Thursday, December 25, 2014

தமிழில் படித்தவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியுமா ?



 
இனி எவராவது தமிழைப் படித்ததால் வாழ்க்கை முன்னேறாது என்று சொல்லாதீர்கள்...

என் பெயர் வே.நவேந்திரன்

இன்று நான் நகராட்சி ஆணையராக பணிபுரிய நான் தமிழை படித்ததே காரணம் ...

மேல்நிலை கல்வி
ஆண்கள் அரசு பள்ளி மாரியம்மன் கோவில்

இளநிலை மற்றும் முதுநிலை வேதியியல் பயின்றது
மன்னர் சரபோசி அரசு கல்லூரி தஞ்சை ...

1ஆம் வகுப்பில் இருந்து இளநிலை பட்ட படிப்பு வரை தமிழ் வழியே பயின்றேன்..

2007 ஆம் வருடத்தில் இருந்து தமிழ் நாடு அரசு தேர்வாணைய தேர்வுக்கு படித்து வந்தேன்...

தொகுதி2 தேர்வில்
சிறப்பாக எழுதினேன்
நான் நேசித்த தமிழில் 98/100 சரியாக விடையளித்தேன்...

22.07.2012, 23.07.2012 அன்று நேர்காணல் நடந்தது ...

கேட்ட கேள்விகளில் பாதிக்கும் மேல் தமிழைப் பற்றி .....
விடுவேனா......?

கேள்விகளில் சில ...

கேள்வி :
பாரதிதாசனை பற்றியும் அவரது பாடல் ஒன்றும் சொல்லவும்

நான் :-
கொடை வாளினை எடடா
மிகக் கொடியோர் செயல் அறவே
உதவாது இனி ஒரு தாமதம் உடனே விழி தமிழா....

என்ற பாரதிதாசன் பாடலை சொன்னேன்

கேள்வி :-
ஏன் இந்த பாடல் சொல்கிறீர்கள்?

நான் :-
இன்று தமிழர்கள் சாதியால் மதத்தால் பிரிந்து உள்ளார்கள்
நாம் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றேன்

கேள்வி :-
சிரிக்கும் சித்திர சோலைகளே...
என்ற பாடலை எழுதியவர் யார் ?

நான்:-
சற்று யோசனைக்கு பின்
பாரதிதாசன் ...

இன்ன பிற கேள்விகளுடன் நேர்காணல் முடிந்தது ...

01.08.2012 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது...
படித்த தமிழ் கரை சேர்த்தது

3 மதிப்பெண்ணில் 7.5 லட்சம் பேர் எழுதிய தேர்வில் முதல் இடத்தை இழந்தேன்...

298.5/330 மதிப்பெண்
பெற்று இரண்டாவது இடமே பெற முடிந்தது

15.10.2012
அன்று தமிழக முன்னாள் டி.ஜி.பி திரு.நட்ராஜ் இ.கா.ப அவர்கள் கையினால் நகராட்சி ஆணையராக பணி ஆணை பெற்று 11.02.2013 முதல் மக்கள் பணியில் தொடர்கிறேன்..

இனி எவராவது தமிழைப் படித்ததால் வாழ்க்கை முன்னேறாது என்று சொல்லாதீர்கள்...

முன்னேறுவது
உங்கள்
முயற்சியைப் பொறுத்ததே.....

@ நவேந்திரன்
செயங்கொண்டம் நகராட்சி ஆணையர்.

No comments:

Post a Comment