Wednesday, January 28, 2015

Car ஏசியை இயக்கி ஜன்னலை மூடக்கூடாது



இன்றைய நவநாகரீக உலகில் பெரும்பாலானவர்கள் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், தற்போது சந்தைக்கு வரும் அனைத்து கார்களும் ஏசி வசதியுடனே உள்ளன.

"ஜன்னலை திறந்து பின் மூடுவது சிறந்தது"

பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள டேஷ்போர்டு, இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்தும் பெரும்பாலும் பிளாஸ்டிக்கினால் ஆனவை. இந்த பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன.

சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம். ஆனால், வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும். அதே சமயம் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000 மில்லி கிராம் வரையில் இருக்கும்.

இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40 மடங்கு அதிகம். அதிலும் ஏசி காரை பயன்படுத்தும் போது, ஜன்னலை மூடுவதால் காருக்குள் இருக்கும் பென்சீன் வெளியேற முடியாமல் அப்படியே இருக்கும். அதனை சுவாசிக்கும் போது, உடலுக்குள் செல்லும் பென்சீனால் கேன்சர், சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.

அதனால், எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் ஏசியை இயக்கி ஜன்னலை மூடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. மேலும், ஒரு சில நிமிடங்களுக்கு ஜன்னலை திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் ஏசி- யை இயக்கவேண்டும் என்றும் அறிவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment