Friday, January 9, 2015

HISTORY - பிரும்ம குப்தா கி.பி. [598-668]


தன் சொந்த வரலாறை மறந்த சமுதாயத்தால் புதிய வரலாறை படைக்க முடியாது.

பிரும்ம குப்தா கி.பி. [598-668]

ந்யூடநிர்க்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புவியீர்ப்பு சக்தி இருப்பதை கண்டறிந்தவர். ஜாமென்ட்ரி, அல்ஜீப்ரா போன்ற கணித முறைகளை கண்டு பிடித்தவர்.

இன்று ராஜஸ்தானில் பிம்மல் என்று அழைக்க படும் நகரில் அன்றய பெயர் பில்லமலா. பிறந்த பிரும்ம குப்தா ஹர்ஷ மன்னர்களது அவையில் முதன்மை வானியல் அறிங்கர் மற்றும் ஜோதிடராக இருந்தவர். உஜ்ஜயினியில் இருந்த பள்ளிகளில் இவர் இந்த கலைகளை கற்றதாக சரித்திர குறிப்புகள் உள்ளன. இவர் பிறந்த ஊரின் பெயரால் இவரை பில்லமாச்சாரியா என்றும் அழைப்பதுண்டு. இவர் பல நூல்கள் எழுதி உள்ளார். அதில் முக்கியமான இரண்டு நூல்கள்.

பில்ம சித்தாந்தம்- ஜாமென்ட்ரி, அல்ஜீப்ரா போன்ற பல கணித முறைகள் இதில் விளக்கப்பட்டு உள்ளன.

பிரம்மகுப்த சித்தாந்தம்- இது இவர் எழுதிய மற்றொரு பிரபலமான நூலாகும். முதன் முதலாக புவியீர்ப்பு குறித்த கருத்துக்கள் இதில் எழுதபட்டு உள்ளன.

இவரது நூல்களை கிபி 770இல் அல்பைசி என்கிற அறிங்கர். அரேபிய மொழியிலும் பின்னர் 1817இல் H.T கோல்புரூக் என்ற அறிங்கரால் அவை ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கபட்டு உள்ளன.

நிறைய போதி தர்மர்கள் நமது நாட்டில் வாழ்ந்து உள்ளனர். இந்த உலகினில் இன்றும் தமது பெருமை, தொன்மை ஆகியவற்றை உணராத நாட்டு மக்கள் உள்ளனர் என்றால் அது நமது நாட்டு மக்கள் தான். இன்று சாதிக்க துடிக்கும் ஒவ்வொருவருக்கும் இது போன்ற அறிங்கர்கள் ஒரு முன் உதாரணம். நாம் பிறந்த மண்ணில் தான் இவர்களும் பிறந்தார்கள். நம்மாலும் இவர்களை போல் சாதிக்க முடியும் என்று நாம் Inspirationனாக எடுத்து கொண்டு ஏதாவது ஒன்றில் சாதிக்க வேண்டும். முடிந்த அளவு நாம் நமது மண்ணில் பிறந்த ஞானிகள், விஞ்ஞானிகளை பற்றி குழந்தைகளுக்கு சொல்லுவோம். சில பெரியவர்களுக்கும். உலகில் பல மொழிகள் கற்று கொள்வது. பல உலக பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல் சிறந்தது தான். ஆனால் நமது நாட்டு வரலாறு தெரியாமல் பிற நாட்டு வரலாறுகளை படிப்பதில் ஒரு பயனும் இல்லை.

2600 வருடங்களுக்கு முன்பு ப்லாஸ்டிக் ஸர்ஜரீ, இதய அறுவை சிகிச்சை செய்த சுஸ்ருதாவில் ஆரம்பித்து ஆரியபட்டா, பாஸ்கராசார்யா, வராஹ மிக்ரர், ராமன், சந்திர போஸ், G.D நாய்டு வரை நமது மண்ணில் பிறந்த விஞ்ஞானிகளின் வரலாறு அவர்களது கண்டு பிடிப்புகளை தெரிந்து கொண்டு பின்னர் நாம் மற்ற நாட்டு விஞ்ஞானிகளை பற்றியும் அவர்களது கண்டு பிடிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்வதில் ஒரு அர்த்தம் உள்ளது.

தன் சொந்த வரலாறை மறந்த சமுதாயத்தால் புதிய வரலாறை படைக்க முடியாது.

No comments:

Post a Comment