார்.
‘‘என்னை தெரியுதா? நான்தான் இஸ்மாயில். உங்க அப்பாவோட நெருங்கிய நண்பர். எனக்கு காஸ் வாங்க பணம் தந்தா, நான் உங்கம்மாவை கண்டுபிடிச்சித் தர்றேன்’’ என்றார்.
பி.பி.சி குழு ஒப்புக்கொண்டது.
மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் அம்மா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அடுத்த நாள் காலை, ஜெரி என்னிடம் வந்து,
‘‘நீ நம்பப்போறதில்லை. அந்த ஆள் வந்துட்டார். அது உங்க அம்மாதான்’’ என்றார். நான் அவள் முகத்தைக்கூட பார்க்கவில்லை. முக்காடு அணிந்தபடி ட்ரக்கில் இருந்து இறங்கும்போதே தெரிந்துவிட்டது.
‘‘அம்மா…’’
ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டேன்.
ட்ரக் வந்தபோது அப்பா தண்ணீர் தேடச் சென்றுவிட்டாராம். ஆனால், என் சின்னத் தம்பி அலி வந்திருந்தான். நானும் அம்மாவும் பல விஷயங்களைப் பேசினோம்.
‘‘அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. கண் பார்வையும் சரியா தெரியல. அவருக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தந்தா நல்லா இருக்கும்’’ என்றார் அம்மா.
திடீரென்று, அலி என்னைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
‘‘டேய்! நான் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகப்போவுது. விட்றா!’’ என்றேன்.
‘‘என்னது கல்யாணமா? உனக்கு என்ன வயசு?’’
‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் பண்ற வயசு’’
ஒரு வழியாக அலி, சமாதானம் ஆனான்.
‘‘எனக்கும் பேரப் பிள்ளையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு’’ என்றார் அம்மா.
அன்றிரவு நானும் அலியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி குடிசைக்கு வெளியே தூங்கினோம். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான். எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின. நான், மிகுந்த சந்தோஷமாகவும் மிக அமைதியாகவும் உணர்ந்தேன்.
மறுநாள் காலை… விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
‘‘அம்மா! போதுமான அளவுக்கு நீ உழைச்சிட்டே. இனிமே நீ ஓய்வெடுத்தாகணும். கிளம்பு என்கூட.’’ என்றேன்.
‘‘இல்லை. உங்க அப்பா இங்கதான் இருக்கார். அவரை நான்தான் பாத்துக்கணும். அவர் இருக்கிற இடம்தான் எனக்கு வீடு, நாடு எல்லாமே. முடிஞ்சா ஒண்ணு செய். சோமாலியாவுல எங்களுக்கு ஒரு வீடு வாங்கிக்கொடு. அது போதும்.’’
நான் அவளை இறுக அணைத்துக்கொண்டேன்.
‘‘அம்மா! நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். இதை மறந்துடாதே.’’
இப்போது நான் லண்டன் திரும்பிவிட்டேன். ஆனால், வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருந்தது. உலகத்தைப் பொறுத்த அளவில் நான், பிரபலமான ஒரு மாடல்.
மாதங்கள் உருண்டன. ஆண்டு, 1997. உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது.
‘‘சொல்லுங்கள். எப்போது உங்கள் போட்டோகிராபரை சந்தித்தீர்கள்? அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லையா?’’
‘‘இல்லை’’
‘‘என்ன?’’
‘‘ஆமாம். நீங்கள் நினைப்பதல்ல என் வாழ்க்கை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை லாரா. ஆனால், மாடலிங் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதியிருப்பீர்கள். நான் சொல்ல நினைப்பது அதுவல்ல. எனக்கு சத்தியம் செய்து கொடுத்தால், நான் உங்களுக்கு உண்மைக் கதையைச் சொல்கிறேன்.’’
ரிப்போர்ட்டர் ‘லாரா ஸிவ்’வின் கண்கள் அகல விரிந்தன.
‘‘ஐ டூ மை பெஸ்ட்’’ சொல்லிக்கொண்டே டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார்.
நான் என் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.
லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கதையை கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். என் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத உண்மையை, இப்போது உலகமே தெரிந்துகொண்டுவிட்டது.
‘‘ஆனால், செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.
3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூமையான பாறைக் கற்கள்தான்.
நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?
மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்றுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!’’
-பேட்டி வெளியான பிறகு வந்த அழைப்புகளை அடுத்து, ஐ.நா. அரங்கில் இப்படித்தான் பேசினேன். இப்போது, பெண் உறுப்பு சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ.நா என்னை நியமித்திருக்கிறது.
அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரியும். முதலில், அந்தக் கிழவனிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றினார். பிறகு சிங்கத்திடமிருந்து. அவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். ஒரு நாள், இந்தக் கொடுமையிலிருந்து அணைத்துப் பெண்களும் வெளியேறி சுதந்திரம் பெறுவார்கள்.
வாரிஸ், அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறாள்.

Mobile phone emergency numbers


நம் மொபைல் போனில் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க எண்கள்!

1.அவசர உதவி அனைத்திற்கும்————–911
2.வங்கித் திருட்டு உதவிக்கு ——————9840814100
3.மனிதஉரிமைகள் ஆணையம் ————–044-22410377
4.மாநகரபேருந்தில அத்துமீறல்————–09383337639
5.போலீஸ் SMS :- ———————————-9500099100
6.போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :——9840983832
7.போக்குவரத்து விதிமீறல் SMS : ————-98400 00103
8.போலீஸ் : —————————————–100
9.தீயணைப்புத்துறை :—————————-101
10.போக்குவரத்து விதிமீறல——————–103
11.விபத்து :——————————————–100, 103
12.ஆம்புலன்ஸ் : ———————————–102, 108
13.பெண்களுக்கான அவசர உதவி : ———–1091
14.குழந்தைகளுக்கான அவசர உதவி :——–1098
15.அவசர காலம் மற்றும் விபத்து : ————1099
16.முதியோர்களுக்கான அவசர உதவி:——1253
17.தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
18.கடலோர பகுதி அவசர உதவி : ————-1093
19.ரத்த வங்கி அவசர உதவி : ——————-1910
20.கண் வங்கி அவசர உதவி : ——————-1919
21.விலங்குகள் பாதுகாப்பு ————————044 -22354959/22300666
22.நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.. நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!

IMAGE : இஸ்ரேலிய ராணுவ
தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீன
தந்தையும் மகனும்

உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்..
உடுத்த உடையிருந்தால்..
தலை மேல் கூரையிருந்தால்..
உறக்கம் கொள்ள இடமிருந்தால்..
உலகின் 75 சதவிகித மக்களை விட நீங்கள் மேலானவரே!
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்..
உங்கள் பர்சில்
சிறிது சில்லறை இருந்தால்..
உலகின் முதல் 8 சதவிகித
பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!
நோய், நொடியின்றி,
புத்துணர்ச்சியோடு உங்கள்
பொழுது புணர்ந்தால்..
அதே நாளில் இறக்கப் போகும்
கோடி மக்களை விட நீங்கள் அதிகம்
ஆசீர்வதிக்கப்பட்டவரே!
நீங்கள் போரின் அனுபவம்
பெறாதிருந்தால்..
எந்த வித சித்திரவதைக்கும்
உள்ளாகாதிருந்தால்..
தினம் தினம் செத்துப் பிழைக்கும்,
கோடானு கோடி மக்களை விட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே!
மேற்கூறியவைகளை தங்களால்
படித்துப் பார்க்க முடிந்தால்..
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக
மனிதர்களை விடவும் நீங்கள் அதிகம்
கொடுத்து வைத்தவர்களே!!!

Thursday, December 26, 2013

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?



என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..
நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்

Monday, December 23, 2013

Phone missing?

உங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா? கவலையை விடுங்கள். இலகுவாக கண்டுபிடித்து விடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஜிமெயில் லாகின் செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம்.
குறிப்பு :உங்க மொபைலை யாரும் திருடி இருந்தால் அதை கண்டுபுடிக்க முடியாது ஏன் என்றால் உடனே வேற சிம் மாற்றி விடுவார்கள் (சிம் மட்டும் மாற்றினால் கூட நான் சொன்ன முறையில் கண்டு புடிக்கலாம்)
உதாரணமாக வீட்டில் வைத்த மொபைலை காணவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். அதுவும் silent mode.. சைலென்ட் வைக்காமல் இருந்திருந்தால் கூட ஈசியாக அந்த மொபைல்க்கு கால் செய்து எடுத்து விடலாம் ஆனால் சைலென்ட் வைத்து உள்ளோம் பிறகு என்ன?
வீடு முழுவதும் கஷ்டபட்டு தேடி நம்ம மொபைலை கண்டுபுடிப்போம் அல்லவா? நான் சொல்வதை முயற்சி செய்து பாருங்கள் சைலென்ட் silent வைத்து இருந்தாலும் ரிங் குடுக்க முடியும் உங்களுக்கு,
இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
வாங்க பதிவுக்கு போகலாம்
முதலில் கிழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்
குறிப்பு :உங்கள் கணினி அல்லது நண்பர்கள் கணினி அல்லது மொபைலில் காணமல் போன ஆண்ட்ராய்ட்டு மொபைலில் ஜிமெயில் லாகின் செய்த அதே
ஜிமெயில் முகவரியை லாகின் செய்து விட்டு கிழே உள்ள தளத்திற்கு
செல்லவும் https://www.google.com/android/devicemanager?u=0
உங்கள் மொபைல் மாடல் மற்றும் கடைசியாக எந்த இடத்தில் அந்த மொபைல் லாகின் செய்தது என்ற தகவல் இருக்கும் வலது பக்கத்தில் மேப் யிலும் வரைபடத்தில் அந்த இடத்தை பார்க்கலாம்.
அல்லது ரிங் என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல்க்கு ரிங் குடுக்க முடியும்!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பகிரவும்..!

LOVE YOUR WIFE!

மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க !


* நீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களைமனைவியுடன்மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றேசெலவிடுங்கள்.

* முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாகஇருந்து விடா தீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்தவிஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும்ஒன்றாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தால், அதில் வரும்கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில்மனைவிஇருக்கிறாள்என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.

* எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரி யாமல்கடலை’ போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூடபலமணிநேரம் பேசு வார்கள். அதே போன்று நீங்களும்பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள்என்று அர்த்தம் இல்லை. உங்கள்குடும்பத்துக்குதேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

* பூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி அந்த பூக்களை உங்கள்அன்பானமனைவிக்குவாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.
* சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்தஸ்வீட்டையும்வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களதுமனைவி அடை யும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.
* உங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாகநடந்துகொள்வானோ, அதே போன்றுநடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.
* உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா? நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்’ என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள்இப்படிகேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.


* மனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள்மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலேபொழியும். மொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம்அன்பாகஇருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காத லனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்! அதனால் காதலியுங்கள், மனைவியை..

BUSINESS நான்-ஓவன் தயாரிப்புகள்!

பணம் கொட்டும் தொழில்கள்: நான்-ஓவன் தயாரிப்புகள்!
இந்தத் தொழிலுக்கு போட்டி இல்லை என்பது பெரிய ப்ளஸ்பாயின்டாக உள்ளது!
ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்துவரும் சூழலில், நான்-ஓவன் தயாரிப்புகள்தான் அந்த இடத்தைப் பிடித்துவருகிறது.
கேரி பேக் முதல் பலவிதமான பொருட்களை இதன் மூலம் உருவாக்க முடியும். ப்ளாஸ்டிக்கைபோல இலகுவானது, உறுதியானது; அதேசமயம், காகிதப்பை போல காற்று, நீர்புகும் தன்மை கொண்டது. மறுசுழற்சி கொண்டது என்பதால் இப்போது அனைத்துத் தேவை களுக்கும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நான்-ஓவன் மூலம் கேரிபேக், தாம்பூலப்பை தவிர, தலையணை உறை, சீட்கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், ஏப்ரான், கிளவ்ஸ் போன்ற பலவகைகளில் பொருட்களை செய்யமுடியும். தற்போது மெடிக்கல் சென்டர்களில் ஸ்கேன் ரிப்போர்ட் கவர், ட்ராவல்ஸ் நிறுவனங்களில் சீட் கவர் போன்றவை இந்த நான்-ஓவன் மெட்டீரியல்களுக்கு வந்துவிட்டன. வழக்கமாக ஒரே தயாரிப்பாக இல்லாமல், புதிய புதிய டிசைன்களில் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்பதால் வருமானத்துக்கு பஞ்சமிருக்காது.
ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகைகள் உள்ளன. செமி ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் மூலம் குறிப்பிட்ட வகைகள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதால், நாம் ஆட்டோமேட்டிக் இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யும் திட்டத்தைப் பார்ப்போம்.
திட்ட அறிக்கை!
முதலீடு விவரம்:
வாடகை: அந்தந்தப் பகுதி நிலவரப்படி
இயந்திரங்கள் : 31,97,249
இதில் கட்டிங் மெஷின், ஸ்லிட்டிங் மெஷின், ப்ரின்டிங் மெஷின், கம்ப்ரஸர், ஸ்டெபிலைஸர் என அனைத்து இயந்திரங்களும் அடக்கம்.
நமது பங்கு 5% = 1,59,862
மானியம் 25% = 7,99,312
வங்கிக் கடன் 70% = 22,38,075
(அ) ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள்.ஒருநாளின் ஒரு ஷிப்டுக்கு 350 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தேவையான நான்-ஓவன் பேப்ரிக் ரோல் ஒரு கிலோ 150 ரூபாய். பலவித கலர்களில், அழுத்தங்களில் (ஜி.எஸ்.எம்) வாங்கிக்கொள்ளலாம். (350X150X25 = 13,12,500)

Friday, December 20, 2013

பிரதோஷ காலத்தில் இப்படித்தான் வலம் வரவேண்டும்


ஸ்ரீ ஸ்ரீ ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ காலத்தில் இப்படித்தான் வலம் வரவேண்டும்

HARD DISK -ஐ பாதுக்காப்பது எப்படி?


உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செய்ய சொல்லி அப்படி செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய்ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தான் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன் மூலம் உங்கள் Hard Disk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண்போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab ஐ தெரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என்பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள் Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று. நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது எனவே இதனை இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக் கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பிக்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட்ரைவ் ) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலில் chkdsk (check Disk )செய்யுங்கள். உங்கள் Hard Disk ஐ காப்பாற்றுங்கள்.

Thursday, December 19, 2013

FIRST AID அவசர கால முதலுதவி முறைகள்...!




வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.
வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.
வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

Wednesday, December 18, 2013

EXPORT PART 3 paypal

பே பால் மூலமாக ஏற்றுமதி பணம்

இதுவரை ஈகாமர்ஸ் இணையதளங்களின் மூலம் விற்கும் போது 500 டாலர் வரையே பே பால் மூலமாக பெறமுடியும் என்ற தடை இருந்தது. அதாவது 500 டாலருக்கு மேல் இ பே போன்ற இணையதளங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் பொருட்களுக்கு பணம் பே பால் மூலமாக வாங்க முடியாது என்று இருந்ததை, தற்போது 3000 டாலராக ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது.


Paypal சில பயன்மிக்க தகவல்கள்..!

பேபால்.. இணையத்தில் நாம் அடிக்கடி பார்க்கும், கேள்விப்படும் வார்த்தை. பேபால் என்றால் என்ன? இது எதற்குப் பயன்படுகிறது? யார் யாரெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும். இந்நிறுவனம் எங்கிருக்கிறது? இதனுடைய தோற்றம் என்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பேபால் என்றால் என்ன?

(What is paypal)
இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடுக்கலாம். பணத்தை மற்றவர் கணக்குகளில் போடலாம். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இணையதளங்களின் மூலம் வாங்கும் பொருட்களுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம்.

நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்க கூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். முந்தைய கால Checqe, Demand draf, Money order போன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த ஒரு Digital முறையில் பணப்பட்டுவாடா செய்ய பயன்படும் E-commerce நிறுவனமே paypal.

Paypal நிறுவனத்தின் தொடக்கம்:
(beginning of Paypal company)
Paypal நிறுவனம் 2000ம் ஆண்டில்தான் நிறுவபட்டது. இந்நிறுவனம் 2002ம் வருடம் E-Bay நிறுவனத்தின் துணை நிறுவனமாக Subsidiary மாறிற்று. இணைய தள மோசடிகளை Internet Frauds தடுக்கும் வகையில் 2008ம் ஆண்டு ப்ராடு சயன்சஸ் என்னும் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு பலம்பெற்றது. இன்று வரை பேபால் நிறுவனம் 15 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து 200 க்கும் மேற்பட்ட சந்தைகளில் இணைந்து தன்னுடைய வர்த்தகத்தை தொடர்ந்து பாதுகாப்பாக செய்து வருகிறது.

200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. Paypal பத்தொன்பதுக்கும் மேற்பட்ட currency யில் கணக்கை வைத்துக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. (அதாவது இந்தியாவின் rupee, அமெரிக்காவின் dollar போன்று).

ஒரு நாட்டு கரன்சி மதிப்பிலிருந்து மற்றொரு நாட்டிற்கான கரன்சி மதிப்பிற்கு மாற்றி பணத்தை நமது கணக்கில் பணத்தைச் சேர்க்கும் வசதியைப் பெற்றிருப்பதே பேபாலின் முக்கியமான பயனாகும். மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதியை இது அளிக்கிறது. இந்நிறுவனத்தில் Security key இதற்கு ஒரு சரியான உதாரணம் ஆகும்.

விரைவாக , மிக எளிமையாவும் பணத்தை இணையத்தளம் வழியாக பணம் பரிவர்த்தனை அல்லது பணப் பரிமாற்றம் செய்வதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது. தற்போது சில தளங்கள் இணையப் பண பரிவர்த்தனை வசதிகளைக் கொடுத்தாலும், Paypal நிறுவனத்திற்கு ஈடாக எதுவும் இன்னும் வரவில்லை. துல்லியம், பாதுகாப்பு, பயன்பாட்டில் எளிமை ஆகிய விஷயங்களில் Paypal-க்கு Paypal தான். இந்நிறுவனம் தனது சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த Paypal நிறுவனம் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது.

Paypal மூலம் பணத்தை செலுத்தும் முறை:

பேபால் மூலம் நீங்கள் பணத்தைச் செலுத்த உங்களிடம் கிரடிட் கார்ட், Internet banking வசதி கொண்ட வங்கிக் கணக்கு, டெபிட் கார்ட்(Debit Card) போன்ற ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் பேபால் கணக்கில் பணத்தைச் செலுத்த முடியும். சில நாடுகளிலிருந்து வங்கி காசோலை மூலம் கூட பேபால் மூலம் பணத்தை செலுத்த முடியும்.

Paypal மூலம் பணத்தை பெறும் முறை:
(Receive money through Paypal system:)
Paypal மூலம் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றவும் முடியும். உங்களுக்கு பேபால் வழியாக உங்கள் வாடிக்கையாளரோ, உறவினரோ, நண்பரோ வெளிநாட்டிலிருந்து பணத்தை பரிமாறிக்கொள்ள முடியும். உங்கள் பேபால் கணக்கில் பணம் சேர்ந்தவுடன் அதை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றி நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு பண பரிமாற்றம், பண பரிவர்த்தனைகளுக்கு பேபால் நிறுவனம் ஒரு சிறு தொகையை கமிசனாக பெற்றுக்கொள்கிறது.

ஒரு பேபால் கணக்கை துவங்குவது எப்படி?
(How to start a PayPal account?)
Paypal Account தொடங்குவது மிக எளிதான ஒன்று தான். உங்களிடம் முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.

உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்க வேண்டும்.

கூடவே இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் அவசியமாக வைத்திருக்க வேண்டும்.

பேபால் கணக்குத் துவங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும். அதில் signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவையான விபரங்களைக் கொடுக்கவும். select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து உங்களுக்கு தேவையான கணக்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இணையத்தில் மூலம் பொருட்களை விற்பவர் எனில் business Account -ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பண பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

இணையதளத்தில் வர்த்தகம் செய்ய விரும்பினால் கட்டாயம் Busines or Permium வகைக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிறகு தேவையான உங்களுடைய தகவல்களை படிவத்தில் நிரப்புங்கள். நீங்கள் நிரப்பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும், வங்கி கணக்கில் உள்ள விபரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன்று. குறிப்பாக சொல்வதெனில் உங்களுடைய பெயரின் எழுத்துகள்(Name Letters), இனிஷியல் (Initial), தொலைபேசி (cell number, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச் சரியாக எழுத்துப் பிழை இல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தின் மூலம் அதிக பண பரிவர்த்தனை(Money Exchange), பண பரிமாற்றம் (Money transfer) செய்யும் நபர்கள் தங்களுடைய கடன் அட்டை விபரங்களையும் (Credit Card Details)கொடுக்க வேண்டியது கட்டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாதுகாப்பை அளிப்பதால் நம்பி விபரங்களைக் கொடுக்கலாம்.

அனைத்து விபரங்களையும் கொடுத்த பிறகு உங்களு paypal அக்கவுண்ட் தொடங்குவது உறுதி செய்வதற்கான மின்னஞ்சல் வந்தடையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்களை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

Paypal மூலம் பணம் எடுப்பது எப்படி?

Paypal மூலம் பணம் எடுக்க முறையே மூன்று வழிகள் உள்ளன. இது நாட்டிற்கு நாடு மாறுபடும். உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து, withdraw option தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கிற்கு பேபாலிலிருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.

ஒரு சில நாடுகளில் cheque, debit card, credit card மூலமாகவும் பணம் எடுப்பதற்கான வசதிகளைக் கொடுத்திருக்கின்றனர். அதிக பட்சமாக ஐந்து நாட்களுக்குள் இந்த பணப்பட்டுவாடா முடிந்துவிடும். ஒரு பேபால் கணக்கிலிருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். personal Paypal Account மூலம் பணபரிமாற்றம் செய்ய குறைந்த அளவே கமிஷனாக கட்டம் பெறப்படுகிறது.

பேபால் கணக்கின் முக்கிய பயன்கள்:
(The main benefits of the PayPal account:)
பேபால் கணக்கின் மூலம் நீங்கள் இணையத்தின் மூலம் உலகில் எந்த மூலையிலிருந்து, வேண்டியவருக்கு பணத்தை அனுப்ப முடியும். அதோபோல எங்கிருந்தும் பணத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இணையதளத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும்போது மிகப் பாதுகாப்பாக உங்கள் பணத்தை இந்த தளத்தின் மூலம் செலுத்த முடியும்.
எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர்களுக்கு(Dealer) நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைப் பற்றி விபரங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. credit card number, Bank account number, போன்ற அதி முக்கியத் தகவல்களை விற்பனையாளருக்கோ, அத்தளத்திற்கோ கொடுக்க வேண்டிய அவசியமேற்படாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. உங்களுடைய personal data பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் money transaction மிகப் பாதுகாப்பாக நடைபெறுகிறது. எனவே எதற்கும் நாம் பயபட வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

இனி என்ன ? நீங்களும் உங்களுக்கான பேபால் அக்கவுண்ட்டை கிரியேட் செய்துகொள்ள வேண்டியதுதானே?

பேபால் அக்கவுண்ட் கிரியேட்(தொடங்க) செய்ய www.paypal.com செல்லவும்.

Photo: Paypal சில பயன்மிக்க தகவல்கள்..!

பேபால்.. இணையத்தில் நாம் அடிக்கடி பார்க்கும், கேள்விப்படும் வார்த்தை. பேபால் என்றால் என்ன? இது எதற்குப் பயன்படுகிறது? யார் யாரெல்லாம் இதைப் பயன்படுத்த முடியும். இந்நிறுவனம் எங்கிருக்கிறது? இதனுடைய தோற்றம் என்ன? என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

பேபால் என்றால் என்ன?

(What is paypal)
இது ஒரு இணையத்தள வங்கி. இத்தளத்தின் மூலம் பணத்தை எடுக்கலாம். பணத்தை மற்றவர் கணக்குகளில் போடலாம். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யலாம். இணையதளங்களின் மூலம் வாங்கும் பொருட்களுக்குரிய பணத்தை இத்தளத்தின் மூலம் செலுத்தலாம்.

நீங்கள் இணையத்தின் மூலம் ஒரு பொருளை விற்க கூட இந்த கணக்கை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். முந்தைய கால Checqe, Demand draf, Money order போன்ற முறைகளுக்கு ஒரு மாற்றாக இணையத்தில் அமைந்த ஒரு Digital முறையில் பணப்பட்டுவாடா செய்ய பயன்படும் E-commerce நிறுவனமே paypal.

Paypal நிறுவனத்தின் தொடக்கம்: 
(beginning of Paypal company)
Paypal நிறுவனம் 2000ம் ஆண்டில்தான் நிறுவபட்டது. இந்நிறுவனம் 2002ம் வருடம் E-Bay நிறுவனத்தின் துணை நிறுவனமாக Subsidiary மாறிற்று. இணைய தள மோசடிகளை Internet Frauds தடுக்கும் வகையில் 2008ம் ஆண்டு ப்ராடு சயன்சஸ் என்னும் நிறுவனத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டு பலம்பெற்றது. இன்று வரை பேபால் நிறுவனம் 15 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து 200 க்கும் மேற்பட்ட சந்தைகளில் இணைந்து தன்னுடைய வர்த்தகத்தை தொடர்ந்து பாதுகாப்பாக செய்து வருகிறது.

200 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. Paypal பத்தொன்பதுக்கும் மேற்பட்ட currency யில் கணக்கை வைத்துக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது. (அதாவது இந்தியாவின் rupee, அமெரிக்காவின் dollar போன்று).

ஒரு நாட்டு கரன்சி மதிப்பிலிருந்து மற்றொரு நாட்டிற்கான கரன்சி மதிப்பிற்கு மாற்றி பணத்தை நமது கணக்கில் பணத்தைச் சேர்க்கும் வசதியைப் பெற்றிருப்பதே பேபாலின் முக்கியமான பயனாகும். மிகச் சிறப்பான பாதுகாப்பு வசதியை இது அளிக்கிறது. இந்நிறுவனத்தில் Security key இதற்கு ஒரு சரியான உதாரணம் ஆகும்.

விரைவாக , மிக எளிமையாவும் பணத்தை இணையத்தளம் வழியாக பணம் பரிவர்த்தனை அல்லது பணப் பரிமாற்றம் செய்வதில் இத்தளம் முதலிடம் வகிக்கிறது. தற்போது சில தளங்கள் இணையப் பண பரிவர்த்தனை வசதிகளைக் கொடுத்தாலும், Paypal நிறுவனத்திற்கு ஈடாக எதுவும் இன்னும் வரவில்லை. துல்லியம், பாதுகாப்பு, பயன்பாட்டில் எளிமை ஆகிய விஷயங்களில் Paypal-க்கு Paypal தான். இந்நிறுவனம் தனது சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த Paypal நிறுவனம் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது.

Paypal மூலம் பணத்தை செலுத்தும் முறை: 

பேபால் மூலம் நீங்கள் பணத்தைச் செலுத்த உங்களிடம் கிரடிட் கார்ட், Internet banking வசதி கொண்ட வங்கிக் கணக்கு, டெபிட் கார்ட்(Debit Card) போன்ற ஏதேனும் ஒன்று இருக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் பேபால் கணக்கில் பணத்தைச் செலுத்த முடியும். சில நாடுகளிலிருந்து வங்கி காசோலை மூலம் கூட பேபால் மூலம் பணத்தை செலுத்த முடியும்.

Paypal மூலம் பணத்தை பெறும் முறை: 
(Receive money through Paypal system:)
Paypal மூலம் பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றவும் முடியும். உங்களுக்கு பேபால் வழியாக உங்கள் வாடிக்கையாளரோ, உறவினரோ, நண்பரோ வெளிநாட்டிலிருந்து பணத்தை பரிமாறிக்கொள்ள முடியும். உங்கள் பேபால் கணக்கில் பணம் சேர்ந்தவுடன் அதை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றி நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இவ்வாறு பண பரிமாற்றம், பண பரிவர்த்தனைகளுக்கு பேபால் நிறுவனம் ஒரு சிறு தொகையை கமிசனாக பெற்றுக்கொள்கிறது.

ஒரு பேபால் கணக்கை துவங்குவது எப்படி? 
(How to start a PayPal account?)
Paypal Account தொடங்குவது மிக எளிதான ஒன்று தான். உங்களிடம் முறையான வங்கிக் கணக்கு ஒன்று இருக்க வேண்டும்.

உங்கள் வங்கிக் கணக்கிற்கான Credit Card, அல்லது Debit Card வைத்திருக்க வேண்டும்.

கூடவே இந்திய அரசு வழங்கும் Pan Card-ம் அவசியமாக வைத்திருக்க வேண்டும்.

பேபால் கணக்குத் துவங்க Paypal.com என்ற முகவரிக்கு செல்லவும். அதில் signup என்பதை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் பக்கதில் தேவையான விபரங்களைக் கொடுக்கவும். select your country and region from the list என்பதில் உங்களுடைய நாட்டை தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து உங்களுக்கு தேவையான கணக்கு முறையைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் இணையத்தில் மூலம் பொருட்களை விற்பவர் எனில் business Account -ஐத் தேர்ந்தெடுக்கவும். சாதாரணமாக பண பரிவர்த்தனை மட்டுமே என்றால் personal என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

இணையதளத்தில் வர்த்தகம் செய்ய விரும்பினால் கட்டாயம் Busines or Permium வகைக் கணக்கை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பிறகு தேவையான உங்களுடைய தகவல்களை படிவத்தில் நிரப்புங்கள். நீங்கள் நிரப்பும் உங்களுடைய சொந்த தகவல்கள் உண்மையாகவும், வங்கி கணக்கில் உள்ள விபரங்களுடன் ஒத்துப் போகிற மாதிரியும் இருக்க வேண்டும். இது மிக முக்கியமானதொன்று. குறிப்பாக சொல்வதெனில் உங்களுடைய பெயரின் எழுத்துகள்(Name Letters), இனிஷியல் (Initial), தொலைபேசி (cell number, phone number)எண் மற்றும் Email address ஆகியவை மிகச் சரியாக எழுத்துப் பிழை இல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தின் மூலம் அதிக பண பரிவர்த்தனை(Money Exchange), பண பரிமாற்றம் (Money transfer) செய்யும் நபர்கள் தங்களுடைய கடன் அட்டை விபரங்களையும் (Credit Card Details)கொடுக்க வேண்டியது கட்டாயம். இத்தளம் மிகச்சிறந்த பாதுகாப்பை அளிப்பதால் நம்பி விபரங்களைக் கொடுக்கலாம்.

அனைத்து விபரங்களையும் கொடுத்த பிறகு உங்களு paypal அக்கவுண்ட் தொடங்குவது உறுதி செய்வதற்கான மின்னஞ்சல் வந்தடையும். அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கு விபரங்களை நீங்கள் உறுதிப்படுத்தலாம்.

Paypal மூலம் பணம் எடுப்பது எப்படி? 

Paypal மூலம் பணம் எடுக்க முறையே மூன்று வழிகள் உள்ளன. இது நாட்டிற்கு நாடு மாறுபடும். உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்களை கொடுத்து, withdraw option தேர்ந்தெடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கிற்கு பேபாலிலிருந்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிடும்.

ஒரு சில நாடுகளில் cheque, debit card, credit card மூலமாகவும் பணம் எடுப்பதற்கான வசதிகளைக் கொடுத்திருக்கின்றனர். அதிக பட்சமாக ஐந்து நாட்களுக்குள் இந்த பணப்பட்டுவாடா முடிந்துவிடும். ஒரு பேபால் கணக்கிலிருந்து மற்றொரு பேபால் கணக்கிற்கும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். personal Paypal Account மூலம் பணபரிமாற்றம் செய்ய குறைந்த அளவே கமிஷனாக கட்டம் பெறப்படுகிறது.

பேபால் கணக்கின் முக்கிய பயன்கள்: 
(The main benefits of the PayPal account:)
பேபால் கணக்கின் மூலம் நீங்கள் இணையத்தின் மூலம் உலகில் எந்த மூலையிலிருந்து, வேண்டியவருக்கு பணத்தை அனுப்ப முடியும். அதோபோல எங்கிருந்தும் பணத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இணையதளத்தின் மூலம் நீங்கள் பொருட்களை வாங்கும்போது மிகப் பாதுகாப்பாக உங்கள் பணத்தை இந்த தளத்தின் மூலம் செலுத்த முடியும்.
எப்படி எனப் பார்ப்போம்.

நீங்கள் இணையம் மூலம் பொருட்களை வாங்கும்போது விற்பனையாளர்களுக்கு(Dealer) நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கைப் பற்றி விபரங்களைக் கொடுக்க வேண்டியதில்லை. credit card number, Bank account number, போன்ற அதி முக்கியத் தகவல்களை விற்பனையாளருக்கோ, அத்தளத்திற்கோ கொடுக்க வேண்டிய அவசியமேற்படாது. இதனால் உங்கள் தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது. உங்களுடைய personal data பாதுகாக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் money transaction மிகப் பாதுகாப்பாக நடைபெறுகிறது. எனவே எதற்கும் நாம் பயபட வேண்டிய அவசியமில்லாமல் போகிறது.

இனி என்ன ? நீங்களும் உங்களுக்கான பேபால் அக்கவுண்ட்டை கிரியேட் செய்துகொள்ள வேண்டியதுதானே?

பேபால் அக்கவுண்ட் கிரியேட்(தொடங்க) செய்ய www.paypal.com செல்லவும்.

நன்றி நண்பர்களே..!