Thursday, December 25, 2014

SALT & HONEY உப்பும் .......தேனும் ......நோயும் .....!!!!!



உப்பு இல்லாத உணவு குப்பையில் என்று என் பாட்டி சொல்வார்கள் .உப்பு நமக்கு உணவுகளில் சுவைகளை கூட்டி தரும் என்று மட்டும் நமக்கு தெரிந்த விவரம்.

சித்தர்கள் உப்பை பற்றி என்ன சொல்லி உள்ளார்கள் ?

இறந்தவைகளை பாதுகாக்க பயன்படுவது உப்பு. உப்பு மனிதன் குருதியில் கலந்தவுடன் மிருக குணம் வந்துவிடும், இது இறை நிலைக்கு எதிர் மறையான பலனை உடையது. இறைவனுக்கு படைக்கும் எந்த உணவிலும் உப்பை சேர்க்க மாட்டார்கள், இனிப்பு இல்லாமல் செய்ய மாட்டார்கள்.
ஒரு உடல் இறந்த பின்பும் பதபடுத்த வேண்டும் என்றால் உப்பை கலந்து வைத்தால் அவை அப்படியே இருக்கும்.
உப்பு மனிதர்களுக்கு நிறைய நோய்களை கொடுக்கும்.
சித்த வைத்திய முறையில் உப்பை சேர்க்காமல் உணவு உண்ண பத்தியம் உண்டு, கை தேர்ந்த வைத்தியர்கள் இதை அறிவார்கள்.

தேன்.:

தேன் இனிப்பு சுவை உடையது என்று எல்லோருக்கும் தெரியும். சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?

தேன் தன்னுடன் சேரும் பொருளை கெடுக்காது தானும் கெடாது. தேன் நாக்கில் மட்டும் இனிப்பை தரும் ஆனால் தொண்டை வழியே உள்ளே சென்றவுடன் இது கசப்பாக மாறிவிடும் தன்மை உடையது . இதனால் தான் தேனை கொண்டு மருந்தை கலந்து தந்தார்கள் . மேலும் தேன் உயிர் சக்திகளை தரும் பொருளை அப்படியே வைத்து இருக்கும் .
ஒரு நெல்லி கனியை தேனில் ஊரப்ப்போட்டு அதை 50 வருட காலம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அதன் உயிர் சக்தி அப்படியே இருக்கும் .இதனால் சித்த மருத்துவத்தில் தேனில் கலந்த லேகியம் தருவார்கள்.
மனிதன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ

1.மாதம் 2 முறையாவது 3 வேலையும் உப்பு இல்லாமல் உண்ண பழகி கொள்ளவேண்டும் .

2.அடிக்கடி தேன் சேர்த்து உண்ணவேண்டும் .
தேன் சர்க்கரை நோய்களை தூண்டது .

3.தேனுடன் பால் கலந்து சாப்பிட சுண்ணாம்பு சக்தி நிறைய கிடைக்கும்
நோய்கள் உப்பின் தேக்கத்தால் வருகிறது .

உப்பு அதிகமாக உள்ள மிருக உடல்கள் (அசைவ உணவுகள்) இவைகளை நாம் தின்று (உப்பினால் ) வரும் நோய்களை குணபடுத்த உப்பை வைத்து தயாரித்த மருந்துகள் தருகிறது. இன்றைய மருத்துவம் (alaopathy ) இனிப்பை வைத்து வைத்தியம் செய்வது homeopathi .

உப்பும், தேனும் தன்னுடன் எது சேர்த்தாலும் கெடுக்காது.
நல்ல தேனை எறும்பு தீண்டாது, உப்பையும் எறும்பு தீண்டாது. கருவாடு ,உறுகாய்,போன்றவைகள் உதாரணம்.
நம் சமயத்தில் தேவ அசுர சண்டை என்பது தேனுக்கும் உப்பிற்கும் நடக்கும் சண்டையே.

தேவ அமிர்தம் என்பது தேன் ...
தேன் தேவகுணம் உடையது
உப்பு அசுரகுணம் உடையது

தேன் தேவர்கள் போல் நம்மை இறைவனிடத்தில் அழைத்து செல்லும். உப்பு புலோகத்தில் இருக்க வைக்கும்.
ஆகவே உப்பை குறைத்தும், தேனை சேர்த்தும் சாப்பிட்டு பழகி கொள்வோம்.

படித்ததில் வலித்தது.

தோளில் தன் மகனை தூக்கிக்கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. டிக்கெட் என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை. யோவ் எங்கயா போகணும்?? பதில் சொல்லு என்று சொல்ல, நடுங்கிக் கொண்டிருந்த அவரின் கைகள் பயணச்சீட்டு எடுக்க முற்பட்டது. நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு காலங்காத்தால வந்துட்டாணுக என் கழுத்தறுக்க என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் நடத்துனர்.

ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக்கொண்டிருந்தார். அவரோடு வந்திருந்த மற்றொரு நபர் ஆவர்களை இருக்க பற்றிக்கொண்டிருந்தார். ஏதோ ஒரு துயர சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.

நான் இறங்கும் இடம் வந்துவிட்டது. பேருந்தை விட்டு இறங்க மனமில்லை. அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும். ஏன் இப்படி சோகம் சூழ்ந்த படி இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே பேருந்தை விட்டு இறங்கினேன். நான் இறங்கிய அதே பேருந்து நிறுத்தத்தில் அவர்களும் இறங்கினார்கள். மனம் சற்று நிம்மதி அடைந்தது. அவர்கள் பற்றி எதையேனும் தெரிந்து கொள்ளலாம் என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். தோளில் பிள்ளையை சுமந்து கொண்டு நடக்கத்துடங்கினர் இருவரம். சிறிது தூரம் அவர்கள் பின்னால் சென்ற எனக்கு கிடைத்தது மனம் நிம்மதி அல்ல ஆழ்ந்த துயரமும், அதிர்ச்சியும்.

தன் மகனை தோளில் தூக்கிகொண்டு அவர்கள் சென்ற இடம் சுடுகாடு. சில நெருங்கிய சொந்தங்கள் அங்கு கூடி இருந்தனர். அவர்களை பார்த்ததும் தூக்கி வந்த தன் மகனை கீழ போட்டுவிட்டு தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார்.

எதனால் அந்த நபரின் மகன் இறந்தார். என்ன காரம் என்று எனக்கு எதுவும் தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இறுதி சடங்கை கூட திருவிழா போல் கொண்டாடும் இந்த காலத்தில் இறந்து போன தன் மகனை பச்சை ஓலை பாடை கட்டி தூக்கி வரும் அளவுக்கு கூட அவரிடம் பணம் இல்லை என்று. உயிருக்கு உயிரான தன் மகனை தோளில் சுமந்துகொண்டு, துக்கத்தை நெஞ்சில் புதைத்துக்கொண்டு. நடத்துனருக்கு தெரியாமல் இறந்து போன தன் மகனை மயானம் வரை தன் தோளில் சுமந்து வந்த அந்த தந்தையின் வலி இன்னமும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது.

உயிரோடு இருக்கும் வரை தான் பணம் தேவை என்று நினைத்தேன், மரணித்த பின்னரும் பணம் தேவைப்படுகிறது இந்த உலகத்தில்.

படித்ததில் வலித்தது.

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்...



பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.

வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.

தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.

தூங்கும் முறை பற்றி கூறும் அரிய விளக்கம்..!!!



மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

cooking tips - சமையல் டிப்ஸ்..!



* பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி வறுத்துவிட்டுச் செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.

* பட்டாணி சூப் செய்யும்போது ஒரு தேக்கரண்டி அவலை வறுத்து பொடி செய்து அதில் சேர்த்துக் கொதிக்க விட்டால் கெட்டியான சூப் கிடைக்கும்.

* உளுந்து வடை மாவு ரொம்ப நீர்த்துப்போய் விட்டால் அந்த மாவுடன் கொஞ்சம் அவலைக் கலந்து வடை தட்டினால் வடை சுவையாக இருக்கும்.

* கலந்த சாதம், விஜிடபிள், பிரியாணி போன்றவை பொலபொலவென்று இருக்க குக்கர் மூடியைத் திறந்ததுமே சிறிது எலுமிச்சை சாறைவிட்டுக் கிளறிவிட வேண்டும்.

* பனீரை வெட்டும் கத்தியை சிறிது நேரம் கொதிக்கும் நீரில் போட்டு வைத்திருந்து பிறகு பனீரை வெட்டினால் உடையாமல் உதிராமல் துண்டங்களாக வெட்ட முடியும்.

* வாழைத்தண்டை நறுக்கிக் கொண்டிருக்கும்போது ஆள்காட்டி விரலில் நாரைச் சுற்றிக் கொண்டேயிருந்தால் மோதிரம் போல நார் திரண்டு வந்துவிடும்.

* ஆலு பரோட்டா செய்யும்போது பூரணம் வெளிவராமல் இருக்க மாவை கிண்ணம்போல் வடிவமைத்து ஆலுவை உள்ளே வைத்து மாவை நன்றாகச் சுற்றி மூடி செய்தால் பூரணம் வெளியே வராது.

* பருப்புடன் சிறிது எண்ணெயும், சிறிது பெருங்காயத் தூளையும் சேர்த்து வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.

* கொழுக்கட்டை சொப்பு வெடிக்காமல் விரியாமல் இருக்க அரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.

* பஜ்ஜி மாவுடன் ஒரு வெங்காயம் மூன்று பூண்டுப் பற்கள், சிறிது சோம்பு முதலியவற்றை நைஸாக அரைத்துக் கலந்து பஜ்ஜி செய்தால் சுவையோ சுவை.

* தேயிலைத்தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும்போதே அதில் இரண்டு ஏலக்காயையும் பொடித்துப் போட்டு கலக்கிவிட்டால் ஏலக்காய் தேநீர் கமகமக்கும்.

* இட்லிப்பொடி செய்யும்பொழுது சிறிது கறிவேப்பிலையையும் போட்டு மிக்ஸியில் பொடித்தால் பொடி ருசியாக இருக்கும்.

* வறுத்த புழுங்கல் அரிசியை மாவாக்கி வைத்துக்கொண்டால் கூட்டு கறிகளை இறக்கும்போது லேசாகத் தூவி இறக்கினால் மணமாக இருக்கும்.

* இட்லி மாவில் ஒரு வெற்றிலையைப் போட்டு வைத்தால் மாவு பொங்கி வழியாது, அதிகம் புளிக்காது.

mobile theift - ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா?

 

உங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா? கவலையை விடுங்கள். இலகுவாக கண்டுபிடித்து விடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஜிமெயில் லாகின் செய்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் ஈசியாக எடுத்து விடலாம்.

குறிப்பு :உங்க மொபைலை யாரும் திருடி இருந்தால் அதை கண்டுபுடிக்க முடியாது ஏன் என்றால் உடனே வேற சிம் மாற்றி விடுவார்கள் (சிம் மட்டும் மாற்றினால் கூட நான் சொன்ன முறையில் கண்டு புடிக்கலாம்)

உதாரணமாக வீட்டில் வைத்த மொபைலை காணவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். அதுவும் silent mode.. சைலென்ட் வைக்காமல் இருந்திருந்தால் கூட ஈசியாக அந்த மொபைல்க்கு கால் செய்து எடுத்து விடலாம் ஆனால் சைலென்ட் வைத்து உள்ளோம் பிறகு என்ன?

வீடு முழுவதும் கஷ்டபட்டு தேடி நம்ம மொபைலை கண்டுபிடிப்போம்அல்லவா? நான் சொல்வதை முயற்சி செய்து பாருங்கள் சைலென்ட் silent வைத்து இருந்தாலும் ரிங் கொடுக்க முடியும் .


குறிப்பு :உங்கள் கணினி அல்லது நண்பர்கள் கணினி அல்லது மொபைலில் காணமல் போன ஆண்ட்ராய்ட்டு மொபைலில் ஜிமெயில் லாகின் செய்த அதே

ஜிமெயில் முகவரியை லாகின் செய்து விட்டு கிழே உள்ள தளத்திற்கு
செல்லவும்.

https://www.google.com/android/devicemanager?u=0

உங்கள் மொபைல் மாடல் மற்றும் கடைசியாக எந்த இடத்தில் அந்த மொபைல் லாகின் செய்தது என்ற தகவல் இருக்கும் வலது பக்கத்தில் ்வரைபடத்தில் அந்த இடத்தை பார்க்கலாம்.

அல்லது ரிங் என்பதை கிளிக் செய்து உங்கள் மொபைல்க்கு ரிங் குடுக்க முடியும்!

BICS (Belgacom International Carrier Services) - பிரிட்டிஷ் புலனாய்வுத்துறை உங்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கின்றது!





மேற்கத்திய நட்பு நாடுகளைக் கூட, அமெரிக்க உளவுத் துறையான NSA வேவு பார்த்த தகவல்கள் பல ஏற்கனவே வெளியாகியுள்ளன. தற்போது, பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையான G.C.H.Q., பெல்ஜிய தொலைத்தொடர்பு நிறுவனத்தினுள் ஊடுருவி, பலரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட விடயம் வெளியாகியுள்ளது.

பெல்ஜியத்தில், ஐரோப்பிய ஒன்றிய தலைமைச் செயலகங்கள், நேட்டோ தலைமையகம், மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் அமைந்துள்ளன. அங்கிருந்தவர்களின் தொலைபேசி உரையாடல்கள் கூட ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கலாம். அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொது மக்களின் கதி?

“சம அந்தஸ்து கொண்ட” ஐரோப்பிய ஒன்றிய நாடான, பெல்ஜியத்தின் தொலைத்தொடர்புகளுக்குள் ஊடுருவி உளவு பார்த்த பிரிட்டிஷ் புலனாய்வுத்துறை, தனது சொந்த நாட்டில் சும்மா இருந்திருக்குமா? பிரிட்டனின் முன்னாள் காலனிய அடிமை நாடுகளான இந்தியா, இலங்கையிலும் ஊடுருவி, அங்குள்ளவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்காமல் இருந்திருப்பார்களா?

பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையின் ஹேக்கர்கள், Belgacom எனும் பெல்ஜிய தொலைத்தொடர்பு திணைக்களத்தின் கணணிகளுக்குள் ஊடுருவி உள்ளனர். அதன் மூலம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுடனான தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப் பட்டன. மின்னஞ்சல்கள் ஒட்டுப் பார்க்கப் பட்டன. எவராலும் கண்டுபிடிக்கப் படாமல், பல வருடங்களாக இது நடந்து கொண்டிருந்தது. அது எப்படி நடந்தது?

பெல்கா கொம் (Belgacom) பெல்ஜியத்தின் மிகப் பெரிய, மிகவும் பழமையான, அரசு தொலைத்தொடர்பு நிறுவனம். இன்றைக்கும், நாட்டின் பெரும்பாலான வீட்டுத் தொலைபேசி, கைத் தொலைபேசி இணைப்புகளை கட்டுப் படுத்துகின்றது. கணணி மயப் படுத்தப் பட்ட காலத்தில், பிற நாடுகளுடனான தொலைத் தொடர்பு விநியோக சேவைகளை BICS எனும் துணை நிறுவனம் பராமரித்து வருகின்றது.

Belgacom International Carrier Services என்பதன் சுருக்கம் தான் BICS. அதற்கும் கீழே நூற்றுக் கணக்கான தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களாக சேர்ந்துள்ளன. சிங்கப்பூர், துபாயில் கூட, BICS கிளை நிறுவனங்கள் உள்ளன.

BICS நிறுவனத்தின் கணனித் தொடர்பாடலை பராமரிக்கும் மூன்று தொழில்நுட்ப நிபுணர்களுடன் உளவு பார்த்த கதை ஆரம்பமாகின்றது. அப்பாவிகளான அந்த மூன்று ஊழியர்களும் LinkedIn இணையத்தின் பாவனையாளர்கள். ஏற்கனவே அவர்களின் கணணிகளுக்குள் ஊடுருவிய GCHQ ஹேக்கர்கள், LinkedIn தொடர்பை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு போலியான LinkedIn தளத்தை உருவாக்கி, அதற்கு அவர்களை வரவழைத்துள்ளனர். அங்கிருந்து ஒரு வைரசை அனுப்பி, அவர்களின் கணணிகளை தாக்கியுள்ளனர்.

“Regin” என்ற பெயரைக் கொண்ட வைரஸ் (malware), இலகுவில் கண்டுபிடிக்க முடியாத, மிகவும் வளர்ச்சி அடைந்த, தீய விளைவை உண்டாக்கும் மென்பொருள் ஆகும். 2009 ஆம் ஆண்டு தான், இந்த வைரஸ் தாக்குதல் நடந்திருக்க வேண்டுமென அனுமானிக்கப் படுகின்றது. 2011 ஆம் ஆண்டு வரையில், அது அழியாமல் மறைந்திருந்து, கணணிகளை சரியாக இயங்க விடாமல் பிரச்சினை கொடுத்துள்ளது. அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான், உண்மையில் என்ன நடந்தது என்று தெரிய வந்தது.

2011 ஆம் ஆண்டு, பெல்கா கொம் ஊழியர்கள் தமக்குள் பரிமாறிக் கொண்ட மின்னஞ்சல்கள் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன. சேர்வர் (Server) பிரச்சினை கொடுக்கத் தொடங்கியது. 2013 ஆம் ஆண்டு, புதிய மைரோசாப்ட் (Microsoft) மென்பொருளை அப்டேட் (update) செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு பிரச்சினை பெரிதானதே தவிரக் குறையவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியைக் கோரினார்கள். மைக்ரோசாப்ட் நிபுணர்கள் வந்து பார்த்தும், அவர்களாலும் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

அதற்குப் பிறகு, நெதர்லாந்தின் பிரபலமான ஐ.டி. நிறுவனமான Fox-IT நிபுணர்களை வரவழைத்து பரிசோதிக்க சொன்னார்கள். அவர்கள் வந்து பரிசோதித்த நேரம், ஒரு விசித்திரமான பொருளைக் கண்டுபிடித்தார்கள். கணனியில் இயங்கிக் கொண்டிருந்த மென்பொருள் ஒன்று, மைரோசாப்ட் மாதிரி இருந்தது. ஆனால், அது உண்மையில் மைரோசாப்ட் அல்ல. அது மாதிரி பாவனை செய்து கொண்டது.

பெல்கா கொம் உடனடியாக காவல்துறையில் முறைப்பாடு செய்தது. பெல்ஜிய அரச புலனாய்வுத் துறையான ADIV உடன் தொடர்பு கொண்டது. ADIV கணிப்பொறி நிபுணர்கள், Fox-IT நிபுணர்களுடன் சேர்ந்து பிரச்சினையை ஆராய்ந்தார்கள். அப்போது தான், பல வருடங்களுக்கு முன்னர் ஊடுருவி இருந்த உளவறியும் வைரஸ் ஒன்றினை, சரியாக அழிக்காமல் விட்ட படியால் தான், கணனிகள் பிரச்சினை கொடுத்தன என்று தெரிய வந்தது.

ஆனால், வைரஸ் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், திடீரென பெல்கா கொம் தலைமை நிர்வாகத்தின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. Fox-IT உடனான ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டது. BICS ஊழியர்கள் அத்தனை பேரும், இரகசியக் காப்பு விதிகளை ஏற்றுக் கொள்ளும் படிவத்தில் கையொப்பம் போட வேண்டுமென வற்புறுத்தப் பட்டனர். வைரசை அப்படியே வைத்துக் கொண்டு, அது குறித்த ஆராய்ச்சி செய்த ஆதாரங்களை அழித்து விடுமாறு கோரியது! ஏன் என்று கேட்டவர்களுக்கு, பெல்கா கொம் தானாகவே பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்று பதில் கூறப் பட்டது.

2013, ஆகஸ்ட் 30 அன்று, வைரசின் ஒரு பகுதி தானாகவே மறைந்து விட்டது. அந்தக் காலகட்டத்தில் பல தகவல்கள் வெளியாகத் தொடங்கின. பெல்ஜியத்தில் அதிகமாக விற்பனையாகும் De Standaard பத்திரிகை, முதன் முதலாக இந்தத் தகவலை வெளியிட்டது. சில தினங்களுக்குப் பின்னர், ஜெர்மனியின் Der Spiegel வார இதழ், ஸ்னோவ்டனின் இரகசிய ஆவணங்களை பிரசுரித்து இருந்தது. அவற்றில் ஒன்றில், பிரிட்டனின் அந்நிய நாடுகளை உளவறியும் பட்டியலில் பெல்கா கொம் இருக்கும் விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆயினும், இப்போதும் பெல்கா கொம் நிறுவனம் முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வகையில் பேசி வருகின்றது. “அந்நிய நாடொன்றின் வைரஸ் தாக்குதல் நடந்திருந்தாலும், அது ஒரு சில வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளை மட்டுமே பாதித்துள்ளதாக…” கூறி சமாளித்து வருகின்றது.

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்...


ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

- மணிகண்டவேல்

ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?



ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.

2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து வாங்குவாள்.

4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...

6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)

7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு, கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....

8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.

9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்" எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?

10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.

12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)

14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்.

- மணிகண்டவேல்

காதல் மன்னன் ஆவது எப்படி..?



1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

- மணிகண்டவேல்

கல் நெஞ்சம் கொண்டவளே!

 

கல் நெஞ்சம் கொண்டவளே!
தயவு செய்து
உன் தாயிடம் கேட்டுப் பார்.
காதல் வராமல் இருக்க
தவழும் வயதில் உனக்கு
தடுப்பூசி ஏதும் போடப்பட்டதா என்று......

தமிழில் படித்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியுமா ?



 
இனி எவராவது தமிழைப் படித்ததால் வாழ்க்கை முன்னேறாது என்று சொல்லாதீர்கள்...

என் பெயர் வே.நவேந்திரன்

இன்று நான் நகராட்சி ஆணையராக பணிபுரிய நான் தமிழை படித்ததே காரணம் ...

மேல்நிலை கல்வி
ஆண்கள் அரசு பள்ளி மாரியம்மன் கோவில்

இளநிலை மற்றும் முதுநிலை வேதியியல் பயின்றது
மன்னர் சரபோசி அரசு கல்லூரி தஞ்சை ...

1ஆம் வகுப்பில் இருந்து இளநிலை பட்ட படிப்பு வரை தமிழ் வழியே பயின்றேன்..

2007 ஆம் வருடத்தில் இருந்து தமிழ் நாடு அரசு தேர்வாணைய தேர்வுக்கு படித்து வந்தேன்...

தொகுதி2 தேர்வில்
சிறப்பாக எழுதினேன்
நான் நேசித்த தமிழில் 98/100 சரியாக விடையளித்தேன்...

22.07.2012, 23.07.2012 அன்று நேர்காணல் நடந்தது ...

கேட்ட கேள்விகளில் பாதிக்கும் மேல் தமிழைப் பற்றி .....
விடுவேனா......?

கேள்விகளில் சில ...

கேள்வி :
பாரதிதாசனை பற்றியும் அவரது பாடல் ஒன்றும் சொல்லவும்

நான் :-
கொடை வாளினை எடடா
மிகக் கொடியோர் செயல் அறவே
உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா....

என்ற பாரதிதாசன் பாடலை சொன்னேன்

கேள்வி :-
ஏன் இந்த பாடல் சொல்கிறீர்கள்?

நான் :-
இன்று தமிழர்கள் சாதியால் மதத்தால் பிரிந்து உள்ளார்கள்
நாம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றேன்

கேள்வி :-
சிரிக்கும் சித்திர சோலைகளே...
என்ற பாடலை எழுதியவர் யார் ?

நான்:-
சற்று யோசனைக்கு பின்
பாரதிதாசன் ...

இன்ன பிற கேள்விகளுடன் நேர்காணல் முடிந்தது ...

01.08.2012 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது...
படித்த தமிழ் கரை சேர்த்தது

3 மதிப்பெண்ணில் 7.5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் முதல் இடத்தை இழந்தேன்...

298.5/330 மதிப்பெண்
பெற்று இரண்டாவது இடமே பெற முடிந்தது

15.10.2012
அன்று தமிழக முன்னாள் டி.ஜி.பி திரு.நட்ராஜ் இ.கா.ப அவர்கள் கையினால் நகராட்சி ஆணையராக பணி ஆணை பெற்று 11.02.2013 முதல் மக்கள் பணியில் தொடர்கிறேன்..

இனி எவராவது தமிழைப் படித்ததால் வாழ்க்கை முன்னேறாது என்று சொல்லாதீர்கள்...

முன்னேறுவது
உங்கள்
முயற்சியைப் பொறுத்ததே.....

@ நவேந்திரன்
செயங்கொண்டம் நகராட்சி ஆணையர்.

BABY - பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்:-



தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.

அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது அவற்றின் வளர்ச்சியைப் பொருத்த விஷயமாகும். ஆனால் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி இங்கு காணலாம்.

முதல் மாதம்

கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.

இரண்டாம் மாதம்
அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.

மூன்றாம் மாதம்
தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.

நான்காம் மாதம்
நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.

5ம் மாதம்
ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.

6ம் மாதம்

வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.

7ம் மாதம்

ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.

8ம் மாதம்

பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.

9ம் மாதம்

ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.

10ம் மாதம்

அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.

12ம் மாதம்

ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.

15வது மாதம்
தனியாக நடப்பார்கள். உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள். படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.

இவ்வாறாக குழந்தை வளர்ந்து சிறுவனாகிறது. இந்த படிநிலைகளில் சில குழந்தைகளின் வளர்ச்சியும், மற்ற சில குழந்தைகளின் வளர்ச்சியும் வேறுபடும்.

உண்மையில் காதல் என்பது என்ன?

அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாது...!!!

பணத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
ஏழைகளுக்கு காதல் வராது...!!!

உண்மையில் காதல் என்பது என்ன?

அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு
உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான காதல்...!!!

- ஐஸ்வர்யா நாச்சியார்

How to GROW UP ur childrens? - உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...?



* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது...

* அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது...

* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது...

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது...

* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க...

* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது...

* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது...

* பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது...

* நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது...

* 4,5 வயதில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...!

பேச்சுலர் டூ குடும்பஸ்தன்..



1. இரவு ஒரு மணிக்கு வந்த வீட்டுக்கு இப்போதெல்லாம் 9 மணிக்குள் வந்துவிடுவீர்கள்.

2. ஆறு மாதம் துவைக்காமல் இருந்த ஜீன்ஸ் ஆறு நாளுக்கு ஒரு முறையேனும் துவைக்கப் பட்டிருக்கும்.

3. அப்பா கேட்ட நாலு கேள்விக்கு ஒரு வார்த்தைல பதில் சொல்லி இருப்பீர்கள். இப்ப மனைவி கேட்கற ஒரு கேள்விக்கு குறைந்த பட்சம் நான்கு பதிலேனும் சொல்வீர்கள்.

4. நண்பர்களுடன் செலவழித்த பல மணி நேரம் இனி சிலமணி நேரங்களாகக் குறையும்.

5. எங்க டா போறேன்னு அம்மா கேட்டப்ப, வந்து சொல்லறேன்னு சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது.

6. ஒட்டிக் கொண்டே இருந்த உடன் பிறப்புகள் சற்று தூரம் சென்றதாய் உணர்வீர்கள்.

7. அடிக்கடி கைபேசியை வீட்டில் மறந்து விட்டுச் செல்வீர்கள்.

8. நான் வருகிறேன் என்று சொல்லாமல், நான் வரட்டுமா? என்று உங்கள் வீட்டுக்கு வர உங்கள் தந்தையே அனுமதி கேட்கும் நிலைமை வந்திருக்கும்.

9. எல்லாப் பக்கமும் பிரச்சனை என்ற போதும் அலுவலக வேலைகள் தடையில்லாமல் நடந்திருக்கும். இப்ப காலைல காபி போடறப்ப வந்த சண்டைக்கே வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பீர்கள்.

10. திருமணத்திற்கு பின், இழப்புகள் ஆண்களுக்கும் தான் என்றுச் சொன்னால் இங்கு யாரும் நம்பப்போவதில்லை என்பதை உங்கள் மனம் அடிக்கடி உங்களிடம் சொல்லிச் செல்லும்.

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை


வழக்கமாக
மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும்
தானே அறிவுரை கூறுவார்கள், பின்
ஏன் புதிதாய் உன்
அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன்
என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா?
செல்லமே!
அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில
விஷயங்களை கூற விரும்புகிறேன், உன்
எதிர்கால மணவாழ்க்கையில்
ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக
இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..
1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின்
திறம்பட முடிவெடுக்கும் திறன், என்
அப்பா...என அடுக்கடுக்காக நீ உன்
அப்பாவிற்கு சூட்டும் க்ரீடமும் , என்
அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன்
மனதின் ஆழத்தில்
மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில்
வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில்
எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய
அவசியம் இல்லை.உன் கணவரிடம், "என்
அப்பா நேரம் தவற மாட்டார்"," என்
அப்பா அதிகாலையில்
உடற்பயிற்சி செய்வார்"
என்று அப்பா புராணம்
பாடாதே கண்ணம்மா. உன் அப்பாவும்
ஒரு காலத்தில் காலை 8
மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.
2. உன் பிடிவாதங்களை எல்லாம்
கோபத்துடன் கையாளாமல்
அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன்
கணவரும் சகித்துக்கொள்வார்
என்று எதிர்பார்க்காதே. என்
வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன்
மீதான கண்மூடித்தனமான பாசமும் என்
கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும்
குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள
அவகாசம் கொடு. முக்கியமாக உன்
பிடிவாதங்களை தளர்த்தி,
அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.
3.சிறு சிறு வாக்குவாதங்கள்,
கருத்து வேறுபாடு உங்கள்
இருவருக்குள்ளும் வர தான்
செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான்
என் அப்பா வீட்டிற்கு போகிறேன் ","
எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற
வசனங்களை பேசி உன் மேல்
அவருக்கு கசப்பு வர
வைத்து விடாதே.உன் கணவர் தான்
இனி உன் உலகம்
என்பதை அவருக்கு புரிய வை.நீ
அவருக்கு கொடுக்கும்
முக்கியத்துவமும்,மரியாதையும் அவர்
மனதில் உன்னை சிம்மாசனம்
போட்டு உட்கார வைக்கும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்....
*அப்பா புராணம் பாடாதே.
*அப்பாவோடு ஒப்பிடாதே .
*'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது .
*அப்பாக்கு கொடுத்த
க்ரீடத்தை அவருக்கும் கொடு.
22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான்
கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி
மேல் உன் கணவரின்
கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும்
நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்
காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
நீடுடி வாழ வாழ்த்துகள்....!
-
அன்புடன் அப்பா.
Vignesh Parani

BOYS - ஆம்பிள்ளைங்னா அப்படித்தான்..!



1. யாராவது Time கேட்டா..,செல்போனை பார்த்து தான் டைம் சொல்லுவாங்க..
( கையில Watch கட்டி இருந்தாலும் )
2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..
3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )
4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.. "அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..!" இந்த டயலாக் சொல்லுவாங்க..
5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., Wife Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!
6. " உன்னாலே., உன்னாலே..! " இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!
7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க.., " ஏன்டா Leg Side-ல Ball போடுற " இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.
8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க..
(கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க.. - அது வேற
விஷயம்.. )
9. திடீர்ன்னு Walking., Exercise,Yoga பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..
10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..!
( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..! )
பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு
அர்த்தம்.. உடனே நல்ல டாக்டரா போயி பார்க்கிறது Better.

TOP to BOTTOM maruthani - மருதாணி பற்றிய தகவல் !!!!



இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் ஒன்று. ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது. அதில் எண்ணற்ற பயன்களுடன் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.

இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் இருக்கும், இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

மருதாணியின் பயன்கள்

மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் தணியும்.

சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது.

மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

தோல் நோய்
தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்
ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர
இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மை
தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

கால் ஆணி
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.

படைகள்
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

இளநரையை போக்கும் மருதாணி

இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.

மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.

How to Float a Boat on Water - தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?



ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது . ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல்தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும ், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால்அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பத ை பார்த்திருப்பீர ்கள். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும். 1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள்.

தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள்வடிவமைக்கப்படுக ின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல்மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார் . அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் “யுரேகா, யுரேகா’ (நான் கண்டுபிடித்துவி ட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.

மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால் , நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம்.ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும்.

இதற்கு எடுத்துக்காட்டு , 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது . அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது.ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது. புவியீர்ப்பு சக்தியின் காரணமாகஅதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது .

அதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது.மனித ர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும்.மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்கமாட்டோம். இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள் ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது.க ப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும். தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநி

GOLDEN WORDS பொன்மொழிகள்...!! - PART 1




1. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

2. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.
ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

3. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

4. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

5. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

6. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒரு போதும்
உதவி செய்யாது.

7. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும்
சண்டையே இல்லாத சமாதானம் தான் வேண்டும்.

8. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;
நாளைய பொழுதும் நிச்சயமில்லை;
இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

9. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

10. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

11. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான
பசி. ஒரு முறை சுவைக்கப்பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

12. நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

13. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.
அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்று விடும்.

14.தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த
செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது..
-------------------------------------------------------------

How to Heat milk? - எந்த பாலை எப்படி காய்ச்ச வேண்டும் ????


காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடித்தால் தான். சுறுசுறுப்பு நாடி நரம்பெல்லாம் பரவும் என்ற மனப்பழக்கத்துக்கு ஆளாகி இருப்பவர்கள் நாம். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்குமான முக்கியமான ஊட்டச் சத்தும் பால்தான். அப்படி நமக்கு மிக முக்கிய மாகிப் போன பாலை, நாம் சரியான முறையில் காய்ச்சுகிறோமா..? அப்பா டீ குடிக்கும்போது ஒருமுறை, குழந்தைக்குப் பாலூட்ட ஒரு முறை என பாலை பலமுறை சுடவைக்கும்போது, இது சரிதானா என்று யோசித்துப் பார்த்தது உண்டா..?

''பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம்!'' என்கிறார், உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன். ''காய்ச்சிய பாலை 2-3 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும்போது, அதில் இருக்கும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்ஷியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுடவைப்பதால் அந்த சத்துக்கள் வீணாகிவிடும் என்றால், பால் குடிப்பதன் காரணமும் வீணாகிவிடும்தானே?!'' என்று தெளிவுபடுத்திய ஷைனி, பாலைக் காய்ச்சுவதற்கான காரணத்தைக் கூறினார்.

''பசும்பாலில் இருக்கும் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள், அதைக் காய்ச்சும்போது அழிந்துவிடும். அதனால்தான் பாலைக் காய்ச்சுகிறோம். இன்று பெரும்பாலானவர்கள் பாக்கெட் பால் வாங்குகிறோம். அது ஏற்கெனவே சுத்தம் செய்யப்பட்ட பிறகுதான் பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதனை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்கிற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்துவிடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி சூடாக்கி சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம்'' என்றவர், பால் காய்ச்சும் முறையைக் கூறினார்.

பசும்பால் வாங்குபவர்களுக்கு...!!
------------------------------------------------

''பால் பொங்கியதும் உடனே இறக்கிவிடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால் பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பால் 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.

பாக்கெட் பால் வாங்குபவர்களுக்கு...!!
------------------------------------------------------

'டோன்டு மில்க்’, 'பாஸ்டரைஸ்டு மில்க்’ என்று பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு இருப்பதால், அதை 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.

யு.ஹெச்.டி (அல்ட்ரா ஹை டெம்ப்ரேச்சர்)
வகை பால் வாங்குபவர்களுக்கு...!!
-------------------------------------------------------------

இந்த வகைப் பால் வாங்குபவர்கள், அதைக் கொதிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை. சுட வைத்தாலே போதுமானது.

எந்த வகைப் பால் ஆயினும், அதை இரண்டு முறைக்கு மேல் சுட வைக்க வேண்டாம். ஒரு முறை பாலைக் காய்ச்சியபின் அதை ரெஃப்ரிஜிரேட்டரில் வைக்கலாம்.

காபி, டீ என தயார் செய்யும்போது மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் காபி/டீ தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்''

''பாலை 'மைக்ரோ அவன்’ மூலம் சூடு பண்ணுவதைத் தவிர்ப்பதும் நல்லது. காரணம், அதில் சத்துக்கள் எளிதில் ஆவியாகிவிட வாய்ப்புண்டு!''

ஆண் டாக்டரிடம் பரிசோதனைக்குச் செல்லும் பெண்களின் கவனத்துக்கு..!


 

பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, ஆண் டாக்டர்கள் கடைப்பிடிக்க வேண் டிய மருத்துவ நெறிமுறைகள் தனியாக உள்ளன. தனியார் மருத்துவமனை, தனியார் கிளினிக் கிற்கு சிகிச்சைக்கு வரும் ஒரு பெண் நோயாளியை, ஆண் டாக்டர் பரிசோதிக்கும்போது, அந்த அறையில் பெண் செவிலியர் அல்லது பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் பெண் நோயாளியுடன் வரும் பெண் உதவியாளரும் அறையில் இருக்கலாம்.
 
பெண் நோயாளி தங்களுடைய பிரச்சினையை சொல்லிய பிறகு, இதற்கு என்ன மாதிரியான பரி சோதனைகளை (தொடுதல்) செய்ய போகிறோம் என்பதை முன் கூட்டியே நோயாளியிடம், ஆண் டாக்டர் தெரிவிக்க வேண்டும். அதற்கு பெண் நோயாளி சம்மதம் தெரிவித்த பிறகே, பரிசோதனை களை டாக்டர் செய்ய வேண்டும். வயிறு வலி, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பிரச்சினைகளுடன் பெண் கள் வருவார்கள். இதற்கு வயிற்று பகுதியை தொட்டும் அழுத்தியும் தட்டியும் பார்த்துதான் பிரச் சினையைக் கண்டறிய முடியும்.

இந்த பரிசோதனைகளை செய்ய ஆண் டாக்டர், கண்டிப்பாக பெண் நோயாளியின் அனுமதி பெற வேண்டும். அதன் பின்னரே பெண் நோயாளியின் வயிற்றை தொடவோ, அழுத் தவோ, தட்டிப்பார்க்கவோ வேண் டும். அப்போது, அதற்கு பெண் நோயாளி ஆட்சேபம் தெரிவித் தால், ஆண் டாக்டர் உடனடியாக தன்னுடைய கையை எடுத்துவிட வேண்டும்;

புகார் கொடுக்கலாம்:
 
சிகிச்சைக்கு வரும் பெண் நோயாளியிடம், ஆண் டாக்டர்கள் தவறான தொடுதல் முறையில் சில்மிஷ வேலையில் ஈடுபட்டால், எண்.914, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம் என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்படி விசாரணை நடத்தப்படும். பெண் நோயாளியிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தால், அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

How to CLEAN RAM MEMORY for SYSTEM SPEED - RAM மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது




இந்த விடயம் சிலருக்கு இல்லை பலருக்கும் பழைய விடயமாக இருக்கலாம் ஆனாலும் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம். அதாவது நீண்ட நேரம் கணணியை
பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software

களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்.

அந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று கவனிப்போம்

01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.

02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.
FreeMem=Space(128000000)

03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.

04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க.

05.அவ்வளவுதான் றம்(RAM) மெமரியை கிளீன்
செய்துவிட்டோம்

Listen Guys!!! ஆண்கள் கவனத்துக்கு !!!




1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.

2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.

3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்னும் அடைமொழியுடன் சொல்.

4. ஒரு பொண்ண சந்தோஷபடுத்த BEAUTIFUL னு சொல்லனும்.... ஒரு ஆண சந்தோஷபடுத்த ஒரு FULL னு சொன்னா போதும்...

5. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க.

6. லைஃப் ல ஒரு அழகான பொண்ண லவ் பன்றத விட நம்ம லைஃப்ப அழகா வச்சிருக்கிற பொண்ண லவ் பன்றது தான் ரொம்ப நல்லது...

7. எல்லா ஆண்களுடைய ஆசைகளில் ஒன்று..."தன்னுடன் மட்டுமே எல்லா பெண்களும் பழக வேண்டும்." என்று.!!!

8. எல்லா பெண்களுடைய ஆசைகளில் ஒன்று.."தன்னை மட்டுமே எல்லா ஆண்களும் ரசிக்க வேண்டும்." என்று.!!

9. கல்யாணமான புதுசுல பொண்டாட்டி விதவிதமா சமைச்சி போடுறதோட அர்த்தம் என்னான்னு தெரியுமா? அய்யே தெரிய்லையே புருஷனை குண்டாக்கிட்டா.. அந்த சனியன எந்த பிகரும் திரும்பி பாக்காதுங்கிறதுதான்....!!! உசாரய்யா உசாரு.. .

10. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ? அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !

திட்டமிட்டு வாழுங்கள் ! PLAN

 
ஒரு நாளைக்கு 24 மணித்தியாலம் இருந்தும் பலர் எதாவது ஒரு வேலையை சொன்னால் சொல்வது நேரம் இல்ல என்றுதான்

ஒரு நாளைக்கு 24 மணித்தியாலம் அல்ல 30 மணித்தியாலம் தான் இருந்தாலு நீங்கள் நேரம் இல்லை என்று தான் சொல்லுவீர்கள் காரணம் உங்களிடம்ன் நேர முகாமைத்துவம் இல்ல அதுதான்

எந்த ஒரு விடையத்தை செய்வதாக இருந்தாலும் அதற்கு ஒரு நேர கால அட்டவணை ஒன்று தயார் செய்துகொள்ளுங்க

ஒரு சாதாரண சுற்றுலாப் பயணம் போவதென்றாலும் கூட யாரும் திட்டமிடாமல் போவதில்லை. என்று, எப்போது, எப்படிப் போவது, எங்கு தங்குவது, எந்தெந்த இடத்தில் எவ்வளவு காலம் கழிப்பது என்று முன் கூட்டியே திட்டமிடாமல் கிளம்புவதில்லை. சில நாள் பயணத்திற்கே திட்டம் தேவையென்றால் வாழ்க்கைப் பயணத்திற்குத் திட்டம் எவ்வளவு முக்கியமாக இருக்க வேண்டும்?

ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் திட்டமிடுவதில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணத்தைப் போல் இதில் பயணத்தை ஆரம்பிக்கும் முன் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் வசதி இல்லை. இங்கு ஆரம்பித்த பின் தான் அவ்வப்போது திட்டமிட்டு பயணிக்க வேண்டி இருக்கிறது. சுற்றுலாப் பயணத்தில் பயணம் எப்போது முடிவடையும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும். ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் ஆரம்பத்தைப் போல முடிவு தேதியும் நாம் அறியாதது.

மற்றபடி இரண்டு பயணங்களிலும் திட்டம் முக்கியமே. புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவன் அதை அப்படியே பின்பற்றுவானானால் நிறைய இடங்களுக்கு சௌகரியமாகச் சென்று திருப்தியாகத் திரும்ப முடியும். வாழ்க்கைப் பயணத்திலும் திட்டமிட்டு வாழ்ந்தால் நிறைய சாதித்து திருப்தி பெற முடியும். இரண்டு பயணங்களிலும் திட்டமிடாத போது அர்த்தமில்லாமல் அலைகிறோம். அலைபாய்கிறோம். அடுத்தது என்ன என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பத்திலேயே நிறைய காலம் வீணாக்குகிறோம். தேவையில்லாமல் சுற்றுகிறோம். அடுத்தவர்கள் எங்கு போகிறார்களோ நாமும் அங்கு போகிறோம். பயணம் முடியும் போது தான் சாதித்ததை விட அர்த்தமில்லாமல் அலைந்தது அதிகம் என்ற உண்மை சம்மட்டி அடியாக நமக்கு உறைக்கிறது.

எனவே நிறைவாக வாழ விரும்பினால், நிறைய சாதிக்க விரும்பினால் திட்டமிட்டு வாழுங்கள். என்ன செய்ய விரும்புகிறீர்கள், என்னவாக விரும்புகிறீர்கள் என்கிற அடிப்படைக் கேள்விகளுக்கான விடையை ஒட்டி உங்கள் திட்டங்கள் இருக்கட்டும். குறுகிய காலத் திட்டம், நீண்ட காலத் திட்டம் என இரண்டு வகைத் திட்டங்கள் தீட்டுங்கள். இப்போதைய தேவைகளை ஒட்டி உங்கள் குறுகிய காலத் திட்டங்கள் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை ஒட்டி உங்கள் நீண்ட காலத் திட்டம் இருக்கட்டும்.

உங்கள் வாழ்வில் இந்த இரண்டையும் செயல்படுத்தும் விதமாய் உங்கள் நிகழ்கால வார அல்லது மாதத் திட்டங்கள் இருக்கட்டும். இப்போதைய தேவைகளுக்கு 60-75% நேரம் மற்றும் முயற்சிகள் ஒதுக்குவீர்களானால் நீண்ட காலத் திட்டங்களுக்கு 40-25% நேரம் மற்றும் முயற்சிகள் ஒதுக்குங்கள். பலரும் இப்போதைய தேவைகளுக்கான அவசரமான வேலைகள் செய்வதிலேயே இருப்பதில் முக்கியமான தங்கள் நீண்ட காலக் கனவுகளுக்கான செயல்களைச் செய்யாமல் கோட்டை விட்டு விடுகிறார்கள். ‘அலை ஓய்வதெப்போது, தலை முழுகுவதெப்போது’ என்பது போல இப்போதைக்கு செய்ய வேண்டிய அவசர வேலைகள் என்றும் ஓய்வதில்லை. அதன் நடுவில் உங்கள் நீண்டகால வாழ்க்கை லட்சியத்திற்கான செயல்களையும் புகுத்தி செய்து கொண்டிருங்கள். குறுகிய காலத் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செய்து முடிக்கையில் நீண்ட கால லட்சியத்திற்கான செயல்களையும் செய்து கொண்டே இருப்போமானால் வாழ்க்கையின் முடிவில் இந்த இரண்டிலுமே நிறைய சாதித்திருப்போம்.

‘பல தடவை திட்டம் போட்டு பார்த்து விட்டேன். நினைத்தபடி எதுவுமே நடப்பதில்லை. அதனால் இப்போது திட்டமிடுவதையே விட்டு விட்டேன்’ என்று சொல்பவர்கள் பலர் இருக்கிறார்கள். நினைக்கிற படி ஒவ்வொன்றும் நடந்து விடுவதில்லை என்பது உண்மையே. எத்தனையோ எதிர்பாராத சூழ்நிலைகள், நிகழ்ச்சிகள் குறுக்கிடும் போது பல சமயங்களில் திட்டப்படி நடக்க முடியாமல் போவது இயற்கையே.

நமது கவனம் இலக்குகளில் இருக்குமானால் அந்த எதிர்பாராத சூழ்நிலைகளிலும் முடிந்த வரை ஏதாவது செய்வதும், அந்த சூழ்நிலைகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் சாத்தியமே. அதையும் மீறி திட்டமிட்டு செயல்பட்டாலும் பல விஷயங்கள் நினைத்த நேரத்தில் நினைத்த படி ஆவதில்லை என்றால் கூட அதில் பலவற்றை சாதிக்க முடிகிறது, திட்டமே இல்லாமல் போனால் எதையுமே சாதிக்க முடியாமல் போகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. ஓடும் வெள்ளத்தில் போடப்பட்ட துரும்பாய் இலக்கில்லாமல் அடித்து செல்லப்படும் நிலை தான் திட்டமிடாத வாழ்க்கையின் முடிவு. கடைசியில் எங்கே போய் சேர்வோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

நாம் நினைத்தபடி வாழ வேண்டுமா, இல்லை ஓடும் வெள்ளத்தில் விழுந்த துரும்பாய் எப்படி, எங்கு போய்ச் சேர்ந்தாலும் பரவாயில்லையா? திட்டமிட்டு வாழ வேண்டுமா, இல்லை திட்டமே தேவை இல்லையா? முடிவு நம் கையில் இருக்கிறது.

RUN COMMAND

100 பயனுள்ள Run command

பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு...

1) Accessibility Options : access.cpl
2) Add Hardware : hdwwiz.cpl
3) Add / Remove Programs : appwiz.cpl
4) Administrative Tools : control admintools
5) Automatic Updates : wuaucpl.cpl
6) Wizard file transfer Bluethooth : fsquirt
7) Calculator : calc
8) Certificate Manager : certmgr.msc
9) Character : charmap
10) Checking disk : chkdsk
11) Manager of the album (clipboard) : clipbrd
12) Command Prompt : cmd
13) Service components (DCOM) : dcomcnfg
14) Computer Management : compmgmt.msc
15) DDE active sharing : ddeshare
16) Device Manager : devmgmt.msc
17) DirectX Control Panel (if installed) : directx.cpl
18) DirectX Diagnostic Utility : dxdiag
19) Disk Cleanup : cleanmgr
20) System Information : dxdiag
21) Disk Defragmenter : dfrg.msc
22) Disk Management : diskmgmt.msc
23) Partition manager : diskpart
24) Display Properties : control desktop
25) Properties of the display (2) : desk.cpl
26) Properties display (tab "appearance") : control color
27) Dr. Watson : drwtsn32
28) Manager vérirficateur drivers : check
29) Event Viewer : Eventvwr.msc
30) Verification of signatures of files : sigverif
31) Findfast (if present) : findfast.cpl
32) Folder Options : control folders
33) Fonts (fonts) : control fonts
34) Fonts folder windows : fonts
35) Free Cell : freecell
36) Game Controllers : Joy.cpl
37) Group Policy (XP Pro) : gpedit.msc
38) Hearts (card game) : mshearts
39) IExpress (file generator. Cab) : IExpress
40) Indexing Service (if not disabled) : ciadv.msc
41) Internet Properties : inetcpl.cpl
42) IPConfig (display configuration) : ipconfig / all
43) IPConfig (displays the contents of the DNS cache) : ipconfig / displaydns
44) IPConfig (erases the contents of the DNS cache) : ipconfig / flushdns
45) IPConfig (IP configuration cancels maps) : ipconfig / release
46) IPConfig (renew IP configuration maps) : ipconfig / renew
47) Java Control Panel (if present) : jpicpl32.cpl
48) Java Control Panel (if present) : javaws
49) Keyboard Properties : control keyboard
50) Local Security Settings : secpol.msc
51) Local Users and Groups : lusrmgr.msc
52) Logout : logoff
53) Microsoft Chat : winchat
54) Minesweeper (game) : winmine
55) Properties of the mouse : control mouse
56) Properties of the mouse (2) : main.cpl
57) Network Connections : control NetConnect
58) Network Connections (2) : ncpa.cpl
59) Network configuration wizard : netsetup.cpl
60) Notepad : notepad
61) NView Desktop Manager (if installed) : nvtuicpl.cpl
62) Manager links : packager
63) Data Source Administrator ODBC : odbccp32.cpl
64) Screen Keyboard : OSK
65) AC3 Filter (if installed) : ac3filter.cpl
66) Password manager (if present) : Password.cpl
67) Monitor performance : perfmon.msc
68) Monitor performance (2) : perfmon
69) Dialing Properties (phone) : telephon.cpl
70) Power Options : powercfg.cpl
71) Printers and Faxes : control printers
72) Private Character Editor : eudcedit
73) Quicktime (if installed) : QuickTime.cpl
74) Regional and Language Options : intl.cpl
75) Editor of the registry : regedit
76) Remote desktop connection : mstsc
77) Removable Storage : ntmsmgr.msc
78) requests the operator to removable storage : ntmsoprq.msc
79) RSoP (traduction. ..) (XP Pro) : rsop.msc
80) Scanners and Cameras : sticpl.cpl
81) Scheduled Tasks : control schedtasks
82) Security Center : wscui.cpl
83) Console management services : services.msc
84) shared folders : fsmgmt.msc
85) Turn off windows : shutdown
86) Sounds and Audio Devices : mmsys.cpl
87) Spider (card game) : spider
88) Client Network Utility SQL server : cliconfg
89) System Configuration Editor : sysedit
90) System Configuration Utility : msconfig
91) System File Checker (SFC (Scan Now) : sfc / scannow
92) SFC (Scan next startup) : sfc / scanonce
93) SFC (Scan each démarraget) : sfc / scanboot
94) SFC (back to default settings) : sfc / revert
95) SFC (purge cache files) : sfc / purgecache
96) SFC (define size CAHC x) : sfc / cachesize = x
97) System Properties : sysdm.cpl
98) Task Manager : taskmgr
99) Telnet client : telnet
100) User Accounts : nusrmgr.cpl
101) Utility Manager (Magnifier, etc) : utilman
102) Windows firewall (XP SP2) : firewall.cpl
103) Microsoft Magnifier : magnify
104) Windows Management Infrastructure : wmimgmt.msc
105) Protection of the accounts database : syskey
106) Windows update : wupdmgr
107) Introducing Windows XP (if not erased) : tourstart
108) Wordpad : write
109) Date and Time Properties : timedate.cpl

நரம்பு மண்டல ரகசியங்கள் - The seceret of Nerology Department


மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் அசைவுகளை கட்டுப்படுத்துவது, சூடு, குளிர் உணர்வது வரை அனைத்துக்கும் நரம்பு மண்டலமே காரணமாகின்றது. நரம்பு மண்டலம் கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது... தன்னிச்சையாக இயங்கும் நரம்பு பிரிவு: இருதயம், ரத்த அழுத்தம், செரிமானம், உடல் சூட்டினை சீராய் வைத்தல் இவற்றிற்குப் பொறுப்பாகின்றது.

மோட்டார் நரம்பு பிரிவு:

அசைவுகளையும், செயல்களையும் மூளையிலிருந்து தண்டுவடம் மூலமும் உடல் தசைகளுக்கு கொண்டு சென்று இயங்க வைக்கின்றது.

சென்சரி (உணர்ச்சி) நரம்பு பிரிவு:

தோல், தசைகளிலிருந்து தண்டுவடத்திற்கும், மூளைக்கும் எடுத்துச்செல்வது. இது அங்கு ஆராயப்பட்டு வலி, எரிச்சல், இதம் போன்ற உணர்ச்சிகளை மனிதன் உணரச் செய்கின்றது. நரம்பு மண்டலமே அனைத்திற்கும் காரண மாவதால் நரம்பு வலியும் அல்லது நரம்பு பாதிப்பும் மனிதனின் வாழ்வினை வெகுவாக பாதித்து விடுகின்றது.

நரம்பு வலியின் அறிகுறி என்ன?

நரம்பு பாதிக்கப்படும் பொழுது பலவித அறிகுறிகள் தெரியும். பாதிப்பு மூளையிலா, தண்டுவடத்திலா அல்லது பரவியுள்ள புற நரம்புகளிலா என்பதனைப் பொறுத்து அறிகுறிகள் இருக்கும்.

தன்னிச்சை இயக்க நரம்பு பாதிக்கப்படும் பொழுது...

* நெஞ்சு வலியினை உணர முடியாது
* அதிக வியர்வை அல்லது குறைந்த வியர்வை இருக்கும்.
* வறண்ட கண், வாய் காணப்படும்.
* மலச்சிக்கல் ஏற்படும்.
* சிறுநீரக பை சரிவர இயங்காது.
* உடல் உறவில் பிரச்சனை இருக்கும்.

மோட்டார் நரம்பு இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் பொழுது.
* உடல் சோர்வு ஏற்படும்.
* தசை தேய்மானம் காணப்படும்.
* தசை துடிப்பு இருக்கும்.
* பக்கவாதம் ஏற்படும்.

சென்சரி அதாவது உணர்ச்சி நரம்பு பாதிப்பு ஏற்படும் பொழுது..
* வலி இருக்கும்.
* மதமதப்பு இருக்கும்.
* குறுகுறுப்பு, குத்தல் இருக்கும்.
* எரிச்சல் இருக்கும்.
* குளிர், சூடு தாங்காமை இருக்கும். சிலருக்கு இரண்டு மூன்று தொந்தரவுகள் கூட அறிகுறிகளாகத் தெரியலாம்.

பொதுவாக 100 வகையான நரம்பு பாதிப்புகள் உள்ளன. வயது கூடும் பொழுது புற நரம்பு பாதிப்பு கூடும். நாலில் ஒரு சர்க்கரை நோயாளிக்கு இப்பாதிப்பு எளிதில் ஏற்படும். புற்றுநோய் பாதிப்பு நரம்புகளை பாதிக்கலாம்.
விபத்துக்கள், சில மருந்துகள் போன்றவை கூட நரம்புகளை பாதிக்கலாம். சத்து குறைபாடு, தொற்றுநோய் போன்றவைகளும் நரம்பு பாதிப்பினை ஏற்படுத்தலாம். அதிக நபர்களுக்கு இதனை முழுமையாக சரி செய்ய முடிகின்றது. சின்ன அறிகுறி இருந்தாலும், உடனடி பெறும் மருத்துவ ஆலோசனை நல்ல நிவாரணம் அளிக்கும். அடிப்படை காரணம் அறிந்து சிகிச்சை செய்யவேண்டும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவினை சரி செய்யவேண்டும்.
* சத்து குறைபாடுகளை சரி செய்யவேண்டும்.
* பாதிப்பு தரும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி நீக்குதல் வேண்டும்.
* அடிபட்ட இடத்தில் தகுந்த சிகிச்சை தர வேண்டும்
* மற்ற பாதிப்புகளுக்கு உரிய மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் சிலருக்கு திடீரென கால், கை சற்று சோர்வாய் இருப்பது போன்று இருக்கும். நரம்பு முறையாய் வேலை செய்யாததால் ஏற்படும் பாதிப்பு இது. அதிக கவலை, டென்ஷன் இருப்பவர்களுக்கு அதிகமாக இவ்வகை பாதிப்பு ஏற்படுகின்றது.
அடிபட்ட பிறகு, முதுகுவலி, கழுத்துவலி இருக்கும்போது இத்தகு பாதிப்பு ஏற்படுகின்றது. அதிக சோர்வு, அதிக வேலை செய்து ஓய்ந்துப் போகுதல் போன்றவை இத்தகு பிரச்சினைகளை உருவாக்கும். இதற்கு உடற்பயிற்சியும், பிஸியோதெரபி எனப்படும் குறிப்பிட்ட பயிற்சியும் நல்ல பலனை அளிக்கும்.
சில சமயம் மனநல நிபுணர் ஆலோசனையும் தேவையே. (அதிகம் பாதிப்பினை பற்றியே நினைக்காது இருப்பதும் முன்னேற்றத்தினைத் தரும்) சிலருக்கு வளைந்த விரல்கள் இருக்கலாம். மணிகட்டு சுழன்று கை கீழ் நோக்கி பிரண்டு இருக்கலாம். அவரவர் உடலுக்கு ஒரு வரைப்படம் உண்டு. சில காரணங்களால் மூளை இந்த மடிந்த விரல்களையும், பிசகிய கையினையும் சரியான வரைபடமாக எடுத்துக் கொள்கின்றது.
மூளையை மீண்டும் சரியான வரைபடத்திற்கு மாற்றுவதே பயிற்சி ஆகின்றது அல்லது தொடர்ந்து அப்படியே இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதி நலிந்து செயலிழக்கின்றது.

* அடிக்கடி உட்கார்ந்து, எழுந்து, நடந்து பயிற்சி கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
* மருத்துவ ஆலோசனை மிக அவசியம். திடீரென ஒருவர் உடல் உதறி அப்படியே நினைவற்று விழுந்து விடுவார். சற்று கூடுதல் நேரம் அவ்வாறே இருப்பார். பிறகு எழுந்து விடுவார். இதன் காரணம், நரம்பின் இயக்கம் சிறிதுநேரம் முறையற இயங்காததால் ஏற்படும் பாதிப்பு ஆகின்றது. மருத்துவ சிகிச்சையில் இன்று இப்பாதிப்பிற்கு நவீன மருந்துகள் உள்ளன.

* சோபாவிலோ, படுக்கையிலோ ஓய்வில் இருக்கும் பொழுது பலருக்கு இது ஏற்படுவதுண்டு.
* நீண்ட நேர பாதிப்பு இருந்தாலோ
* தலை, கை, கால்கள் முறையற்று நடுங்குதல் இருந்தாலோ.
* வாய் விட்டு திடீரென அதிக மூச்சு விடுவது போன்று கண்டிப்பாய் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பொதுவில் பலமின்மை என்பதனை அதிக சோர்வுடன் இருந்தாலும் வழக்கில் கூறுவர். பலமின்மை என்பது சோர்வுடன் இருந்தாலும், ஒரு சாதாரண பொருளை (பால் டம்ளர்) தூக்க முடியாமல் இருப்பதோ, நகர்த்த முடியாமல் இருப்பதோ ஆகும். (உ-ம்) ஒருவரது வலது கால் பலமிழந்து இருக்கின்றது என்றால் அவரது வலது பக்க தண்டு வடமோ அல்லது இடது பக்க மூளையோ பாதிப்படைந்து இருக்கக்கூடும். இதனை செயல்பாட்டு பலவீனம் என்று கூறுவர்.

தலையில் அடிபட்டால்

சாதாரணமாக தலையில் இடித்துக் கொள்வதில் இருந்து, ரோட்டில் ஏற்படும் விபத்து வரை என பல காரணங்களால் தலையில் அடிபடக் கூடும். மண்டையில் சற்று அமுங்கினால் போல் இருந்தாலோ, மண்டை ஓட்டில் லேசாக விரிசல் தெரிந்தாலோ பாதிப்பு அதிகம் என்றே கொள்ள வேண்டும்.

இந்த பாதிப்பு ஏற்பட்டவர்...
* நினைவின்றி விழுந்தாலோ
* சற்று சாதாரணமாக எழுந்து விட்டு பின் நினைவின்றி விழுந்தாலோ
* கண் கருவிழிகள் இருபுறமும் சமமாக அசையாமல் விட்டாலோ, கருவிழி விரிந்தாற் போல் தெரிந்தாலோ
* கை, கால் அசைவுகள் மிகவும் குறைந்தாலோ, அசைவின்றி இருந்தாலோ இவருக்கு மிக அவசர சிகிச்சை தேவை என்பதனை உணருங்கள். சிலர் அடிபட்ட சில மணி நேரங்கள், சில நாட்கள், சில வாரங்கள் கூட கழித்து

மயங்கி விழுவர். இவர்களுக்கு,
* தலைவலி
* குழம்பிய பேச்சு
* வாந்தி
* மூக்கிலும், காதிலும் இருந்து ரத்தக் கசிவோ அல்லது திரவ கசிவோ இருக்கும்.

ஆகவே தலையில் அடிபட்டு ஒன்றுமில்லை என்றாலும், மருத்துவர்கள் சில வாரங்கள் வரை அவரை கண்காணிப்பில் இருக்கச் சொல்வர். மண்டையில் அடிபட்டு ரத்தப்போக்கு சற்று அதிகமாக தெரிந்தால் மிகவும் அதிர்ச்சி கொள்ள வேண்டாம். முகம், தலை இவற்றுக்கு ரத்த ஓட்டம் அதிகம் என்பதால், சிறு காயம் கூட அதிக ரத்தப்போக்கினைத் தரும்.

இருப்பினும், காயம் சிறியதா, பெரியதா என்பதை மருத்துவரே முடிவு செய்யவேண்டும். இம்மாதிரி அடிபடும் ஒருவருக்கு சுத்தமான கட்டை விரல் கொண்டு லேசாக அந்த இடத்தை அழுத்த, சிறிய காயங்கள் கட்டுப்படும். மருத்துவமனை செல்லும்வரை சுத்தமான பேண்டேஜ் துணி கொண்டு, காயம்பட்ட இடத்தில் லேசான அழுத்தம் கொடுக்கலாம்.

காயம் அடைந்தவரை உட்கார வைத்து, அவர் தலையையும், தோள்பட்டையையும் நாம் பின்னால் பிடித்துக் கொள்ளவேண்டும். மருத்துவர் மூலம் நரம்பு பிரச்சினைகளை அறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சைகள் பெறுங்கள். நலம் பெற்று வாழுங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------



சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள்:

இவை அனைத்து அதிக சுய இன்பத்தால் ஏற்படும் பிரச்சினைகள். தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும்.

1) இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும்.
2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும்.
3) ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும்.
4) ஆண்குறி வலுவிழந்து அதில் நிறைய நரம்புகள் தோன்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நரம்பு அதிகரிக்குதோ அந்த அளவு உங்கள் ஆண்குறி பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.
5) ஆண்குறி முன் போல விறைப்பு இல்லாமல் விறைப்பு குறையத் துவங்கும்.
6) கன்னம் ஒட்டி போகும்.
7) கண் குழி விழுந்து கருவளையம் உண்டாகும்.
8) உடல் எடை குறையும்.
9) உடலில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்டு கைகளில் நரம்பு புடைத்து வெளியே தெரிய ஆரம்பிக்கும்..
10) எப்போதுமே சோர்வாக இருக்கும்.
11) கை அடிக்க ஆரம்பித்து 10 அல்லது 20 நொடிகளில் விந்து வெளியேறிவிடும்.
12) உங்களால் ஒரு 15 நிமிடம் கூட வெறுமனே கவர்ச்சிப் படம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதற்குள் துடைக்க துணியை தேடுவீர்கள்.
13) ஆண்மைக் குறைவு உண்டாகும்.
14) பயம் நடுக்கம் படப்பிடிப்பு அதிகமாகி ஒரு புதிய மனிதரை சந்திக்க தயங்குவீர்கள்.
15) மலம் கழிக்க முக்கினால் கூட விந்து வெளியாக ஆரம்பிக்கும்.
16) ஸ்டாமினா குறைந்து மாடிப்படி ஏறினால் கூட மூச்சு வாங்கும்.
17) நியாபக மறதி ஏற்படும்.
18) பெண்களை பார்த்தாலே பயம் வரும்.
19) நான் ஆண் தானா? என்னால் ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியுமா என் சந்தேகம் தோன்றும்.
20) உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு உண்டாகும்.
21) மன அழுத்தம் அதிகமாகும்.
22) உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து லேசாக குளிர் அடித்தால் கூட உங்களுக்கு அதிகம் குளிரும்.
23) தும்மினால் கூட சிறுநீரும் விந்துவும் வெளியேறும்.
24) எப்போதும் எதற்காகவாது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
25) பெண்கள் மீது வெறுப்பு உண்டாகும்.
26) சிறுநீரில் விந்து கலந்து வெளியாக ஆரம்பிக்கும்.
27) கவர்ச்சி படம் பார்த்து ஆண்குறி விரைத்த மறு வினாடியே ஈரம் ஆகிவிடும்.
28) கை கால் மூட்டு இணைப்புகளில் வலி உண்டாகும்.
29) தசைப்பிடிப்பு உண்டாகும்.
30) எந்த காரியத்திலும் கவனம் செலுத்த முடியாது.
31) கவர்ச்சிப் படம் பார்க்கும் போது ஆண்குறி கொஞ்ச நேரம் விறைத்து இருக்கும் போது ஆண்குறிக்கு கீழே உள்ள விதைப்பை வலிக்க ஆரம்பிக்கும்.
32) யாரிடமும் பேச பிடிக்காமல் தனியாகவே இருக்க விரும்புவீர்கள்.
33) சிறுநீர் மண்டலம் பாதிக்கப்பட்டு சரியாக சிறுநீர் கழிக்க முடியாது.
34) காது கேட்கும் திறனும் கண் பார்வை திறனும் மங்க ஆரம்பிக்கும்.
35) உங்கள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து உங்களால் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாத சூழ்நிலை உண்டாகும்.
36) அதிக சுய இன்பத்தால் முழுமையாக விறைப்பு தன்மை குறைந்து ஒரு பெண்ணை வாழ்நாளில் எப்போதுமே திருப்திபடுத்த முடியாமல் போகும்.
இவை அனைத்து அதிக சுய இன்பத்தால் ஏற்படும் பிரச்சினைகள். தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும். அதனால் வாரம் ஒரு முறை மட்டும் சுய இன்பம் செய்யுங்கள். அது தான் உங்கள் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது.
சுய இன்பம் உடலின் மொத்த நரப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. நரம்பு மண்டலம் ஒன்றுதான் பாதிக்கப்பட்டால் சரி செய்ய இயலாத ஒன்று என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் நரம்பு மண்டலத்தை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.
மேலும் சிலர் ஆண்மைக் குறைவை சரி செய்ய அதிக பணம் செலவு செய்து சித்த மருத்துவதை நாடுவர். அவை அனைத்தும் ஏமாற்று வேலையே. ஆண்மைக் குறைவை சரி செய்ய ஒரே மருந்து காலம் தான். ஒரு ஆறு மாதம் சுய இன்பம் செய்யாமல் இருந்து பாருங்கள் உங்கள் உடல் மற்றும் ஆண்குறியில் நல்ல மாற்றம் தெரியும். இதை தான் சித்த மருந்து சாப்பிட்டு சுய இன்பம் செய்யாமல் இருக்கும் போது உங்கள் உடல் மற்றும் ஆண்குறியில் நல்ல மாற்றம் தெரியும். அதை நீங்கள் மருந்து தான் செய்தது என்று நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் ஆறு மாதம் சுய இன்பம் செய்யாமல் இருந்தாலே உங்கள் ஆண்மைக் குறைவு சரியாகிவிடும்.
அதனால் வாரம் ஒருமுறை மட்டும் சுய இன்பம் செய்து உங்கள் உடல் நலத்தையும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிப்பை நீங்கள் அனைவரும் share பண்ணுங்கள். அப்போது தான் அதிக இளைஞர்கள் பார்த்து பயனடைவார்கள். நீங்களும் இதைப் பார்க்க பார்க்க உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாடு வரும். இவ்வளவு பிரச்சனை உள்ள சுய இன்பம் நமக்கு தேவையா என எண்ணம் தோன்றும்

cooking - இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்...!!



நாம் சமையல் செய்யும் பொழுது நமக்கு தெரிந்தவற்றை மட்டும்தான் செய்வோம். ஆனால் நமக்கு தெரியாத பல சுலபமான வழிமுறைகள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை நாம் தெரிந்து கொண்டாலே நமது வேலை பாதி சுலபமாகிவிடும்.

இதில் உங்களுக்குத் தெரிந்ததும் இருக்கலாம் தெரியாததும் இருக்கலாம். தெரிந்ததை விட்டு விட்டு தெரியாததை எடுத்துக் கொள்ளவும்.

குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.

பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.
மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.

பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால் நல்ல வாசனையுடன் இருக்கும்.

Topest womans in INDIA - இந்தியாவின் முதல் பெண்மணிகள் பற்றிய தகவல்கள் சில ..... !






★ இந்தியாவின் முதல் பெண் பிரதமர் ·• இந்திரா காந்தி (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி ·• பிரதீபா பாடேல்.(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் ·• சுசேதா கிருபளானி(அவர்கள்) (உத்திரபிரதேசம்).

★ இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் ·• சரோஜினி நாயுடு(அவர்கள்) (உத்திரபிரதேசம்).

★ இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி ·• பாத்திமா பீவி. (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் மாநில தலைமை செயலாளர் ·• லட்சுமி பிரானேஷ். (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதர் ·• விஜயலட்சுமி பண்டிட் (அவர்கள்) (ரஷ்யா 1947-49).

★ இந்தியாவின் முதல் பெண் காபினெட் அமைச்சர் ·• ராஜ்குமாரி அம்ரித்கௌர்(அவர்கள்) (சுகாதாரத்துறை 1957 வரை).

★ இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் ·• கார்நிலியா சொராப்ஜி (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ·• ஆனந்தபாய்
ஜோஷி(அவர்கள்) (அமெரிக்காவில் பட்டம் பெற்றார்).

★ இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் ·• லலிதா (அவர்கள்) (சிவில்
1950).

★ இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ·• அன்னா
ஜார்ஜ் மல்கோத்ரா (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ·• கிரண்பேடி. (அவர்கள்)

★ உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் ·• திருமதி ருக்மணி லெட்சுமிபதி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் ·• செல்வி பச்சேந்திரிபால்(அவர்கள்)

★ இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் ·• திருமதி அன்னிபெசன்ட் அம்மையார்(அவர்கள்)

★ இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி ·• திருமதி கேப்டன் லெட்சுமி ஷேகல்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’ ·• அருந்ததி ராய்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் நீதிபதி ·• அன்னா சாண்டி. (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் பத்திரிக்கையாளர் ·•
சுவர்ணகுமாரி தேவி(அவர்கள்) (ராம்பூதோதானி பத்திரிக்கை).

★ இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் ·• திருமதி கர்ணம் மல்லேஸ்வரி (அவர்கள்) (ஆந்திரா)

★ இந்தியாவின் முதல் பெண் விமானி ·• திருமதி சுஷ்மா (அவர்கள்) (ஆந்திரா)

★ இந்தியாவின் முதல் பெண் அதிக நேரம் விமானம் ஒட்டி சாதனை செய்தவர் ·• திருமதி துர்பா பானர்ஜி (அவர்கள்) (18,500 மணி நேரம்) உலகின் முதல் பெண் விமானியும் இவர் தான்.

★ இந்தியாவின் முதல் பெண் மேயர் ·• தாரா செரியன். (அவர்கள்) (சென்னை )

★ இந்தியாவின் முதல் பெண் துணை வேந்தர் ·• ஹன்சா
மேத்தா (அவர்கள்) (பரோடா பல்கலைகழகம்).

★ பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் ·• திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி(அவர்கள்)

★ இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் பெற்ற பெண்மணி ·• திருமதி கே.பி. சுந்தராம்பாள்(அவர்கள்)

★ ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை ·• செல்வி ஆர்த்தி சாஹா(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் தலமை நீதிபதி ·• திருமதி லீலா சேத்(அவர்கள்)

★ இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி ·• திருமதி பீம்லா தேவி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ·• வசந்த
குமாரி (தமிழ்நாடு). (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் விண்வெளிப் பெண்மணி ·•
கல்பனா சாவ்லா. (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் ·•
சுரோகா யாதவ். (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் டி.ஜி.பி. (DGP) ·•
கஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா. (அவர்கள்)

★ இந்தியாவின் முதல்
பெண் ராணுவ கமாண்டன்ட் ·• புனிதா அரோரா.(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ஏர்ஃசிப் மார்ஷல் ·• பத்மாவதி பந்தோபாத்யாயா (அவர்கள்)

★ முதல் பெண் சபாநாயக்கர் ·• மீராகுமாரி (அவர்கள்)

★ சட்டம் இயற்றிய முதல் பெண் ·• முத்துலட்சுமி ரெட்டி (அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் செஸ் க்ராண்ட் மாஸ்டர் ·• செல்வி விஜயலெட்சுமி (அவர்கள்) (சென்னை)

★ இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு ·• திருமதி மரகதவள்ளி டேவிட்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் ஞானபீடம் விருது பெற்றவர் ·• திருமதி ஆஷா புர்னாதேவி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி ·• செல்வி ரஸியா பேகம்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் ·• திருமதி அனிஸா மிர்சா (அவர்கள்) (ஆமதாபாத்-குஜராத்)

★ இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி ·• திருமதி உஜ்வாலா பாட்டீல்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் ·• செல்வி காதம்பினி கங்குலி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் ·• திருமதி கன்வால் வர்மா(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் கிரிகட் நட்வர் ·• திருமதி அஞ்சலி ராஜகோபால் (அவர்கள்) (தமிழ் நாடு)

★ இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் ·• திருமதி ஷீலாடோவர்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் ·• திருமதி ஹோமய் வ்யாரவல்லா(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் சிற்பி ·• திருமதி மணி நாராயணி(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் ·• திருமதி ரஜினி பண்டிட்(அவர்கள்)

★ ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி ·• திருமதி ராணி வேலு நாச்சியார் (அவர்கள்) (மதுரை கோச்சடைப் போர்)

★ இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மவிபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் ·• திருமதி துர்க்கா பாய் தேஷ்முக்(அவர்கள்)

★ இந்தியாவின் முதல் பெண் மேயர் (டெல்லி) ·• திருமதி அருணா ஆசஃப் அலி.(அவர்கள்)