Tuesday, December 2, 2014

ஒரு கல்வி நிறுவனம், நன்கொடை கேட்டால், நாம் செய்ய வேண்டியது என்ன?





AICTE இணையதளத்தில், குறை தீர்க்கும் படிவம் உள்ளது. அதன் மூலமாக புகார் தெரிவிக்கலாம் அல்லது AICTE -க்கு, நேரடியாக கடிதமும் எழுதலாம். நெருக்கடி நிலையில், AICTE விரைவான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதன் தரப்பில் கூறப்படுகிறது. பல மாணவர்கள், இந்த சிக்கலை, சேர்க்கையின்போது எதிர்கொள்கின்றனர்.


AICTE -ஐ அணுகும் முன்னதாக, கல்வி நிறுவனத்திலுள்ள Internal Grievance Redressal Mechanism -ஐ அணுகலாம். இந்த இடத்தில் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால், பல்கலையில் அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியை சந்தித்து முறையிடலாம். அவர், உங்கள் குறைகளை கனிவுடன் கேட்பார். இந்த அதிகாரி பற்றிய தகவல், AICTE இணையதளத்தில் உள்ளன. அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், அதேசமயம், AICTE- க்கு எந்த நேரத்திலும் புகார் தெரிவிக்கலாம். ஏறக்குறைய, 60% தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனங்கள், Internal Grievance Redressal Mechanism -ஐ கொண்டுள்ளன.

தேங்க்ஸ் – தின மலர் கல்வி மலர்