Wednesday, December 17, 2014

சனைச்சர ஸ்தோத்திரம்...

நிகழும் ஜய வருடம் மார்கழி 1-ம் தேதி செவ்வாய்க்கிழமை (16.12.14) பிற்பகல் 2 மணி 16 நிமிடங்களுக்கு சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். 16.12.2014 தொடங்கி 17.12.2017 வரை மூன்று ஆண்டுகள் விருச்சிக ராசியில் அமர்ந்து சனிபகவான்  தன் பார்வையை செலுத்துகிறார்.
இந்த காலகட்டத்தில் மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு மகோன்னத பலன்கள் வாய்க்கும். ரிஷபம், கடகம், மீன ராசிகளுக்கு மத்திம பலன்கள் கிடைக்கும்.
மேஷ ராசிக்கு அஷ்டமத்து சனியாகவும், சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனியாகவும், விருச்சிகத்துக்கு ஜென்மச் சனியாகவும், துலாம் ராசிக்கு பாதச்சனியாகவும், தனுசுக்கு விரயச் சனியாகவும் அமைகிறார். இந்த ராசிகளுக்கு உரிய அன்பர்கள், சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வைத்து, சனைச்சரனை வழிபடுவது சிறப்பு. அத்துடன் கீழ்க்காணும் ஸ்தோத்திரப் பாடலையும் பாடி வழிபடலாம்.

கோணஸ்த:பிங்களோ பப்ரு:
க்ருஷ்ணே ரெளத்ரோ சந்தகோ யம:
ஸெளரி: ஸ்ரீனைஸ்சரோ மந்த:
பிப்பலாதேன ஸம்ஸ்துத:
ஏதானி தஸ நாமானி ப்ராதருத்தாய ய: படேத்
ஸ்ரீனைஸ்சரக்ருதா பீடா ந கதாசித் பவிஷ்யதி

கருத்து:  த்ரிகோணத்தில் இருப்பவர், பிங்களருபி, பிரகாசிப்பவர், கருப்பு நிறமுள்ளவர், பயங்கரன், அழிவைச் செய்பவர், அடக்குபவர், சூர்ய புத்திரர், ராசிகளில் தாமதமாக சஞ்சரிப்பவர், மந்தகதி உள்ளவர், பிப்பலாதரால் துதிக்கப்பட்டவர்... இந்தத் திருப்பெயர்களை உடைய சனைச்சரனை வணங்குவோம். இந்த திருப்பெயர்களைப் படித்தால் சனைச்சரனால் ஏற்படும் பீடைகள் விலகும்.
சனிபகவானின் திருவருளைப் பெறும் பொருட்டு தசரதச் சக்கரவர்த்தி அருளிய ஸ்தோத்திரப் பாடல்களில் ஒன்று இது. சனி பாதிப்பு உள்ளவர்கள் என்றில்லை, எல்லோருமே இதைப் படித்து வணங்கி பயனடையலாம்.

தசரதர் அருளிய சனைச்சர ஸ்தோத்திரம்

ந்த சனைச்சர ஸ்தோத்திரத்தை படிப்பதால் சனி கோசாரரீதியால் பன்னிரண்டு, எட்டு முதலிய ஸ்தானங்களிலிருப்பதாலும்,, ஜாதகத்தில் தோஷத்துடன் கூடியிருப்பதாலும், அவனது தசாபுக்திகளில் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதோடு சர்வ சம்பத்துக்களும் உண்டாகும்.

ஸ்ரீ கணேஸாய நம: அஸ்ய ஸ்ரீ ஸனைஸ்சர ஸ்தோத்ர
மந்த்ரஸ்ய தஸரத ரிஷி: ஸனைஸ்சரோ தேவதா
த்ரிஷ்டுப் சந்த: ஸனைஸ்சரப்ரீத்யர்த்தம் ஜபே
வினியோக:

தஸரத உவாச
கோணோந்தகோ ரெளத்ரயமோஸத பப்ரு:
க்ருஷ்ண: ஸநி: பிங்களமந்தஸௌரி:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

ஸுராஸுரா: கிம்புருஷோரகேந்த்ரா
கந்தர்வ வித்யாதரபன்னகாஸ்ச
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேஅ
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

நரா நரேந்த்ரா: பஸவோ ம்ருகேந்த்ரா
வன்யாஸ்ச யே கீடபதங்கப்ருங்கா:
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

தேஸாஸ்ச துர்காணி வனானி யத்ர
ஸேனாநிவேஸா: புரபத்தனானி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேன
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

திலைர்யவைர்மாஷகுடான்னதானே:
லோஹேன நீலாம்பரதானதோ வா
ப்ரீணாதி மந்த்ரைர்நிஜவாஸரே ச
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

ப்ரயாகக்கூலே யமுனாதடே ச
ஸரஸ்வதீபுண்யஜலே குஹாயாம்
யோ யோகினாம் த்யானகதோஸபி ஸூக்ஷ்ம
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

அன்யப்ரதேஸாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட
ஸ்ததீயவாரே ஸ நர: ஸுகீ ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோ ந புன : ப்ரயாதி
தஸ்மை நம : ஶ்ரீரவீநந்தனாய

ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர்புவனத்ரயஸ்ய
த்ராத ஹரீஸோ ஹரதே பீநாகீ
ஏகஸ்த்ரிதா ருக்யஜுஸாமமூர்த்தி:
தஸ்மை நம: ஸ்ரீரவிநந்தனாய

ஸன்யஷ்டகம் ய: ப்ரயத: ப்ரபாதே
நித்யம் ஸுபுத்ரை: பஸுபாந்தவைஸ்ச
படேத்து ஸௌக்யம் புவிபோகயுக்த:
ப்ராப்நோதி நிர்வாணபதம் ததந்தே

கோணஸ்த: பிங்களோ பப்ரு:
க்ருஷ்ணோ ரௌத்ரோஸந்தகோ யம:
ஸௌரி: ஸனைஸ்சரோ மந்த:
பிப்பலாதேன ஸம்ஸ்துத:

ஏதானி தஸ் நாமானி ப்ராதருத்தாய ய: படேத்
ஸ்னைஸ்சரக்ருதா பீடா ந கதாசித் பவிஷ்யதி

இதி ஸ்ரீ சனைச்சர ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

ம்மந்திரத்தைக் கண்டுபிடித்தவர் தசரதர். சனைச்சரன் தேவதை. த்ரிஷ்டுப் சந்தஸ். சனைச்சர ப்ரீதிக்காக இந்த ஜபம். தசரதர் கூறுகிறார்:

கோணன் முடிவைச் செய்பவன். ரௌத்ரன் இந்திரியங்களை அடக்குபவன். பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், ஸுர்யபுத்திரன் என்ற பெயர்கள் படைத்த சனைச்சரன் நித்யம் நம்மால் நினைக்கப்பட்டவனாகி சகல பீடைகளையும் போக்குகிறான். அத்தகைய ஸூர்ய புத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம்.

கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் பொழுது தேவாஸுரர்கள், கிம்புருஷர்கள், நாகர்கள், கந்தர்வர், வித்யாதரர், பன்னகர் முதலியோரையும் பீடிக்கும் ஸூர்ய புத்திரனான சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.

மனிதர், அரசர், பசுக்கள், ஸிம்ஹங்கள், காட்டில் உள்ள புழுக்கள், பறவைகள், வண்டுகள் முதலிய யாவும் சனைச்சரண் கெட்ட ஸ்தானத்தில் இருப்பதால் பீடிக்கப்படுகின்றன. அத்தகைய ஸூர்ய புத்திரனான சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.

சனைச்சரன் கெட்ட ஸ்தானத்திலிருப்பதால் தேசங்களும், நெருக்கமான காடுகளும், ஸேனையின் கூடாரங்களும், நகரங்களும் பீடிக்கப்படுகின்றன. அத்தகைய சூர்ய புத்திரனான சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.

தனது நாளான சனிக்கிழமையில் எள்ளு, யவை, உளுந்து, சர்க்கரான்னம் இவற்றை தானம் செய்வதாலும், இரும்பு, கருப்பு வஸ்திரம் இவற்றை தானம் செய்வதாலும், தனது மந்திரங்களாலும் சனைச்சரன் ப்ரீதி அடைகிறான். அத்தகைய ஸூர்ய புத்திரனான சனைச்சரனுக்கு நமஸ்காரம். 

ஸூக்ஷ்ம ரூபியாயிருந்தும், ப்ரயாகை க்ஷேத்திரத்திலும், யமுனை ஸரஸ்வதி இப்புண்ணிய நதிக்கரைகளிலும், குகையிலும் இருக்கும் யோகிகளின் த்யானத்துக்கு விஷயமான சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.

சனிக்கிழமையில் வெளி இடத்திலிருந்து தன் வீட்டை அடைபவன் ஸுகமடைவான். அன்றையதினம் வீட்டை விட்டுக் கிளம்பியவன் திரும்ப அக்காரியத்திற்காக வெளியே போக வேண்டியிராது. இத்தகைய சக்திபடைத்த சனைச்சரனின் பொருட்டு நமஸ்காரம்.

மூவுலகின் சிருஷ்டிகர்த்தாவான ப்ரம்மாகாவும், ரக்ஷகனான விஷ்ணுவாகவும், ஸம்ஹர்த்தாவான சிவனாகவும், மேலும் ருக், யஜூஸ், ஸாம ரூபியாகவும் விளங்கும் சனைச்சரனுக்கு நமஸ்காரம்.

இந்த சனைச்சர அஷ்டகத்தை தினம் காலை வேளையில் ஆசாரத்துடன் படிப்பவர் ஸத்புத்திரர், பசுக்கள், பந்துக்கள் இவர்களுடன் சௌக்கியத்தை அனுபவிப்பதும் முடிவில் மோக்ஷத்தையும் அடைவர்.

த்ரிகோணத்திலிருப்பவன், பிங்களரூபி, பிரகாசிப்பவன், கருப்பு நிறமுள்ளவன், பயங்கரன், அழிவைச் செய்பவன், அடக்குபவன், ஸூர்யபுத்திரன், ராசிகளின் தாமதமாக ஸஞ்சரிப்பவன், மந்தகதி உள்ளவன் என்று பிப்பலாதரால் துதிக்கப்பட்டவன். 

இந்தப் பத்து நாமாக்களையும் காலையில் எழுந்ததும் படித்தால் சனைச்சரனால் ஏற்படும் பீடை ஒரு போதும் ஏற்படாது.
சனைச்சர ஸ்தோத்ரம் முற்றிற்று.