பிரியமானவர்கள் அற்ற ஒரு பொழுதை
கடந்து தான் ஆகவேண்டியிருக்கிறது.
பிரியமானவர்கள் அற்ற நொடிகள்
தனிமைக்கு தின்னக் கொடுக்கப் படுகின்றன.
பிரியமானவர்கள் அற்ற தனிமை
இசையினில் கரைந்து அழுகிறது.
பிரியமானவர்கள் அற்ற இசை
மௌனம் நாடி நிற்கிறது.
பிரியமானவர்கள் அற்ற மௌனம்
இரவைச் சிதைக்கிறது.
பிரியமானவர்கள் அற்ற இரவு
பகல்களைக் காவு கேட்கிறது.
பிரியமானவர்கள் அற்ற பகல்
காலத்தை அரற்றுகிறது.
பிரியமானவர்கள் அற்ற காலம்
உலகைத் துறக்கிறது.
பிரியமானவர்கள் அற்ற உலகு
அவசியத்தை இழக்கிறது.
பிரியமானவர்கள் அற்ற அவசியம்
ஏதுமில்லாத போது
தற்கொலை செய்து கொள்கிறோம்
அல்லது கவிதை எழுதுகிறோம்
No comments:
Post a Comment