மாயை என்ற சொல் ஞான மார்க்கத்தில் அதிகம் சொல்லப்படுகிறது. உலகமே மாயை என்று ஞானிகள் சொல்வர்.
மாயையை நாம் தினந்தோறும் காண்கிறோம், உறக்கத்தில் நாம் காணும் கணவும் ஒருவகை மாயைதான். உறக்கத்தில் நாம் கனவு காணும் நேரம் சில நிமிடங்களே அந்த சில நிமிடக் கனவில் நீண்ட காலத்தில் நடப்பது போன்று நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் நாம் பங்கு கொண்டு நிஜமாகவே சுகத்தையும், துக்கத்தையும், பயத்தையும், உணர்கிறோம். உறக்கம் கலையும் வரை நிஜமாகவும், விழித்த பின் நிஜமல்ல கனவு என்று உணர்கிறோம்,
நம்மிடம் பணம் இருந்தால் மனம் மகிழ்கிறது. இல்லையென்றால் கலங்கிறது.பணத்குள்ளேயே நம் வாழ்க்கை கழிகிறதே! ஆக பணம் மனிதனைமயக்கும்மாயை. திரைப்படத்தில் அதில் வருபவர் தீயவரும் நல்லவராகவும், நல்லவர் தீயவராக நடிப்பவரே தீயவராகவும் நம் கண்ணுக்கு தெரிவர், திரையில் உண்மையென நம்பிவிதே காரணம். மாயை நம்மை மயக்கிவிடுகிறது.
இவைபோன்றே கல்வி, அழகு, பொருள், பதவி, புகழ், இவையும் நம்மை அதிலேயே ஆழ்த்திவிடும், நமக்கு எது பலமோ, அதுவே பலவீனம், அது மாயை என்று உணர்ந்து மீளவேண்டும். மாயை என்றால் முற்றிலும் பொய்யானது என்பதாக பலரும் நினைக்கிறார்கள், மாயை என்பது தற்காலிக தோற்றம், உதாராணத்திற்கு கானல் நீரைச் சொல்லலாம், கானல் நீர் கண்ணுக்கு தெரிவது நிஜம், அது காண்பவரின் கற்பனை அல்ல. ஆனாலும், அது நீர் பொருளாக பெற முடியாது, கண்ட காட்சி நிஜம். தாகத்திற்காகக அனுகினால் அதைப்பருக நினைப்பது ஏமாற்றம், அது காணல் நீராக உணர்வது தான் ஞானம்.- அறிவு -
'" மா" என்றால் ஒடுக்குதல் , "ஆ" என்றால் வருவித்தல், அனைத்தையும் தன்னுள் ஒடுக்கியும், மீண்டும் வருவிக்கவும் செய்யும் சூக்குமப் பொருளை மாயை என்கிறோம்.
தமிழில் இது மருள் எனப்படுகிறது. நம்மை இது மயக்குகிறது. இது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என ஐந்தாக விரிகிறது. அவை நம் உடலாகவும், உலகாகவும், உலகப் பொருளாகவும், மாறுகின்றன. ஆணவ வழியில் நாம் இதனுள் அழுந்தி, உணர்ந்து, திருந்தவே மாயை வழிக் காரியங்கள் வருவிக்கப் பட்டன.
ஆகவே இது நம் வாழ்வில் சிறிய ஒளிபோல் நம்மைத் திருத்த வந்தது. அதனுள் வீழும் நாம் உணர்ந்து திருந்தவும், திருவருள் துணை வேண்டும். ஆம் மாயை என்று உணர்வதற்கே இறையருள் துணை வேண்டும். ஒன்று மாயை பொருள் என்று விளங்கும் போது அதைப் பெற ஆணவ வழியில் நாம் எவ்வளவு தூரம் பயணப்பட்டுள்ளோம் என்பதையும் உணர முடியும்.
ஏனென்றால் இறைவனது அருள் மறைப்பு சக்தியாகவும், வந்து நம்மை மயக்கியுள்ளது. ஆக முன்பு நம்மை மயக்கியதும், பின்பு நமக்கு உணர்த்தியதும் இறைவனது கருணை என்பதும் பினனர் தெரியும்,
தவறு செய்வது மனித இயற்கை என்பர், மாயை நம்மை மயக்கித் தவறுசெய்யத் தூண்டும். தவறு உடலை வளர்க்கும், அது தவறு என உணரும்போது இறையருள் புரியும், இறையருளை உணரும் போது உயிர் வளரும், ஆகவே மாயை நம்மைத் திருத்த வந்தது.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment