Thursday, August 20, 2015

மகா துவார வாசலில் மயன் குறியீடு: கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் கண்டுபிடிப்பு


கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் வாசல் படியில் குறிக்கப்பட்டுள்ள மயன் குறியீட்டை சுட்டிக்காட்டுகிறார் பொறியாளர் கோமகன். (உள்படம்) மயன் குறியீடு. 
 
கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டதற்கு ஆதாரமான மயன் குறியீடு அதன் மகாதுவார வாசலில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றிய ராஜேந்திர சோழன், தஞ்சையைப் போலவே அதேசமயம் தமிழ் கட்டிடக்கலை மரபுப்படி கங்கை கொண்ட சோழபுரத்திலும் பிரகதீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். வழக்கமாக கோயில்களில் நான்கு பக்க விமானம்தான் இருக்கும் ஆனால், இந்தக் கோயிலில் தமிழ் மரபுப்படி எட்டு பக்கங்களைக் கொண்ட விமானத்தை அமைத்தான் ராஜேந்திரன்.

கோயிலின் கிழக்கு பக்கம் உள்ள மகா துவாரத்தில் (பெரிய நுழைவு வாயில்) இரண்டு பக்கமும் இரண்டு தூண்கள் மட்டுமே நிற்கின்றன. முன்பு இதன் வழியாகத்தான் கோயிலின் உட்பகுதிக்கு செல்ல வேண்டும். தற்போது வழி அடைக்கப்பட்டுள்ள இந்த வாயிலின் படியில்தான் மயன் குறியீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பேசிய வரலாற்று ஆர்வலரும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவருமான பொறியாளர் கோமகன், “துவாரகாபுரியை வடிவமைத்துக் கொடுத்த மயன்தான் நமக்கு ஆதி தச்சர். மயன் சாஸ்திரம்தான் நாம் பயன்படுத்தும் கட்டுமான சாஸ்திரம்.
பொதுவாக நாங்கள் ஒரு கட்டுமானத்தை கட்ட ஆரம்பிப்பதற்கு முன்பு ஆதாரக் குறியீடு ஒன்றை ஏற்படுத்துவோம். ‘பெஞ்ச் மார்க்’ என்று சொல்லப்படும் அதுதான் மயன் குறியீடு. அந்த குறியீடுதான் ஒட்டுமொத்தக் கட்டுமானத்துக்கும் ஆதார அளவீடாக இருக்கும்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் வாசல் படியில் குறிக்கப்பட்டுள்ள மயன் குறியீட்டை ஆதாரமாகக் கொண்டுதான் ஒட்டு மொத்த கோயிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது. மகா துவார படியானது இரண்டு கல் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இரண்டு முனைகளிலும் மயன் குறியீடு உள்ளது. இந்தக் குறியீடுகள் இரண்டுக்கும் மையத்தை குறித்தால், கோயில் வாசலிலிருந்து உள்ளே உள்ள கர்ப்பகிரகம் வரை ஒரே நேர்கோட்டில் வருகிறது.

இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் மயன் குறியீட்டின் மையத்தில் திசைமானியை வைத்தால், கோயில் மிகச் சரியாக கிழக்கு மேற்கில் அமைந்திருப்பதை துல்லியமாக காட்டுகிறது. கர்ப்பகிரகத்தில் மின்காந்த அலைகள் சமமாக இருக்க வேண்டும்.

இந்தக் கோயிலில் அதை மிகச் சரியாக அமைத்துள்ளனர். நாம் இப்போது பயன்படுத்தும் அளவீடுகள் மற்றும் காந்தப்புல கருவிகளைப் போல ஏதோ ஒரு கருவியையோ தொழில்நுட்பத்தையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி உள்ளனர்’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

Wednesday, August 19, 2015

எதையோ இழக்கிறோம் என்று தோன்றுகிறது.... ஆனால், எதுவென்றுதான் தெரியவில்லை

எதையோ இழக்கிறோம் என்று தோன்றுகிறது.... ஆனால், எதுவென்றுதான் தெரியவில்லை.

நான் கிராமத்தில் பிறந்தவனுமல்ல, வளர்ந்தவனுமல்ல. ஆனால், தெரியாதவனல்ல. கிராமத்து வாசனைக்காக மிக ஏங்கியவன், இன்னும் ஏங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.

முன்பெல்லாம், கிராமத்தில் ஒருவர் வீட்டில் ஏதேனும் நற்காரியங்கள் எனில் ஒவ்வொருவரும் தத்தமது வீட்டிலிருந்து பாத்திரங்கள் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஆக வேண்டிய காரியங்களை ஆளுக்கொருவராகப் பிரித்துக்கொண்டு செயல்பட்டனர். தம் வீட்டு நிகழ்ச்சியாகவேக் கருதி முழு ஈடுபாட்டுடன் சிறப்பாக நடத்தினர்.

தற்போதோ, ஒப்பந்தகாரரிடம் (Contractor) விட்டுவிட்டு தாம் வெறும் அலங்காரபொம்மையாக நிற்கின்றனர். அட, வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தகாரரிடம்தான் ஒப்படைத்துவிட்டார்களே, வருகின்ற விருந்தினரையாவது வரவேற்று உபசரிக்கின்றனரா என்றால் அதுவும் இல்லை. தம் பகட்டையும், ஆடம்பரத்தையும் முன்னிருத்திக் காட்டுவதில்தான் குறியாக இருக்கின்றனர். மனிதருக்கு மதிப்பில்லை ஆனால் அவரிடமிருக்கும் பொருள் அளவு கருதி பல்லிளிப்பது சர்வ சாதாரணம்.

முன்பெல்லாம், பண்டிகைகள் வருகிறது என்றால் 20-30 நாட்களுக்கு முன்பே அதனை வரவேற்கத் தயாராகிவிடுவோம். புதிய உடைகள் எடுத்துத் தைக்கக் கொடுப்பது (ஆயத்த ஆடைகள் அப்பொழுது அவ்வளவாகப் புழக்கம் இல்லை), பலகாரங்கள் சுட தானியங்களைக் காயவைத்து அரைப்பது, 3 நாட்களுக்கு முன்பே அதனைத் தயாரிக்க ஆரம்பிப்பது, தீபாவளியென்றால் வெடிகள் வாங்கி வெடிப்பது, பொங்கல் என்றால் பல நாட்களாகக் கரும்பு கடித்துச் சுவைப்பது என்று எத்தனை ஆரவாரமாக இருந்தோம்.

தற்போது, இன்று அந்த ஆர்வமெல்லாம் முற்றிலும் வடிந்துவிட்டது போல் தோன்றுகிறதே... ஏன்? விலைவாசி உயர்வா, வருமானக்குறைவா, பொறுப்புக்களின் அழுத்தமா, வயது முதிர்ந்தவுடன் பார்வைகள் மாறிவிட்டனவா, அர்த்தமில்லாச் சடங்குகள் என்ற உதாசீனமா? எது?
எங்கள் ஊர் உணவிற்கும் பெயர் எடுத்த ஊர். (காரைக்குடி - செட்டிநாடு) பெயரைச்சொன்னாலே வாயில் நீர் சுரக்கும் அளவிற்குப் பற்பல பதார்த்தங்கள். அவைகளைத் தயாரிக்கும் அந்தப் பக்குவங்கள் தாய்வழி மரபில் பல தலைமுறைகள் தாண்டி வந்தவைகள். இது போன்று எல்லா இடத்திற்கும் தனித்துவ உணவு வகைகளும் சிறப்பும் உண்டு.

இன்று நம் குடும்பங்களில் சமையற்பக்குவங்கள் எந்தளவிற்கு உள்ளன ? (சில விதிவிலக்குகள் இருக்கலாம்) எது வேண்டுமென்றாலும் உணவகங்களில்தான் கிடைக்குமே என்ற எண்ணம், அதுவும் தற்போது துரித உணவகங்கள் வேறு. ஆரோக்கியமான தயாரிப்பாக வீட்டில் தாய் அல்லது மனைவியின் கைப்பக்குவத்தோடு அன்பும் சேர்ந்து சுவையோடு கிடைக்கும் அந்த உணவு எங்கே இன்று ? வியாபாரிகளின் கைகளுக்கு எப்படி, எப்பொழுது போனது ?

எத்தனை உறவுகளோடு கூடி வாழ்ந்தோம் அன்று ? முன்தோன்றிய மூத்தகுடி என்பதால் நம்மில்தான் எத்தனை உறவு முறைகள், அத்தனைக்கும் பெயர்களிட்டு எத்தனை நெருக்கமாக வாழ்ந்துவந்தோம். தவறுசெய்யும்பொழுதோ, நெறிமுறைகள் வழுவும்போதோ இடித்துரைக்க அனுபவமுள்ள மூத்தோர் நம்மிடை இருந்தனர். கடின காரியமாற்ற இளைஞர் நம்மோடிருந்தனர். நம் கவலை மறக்க மழலையர் எத்தனை இருந்தனர்....?
இன்று, நீயோர் தீவு, நானோர் தீவு என்று ஒவ்வொருவரும் ஒரு திசையில், ஒரு சிறையில், தனக்குத்தானே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு, தான், தனது என்று ஒருசுயநலமிக்க குறுகிய மனப்பான்மையில் நாம். முதியோர் இல்லங்களில் பெற்றோர், விடுதிகளில் குழந்தைகள், வெளிஉலகில் பணத்தைத் தேடி நாம். முதியோர்களை மதிக்காமலும், இளையோர்களை அடக்கியாளவும் விழையும் நாம்.

 உறவுகள் எங்கே, உறவு முறைகளும் எங்கே ?

சிறுவயதில் நான் விளையாடிய விளையாட்டுக்கள், மரமேறுதல், நீர் பந்து, எறி பந்து, ஏழுகல், ஓடிப்பிடித்தல், கண்ணாம்பூச்சி, கபடி என்று பல உடற்பயிற்சி சார்ந்தவைகள், குழுசார்ந்தவைகள். எங்குவேண்டுமானாலும் விளையாடலாம், அவ்வளவு இடங்கள்.

இன்று அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் அவ்விளையாட்டுக்கள் எத்துணை தூரம் சாத்தியம்? கணிப்பொறியிலும், விளையாட்டுத் தளத்திலும் (PlayStation) தன்னந்தனியாக விளையாடும் அவலத்தினை என்னவென்பது?
அன்று, பண்பை வளர்க்க நன்னெறிக் கல்வி, உலகை அறிய உலகக்கல்வி, வாழ்க்கைக்கல்வி, விளையாட்டுக்கல்வி என்று மாணாக்கர்களை மேம்படுத்துவதே குறிக்கோள்.

இன்று, பணம் சம்பாதிக்க மட்டுமே கல்வி. படிப்பவர்க்கும் சரி கல்விக்கூடம் நடத்துபவர்க்கும் சரி பாதை பணத்தை நோக்கியே. பணம் வெறும் அடையாளமாகத்தான் உருவாக்கப்பட்டது, ஆனால் அதுவே இன்று உண்மை என்று கருதும் நிலை. உற்பத்தி இல்லாமல் எல்லோரும் வெறும் பணத்தை மட்டுமே கொண்டிருந்தால் என்னாவது?

அன்று எல்லா செயல்களையும் ஆற அமர திறம்பட செய்ய நேரம் இருந்தது. இன்றோ நேரமின்மையால் தவிக்கிறோம். ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் காலப்பொழுதில் ஏதும் மாற்றமில்லை. நம் பொழுதுகளைக் கணிக்க நாம் உருவாக்கிய நேரத்தின் பின் இன்று நாமே ஓடிக்கொண்டிருக்கிறோம்.

அறிவியல் வளர்ச்சியிலும், நாகரீக வளர்ச்ச்சியிலும் முன்னேறிவிட்டதாகக் கூறினாலும்.....,

எதையோ இழக்கிறோம் என்று தோன்றுகிறது.... ஆனால், எதுவென்றுதான் தெரியவில்லை. உங்களுக்காவது தெரிகிறதா ?

Tuesday, August 18, 2015

MARRIAGE ASTRO திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது

திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது நட்சத்திரப் பொருத்தம் பார்ப்பதுடன், ஜாதகத்தில் களத்திரதோஷம், பாவாதிதோஷம், ஆயுள்பாவம், புத்தியபாவம், யோகஅமைப்புகள், திசைகள், திசா- சந்திப்பு ஆகியவற்றையும் முக்கியமாக அலசிப் பார்த்த பின்னரே விவாகம் செய்ய வேண்டும்.

செவ்வாய் தோஷம்

ஜாதகத்தில் லக்னம், ராசி, சுக்ரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகமாகும். மூன்று இடங்களுக்கும் இருந்தால் முழுச் செவ்வாய் தோஷமாகும். இதில் ஆண், பெண் இருபாலருக்கும் தோஷமிருந்தாலும், தோஷம் இல்லாமல் இருந்தாலும், தோஷம் இருந்து பரிகாரம் பெற்றிருப்பினும் திருமணம் செய்து கொள்ளலாம்.

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து, மற்றொருவருக்கு இல்லாதிருந்தால் விவாகம் செய்யக் கூடாது. லக்ன ரீதியான செவ்வாய் தோஷம் கடுமையானதாகும்.

செவ்வாய் 12-ல் இருந்தால் தாம்பத்ய வாழ்க்கை பலவீனப்படும். 12-ம் இடம் புதன், சுக்ரன் வீடானால் தோஷம் குறையும்.

செவ்வாய் தோஷப் பரிகாரம்!

1. செவ்வாய் தோஷம் ஏற்பட்டு செவ்வாய் இருக்குமிடம் ஆட்சி, உச்ச வீடானால் தோஷம் குறையும்.

2. செவ்வாயுடன் குரு சேர்ந்தாலும் அல்லது பார்த்தாலும் தோஷம் குறையும்.

3. கடக சிம்ம லக்னங்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது. செவ்வாய்க்கு சுப ஆதிபத்யம் என்பதால் தோஷம் குறையும்.

4. செவ்வாய் தோஷம் ஏற்பட்டு, செவ்வாய் நட்பு ராசியில் இருப்பினும், செவ்வாய் நின்ற ராசிக்குடையவர் கேந்தி திரிகோணங்களில் நட்பு நிலையில் இருப்பினும் செவ்வாய் தோஷம் குறையும்.

5. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வைத்தீஸ்வரன் கோவில் சென்று முறையான பரிகாரங்கள் செய்வதுடன், செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் போன்ற நாட்களில் விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வந்தால் தோஷம் குறைந்து யோகம் வரத் தொடங்கும்.

6. செவ்வாய் தோஷம் ஏற்பட்டு செவ்வாயுடன் சுக்ரன் சனி போன்ற கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டால் தோஷம் கடுமையாக இருக்கும்.

எனவே திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது செவ்வாய் தோஷம் என்பது மிகவும் முக்கியமானதாகும். எனவே அவசியம் இதைப் பார்க்க வேண்டும்.

பத்துப்பொருத்தங்கள்  எவை  எவை?


1. தினம், 2. கணம், 3. மகேந்திரம், 4. ஸ்தீரி தீர்க்கம், 5. யோனி,
6. ராசி, 7. ராசி அதிபதி, 8. வசியம், 9. ரஜ்ஜூ, 10. வேதை

பெண்ணின் நட்சத்திரம் ரோஹிணி (ரிஷப ராசி)


.எ.     ஆணின் நட்சத்திரம், ராசி    அமையும்                   மொத்தப்
                                                                       பொருத்தங்கள்        பொருத்தம்


1     அஸ்வினி (மேஷம்)    - 2,3,4,5,6,7,9,10    - 8

2     பரணி (மேஷம்)    -1,2,4,5,6,7,9,10 -    8

3     கார்த்திகை 1-ம் பாதம் (மேஷம்)    1,2,4,5,6,7,9,10 -    8

4     கார்த்திகை 2, 3, 4-ம் பாதம் (ரிஷபம்) -    1,2,4,5,6,7,9,10 -    8

5     ரோஹிணி (ரிஷபம்)    - பொருத்தம் உண்டு -    7

6     மிருகசீரிஷம் 1,2-ம்பாதம் (ரிஷபம்)    - 1,2,5,6,7,9,10 -    7

7     மிருகசீரிஷம் 3,4-ம் பாதம் (மிதுனம்)-    1,2,5,7,9,10 -    6

8    திருவாதிரை (மிதுனம்)     - ரஜ்ஜு தட்டும்  
  
9    புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம் (மிதுனம்)    - 1,2,3,5,7,9,10 - 7

10     புனர்பூசம் 4-ம் பாதம் (கடகம்)    - 1,2,3,5,8,9,10 - 7

11    பூசம் (கடகம்)    2,5,8,9,10 -    5

12     ஆயில்யம் (கடகம்)    1,2,5,8,9,10 -     6

13    மகம் (சிம்மம்)    2,3,9,10 -    4

14     பூரம் (சிம்மம்)    1,2,4,9,10    - 5

15    உத்திரம் 1-ம் பாதம் (சிம்மம்)    - 1,2,4,5,9,10    - 6

16     உத்திரம் 2,3,4-ம் பாதம் (கன்னி) -    1,2,4,5,7,9,10    - 7

17     ஹஸ்தம் (கன்னி)    - ரஜ்ஜு தட்டும்   
   
18     சித்திரை 1,2-ம் பாதம் (கன்னி)    - 1,2,4,5,7,9,10    - 7

19    சித்திரை 3,4-ம் பாதம் (துலாம்) -    1,2,4,5,7,8,9,10 -  8

20    சுவாதி (துலாம்)    - ரஜ்ஜு தட்டும்   
   
21    விசாகம் 1,2,3-ம் பாதம் (துலாம்) - 1,2,3,4,5,7,8,9,10  -    9

22     விசாகம் 4-ம் பாதம் (விருச்சிகம்) -     1,2,3,4,5,6,7,9,10 -     9

23     அனுஷம் (விருச்சிகம்)    - 2,4,5,6,7,9,10 -     7

24     கேட்டை (விருச்சிகம்)    - 1,2,4,5,6,7,9,10 -     8

25     மூலம் (தனுசு)    - 2,3,4,5,7,9,10    - 7

26     பூராடம் (தனுசு)    - 1,2,4,5,7,9,10 -     7

27     உத்ராடம் 1-ம் பாதம் (தனுசு)    - 1,2,4,5,7,9,10    - 7

28     உத்ராடம் 2,3,4-ம் பாதம் (மகரம்)     - 1,2,4,5,7,9,10 -     7

29     திருவோணம் (மகரம்)    - ரஜ்ஜு தட்டும்
       
30     அவிட்டம் 1,2-ம் பாதம் (மகரம்)    1,2,4,5,6,7,9,10 -     8

31     அவிட்டம் 3,4-ம் பாதம் (கும்பம்)    1,2,4,5,6,7,9,10 -     8

32     சதயம் (கும்பம்) -    ரஜ்ஜு தட்டும்    -
   
33     பூரட்டாதி1,2,3-ம் பாதம்(கும்பம்)    1,2,3,4,5,6,7,9,10 - 9

34     பூரட்டாதி 4-ம் பாதம் (மீனம்) - 1,2,4,5,6,7,9,10 - 8

35     உத்திரட்டாதி (மீனம்) - 2,4,5,6,7,9,10 -     7

36     ரேவதி (மீனம்) - 1,2,4,5,6,7,9,10 - 8

Microsoft Translator



அதிசய டிரான்ஸ்லேட்டரைஅறிமுகபடுத்தியுள்ள மைக்ரோசாஃப்ட்!நிறைய மொழிகள் அறிய ஆவலா – அந்நிய நாட்டுடன் வர்த்தகமா? நிறைய மொழி மாற்றங்கள் செய்ய வேண்டுமா இது வரை நூற்றுக்கு 80% தப்பு தப்பாய் மொழி பெயர்த்த கூகுள் ட்ரேன்ஸ்லேட் இனிமேவேண்டாம். நூற்றூக்கு 92% சரியாக மொழி பெயர்க்கும் அதிசய டிரான்ஸ்லேட்டரைமைக்ரோசாஃப்ட் நிர்வாகம் அறிமுகபடுத்தியுள்ளது.

இதன் பெயர் Microsoft Translator என்பதாகும். இது கணனிக்கு மட்டுமல்ல ஆப்பிள் ஃபோனின் ஐ ஓ எஸ் / ஆன்ட்ராயிட் போன்ற ஃபோன்கள் /டேப்ளேட்கள் மற்றும் ஆன்ட்ராயிட் வாட்ச்களுக்கு கூட இது மொழி பெயர்க்குமாம். இது மிக அழகாக பல மொழிகளில் உங்க ளுக்கு தேவையானவற்றைஎழுத்து மற்றூம் வாய்ஸ் என்னும் குரல் வழியே கூட மொழி பெயர்க்குமாம்.இது வாய் மொழி வழி மொழிபெயர்ப்பும் செய்யும் அதாவது – ஆங்கிலத்தில் இருந்து ஜெர்மன் மொழி பேச வேண்டு மெனில் இந்த ஸ்பீக் பட்டனை அழுத்தினால் போதுமானது நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் வார்த்தைகள் அப்படியே ஜெர்மன் மொழியில் கேட்க பெறலாம்.இது முற்றிலும் இலவச சேவை அதனால் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

அன்றொயிட்டுக்கான ரவிறக்கச்சுட்டி :-

http://www63.zippyshare.com/…/com.microsoft.translator-1.0.…

Thursday, August 13, 2015

கம்பனும் மதுவிலக்கும்


ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலேயே தமிழ்நாட்டில் மது விலக்குக்காக 1886-ல் மதராஸ் அப்காரி சட்டம் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அப்காரி என்ற சொல்லுக்குப் போதை ஊட்டும் பானங்களையோ மருந்துகளையோ தயாரிப்பது அல்லது விற்பது என்பது பொருளாகும். இச்சொல், பெர்ஷிய மொழிச் சொல்லாகும். இந்தச் சொல்லுக்கு இன்னொரு பொருள் மதுபானம் மற்றும் மருந்துகள் தயாரிப்பது அல்லது விற்பதற்கு விதிக்கப்படும் வரி என்பதாகும்.

மதராஸ் அப்காரி சட்டம், 1905, 1913, 1929 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பின்னால் ஒரு புதுச் சட்டமாக 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் முதல் நோக்கம் என்னவென்றால், போதையூட்டும் பானங்களையும், மருந்துகளையும் தயாரிப்பது, விற்பது மற்றும் அருந்துவது ஆகிய அனைத்தையும் தடை செய்வதாகும். ஆனால் பின்னாளில், மதுபானங்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் அருந்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டமாக இது மாற்றப்பட்டுவிட்டது.
1947-ல், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 26.1.1950-ல் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அதில் மருத்துவத் தேவையைத் தவிர மற்ற எந்தக் காரணத்துக்காகவும் மது அருந்துவதைத் தடை செய்வதற்கு எல்லா மாநிலங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு, பிரிவு 47-ல் கொண்டுவரப்பட்டது. இது ஏட்டளவில் நின்றுபோய், பெருவாரியான மாநிலங்கள் மது விலக்கைத் தளர்த்தி, குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை உடல் மற்றும் மனவளம் குன்றியவர்களாக ஆக்கிவிட்டது. கடந்த 67 ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் பல மாநிலங்கள் மது விற்பனையால் வரும் வருமானத்தைக்கொண்டே மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதாகக் கூறுகின்றன. 

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போலவும், கோயிற்பசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயிற் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல் போலும், நம் நாட்டின் மதுவிலக்குக் கொள்கை அமைந்துவிட்டது. 

கம்பன் கண்ட கோசல நாடு, கிஷ்கிந்தை மற்றும் இலங்கை கூட, இந்தக் குழப்பத்துக்கு விதிவிலக்குகளாக அமையவில்லை போலும். எனவே, கம்பன் பல இடங்களில் கோசல நாட்டு மக்கள், கிஷ்கிந்தை மற்றும் இலங்கை மக்கள் கொண்டிருந்த குடிப் பழக்கத்தை ஆங்காங்கே காட்டிவிட்டு, அதேசமயம், பல இடங்களில் இப்பழக்கத்தைக் கண்டிக்கவும் செய்கிறான். 

யுத்த காண்டம், பிரம்மாத்திரப் படலத்தில், இந்திரஜித்தனின் பிரம்மாஸ்திரத்தால் அனைவரும் கீழே விழுந்து கிடக்கும் செய்தியைக் கேள்விப்பட்ட ராவணன், ஒரு வெற்றிவிழாக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறான். இந்தக் கொண்டாட்டங்களைக் களியாட்டுப் படலத்தில், கம்பன் கற்பனை வளத்தோடு விவரிக்கிறான். அந்தக் கொண்டாட்டத்தில், அரம்பையர்கள், அரக்கியர்கள், அசுரப் பெண்கள், நாக கன்னியர்கள் ஆகியோரை ராவணன் ஆடவைக்கிறான். அப்போது, கள்ளுண்டு ஆடியவர்களுடைய நிலை எப்படி இருந்தது என்பதைக் கம்பன் சொல்கிறான் : 

நல் பெருங் கல்விச் செல்வம் நவை அறு நெறியை நண்ணி,
முன் பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி, முற்றி,
பின் பயன் உணர்தல் தேற்றாப் பேதைபால், வஞ்சன் செய்த
கற்பனை என்ன ஓடிக் கலந்தது, கள்ளின் வேகம். 
 
அதாவது, நல்ல கல்விச் செல்வத்தால் பெரியோர் களது உபதேச மொழிகளை அறிந்து அவற்றால் வரும் பயனைத் துய்க்க வேண்டிய தருணத்தில், ஒரு மூடன் மனதில் ஒரு வஞ்சகன் வைத்த கற்பனை எப்படிப் பரவி நிற்குமோ அப்படிக் கள்ளின் வேகம், மகளிர் கூட்டத்தில் பரவியது என்பது இப்பாடலின் பொருள். கல்வியால் பெறும் தெளிவைக் கள்ளினால் வரும் மயக்கம் அழித்துவிடும் என்னும் உறுதியை இப்பாடலில் கம்பன் காட்டுகிறான்.

 இதில் பின்னால் வரும் இன்னொரு பாடலில் கள்ளுண்டு ஆடிய காரணத்தால் தாளமும், காலமும் தவறி ஆடிய பெண்களைக் கம்பன்,
‘பாணியின் தள்ளி, கால மாத்திரைப் படாது பட்ட நாணியின் முறையின் கூடாது, ஒரு வழி நடையின் செல்லும் ஆணியின் அழிந்த பாடல் நவின்றனர்’
என்று விவரித்தான். கள்ளுண்ணுதல் பெரும் பாவம் என்னும் கருத்தையும் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறான். 


யுத்த காண்டம், நிகும்பலை யாகப் படலத்தில், தன்னை இகழ்ந்து பேசும் இந்திரஜித்தனுக்கு மறுமொழி உரைக்கும் வீடணன், தான் குற்றமற்றவன் என்பதற்கு அத்தாட்சியாக 

‘உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும் கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென், யாரும் குற்றம் கண்டிலர் என்பால்; 

என்று உரைக்கிறான். எனவே, மது அருந்துவது என்பது, பொய் சொல்வதற்கும், பிறர் பொருளைக் கவர்வதற்கும், வஞ்சம் செய்வதற்கும் இணையான குற்றம் என்பதையும் கம்பன் பதிவு செய்கிறான். 

‘ஏயின இது அலால், மற்று, ஏழைமைப் பாலது என்னோ?
“தாய் இவள், மனைவி” என்னும் தெளிவின்றேல், தருமம் என் ஆம்?
தீவினை ஐந்தின் ஒன்று ஆம் அன்றியும், திருக்கு நீங்கா
மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்! 
 
‘கள்ளுண்ணல் ஐம்பெரும் பாதகங்களில் ஒன்று. தாயையும் மனைவியையும் வேறுபடுத்தி அறியும் அறிவைக் கள் அழிக்கும். மற்ற எல்லா அறங்களைப் பின்பற்றி வாழ்ந்தாலும், கள் அருந்துபவனுக்குப் பிற அறங்களால் என்ன பயன்? மனிதப் பிறவி எடுத்தவன் ஏற்கெனவே மாயையின் மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் போது, அந்த மயக்கத்தின் மேல் இன்னொரு மயக்கத்தை ஊட்டுவது எவ்வளவு விந்தை’ என்று ஒரு மாயையின் தத்துவத்தை இப்பாடலில் சுக்ரீவன் பேசுகிறான். 

‘வஞ்சமும், களவும், பொய்யும், மயக்கமும், மரபு இல் கொட்பும்,
தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும், தாக்கும்
கஞ்ச மெல் அணங்கும் தீரும், கள்ளினால் அருந்தினாரை
நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே? 
 
விஷம்கூட அருந்தியவரைக் கொல்லுமே தவிர, நரகத்தில் தள்ளி விடாது. ஆனால், மது அருந்துவதால் வஞ்சனை, திருட்டு, பொய், அறியாமை, தொன்று தொட்டு வந்த மரபுக்கு மாறான கொள்கை, அடைக் கலமாக வந்தவரைக் காப்பாற்றாத தன்மை, ஆணவம் ஆகியவை வந்து சேர்ந்து நரகத்தில் கொண்டு விட்டுவிடும் என்கிறான் சுக்ரீவன். 

இப்படி சுக்ரீவன் மூலமாக மது ஒழிப்புக்கு ஒரு மிகப் பெரிய அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த கம்பன், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 47-ல் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மது விலக்கு, நடைமுறையில் காற்றில் பறக்க விடப்பட்டதை நமக்கு நினைவுபடுத்திக் காட்டுகிறான். 

- உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் எழுதிய ‘கம்பனில் சட்டமும் நீதியும்’ நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் (வெளியீடு: வானதி பதிப்பகம்).

Tuesday, August 11, 2015

Safe Mode (Safe Boot) எனப்படும் பாதுகாப்புமுறை தொடக்கம் என்றால் என்ன?



Safe Mode என்ற வார்த்தையை விண்டோஸ் கணினிகளை பயன்படுத்தும் நபர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். Safe Mode என்றால் என்ன, எப்படி அதற்குள் நுழைவது, அதில் என்ன செய்யலாம் போன்ற தகவல்களை இந்தபதிவில் காணலாம்.Pull oneself up by the bootstraps என்று முதலில் சொல்லப்பட்டு, பின் bootstraps என்றும் பின் boot எனவும் மாறியது. நிறுத்தப்பட்ட கணினி தொடங்கப்படுவதை cool boot எனவும், இயங்கிக் கொண்டிருக்கும் கணினியை மீளத் தொடக்குவதை அதாவது reset செய்வதை warm boot (ctrl+alt+del) என்றும் சொல்லப்படுகிறது. Cool Boot, Warm Boot தவிர Safe Boot, Clean Boot, multi boot, dual boot, ready boot, fast boot என பலவகை உண்டு.

கணினியை பயன்படுத்தும் நமக்கு safe mode என்பதை சொல்ல வேண்டியஅவசியம் கிடையாது. எனினும் அதிகம் அறியாதவர்களுக்காக சில தகவல்கள்.சில தவறுகள் (errors), தடைகள் (hangs,freezes) வரும் போது நாம் உடனே செல்வது கணினி மீள்தொடக்கம் (Restart) அல்லது பாதுகாப்பான தொடக்கம் (safe boot/safemode) தான். சேவ் மோட் என்று சொல்லும் போது கணினி இயங்க முக்கியமாக தேவைப்படும் சில தொடக்க நிரலிகளுடனும் ட்ரைவர்களுடனும் (startup program+device driver) கணினியை தொடக்குவது ஆகும். கணினியை மீள் தொடக்கும் போது F8 என்பதை தொடர்ந்து அழுத்துவதால் வரும் option இல் இவற்றைக் காணலாம். அல்லது கணினி தொடங்கியதும், மின்சார இணைப்பை துண்டித்து பின் தொடக்கும் போது, சாதாரணமாக தொடக்குவதா சேவ் மோடா என பல கேள்விகளுடன் ஒரு option வரும்.

இதைவிட இன்னொரு முறை start-run (search) இல் msconfig என்பதை தட்டச்சிட்டு வரும் விண்டோவில் safemode ஐத் தெரிவு செய்து மீள் தொடக்கலாம். Safe Mode இன் போது கீழ்க் கண்டவை செயலில் இருக்காது.
+autoexec.bat or config.sys files
+device drivers
+normal graphics device driver ற்குப் பதில் standard VGA graphics mod ஐப் பயன்படுத்தும்.
+standard system.ini file ற்குப் பதில் system.cb பயன்படுத்தும்.
+ 640 x 480 resolution உடன்16 நிறங்களைப்(colors) பயன்படுத்தி நான்கு மூலைகளிலும் Safe Mode எனக் காட்டும்.

இந்த safe mode இல் Safe Mode, Safe Mode with Networking, Safe Mode with Command Prompt என மூன்று பிரிவுகள் உண்டு. safe mode என்பது சாதாரணமாக( basic Safe Mode ) கணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறியலாம். இரண்டாவது safe mode இல் சென்றுஇணையத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தவறுகளைக் கண்டறியலாம். அதே சமயம் தேவையான ட்ரைவர்களை, அப்டேட்களை, சில அழிந்து போன கோப்புகளை(dll files -மால்வெயர்,வைரஸ் இருக்கக்கூடும் என்பதால் தரவிறக்குவதில் கவனம் தேவை) அங்கே இருந்து கொண்டே தரவிறக்கி சரி செய்யவும். மூன்றாவது safe mode இல் இருந்து கொண்டே command line இல் (DOS mode) சென்று தவறுகளை கண்டறியலாம்.

 இதில் சில உத்தரவுகளை (chkdsk,sfcscan,disk dir….இப்படி) கொடுத்து சரி செய்யவும் வழி செய்கிறது. (மொபைல்களில் உள்ள safe mode இல் ஆரம்பத்தில் இருந்த நிலைக்கு கொண்டு சென்று சரி செய்ய, தவறாக இணைக்கப்பட்ட மென்பொருள், apps களின் settings சரி செய்து திருத்த, பாதுகாப்பிற்காக புதிய app ஐ இணைக்க என உதவுகிறது.)
இது தவிர சில மென்பொருட்கள்,பிரவுசர்களிலும் safe mode தவறுகளைக் கண்டறிந்து சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.இந்த சமயத்தில் Boot பற்றி இன்னொரு தகவலையும் உங்களுக்காக தருகிறேன். விண்டோஸ் கணினிகளில் சிலர் XP, Vista, Win7, Win8 இப்படி பல இயங்குதளங்களை நிறுவி, multiboot/dual boot, முறையில் பயன்படுத்துவார்கள். புதியவர்கள் இப்படி நிறுவும் போது சில பிரச்சனைகளை எதிர்நோக்குவார்கள். கணினியில் XP கணினிகளில் வின் 7/8 ஐ அல்லது Wndows 7 கணினியில் XP ஐ நிறுவி விட்டு boot செய்யும் போது ஏதாவது ஒரு இயங்குதளம் காணாமல் அல்லது boot ஆகாது போய்விடும்.Windows 7 கணினியில் Old Windows என ஒரு தனியான போல்டரில் சேமிக்கப்படுகிறது. இப்படி ஏன்வருகிறது?
விஸ்டாவிற்கு முந்தைய அதாவது Windows NT ஐ அடிப்படையாகக் கொண்ட(Windows XP போன்ற) இயங்குதளங்களில் NTLDR (New Technology Loader ) முறையில் boot செயல்படுத்தப்பட்டுள்ளது.இந்த முறைக்குப் பதிலாக Windows 7 இல் (Windows Boot Manager + winload.exe முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NTLDR ஐ Windows 7 ஐ தொடக்க முடியாதது தான் காரணமாகும். இதற்கு நாமாக சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டும்.

THANKS TO

THAGAVAL GURU

திரு லக்ஷ்மன் வழங்கும் மாடிதோட்டப் பயிற்சி கருத்தரங்கம்

இன்றைய கால கட்டங்களில் நாம் உண்ணும் அனைத்து விதமான உணவுகளிலும், ஏதோ ஒரு வகையில் பூச்சிக்கொல்லி மருந்தானது கலந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை.

நம் உடலில் உள்ள பாகங்கள் அனைத்திலும் அந்த பூச்சி கொல்லி மருந்தானது தனது வேலையை தவறாமல் தினசரி நடத்திக்கொண்டு வருகின்றது. இதன் பாதிப்பு நமக்கில்லை என்று நிமதியாக இருந்துவிடமுடியாது. ஏனெனில் அந்த ரசாயனம் கலந்த காய்கறி உணவானது நமது உடலில் உள்ள DNA வை ஒருமுறை பாதித்தால் போதும் நம் மூலம் பிறக்கும் அடுத்த தலைமுறைகளிலும் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

இதில் இருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளது. நாம் காய்கறிகளை சந்தையில் இருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நமது வீட்டிலேயே உருவாக்கி கொள்ளலாம். வாரத்தில் எழு நாட்கள். நாளொன்றுக்கு ஒரு காய்கறி என்ற அடிப்படையில் நாமே நமது தேவைக்கு செடிகளை நமது வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் கிடைக்கும் காய்கறிகளிலிருந்து நல்ல ஊட்டச்சத்துகளும் நல்ல சுவையும் கிடைக்கும். ஒருமுறை நீங்கள் அதை உணர்ந்து பார்த்துவிட்டால் அது தான் உங்கள் சந்ததியினரை காப்பாற்றும் அரிய பொக்கிஷம் என்பதை உணர்ந்துவிடுவீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.

வீட்டில் உள்ள குடும்ப தலைவிகள் தான் இது போன்றதொரு விழிப்புணர்வை பெற்று தன் குடும்பத்திற்க்கான ஊட்டச்சத்து பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும்.

 மேலும் பழம் தரும் மரக்கன்றுகளை வாங்கி நமது மாடியில் வளர்க்கவேண்டும். வேளைக்கு ஒரு பழம் என்று சாப்பிட்டு நமது உடல் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்.


Thursday, August 6, 2015

விஸ்கியெல்லாம் விஸ்கியல்ல

 

 மதுவைப்பற்றித் தமிழ்ச்சமுதாயம் பேசியே தீரவேண்டிய கட்டாயத்திலுள்ள இந்தச் சமயத்தில், விஸ்கிபற்றிய என்னாலான அணில் தகவலுதவி.
"விஸ்கியெல்லாம் விஸ்கியல்ல”

இதுதான் மதுவைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முதல் பொதுமொழி.
"பார்த்தீர்களா! நீங்கள் முழிக்கும் முழியே சரியில்லை". எனக்குத் தெரியும், நான் சொல்வது உங்களுக்குப் புரியப் போவதில்லையென்று. சரி, விளக்கமாக அதைப் பார்க்கலாம்.

‘Whisky' என்ற விஸ்கியும், ‘Whiskey' என்ற விஸ்கியும் ஒன்றேயல்ல. ஒரு விஸ்கிக்கு 'e' எழுத்து அதிகமாக இருக்கிறது. உண்மையில் ஸ்காட்லாந்தில் உருவாக்கப்படும் விஸ்கி, 'Whisky' என்று சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் உலகில் உள்ள விஸ்கிகளின் முப்பாட்டன்தான் இந்த ஸ்காட்ச் விஸ்கி. ஆனால் ஸ்கொட்லாந்து விஸ்கி தவிர்ந்த ஏனைய விஸ்கிகள், 'Whiskey' என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பாக ஸ்காட்லாந்திற்கு அடுத்த மாற்றாகத் தயாரிக்கபட்ட அயர்லாந்து விஸ்கிதான் முதன்முதலாக 'Whikey' என்று அழைக்கப்பட்டது. ஐதாவது ஐரிஷ் விஸ்கி.
ஏழுவிதமான விஸ்கிகள் உலகெங்கும் பரவலாக பாவனையில் உள்ளன.

1, ஸ்காட்ச் விஸ்கி (Scotch Whisky)

2, ஐரிஷ் விஸ்கி (Irish Whiskey),

3, கெண்டக்கி விஸ்கி (Kentucky) இதையே பேர்பேர்ன் விஸ்கி (Bourbon)
என்பார்கள்,

4, கனடியன் விஸ்கி (Canadian Whiskey),

5, டென்னஸ்ஸி விஸ்கி (Tennesse Whiskey),
இவை தவிர்ந்து,

6, ஜப்பானிஸ் விஸ்கி (Japanese Whiskey)

7, நியுஸிலாண்ட் விஸ்கி (New Zealand)

தடைகோரி யாரும் விண்ணப்பிக்கும் வரை மதுத் தகவல்கள் தொடரலாம்………!

-ராஜ்சிவா-

Cache Memory என்றால் என்ன?



கணினியின் மூளையாக செயற்படும் ப்ரொஸெஸரின் (CPU) உள்ளேயோ அல்லது மத்ர்போர்டில் ப்ரோஸெஸ்ஸரின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) கேஷ் மெமரி எனப்படுகிறது. (Cache எனும் இந்த ஆங்கில வார்த்தை ‘கேஷ்’ என்றே உச்சரிக்கப்படுகிறது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்)ஒரு ப்ரோக்ரமை இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே சிபியூ இந்த கேஷ் மெமரியைப் பயன் படுத்துகிறது.

இதனால் கணினியின்வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது.
கணினியில் கேஷ் மெமரி பயன் படுத்தப்படுவதன் முக்கிய அனுகூலம் யாதெனில் டேட்டாவைக் கடத்துவதற்கென அமைக்கப் பட்டிருக்கும் மதர்போர்டிலுள்ளசிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதைகளை சீபீயூ பயன் படுத்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது. சிஸ்டம் பஸ் ஊடாக டேட்டா பயணிக்கும் போது மதர்போர்டின் செயற்திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ்ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து சீபீயூ கேஷ் மெமரியை அணுகி அதிக வேகத்தில் டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடுகிறது.

கேஷ் மெமரியில் இரண்டு வகைகளுள்ளன. சிபியுனுள்ளேயே இணைந்து வரும் கேஷ் மெமரியானது Level 1 (L1) cache எனவும் மதர்பொர்டில் வேறாக பொருத்தப்பட்டுள்ள கேஷ் மெமரியானது Level 2 (L2) cache. எனவும் அழைக்கப்படுகிறது.சீபியுவினுள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரியானது மதர் போர்டில் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கும் கேஷ் மெமரி சிப்பை விட வேகமாக செயற்படக் கூடியது. அதாவது ப்ரோஸெஸ்ஸரின் வேகத்திலேயே இது இயங்கும். தனியாகப் பொருத்தப்படும் கேஷ் மெமரியானது பிரதான நினைவகமான் ரேம்மை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கக் கூடியது. எனவே ப்ரோஸெஸ்ஸரிலேயே பொருத்தப் படும் கேஷ் மெமரியே சிறந்தது எனலாம்.

அதிக வேகம் கொண்ட சீபியூ வுடன் குறைந்தளவு கேஷ் மெமரியைப் பயன்படுத்தும்போது கணினி செயற் திறனில் மாற்றத்தை அவதானிக்க முடியாது. மாறாக குறைந்த சீபியு வேகத்துடன் அதிக கேஷ் மெமரியைக்பயன் படுத்தும் கணினிகளின் செயற் திறனில் அதிக மற்றத்தை அவதானிக்க் முடியும்.

சீபியுவில் பயன் படுத்தப்படும் கேஷ் மெமரி போன்றே ஹாட் டிஸ்கிலும் டிஸ்க் கேஷ் எனப்படும் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது. அதாவாது ஹாட் டிஸ்கிலிருந்து அடிக்கடி அணுகப்படும் டேட்டாவானது திரும்பத் திரும்ப ஹாட் டிஸ்கிலிருந்தே பெறப்படுவதைத் தவிர்த்து நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமிக்கப்படும். இங்கு ஹாட் டிஸ்கை விடவும் பிரதான நினைவகம் (RAM) வேகம் கூடியது என்பதனாலேயெ இவ்வாறு ரேமில் தேக்கி வைக்கப்படுகிறது,எனினும் இந்த தொழில் நுட்பம் எதிர் காலத்தில் மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது ஹாட் டிஸ்க் ஆனது ப்ளேஷ் மெமரி கேஷ் (flash memory) உடன் வெளி வர ஆரம்பித்துளளது. இந்த ப்ளேஷ் மெமரி ரேம்மை விடவும் வேகமாக செயற்படக் கூடியது.

நன்றி,
மெட்ரோ

Wednesday, July 29, 2015

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்



1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

 12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..
நன்றி மோகன்தாஸ் சாமுவேல்

புத்தர் சிரித்தாலும் சிரித்தார்-பாகம் 5





இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நிறைவேறும்போது நமது அணு ஆராய்ச்சி தொடர்பான விவகாரங்கள் IAEAவின் கண்காணிப்பின் கீழ் வரப் போவது என்னமோ நிச்சயம் தான் என்றாலும் அதனால் நமக்கு பெரிய அளவில் இழப்பில்லை என்பது இந்தத் துறையில் மூழ்கி முத்தெடுத்த விஞ்ஞானிகளின் கருத்து.

Hyde Act-
டை (இது ஒப்பந்தத்துக்குள் வருமா வராதா என்ற சந்தேகங்கள் தீராவிட்டாலும்..) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இந்த ஒப்பந்தம் நமக்குக் கிடைத்த பெரிய வரப் பிரசாதம் என்கி்ன்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.

நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூட இந்த ஒப்பந்தம் தடை விதிக்கவில்லை என்கிறார்கள் அவர்கள். இந்த ஒப்பந்ததின்படி, நாம் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை முறியடிக்க, தாக்குதலை முன் கூட்டியே தடுக்க (deterrent) இந்த சோதனையை நடத்தலாம். அதற்கான சலுகை ஒப்பந்தத்தின் உள் பிரிவுகளில் தரப்பட்டுள்ளது.

நாம் அணு ஆயுத நாடே இல்லை என்று சொன்னவர்கள், NPT-ல் (Non proliferation treaty) கையெழுத்து போட்டே ஆக வேண்டும் என்றவர்கள், அணு ஆயுதமே வைத்திருக்கக் கூடாது என்று சொன்னவர்கள் இன்று நாம் கையெழுத்தெல்லாம் போட வேண்டாம், அணு ஆயுதம் வைத்துக் கொள்ளலாம்... கூடவே உங்கள் அணு உலைகளுக்கு எரிபொருளைத் தருகிறோம் என்று இறங்கி வந்திருக்கிறார்கள்.

இதையெல்லாம் விட இந்திய அணு விஞ்ஞானிகளை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு விஷயம் 'Dual use'. இதன்படி நாம் வாங்கும் யுரேனியத்தை வெறும் மின் உற்பத்திக்கு மட்டுமல்லாமல் அதை ரீ-புராஸஸ் செய்து அப்படியே புளுட்டோனியமாக்கி அதை வைத்து அணு குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மாதிரி, நாம் இத்தனை காலம் தவம் கிடந்ததும் இப்படி ஒரு ஒப்பந்ததுக்குத் தானே என்பது இந்திய அணு விஞ்ஞானிகளின் நிலை. நமது இம்மீடியேட் பிரச்சனை யுரேனியமும் புளுட்டோனியமும்தான். நம் நாட்டில் தோரியம் ரிசர்வ் ஏகத்துக்கும் இருக்கிறது. ஆனால், தோரிய அணு உலைகளை உருவாக்குவதில் நாம் இன்னும் பெரிய அளவில் முன்னேறவில்லை.

யுரேனியத்தைக் கொண்டு இயங்குவது Pressurized Heavy Water Reactors. நம்முடைய பெரும்பாலான அணு உலைகள் இந்த ரகம் தான்.

இதை விட கொஞ்சம் முன்னேறிய டெக்னாலஜி Fast Breeder Reactors. இதில் எரிபொருள் புளுட்டோனியம்.

மூன்றாவதான லேட்டஸ்ட் தொழில்நுட்பம் தான் தோரியம் மூலம் இயங்கும் அணு உலைகள். இந்த அணு உலைகளை டிசைன் செய்வதில் தான் இப்போது இந்தியா முழு மூச்சோடு இறங்கியிருக்கிறது.


தோரியம் அணு உலைகளை கட்டுவதில், செயலாக்குவதில் நாம் மாஸ்டர் ஆகிவிட்டால், நாமே ஒரு வருட நோட்டீஸ் தந்துவிட்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிடலாம். அவ்வளவு தோரியம் இருக்கிறது நம்மிடம். ஆனால், அதுவரை... யுரேனியம், புளுட்டோனியம் தான் ஒரே வழி. அதைப் பெற வேண்டுமானால் Nuclear Supply Group (NSG)ன் கடைக் கண் பார்வை வேண்டும். அந்தப் பார்வையையை வாங்கித் தரப் போகிறது இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்.

மேலும் அணு உலைகள் தொடர்பாக லேட்டஸ்ட் டெக்னாலஜிகளை நமக்கு அமெரிக்கா தரும். தோரியம் அணு உலைகளை உருவாக்குதில் நாம் சந்தித்து வரும் சிரமங்களை எதிர்கொள்ள அமெரிக்கா தொழில்நுட்பம் தந்து உதவும். அதே போல நமது யுரேனியம் அணு உலைகளுக்குத் தேவையான சப்ளையை தங்கு தடை இல்லாமல் அமெரிக்கா வழங்கும். நாம் தேவையான அளவை மட்டும் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. வாங்கிக் குவித்து ரிசர்வ் கூட வைத்துக் கொள்ளலாம் (stockpile).

 சரி.. அமெரிக்கா ஏன் இப்படி ஓடி வந்து நமக்கு உதவ வேண்டும். ஒன்று நான் முன்பே சொன்ன strategic காரணங்கள். எதிர்கால உலக அமைதி, பாதுகாப்பு, மற்றும் தனது பாதுகாப்பில் இந்தியாவி்ன் பங்கு நிச்சயம் இருக்கும் என அமெரிக்கா நம்புவது

இரண்டாவது 'பிஸினஸ்'. இன்றைய நிலையில் உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சியைக் காட்டி வரும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 'டபுள் டிஜிட்' பணவீக்கம் நமது வண்டியின் டயர்களை பஞ்சர் பார்த்தாலும் என்ஜின் கெட்டி... நாம் நம்புகிறோமோ இல்லையோ (குறிப்பாக இடதுசாரிகள்..), அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா எங்கேயோ போய்விடும் என உலக நாடுகள் நம்புகின்றன.

பொருளாதாரரீதியில் முன்னேறிய நாடு என்றால் என்ன அர்த்தம், மிகப் பெரிய வர்த்தக சந்தை என்பது தானே. அந்த சந்தையை தன் கையை விட்டு நழுவி விடாமல் இருக்க அமெரிக்கா போட்டுள்ள மாஸ்டர் பிளான்களில் ஒன்று தான் இந்த ஒப்பந்தம்.

நான் முதல் கட்டுரையில் சொன்னது தான்... இதே அளவி்ல் நமது வளர்ச்சியை தொடர்ந்து நிலை நிறுத்த அல்லது மேலும் அதிகரிக்க முதலில் நம் முதலில் மின்சார உற்பத்தி அதிகரிக்க வேண்டும். (2020ம் ஆண்டில் நமது மின் உற்பத்தி 20,000 மெகாவாட்டாக உயர்ந்தாக வேண்டும்). அதற்கான ஒரே வழி அணு மின்சாரம் தான். அதற்கான தொழில்நுட்பத்தை வழங்க வழி செய்வது மட்டும் தான் இந்திய-அமெரிக்க ஒப்பந்தம். உண்மையில் அதை வழங்கப் போவது அமெரிக்காவி்ன் GE, Westinghouse போன்ற அணு மின் தயாரிப்பில் கரை கண்ட முன்னணி நிறுவனங்கள். அவர்களுக்கு இந்தியாவுடனான அணு தொழில்நுட்ப வர்த்தகம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிஸினஸ்களில் ஒன்றாக இருக்கப் போகிறது. அவ்வளவு தூரத்துக்கு வியாபாரம் நடக்கப் போகிறது. கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் பிஸினஸ் இது என இப்போதே அமெரிக்க வர்த்தக சபை (United States chamber of commerce) கணக்குப் போட்டு வைத்துக் கொண்டு ஒப்பந்தம் வேகமாக நிறைவேறாதா என காத்திருக்கிறது.

இத்தனை விவகாரங்களையும் அலசி-ஆராய்ந்து பார்த்தால் ஹைட் ஆக்ட் அல்லாத இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு கொடுக்கப் போவதெல்லாம் நிறைய நன்மைகளைத் தான். ஆனால், இதே போன்ற ஒப்பந்தத்தை சீனாவுடன் அமெரிக்கா செய்து கொண்டபோது வாய் திறக்காத இடதுசாரிகள் இப்போது மட்டும் கூச்சல் போடுவதற்குக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர்களை அவர்களது சித்தாந்த கோணத்தில் இருந்து பார்ப்பது அவசியம். இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தம் பிரான்ஸ்சுடனோ, ரஷ்யாவுடனோ செய்யப்பட்டால் அமைதியாக இருந்திருப்பார்கள். அவர்களது முதல் எதிரியான அமெரிக்காவுடன் ஒப்பந்தம் என்றவுடன் அவர்களால் தாங்க முடியவில்லை.

அதுவும், தங்களது தயவில் ஆட்சியில் இருக்கும்போதே அரசு இந்த ஒப்பந்தத்தை செய்து கொள்வது என்பது தங்களது சிவப்பு கொடியில் விழும் அழியாத கறையாகிவிடும் என்று நினைக்கின்றனர். அடுத்ததாக அணு தொழில்நுட்ப வியாபாரம் முலம் இந்தியாவை விட அமெரிக்கா தான் அதிகமான பலன்களை அடையப் போகிறது என நினைக்கின்றனர் இடதுசாரிகள்.

ஆனால், இடதுசாரிகளை எதிர்ப்போர் சொல்வது.. இவர்கள் சீனாவின் ஜால்ராக்கள். தங்களுக்கு இணையாக இந்தியாவும் வளர்ந்துவிடுமோ என்ற அஞ்சும் சீனா தான் இவர்களைத் தூண்டி விடுகிறது. அணு ஒப்பந்தத்தை தடுக்கப் பார்க்கிறது... இதையெல்லாம் விட அதிர்ச்சியான சில கட்டுரைகள் எல்லாம் பாகிஸ்தானிய பத்திரிக்கைகளில் வர ஆரம்பித்துவி்ட்டன. இந்த ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக அமெரிக்காவிடம் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏராளமான பணம் கைமாறிவிட்டது.... என்றரீதியில் அந் நாட்டு பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

 ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை பத்திரிக்கைகளில் திணிப்பதே பாகிஸ்தானின் உளவு அமைபபான ஐ.எஸ்.ஐ தான் என்கின்றனர் இன்னொரு தரப்பினர். நமக்கு கிடைக்காத ஒரு ஒப்பந்தம் இந்தியாவுக்கு கிடைக்கிறதே என்ற வேதனையில், இப்படி தகவல்களை பரப்புகிறது ஐஎஸ்ஐ என்கின்றனர். இப்படி இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் டெக்னாலஜி விவகாரங்கள், ஹைட் ஆக்ட் போன்ற சட்ட சிக்கல்கள், சீனா-பாகிஸ்தானி்ன் 'உள்' வேலைகள், சித்தாந்த மோதல்கள், பிஸினஸ் முதலைகள், அரசியல் சர்க்கஸ்கள், IAEA போன்ற சம்பிரதாயங்களைத் தாண்டித்தான் வென்றாக வேண்டும்...

இதையெல்லாம் பார்க்க இன்று புத்தர் இருந்திருந்தால், நி்ச்சயம் சிரித்திருக்க மாட்டார்... அதே நேரத்தில் இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்டு காங்கிரஸ் படும் பாட்டைப் பார்த்தால் நாடே சிரி்ப்பாய் சிரிக்கிறது!

Read more at: http://tamil.oneindia.com/editor-speaks/2008/07/0704-billions-to-flow-if-indo-us-deal-approved.html