வால்வோ காரில் போய் செத்தவனும் உண்டு; ஆம்னியில் போய் தப்பிச்சவனும் உண்டு!’ என்று ஒரு ஆட்டோமொபைல் சொல்வழக்கு உண்டு.
கார் பயணத்தில் விபத்து நடக்கும்போது, அதிர்ஷ்டம் நமக்கு 50% கைகொடுத்தாலும், 50% சதவிகிதம் நம்மைக் காப்பது, பாதுகாப்பு உபகரணங்கள்தான். ஏபிஎஸ், இபிடி, ஏர்பேக் என பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் ஏராளம். விபத்தின்போது ஏற்படும் பாதிப்பில், பயணி அடிபடாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான் காற்றுப் பைகள்.
ஆபத்து நேரங்களில் நம்மைக் காக்கும் காற்றுப் பை, எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? எத்தனை? எப்படிச் செயல்படுகின்றன? ஒரு சின்ன ஸ்க்ரோலிங் போலாமா?
காற்றுப் பைகளைக் கண்டுபிடித்தவர்கள்!
1941, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் டபிள்யூ ஹெட்ரிக் என்பவரும், ஜெர்மனியைச் சேர்ந்த இன்ஜினீயர் வால்ட்டர் லிண்டரெர் என்பவரும்தான் காற்றுப் பைகளை முதன்முதலாக வடிவமைத்தார்கள். காற்றுப் பைகளுக்கான காப்புரிமைக்கு இவர்கள் அப்ளை செய்தது 1951, அக்டோபர் 6. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1953, நவம்பர் 12-ம் தேதிதான் இவர்களுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது. ஆனாலும், ‘லிண்டரெரின் கண்டுபிடிப்பு சரியில்லை; வேகமான பாதிப்பின்போது இது செயல்பட்டால்தான் உயிர்களைக் காக்க முடியும். இந்தப் பைகள் அப்படி விரியவில்லை; எனவே, இது ப்ராக்டிக்கலாகச் சரிவராது’ என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதில் ஹெட்ரிக்கின் காப்புரிமை எக்ஸ்பயர் ஆனபோது, இந்தக் காற்றுப் பை விஷயத்தைக் கையிலெடுத்தது ஃபோர்டு நிறுவனம்.
ஆலன் கே. ப்ரீட் என்பவர், மெக்கானிக்கல் சென்ஸார்களைப் பயன்படுத்தி 30 மில்லி செகண்டுகளில் காற்றுப் பைகளை விரியவைத்தார். ஆனால், இதில் காற்றுக்குப் பதில் ‘சோடியம் அசைடு’ எனும் காற்றை உருவாக்கக்கூடிய மூலப்பொருளைப் பயன்படுத்தி இதைத் தயாரித்தார். க்ரைஸ்லர் நிறுவனம் இவருக்கு உதவி செய்தது. அதற்குப் பிறகு, 1970களில் அமெரிக்காவில் பிரபலம் ஆனது ஏர் பேக் தொழில்நுட்பம்.

காற்றுப் பைகள் எத்தனை வகை?
காரை ஓட்டுபவர், காரில் பயணிப்பவர்கள், காருக்குச் சம்பந்தமே இல்லாத பாதசாரி என அனைவரையும் காக்கும் பொருட்டு, மொத்தம் கார்களில் 6 வகையான காற்றுப் பைகள் உள்ளன.
முன் பக்கக் காற்றுப் பை
ஆரம்பத்தில் டிரைவருக்கு மட்டுமே காற்றுப் பை இருந்து வந்தது. ஆனால், போர்ஷே நிறுவனம்தான் தனது 944 டர்போ காரில், முதன்முதலில் 1987ல் முன் பக்கம் டூயல் ஏர்பேக் சிஸ்டத்தைக் கொண்டு வந்தது. ஸ்டீயரிங்கில் இருக்கும் காற்றுப் பை, கார் மோதிய வேகத்தில், டிரைவர் ஸ்டீயரிங்கில் போய் முட்டி விடாமல் காக்கக்கூடியது. டேஷ்போர்டின் இடதுபுறம் இருக்கும் காற்றுப் பை, கோ-டிரைவர், அதாவது முன் பக்கப் பயணிக்கானது.
சைடு ஏர்பேக்
திடீரென கார் இடதுபுறமாகவோ, வலதுபுறமாகவோ பக்கவாட்டில் சரிந்து விபத்து ஏற்படும்போது, இந்தக் காற்றுப் பைகள் விழித்துக்கொள்ளும். பெரும்பாலும், இது டிரைவர் சீட்டின் கீழ்ப்புறம் இருக்கும். காரின் பக்கவாட்டில் இடிபாடுகள் விழும்போது, இவை விரிந்து ஓட்டுநர் மற்றும் முன் பக்கப் பயணியின் உடல் பகுதிக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல் காக்கும்.

கர்டெய்ன் ஏர்பேக்
கர்டெய்ன் என்றால், திரைச் சீலை என்று அர்த்தம். பெயருக்கேற்ப இவை திரைபோல் விரியும் தன்மை கொண்டவை. மிட் பட்ஜெட் எஸ்யுவி-கள் மற்றும் காஸ்ட்லி எஸ்யுவி-களில் இந்த வகை கர்டெய்ன் காற்றுப் பைகள் நிச்சயம் இருக்கும். இது காரின் மேற்கூரையில் இருந்து புறப்பட்டு, முழுவதுமாக கவர் செய்துவிடும். எனவே, கார் உருண்டு புரளும்போது, பயணிகளுக்கு அடிபடாமல் காக்கும். இவை 45 சதவிகிதம் மூளைக் காயங்கள் மற்றும் தலையில் ஏற்படக்கூடிய பேரடிகளில் இருந்து நம்மைக் காக்கும்.
முழங்கால் காற்றுப் பை
கால்களைக் காக்கப் புறப்பட்ட ஆபத்பாந்தவன். 1996 மாடல் கியா மாடல் கார்களில்தான் முதன்முதலாக இந்தக் காற்றுப் பை பொருத்தப்பட்டது. 2000க்குப் பிறகு இது பரவலாகி விட்டது. இது, ஸ்டீயரிங் வீலுக்குக் கீழே இருந்து கிளம்பும். ஆனால், பக்கவாட்டுப் பயணியின் கால்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், காஸ்ட்லி கார்களைத்தான் வாங்க வேண்டும்.

ரியர் கர்டெய்ன் ஏர்பேக்
சைடு கர்டெய்ன் காற்றுப் பை போலவே, இது பின்னால் உள்ள பயணிகளின் சீட்டில் திரை போல விரிந்து, பின் மண்டைக்கு உத்தரவாதம் தருகிறது. 2008ல் டொயோட்டா ஐக்யூ காரில் முதன்முதலாக இது பயன்படுத்தப்பட்டது.
பெடெஸ்ட்ரியன் ஏர்பேக்
முதன் முதலாக வால்வோ வி40 காரில்தான் இது பொருத்தப்பட்டது. காரில் மோதுபவர்களைப் பாதுகாக்கவோ அல்லது காருக்கும் விபத்துக்கும் சம்பந்தமே இல்லாமல், காரில் வந்து விழுபவர்களுக்காகவோ தயாரிக்கப்பட்ட காற்றுப் பை. யூரோ குளோபல் என்கேப் அமைப்பின் ‘நடைபாதைவாசிகள் பாதுகாப்பு கார்’ விருதை வால்வோ வி40 கார் பெற்றது.
எனவே, லட்சங்களைவிட உயிர் பெரிது என்பதால், ஒரு லட்சம் அதிகமானாலும் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காரை வாங்குவதுதான் நல்லது. சேஃப்டி கார் வாங்கினால் மட்டும் போதாது; ‘சீட் பெல்ட் போட மறந்துட்டேன்’ என்பவர்களுக்கு இந்தக் கட்டுரையும் வேஸ்ட்; பாதுகாப்பும் க்ளோஸ்!
- தமிழ்