சூரியமண்டலத்தை தாண்டிய மானுடம்
1977ல் நாசா அனுப்பிய வாயேஜர் விண்கலம் 1150 கோடி மைல் தொலைவை கடந்து
சூரியமன்டலத்தின் எல்லையையான "கார்மான் கோட்டை (karman line)" இந்த வாரம்
தாண்டிவிட்டது. இதன்மூலம் முதல்முதலாக சூரியனின் பிடியில் இருந்து தப்பிய
மனிதனின் படைப்பு என்ற பெருமையை வாயேஜர் அடைந்துள்ளது.
வாயேஜர் தாண்டிய லட்சுமன ரேகையான கார்மான் கோடு என்பது சூரியனை சுற்றி வரும் கிரகங்களான புளோடோவை எல்லாம் தாண்டி
சூரியனின் கடைசி காற்றான சோலார் வின்ட் என்பது இன்டெர்ஸ்டெல்லார் ஸ்பேஸை
தொடும் இடமாகும். இண்டர்ஸ்டெல்லார் ஸ்பேஸ் என்பது எந்த நட்சத்திரம்,
கிரகத்துடனும் எந்த விதத்திலும் தொடர்பற்ற விண்வெளி. அதாவது ஒரு மீன்பிடி
படகு இந்திய கடல் எல்லையை கடந்து எந்த நாட்டின் ஆளுகைக்கும் உட்படாத
சர்வதேச எல்லையை தொடுவதுக்கு ஒப்பானது இது என வைத்துகொள்ளுங்கள்.
சூரியமண்டலத்துக்கு வெளியே ஒரு விண்கலனை அனுப்புவது சாதாரண விஷயமல்ல.
"கிரகநிலை சாதகமாக இருந்தால் தான் எந்த நல்ல காரியத்தையும் செய்ய முடியும்"
என நம்ம ஊர் ஜோதிடர்கள் சொல்வார்கள். அதுபோல கிரகநிலை சாதகமாக இருந்த
காலகட்டத்தை பயன்படுத்திதான் வாயேஜர் விண்வெளியில் ஏவப்பட்டது.
ஸ்புன்ட்னிக் ராக்கெட் முதல் முதலாக 1957ல் விண்வெளியை அடைந்தபோது
சூரியனின் ஈர்ப்புசக்தியை தாண்டி போகும் வகையில் விண்கல்ன்களை அமைப்பது
இயலாது என கருதப்பட்டது. இதை "த்ரீ பாடி பிராப்ளம்" என அழைத்தார்கள். 300
ஆன்டுகளாக ஐசக் நியூட்டன் முதலானவர்கள் கூட தீர்க்க முடியாத பிரச்சனையாக
இந்த திரீ பாடி பிராப்ளம் கருதப்பட்டது. அதாவது சூரியன், கிரகங்கள் ஆகிய
இரன்டும் ஒரு விண்கல் அல்லது விண்கலனின் மேல் எப்படிப்பட்ட ஈர்ப்புவிசையை
செலுத்தும் என்பதை ஆராயும் பிரச்சனையே இந்த த்ரீபாடி பிராப்ளம்.
அன்றைய கணிதத்தால் தீர்க்கவியலாத இந்த பிரச்சனையை ஒரு அமெரிக்க பிஎச்டி
மாணவரான மைக்கேல் மோனோவிச் என்பவர் அன்றைய சூப்பர் கம்ப்யூட்டரான ஐபிஎம்
7090 உதவியுடன் 1960களில் தீர்த்தார். இதன்படி 1970களின் இறுதி ஆண்டுகளில்
நெப்டியூன், ஜூபிடர், சாடர்ன் மற்றும் யுரானஸ் ஆகியவை ஒரே பகுதியில்
இருக்கும் என்பதையும் அப்போது ஒரு விண்கலனை அனுப்பினால் அந்த நான்கு
கிரகங்களின் ஈர்ப்புவிசையை பயன்படுத்தி அந்த விண்கலம் எகிறிக்குதித்து
சூரியமண்டலத்தை விட்டு தப்பி செல்ல முடியும் என்பதை கன்டுபிடித்தார்.
1970களை விட்டால் இந்த வாய்ப்பு மீண்டும் 176 ஆண்டுகள் கழித்துதான் வரும்.
இப்படி கிரகநிலை சாதகமாக அமைவது தெரிந்ததும் நாசா வாயேஜர் பிரயாணத்தை
துரிதகதியில் ஏற்பாடு செய்தது. வாயேஜர் மைக்கேல் மோனோவிக் போட்ட கணக்கு
துளியும் பிசகாமல் நான்கு கிரகங்களின் ஈர்ப்பு விசையை அழகாக பயன்படுத்தி
எகிறிதாவி குதித்து சூரிய மன்டல எல்லையை தான்டி விட்டது.
வாயேஜர்
விண்கலத்தை எதாவது ஏலியன்கள் கண்டுபிடித்தால் அதில் உள்ள ரெகார்டில் உலகின்
பல மொழிகளிலும் வாழ்த்துரைகள் இடம்பெற்றிருப்பதை கேட்கலாம். இந்த மொழிகள்
அனைத்தையும் தேர்ந்தெடுத்தவர் விஞ்ஞானி கார்ல் சாகன். இந்திய கலாசாரத்தில்
மிகுந்த பற்றுள்ளவரான கார்ல் சாகன் இந்திய மொழிகளான இந்தி, குஜராத்தி,
ராஜஸ்தானி, ஒரியா,பஞ்சாபி, மராத்தி, கன்னடம், தெலுகு, ராஜஸ்தானி, பெங்காலி
ஆகிய இந்திய மொழிகளை தேர்ந்தெடுத்தார். மொத்தம் 55 மொழிகளில் 10 மொழிகள்
இந்திய மொழிகள். இப்படி வாயேஜர் விண்கலனுக்கு அதிக அளவிலான மொழிகளை
பங்களித்த நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இந்த மொழிகள்
அனைத்திலும் "நமஸ்தே" எனும் சொல் பொதுவாக வருவதௌ சுட்டிய்காட்டிய கார்ல்
சாகன் இதன்மூலம் "உலகில் உள்ல பல்வேறு கலாசாரங்கள் மாறுபாடு இருந்தாலும்
அதில் உள்ள வேர்றுமையில் ஒற்றுமை என்பதை ஏலியன்கள் உணர இது வழிவகுக்கும்"
என கூறினார்.
இந்த இந்திய மொழிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட
கார்ல் சாகனுக்கு உதவியவர் அமெரிக்க இந்திய விஞ்ஞானியான பிஷன் கரே என்பவர்.
கார்னெல் நகர இந்தியர்களிடையே பேசி அவர்களிடம் வாழ்த்துரையை அவர்கள்
தாய்மொழியில் பதிவு செய்து கார்ல் சாகனுக்கு கொடுத்தார்.
No comments:
Post a Comment