சாந்தி தேவி
சாந்தி தேவி
1930-களில், டெல்லியை சேர்ந்த 4 வயதான சாந்தி தேவி என்ற குழந்தை, தான்
இதற்கு முன் மதுராவில் வாழ்ந்ததாக தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளது. தான் 3
குழந்தைகளுக்கு தாய் என்பதையும் ஒரு பிரசவத்தின் போது இறந்து விட்டதாகவும்
கூறியுள்ளது. இதற்கு முன் தன் பெயர் லுட்கி எனவும் கூறியுள்ளது. இதனை கேட்ட
அவளின் பெற்றோர்கள் விசாரணையில் இறங்கிய போது, மதுராவில் லுட்கி என்ற பெண்
சமீபத்தில் இறந்தது தெரிய வந்தது. சாந்தி தேவியை அந்த கிராமத்திற்கு
அழைத்து சென்ற போது, அவள் உள்ளூர் மொழியில் சரளமாக பேச தொடங்கினால். தன்
பூர்வ ஜென்ம கணவன் மற்றும் குழந்தைகளை அடையாளம் கண்டால். இதனை கேள்விப்பட்ட
மகாத்மா காந்தி, இதனை விசாரிக்கும் படி ஒரு குழு ஒன்றை நியமித்தார். அதன்
படி 1936 ஆம் ஆண்டு ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் படி அப்பெண்
லுட்கியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து 24 சரியான தகவல்களை
அளித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------
ப்ரஹ்லாத் ஜானி
மாதாஜி என்றழைக்கப்படும் ப்ரஹ்லாத் ஜானி, 1940 ஆம் ஆண்டு முதல் தண்ணீர்
மற்றும் உணவருந்தாமல் வாழும் ஒரு துறவியாகும். தனக்குள் கடவுள் இருப்பதாக
அவர் கூறுகிறார். அவரை வைத்து இரு முறை சோதனை ஆய்வுகள் நடைப்பெற்றுள்ளது.
2010-ல் நடந்த அந்த இரண்டாம் ஆய்வில், தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு அவர் 24
மணிநேர வீடியோ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த 15 நாட்களுக்கு அவரின்
ஆரோக்கியத்தை 35 விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். ஆனாலும் அவர் தண்ணீர்
மற்றும் உணவருந்தியதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இந்த 15 நாட்கள்
முடியும் வரை அவருடைய உடலில் பசி அல்லது நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும்
பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. யோகா உடற்பயிற்சிகளால் அவரின் உடல்
இப்படி மாறியிருக்கலாம் என ஒரு காரணம் கூறப்படுகிறது. இரண்டு வாரம்
உண்ணாமல் இருந்த பிறகு அவர் 40 வயது மனிதனை விட ஆரோக்கியமாக இருந்ததாக
மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------
ஓம் பன்னா
ஓம் பன்னா என்பது ஜோத்பூரில் உள்ள பாளி மாநகராட்சியில் உள்ள மோட்டார்
பைக் கோவிலாகும். பாதுகாப்பான பயணத்திற்கு இங்குள்ள 350 சிசி ராயல்
என்ஃபீல்ட் புல்லட்டை தான் கடவுளாக அனைவரும் வழிபடுகின்றனர். 1988 ஆம்
ஆண்டில் ஓம் பன்னா தன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு
மரத்தில் மோதி அங்கேயே இறந்துள்ளார். மறுநாள் காலை அந்த பைக்கை காவலர்கள்
அருகிலுள்ள காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் மறுநாள் அந்த
பைக் விபத்து நடந்த பகுதியில் இருந்துள்ளது. அதனை மீண்டும் காவல்
நிலையத்திற்கு கொண்டு வந்த காவலாளிகள் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து
விட்டு, அதனை சங்கிலியால் கட்டி போட்டு வைத்துள்ளனர். ஆனால் மீண்டும் அது
மாயமாகி, விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளது. இது பல தடவை
நடந்திருக்கிறது. அதிசயமாக பார்க்கப்பட்ட இச்சம்பவத்தால் அனைவரும் அந்த
பைக்கை வணங்க தொடங்கினர். அன்றாடம் அந்த பாதையை கடப்பவர்கள் அந்த
பைக்கையும் ஓம் பன்னாவையும் வணங்கி விட்டு தான் செல்கின்றனர். சில
ஓட்டுனர்கள் மதுபானத்தையும் அதற்கு படைக்கின்றனர்.
=======================================================================
=======================================================================
ரூப்குந்த் ஏரி - உத்தர்கண்ட்
உள்ளூர்வாசிகளால் மர்ம ஏரி என அழைக்கப்படும் ரூப்குந்த் உறைபனி ஏரி
உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ளது. யாருமே வசிக்காத இந்த பகுதி, இமயமலையின்
மீது 5,029 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 2 மீட்டர் ஆழத்தை கொண்டுள்ள
இந்த ஏரியின் முனையில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளை காணலாம்.
ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இதனைப் பற்றி பல கருத்துக்கள்
கூறப்பட்டு வருகிறது. அதன் படி, 9-ஆம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே இவை
இங்கு கிடக்கிறது. இந்த எலும்புகளின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் ஆராய்ந்த
போது அது 850 ஆம் வருடத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
ஆனால் எதுவும் உறுதியாக தெரியவில்லை.
No comments:
Post a Comment