Saturday, December 27, 2014

TV SCREEN and COMPUTER CONNECTION - தொலைக்காட்சி ஸ்கிரீனுடன் லாப்டாப்பை இணைப்பது எப்படி



யூ-ட்யூப் வீடியோக்களை பெரிய திரையில் பார்க்க வேண்டுமா, உங்களது லாப்டாப் கணினியை பெரிய ஸ்கிரீன் கொண்ட தொலைகாட்சியில் இணைத்து இணையதள வீடியோக்களை பெரிய திரையில் காண முடியும்.
இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா, சிறிய திரை கொண்ட லாப்டாப் கணினியை தொலைகாட்சி திரையில் இணைப்பது ?

அனைத்து கணினியிலும் எஸ்-வீடியோ போர்ட் இருக்கும், இதை தொலைகாட்சி திரையுடன் மலிந்த விலையில் கிடைக்கும் எஸ்-வீடியோ கேபிளை இணைக்க முடியும். பழைய மானி்டர் உபயோகிக்கும் நிலையில் 15-pin VGA கேபிள் கொண்ட இணைக்கலாம்.

லாப்டாப் கணினியை தொலைகாட்சி திரையுடன் இணைத்தாகிவிட்டது அடுத்து ஆடியோ வசதி ஏற்படுத்த வேண்டும், இதற்கு 3.5mm மினி ப்ளக் வேண்டும். இந்த கேபிளில் கருப்பு மற்றும் சிவப்பு நிற சாக்கெட்கள் இருக்கும். இந்த சாக்கெட்களை தொலைகாட்சியில் இருக்கும் அதே நிற சாக்கெட்களில் பொருத்த வேண்டும்.

லாப்டாப் கணினியின் டிஸ்ப்ளே செட்டிங்ஸ் சென்று அதன் அவுட்புட் மோடை டிவி ஸ்கிரீனுக்கு மாற்ற வேண்டும்.

லாப்டாப் கணினியை தொலைகாட்சி திரையில் இணைத்தாகிவிட்டது, அடுத்து தொலைகாட்சி ரிமோட்டில் எக்ஸ்டெர்னல் அவுட்புட் தேர்வு செய்து வீடியோ 1, வீடியோ 2 அல்லது HDMI 1 ஆப்ஷன்களை மாற்றி, உங்களது இணைப்புக்கு ஏற்றவாரு வீடியோ ஏதாவதொரு மோடில் ஒளிபரப்பாகும்.

No comments:

Post a Comment