பலர் கேட்டதற்கு இணங்க மீண்டும் பதிவேற்றுகிறேன்
ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத பல அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில,
Tamil Unicode Keyboard (KM Tamil என்பது இன்னொரு பெயர்) (இது தான் நான் பயன்படுத்துகிறேன்)
இன்னும் நிறைய அப்ளிகேசன்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் பாதுகாப்பானவைகள் அல்ல. காரணம் மேலே சொன்ன இரண்டு அப்ளிகேசன்களையும் பயன்படுத்த எந்த அனுமதியும் (Permission) கேட்காது. ஆனால் மற்ற அப்ளிகேசன்கள் தேவையில்லாமல் பல அனுமதிகள் நம்மிடம் கேட்கும். (ஆண்ட்ராய்ட் அனுமதிகள் பற்றி ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா? என்ற பதிவில் பார்க்கவும்).
இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings => Language & input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & input methods என்ற இடத்தில் இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.
பிறகு மொபைலில் நீங்கள் எழுதும் போது திரையின் மேலே Select Input என்று இருப்பதை கீழே Swipe செய்து அதில் நீங்கள் நிறுவியுள்ள அப்ளிகேஷனை தேர்வு செய்ய வேண்டும்.
மீண்டும் இது போன்றே மொபைல் கீபோர்டுக்கு மாறிக்கொள்ளலாம்.
கவனிக்க: இன்டர்நெட் இணைப்பின் அனுமதி கேட்கும் தட்டச்சு அப்ளிகேசன்களால் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை சேகரிக்க முடியும்.
No comments:
Post a Comment