Wednesday, December 21, 2016

மார்கழி மாதத்தின் சிறப்பு என்ன? அதிகாலையில் ஏன் துயில் எழுந்து நீராடவேண்டும் ?

*மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்! --> மார்கழி மாதத்தின் சிறப்பு என்ன? அதிகாலையில் ஏன் துயில் எழுந்து நீராடவேண்டும் ? சித்தர்களின் அறிவியல் உண்மை.*

*மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் 
நீராடப் போதுவீர்! *
--ஆண்டாள் அருளிய திருப்பாவை

இந்த ஒற்றை வரி எம்மை வெகு நாட்களாக என்னமோ செய்து கொண்டு இருந்தது.  ஏனெனில் நமது சித்தர்கள் எந்த ஒரு தகவலையும் சுருக்கமாகவும், நேரிடையாகவும், அதேநேரம்  ஆன்மீகத்தில் கண்டவற்றை உலக பொருள்களோடு தொடர்புபடுத்தி எழுதுவதில் வல்லவர்கள். ஆனால், இந்த முதல் வரியில் உள்ள திங்களும் மதியும் ஏன் அடுத்தடுத்து வரவேண்டும் என்று சிந்தித்தது உண்டு. ஏனெனில் , இரண்டு வார்த்தைகளும் கிடடத்தட்ட ஒரே அர்த்தத்தைத்தான் கொண்டுள்ளது. ஆகவே, இதன் உண்மையான அர்த்தம் என்ன என்பதைச் சிறிது தேடினால் கிடைத்தவையெல்லாம் நம் வாழ்வியலோடு தொடர்புடைய பெரும் ரகசியங்கள். 

🌻 *திங்கள் - மதி:*

திங்கள் என்றால் நிலவையும், மாதத்தையும் குறிக்கும். இங்கு மாதத்தைக் குறிக்கின்றது. அதேநேரம் மதி என்ற சொல் நிலவையும், மனதையும் பொதுவாக குறிக்கும் சொல்லாகும். ஆனால் மதியுடன் வரும் *நிறைந்த* என்ற வார்த்தையுடன் வரும் பொருள் முழு நிலவில் வரும் மார்கழி மாதம் என்றா கொள்ளவேண்டும். உண்மை அப்படியில்லை . மதி என்பதற்கு உலோகமான *செம்பு* என்பதும் தமிழில் பொருள் உண்டு. சரி இங்கு உலோகமான செம்புக்கும் மார்கழி மாதத்திற்கும் அடுத்து வரும் நீராடுவதற்கும் என்ன தொடர்பு உண்டு?  





🌻 *சித்தர்கள் அறிவியலார்கள்:*

🌞 *அறிவியல் உண்மை ஒன்று:*

சூரியனானது இந்த மார்கழி மாதத்தில் பூமிக்கு அருகில் இருக்கும் ஆனால் அதேநேரத்தில் பூமிக்கு தென்புறத்தில் இருக்கும்.  நாம் வசிக்கும் நாடுகளோ பூமியின் வடபுறமாகவே அமைந்து இருக்கிறது.  ஆகவேதான் நமக்குக் குளிர்காலமாக இருக்கின்றது. இதை கீழ்க்கண்ட படத்தின்மூலம் தெரிந்துகொள்ளலாம்..

 

🌞 *அறிவியல் உண்மை இரண்டு:*

நமது உடம்பிலுள்ள முடியில் நிறையத் தாதுப்பொருள்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது இரண்டு.

ஒன்று செம்பு மற்றொன்று துத்தநாகம். இந்தத் துத்தநாகம் நமது உடம்பில் சரியான அளவில் இருக்கவேண்டும், அதிகமாக (வயிற்று வலி, தோல் வியாதி, வாந்தி போன்றவைகள்) அல்லது குறைவாக (பசியின்மை, நுகர்ச்சி, ருசி, காயங்கள் ஆறாமல் இருப்பது போன்றவைகள்) இருந்தாலோ வியாதிகள் தோன்றும். 

🌝 *சித்தர்களின் அறிவியல்:*

இதனைச் சமப்படுத்த நாம் காலையில் எழுந்து இயற்கையாகக் குளிக்கவேண்டும். இன்றும் கூட இந்தியாவிலும் மற்றும் பூமத்திய ரேகை பகுதியில் உள்ள   பெரும்பான்மையான கிராமப்புறங்களில் உள்ள  மக்கள்  நீராடுவது அல்லது குளிப்பது என்பது ஊற்றுநீர், ஆறு, கிணறு, குளங்களில்தான். இவ்வாறு குளிப்பதால், பிரபஞ்சனத்தில் உள்ள துத்தநாகம் முடியில் உள்ள செம்பு (அருமையான மின் கடத்தி) வழியாக உடலைச் சென்று சேரும். ஏனெனில் குளிர் காலத்தில் நமக்கு நேரிடையாக பரவெளியில் இருந்து துத்தநாகம் குறைந்த அளவே கிடைக்கும். ஆனால், உடம்பில் முடி அதிகமாக இருக்குமானால், அது குளிக்கும்போது நீரிலுள்ள துத்தநாகத்தையும் சேர்த்து நமக்கு உடம்பிற்கு கொண்டு செல்கின்றது. ஏனெனில், பூமிப்பந்தின் மேலடுக்கில் உள்ள உலோகத்தின் செரிமானத்தில் செம்பு 29  வது , துத்தநாகம் 30 வது இடத்திலும் உள்ளன. இதனால்தான் சில மேற்கத்திய நாடுகள் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் இந்த உலோகங்களை நீரிலிருந்து நீக்கிவிட்டு மக்களுக்கு குடிதண்ணீராக அனுப்புகின்றார்கள். அமெரிக்காவில் penny  (one cent அல்லது ஒரு காசு )  செய்யப்படுவது இந்த செம்பும் துத்தநாகமும் கலந்த கலவையில்தான்.

ஆகவே தான், நம் முன்னோர்களும், சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் ஏன் இன்றும் கூட சில மதங்களில் நீண்ட கூந்தல் (ஆண் பெண் வேறுபாடின்றி) வளர்த்துவருகின்றனர். இதன்மூலம் நாம் எப்பொழுதும் பிரபஞ்சத்தோடு தொடர்புடன் இருக்க முடியும்.

இதைத்தான் சித்தர் ஆண்டாள் அம்மையார் தனது திருப்பாவை முதல் வரியில் விளக்கி உள்ளார். இதைத்தான் மாணிக்கவாசகர் பெருமானும் தமது திருவெம்பாவையில் வேறு விதமாக விளக்கி உள்ளார். இந்த  உண்மைகளைத் தெரிந்து நாமும் மார்கழி என்றால் என்ன என்பதை அறிவியல் பூர்வமாக சித்தர்களின் வழியில் பின்பற்றுவோம்.


💐நன்றி  வணக்கம்💐
🙏யோகி ராஜாபாபு

No comments:

Post a Comment