ஜெர்மன்:
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஓர் புதிய ஸ்போர்ட்ஸ் காரை நானோ ஃப்ளைசெல் என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் உப்புத் தண்ணீரில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரை சாலைகளில் வைத்து பரிசோதனைகள் நடத்தவும், இயக்குவதற்கும் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு அனுமதி வழங்கியது. இதன் வடிவம் 5.25 மீட்டர் நீளமும், 2.2 மீட்டர் அகலமும் கொண்டது. கல்விங் ஸ்டைலிலான கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 22 இஞ்ச் வீல்கள் கம்பீரமான தோற்றத்தை கொடுக்கின்றன.
மேலும் இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 4 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்டது. தொழில்நுட்பத்தில் இந்த ஸ்போர்ட்ஸ் கார் ஹைட்ரஜனில் இயங்கும் கார்களை போன்றே தொழில்நுட்பம் கொண்டது. ஆனால், உப்புத்தண்ணீரை ஒரு சவ்வு வழியாக செலுத்தி அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த காரில் 200லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு டேங்கில் உப்புத் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும்.
இந்த உப்புத் தண்ணீர் மூலம் 600 கிமீ வரை செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கார் 2,300 கிலோ எடை கொண்டது. இந்த கார் வெறும் 2.8 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை அடைந்து விடும். அதிகபட்சமாக மணிக்கு 380 கிமீ வேகம் வரை செல்லும். இந்த காரின் விலை 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment