Tuesday, July 12, 2016

காலபைரவ கர்மா








ஒருவர் இறந்துவிட்டால் அவர் உடலை விட்டு உயிர் பிரிவது என்பது 11லிருந்து 14 நாட்கள் வரையில் மெதுவாகவே நடைபெறுகிறது. அதனால்தான் நம் கலாச்சாரத்தில் இறப்பு சடங்குகள் அத்தனை நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு யோகி இறக்கும்போது தன் உடலில் இருக்கும் எல்லா வாயுக்களும் ஒரே நேரத்தில் உடலைவிட்டு பிரியுமாறு பார்த்துக் கொள்கிறார். ஆனால் சாதாரணமாக இறப்பவர்களுக்கு மரணம் பகுதி பகுதியாகத்தான் நிகழ்கிறது, எனவேதான், இந்தக் கலாச்சாரத்தில், இறந்தவர்களுக்காக வெளியிலிருந்து ஒருவர் சில செயல்முறைகள் செய்து, அந்த உயிர் நல்லவிதமாகப் பிரிவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த சடங்குகள் அதன் தன்மையை இழந்து வருகின்றன.
எனவே இறந்தவர்களுக்கான இந்த சடங்குகளை முறைப்படி செய்ய ஈஷா யோகா மையம் முயற்சி எடுத்து வருகிறது, இவை வெறும் சடங்குகளாக, வியாபார நோக்கத்துடன் இல்லாமல், அந்த உயிருக்கு உண்மையாக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதாக இருக்கும். ஆரம்பத்தில் சில பிரம்மச்சாரிகளையும் சன்னியாசிகளையும் சத்குரு அவர்கள் இதற்காக தயார் செய்தார்கள். தற்போது விருப்பமுள்ள மற்றவர்களுக்கும் இது கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. வாழும்போது தேவையான விழிப்புணர்வும் பயிற்சிகளும் இருந்திருந்தால், இறக்கும்போது அவர்களுக்கு எந்த சடங்குகளும் தேவையில்லை. அவர்களே தங்களைப் பார்த்துக் கொள்வார்கள், ஆனால் அந்த பயிற்சியும் விழிப்புணர்வும் இல்லாதபோது இத்தகைய சேவை மக்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த செயல்முறையைத்தான் காலபைரவ கர்மா என்கிறோம்.
இது இறந்தவர்களுக்கான ஒரு செயல்முறை. அவர்கள் செல்லும் புதிய இடம் ஒரு சிறந்த இடமாக இருப்பதை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டிருக்கிறது. ஒருவர் இறந்தவுடன் தன் நிர்ணயிக்கும் மனதையும் இழந்துவிடுகிறார். எனவே இறக்கும்போது எந்தவிதமான உந்துதல்கள் இருந்ததோ, அவை இப்போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பல மடங்காகப் பெருகும். அவருடைய உந்துதல் இனிமையான உணர்வுடன் இருந்தால், அந்த இனிமை உணர்வு பல மடங்காகும். உந்துதல் சோகமான உணர்வுடன் இருந்தால், சோகமான உணர்வு பல மடங்காகும். எனவேதான், ஒரு மனிதர் இறக்கும்போது, அவரைச் சுற்றி ஒரு இனிமையான சூழ்நிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.
எனவே அந்த கடைசி நேரத்திலோ, அல்லது அதற்கடுத்த சில குறிப்பிட்ட காலத்திற்குள்ளோ, நாம் அந்த உயிரை அணுகி அது தனக்குள் இனிமையை உணருமாறு பார்த்துக் கொள்ள முடியும். ஒரு சொட்டு இனிமையை அவருக்குள் புகுத்திவிட்டால் கூட, சரி தவறு என நிர்ணயிக்கும் மனம் இல்லாத காரணத்தால், அந்த இனிமை இப்போது அவருக்குள் இலட்சம் மடங்காக பெருகிவிடும். எனவே அந்த உயிருக்குள் இனிமையை ஊட்டுவதைத்தான் நாம் இப்போது ஒரு செயல்முறையாக செய்கிறோம். இதுதான் காலபைரவ கர்மாவின் அடிப்படை. காலபைரவ சாந்தி என்னும் செயல்முறையும் இருக்கிறது. அதை இறந்த பிறகு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த செயல்முறைகளுக்காக லிங்கபைரவி திருக்கோவில் சக்தித்தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காலபைரவ கர்மா
காலபைரவ கர்மா, ஒருவர் இறந்த குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட வேண்டிய செயல்முறையாகும்.

தேவையானவை:
இறந்தவரின் புகைப்படம், உடை (உள்ளாடை மற்றும் சேலை தவிர) இந்த செயல்முறைக்கு தேவை. இறந்தபோது அணிந்திருந்த உடை வேண்டாம். இரத்த சம்பந்தமான உறவினர் ஒருவர் இந்த செயல்முறையின் போது அருகில் இருக்க வேண்டும். இந்த செயல்முறைகள் லிங்கபைரவி திருக்கோவிலில் நடைபெறும். பிறகு உறவினர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். (தவிர்க்க முடியாத காரணத்தால் உறவினர்கள் இந்த செயல்முறைக்கு வர இயலவில்லை என்றால் மையத்திற்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்ய இயலும்)

நிபந்தனைகள்:
இயற்கை மரணமாக இருந்தால் 50 வயதுக்கு மேல்- 14 நாட்களுக்குள்
50 வயதுக்கு கீழ் 48 நாட்களுக்குள்
இயற்கை மரணமாக இல்லாமல் விபத்து, தற்கொலை போன்று இறந்திருந்தால் 33 வயதுக்கு மேல் – 48 நாட்களுக்குள்:
33 வயதுக்கு கீழ் – 90 நாட்களுக்குள்
காலபைரவ சாந்தி
காலபைரவ சாந்தி ஒவ்வொரு அமாவாசை அன்றும் நள்ளிரவில் நடைபெறும். (See our Lunar Calendar)

தேவையானவை:
இறந்தவரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி, அனுப்புநரின் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவை இந்த செயல்முறைக்கு தேவை. நன்கொடையை லிங்கபைரவி கோவில் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது “ஷிலீக்ஷீவீ சீஷீரீவீஸீவீ ஜிக்ஷீust” என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாகவோ செலுத்தலாம். காலபைரவ சாந்தியை வருடத்திற்கு ஒருமுறை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது. 10 வருடங்களுக்கு சேர்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். வருட சாந்தி மகாளய அமாவாசையன்று செய்யப்படும்.

பகிர்வுகள்:
நான் என்னுடைய ஒரே மகனை இழக்க நேரிட்டது. என் வாழ்நாள் முழுவதும் நான் வறுமையில், பணத்திற்காக போராடினேன். ஆனால் இன்றோ என்னிடம் எல்லாம் இருக்கிறது, ஆனால் அவன் இல்லை. எனக்கு இது மிகப் பெரிய இழப்பு. நான் தனிமையாய் உணர்கிறேன். இந்த சமயத்தில்தான் நான் என் தம்பி மூலம் காலபைரவ கர்மாவைப் பற்றி அறிந்தேன். எனக்கு அதில் பெரிய நம்பிக்கை இல்லை என்றாலும் என் மகன் அமைதியாய் இருப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். காலபைரவ கர்மா செய்ததன் மூலமாக அவன் ஆத்மா சாந்தி அடைந்ததாய் உணர்கிறேன். எனக்குள்ளும் நான் இப்போது அமைதியாகி விட்டேன். என் குடும்பத்தினர் கூட என்னில் மிகுந்த மாற்றத்தை காண்கின்றனர்.
– திருமதி. அருணா கந்தசாமி, கரூர்

நாங்கள் எங்கள் தாயாரின் ஆத்மா சாந்தியடைய விரும்பினோம். அதனால் காலபைரவ கர்மா செய்வதற்காக ஈஷா யோகா மையம் சென்றோம். அங்கு சடங்குகளை செய்து கொண்டிருந்த போது என் உடலும் மனமும் லேசாவதை உணர்ந்தேன். ஒருவிதமான அதிர்வு என்னுள் ஏற்படுவதை உணர முடிந்தது. பொதுவாக ஒரு ஆண் குழந்தைதான் இறுதி சடங்கை செய்ய முடியும். ஆனால் இங்கோ பெண்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்குகின்றனர். என் தாய்க்கு ஏதோ ஒன்றை செய்த திருப்தியை நான் அடைந்தேன்.
– திருமதி. எல். இலக்ஷ்மி, சென்னை

No comments:

Post a Comment