Sunday, January 4, 2015

File Recovery technology

அழிக்கப்பட்ட ஃபைல்களை மீண்டும் பெற...

‘அய்யோ மெமரி கார்டுல வெச்சிருந்த ஃபோட்டோஸ் எல்லாம் போயிருச்சே’,  ‘என்னனே தெரில திடீர்னு கம்ப்யூட்டர்ல இருந்த ஃபைல்ஸ் எல்லாம்  டெலிட் ஆயிருச்சு’ - இப்படி அடிக்கடி பதற நேரிடலாம். இதோ... அழிந்த கோப்புகளை மீட்டெடுக்க ஓர் எளிய வழி!உங்களது மெமரி கார்டு, ஹார்டு டிஸ்க், ஐபேடு போன்ற சேமிப்பகங்களில் உள்ள ஆவணங்கள், கோப்புகள், தரவுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தவறுதலாக டெலிட் ஆகிவிட்டால், அல்லது தானாக அழிந்துவிட்டால்... அதனை ‘Recuva’ எனும் மென்பொருள் மூலமாக மிக சுலபமாக மீட்க முடியும்! இந்த மென்பொருளானது, உங்கள் சேமிப்புக் கருவிகளிலுள்ள அழிந்த ஃபைல்களை, அது எத்தகைய கோப்புகளாக இருந்தாலும் சரி... அதாவது ஆவணங்கள், கோப்புறைகள், படங்கள், காணொளிகள், பாடல்கள், புகைப்படங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் சுலபமாக மீட்டுத் தருகிறது.

எப்படி மீட்பது..?

‘Recuva’ என்ற மென்பொருளை உங்களது கணினியில் டவுன்லோடு செய்து, இன்ஸ்டால் செய்யவேண்டும். பின் அதன் மூலமாக ஸ்கேன் செய்து தேடி அழிந்த ஃபைல்களை மீட்டெடுத்துவிடலாம். இதில், வைரஸால் அழிந்துபோன ஃபைல்களும் அடங்கும். இதனை இணைய உதவியோடு இலவசமாக டவுன்லோடு செய்ய

'http://www.filehippo.com/download_recuva/download/4c4c59967cbad2dfb1da58bb14e33b7a/

 என்ற லிங்க்கை பயன்படுத்தலாம். அல்லது கூகுள் போன்ற தேடுபொறிகளைக் கொண்டும் இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.

Thanks to
- சா.வடிவரசு


No comments:

Post a Comment