விஞ்ஞானி
ஸ்டீபன் ஹாகிங் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதை அலட்சியப்படுத்த
முடியாது. ஹாக்கிங்கின் சமீபத்திய கருத்து செயற்கை அறிவு பற்றி அச்சம்
கொள்ள வைக்கிறது.
முழு அளவிலான செயற்கை அறிவு வளர்ச்சி மனிதகுலத்துக்கே முடிவுகட்டிவிடலாம் என ஹாகிங் கூறியுள்ளார். தொழில்நுட்பம் தானாக சிந்திக்க கற்றுக்கொள்ளும் மற்றும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் தன்மை பெற்று வருவதும், மனிதகுலத்தின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்க கூடியது என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஹாகிங்கின் கருத்து திகிலூட்டக்கூடியதாக இருந்தாலும் , தொழில்நுட்பத்தின் உதவியேடனேயே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். அந்த காரணத்தினாலேயே அவரது எச்சரிக்கை கூடுதல் கவனம் பெறுகிறது. பிரிட்டனைச்சேர்ந்த கோட்பாடு சார்ந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங், சமகாலத்து முக்கிய அறிவியல் சிந்தனையாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஐன்ஸ்டினை போன்ற விஞ்ஞானி என்று போற்றப்படும் ஹாகிங்கின் அறிவியலும் வியக்க வைக்க கூடியது. அதைவிட அவரது வாழ்க்கை வியக்க வைக்க கூடியது. நரம்பு மண்டல இயக்கத்தை பாதிக்கும் ஏ.எல்.எஸ் எனும் நோய் பாதிப்பு, அவரது பேச்சு மற்றும் சுந்திரமான இயக்கத்தை முடக்கியுள்ளது. ஆனால் அவரது சிந்தனையை நோயால் முடக்க முடியாத நிலையில் ஹாகிங் நவீன சாப்ட்வேர் மூலம் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். கன்னத்தில் பொருத்தப்பட்ட சென்சார் மூலம் அவர் எண்ணங்களால் சாப்ட்வேரை இயக்கி எழுதுகிறார். பேசுகிறார். தொடர்ந்து இயங்கி ஊக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில் பேராசிரியர் ஹாங்கிற்காக புதிய தகவல் தொடர்பு நுட்பத்தை இண்டெல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. Assistive Context Aware Toolkit (ACAT) என்று சொல்லப்படும் இந்த நவீன தொழில்நுப்டம் , ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் ஸ்விப்ட்கீ நுட்பத்துடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த
நுட்பம் ஹாகிங் செயல்பாடுகளை கவனித்து, அவர் சிந்திக்கும் முறையை புரிந்து
கொண்டு அவர் அடுத்ததாக என்ன வார்த்தையை டைப் செய்யப்போகிறார் என ஊகித்து
சொல்லக்கூடியது. இதன் காரணமாக ஹாகிங்கால் முன்பை விட 20 சதவீதம் வேகமாக
டைப் செய்ய முடியும். இந்த தகவல் அவரது ஸ்பீச் சிந்தசைசருடன்
இணைக்கப்பட்டு, ரோபோ குரலை உருவாக்கிறது. இதன் மூலம் அவர் தனது லேப்டாப்
வழியே மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.
ஹாங்கி இணையத்தை பயன்படுத்துவது உட்பட பல செயல்களை இந்த புதிய சாப்ட்வேர் அமைப்பு தானியங்கிமயமாக்கி உள்ளது. இந்த நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட லண்டன் நிகழ்ச்சியில் பேசிய ஹாங்கிங், டிஜிட்டல் உதவியாளர் தொழில்நுட்பங்களான சிரி, கூகிள் நவ் மற்றும் கார்டனா ஆகியவை வருங்காலத்தில் நிகழக்கூடிய தொழில்நுட்ப போட்டியின் ஆரம்ப அறிகுறி என்று கூறினார். ஆனால் வருங்காலத்தில் நிகழக்கூடிய சாத்தியங்களுக்கு எல்லையே இல்லை என்று கூறிய ஹாகிங், மனித மூளையை மிஞ்சக்கூடிய திறன் படைத்த கம்ப்யூட்டர்களை உருவாக்குவது சாத்தியமாகலாம் என்றார். ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவின் முழு அளவிலான வளர்ச்சியால், மனித குலத்திற்கு முடிவு கட்டும் ஆபத்து இருப்பதாகவும் ஹாகிங் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் இந்த தொழில்நுட்பத்திற்கு போர்,நோய் மற்றும் வறுமையை ஒழிக்கும் ஆற்றல் இருப்பதாகவும் கூறினார்.
மருத்துவத்தால்
என்னை குணப்படுத்த முடியாததால் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தொடர்பு
கொள்கிறேன் என்று கூறிய ஹாகிங் , இந்த புதிய தொழில்நுட்ப அமைப்பு
ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும்
தகவல் தொடர்பில் இருந்த எல்லைகளை உடைத்தெறியும் என்றும் தெரிவித்தார்.
ஹாகிங் போலவே சமீபத்தில் இணைய தொழில்முனைவோரான எலோன் மஸ்க் செயற்கை அறிவு பற்றி எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டீபன் ஹாங்கின் பிபிசி பேட்டி; http://www.bbc.com/news/technology-30290540 - சைபர்சிம்மன் |
This is a RARE DETAILS BLOG that focus on everything about Tamil language and Tamilans cultures,Amazing News,Scientific News, Tamil Medicines,Cooking Tips,World's Mystery,Rare History,Sex Education,Electronics Technology,Business,Etc.,