Tuesday, January 6, 2015

Smart phones complete FORMAT - ஸ்மார்ட்போன் தகவல்களை தடையமே இல்லாமல் அழிப்பது எப்படி


வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மூலம்எதுவும் சாத்தியம் என்பதை உணர்த்தும் பல செயல்கள் அரங்கேறும் நிலையில்சிறிய ஸ்மார்ட்போனில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்பது ஒன்றும் பெரியா காரியமில்லை என்று கூறுலாம்.
புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் முன் பழைய ஸ்மார்ட்போனை விற்க வேண்டும், ஆனால் பழையபோனில் இருக்கும் தகவல்களை அழித்து அதன் பின் விற்றாலும் அவைகளை சுலபமாக மீட்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா.
அவாஸ்ட் நிறுவனம் வாடிக்கையாளர்கள் விற்ற 20 மொபைல்களில் இருந்துசுமார் 40,000 புகைப்படங்கள், 250 செல்பிக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கூகுள் தேடல்கள், 750 மின்னஞ்சல் மற்றும் குருந்தகவல்களை மீட்டனர். கவலை வேண்டாம் இந்த பிரச்சனையில் சிக்கமால் இருப்பது எப்படி என்று பாருங்கள்.
ஸ்மார்ட்போன் விற்கும் போது கூடுதல் மெமரி கார்டை சேர்த்து கொடுக்காதீர்கள், சில விண்டோஸ் செயளிகளை கொண்டு மெமரி கார்டில் இிருக்கும் தகவல்களைஎடுக்க முடியும். ஏன்இப்படி ஆகின்றது.
ஒவ்வொரு முறை பைல்களை அழிக்கும் போதும் அவை நன்ட் ப்ளாஷ் ஸ்டோரேஜில் வைக்கப்படுகின்றது. ஒவ்வொரு முறை நீங்கள் அழிக்கும் தகவல்களை நன்ட் ப்ளாஷில் தான் வைக்கப்படுகின்றது. இதனால் அவை மீண்டும் மீட்கபடும் சாத்தியக்கூருகள் அதிகம் இருக்கின்றது. இதற்கு போனை ரீசெட் செய்யலாம், அப்படி அது கடினமாக தெரிந்தால் இதையும் பின்பற்றலாம்.
ஸ்மார்ட்போனில் இருக்கும் என்க்ரிப்ட் ஆப்ஷன் மூலம் உங்கள் தகவல்களை நிரந்தரமாகஅழிக்க முடியும். என்க்ரிப்ட் ஆப்ஷன் போனின் செக்யூரிட்டிஆப்ஷனில் காணப்படும். போனை என்க்ரிப்ட் செய்தால் எந்த தகவல்களையும் மீண்டும் எடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். என்க்ரிப்ட் செய்வதுஎப்படி என்று பாருங்கள்.
முதலில் செட்டிங்ஸ் சென்று அங்கு செக்யூரிட்டி ஆப்ஷனைதேர்வு செய்யுங்கள்செக்யூரிட்டி ஆப்ஷனில் என்க்ரிப்ட் போன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்,
என்க்ரிப்ட் ஆப்ஷன் தேர்வு செய்த பின் போனை சார்ஜரில் இணைத்து பின்பற்றுங்கள்என்க்ரிப்ட் துவங்கும் முன் அதன் பின்விளைவுகளை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment