மாப்பிள்ளை சம்பா நெல்லுக்கும்,
தூயமல்லி நெல்லும்க்கும்,
கல்யாணமாம் கல்யாணம்.
மணக்கோல பந்தலிலே
குடைவாழை கட்டி இருக்கு
மணம் பார்க்க வந்தாருக்கு
கிச்சிலி சம்பா சோறிருக்கு!
வாடன்சம்பா வாசல் நின்று
வணக்கம் சொல்லி அழைத்தது.
கப்பசம்பா கலியன் சம்பா
சாப்பாடு போட்டது.
தங்கசம்பா நீலசம்பா
தங்கநகை தந்தது.
சீரகச்சம்பா சேலம் சம்பா
சீர்வரிசை தந்தது.
செங்கல்பட்டுச் சிறுமணி
ஜில்லுஜில்லு வைகுண்டா.
புழுதிசம்பா, குரங்கு
சம்பா
குதிரைவால் சம்பா,
சம்பா சம்பா மோசனம்.
கார் சம்பா... காட்டுசம்பா
கார்த்திகை சம்பா...!
சன்னச் சம்பா, ஒன்றைச்
சம்பா
அறுபதாம் சம்பா
அரியான் நெல்லு, இறவை
பாண்டி...
கண்டசாலி, கருங்குறுவை,கருத்தக்கார்
கருப்பு நெல்லு,கல்லுருண்டையான்...
சொர்னவார்,சொர்னவாலி,
வைகுண்டா,செம்பாள,
கூம்பால,குழியடிச்சான்,
கல்லிமடையான் காடகழுத்தான்
காட்டுக்குத்தாலம்,அறுபதாம்கோடை.
பிசினி,தின்னி
திடக்கால்
நொருங்கன்,பட்டர்
பிசின்!
மகத்தே, மதிமுடி,மரநெல்
ரசகடம்,லட்சுமி
காஜல்!
மட்டக்குறுவை,கோனக்குறுவை,
சூரன்குறுவை,வெள்ளக்குறுவை,
வெள்ளக்கரியன்,வீதிவடங்கான்,
வரப்புகுடைஞ்சான், வெள்ச்சி,ஜிர்குடை
வெள்ள சித்திரைக்கார்.
மட்டகார், பட்டகார், புழுதிக்கார்,
புழுதிக்கால், சித்திரைக்கார்.
சிவப்புகுழி அடிச்சான்.
கெளனிநெல்லு, கல்லுருண்டை,பிச்சவாரி,
பெரியவாரி,சடகாடு,குந்தாலி...!
முட்டக்காடு, குள்ளக்காரு,
கப்பக்காரு, பெருங்காரு,
வெள்ளக்காரு, சிவப்பு
குருவிக்காரு,
அத்தனை பேரும் வந்தாங்க
அன்பு வாழ்த்துப் சொன்னாங்க.
வாழ்க வாழ்க வாழ்கவென்று
வாழ்த்திச் சொன்னங்க.!
•
துரை பச்சையப்பன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு :
இதில் உள்ள பாடல் வரிகள் எழுதிவர்கள் வேறு.
இது எனக்கான சேமிப்பு தளம் ஆகும்.
இதில் உள்ள தகவல்களுக்கு அதை எழுதியவர்களே உரிமை உடையவர்கள்
No comments:
Post a Comment