நட்புகளுக்கு ஒரு எச்சரிக்கை.....!
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜேர்மன் தொலைக்காட்சிச் செய்தியில் தகவலொன்று சொல்லப்பட்டது. தனிமனிதச் சுதந்திரத்துக்கு எதிரான, அதிர்ச்சிச் செய்தி அது.
பலர், தனிப்பட்ட முறையில் தங்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நம்பிக்கையின் அடிப்படையில், நெருங்கிய நண்பர்களுக்கு 'வாட்ஸப்' (Whatsapp) மூலம் அனுப்புகிறார்கள். சிலர், நிர்வாண, அரை நிர்வாண, அந்தரங்கப் படங்களைக் கூட அனுப்புகிறார்கள்.
ஆனால்...............!
நீங்கள் வாட்ஸப் மூலமாக அனுப்பும் எந்தப் படங்களையும் தாங்கள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தலாமெனவும், அவை வாட்ஸப் நிறுவனத்துக்கே சொந்தமெனவும், அவற்றை, அவர்கள் யாருக்கும் வியாபார ரீதியில் பயன்படுத்துவதற்குக் கொடுக்கலாமெனவும், அப்படிக் கொடுக்கப்படும் படங்களை, வாங்கிய அந்த நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தினால் அதற்கு வாட்ஸப் பொறுப்பில்லையெனவும், வாட்ஸப்பே தனது Terms of Service இல் மிகச்சிறிய எழுத்துகளில் சொல்லியிருக்கிறது. இதைச் சமீபத்தில்தான் வாட்ஸப் இணைத்திருப்பதாகவும் தெரிகிறது.

இதன்படி நீங்கள் எடுத்து, வாட்ஸப் மூலம் அனுப்பிய சகல செல்ஃபிகளும் வாட்ஸப் தனது பாவனைக்காக வைத்திருக்கலாம். அவற்றில் தேவையானவற்றை அவர்கள் தெரிவு செய்யலாம். இதை வாட்ஸப்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. வாட்ஸப் குறிப்புட்ட தொகையுள்ள படங்களை , அதை வாங்கக்கூடிய ஏஜெண்டுகளுக்குக் கூடப் பெருந்தொகைப் பணத்துக்கு விற்கலாம். அந்த ஏஜெண்ட்டுகள் படங்களைத் தெரிவுசெய்து மற்றவர்களுக்கு விற்கலாம்.
இது ஜேர்மனியில் இப்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.
நட்புகளே! இனிக் கொஞ்சமாவது அவதானத்துடன் இருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் இதை எடுத்துச் சொல்லுங்கள்.
இதற்கான செய்தி வெளிவந்த தொலைக்காட்சியின் காணொளியை இத்துடன் சாட்சியாகத் தருகிறேன். ஆனால் அது ஜேர்மன் மொழியில் இருப்பதற்கு மன்னியுங்கள்.
-ராஜ்சிவா-
No comments:
Post a Comment