Tuesday, October 17, 2017

GOLD COIN DETAILS IN TAMIL




















Tuesday, October 3, 2017

சூரியனுக்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்?

Image may contain: one or more people, ocean, sky, twilight, outdoor, nature and waterஒளியை வெளிப்படுத்தும் ஒரு பொருளிலிருந்து ஒளியுடன் கூடவே சக்தியும் வெளிவருகிறது. இப்படி வெளிவரும் சக்தியை 'ஒளிர்வுத்தன்மை' என்பார்கள். அதாவது ஆங்கிலத்தில் 'Luminosity'. ஒரு பொருளிலிருந்து, ஒரு செக்கனுக்கு வெளிப்படும் ஒளிச்சக்திதான் அதன் ஒளிர்வுத்தன்மையாகும். இதை 'வாட்' (Watt- W) இல் அளப்பார்கள்.
நம் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிச்சக்தி எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? 3.85X10^16 வாட்கள். அம்மாடியோவ். 1000 வாட் ஒளிவிளக்கைப் பார்க்கும்போதே நமக்கு நாக்கு வெளியே வந்துவிடுகிறது. "அட! சூரியன்தான் எவ்வளவு பெரியது. அதிலிருந்து பிரமாண்டமான சக்தி வருவது நாம் பிறந்ததிலிருந்து பார்த்து வருவதுதானே!" என்றுவிட்டு நகர்ந்து செல்ல நீங்கள் நினைத்தால், சற்றுப் பொறுங்கள். உங்களுக்கு நான் சொல்ல வந்த தகவல் இதுவல்ல. நீங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காதது அது.
ஒரு மனிதன்அது, சூரியனைவிடப் பிரகாசமானவன் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? நீங்களோ அல்லது நானோ சூரியனைவிட உண்மையாகவே பிரகாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? உங்கள் காதலியிடம் சென்று, "நான் சூரியனைவிட அதிகமாக ஒளிர்கிறேன்" என்று பயப்படாமல் சொல்லுங்கள். கணவர்கள் தயவுசெய்து உங்கள் மனைவியிடம் இப்படிச் சொல்வதைத் தவிர்க்கவும். உங்கள் பிரகாசம் எவ்வளவு என்று ஏற்கனவே அறிந்தவள் அவள். எனவே வேண்டாம்.
சூரியன் ஒளிர்கிறது. அது ஒளிர்வதால், அதற்கு ஒளிர்வுத்தன்மை இருக்கிறது என்பது சரி. மனிதனுக்கு எப்படி ஒளிர்வுத்தன்மை வரமுடியும்? அதுவும் சூரியனைவிட அதிகமாக? கரடி விடுவதற்கும் ஒரு அளவு கணக்கு இருக்கிறதல்லவா? ஆனால், இது கரடி அல்ல, உண்மை. நம்புங்கள்.
ஒரு பொருலிலிருந்து தானாகவே வெப்பமும், சக்தியும் உருவாகி வெளியேறுமானால் அதைக் 'கருவுடல் கதிர்வீச்சு' (Black body radiation) என்பார்கள். இந்த வகையில் சூரியனைப் போலவே, நம் உடலும் சக்தியை உள்ளிருந்து உருவாக்கி வெளியேற்ற்றிவரும் ஒரு உலைதான். சக்தியை உருவாக்கும் உலைகளை மனிதன் வெவ்வேறு வடிவங்களில் செயற்கையாக வடிவமைத்துத் தனத்துத் தேவையான மின்சாரம் போன்றவற்றைப் பெற்றுக்கொள்கிறான். ஆனால், தானே சக்தியை உருவாக்கும் ஒரு உலையாக இருக்கிறான் என்பது இயற்கையின் பேராச்சரியம். இப்போது, அந்த மனித உலையை சூரியனுடன் ஒப்பிட்டுப் பேசுகிறோம் என்பது அதைவிடப் பேராச்சரியம்.
சூரியனின் மையக்கோளத்திலிருந்து (Core) உருவாகும் கதிரியக்கச் சக்தி, அதன் மேற்பரப்பையடைந்து, சூரியக் குடும்பத்தின் சுற்றுவட்டாரத்திற்கு பரவுகிறது. சூரியனின் மையக்கோளத்தின் வெப்பநிலை 15 மில்லியன் சதம பாகையாகும் (°C). அங்கிருந்து உருவாகும் கதிரியக்கச் சக்தி, மெல்ல மெல்ல வெளிநோக்கி அனுப்பப்பட்டு, ஒளிவெளிவரும் படலத்தில் (Photosphere) அதன் வெப்பநிலை 5500 சதம பாகையாக வெகுவாகக் குறைந்துவிடுகிறது. அது மேலும் சூரியனின் வெளிமண்டலத்தில் (Atmosphere) 4320 சதம பாகையாகி விடுகிறது. இருந்தாலும் இந்த வெப்பநிலை மிகவும் அதிகமானதுதான். ஆனால், மனிதனின் உடல் வெப்பநிலை, வெறும் 37.5 சதம பாகையே! இந்த 37.5 சதம பாகை எங்கே? சூரியனின் 5500 சதம பாகை எங்கே? எப்படி மனிதனைச் சூரியனுடன் ஒப்பிட முடியும்? சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலையை, அதன் மேற்பரப்பின் அளவுடன் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு சதுர சதம மீட்டருக்குச் சூரிய மேற்பரப்பில் வெளிவரும் வெப்பநிலை, மனிதனின் ஒரு சதுர சதம மீட்டர் மேற்பரப்பில் வெளிவரும் வெப்பநிலையின் 121,000 (ஒரு இலட்சத்து இருபத்தோராயிரம்) மடங்கு அதிகமாகும். சூரியனின் மேற்பரப்புக் கிட்டத்தட்ட 6.1X10^22 சதம மீட்டர் ஆகும். இந்த மேற்பரப்பிலிருந்து வெளிவரும் ஒளிர்வுத்தன்மையின் (Luminosity) அளவு, 4X10^33 ergs/second. இந்த அளவுகள், அலகுகளைப் பார்த்துப் பயந்துவிட வேண்டாம். இவையெல்லாம் ஒரு தகவலுக்கு மட்டும்தான். மனிதனின் உடல் மேற்பரப்பை அண்ணளவாக 25000 சதம மீட்டர் என்று எடுத்துக் கொள்ளலாம். அதிலிருந்து வெளிவரும் ஒளிர்வுத்தன்மையின் அளவு 1.3X10^10 ergs/second ஆகும். இது பலப்பல மடங்குகள் சிறியதாகும். அப்படியென்றால், சூரியனைவிட மனிதன் எப்படி அதிக ஒளிர்வுத்தன்மையை வெளிவிட முடியும்? சத்தியமே இல்லையல்லவா? அப்படியென்றால், உண்மையிலேயே நான் மேலே சொன்னது கரடி(பொய்)தானா? இல்லை. மனித உடலை அவ்வளவு சுலபமாக நீங்கள் கணக்கிட முடியாது. அது சூரியனைவிட அதிக சக்தியை வெளியிடுவது உண்மைதான்.
எந்த இடத்தில், எந்த விதத்தில் மனிதன் சூரியனைவிடப் பெரியவனாகிறான் தெரியுமா? அவனது கனவளவைக் (Volume) கொண்டு. உண்மையில் அளக்கப்பட வேண்டியதும் கனவளவுதானேயொழிய, மேற்பரப்பு அல்ல. சூரியனின் கனவளவைக் கணித்துக் கொண்டால், அது 1.4X10^33 கன சதம மீட்டர். இதன்படி, ஒவ்வொரு கன சதம மீட்டருக்கும், சூரியனால் வெளிவிடப்படும் ஒளிர்வுத்தன்மை, வெறும் 2.8 ergs/second ஆகிவிடுகிறது. இப்போது, மனிதனின் ஒளிர்வுத்தன்மை அளவிட்டால், ஒரு கன சதம மீட்டருக்கு 170,000 ergs/second (ஒரு இலட்சத்து எழுபதாயிரம்) என்னும் மிகப்பெரிய அளவாகிறது. இந்த அளவு, சூரியனைவிடப் பல மடங்குகள் அதிகம். அதாவது அறுபதாயிரம் மடங்குகள் அதிகம்.
ஒரு மனிதன், தன் முழு உருவத்தையும், சூரியனின் முழு உருவத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தானானால், அவன் சூரியனைவிட 60,000 மடங்குகள் அதிகமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். இது கதையல்ல. நிஜம்.