Wednesday, December 31, 2014

COMPUTER WATCHMAN - கணனிக்கு ஒரு கண்காணிப்பாளர்


நீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணனியை வேறு சிலர் உபயோகித்தால், அது தொடர்பான கண்காணிப்பு உங்களுக்கு அவசியமானது கணனியில் ஏற்படக்கூடிய குளறுபடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இத்தகைய கண்காணிப்பு அவசியம். இதற்கு "KEYLOGGER" என்ற வகை மென்பொருள் பொதுவாகபப் பயன்படுகிறது.
கணனி ஒன்றில் ஒருவர் என்னென்ன செயற்பாடுகளைச் செய்கிறாரோ, அனைத்தையும் இதன்மூலமாகப் பதிவுசெய்து நாம் அறிந்துகொள்ளலாம். கணனியைப் பயன்படுத்தும் தமது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு, பெற்றோர்கள் விரும்பினால்கூட இந்த மென்பொருளை உபயோகிக்கலாம்.
இந்த மென்பொருள் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கணனியின் செயற்பாடுகளை SCREEN SHOT எடுத்து வைத்திருக்ககும் அத்துடன், CHAT HISTORY, HISTORY, LOG FILE என்பனவற்றையும் சேமித்து வைத்திருக்கும்.
இதன் மேலும் சில சிறப்பம்சங்கள்.
* Record Each Keystrok :
கீபோர்ட்டில் அழுத்தப்படும் அத்தனை விசைகளையும் பதிவு செய்து வைக்கிறது.
* Instant Chat Messages Recording : Facebook, Google Talk, Yahoo Messenger போன்றவற்றில் Chat செய்பவற்றை அப்படியே பதிவு செய்கிறது.
Track Emails : குறித்த கணனியில் இருந்து அனுப்பப்படும், பெறப்படும் மின்னஞ்சல்களைக் கண்காணிக்கிறது.
* Monitor Websites :
கணனியில் இருந்து உலாவும் இணையத்தளங்களைக் கண்காணித்து, பதிவு செய்து வைக்கிறது.
* Review Every Downloaded File : தரவிறக்கும் ஒவ்வொரு கோப்புக்கள் பற்றிய தகவல்களையும் பதிவு செய்கிறது.
இந்த KEYLOGGER ்மென்பொரருளில் சிறப்பாக செயற்படுபவை என பரிந்துரைக்கப்பட்ட சில இலவச மென்பொருட்கள்.
- Actual Keylogger
- Revealer Keylogger
- Refog free Keylogger
- Home Keylogger
- Kidlogger
இந்த மென்பொரிள் கணனியில் மட்டுமல்லாது செல்பேசி, டிஜிட்டல் தொலைக்காட்சி போன்றவற்றிலும் பாவனைக்கு வந்துவிட்டது.
KIDLOGGER மென்பொருளை தரவிறக்க, கீழ் உள்ள சுட்டடியை பயன்படுத்தவும்
http://kidlogger.net/download.html 

No comments:

Post a Comment