Tuesday, December 23, 2014

BEER அருந்துவதால் ஏற்படும் 10 நன்மைகள்!


1. பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. பொதுவாக அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறது.

2. பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.  1982-1996 இந்த வருட இடை வெளிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர்அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.

3. பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது.எனவே இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.

 4. பீரில் நிறைய நார் சத்து உள்ளது ( Fiber)  இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார்60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடதுவிடுமாம்.இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.

 5. பீர் வைட்டமின் செறிந்தது. பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன. மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12.

 6. பீர் மாரடைப்பை தடுக்கிறது.  2001 ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக்குறைவாம்.
காரணம், அளவான மது இரத்தத்தின் அடர்த்தியை குறைகிறது.இதனால் மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடை இன்றி நடக்கிறது.இதனால் மிக சிறிய மெல்லிய ரத்தக்குழாய்கள் உள்ள மூளையில் இரதம் கெட்டியாகாமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புக்கள்அதிகரிக்கிறது.

 7. பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது.  2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு -Mental impairment என்ற மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாத வர்களை விட 40%குறைவாக உள்ளது .

 8. பீர் நமது கல்லீரலுக்கு நல்லது.  மிதமான மது கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் வளர் சிதை மாற்றம்' காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன.

 9. பீர் தூக்கம் இன்மையை அகற்றும்.(Insomnia)  லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில்இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives)  செயல் படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது.

 10. பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது.  நியூ காஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைதடுக்கிது என்று தெரிவித்துள்ளார்.


-------------------------------------------------------------------------------------------------------------------

மது ஏன் குடிக்க கூடாது?

மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.

இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும்.

மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது. இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்கும்.ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும். இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும்.

குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக்கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும். மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ்டோக், இருதய கோளாறு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்முறை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமானது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.

No comments:

Post a Comment