Tuesday, January 6, 2015

கணிணிவழிப்பட்டா நகல்

  






1.கணிணிவழிப்பட்டா நகல் பெற செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு?
2. கணிணி பட்டா நகல் வேண்டி சமர்ப்பிக்கப்பட வேண்டிய மாதிரி விண்ணப்பம்தரவும்.
3. கட்டணம் செலுத்துபவர்களுக்கு ரசீது தரப்படுகிறதா?
4. மேற்படியான ரசீதின் மாதிரி ஒன்றை தரவும்
5. 01.06.2014 முதல் 31.10.2014 வரை கணிணி பட்டா நகல் வழங்குவது தொடர்பில் பொது மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு?
6. மேற்படிக் கட்டணத் தொகை எவ்வகைக் கணக்குத் தலைப்பின் கீழ் எந்தத் தேதிகளில் அரசுக் கருவூலத்தில் செலுத்தப்ப்பட்டது?
7. மேற்படிக் கருவூலப் பற்றுச் சீட்டின் தங்கள் வசம் உள்ள ஒரு பகுதியின் நகல் தருக.
8. தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் படி பொதுமக்கள் நேரில் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு தங்கள் அலுவலகம் மூலம் ஒப்புகைச்சீட்டு அளிக்க படிகிறதா?
9. மேற்படி ஒப்புகைச் சீட்டின் மாதிரி ஒன்றைத் தருக.
10. தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் படி பொதுமக்கள் நேரில் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு உரிய கட்டணம் ரூ. 10 பணமாகப் பெற்றுக்கொண்டு ரசீது அளிக்கப்படுகிறதா?
11. மேற்படி ரசீதின் மாதிரி ஒன்றைத் தருக.
12. நாகல்நாயக்கன் பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு மேற்கொண்டு உட்பிரிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் பற்றிய விவரம் கடைசியாக தங்கள் அலுவலகத்துக்கு எப்போது வரப்பெற்றது?
13. மேற்படி உட்பிரிவுக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பட்டா உட்பிரிவு செய்து கொடுக்கப் பட்டுள்ளதா?
14. சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவலை முன்னிட்டு 01.06.2014 முதல் 30.09.2014 வரை எத்தனை பட்டா மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் தரவும்.







வட்டாட்சியருக்கு தெரியாத/ நடைமுறையில் இல்லாத ஒப்புகை சீட்டின் மாதிரி

No comments:

Post a Comment