இரண்டு நாடுகளின் எல்லைகளைப் பிரிக்க, கோடுகள் இருக்கும். பகை நாடுகளின் எல்லைகளில் எப்போதுமே பிரச்னைதான். அதனால், எல்லைப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள். சமீபத்தில், விண்வெளிவீரர்கள் பூமியைப் படம் பிடித்து, அமெரிக்காவில் உள்ள நாசா ஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.
புகைப் படங்களைப் பார்த்ததும் விஞ்ஞானிகளுக்கு அவற்றில் பளிச்சென்று நீளமான ஆரஞ்சு நிறக் கோடு ஒன்று தெரிந்தது. அது, 'என்ன கோடு' என்று பரிசீலித்துப் பார்த்தபோது, இந்தியா-பாகிஸ்தான் பார்டர் என்று தெரியவந்தது.
”
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல், ஆயுதங்கள், வெடிபொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோதப் பிரச்னைகள், காலம் காலமாக இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாகவே இருந்துவருகிறது.
அதனால், நம் நாட்டு எல்லையைப் பலப்படுத்தவே, மின்விளக்குகள் (floodlights) வரிசையாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன.

இதனால், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றால், சுலபமாகக் கண்டறிந்து தக்க பதிலடி கொடுக்க முடியும். எல்லையில் அமைந்துள்ள ஃபெட்லைட்டுகளின் வரிசை பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு இன்டர்நேஷனல் பார்டர் மற்றும் குஜராத்துடன் சேர்த்து, சுமார் 1,861 கிலோமீட்டர்கள் வரை உள்ளது.
2.043 கிலோமீட்டர்கள் வரை ஃபெட்லைட்டுகளை அமைக்க வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு. கடந்த அக்டோபர் 28-ம் தேதி இந்தப் புகைப்படத்தை நாசா தம் வெப்சைட்டில் வெளியிட்டது.
-என்.மல்லிகார்ஜுனா
-என்.மல்லிகார்ஜுனா