Wednesday, January 7, 2015

இந்தியாவுக்காக எனது முதல் பயணம்.....




குஜராத் மாநிலத்தில் சாபர்கந்தா மாவட்டத்தில் ஹிமாத் நகர் தாலுக்காவில் அக்கோதர என்ற கிராமம் உள்ளது. இந்த மாவட்ட நிர்வாக இயக்குனராக திரு. நாகராஜன் IAS அவர்கள் நாம் நாட்டுக்காக ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளார்! நாடு முன்னேற வேண்டுமானால் நாடு டிஜிட்டல் மையம் ஆகியே தீர வேண்டும் என்று எண்ணி ஒரு திட்டத்தை அக்கோதரா என்ற கிராமத்தில் செயல்படுத்தி நமது பிரதமர் மோதி அவர்களின் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

இந்தியாவில் முதன் முதலாக ஒரு கிராமம் முழுவதும் DIGITAL VILLAGE என்ற முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கு முழுக்க முழுக்க வேலை செய்ய இணைய தளம் அவசியம். அந்த கிராமம் முழுக்க WiFi அமைத்துக்கொடுக்க நான் அதில் பணி புரிந்தது எனக்கு மிகவும் பெருமை சேர்க்கின்றது! நமது இந்தியாவுக்கே முன்னோடியாக இந்த அக்கோதரா என்ற கிராமம் மின்னிக் கொண்டிருக்கின்றது இப்போது! இந்த திட்டத்தின் மூலம் வைஃபை ஐ வைத்துக்கொண்டு மக்களையும் வங்கியையும் ஒரு சேர இணைத்து வணிக நடவடிக்கைகளை மேம்படுத்தி மக்களுக்கு எளிய நவீன யுக்தியை கொடுக்கின்றோம்! 

Jan 5 ஆம் திகதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோதி அவர்கள் முன்னிலையில் இந்தியாவுக்கு அறிமுகபடுத்தியுள்ள இந்த திட்டம் நமது நாட்டுக்கே பெருமைத்தக்கது!

இதன் பயன்கள்:

1. அனைத்து கிராம மக்களுக்கும் வங்கி கணக்கு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது! கணக்கு தொடங்க  ஆதார் எண் ஒன்றே போதுமானது! 

2. கிராம மக்களுக்கு பண அட்டை வழங்கப்பட்டுள்ளது! இதன் மூலம் கிராமத்தில் எந்த பொருட்கள் வங்க அல்லது விற்க பண அட்டை ஒன்றே போதுமானது!

3. மக்களின் பணம் முழுவதும் வங்கி கணக்கில் பத்திரமாக சேமிக்கப்பட்டுள்ளது. தேவை படும் சமையத்தில் மட்டும் பண அட்டையை பயன்படுத்தி பயன்பெறலாம்!

4. கருப்பு பணம் இதன் மூலம் ஒழிக்கப்படும்.. பணம் பரிமாற்றம் இணையதளம் மூலம் பாதுகாப்பாக மாற்றிக்கொள்ளலாம்.

5. வியாபாரிகளுக்கு வழிப்பறி தொல்லைகள் அறவே இல்லை!

6. பால் வாங்குவது முதல் மளிகை பொருட்கள் வாங்குவது வரை இந்த முறை தான் இனி இந்தியா முழுவதும்!

7. பள்ளி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பலகை (DIGITAL BOARD) மூலம் கல்வி பயிற்றுவிக்கப்படுகின்றது!

8. கிராம மக்களுக்கு இந்த வங்கியே மருத்துவ உபசரிப்புக்களுக்கான சேவையை வைஃபை மூலம் அமைத்து கொடுக்கின்றது!

9. கிராமத்தில் உள்ள விவசாயிகள், இந்த ஆதி வேகா இணையதளத்தின் மூலம், அன்றன்றைய விவசாய பொருட்களின் விலையை இனியதளம் மூலம் அறிந்து தங்கள் விலையை நிர்ணயித்துக்கொள்ளுகின்றனர்  

10. பல விவசாயிகள் காமடிட்டி ஐ அரசு உதவியின் மூலம் கற்றுக்கொண்டு நல்ல வழிகாட்டுதலுடன் வளர்ந்து வருகின்றனர்!

 இவை அனைத்தும் நான் பணி புரியும் Digital Sarkar Technosoft Private  Limited மூலம்   வெற்றிகரமாக இந்தியாவுக்காக ஆரம்பித்துக் கொடுத்ததில் நாங்கள் பெருமையடைகின்றோம். இனி இந்த high speed internet digital village இந்தியா முழுவதும் எங்களுடன் பயணிக்கும்.
திரு. நாகராஜன் IAS அவர்களுக்கு எனது நன்றிகள் பல!

- DIN

No comments:

Post a Comment