Thursday, November 2, 2017

ஏன் வழுகட்டாயமாக மோடி அவர்களை இஸ்லாமிய எதிரியாகவே உருவாக்குகிறார்கள்???

பிஜேபி, இந்துதுவா என்றால் இஸ்லாமியருக்கு எதிரி, கிருஸ்தவத்திற்கு விரோதி? இந்தவிதம் மக்கள் மத்தியில் இருக்கும் கருத்து பற்றி உங்கள் பதில் என்ன மாரிதாஸ்?{கேள்வி: கார்த்திக்}
இது மிக சிக்கலான கேள்வி.
இந்தியா என்ற இந்த மண்ணை, இதன் வரலாற்று புனிதத்தை தனது உயிருக்கும் மேலாக நேசிக்கும் எவரும் இந்து தான். இந்த மண்ணின் புனிதம் உணர்ந்த எவரும் இந்துவே. இந்துகளின் தேசமாக பாகபிரிவினை நடந்து பாக்கிஸ்தான் கொடுத்துவிட்ட பின்பும் இதுவே இந்து,இந்தியா என்பதற்கு அடையாளம்.
இந்துதுவா என்றால் "இஸ்லாமிய வெறுப்பு என்றும் , கிருஸ்தவர்கள் அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்" என்ற தோற்றத்தை திட்டமிட்டு இந்த கம்யூனிஸ்ட், திராவிட கழகங்கள், காங்கிரஸ் இவர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் பரப்பும் உண்மைக்கு மாறான செய்தி..
RSS என்பது இந்துதுவாவாதிகள் தான். அவர்கள் ஏன் பத்திரிக்கைகள் முன்வருவது இல்லை? எல்லா மீடியாக்களையும் விட்டு ஏன் விலகி நின்றார்கள்? நேரு புகழ் பாடவும், கம்யூனிஸ்ட் புகழ்பாடவும் தான் புதிய சுதந்திரம் வாங்கிய இந்தியாவில் ஆட்கள் இருந்தனர். நேருவின் விருப்பமானவர்கள் அனைவரும் தான் எல்லா மேல்தட்டு பதவியிலும் அமர்ந்தார்கள்.
கோட்சே காந்தியை கொலை செய்த பழியை அப்படியே இந்துதுவாவின் மீது போட்டு மொத்தமாக அழுத்தி ஒடுக்கினார் நேரு. அவருக்கு அதில் அரசியல் ரீதியாக வெற்றிகிடைத்தது. ஒருபக்கம் நேதாஜி ஆதரவாளர்களை ஒடுக்கிவிட்டு , இன்னொருபக்கம் இந்துதுவாவை ஒடுக்க , காங்கிரஸ் என்ற கட்சியை தன் குடும்ப சொத்தாக மாற்றி இந்தியாவை அனைத்து தளத்திலும் தனது ஆதரவாளார்களை அமர்த்த பத்திரிக்கைகளும் நேரு புகழ்பாட???? என்ன இங்கே நியாயம் கிடைக்கும்???
எனவே அன்று முதல் இன்று வரை மீடியாவை விட்டு முழுமையாக விலகி நிற்கிறார்கள் இந்துதுவாவாதிகள். பிஜேபி கட்சி வழியாக சிலர் பேசினாலும். பிஜேபியே கூட முழு இந்துதுவாவாதியாக அங்கிகரீக்க மாட்டார்கள் இந்துதுவாவை முழுமையாக நேசிக்கும் பலர். ஒரு அரசியல் இயக்கமாக பிஜேபியை அங்கிகரீக்கிறார்கள் அவ்வளவே.
------------------------------------
பிரதமர் மோடி?
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (Union Minority Affairs Ministry)வெளிப்படையாகவே புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் மோடி அரசு பதிவிக்கு வந்த பின்னர் எப்படியாக திட்டங்களை நிறைவேற்றி வருகிறது என்று தகவல் கிடைக்கும். தாராளமாக தேடி படிக்கவும்.
காங்கிரஸ் அரசு 2012-13ல் 3135 கோடி ஒதுக்கிய இந்த துறைக்கு மோடி அரசு 3,827.25கோடி ஒதுக்கீடு செய்கிறது. அதாவது நீங்கள் சொல்லும் ஹிந்துதுவாவாதி எதற்கு நிதியை அதிகபடுத்த வேண்டும்?
இந்த நிதி கொண்டு Maulana Azad Education Foundationக்கு தேவையான நிதி , National Minorities Development & Finance Corporation (NMDFC) மூலம் சிறுபான்மை மக்கள் தொழில் தொடங்க உதவித்தொகை , Azad National Fellowship மூலம் சிறுபான்மையினருக்கு உதவிதொகைகள் , Interest Subsidy on Educational Loans for overseas studies என்று ஆரம்பித்து Pre-matric scholarship, Post-matric scholarship, Merit-Cum-means scholarship வரை சில நுறு திட்டங்கள் கொண்டு சிறுபான்மையினர் கல்வி , வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் முன்னேற்றம் கொண்டுவர எதற்கு உதவ வேண்டும்?
மேலும் தகவல் வேண்டும் என்றால் தாராளமாக Union Minority Affairs Ministry தொடர்பு கொள்ளுங்கள் , அதன் websiteசென்று பாருங்கள். என்ன இப்போ மோடி வந்தவுடன் குறைத்துவிட்டார் என்று குறை கூறிவிட முடியும்????
அட அவருக்கு தான் இஸ்லாமியரை பிடிக்காதே !!! ??????
78.03% படிப்பறிவு பெற்ற அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்கள் படிப்பறிவு சதவீதம் இன்று எவ்வளவு தெரியுமா 80%சதவீதம். Sachar Committee Report தேடி பாருங்கள் , அது வெளியாகும் போது குஜராத் முதல்வராக இதே நரேந்திர மோடி அவர்கள் தான் முதல்வராக இருந்தார், தேடி படியுங்கள்.9.1 % சதவீதம் மக்கள் தொகையுள்ள இஸ்லாமியர்கள் High Posts, Officer Posts என்று அரசு வேலைகளில் 8.5 % முதல் 9.9 % வரை பதவியில் இருந்தனர். அதாவது எந்த அளவு மக்கள் தொகை உள்ளார்களோ அதே அளவு அரசு வேலைவாய்ப்பிலும் , பதவிகளிலும் இருந்தனர். ஆனால் சிறுபான்மையினர் வோட்டுக்கு அலையும் இந்த கம்யுனிசத் , காங்கிரஸ் , திராவிட கட்சிகள் ? கேரளா மாநிலம் 24.7 % இஸ்லாமியர் உள்ள மாநிலம் ஆனால் 9.5 % அளவு தான் அரசின் High Posts, Officer Posts என்று பதவியில் இருக்கிறார்கள், 25.2 % என்று இருக்கும் மேற்கு வங்காளத்தில் வெறும் 10% கூட கிடையாது. இதை நான் கூறவில்லை Sachar Committee Reportஅறிக்கை தெரிவிக்கிறது.
என்ன இப்போ இஸ்லாமியர் வளர்ச்சியை முதல்வராக இருக்கும் போது மோடி தடை செய்தார்???? கொஞ்சமாது பகுத்தறிவு இருப்பவனுக்கு இது புரியும்.
"Sufism is the voice of peace, co-existence, compassion and equality" இது கூறியவர் யார்?? இதே மோடி அவர்கள் தானே. சரி March 17, 2016 சூபி இஸ்லாம் மார்க்க அறிஞர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து வாழ்த்தியதும் இதே மோடி தானே..
கம்யூனிஸ்ட , காங்கிரஸ் எவனாது பாராட்டுங்கள் பார்க்கலாம்???
--------------------------------
பின்னர் இஸ்லாம் எதிர்ப்பு என்பது???
நன்கு புரிந்துகொள்ளுங்கள் இந்தியாவில் சூபி இஸ்லாம் மக்களுக்கும் இந்துதுவாவாதிகளுக்கும் எந்த உரசலும் கிடையாது. இதை வம்படியாக கம்யூனிஸ்ட் , திராவிட, காங்கிரஸ் பத்திரிக்கை கூட்டம் மறைக்கிறது. சூபி இஸ்லாம் தான் இந்த நாட்டில் இருக்கிறது. ஆனால் இந்த சவுதி அரபியா பரப்பும் வகாபிசம் கிடையாது. அதாவது பெர்சியன் வழியாக தான் இஸ்லாம் இங்கே பரவியது.. வால் முனையில் பரவிய இஸ்லாம் வரலாறு தவீர்த்துவிட்டு பார்த்தால் ஒரு பக்கம் சூபி ஞான மரபு என்பது இந்திய ஞான மரபில் ஒன்றாக ஏற்றுகொண்டோம்.
வால்முனையில் பரவிய மொகாளாயர் இஸ்லாம் என்பதை எதிர்க்கும் இதே இந்துதுவாவாதிகள்- சூபி ஞானிகள் வழி பரவிய அமைதியான இஸ்லாமிய ஞான மரபை எதிர்ப்பது இல்லை.
அதாவது Syed Mohammad Ashraf,rumi, அப்துல்கலாம், ஏஆர் ரகுமான் , ஜாகீர் குசேன் என்று மிக சிறந்த தேசியவாதிகள் பலரை மதம் கொண்டு எதிர்க்கிறார்களா? கிடையாது. ஆனால் ஜாகீர் நாயக் போன்ற வகாபிசம் பரப்பும் யாரையும் கடுமையாக எதிர்கிறார்கள். கடந்த 35 வருடத்தில் இந்தியாவில் வகாபிசம் வேகமாக பரவுவது கண்கூடு.. இன்றய தலைமுறை இஸ்லாமிய இளைஞர்கள் அதிகம் வகாபிசம் தழுவுகிறார்கள் அவர்களுக்கு தெரியாமலேயே. அது தான் உண்மை.
தர்க்காகளை இடிக்கவேண்டும், தர்க்கா என்பது இஸ்லாமிர்க்கு எதிரானது- இசை கேட்க கூடாது , இசை இஸ்லாமுக்கு எதிரானது - பெண்கள் ஆடை விசயத்தில் இருக்கும் கட்டுபாடுகள். இந்த 3 விவரங்களை எடுத்து கொஞ்சம் வரலாற்றோடு ஒப்பிட்டுபாருங்கள் அப்பட்டமாக சவுதி அரசியாவின் கலாச்சாரம் தெரியும். அதாவது வகாபிசம் மூலம் இங்கே இந்திய ஞான மரபில் பரவி விரிந்த சூபி இஸ்லாம் முழுமையாக அழிக்கபட்டு வகாபிசம் வழியாக மத போர்வையில் அரபிய கலாச்சாரம் பரவுகிறது. இதனால் தான் ISIS போன்ற தீவிரவாத குழுக்களுக்கு அதிகம் ஆதரவு உருவாகிறது. இது இந்திய இஸ்லாமியர்களுக்கு நல்ல விஷயம் அல்ல. இஸ்லாமிய இளையஞர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும். வரலாறு கொண்டு வெறுப்பை நாம் உருவாக்க கூடாது.
இதை நானோ, இந்துத்துவாவாதிகளோ குற்றம்சாட்டவில்லை... இதை குற்றம்சாட்டுவது Syed Akbar Nizamuddin Hussaini போன்றவர்கள் தான் கூறுகிறார்.
ஆன்மீக ஞானம் பரப்புவதற்க்கும் - மதம் வழி ஒரு கலாச்சாரத்தை பரப்புவதற்கும் வித்தியாசம் உண்டு. அரபிய கலாச்சாரம் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறார்கள். அப்படி எதிர்ப்பதை இங்கே பூதாகரமாக திட்டமிட்டு இஸ்லாமியருக்கு எதிரானவர்கள் என்று பரப்புகிறார்கள்.
சரி உங்கள் அனைவரிடமும் நான் கேட்கிறேன் சங்க்பரிவார் அமைப்பில் இருந்து வந்த மோடி அவர்கள் மிக சிறந்த இந்துதுவாவாதி. சரிதானே?
அவர் என்றாவது மாற்றுமத உள்விவகாரங்களில் தலையிட்டு பேசியதை கண்டது உண்டா? RSS மோகன் பகத் அவர்கள் என்றாவது மாற்றுமத உள்விவகாரங்களை தலையிட்டு பேசியது உண்டா? {நீங்கள் சிலரை காட்டலாம். அவர்கள் மூன்றாம் தர பேச்சாளார்கள். அதே பேச்சாளர்கள் எல்லா இடங்களிலும் உண்டு. சிலர் இஸ்லாமியர்களை அவதூராக பேசுகிறார்களே??? என்று நீங்கள் கூறினால் அதே அளவு இந்து கடவுள்களை அவதுறாக பேசும் கூட்டமும் உண்டு தானே??? எனவே இவைகளை நான் கணக்கில் எடுப்பது இல்லை. எனக்கு மோடி மீது இருக்கும் நியாயங்களை பேசவே விரும்புகிறேன்.}
முத்தலாக் விவகாரத்தில் கூட மோடி என்ன கூறினார் என்று தேடி பாருங்கள்.. "இஸ்லாமிய மத பெரியவர்கள் முன்வந்து இந்த விவகாரத்தை தீர்வு காணவேண்டும்" என்று தானே கேட்டுகொண்டார்? இதை விடவா ஒரு இந்துத்துவாவாதி நாகரீகமாக நடந்துகொள்ள முடியும்?
ஒரு உண்மை சொல்லவேண்டும் என்றால் - இஸ்லாமியர்கள் அல்ல எதிரி.. பிஜேபிக்கு உண்மையில் கம்யூனிஸ்ட் தான் எதிரி. கம்யூனிஸ்ட் தந்திரமாக இதை மதபிரச்சனை ஆக்கிவிட்ட வேடிக்கை பார்க்கிறார்கள்.
அதே நேரம் தீவிரவாதம் , பிரிவினைவாதிகளுக்கு எந்த இரக்கமும் காட்டபடாது... காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் காங்கிரஸ் உக்காந்து பேசியது போல் நிச்சயம் மோடி பேசமாட்டார். ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பிரிவினை தீவிரவாதிகளை கூண்டோடு அழித்து ஒழிக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் மத சாயம் தேவை இல்லை.
-----------------------------------------------------
மாற்றுமதங்களை அழிக்க நினைப்பவர்கள் என்று வைத்துகொள்வோம் - அப்படி என்றால் ஏன் புத்தம், ஜெயின் , சீக்கியர் என்று எவருடனும் பகை கொள்ளவில்லை இந்துதுவாவாதிகள்? அது என்ன கிருஸ்தவம் , இஸ்லாம் மட்டும் எதிர்க்கிறார்கள்????
உண்மையில் ஒரு உண்மையான இந்துதுவாவாதி என்பவன் மதங்களால், இறைவழிபாட்டால் ஒருவரை அடையாளபடுத்தி எதிர்ப்பது இல்லை. அவன் இந்த நாட்டின் புனிதம் மீது தொடுக்கபடும் மறைமுக/நேர்முக போரை எதிர்க்கிறான். இங்கேயே இறைவனை வழிபடும் முறைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு. கங்கை நதிகரையில் இருக்கும் நாகாசாதுக்கள் முதல் இமயமலையில் மானசரோவர் மலையில் ஒட்டிகொண்டு வாழும் சாதுக்கள் தொட்டு, வேதம் கொண்டு மக்களை வழிநடத்தும் குரு, சித்தர்கள் பலரையும் ஏற்றுகொள்ளும் இந்துதுவாவாதிகள் எப்படி இறைவழிபாட்டால் மாறுபடும் ஒருவரை வெறுப்பார்கள்?
இங்கே ஆன்மீகம் என்பது வெறிதனமான சொல்லி கொடுக்கபடவில்லை. கட்டாயபடுத்தவும் இல்லை.. சரிதானே? அட நாத்திகத்தை அனுமதிக்கும் ஒரே மதகலாச்சரம் இருக்கும் நாடு இந்த மண்.. மனசாட்சிக்கு நேர்மையாக வாழும் நாத்திகனையும், இயற்கைதான் கடவுள் மற்றவை இல்லை என்று ஒதுக்கிய யோகிகளையும் ஏற்றுகொண்ட தர்மம் இந்த மண்ணுக்கு சொந்தமானது.
இந்த மண்ணில் உருவான மக்கள் குணமே கூட அது கிடையாது. அனைத்து வடிவிலும் ஆனந்தமாக இறைவழிபாடு கொண்டவர்கள். மதுரையில் பாண்டி கோவிலில் வந்து சாமி கும்பிடும் பல இஸ்லாமியர் உண்டு சரிதானே??? தர்காவில் பிள்ளைகளை கொண்டு போய் மந்திரிக்கும் ஆயிரம் இந்துகள் உண்டு??? சரிதானே.. இங்கே இருப்பது மதநல்லிணக்கம். இது தான் இந்தியா இதுதான் இந்த மக்கள் குணம்.
இந்து மதமே அனைத்தையும் தன்னுள் இழுத்துகொள்ளும் அளவு ஆன்மவியல் ஈர்ப்பு கொண்டது. வழிபடும் முறையால் மட்டும் பகையை உருவாக்கி கொள்ள இந்துதுவாவாதிகள் முட்டாள்கள் இல்லை. ஆனால் இந்த கலாச்சாரத்தை கெடுத்து இன்னொரு நாட்டின் கலாச்சாரமே மேம்பட்டது என்று திணிக்க முற்படுவதை தடுக்கிறது இந்துத்துவா.
-----------------------------------------
பின்னர் ஏன் வழுகட்டாயமாக மோடி அவர்களை இஸ்லாமிய எதிரியாகவே உருவாக்குகிறார்கள்???
Iconography படித்தீர் என்றால் இந்த மனித சமூகம் எப்படி ஒரு நம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்ற புத்திசாலிதனம் கிடைக்கும். மோடி என்ற பிம்பம் இஸ்லாமியர் எதிரி , ஹிந்து வெறியர் என்று உருவாக்க கம்யூனிஸ்ட் இந்த குஜராத் காலவரத்தை எடுத்து கையாண்ட விதத்தில் வெற்றி பெற்றனர்.. ஆனால் குஜராத் கலவரத்தில் இறந்த ஹிந்துகள் பற்றி எந்த மூச்சும் விடவில்லை கம்யூனிஸ்ட் பத்திரிக்கைகள்!!! அது ஏன்? அதே குஜராத் கலவரத்தை வைத்து பக்கம் பக்கமாக வகாபிசம் ஆதரவாளர்கள் தீவிரமாக மோடியை இஸ்லாமியருக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை உருவாக்க பெரியவெற்றி கிடைத்துவிட்டது தான்.
வாய்ப்புகிடைக்கும் அனைத்து நிகழ்வுகளையும் - செய்திகளையும் கம்யூனிஸ்ட் பத்திரிக்கையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் மோடிக்கு எதிராக தூண்டிவிடுகிறார்கள். ஏன் என்றால் அவன் இப்போ ஒரு இந்துத்துவா Icon, இதன் மூலம் இந்துத்துவா என்பது ஒரு மதவெறி கூட்டம் என்று உருவகம் செய்ய முயல்கிறார்கள். அதில் இந்த திராவிட தறுதலை கூட்டமும் சேர்ந்து கொண்டுவிட தமிழகத்தில் இது ஒரு படி மேலை போய் விட்டது.
இன்று மோடி என்ற Icon இஸ்லாமுக்கு எதிரானதாகவே ஆகிவிட்டது. இப்போ அவர் முகம் , அவர் பெயர் எல்லமே ஒரு Icon ஆக்கபட்டுவிட்டது.
மோடி தான் மிக அதிகம் வழுவான உறவை ஆப்கன் அரசுடன் உருவாக்குகிறார். அவர்கள் என்ன இஸ்லாமியர்கள் இல்லையா???? எனவே பொது எதிரியாக மோடி , இந்துதுவா உருவாக்குவது திட்டமிட்டு நடந்து வரும் ஒரு சதி இது.
இந்துக்களை மதம் மாற்றபடுவதை தடுப்பது , இந்துகளின் சிறுபான்மையினராக ஆக்கபடுவதை தடுப்பது , இந்த பிரிவினைவாதிகளை அழித்தொழிப்பது, தீவிரவாதிகளை கூண்டோடு அழிப்பது என்று அடிப்படையில் தெளிவான கொள்கையுடன் தான் பிஜேபி செயல்படுகிறது. சிறுபான்மையினர் நலன் என்று இந்துகளின் நலனை விட்டுகொடுக்க வேண்டுமா என்ன?? இந்தியாவின் எதிரியாக நாட்டுக்குள் திரியும் நரிகளை விட்டு வைக்க வேண்டுமா?
------------------------------------------
கிருஸ்தவர்கள்????
அட கிருஸ்தவர்கள் பிரச்சனையே கிடையாது. மதம் மாற்றும் கிருஸ்தவ அமைப்புகள் தான் பிரச்சனை. மதம் அவர் அவர் விருப்பும். மாறுவது அவர் அவர் சுதந்திரம். ஆனால் திட்டமிட்டு மதம் மாற்றுவது???? எனவே கிருஸ்தவர்களை பொறுத்தவரை அவ்வளவு தான் விசயம்.
இரண்டும் மதங்களுமே ஆப்ரகாம் வழி தோன்றல்களால் உருவான மதங்கள்.. இந்த மதங்களின் புனித பூமி இது அல்ல. காசாவும் , ஜெருசலமும் தான் என்னும் போது மத ரீதியாக தங்கள் தாய் மண்ணை இவர்கள் நேசிக்காமல் விலகிவிட கூடாது. அது பிற்காலத்தில் இந்த தேசத்தின் ஒற்றுமைக்கே பிரச்சனையை உருவாக்கும் என்பதால் பிஜேபி நாட்டுபற்று என்ற விசயத்தை அதிகம் மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறது. இப்போ அதுவும் பிரச்சனை ஆக்குகிறார்கள்.
----------------------------------------------------------
இறுதியாக :
"சிறுபான்மையினரை திருப்தி படுத்தித்தான் வோட்டு வாங்கி அரசியல் செய்யவேண்டும் என்று எந்த எண்ணமும் பிஜேபிக்கு கிடையாது. யாரையும் திருப்த்திபடுத்தவும் முடியாது; ஆனால் நாட்டின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியது தான் என்பது மோடி நன்கு உணர்ந்தே செயல்படுகிறார்".
"ஆம் நான் இந்துகளுக்கு தான் உழைக்கிறேன், இது இந்துகளுக்கு மட்டுமே சொந்தமான தேசம்" என்று உணர்வை தூண்டிவிட்டு பேச எவ்வளவு நேரம் ஆகும் அவருக்கு? என்றாவது அப்படி பேசியது உண்டா அவர்???? ஒரு மாநிலத்தில் 12ஆண்டுகள் முதல்வராக இருந்த ஒருவர் - 3வருடமாக ஒரு நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் வீட்டு சொத்து என்ன??? அவர் அண்ணன் தம்பி சொத்து என்ன??? அதே கருணாநிதி குடும்பம் சொத்து என்ன???? இதில் கூடவா மோடி அவர்களின் நேர்மை தெரியாது????
1.திமுக, காங்கிரஸ் - மீண்டும் ஆட்சியை பிடிக்கணும்.
2.கம்யூனிஸ்ட்&போராளிகள் - எப்டியாது நாட்டை பிளவு படுத்தனும்.
3.பெரியார் இயக்கம் - இந்துவே இருக்க கூடாது.
4.மதம் மாற்றும் இயக்கங்கள் - நன்கொடை வந்த வழியை அடைத்துவிட்டார் மோடி.
இந்த எல்லோருக்கும் பொது எதிரி? மோடி.. இந்துத்துவா.. அதனால் உருவாகும் குழப்பமே இன்று இந்த கேள்வி.
எனவே இந்துத்துவா என்பது மதவெறி அல்ல. அது இந்த தேசத்தின் ஆன்மாவை நேசிக்கும் உண்மை.
-மாரிதாஸ்

https://www.facebook.com/viji.prabhu.921/posts/1771246146221084

1 comment:

  1. I wanted to leave a little comment to support you and wish you a good continuation. Wishing you the best of luck with all your blogging efforts.Sewage Water Treatment Plant in India

    ReplyDelete