Wednesday, January 28, 2015

Screen Capture

SCREEN RECODE மற்றும் காணொளிகளை தொகுக்க சில மென்பொருட்கள்

 

Screen Recording மற்றும் Video Editing செய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் பயன்படுகின்றன.அவற்றில் ஒரு சில மென்பொருட்கள் இலவசமாகவும், ஒரு சில கட்டண மென்பொருட்களாகவும் கிடைக்கின்றன.
சிறந்த ஸ்கிரீன் ரெக்கார்டிங்மற்றும்வீடியோ எடிட்டிங் சாப்டவேர்கள்கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தேவையானதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1. EzvidEzvid
என்பது ஒரு screen recorder program ஆகும். இதன் மூலம் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் நடைபெறும் இயக்கங்களை ரெக்கார்ட் செய்யலாம்.
1.இப் புரோகிராமுடன் in-built video editor-ம் இணைந்துள்ளது.
2.இதன் மூலம் ரெக்கார்ட் செய்த வீடியோவை, உங்களுடைய விருப்பத்திற்கேற்ப தேவையான இடங்களில் எடிட் செய்துகொள்ளமுடியும்.
3.வீடியோவை இருபகுதிகளாக பிரித்து, இடையே தேவையான இடங்களில் Text -ஐ சேர்த்துக்கொள்ளலாம்.
4.slideshow effect களை உருவாக்கலாம்.
5.இப்புரோகிராமின் மூலம் உருவாக்கப்பட்ட videoக்களை YouTubeக்கு அப்லோட் செய்துகொள்ள முடியும்.
Ezvid screen recorder program
பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.ezvid.com/
2. BlueBerry FlashBack Express Recorder
இது ஒரு வீடியோ ரெக்கார்டர் மென்பொருள் ஆகும். இதன் மூலம் உங்களுடைய வெப் கேமைப் பயன்படுத்தி வீடியோவை ரெக்கார்ட் செய்துகொள்ள முடியும்.
ரெக்கார்டிங்கை நிறுத்தியவுடன் இது தானாகவே FBR கோப்பொன்றை உருவாக்குகிறது. இந்த வீடியோ கோப்புகளை, இதனுடன் இணைந்திருக்கும் வீடியோ எடிட்டரைப் பயன்படுத்தி அவற்றை எடிட் செய்துகொள்ள முடியும்.
Blue Berry FlashBack Express Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.bbsoftware.co.uk/BBFlashBack_FreePlayer.aspx
3. Screenr
Screenr என்பது online வழியாக Screen Record செய்யப்பயன்படும்ஒரு மென்பொருள் ஆகும். உங்களுடைய கம்ப்யூட்டரில் மென்பொருளை நிறுவ தேவையில்லை.இப்புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் செயல்பட கண்டிப்பாக Java நிறுவியிருக்க வேண்டும்.
உங்களுடைய கம்ப்யூட்டர் திரையில் ரெக்கார்ட் செய்வதற்கான area -வைத் தேர்ந்தெடுத்துவிட்டு, ஸ்கீரீன் ரெக்கார்டிங்கை தொடங்கலாம்.அதிக பட்சமாக 5 நிமிடங்கள் இந்த முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும்.
ரெக்கார்ட் செய்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர, லிங்க் கொடுக்கப்படும். தேவையெனில் MP4 ஆக எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். அங்கிருந்தே Youtube -லும் அப்லோட் செய்துகொள்ள முடியும். ரெக்கார்ட் செய்யப்படும் வீடியோக்கள் உங்களுடைய அக்கவுண்டிலேயே சேமிக்கப்படும்.
Screenr Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
https://www.screenr.com/?_e_pi_=7%2CPAGE_ID10%2C1627297555
4. Rylstim Screen Recorder
Rylstim Screen Recorder -ல் Start Record பட்டனை அழுத்தியவுடன் ஸ்கிரீன் ரெக்கார்டிங் ஆரம்பமாகிவிடுகிறது. கம்ப்யூட்டரில் ஏற்படும் நிகழ்வுகளை காட்சிப்படுத்திக்காட்ட இந்த ரெக்கார்டிங் மென்பொருள் உபயோகமாக இருக்கும். இதில் Audio Recording செய்வதற்கான வசதி இல்லை.
Rylstim Screen Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://www.sketchman-studio.com/rylstim-screen-recorder/
5. CamStudio
CamStudio வீடியோ எடிட்டிங் புரோகிராம் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. மௌஸ் கர்சரைenable அல்லது disable செய்யும்வசதி, மைக்ரோ போன் அல்லது இந்த புரோகிராமின் மூலம் sounds Record செய்யும் வசதி மற்றும் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டிய ஸ்கிரீன் அளவினை நம் வசதிக்கு தகுந்தாறு மாற்றிக்கொள்ளும் வசதி என்பன போன்ற பல்வேறு வசதிகளை இப்புரோகிராம் உள்ளடக்கியுள்ளது.
CamStudio Recorder program பதவிறக்கம் செய்ய சுட்டி:
http://camstudio.org/
நன்றி,
soft shop

No comments:

Post a Comment