Tuesday, December 2, 2014

கலிபோர்னியாவில் உள்ள மரண பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே நகர்ந்து செல்வதால் மக்கள் அச்சம்!

மோஜாவே: கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு மரண பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே அசைந்து செல்வதை முதன்முறையாக 1948-ம் ஆண்டு   கண்டுபிடித்தனர். சாதாரண கற்கள் மட்டுமின்றி, 300 கிலோ எடையுள்ள கற்களும் அசைந்து செல்வது அங்கு சகஜமாக நடந்துள்ளது. இதனால் பேய் இதுபோல  கற்களை  நகர்த்துவதாக நம்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்க விஞ்ஞானிகள் அந்த பள்ளத்தாக்கில் ஆய்வுகளைமேற்கொண்டனர். சில விஞ்ஞானிகள்  சிறப்பு  அனுமதி பெற்று தாங்கள் கொண்டு சென்ற கற்களை பொருத்தி ஜி.பி.எஸ் மூலமாக ஆய்வு செய்தபோது கல் நகர்ந்து செல்வதையும், அதன் தூரத்தையும்  உறுதி  செய்து கொண்டனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இரவு நேரத்தில் பூமிக்கு அடியில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகவும், பகல் நேரத்தில் அதுவே உருகி தண்ணீராகவும்   பெருக்கெடுக்கிறது. மேலும், இதுவும் பாறை நகர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை ஆதாரப்பூர்வமாக எதுவும்   நிரூபிக்கபடவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

நன்றி
தினகரன்