Wednesday, August 31, 2016

பெண் குழந்தை நீ பெற்றாய் பேரின்பம் நான் பெற்றேன்..



நாள் தவறி போனதே என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்..
மார்பில் முகம் புதைத்ததும்
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்..
புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி..

மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்..
ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்..
ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்..
மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய்விடுமா உன் அழகு தாய்மையில்..

ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் என்னை?
தினமும்மாலை கை கோர்த்து
நடை பயின்று..
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை..

நாட்கள் நெருங்க, நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே..!
இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்..

சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும், என் தாயும்
உறவினரும் நண்பருமாய்..
தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்..

அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்..
சொல்லி விட்டு போய் விட்டாள் மின்னல் கீற்று போல..

பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனைஅழைத்து கைபற்றி கொண்டாய்..

இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
உன் வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்

பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
ம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..!!

பெண் குழந்தை நீ பெற்றாய்
பேரின்பம் நான் பெற்றேன்..
முகமெல்லாம் உன் வடிவம்
நிறம் மட்டும் பொன் எழிலாய்
நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்
வெளியே வந்தேன்..

அதுவரை கட்டி வைத்த
கண்ணீர் எல்லாம் கரை தாண்டும்
காரணம் நான் அறியேன்
புரியவில்லை அக்கணம்..

வாரி எடுக்க வந்தார்கள்
உன் தாயும் என் தாயும்
யாரிடம் கொடுக்க?
யாரிடமும் வேண்டாம்
முதல் சொந்தம் அவளுக்கே
சொல்லி விட்டேன் என் முடிவை..

30 வினாடிகள்
கண் விழித்து தேடினாய்
மகளை அல்ல என்னை
கை பற்றி முத்த மிட்டாய்
பின் ஏந்தினாய் பெண் பூவை..
பெருமையாய் பார்த்தாள் என் தாய்
பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..
இருவரும் பெற்றதில்லை
இந்த பாக்கியம் என..
அவனைவரும் இனிப்பு கேட்டு
வாங்கி கொடுத்த பின்
கலைந்தது கூட்டம்..

தனியே நீயும், நானும்
எனக்கு எங்கே இனிப்பென்று
நான் கேட்க .. இறுக கரம் பற்றி
இதழோடு இதழ் பொருத்தினாய்..
ம்ம்ம்.. இதை விட பேரின்பம்
பெறுவேனோ சொர்க்கமதில்..???
"..பெண்ணல்ல நீ எனக்கு.."
குல தெய்வம் அல்லவோ..!!

நாகமணி அல்லது நாகரெத்தினம் உண்மையா?




பல வருடங்களாக (தோராயமாக 20 முதல் 30 வருடங்கள்) தன் விஷத்தை வெளியேற்றாது, (எவரையும் எதையும் தீண்டாது) காத்து வரும் நாகப்பாம்பின் அந்த விஷம் காலப்போக்கில் கடினமாகி அது நாகரெத்தினமாக மாறிவிடும். அது தானாக ஒளிரக்கூடியது. அமாவாசை இரவில் அந்த ரெத்தினத்தை வெளியே கக்கி எடுத்து அதன் வெளிச்சத்தில் இரை தேடி வேட்டையாடும்.

அந்த நாகரெத்தினத்தை வைத்திருப்பவர் மிகுந்த பக்திமானாகவும், நல்ல எதிர்காலம் கொண்டவராகவும், மிகப்பெரிய தலைவராகவும் இருப்பார். அந்த ரெத்தினத்தையும் சும்மா எடுத்து வைத்துக்கொள்ள முடியாது.

அதற்கென்று சில வழிமுறைகள் இருப்பதாக கருடபுராணம் சொல்கிறது. மதச்சடங்குகளைக் கற்றுணர்ந்த புரோகிதர் ஒருவர் அந்த நாகமணி பெறப்பட்ட விதம் குறித்து அறிந்து கொண்டபின் அதனை உரியவர் வீட்டில் பிரதிஷ்டை செய்வார். அந்த நாளில் வானம் கரிய மழைமேகங்களால் சூழப்பட்டு, இடி இடித்து, மின்னல் மின்னி பிரளயம் போல் உலகம் தோற்றமளிக்கும். அந்தக்கல்லை வைத்திருப்பவருக்கு நாகதோஷம் இராது. நோய்நொடிகள் அண்டாது. பேய் பிசாசுகள் எட்டிப் பார்க்காது. எந்தவகையிலும் அவருக்கு தொந்தரவுகள் வராது.

அந்த ரெத்தினத்தின் வெளிச்சத்தில் வேட்டையாடுவதற்காகவா 20 முதல் 30 வருடங்கள் வரை அந்த நாகப்பாம்பு வேட்டையாடி உண்ணாமல் உணவகத்திலா உணவு வாங்கி உண்ணும்? பாம்பின் விஷம் இறுகி கெட்டிப்பட்டு அது பாம்பின் தலைக்குள் இருக்கும் என்கிற அறிவிலித்தனமான கருத்து பாம்பு குறித்தும் அதன் விஷப்பைகள் குறித்தும் அறியாத மூடர்களாலேயே பரப்பப்பட்டிருக்க வேண்டும்.

சரி, பின்னர் எதைத்தான் நாகரெத்தினம் என்று சொல்கிறார்கள்?

இப்படி நியாயமாகக் கேள்வி கேட்டால் பதில் கூற ஆர்வம் பிறக்கும். ஹேலைடு அயனியின் ஆதிக்கம் பெற்ற வண்ணக் கனிமக்கல்லே அது. அதனை ஆங்கிலத்தில் Fluorite அல்லது Fluorspar என்பார்கள். இது கனசதுரப்படிக அமைப்பைக் கொண்டது. இது ஒரு வெப்பஒளிப்பாயம் (Thermoluminiscence). கைகளில் வைத்திருந்தாலே, கைச் சூட்டில் அது ஒளிரத்துவங்கி சில பல மணி நேரங்கள் ஒளி வீசும்.

இந்தக் கற்கள் சைபீரியா, இலங்கை, பர்மா போன்ற இடங்களில் கிடைக்கப் பெறுகின்றது. சைபீரியாவில் கிடைக்கும் அந்தக் கல்லானது, கைச்சூட்டில் வெண்மை நிறத்திலும், கொதிநீரில் பச்சை நிறத்திலும், நிலக்கரிச் சூட்டில் சிவப்பு நிறத்திலும் ஒளிரும்.

அக்கற்களில் உள்ள இயிற்றியம் (Yttrium) என்ற தனிமம்தான் அதன் பசுமை நிறத்திற்குக் காரணம். மற்ற வண்ணங்களுக்கு அக்கற்களில் கரைந்துள்ள மாசுகள் காரணமாக அமையும்.

சரி, இனி இது எப்படி நாகப்பாம்போடு தொடர்பு படுத்தப்படுகின்றது என்று பார்ப்போம். பாம்பு வகைகளிலேயே பூச்சிகளையும் உண்ணும் ஒரே இனம் இந்த நாகப்பாம்புதான். எறும்புகள், வெட்டுக்கிளிகள் மற்றும் சிலவகைப் பூச்சிகளை இப்பாம்புகள் உண்ணும். இரவில் குறிப்பாக மின்மினிப் பூச்சிகளை விரும்பி உண்ணும். காரணம் மற்றெந்த பூச்சிகளைப் பிடிப்பதைக் காட்டிலும் இதனைப் பிடிப்பது அவைகளுக்கு எளிதாக இருக்கின்றது.

நமக்கெல்லாம் தெரியும், பறந்துதிரியும் மின்மினிகள் ஆண் பூச்சிகள். பெண் பூச்சிகள் சற்றுப் பெருத்தும், பறக்க இயலாதவையாகவும், எங்காவது புற்களின் மேல் பசுமைநிற ஒளியை உமிழ்ந்துகொண்டு ஆண் பூச்சிகளுக்கு அழைப்பு விடுத்து அமர்ந்திருக்கும். அதனைத் தேடி ஆண்பூச்சிகள் கலவிக்கு வரும்.

இந்த குளோரோஃபேன் கற்களும் அதனயொத்த பசுமைநிற ஒளியை உமிழ்வதால் அந்த ஆண் மின்மினிப் பூச்சிகள் கவரப்பட்டு இக்கற்களை நோக்கி வரச்செய்யும். இதனை என்றொ ஒரு நாள் அவதானித்த நாகப்பாம்பு, இக்கற்களின் அருகே இருந்தால் நமக்கு அந்தப் பூச்சிகளை வேட்டையாடுவது எளிது என்று கண்டுகொண்டிருக்கும். கவனிக்கவும், இதற்கும் ஞாபகசக்திக்கும் தொடர்பில்லை. இது உயிர்வாழத் தேவையான ஒரு உந்துதல் அமைப்பு.

பல பாம்புகள் ஒரே ஒரு கல் இருக்குமிடத்து இருக்க நேரிட்டால் அந்தக் கல்லை அடுத்த பாம்பு அபகரித்து விடாமல் இருக்க போட்டியிட்டு எந்தப் பாம்பு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றதோ அந்தப் பாம்பிற்கே அன்றைக்கு அதிக உணவு கிடைக்கும்.

இதனைப் பார்த்த நம் மனிதர்ளில் எவரோ ஒருவர் கட்டிய கதைதான்... நாகப்பாம்பின் நாகரெத்தினம். இன்றைக்குச் சந்தையில் உண்மையான நாகரெத்தினங்கள் என்று நிறையக் கிடைக்கின்றன. இன்றையச் சூழலில் எந்தவொரு நாகப்பாம்பும் 20 முதல் 30 வருடங்கள் உயிர்வாழ இயலாது. அப்படியே உயிர் வாழ்ந்தாலும், அவைகள் உணவுக்காக தன் இரையின் மீது விஷத்தைப் பாய்ச்சியே ஆக வேண்டியிருக்கும். ஆதலாம், அந்த விஷத்தைச் சேர்த்து வைத்து அதனை நாகரெத்தினமாக மாற்ற வாய்ப்பு இருக்காது.

மேலும், இந்த நாகரெத்தினத்தின் ஒளியில் வேட்டையாடுவதற்காக தன் விஷத்தைச் சேமிக்குமானால், அதுவரைக்கும் அது எப்படி உயிரோடு இருக்கும்? நாகரெத்தினத்தின் வெளிச்சத்தில் வேட்டையாடிவிட்டு பின் அதனை விழுங்கிவிடும் என்றால், வாயிலிருந்து அது செரிமானப் பாதைக்குப் போகாமல் தலை உச்சிக்கு எப்படிப் போய் பாதுகாக்கப்படும்?

ஆச்சர்யப்படும்படி சொல்வதையெல்லாம் வாயைப் பிளந்து கேட்காமல், இப்படிக் கேள்விகள் கேட்டு உணரத் தலைப்பட்டால் நம் அடுத்த சந்ததியினராவது அறிவாளிகளாக அமைய வாய்ப்புள்ளது. 

Thursday, August 25, 2016

*மருத்துவமனைகளின் மறுபக்கம் !!!


இதுதான் நடக்கிறது
மருத்துவமனைகளில்...! - இரு
மருத்துவர்களின் ஒப்புதல்
ஆம். *மருத்துவத் துறையில் நடக்கும்
தில்லுமுல்லுகள்* பற்றி
அங்கொன்றும்,
இங்கொன்றுமாக
விவாதிக்கப்பட்ட விஷயங்கள்
இப்போது
பொதுவெளிக்கு
வந்திருக்கிறது. அதுவும் _இரண்டு
மருத்துவர்கள்_ மூலம். மருத்துவர்கள்
அருண் காத்ரே மற்றும் *அபய்
சுக்லே*, “ Dissenting Diagonisis"
என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதி
இருக்கிறார்கள். _மருத்துவத்துறை
யின் இருட்டுப்பக்கங்களை
வெளிச்சத்திற்கு
கொண்டு வந்திருக்கிறார்
கள்_.
*நோயாளிகளின் நலன் அல்ல,
பங்குதாரர்களின் நலனே
முக்கியம்*:
' *மருத்துவச் சுற்றுலாவில்
இந்தியா, _குறிப்பாக
சென்னை கோலாச்சுகிறது_'
என்று இங்குள்ள கார்ப்பரேட்
மருத்துவமனைகள் பிதற்றிக்
கொள்ளும் இந்த
தருணத்தில்*, இந்த புத்தகத்தின்
உள்ளடக்கம் முக்கியத்துவம்
பெறுகிறது.
இந்த புத்தகத்தின்
ஆசிரியர்களான மருத்துவர்கள்
அருண் காத்ரே மற்றும் *அபய்
சுக்லே* முன் வைக்கும் முக்கிய
குற்றச்சாட்டு, “ _*இங்குள்ள
பெரிய மருத்துவமனைகள்
நோயாளிகளின் நலன்காக
இயங்குவதை விட, அதன்
பங்குதாரர்களின்
நலனுக்காகதான்
இயங்குகின்றன*_” என்பதுதான்.
இவர்கள் எந்த குற்றச்சாட்டையும்
மேம்போக்காக கூறவில்லை.
_பாதிக்கப்பட்ட நோயாளிகள்,
நேர்மையான மருத்துவர்களின்
வாக்குமூலங்களை
கொண்டே பதிவு
செய்திருக்கிறார்கள்_.
நம் அனைவருக்கும் ஒரு அனுபவம்
நிச்சயம் இருக்கும். அதாவது
*_தேவையற்ற பரிசோதனைகளை
மருத்துவர்கள் எடுக்க
சொல்கிறார்கள் என்று_*.
இது குறித்து இந்த மருத்துவர்கள், “
*பரிசோதனைகள் பாமரனின் பர்ஸை
மட்டும் பதம் பார்க்கவில்லை*.
பரிசோதனை சாலைகள்,
*நோயாளிகளிடமிருந்து சேகரிக்கும்
ரத்த மாதிரிகளை உண்மையாக
பரிசோதிப்பதே இல்லை*. _மருத்துவர்கள்
எது மாதிரியான அறிக்கையை
விரும்புகிறார்களோ... அதைதான்
இவர்கள் தயார் செய்து
தருகிறார்கள்_” என்கிறார்.
இப்போது உங்கள் சொந்த
அனுபவங்களை இந்த
வாக்கியத்துடன் ஒப்பிட்டுக்
கொள்ளுங்கள்.
பெரும் மருத்துவமனைகள்,
இலாப இலக்கு நிர்ணயத்துக்
கொண்டு வேலை
செய்கின்றன. *அவர்களுக்கு
எப்போதும் அப்பாவி நோயாளிகளின்
நலன் முக்கியமே இல்லை*...
லாபம்.. லாபம்...
லாபம்... மேலும் லாபம்
மட்டுமே முக்கியமாக இருந்து
வருகிறது என்கிறார்கள் இந்த
மருத்துவர்கள்.
*நியாயமான மருத்துவர்களை
உதாசீனம் செய்யும்
மருத்துவமனைகள்*:
ஒரு பிரபலமான மருத்துவமனை,
தன் மருத்துவமனையில் வேலை
பார்த்த *சிறந்த சிறுநீரக சிறப்பு
மருத்துவரை பணி நீக்கம்
செய்தது*. அதற்கான
காரணம், _*ஒரு நோயாளிக்கு
அதிகம் லாபம் தரும் ஒரு அறுவை
சிகிச்சையை செய்யாமல்,
சாதாரண சிகிச்சை மூலம்
குணப்படுத்தியது*_. " *இது
கார்ப்பரேட் மருத்துமனைகள்
எவ்வளவு வக்கிர மனநிலையில்
செயல்படுகிறது
என்பதற்கான சான்று*"
என்கிறார்கள் இந்த
மருத்துவர்கள்.
“லாபத்தை முதன்மையான நோக்கம்
கொண்ட மருத்துவமனைகள்
அனைத்தும் இப்படிதான்
செயல்படுகின்றன.
*அவர்களுக்கு நோயாளிகளின்
நலன் முக்கியம் அல்ல*.
லாபத்திற்காக _*தேவையற்ற
அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை
தன்னை நம்பி வரும் நோயளிக்கு
அளிக்கின்றன*_” என்று
வருத்ததுடன் குறிப்பிட்டுள்ளார்கள்.
சுக்லே, “ *எனக்கு தெரிந்த
ஒருவர், தனக்கு
சொந்தமான வீட்டை
விற்று, தன் மனைவிக்கான மருத்துவ
கட்டணமான ரூபாய் 42 லட்சத்தை
கட்டினார். ஆனால், உண்மையில்
அந்த சிகிச்சைக்கு அவ்வளவு
கட்டணமெல்லாம் இல்லை*...”
என்கிறார்.
இதைதாண்டி இவர்கள் வைக்கும்
இன்னொரு குற்றச்சாட்டு
பகீரென்று இருக்கிறது. _*சில
மருத்துவமனைகள் உண்மையில் அறுவை
சிகிச்சையே செய்யாமல்,
வெறும் மயக்க மருந்தை மட்டும்
கொடுத்துவிட்டு, அறுவை
சிகிச்சை செய்துவிட்டோமென
்று பணம் பறிக்கிறார்கள்*_
கொல்கத்தாவை சேர்ந்த
புண்யபிரதா கூன் என்னும்
மருத்துவர், “ *எங்கள் பகுதியில்
மருத்துவர்களுக்கு நியாயமாக
மருத்துவம் பார்த்தும் ஈட்டும்
தொகையை விட, ஆய்வு
மையங்கள் அளிக்கும் பங்கு
தொகை அதிகம். x-ray
எடுக்க பரிந்துரைத்தால் 25
சதவீதமும், MRI, CT ஸ்கேன் எடுக்க
பரிந்துரைத்தால் 33 சதவீதமும்
கமிஷன் தருகிறார்கள்*...” என்று
தன் அனுபவத்தை இந்த புத்தகத்தில்
பதிவு செய்திருக்கிறார்.
" _தன்னிடம் சிகிச்சைக்கு வரும்
நோயாளிகளை, தங்களின்
தொடர்
வாடிக்கையாளர்களாக வைத்துக்
கொள்ள தான் பல
மருத்துவமனைகள் விரும்புகின்றன_.
அதாவது *தேவையற்ற அறுவை
சிகிச்சைகள், மருந்துகளை பரிந்துரைத்து,
நோயாளிகளை மீண்டும் மீண்டும்
திரும்ப வரவைக்க வேண்டும்*. அதை
மருத்துவர்கள் செய்ய தவறும்
போது, _*அவர்கள் பணி நீக்கம்
செய்யப்படுகிறார்கள்*_"
என்று இந்த புத்தகத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை நாம்
சாதாரணமாக கடந்துவிட
முடியாது.
*இந்திய மருத்துவ கவுன்சில் என்ன
செய்து
கொண்டிருக்கிறது*...?
என்ற நம் கேள்விக்கு இந்த
மருத்துவர்களின் பதில், “
*பெரும் மருத்துவமனைகள்
மருத்துவதுறையை திட்டமிட்டு
கொலை செய்து
கொண்டிருக்கிறார்கள்*.
ஆனால், *_இதை
மெளனமாக இந்திய
மருத்துவக் கவுன்சில் வேடிக்கை
பார்த்து
கொண்டிருக்கிறது_*.
*உடனடியாக மருத்துவக்
கவுன்சில் தன்னை புதுப்பித்துக்
கொண்டு, இந்த
அநியாயங்களை தடுத்து நிறுத்த
வேண்டும்*” என்று வலியுறுத்துகிறா
ர்கள் இந்த இரு மருத்துவர்களும்.
இந்திய மருத்துவ துறையின் இன்றைய
வணிக மதிப்பு 100 பில்லியன்
அமெரிக்க டாலர்கள். *இது
2020 ம் ஆண்டு 280 பில்லியன்
அமெரிக்க டாலர்களாக
இருக்கப்போகிறது* என்கிற
விபரங்களே, _இதில் உள்ள
அரசியலையும், அக்கிரமங்களையும்
நமக்கு உணர்த்துகிறது_.
*இவர்களின் குற்றச்சாட்டுகளின்
மீது என்ன நடவடிக்கை
எடுக்கப்போகிறது இந்திய
சுகாதாரத் துறை*...?
நன்றி :- Dissenting Diagnosis.