Thursday, December 11, 2014

கேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விபரீத விளைவுகள் – அதிர வைக்கும் உண்மைகள்

 ‘‘7, 8 ஆண்டுகளுக்கு முன்பு கிரெடிட் கார்டு வைத்திருக் காதவர்களே இல்லை. இன் றைக்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. காரணம், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் தேவை இல்லாமல்
அதிக செலவு செய்து கையைக் கடித்துக்கொண்டது தான். இந்தக் கசப்பான அனுப வத்துக்குப்பின் பலரும் கிரெடிட் கார்டை தூக்கி எறிந்து விட்டனர். ஆனால், இப்படி செய்வது கூட வே கூடாது. அதை முறைப்படி கேன்சல் செய்ய வேண்டும். அப் படி செய்யவில்லை எனில் எதிர் காலத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி யிருக்கும்’’ என்கிறார்கள் அனுபவ சாலி கள்.
கிரெடிட் கார்டினை முறையாக கே ன்சல் செய்யாமல் விட்டால் ஏற்படு ம் விளைவுகள் குறித்து திஷா நிதி ஆலோசனை மைய த்தின் முதன்மை ஆலோசகர் எஸ். கோபால கிருஷ்ண னிடம் பேசினோம். அவ ர் கொடுத்த விரிவான விளக்கம் இங்கே…

“நான் கிரெடிட் கார்டு ப யன்படுத்துவதை நிறு த்தி பல மாதங்கள் ஆ கிறது. ஆனால், வங்கி யில் இருந்து பணம் செலுத்தச் சொல்லி தபால் மட்டும் வந்துகொண்டே இருக்கிறது என்று பலபேர் எங்களது ஆலோசனை மையத்தை அணுகி சொல்கிறார்கள். இவர்கள் இப்படி ஒரு பிரச்னையைச் சந்திக்கக் கா ரணம், கிரெடிட் கார்டுகளை முறை யாக கேன்சல் செய்யாமல் விட்டதுதான்.
கேன்சல் செய்யாததால் ஏற்பட்ட விபரீதம்!

 ஒருநாள் கணேசன் என்ப வர் எங்கள் மையத்தை தேடி வந்தார். இவர் வேலை செய்த நிறுவனம், வே லை விஷயமாக இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி இருக்கிறது. ஓராண்டு அங்கேயே தங்கி பணிபுரிய வே ண்டும் என்பதால், இங்கே பயன்படுத்திவந்த தனியார் வ ங்கியின் கிரெடிட் கார்டு ஒன் றை அலட்சியமாகத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட் டுவிட்டுப்போய்விட்டார். அவ ர் தூக்கியெறிந்த கிரெடிட் கார்டை யாரோ ஒருவர் பய ன் படுத்த ஆரம்பித்திருக்கி றார். கணேசன் அமெரிக்கா வில் இருந்ததால், இந்த விஷயம் அவருக்கு தெரியவே இல்லை.

ஓராண்டு கழித்து நாடு திரும்பியபோது தான் அவர் கார்டினை யாரோ ப யன்படுத்தியதும், அதற்கு அவர் அசலும் வட்டியுமாக பல ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில்தான் மிகுந்த மன உளைச் சலுடன் எங்களைச் சந்தித்தார் அவர்.

கிரெடிட் கார்டை முறையாக கேன்சல் செய்யாமல் விட்ட தால் ஏற்பட்ட வினை இது என்று அவருக்குப் புரியவைத் தோம். அந்தக் கடனை சுமூக மாக அடைக்க வங்கியோடு பேசவும், அந்த கார்டினை முறைப்படி கேன்சல் செய்ய வும் நாங்கள் அவருக்கு உதவினோம்.

நட்பால் வந்த நஷ்டம்!
 
ஸ்ரீதரன் என்பவர் தான் பய ன்படுத்தி வந்த கிரெடிட் கார்டை கேன்சல் செய்யாம ல், தனது நண்பரிடம் தந்தி ருக்கிறார். அதை அவர் தன து வண்டியின் சாவிக்குக் கீ-செயினாகப் பயன்படுத்தி வ ந்திருக்கிறார். ஒருசமயம் வ ண்டியின் சாவியுடன், கிரெடிட் கார்டு தொலைந்து போக வண் டிக்கு புதிய சாவியை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கி றார். தரனும் தன் நண்பருக்குத் தந்த கிரெடிட் கார்டினை சுத்தமாக மறந்து விட்டார்.
சில நாட்களுக்குப் பிறகு தனது கிரெடிட் கார்டை யாரோ பயன்படுத்தி இருப்பதும், அதிலிருந்து குறிப்பிட்ட தொகை க்கு ஷாப்பிங் செய்திருப்பதும் ஸ்ரீதரனின் மொபைலுக்கு குறுஞ் செய்தியாக வந்தது. அதன்பிறகே தன் தவறை உணர்ந்தவர் நண் பருடன் வங்கிக்குச் சென்று நடந் ததை விசாரித்துத் தெரிந்து கொ ண்டிருக்கிறார். வேறு வழியில்லாததால், வங்கிக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தி, அதை கே ன்சல் செய்துவிட்டு, வீட்டு க்குத் திரும்பியிருக்கிறார்.

எப்படி கேன்சல் செய்வது?

 கிரெடிட் கார்டினை இனி பயன்படுத்த வேண்டாம் என்று நினைப்பவர்கள் அஜாக்கிரதையாக அதை விட் டுவைக்காமல், கேன்சல் செ ய்துவிடுவதே நல்லது. இத ற்கு, கிரெடிட் கார்டு வழங் கிய வங்கியை அணுகி தனது முடிவை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அதனு டன் தான் அதுவரை பயன்படு த்தி வந்த கிரெடிட் கார்டை இரண்டு துண்டாக உடைத் து அவர்களிடமே கொடுத்துவிட்டு, அதற்குண்டான உறுதிக் கடிதத்தை வாங்கிக்கொள்ள வேண்டும்.

அல்லது கிரெடிட் கார்டு ரத்து செய்யும் விவரத்தை கடிதம் மூலமாகவோ போன்மூலமா கவோ தெரிவித்து விட்டு, துண் டிக்கப்பட்ட கிரெடிட் கார்டை கூரியர்மூலம் வங்கிக்கு அணு ப்பலாம். எனினும், இப்ப டி செய்வதைவிட வங்கிக்கு நேரடியாகச் சென்று கி ரெடி ட் கார்டினை கேன்சல் செய் வதே சிறந்தது’’ என்றார் கோபாலகிருஷ்ணன்.
கிரெடிட் கார்டு வேண்டாம் என்கிறவர்கள் முறையாக அதை கேன்சல் செய்துவிடுவதே நல்லது!