Sunday, March 5, 2017

HYDROCARBON - ஹைட்ரோகார்பன்




ஹைட்ரோகார்பன் என்பது ஒருவகைப் பொருளை மட்டும் குறிப்பது அல்ல. அது பல பொருட்களுக்கான பொதுச்சொல். ரொம்பச் சுலபமாகச் சொன்னால், ஹைட்ரஜனும் (H), கார்பனும் (C) இணைந்து தோன்றும் கூட்டுப்பொருள். இங்கு பொருள் என்பது வாயுவையும் அப்பப்போ திரவத்தையும் குறிக்கின்றது.

இன்று தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பனைப் பலர் வில்லத்தன்மை கொண்டதாகப் புரிந்துகொள்கிறார்கள். உண்மையில் அது ரோஜா அரவிந்தசாமியா, போகன் அரவிந்தசாமியா, இல்லை தனியொருவன் அரவிந்தசாமியா என்பதில் பலருக்குக் குழப்பம் இருக்கிறது. அதைத் தீர்க்கும் வகையில் இல்லாவிட்டாலும், ஹைட்ரோகார்பன் என்றால் என்ன என்பதற்கான சிறு விளக்கம் இது. ஹை.கா நல்லதா, கெட்டதா என்பதையும், அதன் அரசியலையும் நான் இங்கு பேசப்போவதில்லை.

ஹை.கா என்றால் தனியொரு பொருள் இல்லையென்று மேலே கூறினேன். ஹைட்ரஜனும், கார்பனும் பல விதங்களில், பல படிநிலைகளில் ஒன்று சேர்கின்றன. அப்படி விதவிதமாக அவை ஒன்று சேரும்போது, வெவ்வேறு மூலக்கூறுகள் தோன்றுகின்றன. அவை எல்லாமே ஹை.கார்பன்கள்தான். சொல்லப் போனால், ஆயிரக்கணக்கான ஹை.கா இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் மீதேன். தமிழ்நாட்டில் மீதேன் எடுக்கும் திட்டம், ஹை.கா எடுக்கும் திட்டம் என வெவ்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதிலுள்ள உள்ளடி அரசியல்பற்றி எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் இங்கு பேசமுடியாது.

கார்பன் என்பது ஆறு எலெக்ட்ரான்களைக் கொண்ட ஒரு தனிமம். அதில் நான்கு எலெக்ட்ரான்களை யாருடனாவது பகிர்ந்துகொண்டு பதவிசா குடும்பம் நடத்த நினைக்கும். ஹைட்ரஜன் காதலியை அதற்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால், தன் நான்கு கரங்களையும் கொண்டு நான்கு ஹைட்ரஜன்களை அணைத்துக் கொள்ளும். ஹை.கா இல் ரொம்ப எளிமையான மூலகம், ஒரு கார்பனையும், நான்கு ஹைட்ரஜனையும் கொண்ட மூலக்கூறுதான்.

இதன் பெயர்தான் மீதேன் (Methane - CH4).

ஒரு கார்பன், மூன்று ஹைட்ரஜன்களையும் நான்காவதாக வேறொரு கார்பனையும் கூட்டுச் சேர்ந்து கொள்வதும் உண்டு. அப்போது மேலதிகமாக இரண்டு ஹைட்ரஜன்களும் அவற்றுடன் சேர்கின்றன. அப்படி இரண்டு கார்பன்களுடன் ஆறு ஹைட்ரஜன்கள் ஒன்று சேந்து உருவாவதை ஈதேன் (Ethane - C2H6) என்பார்கள். இதுபோல படிப்படியாக ஒரு கார்பனும், இரண்டு ஹைட்ரஜன்களும் தொடர்ச்சியாகச் சேர்ந்துகொண்டு புதிய மூலகங்களை உருவாக்குகின்றன அவை புரொபேன் (Propane - C3H8), பூடேன் (Butane - C4H10), பெண்டேன் (Pentane - C5H12), ஹெக்ஸ்டேன் (Hexane - C6H14) என்று வரிசையாகப் போய்க்கொண்டேயிருக்கும். இவையனைத்தும் கார்பனின் நான்கு எலெக்ட்ரான்களையும் தனித்தனி ஒற்றை இணைப்புகளாகக் கொண்டவை. இந்தவகை ஒற்றை இணைப்பு ஹை.கார்பன்களை அல்கேன் (Alkane) என்று வகைப்படுத்துகிறார்கள். அத்துடன் இவை சாட்சுரேட்டட் (Saturated) ஹைட்ரோ கார்பன்கள் என்றும் சொல்லப்படுகின்றன.

கார்பன்கள் தனித்தனி ஒற்றை இணைப்புகளுடன் (Single Bond) இல்லாமல், இரட்டை இணைப்புகளுடனும் (Double Bond), மூன்று இணைப்புகளுடனும் (Triple Bond) தங்களுக்குள் சேர்ந்துகொள்கின்றன. இரட்டை இணைப்புடன் உருவாகும் ஹை.கார்பன்கள் அல்கீன் (Alkene) என்றும், மூன்று இணைப்புகளுடன் உள்ளவை அல்கைன் (Alkyne) என்றும் அழைக்கப்படுகின்றன. அத்துடன், சைக்ளோ அல்கேன் (Cycloalkane), அல்கடீன் (Alkadiene) என்னும் தொகுதிகளும் உண்டு. இவற்றை அன்சாட்சுரேட்டட் ஹைட்ரோகார்பன்கள் (Unsaturated) என்கிறார்கள்.


இவையெல்லாமே ஹைட்ரோ கார்பன்கள்தான்.


பொதுவாக ஹை.கா என்றால் மக்கிப்போகும், உக்கிப்போகும் கழிவுப்பொருட்களிலிருந்து உருவாகும் வாயுக்கள். உயிரினங்கள், மரங்கள் ஆகியவை நிலத்தில் புதைந்து அவைகள் சிதைவதால் உருவாகுபவை.
 
எத்தனையோ ஹைட்ரோ கார்பன்கள் இயற்கையில் கிடைக்க, அவற்றின் விளக்கங்கள் இல்லாமல் பொதுவாக ஹை.கா திட்டம் என்பதும், மீதேன் திட்டம் என்று சொல்வதும் எதையோ நமக்கு உணர்த்தவே செய்கின்றன. என்னைப் பொறுத்தவரை ஹை.கார்பனின் உபயோகங்களும், பயன்பாட்டு பெறுநிலையும் நல்லவையே! ஆனால் அவற்றை எப்படிப் பெறப்போகிறோம் என்பதில் தெளிவான விளக்கம் கிடைக்க வேண்டும்.

இரகசிய திட்டங்கள் போல நடைமுறைக்கு கொண்டுவந்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்ளும் அரசியல் ஏன் நடைபெறுகிறது என்றே புரியவில்லை.

Thanks
-ராஜ்சிவா-

Saturday, February 11, 2017

MEDICAL FITNESS

*MEDICAL FITNESS*
*PREVENTION IS* *BETTER THAN CURE*



           *BLOOD PRESSURE*
          ----------
120/80 --  Normal
130/85 --Normal  (Control)
140/90 --  High
150/95 --  V.High
----------------------------

           *PULSE*
          --------
72  per minute (standard)
60 --- 80 p.m. (Normal)
40 -- 180  p.m.(abnormal)
----------------------------

          *TEMPERATURE*
          -----------------
98.4 F    (Normal)
99.0 F Above  (Fever)


*BLOOD GROUP COMPATIBILITY*

What’s Your Type and how common is it?

O+       1 in 3        37.4%
(Most common)

A+        1 in 3        35.7%

B+        1 in 12        8.5%

AB+     1 in 29        3.4%

O-        1 in 15        6.6%

A-        1 in 16        6.3%

B-        1 in 67        1.5%

AB-     1 in 167        .6%
(Rarest)



*Compatible Blood Types*

O- can receive O-

O+ can receive O+, O-

A- can receive A-, O-

A+ can receive A+, A-, O+, O-

B- can receive B-, O-

B+ can receive B+, B-, O+, O-

AB- can receive AB-, B-, A-, O-

AB+ can receive AB+, AB-, B+, B-, A+,  A-,  O+,  O-

This is an important msg which can save a life! A life could be saved...
What is ur blood group ?
Share the fantastic information..

*EFFECT OF WATER*                  
 We Know Water is 
       important but never 
       knew about the 
       Special Times one 
       has to drink it.. !

       *Did you  ?*

  Drinking Water at the 
       Right Time  
       Maximizes its 
       effectiveness on the 
       Human Body;

         1 Glass of Water 
              after waking up -
              helps to 
              activate internal 
              organs..

         1 Glass of Water 
              30 Minutes   
              before a Meal - 
              helps digestion..

        1 Glass of Water 
              before taking a 
              Bath  - helps 
              lower your blood 
              pressure.

        1 Glass of Water 
              before going to 
              Bed -  avoids 
              Stroke  or Heart 
              Attack.

      'When someone 
       shares something of 
       value with you and 
       you benefit from  it, 
       You have a moral 
       obligation to share

Thursday, December 29, 2016

உன் வாழ்க்கை அழகாக மாற வேண்டுமா? இதை படித்து பார்!







சிவனருளை சீக்கிரம் தரும் மஹாவில்வம்!!! உலகின் ஒரே கடவுள் என்பது ஈசன் என்ற அண்ணாமலையார் தான்;அவருக்கு கோடிப் பெயர்கள்;லட்சம் உருவங்கள்! ஆயிரக்கணக்கான கடவுள் தன்மைகள்!!! சராசரி மனிதர்களாகிய நாம் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைத்து,சிவனோடு கரைய ஐந்து அருட்சாதனங்களை நாயன்மார்கள் உணர்த்தியிருக்கின்றனர்; 1.சிவலிங்கம் 2.விபூதி 3.ருத்ராட்சம் 4.வில்வம் 5.சிவனடியாராக ஆகுதல் இதில் வில்வத்தைப் பற்றி ஒரு நாளுக்கு மூன்று மணி நேரம் வீதம் 30 நாட்களுக்கு ஆன்மீகப் பயிற்சி வகுப்பே எடுக்கலாம்;அவ்வளவு சிவரகசியங்கள் எம்மிடம் இருக்கின்றன;இருப்பினும் சுருக்கமாக! வில்வத்தில் 12 ரகங்கள் இருக்கின்றன;அவைகளில் மிகவும் முக்கியமானது வில்வம்,மஹாவில்வம்,காசி வில்வம் மற்றும் சில வில்வங்கள்; இதில் மஹாவில்வத்தை கோவில்,ஆசிரமம்,சிவசமாதி(ஜீவசமாதியின் நிஜப் பெயர்) போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும்;(எக்காரணம் கொண்டும் வீட்டில்,வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடாது)மஹாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு,ஒன்பது,பனிரெண்டாக இருக்கும்; மேலும் வில்வக் கன்றுகளை நட்டுவிட்டு அப்படியே போய்விடவும் கூடாது;நட்ட நாள் முதல் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை தினமும் நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்;இப்படிச் செய்வதால்,வளர்த்தவரின் 108 தலைமுறையினரின் அனைத்து சாபங்கள்,கர்மவினைகளையும் வாங்கி அந்த வம்சாவழியையே ஆத்ம சுத்தமாக்கும் ஆற்றல் மஹாவில்வத்திற்கு உண்டு; நர்சரிகளில் இதை வளர்ப்பதற்கு பூர்வ புண்ணியம் வேண்டும்;ஏன் எனில், மஹாவில்வத்தில் விளையும் வில்வப் பழம் மிளகின் பாதி அளவே இருக்கும்;இதில் 2000 வில்வப் பழங்களை எடுத்து,அதன் விதையை முறைப்படி பக்குவப்படுத்தி செடியாக வளர்க்க முயன்றால்,15 முதல் 30 மட்டுமே வாழும்;அந்த 30 மஹாவில்வக் கன்றுகளையும் ஒரு அடி உயரத்திற்கு வளர்க்க குறைந்தது இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் ஆகும்;அதனால் தான் ஒரு மஹாவில்வத்தில் விலை சில நூறு ரூபாய்களுக்கு விற்பனைக்குக் கிடைக்கிறது. மறு புறம் மஹாவில்வம் என்ற மரத் தொகுதியே அழிந்துவிட்டது என்ற கருத்து தென் மாநிலங்கள் முழுக்க பரவியிருக்கிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சுமாராக 27,000 பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன;இவைகளில் 1000 சிவாலயங்களில் கூட மஹாவில்வம் இல்லை; என்றே தோன்றுகிறது. நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது ஆசிரமம் அல்லது குலதெய்வக் கோவில் அல்லது சிவசமாதி அல்லது பழமையான ஆலயத்தில் மஹாவில்வம் வளர்க்கத் துவங்குவோமா? மஹாவில்வக் கன்று உள்ளூரில் இருக்கும் ஈசனின் ஜன்ம நட்சத்திரமாக அவரே தேர்வு செய்தது திருவாதிரை;அந்த நட்சத்திரத்தில் அமாவாசை அமைவது ஆனி மாதமாக மிகவும் விசேஷம் வீட்டில் வில்வம் வளர்க்க விரும்புவோர் காசி வில்வம் வளர்க்கலாம்;வளர்த்து அதன் பழத்தில் இருந்து சாறு எடுத்து அருந்தலாம்;இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு சிவ கடாட்சம் விரைவில் உண்டாகும் என்பது கடந்த ஏழு ஆண்டுகளாக பரீட்சித்துப் பார்த்த அனுபவ உண்மை;காசிவில்வச் சாறு தினமும் அருந்தி வந்து தினமும் சிவனை வழிபட என்னென்னமோ அதிசயங்களை உணர முடிகிறது

சிவனருளை சீக்கிரம் தரும் மஹாவில்வம்!!!
உலகின் ஒரே கடவுள் என்பது ஈசன் என்ற அண்ணாமலையார் தான்;அவருக்கு கோடிப் பெயர்கள்;லட்சம் உருவங்கள்! ஆயிரக்கணக்கான கடவுள் தன்மைகள்!!!
சராசரி மனிதர்களாகிய நாம் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைத்து,சிவனோடு கரைய ஐந்து அருட்சாதனங்களை நாயன்மார்கள் உணர்த்தியிருக்கின்றனர்;
1.சிவலிங்கம்
2.விபூதி
3.ருத்ராட்சம்
4.வில்வம்
5.சிவனடியாராக ஆகுதல்
இதில் வில்வத்தைப் பற்றி ஒரு நாளுக்கு மூன்று மணி நேரம் வீதம் 30 நாட்களுக்கு ஆன்மீகப் பயிற்சி வகுப்பே எடுக்கலாம்;அவ்வளவு சிவரகசியங்கள் எம்மிடம் இருக்கின்றன;இருப்பினும் சுருக்கமாக!
வில்வத்தில் 12 ரகங்கள் இருக்கின்றன;அவைகளில் மிகவும் முக்கியமானது வில்வம்,மஹாவில்வம்,காசி வில்வம் மற்றும் சில வில்வங்கள்;
இதில் மஹாவில்வத்தை கோவில்,ஆசிரமம்,சிவசமாதி(ஜீவசமாதியின் நிஜப் பெயர்) போன்ற இடங்களில் மட்டுமே வளர்க்க வேண்டும்;(எக்காரணம் கொண்டும் வீட்டில்,வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கக் கூடாது)மஹாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு,ஒன்பது,பனிரெண்டாக இருக்கும்;
மேலும் வில்வக் கன்றுகளை நட்டுவிட்டு அப்படியே போய்விடவும் கூடாது;நட்ட நாள் முதல் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை தினமும் நீர் ஊற்றி வளர்க்க வேண்டும்;இப்படிச் செய்வதால்,வளர்த்தவரின் 108 தலைமுறையினரின் அனைத்து சாபங்கள்,கர்மவினைகளையும் வாங்கி அந்த வம்சாவழியையே ஆத்ம சுத்தமாக்கும் ஆற்றல் மஹாவில்வத்திற்கு உண்டு;
நர்சரிகளில் இதை வளர்ப்பதற்கு பூர்வ புண்ணியம் வேண்டும்;ஏன் எனில், மஹாவில்வத்தில் விளையும் வில்வப் பழம் மிளகின் பாதி அளவே இருக்கும்;இதில் 2000 வில்வப் பழங்களை எடுத்து,அதன் விதையை முறைப்படி பக்குவப்படுத்தி செடியாக வளர்க்க முயன்றால்,15 முதல் 30 மட்டுமே வாழும்;அந்த 30 மஹாவில்வக் கன்றுகளையும் ஒரு அடி உயரத்திற்கு வளர்க்க குறைந்தது இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் ஆகும்;அதனால் தான் ஒரு மஹாவில்வத்தில் விலை சில நூறு ரூபாய்களுக்கு விற்பனைக்குக் கிடைக்கிறது.
மறு புறம் மஹாவில்வம் என்ற மரத் தொகுதியே அழிந்துவிட்டது என்ற கருத்து தென் மாநிலங்கள் முழுக்க பரவியிருக்கிறது.இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சுமாராக 27,000 பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன;இவைகளில் 1000 சிவாலயங்களில் கூட மஹாவில்வம் இல்லை; என்றே தோன்றுகிறது. நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது ஆசிரமம் அல்லது குலதெய்வக் கோவில் அல்லது சிவசமாதி அல்லது பழமையான ஆலயத்தில் மஹாவில்வம் வளர்க்கத் துவங்குவோமா?
மஹாவில்வக் கன்று உள்ளூரில் இருக்கும் 
ஈசனின் ஜன்ம நட்சத்திரமாக அவரே தேர்வு செய்தது திருவாதிரை;அந்த நட்சத்திரத்தில் அமாவாசை அமைவது ஆனி மாதமாக மிகவும் விசேஷம்
வீட்டில் வில்வம் வளர்க்க விரும்புவோர் காசி வில்வம் வளர்க்கலாம்;வளர்த்து அதன் பழத்தில் இருந்து சாறு எடுத்து அருந்தலாம்;இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு சிவ கடாட்சம் விரைவில் உண்டாகும் என்பது கடந்த ஏழு ஆண்டுகளாக பரீட்சித்துப் பார்த்த அனுபவ உண்மை;

Friday, December 23, 2016

ஐம்பொன்னின் (பஞ்சலோகத்தின்) சூட்சம ரகசியங்கள்

🍁 _தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற ஐந்து உலோகங்கள் கலந்த கலவையே *ஐம்பொன் அல்லது பஞ்சலோகம்* என்றழைக்கிறோம்._

🍁 _பொதுவாக நம் நாட்டிலுள்ள மண்ணில் உலோக சத்துகள் குறைவாக கிடைப்பதால் பஞ்சலோக சிலைகள் செய்து அவற்றிக்கு அபிஷேகம் செய்து அவற்றின் பிரசாதத்தை உண்டு உடலுக்கு உலோக சக்தியை கொடுப்பார்கள்_.

🔥 *_ஐந்து உலோகத்தின் விஞ்ஞான ரகசியம்_* 

 🍁 _இதை விஞ்ஞான ரீதியாக கண்டால் *வியாழ* கிரகத்தின் ஆற்றலை பெற தங்கத்தையும், *சனிகிரகத்தின்* ஆற்றலை பெற இரும்பையும், *சுக்கிர(வெள்ளி)கிரகத்தின்* ஆற்றலை பெற வெள்ளியையும், *சூரிய கிரகத்தின்* ஆற்றலை பெற செம்பையும், *கேது கிரக்கத்தின்* ஆற்றலை பெற ஈயத்தையும் மானிடர்கள் தங்கள் அணிகலன்களாக அணிந்துகொள்கின்றனர்._

🍁 _நவகிரகங்களின் கதிர்வீச்சு மனிதனின் சுபாவத்தையும் அவன் நிலைமையும் தீர்மானிக்கிறது என்பதை நாம் *ஜோதிடம்* என்ற விஞ்ஞானத்தை கொண்டு அறிவோம்_

🍁 _இந்த உலோகங்களால் ஆன அணிகலனை மோதிரமாகவோ, காப்பாகவோ, தண்டையாகவோ அணிந்தால் அந்தந்த கிரகத்தின் ஆற்றலை பெறலாம்._

🔥 _*ஐந்து உலோகங்களின் சூட்சம ரகசியம்*_🔥

இந்த ஐந்து உலோகங்களின் மருத்துவ தன்மை நாம் அறிந்திருப்பதால் அவற்றின் _சூட்சமத்தை மட்டும் இங்கு காண்போம்_

♦ *_தங்கம்_*

🍁 _தங்கம் என்ற இந்த உலோகத்தை அணிவதால் மனிதனின் எண்ணங்களை பிரபஞ்சத்திற்க்கு அனுப்பமுடியும்._ 

🍁 _அதாவது அக்காலத்தில் மக்கள் தங்கம் அணிந்து கொண்டு கோவிலுக்கு சென்று தனது விருப்பங்களை கடவுளிடம் தெரிவிப்பார்கள்_.

🍁 _கடவுள் சிலைகளுக்கு தங்க நகைகள் போடுவது இதனால் தான், இதுவும் ஒரு விஞ்ஞான முறை._

🍁 _இதை தந்தரா யோகத்தில் கடவுள் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயில் என்பார்கள் உங்கள் எண்ணங்கள் அங்கு வைக்கும் போது உடனே பிரபஞ்ச சக்தியிடம்(கடவுளிடம்) அனுப்பபடும்._

♦ *_வெள்ளி_*

🍁 _வெள்ளியையும் எண்ண அலைகளை அனுப்ப பயன்படுத்தினார்கள்.ஆனால் அது அதிகம் இல்லை ஏனெனில் இதன் *அலைவீச்சு தங்கத்தை விட குறைவாக உள்ளது.* இதற்க்கு மானிடர்களின் உணர்ச்சிஅலைகளை  கட்டுபடுத்தும் ஆற்றல் உண்டு என்பது *சூட்சமம்*_.

♦ *_செம்பு_*

🍁 _செம்பு உலோகத்தை பற்றி கூறினால் ஒரு புத்தகமே போடலாம்.இருப்பினும் இதன் சூட்சமம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை *விழிப்புடன்* வைக்க உதவுகிறது.கவனிக்க குண்டலினியை மேலே கொண்டு வராது._

🍁 _இதன் மிதமான உஷ்ணத்தன்மை உயிருக்கு ஆற்றலை அளிக்க கூடியது,மனித உடலை சுற்றியுள்ள பிராண மண்டலத்தை பலபடுத்தும்,மூளையின் செயல் திறன் அதிகமாகும்._

♦ *_இரும்பு_*

🍁 _இந்த உலோகம் பெரும்பாலும் எதிர்மறை சக்தி கொண்டது தான்.இருப்பினும் இதை அக்காலத்தில் எப்படி நல்ல காரியத்திற்க்கு பயன்படுத்தினார்கள் என்றால் வெளியே செல்லும் ஒரு பெண்ணை எதிர்மறை சக்திகள்(பேய்கள்) நெருங்காமல் இருக்க இந்த இரும்பு துண்டுகளை எடுத்து செல்ல சொல்லுவார்கள்.ஆனால் இது கால போக்கில் வழக்கொழிந்து விட்டது சில இடங்களில் இப்போதும் பெரியவர்கள் கூறுவார்கள்._

🌻 *_இதன் சூட்சம ரகசியம்_* 

🍁 _“இடி இடிக்கும்போது இரும்பை முற்றத்தில் வை” என்ற பழமொழி உள்ளது.இதன் அர்த்தம் என்னவெனில் இடிமின்னல் வரும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் *இரும்பில் உள்ள காந்த சக்தி அந்த மின்காந்த ஆற்றல்களை தன்பால் ஈர்த்து கொள்ளும்*._ 

🍁 _குறிபிட்ட இந்த இரும்பை, வைத்து கொண்டால் தான் நன்மைகள் கிடைக்கும். ஆனால், சிலர் கிராமத்தில், சாதரணமான இரும்பை தான் வெளியே எடுத்து செல்கிறார்கள்.ஆனால் நாம் இங்கு மற்ற உலோகத்தோடு கலப்பதால் நன்மையே பயக்கும்_

♦ *_ஈயம்_* 
 
🍁 _இது உடலுக்கு மிகவும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லபடுகிறது. இதன் நன்மை என்னவெனில் ஐம்பொன்னில் மற்ற உலோகத்தோடு இருப்பதால் ஆபத்து இல்லை,இதன் கதிர்வீச்சு மனிதனின் ஆன்மீக சிந்தனையை தூண்டுவிதமாக அமைகிறது.மனிதனின் உயிர்சக்தியை விரயம் ஆகாமல் செய்யும் வண்ணம் இது காக்கிறது._

🍁 _இப்படி ஐம்பொன்னும் சேர்ந்து மனிதனுக்கு நன்மையளிக்கும் என்பதை தமிழர்களும், சித்தர்களும் கண்டுபிடித்தனர் மேலும் அதை ஆபரணமாக அணியவும் செய்தனர்.இது தமிழர்களின் விஞ்ஞான முறைகளில் ஒன்று தான்._

🍁 _இங்கு மிக முக்கியமான விசயம் என்னவென்றால் இந்த பஞ்சலோகத்தில் சூரிய ஒளிபட்டால் இதன் சக்தி அளப்பரியது.ஆக இதை காப்பாகவோ,மோதிரமாகவோ அணிந்து இதன் பயனைபெறவும்._ 

_*இதன் விலையும் மலிவாக தான் உள்ளது*._

🍁 _இந்த பஞ்சலோகத்தால் ஆன பழைய சிலைகளை கடத்தி பல கோடி ரூபாய் கணக்கில் விற்கிறார்கள் என்றால் அதில் விசயம் இல்லாமல் இல்லை அது பற்றிய முழு தகவல்கள் இன்னும் சரியாககிடைக்கவில்லை._

எப்படி இருப்பினும் இந்த பஞ்சலோகத்தால் நன்மை அதிகம் என்பது திண்ணம் 

*_வாழ்க தமிழர்கள் விஞ்ஞான முறையும், சித்தர்களின் ரசாயனவியலும்_*


🔥 _உங்கள் சித்தர் அடிமை_ 🔥 
*ரா.சங்கர்* 
*ஈரோடு*

🙏நன்றி🙏

ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ?

ஜீவசமாதி! 

நண்பர் ஒருவர்  என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். 
ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? 
அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ? என்று கேட்டார். 
அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். 
உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு.

நதியானது கடலில் போய் சேர்வது போன்றது 
யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. 
ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். 
அதில் எந்த சந்தேகமும் இல்லை. 

ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு சமாதி ஆவதில்லை. 
ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ 
அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது 
அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். 
இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. 

ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், 
அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. 
மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. 
நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். 
அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. 
இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.

சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து 
வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ சமாதி ஆகும்.
யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். 
நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது 
பரபோதமாக மாறி அமைகிறது. 
உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது 
எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. 
பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் 
புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. 
தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் 
தாமே ஒடுங்கிவிடுகின்றன.

அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் இருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. 
அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல 
யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. 
அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே 
ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி 
அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய 
பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் 
என்ற நிலையை யோகி அடைவார்.
மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். 
இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல.
இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே 
வீடு பேறு அடையும் நிலை. 

அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே 
சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். 
எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. 
அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் 
நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. 
அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். 
இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவசமாதியில் போய் 
உண்மையான மனதோடு வேண்டுங்கள், 
ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக 
விளக்கி அருளுவார்கள்.

உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு 
இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து 
பிரியாமல் இருக்க வைத்து நீண்டநாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா ? என்று கேட்டால் 
திருமூலர் சாத்தியமே என்கிறார்.

ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.

பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை 
மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து 
உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். 
திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். 
அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு. 
அகத்தியர் ஒருவரல்ல பல பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் 
வாதிடுவோர் உண்டு.

ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே 
என்று தோன்றுகிறது.

இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து 
கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. 
இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் 
உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.

இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

இந்த தனஞ்செயன் என்கிற வாயுமட்டும் மரணத்திற்குப் பிறகு 
மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? 
அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். 

அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். 
இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். 
வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற 
இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் 
இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. 
இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து 
உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். 
இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். 
ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் 
வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் 
மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். 
மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி 
அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே 
வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். 
எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். 
வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் 
நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, 
புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, 
உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் 
தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். 

யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. 
கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை 
விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். 
அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். 

அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் 
இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். 
அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் 
பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி 
வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். 
அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, 
மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, 
மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து 
இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். 
ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.

அறிந்துணர்வோம்! ஆழ்ந்து சிந்தித்து உணர்வோம்!

Wednesday, December 21, 2016

நாயன்மார்கள் தமிழில் பாடும்போது, சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு?

https://www.youtube.com/watch?v=wwU_r6LVZMQ&list=TLGG9UQHpNg4W0sxMjEyMjAxNg

இந்தக் கேள்வியை திரு. தொல். திருமாவளவன் அவர்கள் யோகி, ஜக்கி வாசுதேவ் அவர்களிடம் கேட்ட காணொளி YouTube இணைய தள முகவரியைக் கொடுத்துள்ளோம். இந்தக் காணொளி மொத்தம் நான்கு நிமிடங்களுக்குக் குறைவாகவே உள்ளது. அதில் யோகி. ஜக்கி வாசுதேவ் ஐயா அளித்த பதிலும் முதல் பாதியில் சரியே. ஆனாலும், கேட்ட கேள்விக்கு முழுமையான பதில் இந்தக் காணொளியில் இல்லை என்பது எமது கருத்து. ஒருவேளை இந்தப் பதில் நீண்டு இருக்கலாம் அல்லது திரு. திருமா அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கூறியிருக்கலாம். இருப்பினும், இந்தக் காணொளி மூலம் எமக்குத் தெரிந்து, பொதுமக்கள் புரிந்து கொள்வது நாயன்மார்கள் தமிழில் பாடியது அறிவியல் சார்ந்தது அல்ல என்பது போன்ற ஒரு மாயத்தோற்றம். உண்மையில் அப்படி அல்ல. நாயன்மார்களும் , ஆழ்வார்களும் சித்தர்களே. அவர்களின் எழுத்துக்கள் அத்தனையுமே அறிவியல் சார்ந்தவைகள்தாம். எப்படி, சில சித்தர்களின் பெயரால் பின்னால் வந்தவர்கள் மதங்களை உருவாக்கினார்களோ, அதுபோலவே, சித்தர்களின் பாடல்களை சில குருமார்கள் தங்களின் சுய நலத்திற்குப் பயன்படுத்தி பிரித்து வைத்து மதத்தின் சாயலை உருவாக்கி விட்டார்கள். மேலும், தமிழ் என்றால் அறிவியல் சார்ந்தது இல்லை என்பதை இதுபோன்ற தவறான பிரசங்கங்கள் மூலம் உருவாக்கி விட்டார்கள். அதையே இப்பொழுதும் இந்தக் காணொளி மூலம் மேலும் வலுவடைய வலுவடையவே செய்யும் , அதற்காகவே இந்த பதிவு.. 
உண்மையில் தமிழ் ஒரு உயர்ந்த மொழி . நாமெல்லாம் கற்பனை செய்யமுடியாத ஞான மொழி. அப்படிப்பட்ட மொழியை எல்லோராலும் பின்பற்ற முடியாததால்தான் சமஸ்க்ருதம் ( சமஸ் என்றால் சமமான என்று அர்த்தம், க்ருதம் என்றால் மொழி) அதாவது சமஸ்க்ருதத்தை தமிழுக்கு ஒப்பாக நமது சித்தர்கள் உருவாக்கினார்கள். அதன் ஒலி அலைகள் பிரபஞ்சத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைவு மட்டுமே செல்ல முடியும் ஏனெனில் சமஸ்க்ருதம் ஒரு வட(ம்) மொழி. இன்று பெரும்பான்மையானவர்கள் கூறுவது போல் அது வடமொழி அல்ல (வடக்கில் இருந்து வந்த மொழி அல்ல ) , வடமொழி (அதாவது வடம் - கயிறு திரிவதுபோல் பிண்ணி பிணைந்திருக்கும் வடம் மொழி). சமஸ்க்ருதத்தில் எமக்குத் தெரிந்தவரை வார்த்தைகளில் பொருள் வரக் குறைந்தது இரண்டு  எழுத்துக்களாவது வேண்டும், ஆனால், தமிழில் ஓரெழுத்தும் பொருள் தரும், உதாரணம் அ, ஆ, மா, கோ போன்றவை  பல நேரங்களில்  ஓரெழுத்தையும் பிரித்தாலும் பொருள் தரும் உதாரணம், ம் என்ற எழுத்தைப் பிரிக்க ம மற்றும் (.) புள்ளி என்ற எழுத்துக்கள் வரும்., அதேபோல் ஒள இதனைப் பிரிக்க ஓ மற்றும் ள வரும். இவற்றையும் மேலும் பிரிக்கலாம் அப்பொழுதும் பொருள் தரும். ஆகவே தமிழில் பாடினாலும் பூசை செய்தாலும் பலன் அதிகம். 

தமிழில் இவற்றையெல்லாம் செய்யும்போது இவ்வுலகிற்குத் தேவையான பொருள் அனைத்தும் கிடைக்கும் மேலும் அது பொருளிச்சை கடந்து ஞான நிலைக்கு விரைவாகச் செல்லும். பொருளிச்சை இல்லாமல் போகும் என்ற காரணத்தினாலேயே பெரும்பாலானவர்கள் தமிழை ஒதுக்கினார்கள். முக்கியமாக ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை இது நடந்திருப்பதாக தெரிகின்றது. இந்த ரகசியத்தைத் தமிழ் மற்றும் சமஸ்க்ருதம் தெரிந்த ஓதுவார்கள் அறிந்து கொண்டதால்தான் மன்னர்களிடம் சேவகம் செய்யும்போது  மன்னர்களுக்கு சமஸ்க்ருதத்தை மட்டும் உயர்ந்ததாகக் காண்பித்தார்கள். ஏனெனில், சமஸ்க்ருதத்தில் வரும் ஒலி அலைகளானது விரைவாக பொருள் சேர்க்க உதவும். ஒரு நாட்டின் மன்னனுக்கு நாட்டை வழிநடத்தி செல்ல, பொருள் என்பது மிக முக்கியம், அதன் பின்பே ஞானம் எல்லாம். அதுமட்டுமல்லாது, ஞானத்தை யோகிகளும் , புலவர்களும் பார்த்துக்கொண்டார்கள். அதனால் கோவில்களில் மன்னர்கள் சமஸ்க்ருதத்தை ஊக்குவித்தார்கள். அப்போதுதான், பொதுமக்களை அவர்களின் அன்றாட தேவைகளுக்கு சிரமம் இல்லாமல் வாழவைக்க முடியும் என்பதால்.


ஆ) இதேபோல், மேலும் எனது நண்பர் ஒருவர் தமிழ் பற்றிய ஆராய்ச்சியில் பல ரகசியங்களைக் கண்டுணர்ந்து உள்ளார். அதன் தொகுப்பில் இருந்து தங்களுக்கு அறிமுக தகவல்களை இங்கு கொடுத்துள்ளேன். 
*தமிழ் மொழி ஒரு தந்திர மொழி*

தமிழ் மொழி ஆய்வில் பல அறிய விடயங்கள் கிடைத்தன.
தமிழ் மொழி மூன்று வகையாக உள்ளது
அவை முறையே
🌲இயல் தமிழ்
🌲இசை தமிழ்
🌲கூத்து தமிழ்(நாடக தமிழ்)
இந்த மூன்று தமிழ் அறியாமல் படிக்காமல் யாரும் சித்தராக முடியாது
இந்த மூன்று தமிழை கற்றால் மனிதனை பற்றியும் இறைவனை பற்றியும் எளிதாக அறியமுடியும்.
எல்லா சித்தர்களும் ஏன் தென்னாட்டுக்கு வந்து தமிழ் கற்றனர் என ஆராய்க
தமிழ் மொழி உயிர்மொழி அந்த உயிரை வளர்க்க தமிழ் மிகவும் பயன்பட்டது அதாவது அறிவு நிலையாக இயல் தமிழ் அமைந்துள்ளது,உணர்ச்சி நிலையே இசை தமிழாக உள்ளது,இவ்விரு நிலையில் இருந்து இயக்க நிலையாக கூத்து(நாடக) தமிழ் உள்ளது.
அதாவது
🌲ஞான சக்தி
🌲இச்சா சக்தி
🌲கிரியா சக்தி
இந்த மூன்று சக்திகளையே வாலை, அன்னையாக இருந்து நம்மை செயல்பட தூண்டுகிறாள். நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ஞான பெறவேண்டுமானால் தமிழ் மொழி அறிந்திருக்கவேண்டும்.
அதாவது மூன்று தமிழையும் நீங்கள் கற்றிருந்தால் உங்களால் பஞ்சபூதத்தை ஆளமுடியும். பிற உயிரை அழிக்கவோ ஆக்கவோ முடியும். உங்கள் உயிரை இறக்காமல் முக்தி பேறு செல்லமுடியும். இவை எல்லமே தமிழ் மொழியில் மறைப்பாக மிகவும் கவனமாக சொல்லப்பட்டுள்ளது.

தமிழ் மொழி அறிந்தால் நீங்கள் சாபம் கொடுத்தால் உடனே அது பலிக்கும். 
பச்சை மரத்தை எறியவைக்க முடியும்
சூரியனை தடுத்து நிறுத்த முடியும். கிரக கதிர்வீச்சை தடை செய்ய முடியும்.
 அந்த காலத்தில் அரசர்கள் முனிவரின் சாபத்திற்க்கு மட்டும் அல்ல புலவர்களின் சாபத்திற்க்கும் பயம் கொண்டனர். காரணம் புலவர்கள் தமிழ்மொழி நுணுக்கமாக அறிந்துள்ளதால்.
தமிழ்மொழியில் இலக்கணம், இசையில் இந்த இரண்டில் தான் மிகுந்த சூட்சமம் உள்ளது மூன்றாவதாக உள்ள கூத்து தமிழ் அழிக்கும் வேலை செய்யகூடியது அதற்கு மேற்கண்ட இரண்டும் துணை செய்கிறது.

👉_சங்கத்தமிழ் மூன்றும்..... தா
    ---------அவ்வையார்
👉_முத்தமிழ் அறிந்த முருகபெருமானே
             -------நக்கீரர்
👉_முத்தமிழே கற்று இயங்கும் மெய்ஞானிக்குச்
சத்தங்கள் எதக்கடி குதம்பாய்?
சத்தங்கள் எதுக்கடி?
      ----குதம்பை சித்தர். பா10
🌲_"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை 
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை 
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் 
அத்தகு சோதியது விரும்பாரன்றே "
           --------திருமூலர் -------திருமந்திரம். 

🌲" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் " 
        ஞானவெட்டியான் 
                 ----திருவள்ளுவர்
👉_பண்னுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "
 🌲சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல் 
    -அகஸ்தியர் ஞானம் 100 
👉_இப்படி எல்லா சித்தர்களும் தமிழ்மொழி கற்று உணர்ந்தனர்.
🌻🌻இதில் வள்ளலார் ஒரு படி மேலே சென்று
👉_தமிழ்மொழி உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வெளிப்படையாக கூறுகிறார்.
எம்மிடத்தில் இருந்து ஒரே ஒரு வேண்டுகோள், இன்று நம்மில் பலர் இந்து மதத்திற்கும், ஆத்திகத்திற்கும், நாத்திகத்திற்கும் , சித்தர்களின் கோட்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசமும் ஒற்றுமையும் தெரியாமல், அனைத்தையும் போட்டு குழப்பிக்கொண்டுள்ளோம். சித்தர்கள் என்பவர்கள், அறிவியல் சார்ந்த ஆன்மீக வாதிகள்.  உடல் அறிவியல், மன அறிவியல், உலோக அறிவியல், வான் அறிவியல், ஆன்ம அறிவியல் போன்ற மேலான அறிவியலை இன்றைய பொருள்/கருவி அறிவியலால்  கண்டுணராத அனைத்தையும் தவத்தில் உணர்ந்து, அன்றைய காலகட்டத்தில் இருந்த வார்த்தைகளோடும் , பொருட்களோடும் இணைப்பை ஏற்படுத்தி எழுதி  வைத்தார்கள். அப்பொழுதுதான் அனைவராலும் எக்காலத்திலும் அதனைச் சுலபமாக புரிந்துகொள்ள முடியும் என்று அவர்கள் நம்பினார்கள், அதுவே உண்மையும் கூட. ஆனால், அப்படிப்பட்ட தமிழ் சித்தர் அறிவியலையும், பிற நாட்டு மதங்களைப்போல், இந்திய நாட்டிலும் சிலரால் தங்களின் சொந்த நலனுக்காகப் பல நேரங்களில் ஒரு மதத்தின் புத்தகங்களாகவே பார்க்கப்பட்டும் பாடப்பட்டும் வந்துள்ளது வருத்தமளிக்கின்றது. இதனை ஒவ்வொருவரும் புரிந்துகொண்டால் தமிழ்நாடு சிறக்கும். தமிழ், அறிவியலோடும் ஆன்மீகத்தோடும் செழிப்போடும் வளரும். வளர்ப்போம்   

யோகி ராஜாபாபு

ஆன்மா, உடல் இரண்டின் விசித்திர விளையாட்டு

ஆன்மா ஆன்ம உலகத்திலிருந்து இறங்கி பூமியில் ஓர் உடலை எடுத்தால் அதன் பெயர்...

*பிறப்பு*

ஆன்மா ஓர் உடலை விட்டு விட்டு மீண்டும் இன்னொரு உடலை தேர்ந்தெடுத்தால் அதன் பெயர்...

*மறுபிறப்பு*

ஆன்மா தான் வசிக்கும் உடல் நோய் காரணமாக வாழும் தகுதியை இழந்து அதை விட்டு பயத்துடன் பிரிய வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் அதன் பெயர்...

*மரணம்*

ஆன்மா தான் வசிக்கும் உடலானது அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் எதிர்பாரதவிதமாக ஏற்படும் அசம்பாவிதம் காரணமாக உடலை இழந்தால் அதன் பெயர்...

*அகால மரணம்*

ஆன்மா தான் வசிக்கும் உடலானது அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் தன் உடலை தானே அழித்து அதனின்று வெளியேறினால் அதன் பெயர்...

*தற்கொலை*

ஆன்மா தான் இருக்கும் உடலில் இருந்தபடியே ஆன்ம உலகிற்கு செல்வதற்காக  தன்னை தான் ஓர் இடத்தில் முற்றிலுமாக முடக்கிக்கொள்வதின் பெயர்...

*ஜீவசமாதி*

ஆன்மா தனக்கு கிடைத்த உடலை பயன்படுத்தாமல், எந்த செயலையும் செய்யாமல்  மீண்டும் தன் ஆன்ம உலகத்திற்கு போக வேண்டி அடம்பிடிப்பது...

*சந்நியாசம்*

ஆன்மா தனக்கு கிடைத்த உடல் மீது எந்த ஒரு அபிமானமும் இல்லாமல் அதாவது காமம் கோபம் ஆசை பற்று அகங்காரம்  ஆகிய அவகுணங்களை பிரயோகம் செய்யாமல் அனைத்து காரிய கடமைகளை அனைவரின் நன்மை பொருட்டு செய்தால் அதன் பெயர்...

*வைராக்கியம்*

ஆன்மா தான் வசித்த உடலை விடும் போது அடுத்து எந்த உடலை எடுக்கப்போகிறோம் என்பதை அறிந்து மரண பயமின்றி ஒரு சட்டையை மாற்றுவது போல் அதனை மிக மகிழ்ச்சியாக செய்தால் அதன் பெயர்... 

*ஜீவன்முக்தி*

---------------------------------------------------------

பிறப்பு, இறப்பானது ஒவ்வொரு யுகத்திற்கும் மாறுபடும். 

சத்தியயுகம், திரேதாயுகத்தில் *ஜீவன்முக்தி*. 

துவாபர யுகத்தில் *ஜீவசமாதி, சந்நியாசம், மரணம்*. 

கலியுகத்தில் *மரணம், அகால மரணம், தற்கொலை*. 

சங்கம யுகத்தில் *வைராக்கியம்*.

*இதுவே ஞானம், பத்தி மற்றும் வைராக்கிய சுழற்சி*  

மார்கழி மாதத்தின் சிறப்பு என்ன? அதிகாலையில் ஏன் துயில் எழுந்து நீராடவேண்டும் ?

*மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! --> மார்கழி மாதத்தின் சிறப்பு என்ன? அதிகாலையில் ஏன் துயில் எழுந்து நீராடவேண்டும் ? சித்தர்களின் அறிவியல் உண்மை.*

*மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர்! *
--ஆண்டாள் அருளிய திருப்பாவை

இந்த ஒற்றை வரி எம்மை வெகு நாட்களாக என்னமோ செய்து கொண்டு இருந்தது.  ஏனெனில் நமது சித்தர்கள் எந்த ஒரு தகவலையும் சுருக்கமாகவும், நேரிடையாகவும், அதேநேரம்  ஆன்மீகத்தில் கண்டவற்றை உலக பொருள்களோடு தொடர்புபடுத்தி எழுதுவதில் வல்லவர்கள். ஆனால், இந்த முதல் வரியில் உள்ள திங்களும் மதியும் ஏன் அடுத்தடுத்து வரவேண்டும் என்று சிந்தித்தது உண்டு. ஏனெனில் , இரண்டு வார்த்தைகளும் கிடடத்தட்ட ஒரே அர்த்தத்தைத்தான் கொண்டுள்ளது. ஆகவே, இதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதைச் சிறிது தேடினால் கிடைத்தவையெல்லாம் நம் வாழ்வியலோடு தொடர்புடைய பெரும் ரகசியங்கள். 

🌻 *திங்கள் - மதி:*

திங்கள் என்றால் நிலவையும், மாதத்தையும் குறிக்கும். இங்கு மாதத்தைக் குறிக்கின்றது. அதேநேரம் மதி என்ற சொல் நிலவையும், மனதையும் பொதுவாக குறிக்கும் சொல்லாகும். ஆனால் மதியுடன் வரும் *நிறைந்த* என்ற வார்த்தையுடன் வரும் பொருள் முழு நிலவில் வரும் மார்கழி மாதம் என்றா கொள்ளவேண்டும். உண்மை அப்படியில்லை . மதி என்பதற்கு உலோகமான *செம்பு* என்பதும் தமிழில் பொருள் உண்டு. சரி இங்கு உலோகமான செம்புக்கும் மார்கழி மாதத்திற்கும் அடுத்து வரும் நீராடுவதற்கும் என்ன தொடர்பு உண்டு?  





🌻 *சித்தர்கள் அறிவியலார்கள்:*

🌞 *அறிவியல் உண்மை ஒன்று:*

சூரியனானது இந்த மார்கழி மாதத்தில் பூமிக்கு அருகில் இருக்கும் ஆனால் அதேநேரத்தில் பூமிக்கு தென்புறத்தில் இருக்கும்.  நாம் வசிக்கும் நாடுகளோ பூமியின் வடபுறமாகவே அமைந்து இருக்கிறது.  ஆகவேதான் நமக்குக் குளிர்காலமாக இருக்கின்றது. இதை கீழ்க்கண்ட படத்தின்மூலம் தெரிந்துகொள்ளலாம்..

 

🌞 *அறிவியல் உண்மை இரண்டு:*

நமது உடம்பிலுள்ள முடியில் நிறையத் தாதுப்பொருள்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது இரண்டு.

ஒன்று செம்பு மற்றொன்று துத்தநாகம். இந்தத் துத்தநாகம் நமது உடம்பில் சரியான அளவில் இருக்கவேண்டும், அதிகமாக (வயிற்று வலி, தோல் வியாதி, வாந்தி போன்றவைகள்) அல்லது குறைவாக (பசியின்மை, நுகர்ச்சி, ருசி, காயங்கள் ஆறாமல் இருப்பது போன்றவைகள்) இருந்தாலோ வியாதிகள் தோன்றும். 

🌝 *சித்தர்களின் அறிவியல்:*

இதனைச் சமப்படுத்த நாம் காலையில் எழுந்து இயற்கையாகக் குளிக்கவேண்டும். இன்றும் கூட இந்தியாவிலும் மற்றும் பூமத்திய ரேகை பகுதியில் உள்ள   பெரும்பான்மையான கிராமப்புறங்களில் உள்ள  மக்கள்  நீராடுவது அல்லது குளிப்பது என்பது ஊற்றுநீர், ஆறு, கிணறு, குளங்களில்தான். இவ்வாறு குளிப்பதால், பிரபஞ்சனத்தில் உள்ள துத்தநாகம் முடியில் உள்ள செம்பு (அருமையான மின் கடத்தி) வழியாக உடலைச் சென்று சேரும். ஏனெனில் குளிர் காலத்தில் நமக்கு நேரிடையாக பரவெளியில் இருந்து துத்தநாகம் குறைந்த அளவே கிடைக்கும். ஆனால், உடம்பில் முடி அதிகமாக இருக்குமானால், அது குளிக்கும்போது நீரிலுள்ள துத்தநாகத்தையும் சேர்த்து நமக்கு உடம்பிற்கு கொண்டு செல்கின்றது. ஏனெனில், பூமிப்பந்தின் மேலடுக்கில் உள்ள உலோகத்தின் செரிமானத்தில் செம்பு 29  வது , துத்தநாகம் 30 வது இடத்திலும் உள்ளன. இதனால்தான் சில மேற்கத்திய நாடுகள் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் இந்த உலோகங்களை நீரிலிருந்து நீக்கிவிட்டு மக்களுக்கு குடிதண்ணீராக அனுப்புகின்றார்கள். அமெரிக்காவில் penny  (one cent அல்லது ஒரு காசு )  செய்யப்படுவது இந்த செம்பும் துத்தநாகமும் கலந்த கலவையில்தான்.

ஆகவே தான், நம் முன்னோர்களும், சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் ஏன் இன்றும் கூட சில மதங்களில் நீண்ட கூந்தல் (ஆண் பெண் வேறுபாடின்றி) வளர்த்துவருகின்றனர். இதன்மூலம் நாம் எப்பொழுதும் பிரபஞ்சத்தோடு தொடர்புடன் இருக்க முடியும்.

இதைத்தான் சித்தர் ஆண்டாள் அம்மையார் தனது திருப்பாவை முதல் வரியில் விளக்கி உள்ளார். இதைத்தான் மாணிக்கவாசகர் பெருமானும் தமது திருவெம்பாவையில் வேறு விதமாக விளக்கி உள்ளார். இந்த  உண்மைகளைத் தெரிந்து நாமும் மார்கழி என்றால் என்ன என்பதை அறிவியல் பூர்வமாக சித்தர்களின் வழியில் பின்பற்றுவோம்.


💐நன்றி  வணக்கம்💐
🙏யோகி ராஜாபாபு

ஒருவர் இறந்தவுடன் அவரைப்பற்றி நல்லவற்றைமட்டும் பேசும் நமது பண்பாட்டு ரகசியத்தின் பின்னணி என்ன?

நமக்கெல்லாம் மிகப் பழக்கப்பட்ட ஒன்றுதான், கிராமத்திலோ, நகரத்திலோ, உள்நாட்டுத் தலைவரோ வெளிநாட்டுத் தலைவரோ, ஏழையோ, பணக்காரனோ ஆனால் ஒருவர் இறந்த பின்பு அவரைப்பற்றி அனைவரும் நல்ல விதமாகவே பேசுகின்றோம், அவர் செய்த நல்லவைகளையே மேற்கோள் காட்டுகின்றோம். இது இந்திய கலாச்சார பண்பாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றது அதுவும் தமிழ் சமூகம் சார்ந்த கலாச்சாரத்தில் சற்று அதிகமாகவே உண்டு என்றால் மிகையில்லை. நாம் அவருடன் நேருக்கு நேர் கருத்து வேறுபாட்டுடன் இருந்திருந்திருந்தாலும் ஒருவர் இறந்துவிட்டால் அவரைப்பற்றி நல்லவிதமாகவே பேசுமளவுக்கு நாமெல்லாம் நம் முன்னோர்களால் பழக்கப்படுத்தி வைக்கப்பட்டுள்ளோம். எதற்காக நம் முன்னோர்கள் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்து வைத்தார்கள்?

*ஒருவர் இறந்தவுடன் என்ன நடக்கின்றது?*

ஒருவருக்கு உயிர் போய்விட்டது என்று இன்றைய மருத்துவ நியதிப்படி கூறவேண்டுமானால், இருதயம் செயல்பாட்டில் இருந்து நின்று விட்டது என்று அர்த்தம். அதேநேரத்தில்,  சித்தர்களின் கோட்பாடுகள்படி அவருக்குப் பிராணவாயு உடலின் உள்ள அணுக்களுக்குச் செல்லவில்லை என்று அர்த்தம். அப்படி பிராணன் ஒருவரின் உடலில் உள்ள அணுக்களுக்குச் செல்ல முடியவில்லையென்றால் அவருடைய தூய்மையான ஆத்மா அந்த உடலைவிட்டுப் பிரிந்துவிடும். அப்படிப் பிரியும்போது இறந்தவர் தன் வாழ்நாளில் *மனத்தால் நினைத்த எண்ணங்களும், சொல் மற்றும் செயல்களும் (இந்த மூன்றுமே வினைகள் அல்லது கர்மாவென்று சொல்லப்படுகின்றது) அந்த ஆத்மாவுடன் அதீத வீரியத்துடன் ஓட்டிக்கொண்டே இருக்கும் அல்லது அந்த உடலைப் பயன்படுத்த நினைக்கும், ஆனால் முடியாது.  இது அந்த இறந்தவருடைய உடல் சிதையும் வரை நடக்கும். எந்த ஒரு நவீன மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லாமல், அப்படி  ஒரு உடல் சிதைய குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும், அதுவே உடலை எரித்துவிட்டால் எரிக்கும் வரை  ஆத்மா முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் அந்த ஆத்மாவால் அந்தப் பழைய உடலைப் பயன்படுத்த முடியாது. இதைத்தான் சித்தர் சிவவாக்கியர், தமது சிவவாக்கியம் என்ற நூலில் இப்படிக் குறிப்பிடுகின்றார்.


கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும் போய் மரம்புகா, 
இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை இல்லை இல்லையே! 
                                                    - சிவவாக்கியம் 48


*இறந்தவர் பற்றி நல்லவற்றையே ஏன் பேசவேண்டும்?*

தூய்மையான ஆத்மா அதனுடன் ஒட்டி இருக்கும் வினைகளைச் செயல்படுத்த ஏதோ ஒரு உடல் தேவைப்படும். அந்த ஆத்மா இறந்தவுடன் அதனுடைய பழைய உடலைப் பயன்படுத்த முடியாது என்கின்றபோது, அந்த நபர் உயிருடன் இருந்தபோது பழக்கப்பட்ட வேறொரு நபருடன் அந்த ஆத்மா தொடர்பு கொள்ளமுயலும். ஆனால், இன்னொரு உடலை அந்த ஆத்மா பயன்படுத்தவேண்டுமானால் அந்த ஆத்மா பற்றி வேறொருவர் மனத்தாலாவது நினைக்கவேண்டும். ஏனெனில் *ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள ஒரே வாசல் மனம்தான்.* உயிரோடிருக்கும் ஒருவர் இறந்தவர் பற்றிய என்ன மாதிரியான எண்ணங்களை மனத்தால் நினைக்கின்றாரோ அந்த நிலையில் உள்ள வினைப்பதிவுகளை அந்த இறந்தவருடைய ஆத்மா உயிரோடிருப்பவருக்குச் செலுத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனதாலும், எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் நல்வினை தீவினை என்கின்ற இருவினைகளால் எப்பொழுதும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றோம். இப்படி நம் மனம் எதில் நாட்டம் கொள்கின்றதோ அந்த அலைவரிசையில் யாரெல்லாம் தங்களின் எண்ணங்களை வைத்துள்ளார்களோ அவர்களை இந்தப் பிரபஞ்சம் இணைக்கும், அதுவே இயற்கையின் விதி. இந்த விதியின்படி, அந்த இறந்தவரின் ஆத்மா உயிரோடிருக்கும் ஒருவரது எண்ணத்தில் அதே அலைவரிசை கொண்ட தனது வினைப்பதிவுகளை கொண்டு சேர்க்கும். ஆகவே  உயிரோடிருப்பவர், இறந்தவர் பற்றி  நல்ல விதமாகப் பேசாவிட்டால் அல்லது இறந்தவர் பற்றி உணர்ச்சிவசப்பட்டு எதிர்மறையில் பேசினாலும் உயிரோடிருப்பவரின் தீவிரமான உணர்ச்சியின் அலைவரிசையில் உள்ள இறந்தவரின் வினைகளை இறந்தவர் ஆத்மா கொண்டு சேர்க்கும் வாய்ப்புகள் அதிகம்.   உயிரோடிருக்கும் ஒருவர், இறந்தவர் பற்றிய நல்ல எண்ணங்களைக்   கொண்டிருந்தாலோ அல்லது நல்ல விதமாக அவரைப்பற்றிப் பேசினாலோ அந்த ஆத்மா உயிரோடிருப்பவருக்கு உதவ ஆரம்பிக்கும். இதனால் இரண்டு மடங்கு நன்மையை உயிரோடிருப்பவர் பெறுவார்., இதனாலேயே,  நமது கலாச்சாரத்தில் ஒருவர் இறந்தபின்பு அவர் *எப்படிப்பட்டவராக இருந்தாலும்* நல்ல விதமாகவே பேசவேண்டும் என்று நம்மைப் பழக்கப்படுத்தி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். 

ஏனெனில் மனிதனாக பிறப்பது என்பது கிடைத்தற்கரிய பிறவி, இதைத்தான் சித்தர் அவ்வைத்தாய் இப்படி குறிப்பிடுகின்றார்.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!


ஆகவே,  நல்ல எண்ணங்களோடு என்றைக்கும் நாமிருந்து நமக்கும் இந்த உலகத்திற்கும் நன்மையே செய்வோம். நடப்பதெல்லாம் நன்மைக்கே !

மீண்டும் வேறொரு சித்தர் வாழ்வியல் அறிவியல் விளக்கத்தோடு சந்திக்கும்வரை விடைபெறுகின்றோம்.

நன்றி  வணக்கம்
யோகி ராஜாபாபு

சிதம்பரம்_நடராஜர்_கோவில் பற்றிய_75_தகவல்கள்_வருமாறு

1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. 
☘💫☘

2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது.

3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும். 
🌹☘

4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. 
☘💫

5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது. 
☘🌹

6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன. 
🌿🎋💫

7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன. 
🌹🌹

8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. 
☘💫

9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது. 
🌹🌹

10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன. 
☘💫

11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார். 
🌹🌿

12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும். 
🌿🌹

13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு. 
☘☘

14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம். 
🌿💫

15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை 'மூத்த நாயனார்' என்கிறார்கள். 
🌹💫

16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. 
☘🌹

17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர். 
🌿🌿

18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள். 
☘☘

19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது. 
🌹🌹

20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது. 
☘💫

21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது. 
🌹🌿

22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது. 
🌿💫

23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன. 
🌿🌿

24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன. 
☘☘

25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது ஆகும்.

26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது. 
🌹💫

27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள். 
☘💫

28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது. 
☘💫

29. இத்தலத்துக்கு 'தில்லை வனம்' என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. 
🌹🌹

30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து நூல்களை பாடினார். 
🌹💫

31. சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை. 
☘💫

32. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூனை நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜகோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும். 
☘💫

33. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. 
🌿💫

34. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு. 
🌿💫

35. திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின் முழுமையான அருளைப் பெறலாம். 
☘💫

36. நடராஜருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? பொன்+அம்பலம்= பொன்னம்பலம். அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது. 
🌹💫

37. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை தாமதமாக நடத்தப்படுகிறது. 
☘💫

38. சிதம்பரம் நடராஜருக்கு தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது. 
🌹💫

39. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான் இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது. அண்ட சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம் அடைகிறதாம். 
 ☘💫

40. மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாக சிதம்பரம் கோவில் உள்ளது. நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில்தான் அமைந்துள்ளது. 
🌹💫

41. சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை உடைபவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் சக்தியும் உறைந்துள்ளனர். எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ பெருமானை தரிசனம் செய்யலாம். 
🌹💫

42. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் வில்வத்தளம் தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் 'பார்க்க முக்தி தரும் தில்லை' என்கிறார்கள். 
☘💫

43. சிவபெருமானுக்கும், காளிக்கும் நடந்த நடனப்போட்டி திருவாலங்காட்டில் நடந்ததாகவும், ஆனால் தில்லைக்கு சிறப்பு ஏற்படுத்த அந்த வரலாற்றை சிதம்பரத்துக்கு மாற்றி விட்டார்கள் என்றும் மூதறிஞர் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிட்டுள்ளார். 
🌿💫

44. சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர். 
☘💫

45. இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும். 
☘💫

46. ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது. 
🌹💫

47. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர். 
🌿💫

48. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிக, மிக சிறப்பு வாய்ந்தது. 
☘💫

49. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம். 
🌹💫

50. மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம்நடராசர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. 
🌿💫

51. நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 
🌿🌹

52. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில்நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
🌿💫

53. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர். 
🌿💫

54. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 🌹💫

55. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. 
🌿💫

56. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா. 
🌹💫

58. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. 
🌿💫

59. நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். 
☘💫

60. நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். 
🌹💫

61. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றை செய்யலாம். 
🌹💫

62. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். ☘💫

63. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். 
☘💫

64. பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். 
🌿💫

65. நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.
☘💫

66. இத்தலத்து நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள். 
🌿💫

67. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர். 
☘🌿

68. இந்த கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது. 
☘💫

69. பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோர்ட்டில் அதாவது சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.
🌿💫

 70. சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. 
☘💫

71. திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபதி இதுதான். 
☘💫

72. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப் பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்தலம். 
🌿💫

73. நடராச சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும். 
☘💫

74. சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சிகள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன. 🌿💫


சிவ சிவ சிவ

சிதம்பரம்_நடராஜர்_கோவில் பற்றிய_75_தகவல்கள்_வருமாறு

1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. 
☘💫☘

2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது.

3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும். 
🌹☘

4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. 
☘💫

5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது. 
☘🌹

6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன. 
🌿🎋💫

7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன. 
🌹🌹

8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. 
☘💫

9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது. 
🌹🌹

10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன. 
☘💫

11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார். 
🌹🌿

12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும். 
🌿🌹

13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு. 
☘☘

14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம். 
🌿💫

15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை 'மூத்த நாயனார்' என்கிறார்கள். 
🌹💫

16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது. 
☘🌹

17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர். 
🌿🌿

18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள். 
☘☘

19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது. 
🌹🌹

20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது. 
☘💫

21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது. 
🌹🌿

22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது. 
🌿💫

23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன. 
🌿🌿

24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன. 
☘☘

25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது ஆகும்.

26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது. 
🌹💫

27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள். 
☘💫

28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது. 
☘💫

29. இத்தலத்துக்கு 'தில்லை வனம்' என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு. 
🌹🌹

30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து நூல்களை பாடினார். 
🌹💫

31. சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை. 
☘💫

32. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூனை நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜகோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும். 
☘💫

33. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு. 
🌿💫

34. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு. 
🌿💫

35. திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின் முழுமையான அருளைப் பெறலாம். 
☘💫

36. நடராஜருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? பொன்+அம்பலம்= பொன்னம்பலம். அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது. 
🌹💫

37. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை தாமதமாக நடத்தப்படுகிறது. 
☘💫

38. சிதம்பரம் நடராஜருக்கு தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது. 
🌹💫

39. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான் இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது. அண்ட சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம் அடைகிறதாம். 
 ☘💫

40. மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாக சிதம்பரம் கோவில் உள்ளது. நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில்தான் அமைந்துள்ளது. 
🌹💫

41. சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை உடைபவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் சக்தியும் உறைந்துள்ளனர். எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ பெருமானை தரிசனம் செய்யலாம். 
🌹💫

42. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் வில்வத்தளம் தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் 'பார்க்க முக்தி தரும் தில்லை' என்கிறார்கள். 
☘💫

43. சிவபெருமானுக்கும், காளிக்கும் நடந்த நடனப்போட்டி திருவாலங்காட்டில் நடந்ததாகவும், ஆனால் தில்லைக்கு சிறப்பு ஏற்படுத்த அந்த வரலாற்றை சிதம்பரத்துக்கு மாற்றி விட்டார்கள் என்றும் மூதறிஞர் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிட்டுள்ளார். 
🌿💫

44. சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர். 
☘💫

45. இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும். 
☘💫

46. ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது. 
🌹💫

47. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர். 
🌿💫

48. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிக, மிக சிறப்பு வாய்ந்தது. 
☘💫

49. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம். 
🌹💫

50. மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம்நடராசர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. 
🌿💫

51. நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 
🌿🌹

52. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில்நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 
🌿💫

53. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர். 
🌿💫

54. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 🌹💫

55. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன. 
🌿💫

56. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா. 
🌹💫

58. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. 
🌿💫

59. நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம். 
☘💫

60. நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். 
🌹💫

61. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றை செய்யலாம். 
🌹💫

62. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார். ☘💫

63. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார். 
☘💫

64. பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். 
🌿💫

65. நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.
☘💫

66. இத்தலத்து நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள். 
🌿💫

67. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர். 
☘🌿

68. இந்த கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது. 
☘💫

69. பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோர்ட்டில் அதாவது சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.
🌿💫

 70. சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. 
☘💫

71. திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபதி இதுதான். 
☘💫

72. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப் பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்தலம். 
🌿💫

73. நடராச சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும். 
☘💫

74. சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சிகள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன. 🌿💫


சிவ சிவ சிவ

நாம் ஏன் வரி கட்ட வேண்டும்? அரசுக்கு ஏன் வரி தேவைப்படுகிறது?

ஒரு பொருளாதார அலசல்.!
----------------------------
வரிகள், எப்படி, அரசுக்கு மட்டுமல்ல, அதைச் செலுத்தும் குடிமகனுக்கும் பயன்தரக்கூடிய அத்தியாவசியமான ஒன்று என்பதை, பாமர மொழியில் அலசும் கட்டுரை.
----------------------------
ஒரு அரசாங்கத்துக்கு நாட்டை நிர்வகிக்க தங்கம் தேவை.! ஆனால், தங்கத்தை சந்தையில் அள்ளிவிட முடியாது என்பதால், அதற்க்கு சம மதிப்பு உள்ள ரூபாய் நோட்டுக்கள்! அவ்வளவே அடிப்படை!

இந்த ரூபாய் (அல்லது எந்த கரன்சியாயினும்) நோட்டுக்களை அச்சடித்து புழங்கவிடுவதை, IMF எனும் சர்வதேச நாணய நிதியம், கண்குத்திப் பாம்பாக கவனித்துக் கொண்டே இருக்கும்.! எந்த ஒரு நாட்டின் அரசும் சும்மா இஷ்டம் போல நோட்டுக்களை அடித்து புழக்கத்தில் விட முடியாது! அதற்க்கு இந்த IMF ஒப்புதல் தரவேண்டும்.! 

ஆனால், எந்த மதிப்புக் கரன்ஸியை வேண்டுமானாலும் (1, 5, 10, 20, 50, 100, 500, 1000…. என !) அடிக்கலாம்... என்ன,... அடித்து புழக்கத்தில் இருக்கும் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பில் (எடையில்) தங்கம் கையிருப்பு அரசிடம் இருக்க வேண்டும்.

சரி. இப்பொழுது, நம் நாட்டோடு இன்னொரு நாட்டை ஒப்பிடலாம் - அமெரிக்காவையும் இந்தியாவையும்! அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்ததற்குக்   காரணம்,... நாம் எப்பொழுதுமே அமெரிக்காவையே உதாரணமாகக்  கொண்டு பழகியுள்ளோம்!
--------------------------
கணக்கிடுவதற்காக, சில கற்பனை உதாரண மதிப்புக்களை / எண்களை  எடுத்துக்கொள்வோம்: 

துவக்கத்தில், அமேரிக்காவிடமும் இந்தியாவிடமும் சமமாக, 1 கிலோ (1000 கிராம்) தங்கம், கையிருப்புள்ளதாக வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது:
அமேரிக்கா, மொத்தம் ஆயிரம் டாலர் மதிப்புக்கு, 1 டாலர் நோட்டுக்கள் 1000 அச்சடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது (தங்கம் இருப்பைக் கணக்கில் கொண்டால்), 1 கிராம் தங்கம் 1 டாலருக்கு சமம்! சரியா!

இந்தியாவும், அதே போல், ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு இணையாக 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கிறது.! அதாவது ஒரு கிராம் தங்கத்துக்கு, ஒரு ரூபாய் மதிப்பு!

இப்பொழுது பார்த்தீர்களானால், ஒரு அமெரிக்க டாலரும் கூட, ஒரு இந்திய ரூபாய்க்கு சரி நிகர் மதிப்பே! ஒரு அமெரிக்க டாலர் = ஒரு இந்திய ரூபாய் மட்டுமே!

இப்பொழுது,

அமெரிக்க அரசாங்கம் ஆயிரம் ஒரு டாலர் நோட்டுக்களை புழக்கத்தில் இறக்கி, அதிலிருந்து, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு, 20 சதவீதம் வரியாக இலக்கு வைக்கிறது. அதன் மூலமாக, 200 டாலர்கள் வரியாக திரும்பப் பெறுகிறது. 

இந்த 200 டாலர்களை வைத்து, இன்னமும் ஒரு 200 கிராம்கள் தங்கத்தை வாங்கி, அதற்க்கு இணையாக இன்னமும் ஒரு 200 ஒரு டாலர் நோட்டுக்களை அச்சடித்து, புழக்கத்தில் விடுகிறது! ஆக மொத்தம், தற்போழுது, அமெரிக்க அரசாங்கத்திடம் 1200 கிராம் தங்கமும், அமெரிக்க சந்தையில் அந்தத் தங்கத்துக்கு இணையாக 1200 டாலர் நோட்டுக்களும் புழக்கத்தில் உள்ளன! ஆயினும், ஒரு கிராம் தங்கம் = ஒரு டாலர் மட்டுமே! 

இந்த பொருளாதாரம், இதே போன்று விரிவடைந்து, மேலும் தங்கம்-மேலும் டாலர் நோட்டுக்கள், என, எவ்வளவு வளரும் பொழுதும், ஒரு கிராம் தங்கம் ஒரு டாலருக்கு நிகராகவே இருக்கும் - இலக்கு வைத்த வரிவிகிதம் முழுமையாக வசூலாகும்வரை!.

இப்பொழுது, இந்தியாவுக்கு வருவோம்.!

இந்திய அரசும் அமேரிக்கா போலவே 1000 ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, அதிலிருந்து 20% வரியாக வசூலாக இலக்கு வைக்கும். ஆனால், அசல் வரிவசூலோ,..  வெறும் 50 ரூபாய்கள் மட்டுமே (என்று வைத்துக்கொள்வோம்!).!! அதாவது, புழக்கத்தில் விட்ட 1000 ரூபாய்களில், வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக, பரிவர்த்தனை செய்யப்பட்டது! மிச்சம் 750 ரூபாய்கள், வரி செலுத்த விருப்பம் இல்லாதவர்களால், கணக்கில் வராமல் புழங்கத் தொடங்கி விட்டது! இதுதான் கருப்புப்பணம்.! 

இந்த 750 ரூபாய்கள், சந்தையில் புழக்கத்தில் இருந்தாலும் கூட, இது அரசின் வரவு செலவுக் கணக்குகளில் பதிவாவதில்லை.! ஆக, அரசுக் கணக்குப்படி, நாட்டில் புழக்கத்தில் வெறும் 250 ரூபாய்கள் மட்டுமே இருப்பதாக கணக்கில் கொள்ளப்படும் (சந்தையில் மிச்சம் 750 ரூபாய்கள் நிஜத்தில் இருந்தாலும் கூட!).! இந்த கணக்கில் வராத 750 ரூபாய்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைதான், அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத, இணைப் பொருளாதாரம் என்பது! 

சரி. இப்பொழுது, அரசு, தனக்கு கிடைத்த வரிப்பணம் 50 ரூபாய்களை வைத்து, மேலும் ஒரு 50 கிராம் தங்கம் மட்டுமே வாங்கி கையிருப்பை உயர்த்த முடியும்! தவிர, அதற்க்கு இணையாக இன்னமும் ஒரு 50 ஒரு ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்து வெளிவிட முடியும்! இப்பொழுது சந்தையில் (அதிகாரபூர்வமாக) உள்ள இந்திய ரூபாய்கள் வெறும் 300 ரூபாய்கள் மட்டுமே! (ரூ.250 + ரூ.50). ஆனால், அசலாக அரசு அச்சடித்து வெளியிட்ட 1000 + 50 சேர்ந்து, மொத்தம் 1050  ரூபாய்கள் கணக்கில் இருந்திருக்க வேண்டும்!

எது எப்படி இருந்தாலும், அரசு, மேலும் நோட்டுக்களை அச்சடித்து சந்தையில்  வெளியிட்டே ஆகவேண்டும் - காரணம், ஏற்க்கெனவே வெளியிட்ட 750 ரூபாய்கள் அதிகாரபூர்வமாக கணக்கில் வராமல்  "காணாமல் போய்விட்டதல்லவா"? எனவே, அரசு அந்த விடுபட்ட 750 ரூபாய்களை அச்சடித்து வெளிவிட முடிவெடுக்கிறது!

இப்பொழுது வருகிறார் கண்குத்திப்பாம்பு IMF ! "நீங்க அதுமாதிரி எல்லாம் இஷ்டத்துக்கு அச்சடிக்க முடியாது.! உங்க தங்கம் கையிருப்புக்கு இணையாகத்தான் நோட்டுக்கள் வெளிவிடமுடியும்!" என்கிறார் அவர்! ஆனால், இந்திய அரசோ, நோட்டு அச்சடித்தே தீரவேண்டும் என்று ஆடம் பிடிக்கும் பொழுது, IMF சொல்லும்: "உன் ரூபாயின் மதிப்பை, நிகராக நீயே குறைத்துவிட்டு, மேலும் நோட்டுக்களை அச்சடித்துக்கொள்!", என்று!  அரசுக்கு வேறு வழி கிடையாது! காரணம், அது, வெளியிட்ட நோட்டுக்களுக்கு, இலக்கு வைத்த வரி 100% வசூலாகவில்லை! அதனால், மேலும் (அமேரிக்கா போல) தங்கம் வாங்கி கையிருப்பை உயர்த்த முடியவில்லை! அதனால், கணக்குப் போட்டு, ரூபாயின் மதிப்பை தானே குறைத்து அறிவித்துவிட்டு, மேலும் 750 ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறது, இந்திய அரசு! இப்பொழுது, மொத்தம் 1800 ரூபாய்கள் அச்சடித்து புழக்கத்தில் உள்ளது 1000 + 50 + 750) - ஆனால், அரசின் வசம், வெறும் 1050 கிராம் தங்கம் மட்டுமே கையிருப்பு உள்ளது! 

ஆக,.. இப்பொழுது, இந்திய ரூபாயின் மதிப்பு, ரூ.1 இல் இருந்து, ரூ.1.71 என ஆகி விட்டது! (1800 ஐ 1050ஆல் வகுத்தால்  = 1.71)

அதாவது, மேற்சொன்ன அமெரிக்க டாலரை ஒப்பிடும் பொழுது, 1 டாலருக்கு சமமாக இருந்த இந்திய ரூபாய், இப்பொழுது ரூ.1.71 என வீழ்ச்சி அடைந்துவிட்டது!  $1 = Rs.1.71 ! 

இதேபோல், நோட்டுக்களை, சந்தைத் தேவைக்கு ஏற்றாற்போல்  அடித்து வெளிவிட வெளிவிட, ரூபாயின் மதிப்பு ஒவ்வொரு முறையும் குறைந்துகொண்டே வருகிறது! ஆனால், கையிருப்பு தங்கம் மட்டும், வெளிவந்த நோட்டுக்களுக்கு சமமாக கூடுவதே இல்லை!

இதனால்தான், ... இன்று, ஒரு அமெரிக்க டாலர் = Rs. 67.80 என வந்து நிற்கிறது!

இந்திய அரசும் 100 % இலக்கு வைத்த வரிகளை வசூலித்திருக்குமானால், நம் இந்திய ரூபாயின் மதிப்பு இவ்வளவு கேவலமாக சரிந்திருக்கவே சரிந்திருக்காது!

இப்பொழுது, உங்களுக்கு வரிகளின் முக்கியத்துவமும், பொதுமக்களுக்கு அதனால் (மறைமுகமாக) கிடைக்கும் பலன்களும் ஓரளவு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்! நிலையான வலுவான ரூபாயில், வீடு, நிலம், பொருட்களின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும்!

இந்த ஒற்றைக் காரணத்தால், அமெரிக்கா, உலகின் மிகப் பணக்கார நாடாக அறியப்படுகிறது! காரணம், அங்கு கிட்டத்தட்ட 95% குடிமக்கள் வரி செலுத்துகின்றனர்!

ஆனால், இந்தியாவில்? யாராலாவது, ஊகிக்க முடியுமா?
percentage of taxpayers in India என்று கூகிள் செய்து தேடிப்பாருங்கள்! 
நல்ல இந்தியக் குடிமகன் தலையை வெட்கத்தில் தொங்கவிட்டுக் கொள்வான்!

ஆம்.! வெறும் 1% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் வரி செலுத்துபவர்கள்!
 
நாம், நம் நாட்டில் அமெரிக்காவுக்கு இணையான சமூகப் பாதுகாப்பு, கட்டமைப்பு வசதிகள், சுத்தம், சுகாதாரம், வெட்டில்லாத மின்சாரம், பகல்போல ஒளிமயமான இரவு, உயர்தர வாழ்க்கை என எல்லாவற்றையும் எதிர்பார்க்கிறோம்! அங்கு இருக்கும் அவற்றை சிலாகித்து புகழ்ந்து பெருமூச்சு விடுகிறோம். ஆனால்,...

அவர்கள் போல, ஒட்டுமொத்த சமூகமாக வரி செலுத்துகிறோமா? கள்ள/கறுப்புப் பணத்தை புறம் தள்ளுகிறோமா? நாடு முன்னேற, நம்மாலான பங்களிப்பை, வரிகள் வாயிலாக செய்கிறோமா? என்று யோசித்தால்,... கசப்பான விடை, "இல்லை" என்பதே ஆகும்!
-----------------------
இந்த ஆய்வுக் கட்டுரை, நரேந்திர மோடி அவர்களை ஆதரித்து எழுதப்பட்டதோ, அல்லது ஐநூறு, ஆயிரம் செல்லாதென அறிவித்ததை ஆதரித்தோ,.. அல்ல. 

படிக்கும் உங்களுக்கு, கறுப்புப் பணம், எப்படி உருவாகி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும், என்று எடுத்துக் காட்டவே!
-----------------------
வாட்ஸாப்பில் கண்டதை, தமிழாக்கம்: 
- Ramakrishnan Sivasankaran.
-----------------------

💐💐💐உங்கள் சிந்தனைக்கு (தெரியாத ரகசியங்கள்)💐💐💐

படித்ததை பகிர்கிறேன்....


படிப்பது மாணவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருப்பது, படிப்பதை நினைவில் வைத்துக் கொள்வதும் அதைச் சிறப்பாக தேர்வில் எழுதுவதும்தான்.

அறிவுத்திறன் அபாரமாக உள்ள பல பிள்ளைகள்கூட தேர்வுகளில் சிறப்பாகச் செய்வதில்லை. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தவே சிரமப்படுவதாகக் குறைபடுகின்றனர். என்ன படித்தாலும் தேர்வு நேரத்தில் பதற்றப்படுவதாகச் சொல்லும் மாணவர்களை நிறைய இருக்கிறார்கள். ஒரு தேர்வில் சற்று மதிப்பெண்கள் குறைந்தாலே வாழ்க்கையே முடிந்துவிட்டதாக மாணவர்கள் நினைப்பதும் தெரிகிறது. பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் வேறு அந்த மாதிரி நினைக்க வைக்கின்றனர். மாணவர்கள் சிறப்பாகப் படிக்க, தேர்வெழுத நம் நேர்மறை சிந்தனை முறையான அஃபர்மேஷனை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்!

 
 
உளவியல் வன்முறை

இன்று மாணவர்களைப் பந்தயக் குதிரைகள் போல ஆக்கிக்கொண்டிருக்கிறோம். பெற்றோரின் பெருமை காக்கவும், பள்ளியின் ‘ரிசல்ட்’ காக்கவும், நண்பர்கள் மத்தியில் மானம் காக்கவும் அவர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் துடிக்கிறார்கள். சுதந்திரமான போக்கில் படிக்கும், தேர்வெழுதும் நிலை இன்று இல்லை. அவர்கள் சுய மதிப்பு தொடர்ந்து காயப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

பல பள்ளிகளில் பேதப்படுத்துவதையும் அவமானப்படுத்துவதையும் தண்டிப்பதையும் படிப்பதற்கான கிரியா ஊக்கிகளாக பயன்படுத்தி வருகிறார்கள். மின்சாரக் கம்பிக்குப் பயந்து சொன்னதைச் செய்யும் சர்க்கஸ் மிருகம் போலத் தண்டனையிலிருந்தும் அவமானத்திலிருந்தும் தப்பிக்க மாணவர்கள் படிக்கிறார்கள். மதிப்பெண்களுக்குத் தக்கவாறு செக் ஷன் பிரிப்பது, பெஞ்சுகள் அமைப்பது, மரியாதை கொடுப்பது எனச் செய்வதாகப் பல பெற்றோர்கள் புகார் கொடுக்கிறார்கள். உடல்ரீதியான தாக்குதல்கள் வகுப்பறைகளில் குறைந்திருந்தாலும், உளவியல் வன்முறைக்குக் குறைவில்லை.

பொய்ச் சமூகங்கள்

பல ஆசிரியர்கள், படிக்காத மாணவர்கள் என்றால் அவர்களை மட்டமாக நடத்துகிறார்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்களில் பெற்றோர்கள் கூனிக் குறுகி நிற்பதைப் பார்க்கிறோம். தான் ஒன்றுக்கும் லாயக்கில்லை என்ற எண்ணத்தை ஒரு மாணவனுக்கு மிக எளிமையாக ஒரு ஆசிரியரால் ஏற்படுத்த முடியும். அவ்வளவு வலிமையான ஆயுதம் ஆசிரியர்களிடம் உள்ளது. திட்டுவதை விடப் புறக்கணித்தல் மிக மோசமானது. ஒப்பிட்டுப் பேசுவது, படிக்காததால் பெற்றோருக்கு அவமானம் எனச் சொல்லி மறுக வைப்பது எனும் அணுகுமுறைகள் மாணவர்கள் மன நிலையை முழுவதுமாக எதிர்மறையாகத் திருப்பி விடுகின்றன.

தொழில்நுட்பத்தால் கவனக்குறைவு இன்று எல்லா வயதினருக்கும் வந்துவிட்டது. ஸ்மார்ட் ஃபோனைக் கைக்குழந்தையைப் பார்ப்பது போலச் சதா அதையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். விக்கினால் கூட வாட்ஸ் அப்பில் வீடியோ எடுத்து அனுப்பிவிடுகிறார்கள். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் இன்ஸ்டாகிராமும் பல பொய் சமூகங்களை வடிவமைத்துவருகின்றன. டி.வியில் சதா சர்வ காலமும் ஏதோ ஒரு சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது. தேர்வு நேரத்தில்தான் 20-20 விளையாடுவார்கள் அல்லது மோட்டோ ஜி.பி. ரேஸில் பைக் ஓட்டுகிறார்கள். படிப்பிலிருந்து கவனத்தை சிதற வைக்கக் கோடிக் காரணங்கள் உண்டு. நம் காலத்தில் இவை இருந்ததில்லை. ஆதலால் ஆதரவோடும் புரிதலோடும் நம் பிள்ளைகளை அணுகுவது முக்கியம்.

ஆசையோடு படித்தல் என்பது மிக முக்கியம். ஆனால் பிடிக்காத பாடம் அல்லது பிடிக்காத குரூப் எனும்போது ஆசையை விடப் பயமும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. கணக்குப் படிக்காவிட்டால் குடி முழுகிப் போய்விடும் என்று சொல்லி வராத பாடத்தில் போட்டு வாழ்க்கையைக் கெடுத்த பல பெற்றோர்களை எனக்குத் தெரியும்.

சம்மதிக்காமல்

கற்றல் இங்கு அயர்ச்சியையும் மன உளைச்சலையும் தருவதால் மாணவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் குறைந்து தோல்வி பயமும் மன நெருக்கடியும் இயல்பாக வந்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் மாணவர்களின் தற்கொலை முயற்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு என் நேரடி விண்ணப்பம் இதுதான்: உங்கள் வாழ்க்கையில் கல்வி ஒரு அங்கம். அதை ரசித்துச் செய்ய முடியும். அதன் வெற்றி தோல்விகள் நீங்கள் நினைக்கும் அளவுக்கு வாழ்க்கையை மாற்றிப் போடாது. உங்களுக்கான படிப்பை, வேலையை, துறையைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் சிறப்பாகச் செய்வீர்கள். உங்களுக்கு யாரும் போட்டி அல்ல. நீங்கள் சம்மதிக்காமல் யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாது. உங்களால் எதையும் செய்ய முடியும். அதை நீங்கள் எக்காலத்திலும் மறக்கக் கூடாது.

பயமில்லாமல் ஆசையோடு எந்தக் கட்டாயமுமின்றிப் படிப்பது காலத்துக்கும் நிலைக்கும். புரிந்து படிக்கவும் உதவும். படித்ததைச் செயல்படுத்தவும் நம்பிக்கை தரும். பிறருக்காகப் படிப்பதை விடுத்துத் தனக்காகப் படிக்கையில் ஊக்கம் தானாக வரும்.

படிப்பது தியானம் போல. அது உள்ளுக்குள் நிகழும் ரசவாதம். அதை உணர்ந்து ரசித்து அனுபவித்துச் செய்ய முடியும்.

விடுமுறை நாளில் படுத்தவாறு கையில் காபியுடன் பிடித்த கதைப் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பது போலப் பாடப் புத்தகத்தையும் மனம் லயித்துப் படிக்க முடியும்.

‘கற்பது கல்லை உடைப்பது போலல்ல; கற்கண்டு சுவைப்பது போல’ என்பதை மனம் நம்பும்போது கற்றல் அனுபவம் ஒரு சுக அனுபவமே!

மாணவர்கள் கீழ்க்கண்ட அஃபர்மேஷன்களை பயன்படுத்தலாம்:

“நான் முழு ஆர்வத்துடனும் கவனத்துடனும் கற்கிறேன்.”

“நான் என் மீது பூரண சுய மதிப்பும் நம்பிக்கையும் கொள்கிறேன்.”

“நான் எல்லாத் தேர்வுகளிலும் என் அதிகபட்சத் திறமையை வெளிப்படுத்துகிறேன்.”

“நான் விரும்பிய துறையை ஏற்று, அதில் சிறப்பாகக் கற்கிறேன்.”

“நான் படிப்பது தொடர்பான அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளியேற்றுகிறேன்.”

தமிழர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3).
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
"தமிழ் வருடங்கள்"
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை . . .
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
"அயணங்கள்"
அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
"ருதுக்கள்"
ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
"மாதங்கள்"
தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
"பக்ஷங்கள்"
பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
"திதிக்கள்"
திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை 
2.துதியை 
3.திருதியை 
4.சதுர்த்தி 
5.பஞ்சமி 
6.ஷஷ்டி
7.சப்தமி 
8.அஷ்டமி 
9.நவமி 
10.தசமி 
11.ஏகாதசி 
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
"வாஸரங்கள்"
வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
"நட்சத்திரங்கள்"
நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்.
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
"கிரகங்கள்"
கிரகங்கள் ஒன்பது ஆகும்.
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
"இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்"
இராசிகள் பண்ணிரெண்டு ஆகும்
ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், .. .
நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.
நட்சத்திரங்கள்
இராசி
இராசிஅதிபதி
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புனர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
"நவரத்தினங்கள்"
1.கோமேதகம் 
2.நீலம் 
3.பவளம் 
4.புஷ்பராகம் 
5.மரகதம் 
6.மாணிக்கம் 
7.முத்து 
8.வைடூரியம் 
9.வைரம்.
"பூதங்கள்"
பூதங்கள் ஐந்து வகைப்படும்
பூதங்கள்
தன்மாத்திரைகள்
நுண்மூலங்கள்
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
"மஹா பாதகங்கள்"
மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை 
2.பொய் 
3.களவு 
4.கள் அருந்துதல் 
5.குரு நிந்தை.
"பேறுகள்"
பெறுகள் பதினாறு வகைப்படும்
1.புகழ் 
2.கல்வி 
3.வலிமை 
4.வெற்றி 
5.நன்மக்கள் 
6.பொன் 
7.நெல் 
8.நல்ஊழ் 
9.நுகர்ச்சி 
10.அறிவு 
11.அழகு 
12.பொறுமை 
13.இளமை 
14.துனிவு 
15.நோயின்மை 
16.வாழ்நாள்.
"புராணங்கள்"
புராணங்கள் பதினெட்டு வகப்படும்,இவைகளை இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.
1.பிரம்ம புராணம் 
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம் 
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம் 
7.அக்னி புராணம் 
8.மத்ஸ்ய புராணம் 
9.நாரத புராணம் 
10.வராக புராணம் 
11.வாமன புராணம் 
12.கூர்ம புராணம் 
13.பாகவத புராணம் 14.ஸ்கந்த புராணம் 
15.சிவ புராணம் 16.மார்க்கண்டேய புராணம் 17.பிரம்மாண்ட புராணம் 18.பவிஷ்ய புராணம்.
"இதிகாசங்கள்"
இதிகாசங்கள் முன்று வகைப்படும்.
1.சிவரகசியம் 2.இராமாயணம் 3.மஹாபாரதம்.
இவையாவும் நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது.