Wednesday, April 16, 2014

நகை வாங்க போறீங்களா கொஞ்சம் கவனியுங்களேன்

நகை வாங்க போறீங்களா கொஞ்சம் கவனியுங்களேன்

Are you going to buy some jewelry Listen



நகை வாங்கச் செல்லும் முன், எந்த நகை வாங்கப் போகிறோம் என்பதை உறுதி செய்தபின், கடைக்குச் செல்வது நல்லது. முதலில் நம்முடைய பட்ஜெட் என்ன என்பதில், தெளிவாய் இருக்க வேண்டும். ஹால் மார்க் முத்திரை உள்ள நகைகள் வாங்குவது தான் சிறந்தது.

பழைய கல் வைத்த நகையை மாற்றி, புதிதாக வாங்க வேண்டும் என்று நினைத்தால், கற்களை எடுத்த பின் எடை போட்டு, அதற்கேற்ற விலையில் புதிய நகைகளை வாங்குங்கள்.

கடைக்கு போனவுடன் செய்கூலி, சேதாரம் எவ்வளவு சதவீதம் போடப்படுகிறது என்பதை கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். சரியான ரசீது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை, ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

அணிவதற்காக நகை வாங்கப் போகிறீர்களா, அல்லது பணத்தை முதலீடு செய்வதற்கு என்றால் தங்கக் காசாகவோ பிஸ்கட்டாகவோ வாங்குவது சிறந்தது. நகை வாங்க கிளம்பும் முன், தங்கம், வெள்ளியின் அன்றைய தின மதிப்பீடு என்ன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தரமான கடைகளில் நகை வாங்குங்கள். தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் கடைகளில் வாங்கினால் தரம் குறையும்; பின்னர் வருத்தம் ஏற்படும்.

கே.டி.எம்., நகைகள், தனியாக தயாரிக்கப்படுபவை. நீங்கள் வாங்கும் நகை, எந்த வகையை சார்ந்தது என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும், ரசீதில், அது குறித்த தகவல் எழுதப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள். நகைகளை வாங்கியவுடன், அதைப் புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள். நகைகளை, இன்சூர் செய்வது மிக மிக முக்கியம். இதற்கெல்லாம் அலுப்பு பட்டால் ஆபத்து நேரத்தில் பயன் இல்லாமல் போய்விடும்.

No comments:

Post a Comment