புலன்கள் =======
🤔மனத்தை மிகத் தொலைவில் அலையவிட்டவன் யார்?
🤔உயிரை அதன் பயணத்தில் முதன் முதலில் முடிக்கிவிட்டது யார்?
🤔யாருடைய திருவுளத்தால் நாம் இவ்வார்த்தைகளை இயம்புகின்றோம்?
🤔நம் கண்களையும் காதுகளையும் இயக்குகின்ற அந்தப் பரம்பொருள் யாது?
அதுவே செவியின் செவி, மனத்தின் மனம், வார்த்தைகளின் வார்த்தை, உயிரின் உயிர், கண்ணின் கண், ஆத்மாவைப் பிரித்தறிந் தோராய் பொறிகளும் மனமும் தாம்
அது என்று கொள்ளும் பொய்யான கொள்கையை விடுத்து, ஆத்மாவே பிரம்மன் என அறிந்தோராய் - இவ்வுலகத்தைத துறந்த ஞானியர் அமரத்துவம் எய்துகின்றனர்.
எதனை வார்த்தைகளால் பேசமுடியாதோ, ஆனால் எதனால் வார்த்தைகளை பேசப் படுகின்றனவோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது
தொழுது வழிப்படப்படுகின்றதோ அது பிரம்மன் இல்லை.
எதனை மனத்தால் நினைக்க இயலாதோ, ஆனால் எதனால் மனம் நினைக்கின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக.
இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது வழிப்படப்
படுகின்றதோ அது பிரம்மன் இல்லை.
எதனை கண்ணால் பார்க்க முடியாதோ ஆனால், எதனால் கண்பார்கின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது வழிப்படப்
படுகின்றதோ அது பிரம்மன் இல்லை.
எதனை செவியால் கேட்க இயலாதோ, ஆனால் எதனால் செவி கேட்கின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது வழிப்படப்
படுகின்றதோ அது பிரம்மன் இல்லை.
எதனை மூச்சால் உள்ளிழுக்க முடியாததோ, ஆனால் எதனால் மூச்சு உள்ளிழுக்கப்படுகின்றதோ அதுவே பிரம்மன் என்றறிக. இவ்வுலகத்தாரால் இங்கே எது தொழுது
வழிப்படப் படுகின்றதோ அது பிரம்மன் இல்லை.
பேரின்பத்திற்கான பாதை ஆங்குண்டு பொறிகளால் அனுபவிக்கும் இன்பத்துக்கான பாதையும் உண்டு. இரண்டும் ஆத்மாவைக் கவர்ந்திழுகின்றன. முன்னதைப்
பின்பற்றுவோன் நன்மையை எய்துகிறான். ஆனால் பொறிகளின் இன்பத்தைப் பின்தொடர்வோன் இறுதிப் பயனை எய்துவதில்லை.
இரண்டு பாதைகளும் மனிதனுக்கு முன்னர் இருப்பனவே. அவைகளைப் பற்றி நன்கு சிந்தனை செய்து ஆராய்ந்து, பேரின்பத்துக்கான பாதையை, ஞானி
தேர்ந்தெடுக்கின்றான். மூடனோ பொறிகளின் இன்பத்துக்கான பாதையில் போகிறான்.
No comments:
Post a Comment