Sunday, January 24, 2016

அபிநயம்



நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும், அதை பற்றி இன்று அறிவோம்.

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன.

பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படுகின்றன. அவையாவன:
1, ஆகார்ய அபிநயம்
2, வாசிக அபிநயம்
3, ஆங்கிக அபிநயம்
4, சாத்விக அபிநயம்

ஆகார்ய அபிநயம்:

அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.

வாசிக அபிநயம்:

பாடலுக்கேற்ப அபிநயிப்பது வாசிக அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆங்கிக அபிநயம்:

உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளாகவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப்படுகின்றன. கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும், இரட்டைக்கை முத்திரைகளும் உள்ளன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமஸ்கிருதத்தில் அசம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமஸ்கிருதத்தில் சம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.

சாத்விக அபிநயம்:

நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும்.

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:

* வெட்கம் (ஸ்ருங்காரம் )
* வீரம்
* கருணை
* அற்புதம்
* சிரிப்பு (ஹாஸ்யம்)
* பயம் (பயானகம்)
* அருவருப்பு (பீபல்சம்)
* கோபம் (ரெளத்ரம்)
* அமைதி (சாந்தம்)

சிலம்பம்..!


தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. "சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு. எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் "சிலம்பரம்' என்ற பெயரும் வழக்கில் உள்ளது.

சிலம்பம், தமிழர்களின் வீரவிளையாட்டு. திருக்குறளில் "கோல்' என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், "வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே' என்ற வரிகள் மூலம், "தண்டு' என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப் பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த "பதார்த்த குண சிந்தாமணி' என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்கள் நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடியில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கிறது.

அகத்தியர் தமிழகத்திற்குள் நுழைந்த காலம், ராமனின் வருகைக்கு முன்பாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். சுக்ரீவன் தென் பகுதியில் சீதையைத் தேட, வானரங்களை அனுப்பும் போது பொதிகை மலையில் இருக்கும் அகத்திய முனிவரை வணங்கிச் செல்லுமாறு கட்டளையிடுகிறான். எனவே, கி.மு., 2000க்கும் முன்பாக சிலம்பக் கலைக்கு, பொதிகை மலை அடிவாரத்தில் ஒரு பயிற்சிக்கூடம் இருந்து வந்துள்ளது என தெரிகிறது.

ஆனால், சிலம்பக் கலை பற்றிய அகழாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன.

சிப்பி வளையல்கள், உலோகத் தொழிற்கலையில் வல்லவரும், ஜப்பானியத் தீவுகளை ஆய்வு செய்தவருமான பேராசிரியர் கௌலாண்ட், ""பெரும் எண்ணிக்கையிலான இரும்புப் படைக்கலங்கள், கருவிகள் மற்றும் இரும்பை உருக்கும் ஆழ்ந்த அறிவு ஆகியவை இருப்பதிலிருந்து இரும்பை உருக்குதல் என்ற எதிர்பாரா நிகழ்ச்சி, இரும்புத் தொழில் ஐரோப்பாவைக் காட்டிலும், பழைய இரும்புக் காலத்தில் இடம் பெற்றிருந்த இந்திய தீபகற்பத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார்.

சிலம்பத்தில் சுவடு, தெக்கன் சுவடு, வடக்கன் சுவடு, பொன்னுச் சுவடு, தேங்காய் சுவடு, ஒத்தைச் சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச் சுவடு, முக்கோணச் சுவடு, வட்டச் சுவடு, மிச்சைச் சுவடு, சர்சைச் சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை போன்றவை அடங்கும்.

கராத்தே என்ற வீர விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணமாக ஏற்கலாம். இரண்டின் செயல்பாடுகளும் ஒன்றே.

"கராத்தே' என்ற பெயரிலும் "கரம்' என்ற சொல் மூலமாக உள்ளது. கராத்தே வீரக் கலையின் தாய் குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார்.

சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.



சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., திரைப்படங்களின் வாயிலாக சிலம்பக்கலைக்குப் புத்துயிர் ஊட்டினார். சிலம்பத்தில் "வளரி' என்ற எறி ஆயுதம் மருதுபாண்டியர் காலத்தில் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட மருது பண்டியர், வளரி வீசுவதில் வல்லவராய் விளங்கினார்.
சின்ன மருதுவைத் தூக்கிலிட்ட கர்னல் வெல்ஸ் என்பவர் எனது ராணுவ நினைவுகள் என்னும் நூலில், ""சின்ன மருது தான் எனக்கு ஈட்டி எறியவும், வளரி வீசவும் கற்றுக் கொடுத்தான். வளரி என்னும் ஆயுதம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆற்றலும், திறமையுமிக்க ஒருவரால் 300 அடி தூரம் குறி தவறாமல் வீச முடிகிறது'' என்று கூறியுள்ளார்.
இந்த ஆயுதம் தமிழருக்கும் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கும் பொதுவானது. தெற்காசியாவிலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பழங்குடியினர், அங்கு குடிப்பெயர்ந்து சென்றதாகவும், அவர்களின் மொழி, கலாசாரம், பண்பாடு உருவ அமைப்பு முழுவதும் தமிழரோடு ஒப்புமை உடையது எனவும் கூறியுள்ளனர்.
தமிழர்களின் வளரியைப் பற்றி அக்காலத்தில் புதுக்கோட்டை திவானாய் விளங்கியவர் தர்ஸ்ட்டனுக்கு எழுதியிருப்பது, வளரியின் அமைப்பு பற்றியும் அது பயன்பட்டு வந்தவிதம் பற்றியும் படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
""வளரி என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்பட்ட சிறு ஆயுதம். சில சமயங்களில் இரும்பினாலும் செய்யப்படுவதுண்டு. பிறை வடிவிலான அதன் ஒரு முனைப்பகுதி அடுத்ததை விடக் கனமாய் இருக்கும். (அரிவாள் அல்லது கத்தியைப் போல் அல்லாமல்) இதன் வெளி விளிம்பே கூர்மைப்படுத்தப் பட்டிருக்கும். இதை எறிவதில் பயிற்சி உள்ளவர்கள், இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, வேகம் கொடுப்பதற்காகச் சிலமுறை தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள்.
ஒரே எறியில் குறி வைக்கப்பட்ட விலங்கையோ, ஏன் மனிதரையோ கூட வீழ்த்தும் படி வளரியால் எறியும் வல்லமை படைத்தவர்கள் உண்டெனத் தெரிகிறது. ஆனால், தற்சமயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்றே கூறும்படியான நிலை உள்ளது. ஆனாலும், தற்சமயம் முயல், குள்ளநரி முதலியவற்றை வேட்டையாடுவதற்கு வளரி பயன்பட்டு வருவதாகத் தெரிகிறது. இருந்த போதிலும், வளரியின் வாழ்வு முடிந்து கொண்டு வருகிறது என்று தான் கூற வேண்டும்'' எனக் கூறியுள்ளார். பெரிய பாண்டியர், தெப்பக்குளத்தின் வடகரையில் இருந்து எறிந்த வளரி, அதன் மைய மண்டபத்தைத் தீண்டாமல் அதையும் தாண்டி எதிர்கரையில் உள்ள முத்தீசுபுரத்தில் போய் வீழ்ந்ததாம்; அதுவும் எதிர்கரையிலிருந்த ஆலமரக் கொப்புக்களைக் கத்தரித்து, அதைக் கடந்து வீழ்ந்ததாம். இது இக்கால ஒலிம்பிக் சாதனையை விட அதிக தூரமாகும் என ஆய்வாளர் மீ.மனோகரன் "மருதுபாண்டிய மன்னர்கள்' என்ற நூலில் வியப்புடன் கூறுகிறார்.

அழகான தமிழர்கள் கட்டிட கலை

இடம் : திருவரங்கம் 

இடம் : கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம்



பட்டாபிராமர் கோயில்,செஞ்சி.

 



பார்பதற்கு ஒரு யானை போன்றே இருக்கும் இந்த சிலையை உற்று கவனித்து பாருங்கள். பல பெண்களை சிலையாக செதுக்கி செய்த சிற்பம். அதுவே தமிழனின் சிறப்பு.

------------------------------



படத்தை உற்று நோக்குங்கள்.. அதில் உள்ள பின்னல்களை பாருங்கள்,எவ்வளவு தத்ரூபமாக உள்ளது !. இன்றைக்கு வெள்ளைத்தாளில் கூட வரைய முடியாததை,கல்லில் வடித்திருக்கிறான் தமிழன் ! இவற்றை எல்லாம் பாழ் படுத்திக் கொண்டிருக்கிறோமே! போனால் திரும்பவும் கிடைக்காது என்ற குற்ற உணர்ச்சி கூட நம்மிடத்தே இல்லையே !

---------------------------------------


இடம்: தாராசுரம், கும்பகோணம்



இடம்: கங்கை கொண்ட சோழபுரம்!

 

தூணின் அழகு



திருவானைக்காவல்/ திருவானைக்கா

திருவானைக்கா, அல்லது திருஆனைக்கா எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது.
 

======================================================
இடம் : மதுரை


==============




தஞ்சைப் பெரிய கோவில்

 
என்ன அழகு!!! எத்தனை அழகு!!!

நெல்லையப்பர் கோயில் யாளி வரிசை..!!


 


இடம்: ஜம்புகேஸ்வரர் கோவில், திருவானைக்காவல், திருச்சி மாவட்டம் — 

 

33 அடி உயரமான தியான நிலை சிவபெருமானின் சிலை - திருக்கோணேஸ்வரம் (ஈழம்)

 

அர்த்தநாரீஸ்வரர் கோவில் -திருச்செங்கோடு.... 

 

தமிழனின் தலை சிறந்த சிற்பம்:-

நாம் இன்று பெருமையுடன் தமிழையும் தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அழித்து வரும் வேளையில், 1000 ஆண்டுக்கு முன்னர் தமிழன் செதுக்கிய சிற்பம் தான் இது. ஒரு விரல் உயரம் இல்லை, ஒரு கை நீளமும் இல்லை.... எப்படி செதுக்கி இருப்பார்களோ??? உலகில் மற்ற நாடுகள் கட்டிடகலைகளில் இப்பொழுது வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம்... தமிழன் அன்றே சாதித்து விட்டான்.....


-------------------------------
திருவலம் கோவில் - வேலூர் அருகில்



கோவில்களே கலைகளின் இருப்பிடமாக அன்று மட்டுமல்ல இன்றும் திகழ்கின்றன ..பழந்தமிழர்கள் செய்த எந்த ஒரு பொருளிலும் கலை நயமும் அழகும் மிளிர்வதை நாம் கண்கூடாக காண முடியும் .மிக உயர்ந்த எண்ணங்களும் ரசனையும் கொண்ட அவர்கள் வடிவமைத்த ஒவ்வொரு பொருளும் அவர்களின் கலைநயத்தை பிரதிபலிப்பதாகவே இன்றும் உள்ளது.சுவாமியின் அபிஷேகத்துக்கு நீர் நிரப்ப கருங்கல் தொட்டிகளே பயன்படுத்தப்பட்டன.கோலாட்டம் ஆடும் பெண்களை சிற்பங்களாய் செதுக்கப்பட்ட அது போன்ற ஒரு கருங்கல் தொட்டி இப்போது பயன்பாடற்று கிடக்கிறது குப்பை தொட்டியாய் !

==================
இடம் : ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்.




ஆயிரங்கால் மண்டபம் (மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.






சிலம்பு..!

சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்ற பெருங் காப்பியத்தை இயற்றினார். இந்நூல் தமிழ்த் தாயின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

அம்பலத்தில் ஆடுகின்ற நடராசப் பெருமானும் தன் கால்களில் சிலம்போடு இருப்பது இவ்வணிகலனிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றது. 'நிரைகழல் அரவம்' எனத்தொடங்கும் தேவாரப் பதிகத்தில் கழல் என்பது ஆண்கள் அணியும் சிலம்பு வகையினையும், சிலம்பு என்பது பொதுவாக பெண்களாலேயே அணியப்படும் அணிகலன் வகையினையும் குறித்து நிற்கிறது.

சங்ககாலத்தில் ஆண், பெண் என்று இருபாலரும் இதை அணிந்தனர். இதற்கு அக்கால இலக்கியங்களே சான்றாகும். பெரும்பாலும் தங்கத்தால் செய்யப்பட்ட இவ்வணிகலன் வட்டமான வடிவத்தில் குழல் போன்று இருக்கும். இதன் உட்புறம் விலையுயர்ந்த மணிகளால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் பொருட்டு இவ்வணிகலன், நடக்கும்பொழுது ஒருவித இனிய ஓலியை எழுப்பும். நாட்டியப் பெண்களால் அணியப்படும் சிலம்பானது ஆடும்பொழுது தாளத்திற்கேற்ப ஒலியெழுப்ப்பும் தன்மையுடையது.

==================



விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடிலம் நதிக்கு மேற்கே 1 கி.மீ. தூரத்தில் "சேந்தமங்கலம்" என்னும் கிராமம் உள்ளது. இன்றைக்கு சிறு கிராமமாக இருக்கும் இந்த இடம் கி.பி. 12-13 நூற்றாண்டில் காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் என்ற மன்னனின் தலை நகராக விளங்கியது. சோழ மன்னனையே கைது செய்து 6 ஆண்டு காலம் சிறையில் வைத்திருந்த இந்த குறு நில மன்னன், தன்னுடைய தலை நகரில் கோட்டை போன்ற அமைப்பில் பெரிய மதில் சுவர் சூழ "வானிலை கண்டீஸ்வரர்" என்ற பிரம்மாண்டமான கோயிலை அமைத்தான், கோட்டை சுவரின் நான்கு புறங்களிலும் காவலாளிகள் நிற்க பெரிய மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது, தற்போது இடிந்து தரைமட்டமாக கிடக்கும் இந்த கோயிலை மத்திய தொல்லியல் துறை பழைய முறைப்படி பல வருடங்களாக அழகாக புதுப்பித்து வருகின்றது.

அப்படிப்பட்ட அந்த கோயிலுக்கு எதிரில் பெரிய குளத்தை வெட்டிய காடவ மன்னர்கள், நான்கு புறங்களிலும் அழகிய படிகளை அமைத்து வட கரையில் நிழல் தருவதற்கென இரண்டு குதிரைகள் பூட்டிய தேர் போன்ற வடிவமைப்பில் எழில் மிக்க கருங்கல் மண்டபத்தையும் கட்டியுள்ளனர். ஒரு குதிரைக்கும் மறு குதிரைக்கும் இருக்கும் இடைவெளியை பார்த்தாலே அன்று இது எவ்வளவு பெரிய மண்டபமாக இருந்திருக்கும் என்று யூகிக்கமுடிகின்றது. இந்த மண்டபம் தற்போது முற்றிலும் அழிந்து இரண்டு குதிரைகள் மட்டும் எஞ்சியுள்ளன.

சீறிப்பாய்வது போல் நின்றுகொண்டிருக்கும் இக்குதிரையின் மீது சிறு கல்லை எடுத்து எங்கெல்லாம் தட்டுகிறோமோ அங்கெல்லாம் பல வித ஒலிகளை எழுப்புகின்றது!. இது குறித்து விஜய் தொலைக்காட்சியில் கூட ஒரு முறை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. இதில் ஒரு குதிரை தரையில் விழுந்து ஒடிந்த நிலையில் பரிதாமாக கிடக்க, எஞ்சியுள்ள ஒரு குதிரையின் படம் தான் இது. இதை பார்க்க வரும் மக்கள் அனைவரும் ஒலி எழுப்ப இதை கல்லை கொண்டு அடிப்பதால் குதிரை பாழாகின்றது என்று தற்போது வேலி போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.


=====================

 

பழந்தமிழ் போர்க்கருவிகள்

1) வளைவிற்பொறி
2) கருவிரலூகம்
3) கல்லுமிழ் கவண்
4) கல்லிடுகூடை
5) இடங்கணி
6) தூண்டில்
7) ஆண்டலையடுப்பு
கவை
9) கழு
10) புதை
11) அயவித்துலாம்
12) கைப்பெயர் ஊசி
13) எரிசிரல்
14) பன்றி
15) பனை
16) எழு
17) மழு
18) சீப்பு
19) கணையம்
20) சதக்களி
21) தள்ளிவெட்டி
22) களிற்றுப்பொறி
23) விழுங்கும் பாம்பு
24) கழுகுப்பொறி
25)புலிப்பொறி
26) குடப்பாம்பு
27) சகடப்பொறி
28) தகர்ப்பொறி
29) அரிநூற்பொறி
30) குருவித்தலை
31) பிண்டிபாலம்
32) தோமரம்
33) நாராசம்
34) சுழல்படை
35) சிறுசவளம்
36) பெருஞ்சவளம்
37) தாமணி
38) முசுண்டி
39) முசலம்

வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரு வியப்பை தருவதாக அமைந்துள்ளது.

தமிழர்தம் மரபுசார் போர்க்கருவிகள - முனைவர். மு.பழனியப்பன்

தமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, "இன்று போய் போர்க்கு நாளை வா" என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,

எதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும், "எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75)" அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,

இவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவ ற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது.


========================

இடம்: விஜயாலய சோழீஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம். 


விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் இளங்கோ அடி அரையன் கட்டியுள்ளார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட முற்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. பிரதான கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன. பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்ளது தனிச்சிறப்பு. உள்ளே பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.

கடம்பர் கோயில்

நார்த்தாமலை பேருந்து நிலையத்திலிருந்து கி.மீ தொலைவில், ஊர் நுழைவாயிலுக்கு வலது பக்கத்தில் உள்ளது கடம்பர் மலைக்குன்று. இங்கு முதலாம் இராஜராஜ சோழன் (10-ஆம் நூற்றாண்டு) காலத்திய சிவன் கோயில் ஒன்று பிரதானமாக உள்ளது. இக்கோயிலில் மலைக்கடம்பூர் தேவர் வீற்றிருக்கிறார். இதற்கருகில் நகரீஸ்வரம் என்ற சிவன் கோயிலும் மங்களாம்பிகை அம்மன் கோயிலும் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் பாண்டிய மன்னன்மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13-ஆம் நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்டவை. இப்பகுதியில் மங்கள தீர்த்தம் என்ற குளம் உள்ளது. குன்றின் அடிவாரப்பகுதியில் பாறை குழிவாகக் குடையப்பட்டு பெரியதொரு கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அதில் சில இடங்கள் சேதமடைந்துள்ளன. முதலாம் ராஜராஜன் காலம் முதல் சோழ அரசர்களில் கடைசி மன்னனான மூன்றாம் ராஜேந்திர சோழன் காலம் வரையிலான கல்வெட்டுக்கள் இந்த வளாகத்தில் உள்ளன.
 ========================================




விருத்தாசலம் விருத்கிரீஸ்வரர் கோயிலில் திருடிய சோழர் கால அர்த்தநாதீஸ்வரர் சிற்பம் ஆஸ்திரேலிய கலை அரங்கில் காட்சிக்கு! 

==============================

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்.

# கங்கை கொண்ட சோழபுரம்



======================

மியன்மாரில் பண்டைய கலாசார நகரமான பகான் நகரத்தில் தமிழ் கட்டிடக் கலைஞர்களால் கட்டப்பட்டுள்ள சூளாமணி கோயில் (A-D 1174-1211). உலகத்தை ஆண்டவன் தமிழன்.. தமிழர் கட்டடக்கலையை உலகத்திற்கு பகிர்ந்துதந்த நாம் எம் மூதாதையர்களை நினைத்து தமிழராய் பெருமை கொள்வோம்.



====




மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூண் சிற்பம்.இந்த பெண் சிற்பத்தில் மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, சிற்பியின் கற்பனை திறமையா? இல்லை தெருகூத்தடிகளின் வாழ்க்கை முறையா என்பது தெரிவில்லை, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை போன்று வைத்துள்ளாள் அதில் அந்த கூடையை எங்கள் ஊரில் கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் சொல்லுவார்கள், அதில் பனைஓலையின் வடிவம் செதுக்கப்பட்ட விதம் சிற்பியின் பொறுமையை என்னவென்று பாராட்டுவது வார்த்தைகளே இல்லை, அந்த அளவுக்கு நுணுக்க வேலைப்பாடு நீங்க அதை நேரில் சென்று பார்த்தல் நிஜமானதாகவே தோற்றம் அளிக்கும் அப்படி ஒரு தத்துருவமாக வடித்துள்ளார்,

அவள் மூன்று குழந்தைகளை தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த வழக்க முறைகளை நான் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்த்துள்ளேன், இது செதுக்கப்பட்ட ஆண்டு 17 ஆம் நுற்றாண்டில் . ஆனால் இன்று நகரப்புறங்களில், வெளிநாடுகளில் இதை கொஞ்சம் நவீனபடுதில் பெல்ட் போன்ற அமைப்பில் வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கொண்டு செல்கின்றனர், அந்த குழந்தை அவளின் மார்பில் பால் குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல?

மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கபற்றிகொண்டும், கைவிரலகால் அந்த குழந்தையையும் பாதுகாத்து கூட்டிசெல்கிறாள்.

முன்பெல்லாம் சந்தை போன்ற அமைப்பு உண்டு வாரத்தில் ஒருநாள் அனைத்துவிதமான பொருள்களும் அங்கு விற்பனைக்கு வரும்.கிராமங்களில் மக்கள் எல்லோரும் வீட்டுக்கு தேவையானதை அன்றைக்கு வந்து வாங்கி செல்வர்கள், அப்போது தன் குழந்தைகளை கூட்டிகிட்டு வருவார்கள். குழந்தைக்கு தேவையானதை வாங்கிகொடுத்துவிட்டு அவன் அவன் வெகுதூரம் நடக்கவேண்டு அழாமலும் இருக்கவேணும் என்பதற்காக அவனுக்கு பிடித்தமானதை வாங்கித் தருவார்கள் முட்டாய் அல்லது ரொட்டி எதோ ஒரு தீன் பண்டத்தை கொடுத்து வீடுவரைக்கும் நடந்து வருவார்கள், இதை போன்று கூட அந்த சிற்பம் சித்தரிக்கப்ட்டு வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். .

அன்பு மிகுந்த தாயின் வெளிபாடு சிற்பியின் உளிபட்டு இப்படி ஒரு உயிர் தோன்றல் இதுவும் ஒரு வகை பிரசவிப்பு தானே. சிற்பியின் மனதுக்குள் இருப்பதை கற்பனை கருவை மனசால் சுமந்து அதை ஒரு பாறையில் இருந்து பிரசவிக்கிறான் அது முழுமையடையும் பொது அதை அவன் பார்த்து எப்படி ஒரு பூரித்து போயிருப்பன். கற்பனை பண்ணிபார்தல் கூட நம் கண்களில் ஆனந்த கண்ணீர் தான் வரும்.

தூண்களை எல்லாம் தூக்கி நிறுத்திய பிறகே இந்த வேலையை தொடங்குவார்கள். சாரம் கட்டி எத்துனை நாள் பசியை மறந்தும் கூட இதை வடித்திருப்பான். நிலைநிறுத்திய பிறகு சிற்பங்கக் செதுக்கும் பொது சேதம் ஆனாலும் தூணை அப்புறபடுத்துவது என்பது இயலாத காரியம்.சிற்பியின் முழு அற்பணிப்பும் இதுலையே அடங்கும் இதை முடித்த பிறகு கூட அவன் பெயரை கூட அதில் பொறிக்கவில்லை அப்படி பட்ட சிற்பிகள் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்திருகிறார்கள். இந்த சிற்பங்கள், கலைகள் எல்லாம் நம் தலைமுறை வந்திருக்கிறது என்ற நினைக்கும் பெருமையாக இருக்கிறது.

இப்படி பட்ட ஒரு வேலைபாட்டை, நாம் பாதுகாக்க வேண்டும்.நம் முன்னோர்களின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவேண்டும் அதை எடுத்துசொல்ல நாம் என்றும் மறக்ககூடாது. இன்னும் ஆயிரம் தலைமுறைக்கும் நம் மண்ணின் பெருமையும், திறமையும் அற்பனிப்பையும் சொல்ல வேண்டும் . சிற்பங்களை நாம் பாதுக்க வேண்டும், அதில் வண்ணம் பூசுவது, திருநீர் கொட்டுவது ,குங்குமம் கொட்டுவது, பரிட்சை எண்களை எழுதவது காதல் சின்னங்களை பொரிப்பது கூடாது. அப்படி நம் கண் முன்னாடி இது போல நடந்தாலும் அதை உடனே தட்டி கேட்க வேண்டும் அவர்களிடம் நம் பெருமையை எடுத்துசொல்லவெண்டும் .


=======



வர்மக் கலையினை ஆதி குருவான சிவனே தோற்றுவித்ததாக சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பதிவு செய்திருக்கின்றனர். அவர் தனது இணையான சக்திக்கு இந்த கலையை உபதேசித்தாகவும், அவரிடம் இருந்து நந்தி தேவர் வழியே தனக்கு கிடைத்தாக அகத்தியர் தனது பாடல்களில் கூறியிருக்கிறார்.

இதனை அகத்தியர் தனது "ஒடிவு முறிவு சாரி" என்னும் நூலில் பின்வருமாறு சொல்கிறார்.

"பாதிமதி யணிபரமன் தேவிக்கிசைய 
பணிவுடனே தேவியிடம் நந்தீசர்வாங்கி
மகிழ்வாக எந்தனக்கு சொன்னாரப்பா
வேதனை வாராமல் வர்மசூக்குமம்
விபரமுடன் உந்தனுக்கு உரைக்கக்கேளே"
- அகத்தியர்.

போகரும் தனது "போகர் வர்மசூத்திரம்" என்னும் நூலில் சிவன் அம்மைக்கு சொல்ல தாயான ஈஸ்வரி நந்திக்கு சொல்ல நந்தி தனக்கு சொன்னதாக சொல்கிறார்.

"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல
பரிவுடனே நந்திசொன்ன மார்க்கம்
பாடினேன் வர்மசூத்திரம் பண்பாய்தானே"
- போகர்.

போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் தனது ”வர்ம காண்டம்” என்னும் நூலில் இது பற்றி பின்வருமாறு சொல்கிறார்.

"பதாரம்தனைப் பணிந்து வர்மகாண்டம்
பாடினேன் நாடிநரம்பு ஆனவாறும்
காதாரம் கொண்டுணர்ந்து என்னைஆண்ட
கடாட்சமது போகருட கருணை யாலே
வளமாகப் புலிப்பாணி பாடினேனே"
- புலிப்பாணி.

இந்த தகவல்களின் அடிப்படையில் ஆதிசிவன் இதனை உருவாக்கியிருந்தாலும், நந்தி தேவரின் வழியேதான் அவரது சீடர்கள் இந்த கலையினை கற்றுத் தேர்ந்திருப்பது தெளிவாகிறது. நந்தி தேவரின் காலம் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த வர்மக் கலை பற்றி பல்வேறு விதமான செவிவழிக் கதைகள் இருக்கின்றன. அவற்றின் நம்பகத் தன்மை கேள்விக்குரியது. எனினும் புராண இதிகாசங்களில் இந்த வர்மக் கலை பற்றி நேரடியான/மறைவான தகவல்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் பீமசேனன் துரியோதனின் தொடையில் கதையால் அடித்துக் கொன்றதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

முன்னாளில் வர்மக் கலையானது தமிழர்களின் வாழ்வியல் கலையாகவும், குருமுகமாய் எவரும் பயிலக் கூடியதாக இருந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழர்களின் மீது அன்னியர்களின் ஆதிக்கம் உருவான போது இந்த கலை மறைவாகவும், இரகசியமாகவும் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஞானச்சித்தர் காலத்தில் (~2037) இக்கலை சித்தர்கள் தலைமையில் உயிர்பெறும்.
 ====================================

தஞ்சை பெரிய கோவில் கட்ட‍ப்பட்ட‍ வரலாறு..

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜ ராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத்திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத் தியவன் ராஜ ராஜன்.

தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப் படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப் பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படை யில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜ ராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்துகொள் வது அவசியம்…

பெரிய கோயில் அளவு கோல்:

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்க மாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்றுஅழைக்கப்பட்டது. ஒரு முழ மே இருவிரல் நீட்டித்து பதி னாறு விரல் அகலத்து, ஆறு விரல் உசரத்து பீடம், ஒரு விர லோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத் தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அள வாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப் படையில் விமான த்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதா வது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.

இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்ப தே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவ றையின் இரு தளங்களிலும் விமா னத்தின் பதின்மூன்று மாடி களும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது. அலகு களின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சது ரம். கருவறையின் உட்சுவரும், வெளி ச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமான த்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகு கள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடி கிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகு கள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திற னைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்றுதோன்றுகிறது. சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ் வொரு அடுக்கிலும் நான்கு கற் கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின் றன என்பதைக் கவனித்த பின் னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு:

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறு கள் மட்டுமே பரிசீலிக்கலாம். கரு வறையின் உட்சுவருக்கும், வெளி ச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப் பாதை உள்ள து. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணை க்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத் ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட் டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன் றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகா ரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதி களாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலி ருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடி யிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக் கும் அதன் உயரத்து க்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமை க்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு:

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்ட ப்பட்ட உறுதி யான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப் பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமா னம் கட்டுவதற்குச்சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட் டது. இது அமைப்பில் சீனா வின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சார த்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட் ட சாய்வுப் பாதையின் இறுதி கட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தி ன் சுவர்கள் இணைக்கப்பட்டி ருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இது மட்டு மன்றி இந்த அரண் சுவர்களுக் கு நிறைய கற்களும் தேவை ப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட் டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமி ருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப் பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆத அஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத் துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத் தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத் தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைக ளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இம்முறையில் எளிதாக விருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் நம் தஞ்சை கோயில் ! ! !
 ========================


தஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் !!



"பேசும் சிற்பம்" என்ற தலைப்பைக் கண்டதும் வியப்படைந்துவிடீர்களா..??

உங்கள் வியப்பு நிச்சயம் குறையாது. இந்த சிற்பம் பேசுவது வாய் மொழியால் அல்ல, உடல் மொழியால்.... வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை காண்போம் !! 

படம் 1 :
18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன. அதை சுற்றி இருக்கும் சிற்ப வேலைபாடுகளை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில் ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும்.

படம் 2 :
சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது, அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும்

படம் 3 :
சரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள், பாம்பின் வாயில் என்ன ? ஆஹா ஒரு யானை !! பின்புறமாக யானையை விழுங்கும் பாம்பு, யானை எவ்வளவு பெரியது, அதையே விழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!?? அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்…?!?!?!?!?!?

இதனால் என்ன தான் கூற வருகிறார்கள் ? இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார், சற்று அமைதியாக செல்லுங்கள் ! என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள்.

வாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள்…

(இ-1) : இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது.

(இ-2) : அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது

(வ-1) : வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது.

(வ-2) : கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது.

நான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள்.

இது ஒன்று தானா..?? இல்லவே இல்லை.... இது போன்று எத்தனையோ கோயில்களில், எத்தனையோ சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றன, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் இருக்கின்றன.

இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா..?? இல்லை மாறாக அழிக்கிறோம் !!! அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது, அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது, அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.!!

அழிவிலிருந்து காப்பாற்றுவோம் நம் கலைப் பொக்கிஷங்களை.!!!

கல்லிலே கலை வண்ணம்


யானையின் தும்பிக்கையும், கால்களும் கனமாக இருக்க வேண்டும் என்பதற்காக மங்கைகளின் இரண்டு கால்களும் ஆடைக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் போது கிடைக்கும் கனத்தை கச்சிதமாக பொருத்தியாகிவிட்டது,

தும்பிக்கையை தந்த படி நின்றுகொண்டிருக்கும் அந்த பெண், அந்த நிலையில் நிற்க முடியாது என்பதற்காக இன்னொரு பெண்ணை தாங்கியபடி நிற்கிறாள்.

யானையின் கண்ணிற்கு பெண்ணின் மார்பு , காது வளைவிற்கு ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கும் கைகள் !.

யானையின் கழுத்துப் பகுதி வளைவாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் கால் நீட்டி உட்கார்ந்த நிலையில் இருக்கிறார், கால் நீட்டி இருப்பதால், குறுக்கில் இருக்கும் பெண்ணின் மீது தடுத்து, ஆடை சற்று விலகி அது யானையின் தந்தமாகிவிடுகின்றது !

யானையின் வாய் திறந்த நிலையில் இருப்பதை போன்று காட்ட ஒரே ஒரு பாதம் அந்த இடத்தில் கொடுத்தாகிவிட்டது.

கால் மடக்கி தொங்கிய நிலையில் அமர்ந்திருக்கும் பெண்,யானை நடந்து முன்னேறி செல்கின்றது என்பதையும் அழகாக காட்டுகிறது.

அதன் வால் பகுதி ஒரு மங்கையின் கால் பகுதி .

அடடா என்ன ஒரு கற்பனை திறன் இருந்திருக்க வேண்டும்!!!

இடம் : திருக்குறுங்குடி, திருநெல்வேலி.


தமிழரின் கலையான பின்னல் கோலாட்டம்

 

தமிழ் புத்தாண்டு நன்னாளில் தமிழரின் கலையான பின்னல் கோலாட்டம் பற்றி அறிந்து கொள்வோமா, அனைவரும் அறிய இதை பகிருங்கள், தமிழர் கலையை பரப்புங்கள்..

பின்னல் கோலாட்டம்:
பின்னல் கோலாட்டம் என்பது குறுந்தடிச் சிலம்பு எனப்படும் கோலாட்டத்தில் ஒரு வகை ஆகும். கோலாட்டத்தில் பின்னல் கோலாட்டம் பார்க்கச் சிறந்தது. ஒரு கயிறின் இரண்டு புறங்களிலும் கம்புகளைக் கட்டிக்கட்டிக்கொண்டு 10 பேர் ஆடுவார்கள். முன்னும், பின்னும் ஆடி அந்தக் கயிறுகளை பின்னல்களாக கோர்த்து, பின்னர் அதே ஆட்டத்தை திரும்பவும் ஆடி பின்னலை அவிழ்ப்பார்கள். பெரும்பாலும் திருமண வீடுகளில் இந்த கலையாடல் நிகழும். அதாவது மூன்று மூன்று கயிறுகளாக இடைவெளி விட்டு விட்டத்தில் கட்டியிருப்பார்கள். ஒரு கயிறுக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் வீதம் பிடித்துக்கொண்டே பாட்டுக்கு ஏற்றபடி கோலாட்டம் அடித்தபடியே ஊடாட வேண்டும். பாட்டின் முடிவில் அழகான பின்னல் வந்திருக்கும் கயிறுகளில். இது சற்றுக் கடினமான வகை கோலாட்டமாகும். கல்யாண கோலாகலத்தின் மூண்றாம் நாள் (முகூர்த்தம் முடிந்த அடுத்த நாள்) பிள்ளை வீட்டார் பெண்ணை அழைத்து கிளம்பும் முன், எல்லா பெண்டிரும், இந்த பின்னல் கோலாட்டம் ஆட்டம் ஆடுவார்கள்.

அமைப்பு:
வட்டமான கட்டையில் ஓரத்தில் சுற்றி சுமார் 10 அல்லது 12 துளை போடப்பட்டிருக்கும். அதில் ஒவ்வொரு துளையிலும் நீண்ட மணியான் கயிறு எனப்படும் மெல்லிய உறுதியான கயிறு கோர்க்கப்பட்டு தோரணமாகத் தொங்கவிடப்பட்டு இருக்கும். அந்த கட்டையை கொக்கி மூலம் மரத்தின் கிளையில் கட்டிவிட்டு ஒவ்வொரு கயிறையும் ஆடுபவர்களிடம் கொடுப்பர். ஒரு கோலாட்ட கழியை அதில் சுற்றிக்கொள்ள வேண்டும். அதை இடது கையில் பிடிக்கவேண்டும். பின்பு இன்னொரு கழியை குறுக்கே 'T' போல வைத்துக்கொண்டு சுற்றி வட்டமாக நிற்க வேண்டும்.

ஆடலும் பாடலும்:
பாடுபவர் பாட ஆரம்பித்ததும் ஆடுபவர்கள் வலது கையில் உள்ள கழியை கயிறு சுற்றி இருக்கும் கழியில் தட்டி குறுக்கும் நெடுக்கும் தாளத்திற்கு தகுந்தவாறு ஆடிக்கொண்டு செல்லவேண்டும். ஒவ்வொரு பாட்டுக்கும் வெவ்வேறு விதமான முறையில் நடன அசைவுகள் உண்டு. பாட்டு முடியும்போது அந்த கயிறுகள் பின்னிக்கொண்டு சடை போலவும் முருங்கைக்காய் போலவும் தெரியும். அதே போல் திரும்பவும் ஆடி முன்பு இருந்த நிலைக்கு வரவேண்டும். யாராவது தப்பாக ஆடிவிட்டால் ஆட்டம் முடியும்போது கயிற்றுப்பின்னல் சரியாக இருக்காது.

கோப் வேணி:
வட மாநிலங்களில் இக்கோலாட்டம் கோப் வேணி என அழைக்கப்படுகிறது. பல வண்ண துணிகளையோ அல்லது கயிற்றையோ உத்தரத்திலிருந்து தொங்கவிட்டு அதை நடனமணிகளின் இடக் கைக்கோலில் கட்டி அவர்கள் அசைவுகளைச் செய்யும்பொழுது மெதுவாகக் கயிறுகள் ஓர் அழகிய பின்னலாக பின்னப்படும். பிறகு ஆடிய முறையின் நேர் எதிர் முறையில் ஆடிப் பின்னல் அவிழ்க்கப்படும். இதுவே ‘கோப் வேணி’. வேணி என்றால் பின்னல் என்று பொருள். இதற்குக் கிருஷ்ண லீலை பற்றிய பாடல்கள் இசைக்கப்படும். ஆடும் ஆண்களும் பெண்களும் வண்ண ஆடை அலங்காரங்கள் செய்து கொள்வார்கள்.

via Vasanthakumar Graphicdesigner
நன்றி: விக்கிபீடியா.