Wednesday, December 3, 2014

BABY DANCING குழந்தையின் அசைவை ஒரு நூலை வைத்து சுயமாக கண்டறியலாம்!

‘‘வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு என்பது அம்மாக்களுக்கு ஆனந்தமான, அற்புதமான ஓர் உணர்வு. அந்த அசைவை அம்மா தினமும் உணர  வேண்டும். அசைவில்லாத நிலையை குழந்தை தனக்கு உள்ளே ஏதோ பிரச்னை இருப்பதற்கான அலாரமாக அம்மாவுக்கு உணர்த்துவதாக புரிந்து  கொள்ள வேண்டும்...’’ என்கிறார் பொது மருத்துவர் நிவேதிதா.
'' The stomach of the child's gait Moms scenic spot, a wonderful feeling. Every mother realize that the movement
குழந்தையின் அசைவுகளை எப்போது, எப்படிக் கண்டுபிடிப்பது, எப்போது எச்சரிக்கையாவது என அத்தனை தகவல்களையும் பற்றி விளக்கமாகப்  பேசுகிறார் அவர்.‘‘கர்ப்பத்தின் 28 வாரங்களில் இருந்தே இந்த அசைவுகளைக் கண்காணிக்க வேண்டும். கர்ப்பத்திலிருக்கிற குழந்தையின் அசைவுகளை  அந்தத் தாயால் மட்டுமே உணர முடியும். மருத்துவரால் கூடக் கணிக்க முடியாது. சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து ஒருக்களித்துப் படுத்துக்  கொள்ள வேண்டும். கையில் ஒரு நூலை வைத்துக் கொண்டு, அந்த ஒரு மணி நேரத்தில் அந்தப் பெண் உணர்கிற அசைவுகளை... 

உதாரணத்துக்கு குழந்தையின் உதை, சுழல்வது என ஒவ்வொன்றையும் கவனித்து, ஒவ்வொன்றுக்கும் அந்த நூலில் ஒரு முடிச்சு போட்டுக் கொண்டே  வர வேண்டும். தினமும் மூன்று வேளைகள், ஒரு மணி நேரத்தை இதற்காக ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு வேளையும், ஒரு மணி நேரத்தில் 15 அசைவுகளையாவது அந்தப் பெண் உணர வேண்டும். சில நேரங்களில் குழந்தை உள்ளே தூங்கிக் கொண்டிருந்தால் அசைவு இருக்காது. அப்போது  அந்தப் பெண் சிறிது நேரம் கழித்து இதைச் செய்யலாம். அல்லது குழந்தையைத் தட்டிக் கொடுத்து, விழிக்கச் செய்து பிறகு அசைவுகளைக்  கண்காணிக்கலாம். 

கர்ப்பத்தின் நாற்பதாவது வாரம் வரை நஞ்சுக் கொடியின் செயல்பாடு இருக்கும். பிறகு அது குறைந்தோ, நின்றோ போகலாம். ஹார்மோன் கோளாறு  உள்ள பெண்கள், ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தவர்கள், ஹை ரிஸ்க் எனப்படுகிற பிரச்னைக்குரிய கர்ப்பம் தாங்குகிறவர்கள் ஆகியோருக்கு இந்த  நஞ்சுக் கொடியின் செயல்பாடு நாற்பது வாரங்களுக்கு முன்பே நிற்கலாம், குறையலாம். இதன் விளைவாக குழந்தையின் அசைவுகளில் மந்தத் தன்மை  ஏற்படலாம்.

ஆக்சிஜன் குறைந்தாலோ, கொடி அழுத்தினாலோ, உள்ளே தண்ணீரின் அளவு குறைந்தாலோ, சர்க்கரை அல்லது ரத்த அழுத்தம் அதிகரித்தாலோ,  சிறுநீரகக் கோளாறு இருந்தாலோகூட குழந்தையின் அசைவு குறையலாம்.  குழந்தையின் வழக்கமான அசைவுகளில் மாற்றம் தெரிந்தால், தாய்  உடனடியாக எச்சரிக்கை அடைய வேண்டும். உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். அசைவுகள் இல்லாததை அலட்சியமாக விட்டால்,  குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து போகலாம்.

28 வாரங்களுக்குப் பிறகு குழந்தைக்கு ஏதேனும் பிரச்னை என்றாலும் அதை வெளியே எடுத்து, இன்குபேட்டரில் வைத்து, சிகிச்சைகள் கொடுத்துக்  காப்பாற்றி விடலாம். எனவே ‘ஃபீட்டல் அலாரம் சிக்னல்’ எனப்படுகிற இந்த எளிய டெஸ்ட்டை கர்ப்பிணிகள் தவறாமல் சுயமாகச் செய்து பார்க்க வேண்டியது அவசியமாகிறது...’’ என்கிறார் பொது மருத்துவர் நிவேதிதா.